'பிர்பஞ்சத்தின் ஒரு பகுதியே தாம்' என்பதை உணர்ந்த ஒருவர், கொலை பரிவதில்லை
ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், நாம் பாதுகாப்பற்ற தன்மையை உணரும்பொழுதே மற்றவரைக் கொல்கிறோம்.
போர்தொடுப்பதற்கு கோழைத்தனமே அவர்களைக் கண்டே அவர்களுக்கு அச்சம், அதனால் மற்றவர்களைக் கொல்கின்றனர், எப்போதுமே மற்றவர்களைக் கொல்வதில்லை. அவர் அஹிம்ஸையில் நிலைபெற்றிருப்பார் !
'அஹங்காரத்தில் கொலைபுரிந்தாலும்கூட, அவர் அவர் கொலை செய்யவில்லை' - -என்ற இப்படிப்பட்ட துணிச்சல்மிக்க ஒரு கருத்தை, கிருஷ்ணர் சொல்வதற்குக் காரணம், அவர் அஹிம்ஸையில் நிலைபெற்றிருப்பார் !
கிருஷ்ணர் இங்கு வலியுறுத்தீச் சொல்வது: பிணைப்பிலிருந்து விடுபடுவீர்களாக. உங்களை நீங்களே அவரங்காரத்திலிருந்து விடுவித்துக்கொள்வீர்களாக என்பதே.
கிருஷ்ணர் இங்கு வலியுறுத்திச் சொல்வது: 'பிணைப்பிலிருந்து உங்களை நீங்களே அஹங்காரத்திலிருந்து விடுவித்துக்கொள்வீர்களாக' என்பதே.
அவர் சொல்லவில்லை. மக்கள், வார்த்தைகளுக்கு அவரவர்களுடைய சொந்த அர்த்தங்களைக் கொடுத்துவிடுவதுதான் இங்குப் பிரச்சினை. மக்கள், அவரவர்களுக்கென்று ஒரு அர்த்தம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சின்ன கதை:
ஒரு ஜென் மடாலயத்தில் ஒரு சிறுவன் துறவிப்பயிற்சிக்காகச் சேர்ந்தான். ஒரு நாள் அவன், தன் குருவின் அறையை சுத்தம்செய்து கொண்டிருந்தபோது, அவருடைய தேநீர்க் கிண்ணத்தைத் தவறுதலாகக் கீழே போட்டு உடைத்துவிட்டான்.
அதைத் தன் குருவிடம் சொல்லிவிட வேண்டுமென்று நினைக்கான், ஆனாலும் தனக்கு ஏதேனும் தண்டனை கொடுத்துவிடுவாரோ என்று பயந்தான்.
க்ருஷ்ணரின் வார்க்கைகளுக்கு உங்களின் சொந்த அர்த்தங்களைக் கொடுக்காதீர்கள், அந்த வார்த்தைகளுக்குப் பின் உள்ள லத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
அவன் குருவிடம் சென்று, மெதுவாக அவரிடம் கேட்டான். "குருவே, பிறந்த அனைத்தும் ஏதேனும் ஒரு நாள் இறக்கத் தானே வேண்டும் ?''
குருவும், 'ஆமாம்' என்று பதிலளித்தார். பிறகு அந்தச் சிறுவன் மெதுவாக, உடைந்த தேநீர்க் கிண்ணத்தின் துண்டுகளைக் காண்பித்தவாறு, ''தங்களுடைய தேநீர்க் கிண்ணத்திற்கும் இறக்கும் நேரம் வந்தது,'' என்றான்.
நம் வாதத்தை எப்படி முன் வைக்க வேண்டுமென்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால், இங்கே, கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு உங்களின் சொந்த அர்த்தங்களைக் கொடுக்காதீர்கள், அந்த வார்த்தைகளுக்குப் பின் உள்ள லக்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! அவர், உங்கள் அஹங்காரத்திலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்.
தாம், இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே என்பதை உணர்ந்துகொண்ட ஒருவர் கொலைபுரிந்தாலும்கூட, அவர் கொலை செய்யவில்லை. -இக்கூற்றின் சரியான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர், உங்களைப் பற்றிய உண்மையை உணருமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறார். அவர், உண்மையை உணருவதற்குத்தான் உங்களை ஊக்குவிக்கிறார், கொல்வதற்கு அல்ல.
அர்ஜுனனைச் சிந்திக்க வைப்பதற்காகவே 'கொல்தல்' என்ற வார்த்தையை கிருஷ்ணர் பயன்படுக்கினார்.
