ஆனந்த மாற்றம் - 3
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆராய்ந்த மருத்துவக்குழு நபர்கள், ஆராய்ச்சியின் ஆராய்ச்சியின் முடிவில் பக்தர்களாகவே மாறிவிட்டார்கள்.
நமக்குத் தெரியாத பலகோடி விஷயங்கள் உலகத்தில் இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சந்தித்தபின் உணர்ந்தனர்.
எல்லாமே எனக்குத் தெரியும் எனும் கர்வத்தை, அகங்காரத்தை தூக்கி எறிந்துவிட்டு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விஷயங்கள் அனைத்தையும் எந்த விவாதமின்றி ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு மருத்துவர், பயபக்தியோடு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-டம் "சுவாமிஜி, மனிதனின் உயிர் எங்கே இருக்கிறது ?" என்று கேட்டார்.
"அருமையான கேள்வி, இதற்கு விளக்கம் அளிப்பதற்கு முன், நீங்கள் மனித உடலில் எங்கே உயிர் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள்" கேட்டார்கள்.
அந்த மருத்துவர், "கிட்டத்தட்ட உயிர் என்பது மூளை சம்பந்தப்பட்டது என்று நிலைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நீங்கள் சொல்லப் போகும் உண்மையை கேட்கவே விரும்புகிறோம் " என்று சொன்னார்.
மனிதனின் உயிர் சுவாதிஷ்டான சக்கரத்தில் ஒருங்குகிறது.
சுவாதிஷ்டானம் என்பது தொப்புள் கொடிக்கு நமது இரண்டு அங்குலம் கீழே, வலப் புறத்தில் அடங்கி இருக்கிறது என்று பதிலளித்தார்.
"அது எப்படி உயிர் சுவாதிஷ்டானத்தில் ஒடுங்கும்? என்ற விவாத கேள்வியை எழுப்ப ஒருவருக்கு கூட மனமில்லை.
மாறாக, சுவாதிஷ்டானச் சக்கரத்தில் உயிர் அடங்குவதற்கும், நம் வாழ்க்கைக்கும் ஏதாவது பயனுள்ள தொடர்பு இருக்கிறதா?" என்று ஒரு மருத்துவர் கேட்டார்.
உண்டு.
அக நடுக்கம்தான் வெளியே பயமாக வெளிப்படுகின்றது.
உங்களைப் பற்றிய ரகசியங்கள், உடலைப் பற்றிய ரகசியங்கள், வாழ்க்கைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்துவிட்டால், பல புரியாத விஷயங்களுக்கு பதில் கிடைத்துவிடும்.
தெளிவு வந்து விடும்.
அகத்தெளிவுதான் வெளியே தைரியமாக வெளிப்படும்.
உன்னைப் புரிந்து கொள்,
உலகை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அல்லது
உலகைப் புரிந்து கொள், உன்னை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இந்த இரண்டில் எது சுலபமோ அதைச் செய்தால் போதும்.
அகத்தெளிவு பிறந்துவிடும். அகங்காரம் அடங்கி விடும். பயம் ஒழிந்து விடும். ஆரம்பிக்கும்.
மனிதன் தன்னை அபாயத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட காப்பு உணர்வு தான் பயம்.
அபாயத்தில் இருந்து மனிதனுக்கு அபயம் அளிப்பதற்காகவும், மேலும் இந்த உலகை ஆனந்தமாக அனுபவிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட உணர்வுதான் தைரியம்.
பயம் உயிர்ச் சக்தியின் வெளிப்பாட்டை தடுக்கின்றது! தைரியம் உயிர்ச்
சக்தியின் வெளிப்பாட்டை அதிகரிக்கிறது!
உயிர் சுவாதிஷ்டானச் சக்கரத்தில் ஒருங்கியிருப்பதால் தான், பயமும், தைரியமும் உயிர் சக்தியை ஆட்டிப்படைக்கின்றன.
பயத்திற்கான காரணங்களை கண்டுபிடித்து, அதற்கான பரிகாரம் கண்டு கொண்டாலே போதும், சுவாதிஷ்டானம் மலர ஆரம்பித்துவிடும்.
புரியாத விவரங்கள்தான அறியாமை) அறியாமை என்னும் இருள் அகல அகல, சுவாதிஷ்டானச் சக்கரம் மலர ஆரம்பிக்கும்.
தைரியம் பெருக ஆரம்பிக்கும். உடலில் உயிர் சக்தியின் ஓட்டம் அதிகமாகும்.
