சக்தி தரிசனம்: உங்கள் இருப்பு நிலையில் ஓர் உணர்வு மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும்!
கேள்வி: ஸ்வாமிஜி, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கொடுக்கும் சக்தி தரிசனத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நீங்கள்கூட சக்தி தரிசனம் தருகிறீர்கள். அதன் முக்கியத்துவம் என்னவென்பதை விளக்குங்கள் ?
ஆம், ஜ்ஞாநகுருமார்கள், தங்களின் சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் தரும் தரிசனம், கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தரும் சக்தி தரிசனம் போன்றதே. அந்த தரிசனம், பிரபஞ்ச சக்தியினுடையது, தேவி பராசக்தியினுடையது, உங்கள் முன்னாலிருக்கும் குரு வடிவினுடையது அல்ல.
நான் உங்களுக்கு ஆனந்த தரிசனம் தருவதைப் பற்றிப் பேசும்போது, நான் ஒரு கவனிப்பாளனாக மட்டுமே இருக்க வேண்டும். ஏனெனில், அதை நடத்துபவள் தேவி பராசக்தி!
தரிசனம் என்ற சொல் என்னும் ஸம்ஸ்க்ருத சொல்லிலிருந்து வந்ததே. என்றால் அனுபவத்தைக் குறிக்கிறது; உங்கள் கண்களால் காணும் காட்சியை அல்ல. தரிசனம் என்பது நம் புறக்கண்களுக்குப் புலப்படாத மூன்றாவது கண் தொடர்புடையது.
குருவானவர், ஆனந்த தரிசனம் கொடுப்பதின் நோக்கம், உங்களின் மூன்றாவது கண்ணைத் திறந்துவிடுவதன் மூலமாக, உங்களுள் உறையும் புத்திசாலித்தனத்தையும் விழிப்பிக்கச் செய்வதே. தரிசனம் என்பது உடல் ரீதியான ஓர் அனுபவம் அல்ல. அது, இருப்பு நிலையில் நிகழும் ஓர் அனுபவம்.
சக்தி தரிசனத்தின்போது அல்லது ஆனந்த தரிசனம் என்று குறிப்பிடும் நிகழ்ச்சியின்போது, குருவானவர், பிரபஞ்ச சக்தியுடன் ஒருங்கிணைந்து, ஒன்றாகிவிடுகிறார். அவர் வடிவமற்ற வடிவமாக, இருக்கிறார்.
குருவானவர், அவருடைய ஆழமான அன்பு மற்றும் கருணையின் காரணமாக, ஆனந்த தரிசனத்தின் வாயிலாக, அவரை முழுமையாகத் திறந்து வைக்கிறார். அதன் காரணமாக, ஒவ்வொருவரும் அவர் மூலமாக, அந்தப் பிரபஞ்ச உணர்வை அனுபவமாகப் பெறுகிறார்கள்.
அதைப் பெற்றுக்கொள்பவரும், குருவின் கருணையை மிக ஆழமாக உணர்கிறார். தரிசனத்தின்பொழுது, குரு, பிரபஞ்ச இருப்பு சக்தியை வெளிப்படுத்துகிறார், ஒவ்வொருவருக்குள்ளும் இறைசக்தியை நிலைக்கச் செய்கிறார், அவருடைய மணத்தையும், பிரபஞ்ச இருப்பின் மணத்தையும் பரப்பக்கூடிய மலர்களைத் தரக்கூடிய விதைகளை விதைக்கிறார்.
அந்தச் சக்தியை உள்வாங்க நீங்கள் தயாராயிருந்தால், அது உங்களுக்குள் ஊடுருவி, உங்கள் இருப்பு நிலையில் ஓர் உணர்வு மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும். நீங்கள், உங்களுக்குள் பூரண அமைதியோடு இருந்தால், உலகியல் ரீதியான தர்க்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டிருந்தால், எண்ணங்களும் வார்த்தைகளும் இல்லாமலிருந்தால், உங்களைச் சூழ்ந்துள்ள ஆனந்தக் கடலின் ஒரு துளியாக நீங்கள் மாறிவிட முடியும்.
குருவானவர், ஆனந்த தரிசனம் கொடுப்பதின் நோக்கம், உங்களின் மூன்றாவது கண்ணைத் திறந்துவிடுவதன் மூலமாக, உங்களூன் உறையும் புத்திசாலித்தனத்தையும் விழிப்பூட்டுவதே.
