Part 15: Guaranteed Solutions - For Lust Fear Worry...
செய்யாதீர்கள். பகிர்ந்து கொள்வதை நேசிப்பதாலும், பகிர்ந்து கொள்வதன் மகிழ்ச்சிக்காகவுமே அதைச் செய்யுங்கள். உங்கள் முழுச் சக்தியையும் அளித்து, அதைச் செய்வதில் மகிழ்ச்சி அடையுங்கள். அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தியானமாகவும், அவர்களுக்கு ஒரு விழிப்படைதலாகவும் இருக்கும்.
நீங்கள் ஆழமான நன்றியுணர்வை உணரும் ஒவ்வொரு முறையும், உண்மையில் தியானத்தில்தான் இருக்கிறீர்கள். எப்பொழுதும் நன்றியுணர்வில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் எப்பொழுதும் தியானத்திலேயே இருப்பீர்கள்.
பாருங்கள் ... ஒரு விஷயம் ... நன்றியுணர்வை ஒருபோதும் கற்றுக் கொடுக்க முடியாது. ஆனால், குழந்தைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுதே, தெரிந்து கொள்வதற்காக, நன்றியுணர்வுடன் இருப்பதைப் பற்றிச் சொல்லலாம். ஆனால், அதுவும் வெறுமனே மற்ற விஷயங்களைப் போல பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக் கொடுப்பதைப் போல, ஆசிரியர்களுக்கு முகமன் கூற கற்றுக் கொடுப்பதைப் போல - ஒரு சமூக நெறிப்படுத்தலாகவே இருக்கும். அது வெறுமனே, மனதின் ஒரு இயந்திரத்தனமான அமைப்பு; உங்களுக்குள்ளிருந்து வரும் ஒரு உண்மையான உணர்வு அல்ல.
பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான ஒரு தொடர்பை உணர ஆரம்பித்தால், உங்களுக்குள் உண்மையான நன்றியுணர்வு எழும். வேறுவழியே கிடையாது. இவ்விதமாக நன்றியுணர்வு எழும் பொழுது, அது குறிப்பாக எதையும் நோக்கியதாக இருக்காது. அது வெறுமனே உங்களுடைய நறுமணமாக இருக்கும் ; அவ்வளவே!
இது நிகழும்பொழுது, நீங்கள் தானாகவே தெரிந்து கொள்வீர்கள், நன்றியுணர்வே உங்களுடைய பிரார்த்தனை
உண்மையான நன்றியுணர்வு என்பது உங்களுக்குள் நிகழும் ஒரு ஆழமான, தாங்க முடியாத உணர்வு.
தான் என்று! இந்தப் பிரார்த்தனை உங்களை மேலே கொண்டு செல்வதாகத்தான் இருக்கும். அது உங்களை அன்பிலும், மனநிறைவிலும் எழச்செய்யும். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமிக்கும் இரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள்! எவ்வாறு எப்பொழுதும் ஒரு ஆழமான தொடர்பிலேயே இருப்பது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். எவ்வாறு எல்லோரையும், எல்லாவற்றையும் ஒரு முழுமையின் பகுதியாகப் பார்ப்பது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். கூறுபோட்டு, ஆராய்ந்து கொண்டு, துண்டிக்கப்பட்டதாக எண்ணிக் கொண்டிருக்காமல், அதற்கு பதிலாக எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, குருவுடன் எவ்வாறு உறவு கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகி விடும் பொழுதுதான் குருவுடனான உண்மையான உறவு ஆரம்பிக்கும். அதுவரையில், நீங்கள் கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள்; கேட்கும் பொழுது, தவறவிட்டு விடுகிறீர்கள்.
இப்பொழுதும் கூட, மிகவும் தெளிவாக இருங்கள் ... நான் உங்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்கும்படி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. நான் உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கவே முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்; அங்கு நீங்கள் நான் சொல்வதை உணர்ந்து கொள்ள முடியும்: அங்கு, அது உங்களுக்கு சொந்த அனுபவமாகிவிடும். என் வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் சக்தியால் அந்த வெற்றிடத்தை உருவாக்க முடியும், அவ்வளவே.
எப்பொழுது உங்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படுகிறதோ, அப்பொழுது நீங்கள் சிறந்த மனிதராகிறீர்கள்; திறப்பதற்குத்
ஆழமான எதையுமே ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாது.
தயாராகிறீர்கள். நீங்கள் உளவியல் ரீதியான அடிமைத்தனத்தில் இருக்கும் பொழுது, ஆராய்ந்து உங்கள் உள் வெளியைக் கண்டுபிடிப்பது கடினமாகிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எப்பொழுதும் சொல்வேன் .... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒரு விடுதலை அளிக்கும் குரு! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மக்களிடம் செயல்படும் பொழுது, அவர்களுக்கு மாபெரும் சுதந்திரம் அளிப்பேன். அப்பொழுது தான் அவர்களுக்கு ஆராய்வதும், வளர்வதும் சுலபமாகிறது.
ஆயினும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டு, இடையில் குறுக்கிடாமல் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. உளவியல் ரீதியான அடிமைத்தனம் தவிர்க்கப்பட வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். வெறுமனே அவர்கள் வளர்வதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது தான்; ஆனால், அவர்கள் தொண்டையில் வைத்துத் திணிப்பதற்குப் பதில், அவர்களே உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ள விடுங்கள். அவர்கள் வளர்வதற்கும், உள் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கும் போதுமான வெற்றிடத்தை அளியுங்கள்.
சில சமயங்களில், மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். "ஸ்வாமிஜி, எவ்வாறு உங்களால் எப்பொழுதும் மிகவும் ஆனந்தமயமாக இருக்க முடிகிறது!'' என்று.
குருமார்கள் இருப்பதற்குக் காரணம், அவர்களிடம் ஆழமான நன்றியுணர்வு வெறுமனே தொடர்ந்து பொங்கிக் கொண்டே இருப்பதுதான்; அவர்கள் எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமித்திருப்பதுதான்!
உங்களிடம் உண்மையான நன்றியுணர்வு தாங்க முடியாமல் போகும்பொழுது, அது உங்களுக்குத் தெரியுமுன்பே கூட எனக்குத் தெரிந்துவிடும்.
நீங்கள் வெறுமனே என்னை நோக்கியோ, அல்லது வேறெவரையும் நோக்கியோ குனிந்தால், முழுவதையும் தவறவிட்டு விடுகிறீர்கள். ஏனெனில் தகுந்தவரை நோக்கி கட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் திருப்பி விடுவதற்கு, நன்றியுணர்வு ஒன்றும் ஒரு ஒளிக்கற்றை அல்ல. அது ஒரு நறுமணம். நீங்கள் அதை அணியும் பொழுது, அது வெறுமனே உங்களிடமிருந்து பரவிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், ஒரு குருவானவர் எப்பொழுதும் மிகவும் ஆனந்த மயமாகத் தோன்றுகிறார். உங்களால் அனுபவித்து மகிழக்கூடிய ஒரு நறுமணம் போல குருவானவர் இருக்கிறார்! அதனால்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு கவர்ந்து இழுக்கப்படுகிறீர்கள்!
பாருங்கள், ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் .... நீங்கள் பெற்றுக் கொள்ளவும், பார்க்கவும் தயாராக இருந்தால், ஒவ்வொரு கணமுமே அற்புதமாகத்தான் இருக்கிறது. நாம் ஏதாவது ஒரு விழாவைக் கொண்டாடும் பொழுதோ, அல்லது வெற்றி காணும் பொழுதோ அல்லது சாதனை புரியும் பொழுதோ அந்தக் கணம் மட்டும்தான் அற்புதமாக இருக்கிறது என்றல்ல.
ஒவ்வொரு கணமும் அற்புதமாக இருக்கிறது; ஏனெனில் பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே தன்னிச்சையாகவும் மகிழ்ச்சியாகவும் பிரவகித்துக் கொண்டிருக்கிறது; எல்லா நிகழ்வு களும் எப்பொழுதும் ஒருமித்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் புரிந்து கொள்ளும்பொழுது, எதுவும் எப்பொழுதும் உங்களுக்குத்தவறாகத் தெரியாது. பிறகு நீங்கள், மக்கள் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருப்பதைப் பற்றி ஆச்சரியப்படுவீர்கள்!
