ஸ்வாமிஜி, திருப்தியாக இருப்பதற்கு தியானம் எவ்வாறு உதவுகிறது ?
பாருங்கள், நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் பொழுது, மிருதுவாகவும், மென்மையாகவும் ஆகி விடுகிறீர்கள். உள்வாங்கும் தன்மையுடனும், நுட்பமான உணர்வுடையவர் களாகவும், விழிப்பு மிக்கவர்களாகவும் ஆகிவிடுகிறீர்கள். உங்களுடைய விழிப்புணர்வு ஒவ்வொரு கணமும் விரிவடைந்து கொண்டே செல்வதைக் காண்பீர்கள். உங்களுடைய உணர்வு களையும், செயல்களையும் விழிப்புணர்வே தீர்மானிக்கிறது. அதனால்தான் மீண்டும் மீண்டும் உங்களை தியானம் செய்யச் சொல்கிறேன். அது உங்கள் விழிப்புணர்வைத் தூய்மைப் படுத்துகிறது. விஷயங்கள் உங்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியும்.
உங்கள் மையம் மூளையிலிருந்து, இதயத்திற்கு நகர்வதை உங்களால் உணரமுடியும். உங்கள் மனதிற்கும் உங்களுக்கும்
நீங்கள் கடவுளைப் பற்றிக் கொள்ள வேண்டாம். வெறுமனே உங்களை அனுமதியுங்கள். கடவுள் உங்களைப் பற்றிக் கொள்வார்.
இடையேயுள்ள தூரம் அதிகரிக்கும்பொழுது, உங்கள் முழு இருப்புத் தன்மையும் ஒரு வித்தியாசமான உணர்வுடன் அதிர்வடைய ஆரம்பிக்கிறது; இந்த உணர்வே திருப்தி; ஒரு ஆழமான மனநிறைவு ; அனைத்தையும் நோக்கிய எந்தவிதமான காரணமுமற்ற ஆழமான அன்பு; ஒரு தொடர்ந்த மகிழ்ச்சியும் ஆனந்தமுமான உணர்வு.
நீங்கள் மனதிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் வரை, மேலும் மேலும் கேட்டுக் கொண்டுதொன் இருப்பீர்கள்; ஆராய்ந்து, பகுத்து இறுதியில் அதிருப்தியில் வந்து முடித்து விடுவீர்கள். இதயத்திலிருந்து இயங்கும் பொழுது, உங்களுடைய எல்லா ஆராய்கலிம் நின்று விடும்; நீங்கள் கடந்த காலத்தை கூறுபோட்டு பார்க்கவும் மாட்டீர்கள், எதிர்காலத்தை நினைத்து கவலைப்படவும் மாட்டீர்கள். எந்த விதமான எடை போடுதலும் இன்றி, வெறுமனே நிகழ்காலத்தில் இருப்பீர்கள்; இந்த நிலையில் ரீங்கள் திருப்தியுடனும் நன்றியுணர்வுடனும் மட்டுமே இருப்பீர்கள். உங்களுக்குள் ஒரு புதிய வெளி திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த வெளியை நீங்கள் கண்டுபிடித்து விட்டால், இதற்கு முன்பு நீங்கள் எதிர்மறை எண்ணங்களாலும். அதிருப்தியாலும் செலவழித்த எல்லா சக்தியும் விடுவிக்கப்பட்டு, நீங்கள் சக்தியால் நிரப்பப்பட்டு, ஆனந்தமயமாகவும், ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் உணர்வீர்கள். பிறகு நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகி விடும்; நன்றி என்பது உங்கள் மந்திரமாகி விடும்!
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய நன்றியுணர்வு நிலையில் இருக்கும் பொழுது, உங்களுக்குள்
ரீங்கள் கடவுளிடம் விழுவது பெரிய விஷயமல்ல. கடவுளை உங்களிடம் விழ வைப்பதே பெரிய விஷயம்.
