வாம்வின் அர்க்கங்கள்
- 18.29 தனஞ்ஜயா, இப்பொழுது, முக்குணங்களுக்கேற்பவே புத்திக்கும் மனஉறுதிக்கும் ஏற்படும் முன்றுவிதமான பாகுபாட்டை முழுமையாகவும் தனித்தனியாகவும் நான் சொல்கிறேன், கேள்.
- 18.30 பார்த்தா, எந்த புத்தி, கா்மத்தின் பாதையையும் துறவின் பாதையையும், செய்யத்துகுந்ததையும் செய்யத் தகாததையும், பயத்தையும் பயமின்மையையும், பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்மையாக அறிகின்றதோ அந்தப் புத்தி லாத்விகமானது.
- 18.31 பார்த்தா, தர்மம் மற்றும் அதர்மம், செய்யத் தகுந்தவை மற்றும் செய்யத்தகாதவை, இவற்றுக்கிடையே உள்ள வேற்றுமையை வேறுபடுத்திக் காண(முடியாத புத்தி ராஜஸம் எனப்படும்.
- 18.32 அஜ்ஞார இருளால் கவ்வப்பெற்று, அதர்மத்தை தர்மமாகவும், பொருட்களையெல்லாம் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாகவும் நினைக்கிறதோ, அந்தப் புத்தி தாமஸமானது.
- 18.33 பார்த்தா, தெய்விகத்துடன் இணைவதற்கென, தன் மனம், ப்ராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை உறுதியான தொடர் முயற்சியினால் கட்டுப்படுத்துகிறானோ, அவனுடைய அந்த உறுதி ஸாத்விகமானது.
- 18.34 ஆனால், ப்ருதையின் மைந்தா, பயனில் விருப்பமுடைய மனிதன் எந்த உறுதியினால் மிகுந்த பற்றோடு அறம், பொருள், இன்பம் அடைவதிலேயே உறுதியாக இருக்கிறானோ அந்த உறுதி ராஜஸ்மானது.
- 18.35 பார்த்தா, தாமஸ உறுதியில் இருக்கும் ஒருவனால் கனவையும், அச்சத்தையும், மனக்கலக்கத்தையும், மயக்கத்தையும் கடக்க முடிவதில்லை.
- 18.36, 37 ஒ பரதக்குல காளையே, மூன்று விதமான இன்பங்களைப்பற்றி இப்போது என்னிடம் கேட்பாயாக, ஆன்மிகப் பயிற்சிகளிலிருந்து பெறப்படும் இன்பமானது, எல்லாத் துன்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து முடிவுக்குக் கொண்டு வருகிறது. முதலில் விஷமாகத் தோன்றினாலும், முடிவில் அமுதம்போன்றதாகும் இவ்வின்பம் ஸாத்விகமாம். அன்ம அறிவின் கருணையினால் இது தோன்றுகிறது.
- 18.38 முதலில் அமுதமாகவும், முடிவில் விஷமாக மாறும் புலனின்பங்கள், இருக்கின்றன.
- 18.39 முதலிலிருந்து இறுதிவரை மருட்சியைத் தருவதும், தூக்கத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், மாயையிலிருந்தும் தோன்றுவதான இன்பங்கள், அறியாமையின் இயல்புகள் என்று சொல்லப்படுகின்றன.
- 18.40 பூவுலகிலாகட்டும் அல்லது உயர் உலகங்களில் வாழும் தேவர்களாகட்டும், ஒருவருமே பொருள்சார்ந்த இம்மூன்று தன்மைகளிலிருந்து தப்பிக்க முடியாது.
வாழ்க்கைக்கு நோக்கங்கள் கிடையாது, அர்த்தங்களே உண்டு
கிருஷ்ணர், புருஷார்த - வாழ்க்கையின் அர்த்தங்களை வரையறுக்கிறார். தர்மம், அர்து, காமம், மோக்ஷம் என்று நான்கு, புரூஷார்துங்கள் உள்ளன. அவற்றை முறையே தர்மம், செல்வம், ஆசை அல்லது காமம் மற்றும் முக்தி என்று மொழிபெயர்க்கலாம். இவை வாழ்க்கையின் நான்கு விதமான அர்க்கங்கள்.