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய நன்றியுணர்வுடன் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை
நீங்கள் குருநாதரை நோக்கிய அளவு கடந்த நன்றியுணர்வில் இருக்கும் பொழுது, அதை வெளிப்படுத்த வழியெதுவும் கிடையாது. அப்பொழுது நீங்கள் வெறுமனே அவரது பாதங்களைப் பற்றிக் கொள்கிறீர்கள்.
முழுவதுமே உங்களுக்கு ஒரு கோயிலாகி விடும். பிறகு நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு பிரார்த்தனைபூர்வமான, தியானபூர்வமான மனநிலையில்தான் இருப்பீர்கள். நீங்கள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டிய தேவை இனியில்லை. நீங்கள் வெறுமனே முழுமையில் கலந்து, எப்பொழுதும் ஆனந்தமயமான உணர்விலேயே இருப்பீர்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை முழுமையுமே கோயிலாகி விடும் பொழுது, மரங்களும், வானமும், பூமியும், எல்லாமே ஒன்றாகி விடும். அதன் முன்பு குனிந்து தலைவணங்கும் பொழுது, எதைக் கேட்க முடியும் ?! இந்த ஆழ்ந்த பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாக இருப்பதற்காக நன்றி யுணர்வுடன் வெறுமனே குனிந்து தலைவணங்குவீர்கள், அவ்வளவே!
இது நிகழுமானால், உங்களால் மரங்களுடனும், வானுடனும், பூமியுடனும், இன்னும் மற்ற எல்லாவற்றுடனும் உறவு கொள்ள முடியும். அப்பொழுது நீங்கள், மனதின் மொழியான தொடர்பு கொள்ளுதலில் இருந்து, இதயத்தின் மொழியான சங்கமித்தலை நோக்கி நகர்ந்து விடுவீர்கள். பிறகு நீங்கள் உங்களுடைய மையத்தை மூளையில் இருந்து இதயத்திற்கு நகர்த்தி விடுவீர்கள்.
கடவுள் உங்களுடைய பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக் கிறார் என்று நம்புகிறவர்களுக்கு, நான் ஒன்று சொல்கிறேன்... கடவுள் மிகவும் கருணையுள்ளவர்; அவர் பெரும்பாலும் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்காமல் விடுவதேயில்லை. அது இவ்வாறு இருக்கிறது..
ஏற்கனவே ஜலதோஷத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை ஐஸ்க்ரீம் கேட்டால், நீங்கள் கொடுப்பீர்களா ? மாட்டீர்கள்.
உங்கள் எதிரிகளே உங்களை வலிமையாக்கும் பொறுப்பை ஏற்கின்றனர். அதனால் ஏன் அவர்களிடம் நன்றியுணர்வுடன் இருக்கக் கூடாது ?
அதற்காக, குழந்தை இப்பொழுது உங்களிடம் நன்றியுணர் வுடன் இல்லாமல் இருக்கக் கூடும். ஆனால் உங்களுக்குத் தெரியும், நீங்கள் குழந்தைக்கு நல்லதைத்தான் செய்கிறீர்கள் என்று. ஏனெனில் அவன் கேட்பது அவனுக்கு இந்தச் சமயத்தில் சரியானதல்ல என்பது அவனுக்குத் தெரியாது.
அதே போல, உங்களுடைய ஆழ்ந்த அறியாமையினால், நீங்கள் கடவுளிடம் பலவற்றையும் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் ; ஆனால் உங்களுக்கு நல்லது எது என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால், முழுமையான கருணையினால் கடவுள் உங்களுடைய பிரார்த்தனைகளை மென்மையாக ஒதுக்கி விட்டு, உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் விஷயங்களை அளிக்கிறார்; மேலும் உங்களை இன்னும் சிறந்த அறிவை நோக்கித் தூண்டி விடுகிறார்; அதுவே அவருக்கு உங்கள் மீது இருக்கும் ஒரே அக்கறை. நினைவில் வையுங்கள் ... உங்கள் உள் அறிவுக் கூர்மையானது மேலும் மேலும் வளர வளர, உங்களு டைய பிரார்த்தனை அல்லது கேட்பது குறைந்து விடும்.
கடவளிடம் உங்களால் எதைக் கேட்க முடியும் ? அவ்வாறு நீங்கள் கேட்கும் கணத்திலேயே, அவருக்குத் தெரியாத சில விஷயங்களும் இருக்கின்றன என்று எண்ணுகிறீர்கள் என்றுதானே பொருள்! அப்படியென்றால், நீங்கள் கேட்காவிடில் அவருக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். அது சிறுபிள்ளைத்தனமாக இல்லை ?! கடவுளுக்குத் தெரியாத எதுவும் இருக்க முடியுமா?
புரிந்து கொள்ளுங்கள்... கடவுள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்கிறார்; நீங்கள் விரும்புவதை அல்ல. அவர் நீங்கள் விரும்புவதை எல்லாம் கொடுக்க ஆரம்பித்தால், நீங்கள் துயரத்திலிருந்து துயரத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பீர்கள்!
விதை பிளந்தால்தான் மரம் வளர முடியும். அது, விதையாக இருப்பதிலேயே சந்தோஷமடைந்துவிட்டால், காலப்போக்கில் சிதைந்து செத்துப் போய்விடும்.
அவர் உங்களுக்குக் கேவை யானதைக் கொடுக்கும் பொழுது, நீங்கள் அறிவிலிருந்து மேலும் அறிவுக் கூர்மையை நோக்கியும் அதற்கு மேலும் செல்வீர்கள்; கேட்பது போய் நன்றியுணர்வு மலரும்.
கடவுள் உங்களுக்குச் சிங்கடங்களைச் சமாளிக்கத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் தருகிறார். அவர் உங்களுடைய பெயரளவிலான பிரச்சினைகளைக் கலைத்து விடுவதற்கான விவேகத்தைத் தருகிறார். அவர் உங்களுக்கு வளத்தைக் கொண்டு வருவதற்காக, உங்களுடைய விலை மதிப்பற்ற மூலாதாரமான மேம்படுத்தப்பட்ட அறிவைத் தருகிறார். உங்கள் சொந்த அன்பையும் அக்கறையையும் ஆராய்ந்து பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களைத் தருகிறார். அவர் உங்களிடம் இருப்பதெல்லாம் உங்களுக்குத் தேவையானதுதான் என்பதைப் புரிந்து கொள்வதற்காக, உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார். அவர் நீங்கள் பக்குவம் பெறவும், மலர்ந்து மணம் பரப்பவும் தேவையான எல்லாவற்றையும் அளிக்கிறார்.
நமது அடிப்படைப் பிரச்சினை என்னவெனில், கடவுளிடம் நாம் விரும்புவதை கொடுக்கக் கூடிய சக்தி அல்லது ஆற்றல் இருப்பதை நம்பத் தயாராக இருக்கிறோம்; ஆனால் அது நமக்கு நல்லதா இல்லையா என்று தீர்மானிக்கும் புத்தி அல்லது அறிவும் அவரிடம் இருப்பதைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம்! ஏனெனில், கடவுளிடம் வெறுமனே சக்தி மட்டுமே இருப்பதாக நாம் நம்புவதால், நாம் தொடர்ந்து மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
நாம் எப்பொழுதும் நமக்குச் சிறந்தது எதுவென்று நமக்குத் தெரியும் என்று எண்ணுவதால், கடவுளிடம் அதற்காகப்
உங்கள் நன்றியுணர்வைக் காட்டுவதற்கு, நீங்கள் எனக்குச் செய்யக் கூடிய மிகச் சிறந்த விஷயம் நீங்கள் மலர்வதே!
பிரார்த்தனை செய்கிறோம். நாம் விரும்புவதை அடைய, நமது அறிவையும், கடவுளுடைய ஆற்றலையும் உபயோகித்துக் கொள்ள விரும்புகிறோம்! நாம் அவரிடம் தெளிவாகச் சொல்கிறோம்... இதுதான் எனக்கு வேண்டும், இவ்வாறுதான் எல்லாம் இருக்க வேண்டும், அதனால் தயவு செய்து இதை உன் ஆற்றலினால் எனக்காகச் செய்து கொடு! நாம் நமது எல்லா விருப்பங்களையும்-முன்னுரிமைகளை அடைப்புக் குறிக்குள் இட்டு-கடவுளிடம் பிரார்த்தனையாகச் சமாப்ப்பிக்கிறோம் !
