கேள்விகளுக்குச் சொல்லப்படும் பதில்கள், மேலும் கேள்விகளையே உருவாக்கும்
அர்ஜுனனின் மனம் கேள்விகளால் நிறைந்துள்ளது. நீங்களும் அப்படித் தான். கேள்விகள், அறியாமையிலிருந்து பிறக்கின்றன, ஞானத்திலிருந்து அல்ல. கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க முடியாது. கேள்விகளுக்குச் சொல்லப்படும் பதில்கள், மேலும் கேள்விகளையே உருவாக்கும். ஏனென்றால் மக்கள், என்ன சொல்லப்படுகிறதோ அதைப் புரிந்துகொள்ளாமலேயே, தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் பதில்களைக் கவனித்துக் கேட்பதில்லை. அதனால்தான் கிருஷ்ணர், அதே கேள்விகளுக்குப் பதிலளிக்க, அதே சொற்களையும், கருத்துகளையும் திரும்பத் திரும்பச் சொல்கிறார். அர்ஜுனன் முழுவதையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற அவரின் கருணையின் வெளிப்பாடே, அவரை அப்படிச் சொல்ல வைக்கிறது.
நாம், 'ஏன்' என்று கேட்டுக் கொண்டிருக்கும்வரை, நமக்குத் தெளிவான பதில் கிடைக்காது. முக்கியமாக, கடவுளிடம் கேட்கும் 'ஏன்' என்ற கேள்வி பொருளற்றதாகி விடுகிறது. நான் முன்பே சொன்னபடி, நாம், தெய்விகத்திலிருந்து ஒரு வித்தியாசமான அலைவரிசையில் செயல்படுகிறோம். அதனால்தான், அவை விளக்கப்பட்டாலும்கூட, நாம் அவற்றைப் புரிந்துகொள்வதில்லை.
ஏன் பூகம்பங்கள், இயற்கைச் சீற்றங்கள் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்கின்றன? ஏன் நல்லதே நடக்கிறது ?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை. இவற்றுக்குப் பதில் சொல்ல முடியாது. அதிர்ஷ்டவசமாக, ஆன்மிகம் என்பது ஒரு உள்ளுலக விஞ்ஞானம்; அது வெளியுலக விஞ்ஞானம் அல்ல !
கிருஷ்ணர், பகவத் கீதையில் சொல்லும் அறிவுரைகளின் அழகே, அவை அரைகுறையானவை அல்ல என்பதுதான்.
வெளியுலக விஞ்ஞானத்தில், தொடர்ந்து நாம், 'ஏன்?' என்று கேட்டுக் கொண்டேயிருப்போம். அதற்கு நம்மால் பதில் பெற முடியாதபோது, நாமும் அதோடு நின்றுவிடுவோம். பிறகு அதற்கு அரைகுறையான விளக்கங்களை உருவாக்குவோம். அவை யாரையுமே திருப்திப்படுத்துவதில்லை.
பெருவெடிப்புக்கு முன் என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதில் தரமுடியாத, பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கு (Big Bang Theory) என்ன அர்த்தம் ?
ஆன்மிகம், 'ஏன்' என்ற கேள்வியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; அது 'எப்படி' என்பதைப் பற்றியது. 'ஏன்' என்பது தர்க்கத்தைப் பற்றியது; 'எப்படி' என்பது சாத்தியக்கூறுகளைப் பற்றியது. சூத்ரங்கள் 'எப்படி' என்ற கேள்விக்கு பதிலளிக்கின்றன.
எப்பொழுதாவது ஒருமுறை சாஸ்த்ரங்களுக்கு நடுநடுவே அவர் ஏன் அத்வைதத்தையும் தருகிறார். ஏனென்றால், அர்ஜுனனை அமைதிப்படுத்த அவர் அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது. இங்கு அவர் எப்படி முக்தியடைவது என்பதைப் படிப்படியாக விளக்குகிறார் அப்படியென்றால் மட்டுமே அங்கு எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது, எழவும் முடியாது.
