KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/அஹங்காரத்தைக் கீழே போடுங்கள். ஆன்மிகத்தில் மேலே உயருங்கள்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

அஹங்காரத்தைக் கீழே போடுங்கள். ஆன்மிகத்தில் மேலே உயருங்கள்

நாம் இரு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, உங்கள் மனம் சொல்வதைப் பின்பற்றுவது. இரண்டாவது, குரு சொல்வதைப் பின்பற்றாமலிருப்பது.

மற்றொருவருக்கு ஒப்புக்கொள்வதென்பது பலருக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அது, தங்களுடைய சுய மரியாதைக்கு இழுக்கு என்றும், அது நாகரிகமற்ற செயல் என்றும் நினைக்கிறார்கள். குரு எப்போதும்

தங்களை எதிர்ப்பவராகவே இருக்கிறார் என்று நினைத்துவிடுவதால், அங்கே சரணடைவதற்கு இடமில்லை.

காலில் வலி உள்ள ஒருவருக்கு நான் தியான சிகிச்சை கொடுக்க நேர்ந்தால், நான் குனிந்து அவருடைய காலைத் தொட்டுத்தான் சிகிச்சை அளிப்பேன். அதற்கு யாரோ ஒருவர் என்னைக் கேட்டார்: ஸ்வாமிஜி. உங்களால் எப்படி இன்னொருவர் காலைத் தொட முடிகிறது? உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்கிறீர்களே ?

நீங்கள் சரணடையும் தருணத்தில்தான், நான் மற்றும் எனது என்கிற உள்ளுணர்ச்சிகளின் ஆளுமை இல்லாமலேயே வாழ முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

நான் சொன்னேன்: "நான் ஒருவருடைய காலைத் தொடும்பொழுது அவரை என் நிலைக்கு உயர்த்துகிறேன். ஆனால், நீங்கள் என் காலில் விழும்போது, உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்கிறீர்கள். ''

நீங்கள் மற்றவர் காலில் விழும்போது, உங்களுடைய அஹங்காரத்தைச் சரணாகதி செய்கிறீர்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லதே. நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. ஒரு கல்லிடமோ ஒரு மனிதரிடமோ உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்யும்போது, அது உங்களை ஆன்மிகத்தில் உயரச் செய்கிறது. இது, ஒரு முழுமையான ஸ்த்யம். ஒரு ஜ்ஞாநகுருவினிடம்தான் சரணடைய வேண்டுமென நினைத்து, நீங்கள் அப்படி ஒரு நபரைத் தேடுவதற்கும், தேர்வுசெய்வதற்கும் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டிய தேவையே இல்லை. ஒருவர் என்னிடம் கேட்டார்: சீரணாகதி என்று சொல்லும்போது நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் ?

எந்தவொரு நிபந்தனையுமின்றி, உங்களால் அன்புசெலுத்த முடிந்த ஒரு நபரைக் காணும்போது, அந்த நபரை நீங்கள் அன்புசெலுத்துவது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனும் நிலையையே சீரணாகதி என்கிறேன். அப்பொழுது உங்களுடைய தனிப்பட்ட அடையாளம் அவரிடம் கரைந்து கலந்துவிடுகிறது.

நான் அவர்களிடம் சொல்வதுண்டு: கடவுள் உங்களிடம், 'இந்த உலகம் முழுவதும் அழியப்போகிறது. நீயும் இன்னும் ஒரு நபரும் மட்டுமே உயிரோடு இருக்க முடியும். அந்த இன்னொரு நபரை நீயே தேர்வுசெய்துகொள்ளலாம்' என்று சொன்னால், நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் ? யாருடன் இருக்க விரும்புவீர்கள் ? அந்த நபரிடம்தான் நீங்கள் சரணடைந்திருக்கிறீர்கள் !

வேத மந்த்ரங்கள், நமஹ என்னும் சொல்லோடு முடிகின்றன. அதன் அர்த்தம் என்ன? நான் உம்மிடம் சரணடைகிறேன் என்பதே அதன் அர்த்தம்.