இந்த மனோபாவம்தான் நம்மைச் சிக்கலில் மாட்டி விடுகிறது. கடவுளிடம் ஆற்றல் மட்டுமில்லை; உங்களுக்கு எது நல்லது என்று தீர்மானிக்கும் அறிவும் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது, கேட்பதை நிறுத்தி விடுவீர்கள்.
இந்த உலகம் முழுமையும் உங்களுடைய அறிவா லேயே நடந்து கொண்டிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். மிகவும் தெளிவாக இருங்கள் ... உங்களுடைய அறிவு இருந்தும் இந்த உலகம் நடந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் வா்த்தகம் செய்வதில் மிகவும் பழக்கப்பட்டு விட்டீர்கள்; அதனால், உங்களுக்கு இரத்த சம்பந்தம் கூட இல்லாத ஒருவர், உங்களிடமிருந்து பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமலும், நிபந்தனையற்றும் உங்கள் மீது அக்கறை செலுத்த முடியும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இது உங்கள் நம்பிக்கைக்கு மிகவும் அதிகம்!
நான் சொல்கிறேன்.. பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்கள் மீது, மற்ற எவராலும் முடியாத அளவிற்கு, அக்கறை கொண்டிருக்கிறது. இந்த உண்மையைத்தான் என்னால் முடியும்; ஆனால்
ரீங்கள் பதிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று எண்ணினால், சமூகத்திற்கு ஏதேனும் சேவை செய்யுங்கள்; மற்றவர்களுக்கு உதவுங்கள்.
அதை உள்ளுக்குள் இருந்து, உங்கள் சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொள்ள வேண்டியது உங்கள் ஒவ்வொருவரையும் பொறுத்தது. அப்பொழுதுதான் அது உங்களுடைய நேரடியான அறிவாக இருக்கும்.
நான்எப்பொழுதும் சொல்வேன், ''என்னால் ஆன்மீகத்தைக் கற்றுத்தர முடியாது, ஆனால் உங்களால் கற்றுக் கொள்ள முடியும்!' என்று. நான் உங்களுக்குப் பெரிய உண்மைகளைச் சொல்ல முடியும்; அதனால் குறைந்தபட்சம் உங்களுக்கு எது தெரியவில்லையென்பதையாவது தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த உண்மையை உங்களுடைய புரிந்து கொள்ளுதலாகச் செய்து கொள்வது உங்களைப் பொறுத்தது. நீங்கள் உண்மையை எத்தனை முறை கேட்க விரும்பினாலும் நான் சொல்லத் தயாராக இருக்கிறேன்.
ஒரு சின்ன கதை ...
சங்கரா் ஒரு முறை பரிவ்ராஜக யாத்திரையில் (புண்ணிய ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாகச் செல்லுதல்) அவருடைய சீடர்களுடன் அவருக்கு மிகவும் தாகமாக இருந்தது. அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர்; ஆனால் அவரது தாகத்தைத் தீர்க்கும் எதுவும் கண்ணில் படவில்லை. பனை மரங்கள் அடர்ந்த ஒரு சிறிய வனம் மட்டுமே இருந்தது; அங்கு கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். சங்கரர் அந்த வனத்தில் நுழைந்து, அங்கிருந்த தொழிலாளர்களிடம், அவரது தாகத்தைத் தணிப்பதற்கு ஏதேனும் இருக்குமா என்று கேட்டார். அவர்களும், அவர்களிடம் கள்ளைத் தவிர வேறெதும் இல்லை என்று சொல்லி விட்டனா். சங்கரா் கள்ளைக் கேட்டு வாங்கிக் குடித்தார். சீடர்கள் சங்கரா் குடிப்பதைப் பார்த்தனர். உடனே அவர்களும் கள்ளைக் கேட்டு வாங்கிக் குடித்தனர்! கள் சங்கரரைப்
நீங்கள் ஆழமான நன்றியுணர்வை உணரும் ஒவ்வொரு முறையும், உண்மையில் தியானத்தினால்தான் இருக்கிறீர்கள்.
பாகிக்கவில்லை: எல்லையற்ற விழிப்புணர்வைப் பெற்றவர்! அவர் நிதானமாக நடந்து கொண்டிருந்தார். ஆனால் அவரது சீடர்களோ அவருக்குப் பின் தள்ளாடிக் கொண்டிருந்தனர்! சில நாட்கள் கழித்து, மீண்டும் அவர்கள் நடந்து கொண்டிருந்தனர்; ஆனால் இந்த முறை ஒரு பாலைவனப் பகுதியில். அவர்களுக்குத் தாகமாக இருந்தது; இந்த முறை ஒரு இரும்புப் பட்டறைதான் கண்ணில் பட்டது. வேறெதுவும் இல்லை. அங்கிருந்த தொழிலாளி குடிப்பதற்கு எதுவுமில்லை என்று சொல்லி விட்டான். ஆனால் சங்கரா் அங்கிருந்த உருகிய இரும்பை, திரவ நிலையில் இருந்த இரும்பைப் பார்த்து விட்டு, அதைக் கேட்டு வாங்கிக் குடித்து விட்டார். இரும்புக் குழம்பைக் குடித்த பிறகு, அவர்களது சீடர்களை நோக்கித் திரும்பி, அவர்களையும் குடிக்கச் சொன்னார்! சீடர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்!
அவர் சொல்வதைச் செய்ய வேண்டுமே தவிர, அவர் செய்வதை அல்ல என்பதை, சங்கரர் அவர்களுக்குப் புரிய வைக்க விரும்பினார். அவர் எல்லையற்ற விழிப்புணர்வில் நிலை பெற்றிருந்ததால், கள் அவரைப் பாதிக்கவில்லை. அதை நீங்கள் அனுபவிக்காத வரையில், உங்களால் அறிந்து கொள்ள முடியாது. அதனால் வெறுமனே வெளியி லிருந்து அதைப் போல் நடிக்க முடியாது. அது உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளேயிருந்து நிகழ வேண்டும்; அப்பொழுதுதான் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
நீங்கள் உண்மையை உணர்வதில் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்கள் அல்லது உண்மையுடன் எவ்வளவு தூரம் இணைந்திருக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களுடைய சொந்த முடிவு. தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்பவர்களுக்கு மட்டுமே என்னால் உதவ முடியும். நான் உங்களை மேலே தூக்கிவிட கையைக் கொடுக்க
நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகிவிடும் பொழுதுதான் குருவுடனான உண்மையான உறவு ஆரம்பிக்கும்.
முடியும்; ஆனால் குறைந்த பட்சம் உங்கள் கையை மேலே உயர்த்தி என்னுடைய கையை அடைய விருப்பம் இருந்தால் மட்டுமே. நீங்கள் உண்மையிலேயே மேலே தூக்கிவிடப்பட வேண்டும் என்று விரும்பினால், குறைந்தபட்சம் உங்கள் கைகளை மேலே தூக்கி என்னை நோக்கி ரீட்ட வேண்டும். இல்லாவிடில், நீங்கள் வெறுமனே இருந்த இடத்திலேயே இருப்பதற்கான சுதந்திரத்தை நான் உங்களுக்கு அளித்து விடுவேன், அவ்வளவுதான். அதனால்தான், 'கடவுள் நீங்கள் அடிமைத்தளையில் இருப்பதற்கான சுதந்திரத்தை அளிக்கிறார்!' என்று சொல்கிறார்கள்.
நம்மில் பலரும், நாம் கடவுளால் உதவப்பட வேண்டிய வகையில் உதவப்படவில்லை என்றே எண்ணுகிறோம். நான் சொல்கிறேன், கடவுளுக்கு உங்களைப் பற்றி, உங்களை விட நன்றாகவே தெரியும். இதுதான் உண்மை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவே. உங்கள் சந்தேகத்தைச் சற்று விட்டுவிட்டு, கொஞ்சம் விசுவாசத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்; அதுவே போதுமானது. மற்றவை தானாகவே கவனித்துக் கொள்ளப்படும்.
ஒரு சின்ன கதை ...
ஒரு மீன் தொட்டியில் இரண்டு தங்க மீன்கள் இருந்தன. அதில் ஒன்று மற்றொன்றிடம் கைட்டது, ''உண்மையிலேயே நீ கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறாயா ?''. மற்றொன்று சொன்னது, ''தினமும் நமது தண்ணீரை மாற்றுவது வேறு எதுவென்று நீ நினைக்கிறாய் ?''.
பிரபஞ்ச இருப்புத்தன்மை நமது எல்லாத் தேவைகளையும் கவனித்துக் கொள்கிறது என்று நம்புவீர்களானால், நீங்கள் எந்த
கேட்கும்பொழுது தவற விட்டு விடுகிறீர்கள்.
