KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/உங்களின் அணிவேரயோ அறிந்திடலாம்'Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

உங்களின் அணிவேரயோ அறிந்திடலாம்'

'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' என்று ஒருவா உங்களிடம் சொல்லிவிட்டால் போதும், உடனே நீங்கள் உங்கள் மனத்தின் ஒரு பக்கத்தில், இன்னாரின் கருத்துப்படி, நான் அழகாக இருக்கிறேன்' என்று குறிப்பு எழுதி வைத்துக்கொள்கிறீர்கள். வேறொருவர், 'நீங்கள் அதிக புத்திசாலியாக இருக்கிறீர்கள்' என்று சொல்லி விட்டால், 'இன்னாரின் கருத்துப்படி நான் அதிக புத்திசாலி' என்றொரு குறிப்பு எழுதி வைத்துக்கொள்வீர்கள். மற்றொருவர், நீங்கள் நல்ல உயரமாக, நிறமாக, கம்பீரமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால், அதுவும் குறித்துக்கொள்ளப்படும்; சொன்னவருடைய பெயரும் பதிவுசெய் யப்படும். 'நீங்கள் ஒரு மூடன்' என்று யாராவது சொன்னால், உடனே அதுவும் ஒரு குறிப்பெடுக்கப்படும் !

பிறகு, அந்த நாளின் கடைசியில், இந்தக் குறிப்புகளை எல்லாம் ஒருமுறை பார்வையிட்டு, 72% மக்கள் உங்களை மிக புத்திசாலி என்றும், 20% பேர் நீங்கள் மூடன் என்றும், மீதி 8% பேர்அபிப்ராயம் எதுவும் சொல்லவில்லை என்றும் மதிப்பீடு செய்வீர்கள். இப்படிப்பட்ட புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு நீங்கள் உங்களைப் பற்றி ஒரு முடிவுசெய்கிறீர்கள்.

'72% பேர் என்னை 'புத்திசாலி' என்று சொல்லியிருப்பதால், நான் ஒரு புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் கள் அத்தனை பேரும் மடையா்களாக இருக்க முடியாதே. அதனால் அவர்கள் முடிவுக்கு வருகிறீர்கள்.

அகவே உங்களைப் பற்றிய மதிப்பீடு என்பது, மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொண்ன கருத்துகளின் அடிப்படையில் தான் இருக்கிறது.

நாள் முழுவதும் நீங்கள் ஒரு கையெழுத்து வேட்டை நடத்துவீர்கள்.

தொடர்ந்து மக்களை, உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தைச் சொல்லுமாறு கேட்டுச் சு

உள்ளுலகில், உங்களுக்கு முதலும், தறுதியாகவுமாகத் தேவைப்படும் கருவி, முழுமையான சூரணாகதிய ஆகும்.

ற்றியலைவீர்கள். விளைவு... நீங்கள் யார் என்ற கருத்தை, உங்கள் புலன்கள்தான் முடிவுசெய்கின்றன. இப்படிப்பட்ட புலன்களைத்தான் சீரணாகதி செய்துவிடு கேட்கிறார்.

உங்கள் பலன்களை, உங்களைப் பற்றி நீங்களே

'வேரை'கூட ச'ரணாகதிசெய்துவிடும்போது, உங்களின் உடல், மனத்துடன் நீங்கள் கொண்டிருக்கும் அடையாளத்தை இழந்துவிடுவீர்கள்.

நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் சரணடையும்போது மட்டுமே, உங்களுக்கு இறுதி அனுபவம் கிடைக்கப் பெறும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

நான் சொல்கிறேன் கேளுங்கள், சரணாகதி செய்வதே ஞானமடைவது தான். தயவுசெய்து, சரணாகதி செய்த பின்பே, உங்களுக்கு ஜ்ஞானம் விநியோகிக்கப்படும் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். இல்லை! அது தபால் மூலமாகப் பெறும் ஒரு பணவிடை (Pay check) அல்ல. சரணாகதி என்பதே ஜ்ஞானம், அந்தக் கணத்திலேயே நீங்கள் ஸ்தீயத்தை அனுபவமாகப் பெறுகிறீர்கள்.

பொதுவாக, நாம் எப்போதுமே வெறும் வார்த்தைகளைக்கொண்டு விளையாடிக் கொண்டுருக்கிறோம்.