அவர், 'மனத்தை ஒருநிலைப்படுத்து, புலன்களைக் கட்டுப்படுத்து' என்று சொல்கிறார். இதை நீங்கள், போக்குவரத்து நெரிசல்மிகுந்த ஒரு நாற்சாலையின் சந்திப்பின் அருகே அமர்ந்து கொண்டு செய்ய முடியுமா? முடியாது! அதனால்தான் அவர் சொல்கிறார், 'நீங்கள் தனிமைமிக்க ஒரு இடத்திற்குச் சென்றுவிடுங்கள்'.
எப்படித் தியானம் செய்ய வேண்டுமென்பதற்கான தெளிவான வரைமுறை, விதிமுறை இவையே: உங்களைத் தொல்லைப்படுத்தும் விஷயங்களிலிருந்து விலகி இருங்கள். சிறிதளவே உண்ணுங்கள், அப்படியென்றால் மட்டுமே நீங்கள் தொல்லை ஏதுமின்றி இருப்பீர்கள், தியானத்திற்குள் செல்லுங்கள், வெளியுலகப் பொருட்கள் நுழையாமல் உங்கள் புலன்களை மூடிக்கொள்ளுங்கள்.
இடைஞ்சலுக்குள்ளாக்கக்கூடிய எல்லா விஷயங்களிலிருந்தும் விலகியிருங்கள். இன்னும் சிறிதுநேரத்தில் விருந்தாளி ஒருவர் வரப்போகிறார் என்று தெரிந்த பிறகும், உங்களைத் தொலைபேசி மூலம் யாராவது தொடர்புகொள்ளக்கூடும் என்று தெரிந்த பிறகும், நீங்கள் தியானத்தில் அமர்வது அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் நேரத்தைத்தான் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்; தனிமையிலும், எந்தவொரு இடையூறுமின்றியும் இருக்கும் நேரத்தையும் காலத்தையும் தேர்வுசெய்யுங்கள்.
புலன்களின் தொல்லைகளைக் குறைப்பதற்கென சில எளிதான வழிகள் உள்ளன. கண்களை மூடிக்கொள்வது மட்டுமே போதுமானதன்று. அப்போதும் உங்கள் கண் கருவிழிகள் அசைந்துகொண்டுதான் இருக்கும்; உள் தொலைக்காட்சி ஓடிக் கொண்டுதான் இருக்கும்.
மனரீதியாக கருவிழிகளை அசைக்காமல் அப்படியே உறையச் செய்யுங்கள். அவை கற்களால் ஆனதுபோல் பாவித்து, அப்படியே நிறுத்திக்கொள்ளுங்கள். அதே சமயத்தில் உங்கள் நாக்கை மேல் அன்னத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள். நாக்கில் ஏதாவது அசைவிருந்தால், அது பிறகு பாவணை செய்வது என்பது கடினமான செயலாகிவிடும். அதனால், கண் விழிகளை அசையாமல் நிறுத்துவது மற்றும் நாக்கை மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்வது, இந்த இரண்டு செயல்களும், புலன்களின் தொந்தரவு காரணமாக அலைபாயத் தொடங்கும் மனத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
வெறும் வயிற்றோடு தியானியுங்கள். முழு வயிறு நம்மைத் தூக்கத்தில் ஆழ்த்தும். அது சுய உணர்தலுக்கு நம்மை எடுத்துச்செல்லாது. தியானத்தினால் உருவாகக் கூடிய சக்தியே அந்த இடத்திலேயே சேமித்து வைக்க, நாம் தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதே மிக நல்லது.
இவையெல்லாம் உடல் ரீதியாக நாம் செய்ய வேண்டிய விதிமுறை ஆகும். அடுத்து, கிருஷ்ணர், இதுவரை முக்கியத்துவம் தந்தவற்றையே இப்போதும் திரும்பச் சொல்கிறார்: உங்களுடைய புற இயல்புத் தன்மையை (Personality), அஹங்காரத்தை, பற்றை, நான், எனது என்ற கருத்துகளை விட்டுவிடுங்கள்.