விதமான கவலையுமின்றி இருப்பீர்கள். ஆனால் நினைவில் வையுங்கள், நான் சொன்னதுபோல், உங்கள் துவைகள், ஆசைகளிலிருந்து வேறுபட்டவை. உங்கள் தேவைகள் சில; ஆனால் ஆசைகளோபல. உங்கள்தேவைகள்தானாகவேபிரபஞ்ச இருப்புத் தன்மையால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. உங்களுடைய ஆசைகள் அதிகரிக்கும் போது, அவைகள் நிறைவேற்றப்படாததால், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் மீதான உங்கள் நம்பிக்கையை இழக்கிறீர்கள்.
பாருங்கள், சாதாரண நம்பிக்கை என்பது வெறுமனே நம்புவது, நம்பிக்கையுடன், செயல்பாட்டில் இருக்கும் சக்தியும் சேர்ந்தது. நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கலாம்; ஆனால் விசுவாசத்தில் முடிய வேண்டும். நம்பிக்கையுடன், கொஞ்சம் சந்தேகமும் இருக்கும் ; ஆனால் விசுவாசத்தில் சந்தேகமே இருக்காது; ஏனெனில் நீங்கள் அதை அனுபவித்திருப்பீர்கள். நன்றியுணர்வின் அற்புதங்களை ரீங்களே அனுபவிக்கும் பொழுது, நீங்கள் மேலும் மேலும் அதிர்ஷ்டத்தைக் கவர்ந்திழுக்கிறீர்கள். நான் இதை என் சொந்த அனுபவத்திலிருந்து அறிவிக்கிறேன்.
ஒரு சின்ன கதை ....
ஒரு முறை ஒரு சிறுவன் ஒரு அரசனது அரண் மனைக்குச் சென்றான். அவன் ஒரே ஒரு இரவு அரண்மனை யில் தங்கிக் கொள்வதற்கு அனுமதி கேட்டான். அரசன் ஏற்றுக் கொண்டான்; சி றுவன் தங்கினான். அடுத்த நாள் காலை சிறுவன் அரசனிடம் வந்து அவனுக்குத் தங்குமிடம் கொடுக்கப்பட்டதில் ஏற்பட்ட குறைகளை, ஒரு முடிவின்றி புகார் கூறிக் கொண்டிருந்தான். அரசன், இது போன்றவர்களுக்கு ஒருநாள் தங்குவதற்கு இடம் கொடுத்துதே மிகவும் அதிகம் என்று சொல்லி, அந்தச் சிறுவனை உடனே
ரீங்கள் பெற்றுக் கொள்ளவும், பார்க்கவும் தயாராக இருந்தால், ஒவ்வொரு கணமுமே அற்புதமாகத்தான் இருக்கிறது.
வெளியேற்றும்படிக்கட்டளையிட்டான். வருத்தமடைந்த சிறுவன் ஒரு கு ஃபி துறவியிடம் சென்று நடந்ததை விவரித்தான். அவர் ஒன்றும் கூறவில்லை. அவனிடம் வெறுமனே தன் சீடனாகி விடும்படிக் கூறினார். சில மாதங்கள் கழித்து, துறவி தான் அந்த அரசனைச் சந்திக்கப் போவதாகவும், அவனையும் கூட வருமாறும் அமைத்தார். அவர்கள் அரசனிடம் சென்று, அரண் மனையில் சில நாட்கள் தங்குவதற்கு அனுமதி கேட்டனர். அரசனும் அனுமதியளித்தான். அடுத்த நாள் காலை, அரசன் துறவியிடம் அவருக்காகச் செய்திருந்த ஏற்பாடுகள் சௌகரியமாக இருந்ததா என்று கேட்டான். துறவி, அவருக்குச் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார். அரசன் மிகவும் சந்தோஷமடைந்து, அவனது ஆட்களிடம் துறவிக்குச் செய்து தரப்பட்ட ஏற்பாடுகளை இன்னும் நன்றாகக் கவனித்துச் செய்யுமாறு உத்தரவிட்டான். துறவி சிறுவனிடம் சொன்னார், "இப்பொருது பார்த்தாயா ? இதுதான் வாழ்வின் இரகசியம். நன்றியுணர்வுடன் இரு; உன் மீது பொழியப்படும்."
உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதில் தவறுகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது நன்றியுடன் இருக்கும்பொழுது இது நிகழ்கிறது. நன்றியுணர்வுடன் இருக்கும்பொழுது, நீங்கள் நேர்மறையான அதிர்வுகளை வெளிப்படுத்துகிறீர்கள்; அது தானாகவே, உங்களால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாகத் திரும்பக் கொண்டு வருகிறது.
நிறைய பெறுவதற்காக, மக்களை உதட்டளவில் புகழ்ந்து விட்டுப் பிறகு அவர்களைத் தந்திரமாக ஏமாற்ற வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கண்டிப்பாக அல்ல! நீங்கள் வெளியுலகில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பொருட்படுத்தாமல், எப்பொழுதும் ஒரு
ஒவ்வொரு கணமுமே அற்புதமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே தன்னிச்சையாகவும், மகிழ்ச்சியாகவும் பிரவகித்துக் கொண்டிருக்கிறது.
நன்றியுணா்வான நிலையில் இருக்கும் பொழுது, உங்களுடைய நன்றியுணர்வானது உங்களிடமிருந்து பரவி பரவி ஒளிவீசிக் கொண்டிருக்கும். பிறகு, உங்களுக்குள் விஷயங்கள் வெறுமனே நிகழத் தொடங்கும்.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, நம்மைச் சுற்றி எவ்வளவு துன்பம். இது ஏன்?''. நான் சொல்கிறேன், இதெல்லாம் அபத்தமானது. முதலில், நீங்கள் எண்ணுகிற அளவிற்கு அவ்வளவு துன்பமில்லை. துன்பம் இருக்கிறது; சரி; ஆனால், அது உங்கள் மனதினால் பெரிதாக்கப்படுகிறது. நீங்கள் சரியான புள்ளி விவரம் எடுத்துப் பார்த்தீர்களானால், இவற்றிலெல்லாம் உங்கள் மனம் எவ்வளவு தூரம் விளையாடுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இவற்றையெல்லாம் சொல்லி, மொத்த விஷயத்தையும் பெரிதாக்கி விடுவது சாதாரண சமூகப் பேச்சு வழக்காகிவிட்டது. இரண்டாவதாக, துன்பத்திற்குக் காரணம், நமது விசுவாசம் காணாமல் போய் விட்டதுதான், அவ்வளவே. நமது விழிப்பற்ற வழிகளால் உந்தப்பட்டு, நாம் பேராசைக்காரர்களாகி விட்டோம்.
புரிந்து வெறுமனே, இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு வாத்திய இசைக் குழுவைப் போல் நடத்திச் சென்று கொண்டிருக்கிறது. எல்லா நிகழ்வுகளும் மிகவும் ஒருமித்து நிகழுமாறு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது; இப்பொழுது குழப்பமாகத் தோன்றுவதெல்லாம், ரீங்கள் எவ்வளவு காரம் அறிகிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்களால் அதில் ஆச்சரியப்படும்படியான ஒரு ஒழுங்கைக் காணமுடியும். இதை நாம் வெறுமனே அறிந்து கொண்டு, நமது பாத்திரத்தை அதற்கேற்றார் போல் சரியாகச் செய்ய வேண்டும்; அப்பொழுது வாழ்வு ஒரு இசை போலப் பாயும்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையை நோக்கிய ஒரு நன்றியணர்வுடன் இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை முழுவதுமே உங்களுக்கு ஒரு கோயிலாகி விடுகிறது.
சிறிய நிகழ்வுகள் முதல் பெரிய நிகழ்வுகள் வரை, உங்களால் இந்த நிகழ்வுகளை நுட்பமாக உணர முடியுமானால், எவ்வாறு விஷயங்கள் ஒரு ஒழுங்காக மாற்றியமைக்கப்பட்டு நிகழும்படி செய்யப்படுகிறது என்பதையும், இந்த முழுச் செயல் முறையிலும் நீங்கள் ஒரு எளிய கருவியாக உபயோகப்படுத்தப் படுவதையும், ஒன்றாக நிகழ்வதன்- ஆற்றல், உங்களுக்குத் தன்னை முழு கோலாகலத்துடன் வெளிக்காட்டத் தொடங்கும். நீங்களும் இந்த பேரண்ட இசைக்குழுவின் ஒரு பகுதிதான் என்பதையும், நீங்கள் வெறுமனே அந்த இசையுடன் இசைந்து சென்று அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டியதுதான் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்! நீங்கள் அந்தப் பிரவாகத்துடன் சண்டையிடும் பொழுதுதான், அதற்கு எதிராகச் செல்ல முயற்சிக்கும்பொழுது தான், பிரச்சினை ஆரம்பிக்கிறது.
