Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
0.000 புத்திசாலித்தனம்
- எந்த ஒரு பைத்தியமும் தன்னை பைத்தியம் என்று சொல்லிக்கொள்ளாது, ஏற்றுக்கொள்ளாது. இதில் பாதிப்புமில்லை, பலனுமில்லை.
- எந்த ஒரு முட்டாளும் தன்னை முட்டாள் என்று சொல்லிக் கொள்ள மாட்டான். எண்ணிக் கொள்ளவும் மாட்டான். இதில் பாதிப்புண்டு, ஆனால் பலனில்லை.
- அதேபோல், எந்த ஒரு புத்திசாலியும் தன்னைப் புத்திசாலி என்று சொல்லிக் கொள்ளவோ, எண்ணிக் கொள்ளவோ மாட்டான். இதில் பாதிப்பில்லை, நிச்சயம் பலனுண்டு.
- நீங்கள் பாதிப்படைந்தவரா ? பலன் அடைந்தவரா ? நீங்கள்தான் தேர்வு செய்து முடிவு சொல்ல வேண்டும்.
- தன் தகுதியையும், தன் தெளிவையும் கணக்கில் கொள்ளாமல் 'நான் ஒரு புத்திசாலி' என்று அழுத்தமாக (தெரிந்தோ, தெரியாமலோ) நினைக்கும், நினைவு என்ற விதையில் இருந்துதான் 'முட்டாள்தனம்' என்னும் முட்புதர் நமக்குத் தெரியாமலே வளர்கிறது.
- வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பது நிச்சயம் முட்டாள்தனம்.
- அதற்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டே, சம்பாதித்துக் கொண்டே இருப்பது புத்திசாலித்தனமல்ல.
0.000 முட்டாள்தனம்
- ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாக கூடத் தெரிவதில்லை.
- வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தி நம்மிடமில்லை என்றாலே, நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ... இறைவன் நமக்குக் கொடுத்த புத்திசாலித்தனம் என்னும் சக்தியை நாம் பயன்படுத்தவில்லை என்று.
- திருப்தியை வீணடிக்கச் செய்யும் முட்டாள்தனங்கள் எங்கு ஒளிந்திருக்கின்றன என ஆராயுங்கள். கலந்தாலோசியுங்கள்.
- ஒருவேளை உங்களைப் போலவே உங்கள் உறவுகளும் மற்றவர்களின் குறைகளைச் சரியாய் சுட்டிக் காட்டும் புத்திசாலிகளாக இருக்கலாமில்லையா ?
- வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முழுமையாக அனுபவிக்க, இயல்பாக வாழு, இறைவன் கொடுத்த புத்தி என்னும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பியுங்கள். புத்திசாலித்தனம் பொங்க ஆரம்பித்துவிடும். வாழ்ந்த திருப்தி கிடைக்குமளவுக்கு அனுபவித்து வாழ ஆரம்பிப்பீர்கள்.