நான் இவற்றை, வாழ்க்கையின் நோக்கங்கள் என்று கூறுவதற்கு விரும்பவில்லை. வாழ்க்கைக்கு நோக்கம் என்று ஒன்று கிடையாது.
வாழ்க்கைக்கு ஒரு தீர்மானித்துக் கொண்டால், பிறகு அது, அடையப்பட வேண்டிய ஒரு இலக்காக ஆகிவிடும். பற்றுகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டதாக ஆகிவிடும்.
வாழ்க்கை என்பது சென்று சேருமிடம் இல்லாத ஒரு பாதை. சேருமிடம் என்று ஒன்று இருப்பதாக நினைத்தோமென்றால், பின்பு அதை நோக்கி ஓட ஆரம்பிப்போம். எதிர்காலமென்பது மன அமுத்தத்தை உண்டாக்கும் ஒரு காரணியாகிவிடும். இப்போது நாம் நாம் சென்னையிலிருந்து
நமக்கு வழிகாட்ட வாழ்க்கையை அனுமத்த்தும்பொழுது, நாம் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.
டெல்லிக்குப் பிரயாணம் செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நாம் சென்று சேருமிடம் டெல்லி என்று முடிவுசெய்தவுடன், அடுத்து எழும் பிரச்சினை, எப்போது அங்குப் போய்ச்சேருவோம் ? என்பதாகத் தான் இருக்கும். அப்போதிருந்து நாம் தொடர்ந்து அதே கேள்வியோடு, கவலைப்பட்டுக் கொண்டிருப்போம்.
ஆனால், நாம் டெல்லி போய், அங்கே உடனடியாக முடிக்க வேண்டிய அலுவல் ஏதுமில்லை என்பது வேறு விஷயம். அதனால் அவ்வளவு அவசரப்பட்டேயிருக்க அவசரத்தில் இருக்கும்போது, நாம் பயணத்தை அனுபவிப்பதில்லை. இலக்கைச் சென்றடைய வேண்டுமென்று நினைத்த காரணத்தினால், பயணம் எரிச்சல் மிக்கதாகிவிடுகிறது.
வாழ்க்கையில், ஒரு குறிக்கோளையே நிர்ணயிக்காதீர்கள். ஒவ்வொரு பயணமும் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பதே பாதையும், பயணமும் சேர்ந்ததே!
மேலும் மேலும் அதிகம் அடைய வேண்டுமென்ற போராசை கொள்ளாமல், உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் அனுபவங்கள், வழியில் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அனுபவங்கள் என எல்லாவற்றையுமே அனுபவித்து மகிழுங்கள். பயணம் மற்றும் பாதை, இவையிரண்டுமே சந்தோஷமானவையாக இருந்துவிட்டால், நீங்கள் எந்த இடத்திற்கு போய்ச்சேர்ந்தாலும், அதுவே நீங்கள் சேர வேண்டிய சரியான இடமாகும்.
வாழ்க்கையோடு இணைத்துக் தொந்தரவுகளுக்கும், பல்வேறு இடைஞ்சல்களுக்கும் வேறு வேலையே இல்லாத இல்லாத இந்தத் தத்துவவாதிகள், வாழ்க்கைக்கு தவறான நோக்கங்களை உருவாக்கிவிடுகிறார்கள்.
தத்துவவாதிகள் மக்களை குழப்புவதற்கே இருக்கிறார்கள். ஆனால், ஞானிகள் பிரச்சி னைகளைத் தீர்த்துவைக்கிறார்கள். மேலும், அவர்கள் புத்திசாலித்தனத்தை விழிப்பிக்கச் வழிகாட்டுதல்கள் செய்வதற்கான அனைத்தையும் கொடுத்து உதவுகிறார்கள்.
நமக்கு வழிகாட்ட வாழ்க்கையை அனுமதிக்கும்பொழுது, வாழ்க்கை நமக்கு எவ்வாறு நிகழ்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும்போது நாம் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம். அப்போது நாம் உண்மையிலேயே ஒரு கடவுளைப்போல சக்தியை, ஆற்றலை உணர்ந்து கொள்கிறோம்!