ஒரு சின்ன கதை ....
ஒரு நாள் மக்கள் வேகமாக ஒருவனிடம் ஓடி வந்து, அவனுடைய மனைவி ஆற்றில் விழுந்து விட்டதாகவும், அடித்துச் செல்லப்படுவதாகவும் சொன்னார்கள். அவன் உடனே ஆற்றிற்கு ஒடிச் சென்று, துணிகளைக் களைந்து விட்டு, ஆற்றில் குதித்து எதிர்ப்புறமாக நீந்தத் தொடங்கினான். மக்கள் கத்தினார்கள், "ஏன் எதிர்ப்புறமாக நீந்திச் செல்கிறாய் ? அவள் கண்டிப்பாக நீரோட்டத்துடன்தான் சென்றிருப்பாள்''. அவன் சொன்னான், ''என் மனைவியைப் பற்றி எனக்குத்தான் தெரியும்… ஆற்றில் கூட அவள் நீரோட்டத்திற்கு எதிராகத்தான் சென்றிருப்பாள், அதனுடன் அல்ல!".
(பலத்த சிரிப்பு ! )
Coincidence1
பிரவாகத்துடன் சண்டையிடும் பொழுதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஏனெனில் நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் நமக்கும் இடையில் அளங்காரம் உள்ளே வர அமைதித்து விட்டோம். இன்னொரு பக்கம் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரவாகத்தைப் புரிந்து கொண்டு அதனுடன் செல்வோமாயின் நாம் தன்னிச்சையாக இருப்போம். நம் வழியில் எதுவரினும் ஏற்றுக் கொண்டு நன்றியுணர்வுடன் விரிவடைந்து கொண்டிருப் போம்.
நீங்கள் தன்னிச்சையாக இருக்கும்பொழுது, எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள். நான் எப்பொழுதும் சொல்வேன் ... பொறுப்புணர்வு என்பது (எந்த ஒரு நிகழ்விற்கும்) தன்னிச்சையாக தக்க பதில் கொடுக்கும் திறமை 2. குருமார்கள் உலகம் முழுவதற்குமான பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள்! எவ்வாறு? ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் தன்னிச்சையாகவும் பிரபஞ்ச இருப்புத் தன்மை யின் பிரவாகத்துடன் இசைந்து சென்று கொண்டும் இருக் கிறார்கள்! பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் வெறுமனே இசைந்து செல்லும் பொழுது, பிரபஞ்ச இருப்புத்தன்மையே எல்லாவற்றையும் ஒரு இயல்பான முறையில் நிகழக் செய்து விடும் என்பது அவர்களுக்கு தெரியும் !
நீங்கள் நமது ஆசிரமத்திலுள்ள ஆசிரமவாசிகளிடம் பேசினீர்களானால், அவர்கள் அனுபவத்தைச் சொல்வார்கள். விஷயங்களை முன்பே தெரிந்து கொள்வதும், என்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்து கொள்வதும் அவர்களுக்கு மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனெனில் நான் எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் பிரவகித்துக் கொண்டிருக்கிறேன். காலப்போக்கில் அவர்கள்
Responsibility is the ability to respond spontaneously1
செயல்படுவதற்கு போதுமான கால அவகாசம் தேவை என்னும் கருத்தையே விட்டுவிடக் கற்றுக் கொள்கிறார்கள்; பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எதற்கும் எப்பொழுதும் தயாராக இருக்கக் கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரமத்தில் விஷயங்கள் இவ்வாறு தான் நடைபெறுகிறது. எதுவும் எந்த முன்னேற்பாடும் இன்றி அந்த க்ஷணத்தில் கீர்மானித்துச் செய்யப்படுகிறது.
வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர் ஆசிரமத்தில் நிகழும் இந்த ஒழுங்கான குழப்பத்தை கண்டு பேராச்சரியம் அடைய நேரிடும். அது பூஜையோ அல்லது வேறெதாவது நிகழ்ச்சியோ நான் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான் சொல்வேன்; எல்லாம் செய்யப்பட்டு விடும். ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு மட்டுமே சொல்வதற்குக் காரணம் நான் எந்த விதமான சட்டமோ திட்டமோ இல்லாமல் தொடர்ந்து பிரவகித்துக் கொண்டு இருப்பதுதான்.
நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்லக் கற்றுக் கொண்டு விட்டோமானால் எந்தவிதக் கவலையுமின்றி வாழ முடியும். ஆனால் எப்படியோ நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் போராடும் கலையில் தோச்சி பெற்று விட்டோம். அதனால் துன்பப்படுகிறோம். நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரவாகத்துடன் உங்களை இசைவாக வைத்துக் கொண்டீர்களானால் ஒவ்வொரு கணமும் நீங்கள் கவனித்துக் கொள்ளப்படுகிறீர்கள். அந்தக் கணத்தில் உங்களுக்கு என்ன தேவையோ அது கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டு கொள்வீர்கள்.
நீங்கள் உங்களை இசைவுபடுத்திக் கொள்ளும் பொழுது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரகாசத்தையும் சக்தியையும் உங்களுடன் எடுத்துக் செல்கிறீர்கள். விஷயங்கள் தானாகவே
Orderly chaos
மாற்றியமைக்கப்படுவதையும், எல்லாம் அதனதன் இடத்தில் வெட்டி ஒட்டி ஒன்று சேர்க்கும் ஜிக்ஸா புதிர்- போல தானாகவே பொருந்திக் கொண்டு, உங்களுக்கான விஷயங்கள் நடைபெறுவதையும் காண்பீர்கள். நீங்கள் செல்லுமிடமெல்லாம் மக்கள் இதற்குமுன் கேள்விப் பட்டிராத வகையில் தன்னிச்சையாகவும், உற்சாகத்துடனும் வரவேற்பளிப்பதையும் உங்களால் உணர முடியும்.
மக்கள் அவர்கள் உங்களை நோக்கி ஒரு விவரிக்க முடியாத வகையில் கவாந்திழுக்கப்படுவதை உணர்வார்கள். உங்கள் வாழ்க்கை கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒரு இசைக் கலைஞனால் இசைக்கப்படும் பாடலாகிவிடும். நீங்கள் அதற்கு வெறுமனே நடனமாடிக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையே ஒரு இசையாகவும் நடனமாகவும் ஆகிவிடும். அது ஒரு கொண்டாட்டமாகிவிடும் !
ஆனால் கொண்டாடுவதற்குப் பதிலாக நாம் எப்பொழுதும் மேலும் மேலும் தேடிக் கொண்டு இருக்கிறோம். அற்புதங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் அற்புதுங்களுக்காக காத்துக் கொண்டும் அது நிகழவில்லை என்று எண்ணிக் கொண்டும் இருக்கிறோம்.
நான் சொல்கிறேன் ... அற்புதங்கள் ஒருபோதும் செய்யப்படுவதில்லை. அவை வெறுமனே தொடர்ந்து உங்களைச் சுற்றி நிகழ்கின்றன! உங்களுடைய அடையாளம் கண்டு கொள்ளும் திறனால் அவை அற்புதங்களாக்கப்படுகின்றன! நன்றியுணா்வால் உங்களைப் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் அற்புதங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள்! நன்றியுணா்வு உங்களை அற்புதங்களுடன் இசைவுபடுத்தும்.
Jigsaw Puzzle ஒன்று போல இருக்கும் பல சிறு துண்டுகளை ஒன்று சேர்த்து ஒரு உருவம் வரவழைக்கும் ஒரு புதிர்.
அவற்றை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதோ அல்லது தவற விடுவதோ உங்கள் தேர்வு !