உயிர்ச் சக்தியின் ஓட்டம் அதிகரிக்க - ஆரோக்கியம், நிம்மதி, சந்தோஷம் தானாக அதிகரிக்க ஆரம்பித்துவிடும். புரிந்ததா ... " என்று விளக்கினார்.
மொத்த மருத்துவக் குழுவும் வெகு உற்சாகத்தோடு கரவொலி எழுப்பினார்கள்.
உயிர் சுவாதிஷ்டான சக்கரத்தில் ஒருங்கியிருப்பதால் தான், பயமும், தைரியமும் உயிர்சக்தியை ஆயுதம்படைக்கின்றன.
அனந்த மாற்றம் - 4
பக்தி ஈடுபாட்டோடு அடுத்து ஒரு மருத்துவர், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரிடம் என்ன? என்று கேட்டார்.
"சக்கரம் என்பது மெய்ஞானிகள் அருவ உருவமாக (Meta Physical), தாங்கள் அனுபவித்து உணர்ந்த உண்மைகளை வார்த்தை வழியில் சொன்னது.
நமது உடலில் ஏழு சக்தி மையங்கள் இருக்கிறது. அவற்றை நாம் சக்கரங்கள் என்று அழைக்கிறோம்.
சக்கரங்கள் சக்திமயமானவை. சக்கரங்கள் உணர்வுப்பூர்வமானவை.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் எங்கே இருக்கிறது என்று ஞானிகள் குறிப்பிடும் இடத்தை அறுத்துப் பார்த்தால் அங்கு சக்கரம் என்ற ஒன்று இருப்பதில்லை.
உணர்வின் அடிப்படையில் வெளியில் இருந்து மையம் நோக்கியும், மையத்திலிருந்து வெளிநோக்கியும் இருக்கக்கூடிய சக்தி அமைப்புதான் சக்கரங்கள். இதை உணர மட்டுமே முடியும்.
நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் மூளை, இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகள் நம் உடலை இயக்குவதில்லை.
ஏழு சக்கரங்களும் அவையவை இருக்கும் இடத்திற்கு சம்மந்தபட்ட உறுப்புகள் மூலம் உயிர் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. உடலானது, உயிர்ச் சக்தி மூலம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
உயிர்ச் சக்திக்கும், நம் உடலுக்கும் பாலமாக சக்கரங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
உணர்ச்சி வேகந்தளிப்புகள் பாலமாகயிருக்கும் சக்கரங்களை நாசப்படுத்துகின்றன.
இதனால் சக்திப் போக்குவரத்து தடைக்கின்றது.
உடல் அதற்கு தேவையான அளவு உயிர்ச் சக்தியை, பெற முடியாமல் போகின்றது.
உயிர்ச் சக்தியின் பற்றாக்குறையே நம்மிடமிருந்து சோர்வு, மந்தத்தன்மை, தூக்கமின்மை, நாள்பட்ட நோய், மனச் சோர்வு, மனநோய் என்று பல வகைகளில் வெளிப்படுகின்றது.
சக்கரங்களைப் பாதிக்கும் உணார்ச்சிக் கொந்தளிப்புகளை எப்படி சமாளிப்பது? எப்படி உணர்வுப்பூர்வமாக வாழ்வது? என்ற அழப்படையை மட்டும் கற்றுக் கொண்டாலே போதுமானது. உயிர்ச் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி, முழு ஆரோக்கியத்தையும் நாம் முழுமையாக பெற முடியும்.
இதனால் இன்றைய மனித குலத்தின் மிக முக்கியத் தேவையான ஆரோக்கியத்தை புர்த்தி செய்ய முடியும்.
உலகம் நீம்மதி அடையும்." என்று சொன்னார்.
மெய்ஞான அதினுபூதியை 5000 வருடங்களுக்கு முன்னர் சாத்திரத்தில் சொன்னதையும், சொன்னதையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால், அவர்கள் ஒரே சத்தியத்தை தான் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள் என்பது புரியவரும்.
காலகாலத்திற்கும் சத்தியம் சத்தியமாகவே இருக்கின்றது என்பது நமக்கு புரியவரும்.
அதே விஞ்ஞானத்தைப் பற்றிய தத்துவ விளக்கங்களைப் பார்த்தோமானால் அவை தொடர்ந்து மாறிக் கொண்டே வருவதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதற்கு 5000 வருடங்கள் முன் செல்ல வேண்டாம்.