நீங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்காகவும், உடைமைத் தேவைகளுக்காகவும் உங்களுக்காக உணர்ச்சிகளையும் உருவாக்கியுள்ளீர்கள்.
இவற்றுக்குப் பின்பே நீங்கள் விடுதலையடைவீர்கள். அந்தப் பரமாக்மாவைச் சென்றடையத் தயாராவீர்கள்.
துறவு - கர்த்தா பாவனை அற்ற மனநிலை
கேள்வி: விட்டுவிடுங்கள். அது ஒன்றே வழி என்று சொல்கிறார். அது எப்படி சாத்தியமாகும் ?
பதில்: நல்ல கேள்வி. இதனால்தான் முன்னமேயே சொன்னார்: "சாத்விக குணத்திற்குள் நுழைவது என்பது ஆரம்பத்தில் விஷத்தைப்போலத்தான் இருக்கும். ஆனால், இறுதியில் அது அமுதமாகிவிடும் !'''
கீதையின் மொத்த செய்தியுமே, 'துறத்தலை'ப் பற்றியதுதான். அது, உலகியல் வாழ்க்கையைத் துறப்பதையோ, ஏகாந்தமாக காட்டுக்குள்ளேயோ அல்லது மலையின் உச்சியிலோ போய் அமர்ந்துகொள்வதையோ எடுத்துக்கொண்ட பொறுப்புகளையும், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளையும் நிறைவேற்றுவதையும், அவ்வாறு நிறைவேற்றும் போது, 'இவற்றைச் செய்பவன் நானே' என்ற உணர்வுகொள்ளாமல், அவற்றைச் செய்து முடிப்பதையும் பற்றியது!
| இதன் நோக்கம் என்ன? வேலைகளை நீங்கள்தான் செய்கிறீர்கள் | ||||||
|---|---|---|---|---|---|---|
| என்றும், அவையெல்லாம் உங்களுடைய | ||||||
| வேலைகள் என்றும் நினைக்கத் தொடங்கிய | ||||||
| கணமே, | ||||||
| தோல்வியோடு உங்களை உணர்ச்சி ரீதியாக | ||||||
| இணைத்துக்கொள்வீர்கள்.<br>மனித இயல்பே, ஒரு ஆசை |
நவீன நிர்வாக நுட்பங்கள் வேண்டுமானால், இந்த உணர்ச்சி மிக கடமையை நிறைவேற்றுவதற்கு அந்தப் பேரார்வம் மிக அவசியமானது என்றும் வாதிடலாம். பேரார்வமும் பொறுப்புணர்வும்
தேவைதான். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லையென்றால், உங்களை மன அழுத்தத்தில் ஆழ்த்தும் உணர்ச்சி ரீதியான ஈடுபாட்டுக்கு அவசியமே இல்லை.
'ஆம், நான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சி!' என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், எவ்வளவு காலம் அப்படி நீங்கள் மகிழ்ச்சியாயிருக்க முடியும் ? மனித இயல்பே, ஒரு ஆசை நிறைவேறியவுடன், அதைத் திருப்தியுடன், தளர்வுடன் சிலகாலம்கூட அனுபவிக்காமல், பேராசை கொண்டு, ஒரு ஆசையிலிருந்து இன்னொரு ஆசைக்குத் தாவுவதுதான்.
முதலில், உங்களிடம் இல்லாத ஒன்றைப் பற்றிய மனக்கோட்டைகளை துறந்துவிடுங்கள். உங்களிடம் இருப்பதை வாழ்ந்து அனுபவியுங்கள்.
சாத்தியக்கூறு விதிகளைப் (Law of Probability) பற்றிய இயற்கை நியதியைப் புரிந்துகொண்டாலே போதும், பாதி நேரம் நீங்கள் தோல்வியிலும், துக்கத்திலும் ஆழ்ந்திருப்பதை நீங்களே பார்க்கலாம். ஒரு சுழல் ஊர்தி சவாரிபோல (Roller Coaster Rider) நீங்கள் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் முன்னும் பின்னுமாகத் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.