நீங்கள் அவற்றைத் தவறவிடும் பொழுது அதிருப்தியுடன் இருப்பீர்கள். அது இவ்வாறு இருக்கிறது ... கதவு திறந்துதான் இருக்கிறது; ஆனால் நீங்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்! 'உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஏற்கனவே இருக்கிறது, நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; ஆனால் நீங்கள் அதை நம்பத் தயாராக இல்லை. நீங்கள் ஏற்கனவே உங்களைச் சுற்றி நிகழும் அற்புதங்களைப் பார்க்காமல் அவற்றை தேடிச் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
புரிந்து கொள்ளுங்கள் ... தண்ணீரை மதுவாக மாற்றுவது ஒன்றும் அற்புதமில்லை. மனிதனைக் கடவுளாக மாற்றுவதே உண்மையான அற்புதம். முன்னதை சிறந்த மந்திர ஜால வித்தைக்காரரான பி.சி சர்க்கார் செய்வார். ஆனால் பின்னதைச் செய்ய ஆழமான புரிந்து கொள்ளுதல் தேவை.
இராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லும் ஒரு சின்ன கதை ... இரண்டு சகோதரர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மூத்த சகோதரன் வியாபாரத்தைத் தொடர முடிவு செய்தான்! இளையவன் சாதுவாகச் சென்றான். சில வருடங்கள் கழித்து அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தனர். அவர்கள் கடந்த சில வருடங்களில் என்ன சாதித்தனர் என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். மூத்த சகோதரன் வெளியுலகில் சாதித்த எல்லா லோகாயதமான விஷயங்களையும் பட்டியலிட்டான். அவனுடைய வியாபாரத்தைப் பர்றியும் அவன் எவ்வளவு செல்வம் சேர்த்திருக்கிறான் என்பது பற்றியும் விவரித்தான். பிறகு அவன் இளைய சகோதரனிடம் அவன் என்ன சாதித்திருக்கிறான் என்று கேட்டான். இளையவன் அவனை
கடவுள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்கிறார்; நீங்கள் விரும்புவதை அல்ல.
வெறுமனே ஒரு ஆற்றுக்கு அழைத்துக் சென்று அதை சகஜமாக நடந்து கடந்தான். பிறகு பெருமிதத்துடன் அறிவித்தான், "இதுதான் நான் சாதித்தது''. மூத்த சகோதரன் ஒரு படகை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அதில் அவனை மறுகரைக்கு அழைத்துச் சென்று அவனிடம் சொன்னான், ''என்ன? இரண்டு அணாவில் சாதிக்க வேண்டியதை நீ பல வருடங்களில் சாதித்திருக்கிறாய்!''.
வெளியுலகில் அதிசயங்கள் புரிய முடிந்தால் ஆன்மீகவாதிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் ஆகிவிடலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படி அல்ல! புரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகம் என்பது வெளியுலகில் அதிசயங்கள் புரியும் விளையாட்டல்ல. அது உள்ளுலக விளையாட்டு - உங்களுடைய மாபெரும் அதிசயம்! புறத்தன்மையை தனித்தன்மையாக மாற்றுவதே மாபெரும் அற்புதம்.
மக்கள் என்னிடம் மீண்டும் மீண்டும் அதிசயங்கள் செய்து காட்டுமாறு கெஞ்சுகிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், பெயரளவிலான இந்த அதிசயங்களெல்லாம் என் நிலையை அளக்கும் ஒரு அளவுகோல் அல்ல. ஆனால் அவர்கள் கேட்க விரும்புவதில்லை. வெறுமனே செய்து காட்டுவதற்காக சில எளிய உத்திகளான பொருள்களை வரவழைத்தல் போன்ற ஒன்றிரண்டை செய்தால் கூட, மக்கள் என்னிடம் இந்த அதிசயங்களை, மந்திர ஜால வித்தையைக் காண்பதற்காக வர ஆரம்பித்து விடுவார்கள். உருமாற்றத்திற்காக அல்ல! அதுதான் என் கவலையே.
ஒரு நாள் சில பக்தர்களின் விடாப்பிடியான கெஞ்சுதலின் காரணமாக ஒரு லக்ஷ்மி விக்ரகத்தை தொலைகடத்தல் மூலம் வரவழைத்து அவர்களிடம் கொடுத்தேன். அவர்களிடம் அது
Changing Personality to Individuality is the greatest miracle
ஒரு அற்புதம் அல்ல என்று விளக்கினேன். உங்களுக்கு நீங்கள் பார்ப்பதன் காரண- விளைவு உறவு முறை தெரியாததால், நீங்கள் அதை அதிசயம் என்று எண்ணுகிறீர்கள்.
உண்மையில் இந்த தொலைகடத்தலில் என்ன நிகழ்கிறது என்றால், தொலைபேசியில் எவ்வாறு உங்கள் குரல் ஒலியலைகள் மின்குறிப்புகளாக மாற்றப்பட்டு ஒரு ஊடகத்தின் வழியாகக் கடத்தப்பட்டு மறுமுனையில் மாற்றப்படுகிறதோ, அதே போல, நான் வெறுமனே ஒரு பொருளை சக்தியாக மாற்றி காற்றின் வழியாகக் கடத்தி மீண்டும் அதைப் பொருளாக மாற்றி விடுகிறேன், அவ்வளவுதான். இதில் ஒன்றும் அதிசயமில்லை.
அதனால் அதிசயங்களைத் தேடுவதை நிறுத்துங்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது நன்றியுணர்வுடனும் அன்புடனும் வாழுங்கள்; தானாகவே அதிசயங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள். உங்களுடைய உருமாற்றமே ஒரு குருவின் மூலமாக நிகழக்கூடிய மாபெரும் அதிசயமாகும்! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு குருவிடம் இருந்து உங்களுக்குத் தேவை அதிசயங்கள் அல்ல; அறிவு மட்டுமே.
அறிவுக் கூட்மை வளரும் பொழுது உங்களுடைய தினசரிச் செயல்பாடுகளை முயற்சியின்றிக் கையாளுவீர்கள்; அமைதியாக இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் ஒரு மேலாளர் என்று வைத்துக் கொள்வோம்; உங்களுக்குப் பல கடமைகள் இருக்கின்றன, இல்லையா ? மக்களைக் கூலிக்கு அமர்த்திக் கொள்கிறீர்கள், அவர் களுடைய செயல்திறனை மேற்பார்வையிடுகிறீர்கள், அவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்கிறீர்கள், இவ்வாறு பலவும் செய்கிறீர்கள். இவற்றை யெல்லாம் உங்களால் மனஅழுத்தம் இன்றிச் செய்ய முடிகிறதா? அறிவுக் கூர்மையினால் இவற்றையெல்லாம் உங்களால்
என்னால் உங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தர முடியாது; ஆனால் உங்களால் கற்றுக்கொள்ள முடியும்.
மனஅழுத்தமின்றிக் கையாள முடியும். அமைதியுடன் இருப்பீர்கள். உங்களுக்குத் தேவை அறிவுக் கூர்மையே தவிர ஆற்றலல்ல. அதை நினைவில் வையுங்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களை பாதுகாக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அனுபவித்து உணர்ந்தீர்களானால், நீங்கள் உருமாற்றமடைவீர்கள்; இதுபோன்ற ஏமாற்றங்களிலிருந்தெல்லாம் விடுதலை பெற்று தனித் தன்மையுடையவராவீர்கள். நாம் எப்பொழுதும் சொல்பவர்களையும் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் நம்புகிறோம்; ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் உயிர் மூலமான பிரபஞ்ச இருப்புத் தன்மையை ஒரு போதும் விசுவசிப்பதில்லை.
பாரதத்தில் மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கிளியிடம் கேட்கும் ஒரு பழக்கம் இருக்கிறது!
சாலையோர நடைபாதைகளில் ஒருவன் ஒரு கூண்டுக்குள் கிளியை வைத்திருப்பான். அந்த வழியாகச் செல்லும் மக்கள் அவனிடம் நின்று கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களது எதிர்காலத்தைப் பற்றி விசுவாசத்துடன் கேட்பார்கள். அவன் கூண்டைத் திறந்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக்கட்டில் இருந்து ஒரு சீட்டை எடுத்துத் தரும்படி கிளிக்குக் கட்டளை யிடுவான். கிளி கூண்டிலிருந்து வெளியே வந்து அதன் அலகால் ஒரு சீட்டை எடுத்து அவனிடம் கொடுக்கும். அவன் அதில் எழுதப்பட்டிருப்பதைப் படிப்பான். அதுதான் கேட்பவருடைய எதிர் காலத்தைப் பற்றிய கணிப்பு !