சரணாகதி செய்த பின்பே, உங்களுக்கு ஜ்ஞானம் விநியோகிக்கப்படும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சரணாகதி செய்வதே ஞானமடைவது கான்.

அப்படி வார்த்தைகளைக் விளையாடும்பொழுதாவது, அதைப் பற்றிய விழிப்போடு இருங்கள்.

பெரும்பாலான மக்கள் வந்து, வெங்கடேஸ்வரரிடமோ சிவனிடமோ முழுவதுமாகச் சரணடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், எங்களுடைய ஒரே விருப்பம், 'நாங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதுதான்

ஸ்வாமிஜி,' உண்மையிலேயே சரணாகதி செய்திருந்தால், சரணாகதியே போதுமானது. அவர்கள் வேறெதையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

'கடவுளிடம் கியானம் அவசியமா?' என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே சரணடைந்திருந்தால், இதுபோன்ற சந்தேகங்களே இருக்காது. கியானமும் அப்படி அவர்களுக்குச் சிக்குக் குத்தேகம் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்குத் தியானம்

நீங்கள், உங்களுடைய 'நான்' – 'என்னதை'க் கொடுக்கும்போது, பராசக்தி, அவளுடைய 'நான்', 'எனதை' உங்களுக்குத் தருவாள்.

அவசியம்தான். சந்தேகங்கள் இருக்கும்வரை, சரணாகதி நிகழாது; ஏனெனில், சரணடையும் கணத்தில் 'நீங்கள்' மறைந்துவிடுவீர்கள்.

நீங்கள், உங்களுடைய 'நான்' - என்னதை'க் கொடுக்கும்போது, பராசக்தி, அவளுடைய 'நான்', 'எனதை' உங்களுக்குத் தருவாள். இரண்டு வங்கிக் கணக்குகளும் சேர்ந்து ஒரே கணக்காகிவிடும், அது ஒரு கூட்டுக்கணக்காகிவிடும்! நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை!

நீங்கள், கொடுக்கும்பொழுது, உங்களுடைய சரீரம் ரோகமயமாகவும், மனம் சோவரமயமாகவும் இருக்கும். அதாவது உடலானது வியாதிகளாலும், மனமானது துக்கங்களாலும், மன இறுக்கங்களாலும் நிரம்பியிருக்கும் என்று பொருள்.

நிலைமை இவ்வாறு இருக்கும்பட்சத்தில், நாம் எதை சரணாகதி செய்ய முடியும்? வியாதிகள் நிறைந்த இந்த உடலையும், துக்கங்கள் நிரம்பிய இந்த மனத்தையும் தவிர வேறொன்றுமேயில்லை, நீங்கள் இவ்விரண்டையும் இறைவனின் காலடியில் போட்டுவிடும்பொழுது, இறைவன் அவருடைய உடலையும், மனத்தையும் உங்களுக்கு வழங்குகிறார்!

அப்போது, சரீரம் தேவமயம், மனம் சுகமயம், ஆத்மா ஆனந்தமயம் ஆகிறது. அதாவது, தெய்விகமான உடல், சந்தோஷமான மனம், ஆனந்தமான ஆன்மா நீங்கள் பெறுகிறீர்கள்! ஏதாவது 'ஒன்றைக் கொடுத்தால் மூன்று இலவசங்கள்' என்றும் திட்டம்!

மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை நோக்கி, ஒரு அழகான தமிழ்ப் பாடல் பாடியிருக்கிறார்.

தந்ததுன்றணைக் கொண்டதென்றனை, சங்கரா ஆர்கொலோ சதுரர் ?

அவர் சொல்வது, 'ஓ சங்கரா, உன்னை எனக்குத் தந்து, பதிலாக என்னை நீ பெற்றுக் கொண்டாய். இந்தப் பேரத்தில், அதிக லாபம்பெற்றது யார்? அதிக புத்திசாலி யார்? உங்கள்

உடைமைகளை வைத்து உங்களை மதிப்பீடுகெய்து கொள்ளாதீர்கள். நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைவிட, நீங்கள் மேலானவர்

சரணாகதியில், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, எல்லாமே உங்களுக்கு லாபம்தான். சரணாகதி செய்வது என்பது, எல்லாவற்றையும் விட்டுவிடுவது என்று அர்த்தமல்ல. உங்கள் உடைமைகளை விட்டுவிட வேண்டும் என்பதல்ல, எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், எதையும் உங்கள் 'இருப்பில்' உள்வாங்கிக்கொள்ளாதீர்கள்.