பக்தர்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரேயொரு விஷயம், ஒரு நம்பிக்கை மிகுந்த, ஏற்புத்தன்மை மிகுந்த அணுகுமுறையைத்தான். ஒருசில நிமிடங்களேனும், உங்கள் மனத்தை நிறுத்தி, அந்தச் சூழலில் உருவாக்கப்பட்ட மனோநிலையுடன் ஒன்றியிருந்தால், குரு பிரதிநிதித்துவம் வகிக்கும் அந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும், நீங்கள் உங்கள் ஆழமான நன்றிவுணர்வை செலுத்துவீர்கள்.
தரிசனத்தின்போது உருவாக்கப்படும் மகிழ்ச்சி, அங்கு இசைக்கப்படும் பக்திப்பாடல்களாலும், பொதுவான பக்தி வெளிப்பாட்டினாலும் மேலும் பெருகுகிறது. பொங்கித் ததும்புகின்ற அம்மகிழ்ச்சி, ஒருவரின் மனத்தைக் கரைத்து, அவரை முழுமையுடன் ஒன்றியிருக்கச் செய்கிறது. மனம், விடுப்பில் சென்று, தனது இடத்தைக் காலிசெய்து, இருப்பை, அதன் சுமைகளிலிருந்து விடுவிக்கிறது. காலங்காலமாக, தனிமனித இருப்பு அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருந்த அனுபவத்தை அனுபவிக்க அமைதியுறுகிறது.
இருப்பு, உண்மையில் தான் யார் என்பதை உணர்கிறது. பிரபஞ்ச இருப்பின் ஒரு அங்கமாக மனம் மறைந்து, அவ்விடத்தை வெற்றிடமாக்குகிறது. அவ்வெற்றிடத்தில், வாழ்க்கைக்கான பொங்கித் ததும்புகின்ற அன்பு நிரம்புகிறது.
ஆனந்த தரிசனம் என்பது சமுதாயம், பொருளாதாரம் போன்ற நேரம். அவர், தெய்விகத்தைக் காண்கிறார், இந்த உணர்வினால் ஊற்றெடுத்த சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார். அவருடைய சொந்த அடையாளமும், மற்றவர்களுடைய அடையாளமும் மறைந்துவிடுகிறது. பேரானந்தத்துடன் தன்னுடைய புத்திசாலித்தனத்தில் பிரகாசிக்கிறது, தனக்குள்ளிருக்கும் தெய்விகத்தை வெளிப்படுத்துகிறது.
நீங்கள், மற்ற நேரங்களில் குருவின் வார்த்தைகளைக் கேட்க முடியும். ஆனால், ஆனந்த தரிசனத்தின்போது, குரு பேசுவதில்லை. அவர், அவனையே தம்மகத்தே கொண்டிருக்கிறார். அவர், அவனாகவே இருக்கிறார். இது ஒவ்வொருவருக்கும் குருவிடமிருந்து நேரடியாகக் கிடைக்கும் மிகச் சிறந்த பரிசு.
அமைதியாகவும், நீங்கள் விழிப்புணர்வோடும் நீங்கள் அதைக் காணமுடியும். நீங்கள் சிந்தனையிலும் பேச்சிலும் ஈடுபட்டிருந்தால், நீங்கள் அதைத் தவறவிட்டுவிடுவீர்கள்.
நீங்கள் அந்தச் சூழ்நிலையை ஆராய்ந்து கொண்டும், ஏற்றுக்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்று தீர்மானித்துக் கொண்டும் இருந்தால், அந்தப் பரிசை நழுவவிட்டுவிடுவீர்கள். அதை நிராகரிக்கவோ செய்யாமல், வார்த்தைகளால் விளக்க முயலாமல், நேர்மறை உணர்வோ அல்லது எதிர்மறை உணர்வோ பற்றித் தீர்ப்பளித்துக் கொண்டிருக்காமல், வெறுமனே உங்களால் இருக்க முடிந்தால், நீங்கள் சரியான நூலிழையைப் பிடித்து விட்டீர்கள் !
தத்துவங்கள் மீது கவனம் கொள்ளாமல், 'சுய-உணர்தல்' கொண்டிருந்தீர்களானால், நீங்கள் அதை உணர்வீர்கள். வார்த்தைகள் பரிமாற்றமின்றியே, உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று பதிலளிக்கத் துவங்கும். தரிசனம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரு உணர்வுமாற்ற அனுபவமாக இருந்திருக்கிறது.