'நான் எப்படி உணர்ச்சிவசப்படாமலிருக்க முடியும்? நான் எப்படி பற்றற்று இருக்க முடியும் ? என்பதே உங்கள் கேள்வி.
மகிழ்ச்சி, துக்கம், எரிச்சல், கிளர்ச்சி, வன்முறை, பயம் போன்ற இந்த உணர்ச்சிகளெல்லாம் நீங்கள் இலக்கை நிர்ணயிக்கும்போதும், எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளும்போதும், உங்கள் எதிர்காலத்தை இவற்றோடு இணைத்துக் கொள்ளும்போதும் நிகழ்கின்றன.
நீங்கள் விரும்புகிற விதத்தில் விஷயங்கள் நிகழ்ந்தால்தான் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்; இல்லையெனில், உங்களின் எதிர்காலமே அபாயத்தில் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், இப்படிப்பட்ட வாழ்வா, சாவா என்ற நிலைமையை -தினந்தோறுமோ, வாரந்தோறுமோ, மாதந்தோறுமோ, வருடந்தோறுமோ - எவ்வளவு முறை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் ? நீங்கள் செய்வதை
அடிப்படையாக வைத்தே, உங்கள் வாழ்வே அமையப் போகிறது என்பது போன்ற சூழ்நிலைகளை, நீங்கள் உங்களுடைய மொத்த வாழ்நாளிலுமே ஒருசில தடவைகளே எதிர்கொள்ள நேரிடும். மற்றவையெல்லாம் முழுக்க முழுக்க கற்பனையே.
நீங்கள் மனக்கோட்டைகளை கட்டுகிறீர்கள்; நிறைவேறவில்லையென்றால் போவதில்லை என்றும் நினைக்கிறீர்கள். விளைவு ... நிச்சயம், நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கப் போவதில்லை. அதனால்தான் உங்களில் பெரும்பாலானோர் மகிழ்ச்சியாகவே இருப்பதில்லை. நிஜ வாழ்க்கைக்கு சம்பந்தமேயில்லாத மனக்கோட்டைகளையே நீங்கள் கட்டுகிறீர்கள்.
முதலில், உங்களிடம் இல்லாத ஒன்றைப் பற்றிய மனக்கோட்டைகளை துறந்துவிடுங்கள். உங்களிடம் இருப்பதை வாழ்ந்து அனுபவியுங்கள். நாமெல்லோருமே இதைச் செய்ய முடியும். நிச்சயமாக இதை அடைவது நம் எல்லோருக்கும் சாத்தியமே! அப்படித்தானே? இதை அடைவது ஒன்றும் அசாதாரணமான காரியம் அல்ல. இதற்கு சிறப்புப் பண்புகள் தேவை என்பது இல்லை. இதற்கென அசாதாரணமான சக்தி தேவையா ? நீங்கள் உங்களின் பேராசையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
உங்களிடம் இருப்பதைக் மேற்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் அனைத்தையும் -உடல் ரீதியான, மன ரீதியான சிறப்பம்சங்களைப் பட்டியலிடுங்கள். அவற்றையெல்லாம் உங்களுக்கு அருளிய இறைவனுக்கு, அந்தக்
உங்களிடம் இருக்கும் அனைத்தையும் -உடல், மன ரீதியான சிறப்பம்சங்களைப் பட்டியலிடுங்கள். அவற்றையெல்லாம் உங்களுக்கு அருளிய இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.
கருணைக்காக நன்றி கூறுங்கள்.
உங்கள் எல்லோராலும் பார்க்க முடியும், கேட்க முடியும், இல்லையா?
இந்த மக்கள் பார்க்க முடியாமலும், கேட்க முடியாமலும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இல்லை. நீங்கள் ஒரு சிறப்பானவர் என்றும், அதற்காக அந்த இறைவனிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும், என்றும், எப்பொழுதாவது
உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா ?
எளிமையான வாழ்க்கை முறைக்கு பதஞ்சலி முனிவர் சொல்லும் அமரிக்ரவர் என்னும் நியதியின்படி, உங்களுடைய அடிப்படைத் தேவைகள் மற்றும் உங்களிடம் இருப்பதைக் கொண்டு வழிமுறையினுள் நீங்கள் எதிர்பார்ப்புகளே இல்லாத ஒரு மனோநிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்.
