சிவ தீதையின் தாத்பரியம்
சமய தீக்ஷை என்பதன் தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளுங்கள் ..
சமயம் = ச + மயம். சமயம் என்பது 'நான், எனது' என்கின்ற அகங்காரம். 'மயம்'-இதை இறைமயமாக மாற்றுவதுதான் சமயம். 'நான், எனது' என்ற வலி வேதுகைகளின் அடிச்சுவடான மமகாரத்தை இறைவடிவமாக மாற்றுவது, அகத்தை சீவோஹமாக மாற்றுவது சமயம்.
மன்தனை இறைவனாக மாற்றும் அறிவியல் சமயம். மனிதனை இறைவனாக மாற்றும் மெய்ஞான விஞ்ஞானம்.
ஆழ்ந்து கேளுங்கள் ... அப்பா-மகன் உறவில் ... அப்பா என்ன சொல்கிறார், 'நீ ஏதாவது வியாபாரத்தைச் செய்து உன் திறமையை நிரூபி. என் சொத்து முழுவதையும் உனக்கு எழுதி வைக்கின்றேன். என் வியாபாரத்தை உன் கையில் தருகிறேன்.'
மகன் என்னசொல்கிறார், 'நீ எதையாவது கொஞ்சமாவது கொடு. அதைவைத்து த்தான் என் வியாபாரத்தை நடத்தி என் திறமையை நிரூபிப்பேன்.
த்து முடிவீற்கு வராமல் தொடரும்போது, குருவாக இருப்பவர் நடுவில் வந்து, 'சரிப்பா
உன் அப்பா கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.. முதல் காசோலையை நான் என்னுடையதிலிருந்து தருகிறேன். இதை வைத்து நிரூபிக்கும்பொழுது உன் அப்பா தரத் துவங்குவார். அப்பொழுது இன்னும் மேலும் நிரூபிப்பாய். இதுபோன்று வளர்ந்து வளர்ந்து இறுதியில் மொத்தமும் உனக்கே வந்து சேரும்.'
இதில், நீங்கள்தான் மகன். சீவன்தான் அப்பா. அவர், 'நீ நிரூபி' என்கிறார் ... நீங்களோ, 'தந்தால் நிரூபிக்கிறேன்' என்கிறீர்கள்.
உங்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும் குரு. 'சரிப்பா, அவர் தரும்போது தரட்டும், முதலில் நான் தருகிறேன். இந்தச் சக்தியை வைத்து உன்னை நிரூப். நீ பொறுப்பெடுத்து எழுந்து நில். அதன்பின், தானாகவே அவர் அனைத்தையும் தந்துவிடுவார்' என்று உங்களுக்குச் சொல்லி, சாத்தியங்கள் அளித்து உத்வேகம் அளிப்பார்.
குருவே, உங்்களுக்கு இந்த முதல் உத்வேகத்தைத் தருகிறார். உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளிக்க வந்தவரே குருநாதர்.
சமயம் = ச+மயம்
மயம் என்பது ' நான், எனது' என்கின்ற அகங்காரம்.
மயத்தை இறையமாக மாற்றுவது சமயம்