புருஷார்த - வாழ்க்கைக்கு நான்கு அர்த்தங்களைக் கொடுக்கிறது.
தாம் என்பது நன்னடத்தை அல்லது நற்குணங்கள். இதையே புத்தர், 'மத்யப் பாதை'யென போதித்தார்.
அர்த என்பது நம் பயணத்தின்பொழுது, பாதையில் கண்டெடுக்கும் ஒரு விஷயம், நாம் வாழத் தேவையான பொருள் சார்ந்த விஷயங்கள்.
காம என்பது நாம் வாழ்க்கைப் பயணத்தில் அனுபவித்து மகிழ்கின்ற புலனின்பங்கள். இவை, நாம் தாம வழியில் அடைந்த உடைமைகளும் இன்பமான அனுபவங்களும் ஆகும். இவை உங்களுக்குத் தேவையாயிருப்பதைக் கண்டு நீங்கள் சஞ்சலமடையத் தேவையில்லை. ஆனால், அவற்றில் மாட்டிக்கொள்ளாதீர்கள. பாதையில் மேலும் முன்னேறி, மறந்துவிடாதீர்கள்.
மோஷூ வாழ்க்கையின் உச்ச அர்த்தம். எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், பேராசைகள், பயம், பற்றுதல்கள் இவை அனைத்திலிருந்தும் விடுதலையடையும் உச்ச நிலை இதுவே. பற்றற்ற தன்மையும் எதிர்பார்ப்பின்மையும், நம்மை விடுதலையடையச் செய்துவிடும் என்ற புரிதலே நம்மை பேரானந்தத்தில் நிரப்பிவிடும்.
கிருஷ்ணர் இங்கு, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு, அதை நாம் எப்படி வழிநடத்திச்செல்ல வேண்டும் என்பதன் சாரத்தை தருகிறார்: 'நாம் தெய்விகமானவர்கள்' என்னும் ஸ்தீயத்தை உணர்வதற்கு நமக்கு இரு குணங்கள் தேவை. ஒன்று, சரி - தவறு பற்றிய தெளிவு. மற்றொன்று. நம் பற்றுதல்கள் மற்றும் ஆசைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள உதவும் வகையிலேயே, நம் உடல் மற்றும் மனத்தைக் கொண்டு ஆற்றும் செயல்கள் அனைத்தும் இருக்க வேண்டு மென்ற தெளிவு. இதுவே ஸாத்விகப் பண்பு.
கிருஷ்ணர் நமது பட்டறிவின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும், அவை நம் வரையறுப்பதைப் நடத்தைகளை பற்றியும் விவரித்திருந்தார். இப்போது, நமது நடத்தைகளின் விளைவாக, நாம் எப்படிப் பதில்செயல் புரிகிறோம் என்று விவரிக்கிறார்
கிருஷ்ணர் தன்மையிலான ஆன்மிகப் பயிற்சியானது,
பற்றற்ற தன்மையும் எதிர்பார்ப்பின்மையும், நம்மை விடுதலையடையச் செய்துவிடும் என்ற புரிதலே நம்மை பேரானந்தத்தில் நீரப்பிவிடும்.
ஆரம்ப நிலையில் மிகக் கடினமானதாகவும், விஷம்போலவும் தோன்றினாலும் இறுதியில் ஜீவனளிக்கும் அமுதம்போலாகிவிடும். ரஜஸ் குணத்தினால் பிறக்கும் புலனின்பங்கள், முதலில் அமுதமாகத் தோன்றினாலும் பிறகு, விஷமாக மாறிவிடும். தமஸ்நிலையில் இருக்கும் ஒருவர் தூக்கத்தில், சோம்பலில், மாயத் தோற்றத்தில் இருப்பதுபோல் மருட்சிக்குள்ளாவார்.
ஒவ்வொரு மனிதருமே இந்த மூன்று நிலைகளுள் ஏதோவொரு நிலையில் இருப்பார். மனிதர்கள் மட்டுமல்ல, மேலான நிலைக்கு உயர்ந்த தேவலோகவாசிகளும்கூட இப்படித்தான் இருக்கிறார்கள். இக்குணங்களின் விளைவுகளிலிருந்து ஒருவராலும் தப்பித்துவிட முடியாது.