கிருஷ்ணர் இங்கு, அஹங்காரமற்ற நிலையிலிருந்து எழுகின்ற பற்றற்ற நிலையையே புரியவைக்கிறார்.
ஒருவர், 'தான் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டுமென்கிற அவசியமில்லை' என்று உணரும்பொழுது, அவருடைய செயல்கள் பற்றற்றதாகவும் எதிர்பார்ப்புகளற்றதாகவும் இருக்கும். அந்நிலையிலிருக்கும் ஒரு மனிதர், உண்மையில், தம் 'இருப்போடு' இசைந்து இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதா் அழிக்கும்பொழுது, நான் முன்னரே விவரித்தபடி, அது, ஒரு வித்தியாசமான அலைவரிசையிலும் புரிதல் தளத்திலும் நிகழ்கின்ற இயற்கை பேரழிவைப் போன்றதுதான்.
போரைத் தைரியமாக சந்திப்பதே அர்ஜுனனின் கடமையே தவிர, போர்க்களத்திலிருந்து விலகி ஒடுவது அல்ல என்ற உண்மையை, அர்ஜுனனுக்குப் புரியவைப்பதற்காகவே, கிருஷ்ணர் இப்படிப்பட்ட ஒரு கருத்தைச் சொல்கிறார்.
இது, வியாபார ரகசியம் ... !
கேள்வி: ஸ்வாமிஜி, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுடைய சீடர்கள் அவர்களை எரிப்பதாகக் கூறுகிறார்களே, இது எங்களை அச்சுறுத்துகிறது. அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ?
ஆம். அப்படி தான். என் சீடர்கள் சரியாகத்தான் சொன்னார்கள். அவர்கள் இதை எந்தப் புரிதலுணர்வோடு சொன்னார்களோ, எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் இது போன்ற வியாபார ரகசியங்களையெல்லாம், இப்படி வெளியில் சொல்லக்கூடாது!
நீங்கள், வெறுமனே என்னைப் பார்த்து, ஆனந்தித்துக் கொண்டிருக்க விரும்பும் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க ஆசைப்பட்டால், நான், நீங்களே விரும்பி எடுத்துக் கொள்ளும் உங்கள் கண்களுக்கான விருந்தோடு சேர்த்து, மூளைக்கான விருந்தையும் கொடுப்பேன்.
நீங்கள் ஆர்வமும் தேடுதலும் உள்ளவராக ஆகும்பொழுது, நீங்கள் என் வார்த்தைகளுக்குப் பின் உள்ள அர்த்தத்தைப் பார்க்கத் துவங்கும்பொழுது, நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறிச்செல்ல நான் உதவ முடியும் என்று நீங்கள் நம்பும்பொழுது, நீங்கள் என்னுடைய சீடர் என்ற நிலைக்கு அருகில் வருகிறீர்கள். அப்போது என்னுடைய வடிவத்தை விட்டுவிட்டு, வடிவமல்லாததின் மீது கவனம் செலுத்துமாறு நான் அறிவுறுத்தத் துவங்குவேன்.
நீங்கள் என்னுடைய சீடராகும்பொழுது, நீங்கள் பொறுப்பாகிவிடுகிறீர்கள். உங்களுடைய ஆன்மிக முன்னேற்றம் இனியும் உங்களுடைய பொறுப்பு மட்டுமல்ல, அது என்னுடையதுங்கூட. நான் அதற்குப் பிறகும், சிரித்தவாறே, உங்கள் போக்கில் போக உங்களை விடமாட்டேன்.
எல்லா ஆன்மிக முன்னேற்றமும் அஹங்காரத்தை விட்டுவிடுவதைப் பற்றியதுதான். குருவினுடைய வேலை அந்த அஹங்காரத்தை நீக்குவதே. இது ஒரு அறுவைசிகிச்சை. குரூதான் அந்த அறுவைசிகிச்சை நிபுணா்.
இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் என்னோடு சிலகாலம் தங்கியிருந்தால், எல்லா நேரமும் நான் சாந்த சொரூபமாக, அமைதியாக, புன்சிரிப்பு முகமாக இருப்பதில்லை என்பதை அறிந்துகொள்வீர்கள். நான் உரத்த குரலில் கட்டளைகளை இடும்பொழுது, என்னுடைய சீடர்கள், அங்குமிங்குமாக அலைவார்கள். வெளியிலிருந்து வருவோர், நான் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைவார்கள். இப்படியெல்லாம் பேசலாமா ? குரு இப்படி பேசலாமா என்று திகைப்பார்கள் ஏனெனில் அவர்கள் கீதையைப் படித்ததில்லை அல்லது படித்தும் புரிந்துகொண்டதில்லை, அதனால்தான் அப்படித் திகைக்கிறார்கள்!