ஆற்றிவுள்ள ஒரு மனிதன் நாலறிவுள்ள ஒரு கிளியிடம் தனது எதிர்காலத்தைப் பற்றி முன் கூட்டியே சொல்லும்படிக் கேட்கிறான்! இது எவ்வாறு சாத்தியம்? நான் சொல்கிறேன்,
உங்கள் தேவைகள் ஆசைகளிலிருந்து வேறுபட்டவை. தேவைகள் தானாகவே பிரபஞ்ச இருப்புத்தன்மையால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.
இதுபோன்ற முட்டாள்கனங்களையெல்லாம் விட்டு விட்டு இசைவுடன் இருக்கத் தொடங்குங்கள். மைய இழையான நன்றியுணர்வை பிடித்துக் கொண்டு பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்லுங்கள்.
நீங்கள் குருமார்களை கவனித்தீர்களானால், அவர்கள் மிகவும் தன்மையுடனும் தோன்றுவார்கள். இதற்குக் காரணம் அவர்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து செல்வதே. ஆனால் நீங்கள் அவர்களது நிலையைப் புரிந்து கொள்ளாமல் அந்தஸ்தை மட்டுமே பார்க்கிறீர்கள். நீங்கள் அவர்களது நிலையைப் புரிந்து கொண்டீர்களானால், அவர்கள் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையில் கலந்து விட்டதால்தான் எப்பொழுதும் இவ்வளவு ஆனந்தமயமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்த நிலையை அடையத்தான் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? "ஒ! அவர் ஒரு குரு; அவர் எப்பொழுதும் ஆனந்தத்தில் இருக்கிறார். அவருக்கு எப்படி என்னுடைய பிரச்சினைகளைப் பற்றித் தெரியும் ? நான் இங்கு ரொட்டிக்கும் வெண்ணெய்க்குமே போராடிக் கொண்டு இருக்கிறேன்; அவரோ எப்பொழுதும் நன்றியணர்வுடன் இருக்கச் சொல்கிறார்?''.
நான் சொல்கிறேன் ... நீங்கள் குருவின் காலடியில் இருக்கும் ரோஜா இதழ்களை மட்டும்தான் பார்க்கிறீர்கள்; நீங்கள் அவருடைய அந்தஸ்தை மட்டுமே பார்த்து அவருக்கு உங்களுடைய தினசரி விஷயங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று எண்ணுகிறீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் அவருக்குக் கொடுக்கும் மரியாதை அவரது நிலைக்காக;
நன்றியுணர்வின் அற்பதங்களை நீங்களே அனுபவிக்கும்பொழுது, நீங்கள் மேலும் மேலும் அதிர்ஷ்டத்தைக் கவர்ந்திமுக்கிறீர்கள்.
அந்தஸ்துக்காக அல்ல. அந்த நிலையை அடைவதற்கு அவர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்பதை ரீங்கள் அறிய மாட்டீர்கள்.
நீங்கள் ரொட்டிக்கும் வெண்ணெய்க்குமான போராட்டத்தை பற்றிப் பேசுகிறீர்கள். நான் என் சொந்த அறைபவத்திலிருந்து சொல்கிறேன் ... நான் அலைந்து திரிந்த நாட்களில் பல நாட்கள் உணவின்றியே இருந்திருக்கிறேன். ஆனால் நான் அதை ஒருபோதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு குறையாக நினைத்ததில்லை. நான் மிகவும் ஆர்வத்துடன் உண்மையைத் தேடிக் கொண்டிருந்ததால், எல்லாமே - உணவில்லாமல் இருப்பது கூட -கியானமாகிவிட்டது.
உங்களுக்குத் தெரியுமா ... சில தர்ம சத்திரங்களையும், சந்யாசிகளுக்கு நல்ல மரியாதை தரும் வட பாரதத்தையும் தவிர, மக்கள் எப்பொழுதும் பொதுவாகவே சந்யாசிகளைத் தவிர்த்து விடுகின்றனர். சந்யாசிகள் எப்பொழுதும் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகின்றனர். அவர்கள் திருடிச்செல்வதற்காகவே வந்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்கள் போலிருக்கிறது. நான் சொல்கிறேன் ... ஒரு போதும் அவா்களைத் தவிர்த்து விடாதீர்கள். அவர்களுக்கு ஏன் கொஞ்சம் உணவு கொடுக்கக் கூடாது ? அதுவே அவா்களுக்குப் போதுமானது. மக்களுக்குக் கொடுக்கும்போது ஒருபோதும் குழுபோதும் கஞ்சத்தனமாக இருக்காதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் உங்கள் செல்வத்தில் இருந்து கொஞ்சம் கொடுக்கும் 'தானி'யாக இருக்க விரும்பாவிட்டால் இறக்கும் பொழுது எல்லா வற்றையும் விட்டுச் செல்லும் 'மஹாதானி'யாகி விடுவீர்கள்!
எப்படியோ ... தயவுசெய்து நான் என் சொந்த அனுபவத்திலிருந்துதான் புரிந்து
நன்றியுணர்வுடன் இருங்கள். உங்கள் மீது பொழியப்படும். இதுதான் வாழ்வின் இரகசியம்.
கொள்ளுங்கள். ஆழமான கஷ்டங்களிலும் போராட்டங்களிலும் கூட. அலைபாயாத விசுவாசத்துடனும் நன்றியுணர்வுடனும் செயல்பட்டு, உங்கள் உள் அறிவுக் கூர்மையை உபயோகித்து அவற்றைக் கடந்து செல்வீர்களானால், நீங்கள் அதிக நன்றி யுணா்வுடனும் அறிவுக் கூர்மையுடனும் வெற்றிகரமாக வெளிவருதைக் காண்பீர்கள்!
நீங்கள் மிகவும் விலைமதிப்பற்ற எதையேனும் இழந்து விட்டால் கூட அதைச் சிலகாலம் மகிழ்ச்சியுடன் அனுபவித்தற்காக வெறுமனே நன்றியுணர்வுடன் இருங்கள், அவ்வளவே. நீங்கள் தூய்மையான நன்றியுணர்வாகி விடும்பொழுது, இழந்து விட்ட எதற்காகவும் அழுது கொண்டிருக்க மாட்டீர்கள். அது இருக்கும் வரையில் வெறுமனே மகிழ்ச்சியாக அபைவிப்பீர்கள்; அது போன பிறகும் தொடர்ந்து நன்றியுணர்வுடனேயே இருந்து கொண்டிருப்பீர்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒரு அரசன் அவனது நாட்டிலேயே இரவில் மாறு வேடத்தில் நகர்வலம் வருவது வழக்கம். ஒவ்வொரு இரவும் நகரம் முழுவதும் உறக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு குரு குரு முட்டும் ஒரு மரத்தினடியில் ஆனந்தமயமான நிலையில் அமர்ந்திருப்பதைக் காண்பான். அந்த குருவிடம் அவனுக்கு ஒரு ஒரு ஆழமான மரியாதை ஏற்பட்டது; ஒரு இரவு அவனுடன் அரண்மனைவில் வந்து தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான். குரு சொன்னார் "சரி. நான் இன்றே வருகிறேன். நாளை என்பது ஒருபோதும் நிச்சயமில்லை''. அழைப்பு திடீரென்று எதிர்பாராவிதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அரசன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அரண்மனையில் அவருக்கு அறைகளில் சிறந்ததையும், சிறந்த உணவையும் அளித்தான்.
பொறுப்புணர்வு என்பது (எந்த ஒரு நிகழ்விற்கும்) தன்னிச்சையாகத் தக்க பதில் கொடுக்கும் திறமை.
