சிவோஹ அனுபவம் அனுபூதியாகும்
இப்போது பிரச்சினை என்னவென்றால், சிலருக்கு இந்த அளவிற்குப் புரிந்து விடும். 'ஆமாம் சாமி. உண்மையில் பார்த்தீர்களென்றால் எனக்குள் இருக்கின்ற ஆத்மா. சிவம் வடிவானது. அது, எல்லா சக்தியும், எல்லா ஞானமும், எல்லா அறிவும், எல்லா ஆற்றலும் உடையது. அது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த அனுபூதியை அடைந்தால்தானே, அனுபவத்தை அடைந்தால்தானே சக்தியெல்லாம் வெளிப்படும். அதை அடையும்வரை நான் சாதாரண மனிதன், சவம் தானே. அதை அடைந்தால்தானே சீவம் ?
நீங்கள் என்ன சொல்கின்றீர்கள், 'எனக்கு அந்த அனுபூதி வரட்டும், அதன் பிறகு சீவன் மாதிரி அந்த சக்திகளை வெளிப்படுத்தி உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறேன்.' அந்த அனுபூதி என்ன சொல்கிறது என்றால் ... 'நீ சிவன்போன்று உயர்ந்த வாழ்க்கையை வாழ ஆரம்பி, அதன்பிறகு நானே உனக்குள்ளிருந்து வெளிப்பட்டு, சக்தீகளை எல்லாம் பொங்கீப்பெருக வைக்கிறேன்.
இது எவ்வாறு இருக்கிறதென்றால், மாமியாரும் மருமகளும் சண்டைபோட்டு முழத்த பிறகு, அம்மா மகனிடம் என்ன சொல்கிறார், "ஆமாம், சண்டைப்போட்டோம்தான். என்னவாக இருந்தாலும் நான் வயதில் பெரியவள் தானே. உன் மனைவியை வந்து பேசச் சொல்…' என்று.
மனைவி என்ன சொல்கிறார். "என்னவாக இருந்தாலும் பெரிச்சுக்கு பொறுமை இருக்க வேண்டாமா? முதிர்ச்சி இருக்க வேண்டாமா? அவர்கள்தானே சத்தம் போட்டார்கள். அவர்களையே வந்து என்னிடம் பேசச் சொல்லுங்கள்."
எல்லா மாமியார் மருமகள் சண்டையிலும், மாமியார் என்ன சொல்கிறார், 'என்ன இருந்தாலும் சின்னப்பொண்டைக்கு பொறுமை இருக்கவேண்டாமா? பொறுப்பு இருக்க வேண்டாமா? மருமகளை வந்து முதலில் பேசச்சொல், நான்பேசுகிறேன்' என்கிறார். மருமகள் என்ன சொல்கிறார், 'மாமியாரை முதலில் வந்து பேசச் சொல்லுங்கள். பிறகு நான் பேசுகிறேன்' என்கிறார். இந்த இரண்டு பேருக்கும் நடுவில் நின்று மாட்டிக்கொள்ளும் இந்த மனுஷனின் நிலைதான் குருவின் நிலை.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஒருபக்கம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், 'சீவோஹம் என்று நீங்கள் சொல்வதெல்லாம் சர்தான்சாமி, அந்த அனுபூதியை எனக்குள் வரச்சொல்லுங்கள் அதன்பிறகு சிவன்மாதிர் என்று. மறுபக்கம் அந்த அனுபூதி என்ன சொல்கிறது, 'பொறுப்பெடுத்து சீவன்போன்று வாழச்சொல், நான் அந்த அனுபூதியாக உள்ளிருந்து வெளிப்படுகிறேன்' என்று.
தெரிந்துகொள்ளுங்கள் ... மாமியார்-மருமகள் சண்டையில் நடுவில் மாட்டிக்கொண்ட மனுஷன் விழிப்பதுபோன்று நான் இருக்கப்போவதில்லை.
நான் அவதார் புருஷன்.
எனக்குள் இருக்கும் அனுபூதியைப் பொங்கச்செய்து , உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை விழ்ப்பிக்கச் செய்வேன். இந்த முதல் உத்வேகத்தினை அளித்து 'சீவோஹம்' எனும் அனுபூதியால் வருகின்ற உயர்ந்த தன்மையை உங்களுக்குள் உருவாக்கினேன் என்றால், இந்த உயர்ந்த தன்மையான சீவோஹத்தின் சக்தி வெளிப்பாடு உங்களுக்கு வரும். சக்திவெளிப்பாடு வந்ததும், மேலும் தன்மை பொங்கும், மேலும் தன்மை பொங்கியதும் மேலும் சக்தி வெளிப்படும், மேலும் தன்மை பொங்கும், மேலும் சக்தி வெளிப்படும். இது இவ்வாறாக நிகழ்ந்து சீவோஹத்தன்மை மலர்ந்துவிடும்.
இது மலர்வதற்காக நான் உங்களுக்குத் தரப்போகின்ற முதல் உத்வேகம்தான் குண்டலினி' விழிப்பு. குண்டலினி' விழிப்பு நீகழ்வுக்காக தரப்படுகின்ற தீக்ஷைதான் சிவ தீக்ஷை.