உண்மையில் நான் கோபமாக இருப்பதாகத் தோன்றினாலும், அது, நான் வெளிக்காட்டும் முக பாவனை மட்டுமே! எனக்குள்ளே கோப உணர்ச்சியோ எதிர்ப்பு உணர்ச்சியோ இல்லை. அங்கு ஸார்விக உணர்வுகூட இருப்பதில்லை. ஒரு குருவானவர், ஸாத்விக (நல்லவை), ரஜஸ்(எதிர்ப்பு), தமஸ்(சோம்பல், சுறுசுறுப்பின்மை) ஆகிய இந்த மூன்று பண்புகளுக்கும் அப்பாற்பட்டவர். அவர் ஒரு திரிகுணாதீதர்.
ஆம். என் சீடர்கள், அவர்களை நான் சுட்டெரிப்பதாக உங்களிடம் சொல்லியிருக்கலாம், ஆனால், அவர்கள் அதை, ஒரு பெருமையுடனும் அன்போடும்தான் சொல்லியிருப்பார்கள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை! இல்லையென்றால் அவர்கள் ஏன் இன்னமும் இங்கே தங்கியிருக்கிறார்கள் ? நான் அவர்களைக் கட்டாயப்படுத்துவது இல்லை.
நீங்கள் என்னுடைய சீடராகும்பொழுது, உங்களுடைய ஆன்மிக முன்னேற்றம் இனியும் உங்களுடைய பொறுப்பு மட்டுமல்ல, அது என்னுடையதுங்கூட.
அவர்களுடைய அஹங்காரம் விழுந்து, அவர்களுக்குள்ளிருந்து ஆனந்தம் எழும்பொழுது, அவர்களுக்குள் நிகழும் மாறுதலையும் அவர்களே பார்க்கிறார்கள். வெகுவிரைவிலேயே அவர்கள், என்னுடைய கோபமும், கத்தலும், எரிப்பும் மேலோட்டமானவையே அது, அவர்களின் முன்னேற்றத்திற்காக நான் போடும் முகமூடிதான் என்பதையும், என்னுடைய சிகிச்சை நடத்துகிறது என்பதையும் நன்கு புரிந்துகொள்கிறார்கள்.
நான் யாரையும் வெளியேறுவதில்லை, அவர்கள் எதை விரும்பி எதிர்பார்த்து வந்தார்களோ, அது அவர்களை இங்கிருந்து விலக்கிவிடுகிறது.
உண்மையில், ஒரு சீடர் என்னை விட்டுச் செல்லும்பொழுது, அது என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்திவிடும். ஏனென்றல் இதற்கு முன் பல பிறவிகளிலும், இதேபோல் குருவை விட்டு ஓடிய அனுபவங்களால் பாடங்கற்றுக்கொண்ட அவர்களுடைய ஆன்மாதான் அவர்களை என்னிடம் அழைத்து வந்தது. அந்த ஆன்மா, குறைந்தபட்சம் இந்தப் பிறவியிலாவது ஒரு குருவின் மூலம் விடுதலை அடைந்து விடலாம் என்று நம்புகிறது. ஆனால் இப்பிறவியிலும் அவர்கள் இவ்வாய்ப்பை இழக்கிறார்களே என்ற வருத்தம் எனக்குள் எழும் இதை நான் அவர்களிடம் வெளிப்படையாகவே சொல்வதுண்டு. இது அடிக்கடி இங்கு நிகழ்வது கிடையாது, ஆனால், நிகழ்கிறது.
என்னிடமோ அல்லது வேறெந்த குருவிடமோ நீங்கள் பயப்படுவதற்கு ஒன்றுமே கிடையாது. குருவை ஒன்றே ஒன்றுதான் வழிநடத்துகிறது: அது, உங்கள்மீது கொண்ட கருணையே!
அவர் உங்களிடமிருந்து பிரதிபலனாக எதையுமே எதிர்பார்ப்பதில்லை. அவருக்கு கொடுப்பதற்கென்று மதிப்புள்ளதாக உங்களிடம் எதுவுமே இருக்க முடியாது. அவர் உங்களிடம் காட்டும் கருணை, முழுக்க முழுக்க எந்தவொரு நிபந்தனையுமற்றதே!