KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/Part 3: Bhagavad Gita ExplainedSign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

Part 3: Bhagavad Gita Explained

உடைமைகளாகவும் கொள்கிறது. ஒரு வங்கியிருப்பாகவும், இன்னொன்றை நகையாகவும், இப்படி மற்றவற்றை, இன்னும் பிற பிற சொத்துக்களாகவும் நினைக்கிறது. பிறகு அவற்றைப் பாதுகாப்பதற்கென ஒரு வேலியையும்

போட்டுக் கொள்கிறது.

இதற்கிடையில், ஒரு பெரிய குமிழி, கடலின் ஒரு பகுதிக்கு ராஜாவாகவும் ஆகிவிடுகிறது! பிறகு அந்தக் குமிழிகளுக்குள், 'நீ என்னைத் தாக்கக்கூடாது, நானும் உன்னைத் தாக்க மாட்டேன்; நீ என்னுடையதை எடுத்துக்கொள்ளக்கூடாது, நானும் உன்னுடையதை எடுத்துக்கொள்ள மாட்டேன்' என்று சமரசம் நடக்கிறது. முழு விளையாட்டும் இப்படித்தான் போகிறது.

எவ்வளவு காலம் அந்த நீர்க்குமிழி, இந்த விளையாட்டை விளையாட முடியும்? ஒருசில நொடிகளுக்கு மட்டுமே! அந்த விளையாட்டை முடிக்கும் முன்னரே, அது மீண்டும் அந்தக் கடலில் கலந்து மறைந்துவிடுகிறது.

அந்த நீர்க்குமிழியானது, மூன்று சமயத்திலுமே - அது உருவான போதும், வாழ்ந்த போதும், மறைந்த போதும் - அந்தக் கடலின் ஒரு பகுதியாகவேதான் இருந்தது.

நீர்க்குமிழியானது. மூன்று சமயத்திலுமே -அது உருவான போதும், வாழ்ந்த போதும், மறைந்த போதும் - அந்தக் கடலின் ஒரு பகுதியாகவேதான் கருதுகிறது.

என்னதான் அது, தன்னை அந்தக் கடலிலிருந்து வேறானதாகச் சொல்லிக் கொண்டாலும், தன்னை ஒரு தனி ஜீவனாக நினைத்துக் கொண்டாலும், பல மக்களும், சொத்துக்களும் தனக்கு சொந்தமென்று நினைத்துக் கொண்டாலும், அது எந்நாளும் அந்தக் கடலின் ஒரு பகுதியாகவேதான் இருந்தது. மேலும், வெகு விரைவிலேயே அதனுள் கலந்து மறைந்தும் விட்டது!

நீங்களும் அதைப்போலவேதான், ஒருசில

பிரபஞ்ச விழிப்புணர்வில், நீங்கள் ஒரு தனி ஜீவனாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள். அந்த ஒருசில கணங்களுக்குள் ஒருசிலரை உறவினர்களாகவும் நண்பர்களாகவும் பிடித்துவைத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் மற்றொரு நீர்க்குமிழியைத் திருமணம் செய்துகொள்கிறீர்கள். ஒருசில மண்ற்துகள்களை எடுத்து, உங்கள் சொத்துகளாகப் பதிவு செய்துகொள்கிறீர்கள். இவற்றைப் பதிவுசெய்பவர், இன்னொரு நீர்க்குமிழி. நீங்கள் இந்தப் பொருட்களின் அடிப்படையில், உங்களைப் பற்றிய ஒரு கருத்தை, நீங்களே உருவாக்கிக்கொள்கிறீர்கள். நீங்களும் அந்த நீர்க்குமிழியைப்போலவே, அதே விளையாட்டை விளையாடுகிறீர்கள். திடீரென முழுவதுமே மறைந்துபோகிறது.

நீங்கள் இதைப் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளா விட்டாலும், அறிந்து கொண்டாலும் அறிந்துகொள்ளாவிட்டாலும், உணர்ந்து கொண்டாலும் உணர்ந்துகொள்ளாவிட்டாலும், விளையாட்டு ஆரம்பிக்கும் முன்னரும், ஆடிக்கொண்டிருக்கும்பொழுதும், முடிந்த பின்னரும், நீங்கள் அந்தக் கடலுக்குச் சொந்தமானவர்கான். நீங்கள் கடவுள்கான். இந்தப் பிரபஞ்ச பெரியக்கத்துடன் ஒன்றியவர்தான்.

நான் சரணாகதி என்று சொல்லும்போது, நீங்கள் கடலில்தான் இருக்கிறீர்கள் என்னும் ஸத்யத்திற்கு நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறேன்.