பொங்கும் சக்தியை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது அனுபவபூர்வமாகத்தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உங்கள் வழியில் வரும் ஒவ்வொரு விஷயமும் மிகுந்த திருப்தியைக் கொடுக்கும்; அது பிரபஞ்ச இருப்புத் தன்மை யிலிருந்து மேலும் மேலும் ஈர்க்கும் ; பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிந்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.
திடீரென்று, எல்லாம் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து விடும்; மேலும் மேலும் அதிகமான ஆனந்தத்தை உணர முடியும். உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் உங்களைத் திக்கு முக்காடச் செய்யும். வெறுமனே இருத்தலே மிகவும் தாங்க முடியாததாகத் தோன்றும். இதை, உங்களுக்கும், இந்த உலகம் முழுவதற்குமே ஒரு ஆசீர்வாதமாக உணர்வீர்கள்.
நீங்கள் குட்கும் பொழுது, பொழுது, தெளிவாகத் தவற விட்டு விடுகிறீர்கள்; நன்றியுணர்வுடன் இருக்கும் பொழுது, பொழியப்படுகிறீர்கள். யுணர்வுடன் இருங்கள். அதுவே அனைத்திற்கும் பிரதான திறவுகோலாகும். ஆனால் அந்த நன்றியுணர்வு உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வரவேண்டும்; புற விளிம்பிலிருந்து அல்ல. இருப்புத் தன்மையிலிருந்து நன்றியுணர்வு வரும் பொழுதுதான், விஷயங்கள் நிகழ ஆரம்பிக்கும்.
உறங்கச் செல்லும் பொழுது, இன்னொரு நாள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இருந்ததற்கான நன்றியுணர்வுடன் உறங்கச் செல்லுங்கள். எழுந்திருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இன்னொரு நாள் இருக்கப் போவதற்கான நன்றியுணர்வுடன் எழுந்திருங்கள்! இதுவே, நன்றியுணர்வை
இந்த பூமியில், பிரபஞ்ச இருப்புத்தன்மையே உங்களுடைய ஒரே சினேகிதம்.
இருப்புத் தன்மையாக ஆக்கிக் கொள்வதற்கான, உங்களால் செய்ய முடிந்த, மிகவும் எளிமையான, மிகவும் ஆற்றல்மிக்க கியானமாகும்.
நான் சொல்கிறேன், உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து, வெறுமனே நன்றியுணர்வுடன் இருப்பதன் மூலமும், அதைப் பரப்புவதன் மூலமும், உங்களால் இந்த பூமியின் முகத்தை மாற்ற முடியும். ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் வெளிக் கொணர வேண்டிய நன்றியுணா்வைப் பற்றிய விழிப்புணா்வைப் பரப்புவதன் மூலம், எல்லா பயங்கரவாதம், போர்கள், மதவெறி, ஆரோக்யக் குறைவு, வறுமை ஆகிய அனைத்தையும் வேருடன் களைந்தெறிந்து விட முடியும்.
ஒவ்வொருவரும் நன்றியுணர்வுடனும், அதைப் பரப்பிக் கொண்டும் இருக்கும் பொழுது, அன்பிற்கும், வெறுப்பிற்கும், பொறாமைக்கும் இடமில்லை. வெறுமனே இந்த ஒரு உணர்வின் மூலமே உலகம் முழுவதிலுமுள்ள எதிர்மறைத் தன்மைகளுக்கான சாத்தியக்கூறுடைய எல்லா வேர்களையும் அழித்து விட முடியும்; ஏனெனில் எல்லா எதிர்மறைத் தன்மைகளுக்கான காரணங்களும் அதனுடன், வெறுமனே கரைந்து விடும். அதுதான் நன்றியுணர்வின் அற்புதம் !
சரி, இப்பொழுது நாம், நன்றியுணர்விற்கான தியானமான ஸஹஸ்ரார தியானம் என்று அழைக்கப்படும், ஒரு அற்புதமான தியான முறையைச் செய்வதில் சிறிது நேரத்தைக் கழிப்போம்.
(தன்னார்வத் தொண்டர்கள் கூடியிருக்கும் அனை வருக்கும் மலர்களை வினியோகிக்கிறார்கள்)
Satori - க்ஷண நேர ஆனந்த அனுபவம்