அனைத்தையும் விட உயர்ந்தவர் நீங்கள்!

உங்கள் உடைமைகளை வைத்து உங்களை மதிப்பீடுசெய்து கொள்ளாதீர்கள். நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதைவிட, நீங்கள் மேலானவர். உங்களுடைய வங்கி இருப்பை வைத்து உங்களை எடைபோடாதீர்கள்; உங்கள் உறவுகளை வைத்து எடை போடாதீர்கள்; பெயர், புகழ் வைத்தும் எடை போடாதீர்கள்; உங்கள் நண்பர்கள் கூட்டத்தை வைத்தும் எடை போடாதீர்கள். அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தாலும்கூட, நீங்கள் அதையும் விட மிக உயர்ந்தவர்!

நீங்கள் உங்களை இவற்றின் அடிப்படையில் எடைபோட்டுக் கொண்டிருக்கும்வரை, இவற்றை உங்கள் இருத்தலில் உள்வாங்கிக் கொள்கிறீர்கள். அதற்குப் பிறகு, இவையே உங்கள் வாழ்வின் மையக் கருத்துகளாக ஆகிவிடும். இவை, எல்லாத் திசைகளிலிருந்தும் உங்களை அலைக்கழிக்கும். நீங்கள், உங்கள் இருத்தலுக்காக வாழ மாட்டீர்கள், நீங்கள், உள்ளது உள்ளபடியே உங்கள் இருத்தலுக்கு கிடைக்க மாட்டீர்கள். உங்கள் வாழ்வின் முக்கிய காரணிகளாக இவை இருக்கும்வரை, இவையே உங்களை ஆட்சி செய்யும். ஆனாலுங்கூட, இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தாலும், அதைக்காட்டிலும் நீங்கள் உயர்ந்தவர் !

புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இவற்றுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று. நீங்கள் இந்த ஸத்யத்திற்கு விழித்துக் கொண்டீர்களானால், பின்பு நீங்கள், வங்கியிருப்பு, உறவுகள், மனப்பாங்குகள், பெயர், புகழ் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உங்களை மதிப்பீடு செய்ய, உங்களையேகூட அனுமதிக்க மாட்டீர்கள். உங்களை மதிப்பீடு செய்ய இவற்றையெல்லாம் பயன்படுத்த முடியாது. இந்த ஸத்யத்திற்கு நீங்கள் விழித்துக்கொண்ட கணமே நீங்கள் சரணாகதி செய்து விட்டீர்கள்.

நான், உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவே: உங்களைப் பற்றி நீங்களே கொண்டிருக்கும் சின்னச் சின்ன கருத்துகளையெல்லாம் சரணாகதி செய்துவிடுங்கள் !

பரந்த சமுத்திரத்தின் மேற்பரப்பில், சிறுசிறு நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன. ஒரு நீர்க்குமிழி, தன்னை நீண்டநாள் வாழுப்போகும் ஒரு தனிப்பட்ட ஜீவனாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறது. தான் மிக பலசாலியாகமாறவேண்டும் எனவும் நினைக்கிறது. ஆனால், அது ஒருசில கணங்களுக்கே நீடிக்கிறது. இருப்பினும், அந்த ஒருசில கணங்களுக்குள் தன்னைச் சுற்றி மற்ற நீர்க் குமிழிகளையும் சேர்த்துக்கொள்கிறது. ஒரு குமிழியைத் தன்னுடைய மனைவியாகவும், இன்னொரு குமிழியை மகனாகவும், சிலவற்றை பெற்றோராகவும், உறவினராகவும் மற்றும் நண்பர்களாகவும்

நினைக்குக்கொள்கிறது.

தன்னைப் பொருட்டு, இப்படி எல்லாப் பக்கங்களிலிரு ருந்தும் பல குமிழிகளை, தன்னைச் சுற்றிச் சேர்த்துக்கொள்கிறது.

இதோடுமட்டுமல்லாமல், கடற்கரையில் இருக்கும் சில மணற்துகள்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு, கன்

நான், உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவே: உங்களைப் பற்றி நீங்களே கொண்டிருக்கும் சின்னச் சின்ன கருத்துகளையெல்லாம் சரணாகதி செய்துவிடுங்கள்!