வெறும் 50 வருடங்களுக்கு முன் ஒவ்வொரு துறையினும் இருந்த விஞ்ஞானிகளின் கருத்துகளையும் இன்றைய விஞ்ஞானிகளின் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும் உண்மை புரியும்.
மூத்த விஞ்ஞானி சொன்ன கருத்தை இளைய விஞ்ஞானி முற்றிலுமாக மறுத்திருப்பார்.
அதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருப்பார்.
விஞ்ஞானத்தைப் பொருத்தவரை நேற்றைய உண்மை இன்றைய பொய்.
இன்றைய உண்மை நாளைய பொய் என்ற ரீதியில் தான் இன்றைய ஆராய்ச்சிகளின் முழவுகள் சொல்கின்றது.
அணுவைப் பிளக்க முடியாது என்று நியூட்டன் சொன்ன உண்மையை ஐன்ஸ்டீன் பொய்யாக்கினார்.
எப்போதும் மனித மனமானது மாற்றத்தையும், புதுமையையும் அதிகம் விரும்பும்.
இந்த விஞ்ஞான தொடர் மாற்றங்களின் காரணமாக மனித மனம் மிக எளிதாக ஈர்க்கப்படுகின்றது.
மெய்ஞானத்தின் உண்மையானது 5000 வருடங்களாகியும் உண்மையாகவே இருக்கின்றது.
அதில் சிறிதும் மாற்றம் இல்லை.
அதன் பொருள் வளர்ந்த எந்நாளும் நிலைத்து நீண்டு வேண்டி விரும்புவோர்க்கு பயன் தருகின்றது - என்பதாகும்.
விஞ்ஞானத்தில் ஒரு உண்மை 50 வருடங்களுக்கு தாக்குப்பிடித்ததில்லை. ஏனெனில் அதற்குள் அடுத்த உண்மை தயாராகிக் கொண்டேயிருக்கும். அதன் பொருள், அந்த துறை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதாகும்.
மெய்ஞானம் வளர்ந்து முடிந்த ஒன்று.
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கும் ஒன்று.
மெய்ஞானம் விஞ்ஞானத்தின் மூலம் நிரூபிக்கப் படலாம்.
விஞ்ஞானம் மெய்ஞானம் பற்றி சில ஆதாரங்களை கண்டுபிடிக்கலாம்.
ஆனால் விஞ்ஞானத்தால் மெய்ஞானத்திற்கு சான்றிதழ் தர இயலாது.
மெய்ஞானம் என்ற ஆலமரத்தின் விழுதுகளை புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் ஆராய்ச்சி முறைகள் நிரூபிக்கலாம்.
ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானம் முதிர்ந்த மெய்ஞானத்திற்கு பரிபூரண விளக்கம் தர முடியாது.
ஆனந்த மாற்றம் - 5
ஒரு மருத்துவர், "சுவாமி தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சின்னக் கேள்வி."
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "கேளுங்கள்"
மருத்துவர்: "தாங்கள் சக்கரங்களைப் பற்றி கூறியதெல்லாம் கேட்பதற்கு மிக அருமையாகத்தான் இருக்கிறது.
ஆனால் நடைமுறையில் சக்கரங்களைப் பாதிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை சமாளித்து உணர்வுப் பூர்வமாக வாழ்வது எப்படி?" எனக் கேட்டார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "இது சின்ன கேள்வியா?
இதற்கு பதில் தர குறைந்தது இரண்டு நாட்கள் தேவை.
இரண்டு நாட்கள் தேவைப்படுவதால்தான், அதை இரண்டு நாள் தியான முகாமகவே வடிவமைத்திருக்கிறோம்.
ASP என்னும் இந்த இரண்டு நாள் தியான முகாமில் 7 சக்கரங்கள் பற்றிய, 7 தியானமுறைகளை, 7 மதங்களிலிருந்து எடுத்து, 7 சொற்பொழிவுகளோடு வழங்குகிறோம்.
பிரத்யேகமாகப் பயிற்றுவிக்கப்பட்ட 21 க்கும் மேற்பட்ட ஆச்சாரியர்கள் உலகம் முழுவதும் சென்று ASP வகுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் எல்லோரும் லாஸ் ஏஞ்சனினில் அடுத்த வாரம் நடக்கும் தியான முகாமில் கலந்து கொள்ளலாமே!
அப்போதுதான் உங்கள் கேள்விக்கு முழுப் பதிலும் கிடைக்கும்" என்று சொன்னார்.