உண்மையை மறைக்கும் மாயத்திரை
'நீங்கள்தான் சிவம்' என்று சொன்ன உடனேயே பலருக்கும் வருகின்ற முதல் கேள்வி ... 'என் மனைவியே நான் சொல்வதைக் கேட்பதில்லை, நான் எப்படி சாமி சிவனாக முடியும் ?'
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். 'நீங்கள்' என்று உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற ஒரு கருத்து, அந்தக் கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை.
உடல்தான் நான், மனம்தான் நான் என்று நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கின்ற தவறான கருத்துதான் நீங்கள் சீவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை.
'உடல்தான் நான், மனம் தான் நான்' எனும் கருத்து நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், அந்த கருத்துதான் நிஜமான உங்களை நீங்கள் உணரமுடியாமல் தடுக்கின்ற இரும்புத்திரை.
நிஜமாகவே நீங்கள்' என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்களோ, 'நீங்கள்' என்று நீங்கள் எதை உணர்கின்றிர்களோ. அது நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், 'சீவோஹம் எனும் நிலையில் எப்போதும் இருக்கின்ற உங்களை, அதை உணரவிடாமல் தடுக்கின்ற மாயத்திரை அதுதான்.