KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/உங்கள் விதியை நிர்ணயிப்பது நீங்கள் அல்லSign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

உங்கள் விதியை நிர்ணயிப்பது நீங்கள் அல்ல

  • 18.54 பரமாத்மாவிடத்தில் கரைந்த ஒருவன், கவலையோ அசையோ படுவதில்லை, எல்லா உயிர்களிடத்திலும் சமபாவனை கொண்டிருக்கும் அவன் என்மீதான பக்தியைப் பெறுகின்றான்.
  • 18.55 பக்தியின் மூலம் ஒருவன், நான் எத்தன்மையன், நான் யார் மற்றும் நான் என்ன என்பவற்றின் சாரத்தை உள்ளபடியே புரிந்துகொள்கிறான். என்னுடைய சாரத்தைப் புரிந்துகொண்டவுடன் என்னுள் கரைந்துவிடுகிறான்.
  • 18.56 என்மீது பக்தி செலுத்தும் என்னுடைய பக்தன், அன்றாட வாழ்க்கைச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்னுடைய கருணையினால், என்னுடைய பாதுகாப்புடன் அழியாத, நிலையான என்னுடைய இருப்பிடத்தையடைகிறான்.
  • 18.57 செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்மீது உன் மொத்த விழிப்புணர்வையும் வைத்து, என்னைச் சரணடைந்து

செயலைச்செய்து, என்னுடைய பாதுகாப்பில் இருப்பாயாக!

  • 18.58 உன்னுடைய மனத்தை என்மீது நிலைத்திருக்கச் செய்யும்போது, என்னுடைய கருணையால் எல்லாவித துன்பங்களையும் கடந்துவிடுவாய். உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக நீ அழிவிற்குள்ளாவாய்.