ஒவ்வொரு முறை வேத பாராயணம் செய்யும்பொழுதும், 'நான் உம்மிடம் சரணடைகிறேன், என் இறைவனே' என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள். இந்த அளவுக்கு, உங்கள் அஹங்காரத்தை முழுமையாக அழிக்கக்கூடிய பிரார்த்தனை முறை வேறொன்று இருக்கிறதா?

குரு, ஒரு மனிதப் பிறவியாகவும், இஷ்ட தெய்வம், ஒரு கல்லாகவும் கருதுவதனால், நீங்கள் இவர்களிடத்தில் சரணடைய மறுக்கிறீர்கள். குரு, ஒரு மனிதப் பிறவியாகவும், இஷ்ட தெய்வம், ஒரு கல்லாகவும் இருப்பதனால், நீங்கள் இவர்களிடத்தில் மறுக்கிறீர்கள். நீங்களே ஒரு தனிப்பட்ட சுதந்திரமானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா ?

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் குருவிடமோ, இஷ்ட தெய்வத்திடமோ சரணடையவில்லையென்றால், நீங்கள் பணத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ அல்லது காமத்திற்காகவோ சரணடைவீர்கள். இவற்றுள் ஏதாவதொன்று நிச்சயம் நிகழும்.

மக்கள், யாராவது ஒருவர் பின்னேயே எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; ஏனெனில், அந்த ஒருவரிடம் அவர்களுக்குத் தேவையான ஒன்று உள்ளது.

ஒரு நபர் விழிப்புணர்வு நிலையிலிருக்கிறார், அவரால் அதே விழிப்புணர்வு நிலைக்கு உங்களையும் அழைத்துச்செல்ல முடியும். புத்திசாலித்தனமான புரிதலின் காரணமாக, நாம் ஏன் மற்றொருவரிடம் சரணடையத் தயங்குகிறோம்? ஏனெனில், நாம் நம் மனத்தாலும் புலன்களாலும் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம்.

அந்த நபரைப் பின்பற்றுவதும், அவரிடம் சரணடைவதும் எவ்வளவு அறிவார்த்தமான செயல்!

நாம் ஏன் மற்றொருவரிடம் சரணடையத் தயங்குகிறோம்? ஏனெனில், நாம் நம் மனத்தாலும் புலன்களாலும் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இப்போது, சிறைக்கைதிகளாக இருக்கிறோம்.

நம் மனமும் புலன்களும், நமக்காக உருவாக்கிக்கொடுத்த தனிப்பட்ட அடையாளத்தை இழந்துவிடுவோமா என்று அஞ்சுகிறோம். அந்த அடையாளத்தைத் துறக்க அஞ்சுகிறோம். அடையாளத்திடமும் அஹங்காரத்திடமும் நாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை, விசுவாசத்தை, பக்தியை வேறு ஒருவரிடம் செலுத்துவதற்கு, நம் மனம் விடுவதில்லை; அதை எதிர்த்து அது போராடுகிறது.

நீங்கள், உங்கள் புலன்களின் அடிமைதானே தவிர, நீங்கள் கற்பனை செய்வதுபோல், உங்களுடைய விதியை நிர்ணயிக்கும் தலைவன் அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள்தான் உங்களின் விதியை நிர்ணயிக்கும் தலைவர் என்கின்ற உங்களின் தவறான நம்பிக்கையிலிருந்தே, உங்கள் வலிகளும் துயரங்களும் தோன்றுகின்றன என்பதைப் புரிந்துகொண்டு, எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் இயல்பை உணர்ந்து ஒரு மாற்றுவழியைத் தேடிச் செல்வீர்கள்.

நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்கிறீர்கள்: ''நான் சொல்வதைப் நீங்கள் பின்பற்றினால், என்ன நிகழ்ந்தாலும், நான் உங்களைப் பாதுகாப்பேன். நீங்கள் அப்படிச் செய்யாது, உங்கள் மனத்தைப் பின்பற்றினால், நீங்கள் அழிவிற்குள்ளாவீர்கள்."

கீதையின் ஒரு ஸ்லோகத்தையாவது, க்ருஷ்ணருடைய ஒரு வாசகத்தையாவது நன்கு, முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்!

பக்தியும், ஞானமும் வேறு வேறு அல்ல