உங்களுக்குள் உடல், மன, உணர்ச்சி ரீதியாகத் தொடர்ந்து துறவு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் அதை உணரவில்லை, அவ்வளவுதான்.
நீங்கள், இயற்கையிலேயே ஒரு துறவிதான்!
ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலே, முந்தைய எண்ணத்தைத் துறந்தாக வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு எண்ணங்களைக் கொண்டிருப்பது என்பது முடியாத காரியம். நீங்கள் நிற்க முடிவுசெய்யும்பொழுது, உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தையும், உட்கார்ந்திருக்கும் செயலையும் துறக்கிறீர்கள்.
உங்கள் உடலில் ஒரு செல் இறக்கிறது. இன்னொரு செல் பிறக்கிறது. உங்களுக்குள் உடல் ரீதியாக, மனோ ரீதியாக, உணர்ச்சி ரீதியாக தொடர்ந்து துறவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் அதை அறியவில்லை, உணரவில்லை, அவ்வளவுதான்.
நீங்கள் நிகழ்காலத்தினுள் நுழையும்போது, கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் துறக்கிறீர்கள். நிகழ்காலத்தின் மேல் கவனம் வையுங்கள்; இனி என்ன நடக்க வேண்டுமென்பதைப் பற்றிக் கவலைப்படாமல், இப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்பதில் கவனம் வையுங்கள். என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.
நீங்கள் பாதையின் மீது கவனம் வையுங்கள்; சேருமிடத்தின் மீதல்ல. ஜப்பானியர்கள், இந்த ஒரு எளிய கோட்பாட்டைப் புகுத்தித்தான் உற்பத்தி நுட்பத்திலேயே மிகப் பெரிய புரட்சி செய்து காண்பித்தார்கள். சிக்ஸ் சிக்மா கோட்பாடு (Six Sigma Principle), பொருளை அல்லது இறுதி இலக்கை முக்கியமாகக் கருதாமல், உற்பத்தி செயல்முறையின் (Process) மீது மட்டும் கவனம் செலுத்துவதை வலியுறுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின் மூலமே, ஜப்பானியர்களால் பிழையற்ற பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது.
பாதையின் மீது கவனம் செலுத்தும்போது, நீங்கள் பயணத்தை ஆனந்தமாக அனுபவிக்கத் தொடங்குவீர்கள். நீங்கள் பயணம்செய்யும் அந்தப் பாதையில், நீங்கள் அடைய வேண்டிய இலட்சியம் என்று எதுவுமே குறிக்கப்படவில்லை. அதனால், எந்தவொரு பற்றும் அங்கே இல்லை. தேவையானது எல்லாம், நீங்கள் அந்தப் பாதையில் பயணிப்பது ஒன்று மட்டும்தான். நீங்கள் எங்குப் போய்ச்சேர்ந்தாலும், அது சரியான சேருமிடமாகவே இருக்கும்.
வாழ்க்கையை உங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே வாழுங்கள். என்ன நடக்கிறதோ அதை அப்படியே அனுபவியுங்கள். பிரபஞ்சம், எப்போதும் உங்களிடம் கருணை காட்டுவதாகவே உள்ளது என்ற புரிதலில் நிலைத்திருங்கள். என்ன நடக்கிறதோ அது நம்முடைய நன்மைக்கே. அந்தக் கணத்தில் அதை நாம் அறிந்துகொள்கிறோமோ இல்லையோ, அது நம் நன்மைக்குத்தான். இதுவே சீரணாகதி. இதுவே துறவு. இந்த துறவு நிகழும்பொழுதும், எது நிகழ்ந்தாலும் அது நம் நன்மைக்கே என்று நீங்கள் நம்பும்பொழுதும், பிரபஞ்சமே உங்களைப் பார்த்து புன்னகைக்கிறது. ஆனந்தம் உங்களுக்குள் இறங்குகிறது!