KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/அவரை உள்ளே வர அனுமதியுங்கள்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

அவரை உள்ளே வர அனுமதியுங்கள்

கிருஷ்ணர், பக்தி எப்படி அடையப்படுகிறது என்பதையும் பக்தர்களை அவர் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதையும் விளக்குகிறார்.

பற்றற்ற நிலையை வளர்த்துக்கொள்வதாலும், எல்லா உயிர்களிடத்தும் நடுநிலையோடிருப்பதாலும், கவலைகொள்ளாமலிருப்பதாலும், முழுமையாக பக்தராகிவிடுகிறார். இந்த நிலையில் மட்டுமே அவர் கிருஷ்ணரின் சாரத்தைப் புரிந்துகொள்கிறார். அதைப் புரிந்துகொண்டவுடனேயே ஒருவர், கிருஷ்ண உணர்விலேயே ஐக்கியமாகிவிடுகிறார்.

கிருஷ்ண பக்தியிலேயே ஆழ்ந்திருக்கும் ஒருவர், உலகியல் விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும்கூட, கிருஷ்ணருடைய அருளாலும் கருணையாலும் பாதுகாக்கப்படுகிறார். அப்படிப்பட்ட ஒரு பக்தர், எந்த வொரு கஷ்டமும் இல்லாமல், இறுதி மெய்மையை அடைந்துவிடுகிறார்.

உங்களையும், உங்களுடைய சொத்து சுகங்களையும் நீங்களே பாதுகாத்துக்கொள்ள முனையும்பொழுது, அவர் பின்வாங்கிவிடுகிறார்.

சமீபத்தில், இந்தக் கருத்தை நான் சில பக்தர்களிடம் சொன்னேன்: தொடர்ந்து நம்மைக் கொண்டிருக்கும் உள்ளுணர்ச்சியிலிருந்து நம்மை விடுபடுத்திக் கொள்ளும்பொழுது, அங்கே உருவாகும் உணர்வுத்தளம், பொருத்தமான நிகழ்வுகளை அனுமதிக்கிறது.

கிருஷ்ணர், நமக்கு ஆன்மிக அனுபவத்தை மட்டும் தர விரும்பியிருந்தால், 'பாதுகாப்பு' என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்க மாட்டார். இரண்டையும் சரணடையும் ஒருவர், இரு உலகிலும் உயர்ந்த அனுபவங்களைப் பெறுகிறார். நாம் வெளியேறிவிட்டாலே போதும், அவர் உள்ளே வந்துவிடுவார். ஆகவே, உடனே வெளியேறிவிடுங்கள். அவரை உள்ளே வர அனுமதியுங்கள்.

ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த பகவான் விஷ்ணுவின் பாதங்களை லட்சுமி தேவி

நீங்கள் சரணடையும்பொழுது, உங்களுக்குள் உருவாகும் ஒரு தளம் சரியான, பொருத்தமான, இசைவான நகர்வுகள் நிகழ அனுமதிக்கிறது.

இதைத்தான் பாத ஸேவை என்பர். அந்தக் காலத்தில் உண்மையாகவே பெண்கள் தங்கள் கணவன்மார்களின் கால்களைப் பிடித்துவிடுவது வழக்கம்! அப்போது திடீரென விஷ்ணு, தம் வாகனமாகிய கருடனை அழைத்தார். அதன்மீது அமரச் சென்றவர், உடனே மீண்டும் தம் முடைய ஆஸனத்திற்குத் திரும்பி வந்துவிட்டார். இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட லட்சுமிதேவி, என்ன நடந்தது என வினவினார்.

விஷ்ணு நடந்ததை விவரித்தார்: தியானம் செய்து கொண்டிருந்த என் பக்தன்மீது யாரோ ஒருவன் கற்களையெறிந்து கொண்டிருந்தான். அந்தப் பக்தனைக் காக்க நான் விரையும்பொழுது, அந்தப் பக்தனே தியானத்திலிருந்து எழுந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு கல்லை கையிலெடுத்தான். இனி நான் அங்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனத் திரும்பி விட்டேன் என்றார்.

இதுபோலவே உங்களையும், உங்களுடைய சொத்து சுகங்களையும் நீங்களே பின்வாங்கிவிடுகிறார்.

அவர் உங்களைக் காக்க வேண்டுமென்றால், உங்கள் வீட்டைப் பூட்டாமல் வைத்துக்கொள்ள வேண்டுமென்று பொருள் அல்ல. உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியை விட்டுவிட வேண்டுமென்பதே அதனுடைய பொருள். அந்த உள்ளுணர்ச்சியே தொடர்ந்து உங்களைச் சித்ரவதை செய்கிறது. அதுவே மிகவும்

மோசமான கொலையாளி. யாராவது உங்களைக் கொல்ல வந்தாலும், அவர் ஒரேயொரு முறைதான் உங்களைக் கொல்வார். ஆனால், வாழ்ந்தே ஆக வேண்டுமென்கின்ற இந்த உள்ளுணர்ச்சி உங்களை ஒவ்வொரு நிமிடமுமே கொல்லும்.

வாழ்ந்தே ஆக வேண்டுமென்கின்ற உள்ளுணர்ச்சியை நீங்கள் விட்டுவிட்டால், கிருஷ்ணர் உங்களைப் பாதுகாப்பார். அறிவு பூர்வமாக நீங்கள் இதைப் புரிந்துகொள்ள முடியாது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு யாரோ ஒருவரால் சொல்லப்பட்ட ஒரு வாசகம், இப்போது எப்படி எனக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும் ? ஆகவே நானேதான் என்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள். அது தவறு !

நீங்கள் சரணடையும் தருணத்தில்தான், அப்படிப்பட்ட உள்ளுணர்ச்சி பயனற்றது என்பதையும், இந்தப் பொருள்சார் உலகில்கூட, அந்த நீள் ஆயுள் உள்ளுணர்ச்சி அல்லது உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்கிற உள்ளுணர்ச்சிகளின் ஆளுமை இல்லாமலேயே வாழ முடியும் என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.

கிருஷ்ணர், உங்களைப் பாதுகாப்பேன் என்று சொல்லும்பொழுது, இதையே உணர்த்துகிறார். அவருடைய சக்தி அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்கிறது. நீங்கள் சரணடையும்பொழுது, உங்களுள் உருவாகும் ஒரு தளம் சரியான, பொருத்தமான, இசைவான நிகழ்வுகள் நிகழ அனுமதிக்கிறது. பின்பு தானாகவே, எல்லாமே சரியாக அமையும் ; தானாகவே நீங்கள் கிருஷ்ண சக்தியால் காக்கப்படுகிறீர்கள்.

உங்கள் மனத்தைப் புத்திசாலித்தனத்துடன் கையாண்டு, உங்கள் சொந்த வழியில் செல்ல முடியும் என்று நீங்கள் நம்பும்பொழுதுதான், நீங்கள் பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்கிறீர்கள்.

உங்கள் மனத்தைப் புத்திசாலித்தனத்துடன் கையாண்டு, உங்கள் சொந்த வழியில் செல்ல முடியும் என்று நீங்கள் நம்பும்பொழுதுதான், நீங்கள் பிரச்சினைகளை விரும்பி, வேண்டி வரவழைத்துக்கொள்கிறீர்கள். சொல்வதைக் கேட்டு நடப்பதற்கு பதிலாக, உங்கள் மனத்தையும், புலன்களையுமே நம்பி நடந்தீர்களென்றால், அழிவிற்குள்ளாவீர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.