குருவோ எல்லாவற்றையும் நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவித்தார். அவர் எல்லா லோகாயதமான சுகங்களையும் அபைவிப்பதை அரசன் கவனித்துக் கொண்டே யிருந்தான். ஒரு உண்மையான குருவானவர் இவ்வாறு அனுபவிப்பார் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவனுக்கு குருவின் மீதான மரியாதை நாளாக நாளாகக் குறைந்து கொண்டே வந்தது. அவன் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்தான். இறுதியில் ஒருநாள் குரு அவனிடம் சொன்னார். ''ஏதோஒன்று உன்னை தொல்லை செய்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறதே, நீ ஏன் அதை வெளியே சொல்லக் கூடாது ?''. அரசன் சொன்னான், ''ஆம், நீங்கள் இவை எல்லாவற்றையும் என்னைப் போலவே அபைவிப்பதைக் காணும் பொழுது, என்னால் உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை''. குரு புன்னகையுடன் சொன்னார் ''சரி நாம் சிறிது நடக்கலாம்''. அரசன் சம்மதித்தான். அவா்கள் நடக்கலாயினர். வெகு நேரம் அமைதியாக நடந்தனர். ஒரு ஆற்றையடைந்தனர்; அத்துடன் அந்த அரசனின் எல்லை முடிவடைந்து விடுகிறது. குரு சொன்னார், "சரி, நான் தங்கும் காலம் முடிந்து விட்டது. நான் உன்னுடைய இராஜ்ஜியத்தை விட்டுச் செல்கிறேன். நீயும் வருகிறாயா?''. அரசன் சொன்னான், "என்னால் எவ்வாறு முடியும்? எனக்கு இராஜ்யம் இருக்கிறது; என்னுடைய மக்கள் இருக்கிறார்கள், இன்னும் நான் தீர்க்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன!''. குரு புன்னகையுடன் கேட்டார், ''இப்பொழுது உன்னுடைய கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா?'. குருவின் வார்த்தைகள் அரசனை பலமாகக் குலுக்கியது.
எல்லாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையைச் சேர்ந்தது என்று குருவுக்குத் தெரியும். அதனால்தான் அந்தக் கணத்தில்,
அற்புதங்கள் ஒருபோதும் செய்யப்படுவதில்லை. அவை வெறுமனே தொடர்ந்து உங்களைச் சுற்றி நிகழ்கின்றன.
நன்றாக அனுபவித்து, முழுமையாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழப்படுகிறது. அவர்கள் எதையும் இழப்பதைப் பற்றி அச்சப்படுவதில்லை : ஏனெனில் இழப்பதற்கு எது உன்னுடையது ?
ஒருபோதும் இருப்புத் தன்மையைச் சேர்ந்தது. நீங்கள் அதைத் தற்காலிகமாக வைத்திருக்கிறீர்கள், அவ்வளவுதான். உங்களிடம் எது இருப்பினும் இல்லாவிடினும் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருங்கள். அதுவே விடுதலை தரும் வாழ்விற்கான வழி. இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டால், உங்களால் மாபெரும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
இன்னொரு அருமையான சின்ன கதை .....
கடவுளும், உலகின் எல்லா விஞ்ஞானிகளும் சந்தித்து ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தனர். கடவுள் எதைச் செய்தாலும், விஞ்ஞானிகளும் ஏதோ ஒரு பொருளிலிருந்து அதை அப்படியே உருவாக்கினர். இறுதியாக கடவுள் மண்ணிலிருந்து மனிதனைப் படைத்து விஞ்ஞானிகளுக்கு சவால் விட்டார். விஞ்ஞானிகள் மண்ணை எடுக்கத் துவங்கினர் ... கடவுள் சொன்னார், "பொறுங்கள்! அதை உங்களுடைய மண்ணிலிருந்து செய்யுங்கள், என்னுடையதில் இருந்து அல்ல!''.
மனிதன், பிரபஞ்ச இருப்புத் தன்மையே படைத்தது, படைக்கப்பட்டது மற்றும் படைத்தல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவனால் விஷயங்களை எந்தவிதக் கவலையுமின்றி, வெறுமனே அனுபவிக்கத் தொடங்க முடியும். அப்பொழுதுதான் அவனால் என்னுடையது என்பதையும் நான் செய்தேன் என்பதையும் கைவிட முடியும்.
அதனால் மனோபாவத்தை அதிருப்தி, கவலைகள், மனச்சோர்வு ஆகியவற்றைத் தேடுவதிலிருந்து, நன்றியுணர்வுடன் நிகழ்காலத்தைத் தேடுவதை நோக்கி மாற்றியமைத்துக் கொண்டால், உங்களால் தானாகவே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் சக்தியை இன்னும் நன்றாக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்; பிறகு நன்றியுணர்வே உங்களுடைய மனோபாவமாகிவிடும்.
ஒரு சின்ன கதை ....
ஒருவன் அவன் மனைவிக்குக் காய்கறிகள் வாங்கி வர கடைத்தெருவிற்குச் சென்றான். அவன் வெண்டைக்காய் வாங்கிக் கொண்டு வந்து மனைவியிடம் காட்டினான். அதைப்பார்த்த மனைவி சொன்னாள், ''ஓ! இவையெல்லாம் மிகவும் முற்றிப் போய்விட்டது. என்னால் இவற்றைச் சமைக்க முடியாது''. அவன் அடுத்த நாள் கடைக்குச் சென்று, இந்த முறை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து, கொஞ்சம் வெண்டைக்காய்களை வாங்கிக் கொண்டு வந்து மனைவியிடம் காட்டினான். மனைவி சொன்னாள், "நீங்கள் என்ன வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? எல்லாம் மிகவும் பிஞ்சு; இதை வைத்துக் கொண்டு நான் நினைத்த உணவைச் செய்ய முடியாது''. அடுத்த நாள் அவன் கடைத்தெருவிற்குச் சென்று, கடைக்காரரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான், "தயவு செய்து எனக்கு ரொம்ப முற்றலாகவோ அல்லது ரொம்பப் பிஞ்சாகவோ இல்லாத நல்ல வெண்டைக்காய்கள் கொஞ்சம் கொடு''. கடைக்காரரும், அவரே சிறந்த வெண்டைக்காய்களாகப் பொறுக்கியெடுத்துக் கொடுத்தார்; அவன் வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியிடம் காட்டினான். அதைப் பார்த்த மனைவி சொன்னாள், "என்ன? இன்றைக்கும் வெண்டைக்காய் வாங்கிக் கொண்டு வந்து விட்டீர்களா!' ' .
தண்ணீரை மதுவாக மாற்றுவது ஒன்றும் அற்புதமில்லை. மனிதனைக் கடவுளாக மாற்றுவதே உண்மையான அற்புதம். (பலக்க சிரிப்பு!)
நம்மில் பலருக்கும் பாராட்டுதல் என்பது ஒரு போதும் தன்னிச்சையாக பாராட்ட முடியவில்லையென்றால், நம்மிடம் குறை கூறும் அல்லது அதிருப்தியுடன் இருக்கும் இயல்பு இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில், அதிருப்தியே நமது மனதின் உணவாகும்.
அதிருப்தியுடன் இருப்பது என்பது மனதிற்கு மெல்வதற்குக் கொஞ்சம் உணவு கொடுப்பதைப் போன்றது. மனம் அதை உட்கொண்டு தன்னை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும். நாம் மிகவும் திருப்தியுடன் இருக்கும் பொழுது என்ன நிகழ்கிறது? மனதிற்கு உணவில்லாமல் போகிறது. அதற்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. அது தன் உணவைத் தேட ஆரம்பிக்கிறது!
ஒரு பெண்மணி செருப்புக் கடைக்குச் சென்றாள். அவள் கால்களுக்குப் பொருந்தும்படியான செருப்பைக் கைட்டாள்; விற்பனையாளரும் அவளுக்குப் பொறுமையாக பல ஜோடி செருப்புகளைக் காண்பித்தார். அவளும் ஒன்றன் பின் ஒன்றாக முயற்சிசெய்து, எதுவும் அவளுக்குச் சரியாகப் பொருந்தவில்லை என்று எண்ணினாள். இறுதியாக, விற்பனையாளர் ஒரு ஜோடி செருப்புகளைக் காண்பித்து, அவற்றை முயற்சி செய்து பார்க்குமாறு சொன்னார். அவள் அதை போட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னாள், ''இது மிகவும் சரியாகப் பொருந்துகிறது, ஆனால், இது சரியான அளவு தானா என்று நான் ஆச்சரியமடைகிறேன்''.
(சிரிப்பு)
நீங்கள் திருப்தியாக இருப்பதில்லை என்று தீர்மானம் செய்து விட்டீர்களானால், பிறகு உங்களுக்கு யாராலும் உதவ
அதிசயங்களைத் தேடுவதை நிறுத்துங்கள்.
முடியாது. அது உங்கள் மனதின் ஒரு நிலை; அதற்கு உங்களால் மட்டுமே உதவிக் கொள்ள முடியும். நம்மில் பலரும் அதிருப்தியாக இருப்பதிலும், உணர்கிறோம் ; ஏனெனில் அதைப் பற்றிப் பேசுவதற்கு எப்பொழுதும் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது; மனதிற்கு எப்பொழுதும் வேலை இருந்து கொண்டிருக்கிறது.
எப்பொழுதும் திருப்தியாக இருப்பது என்பது மனதை இழப்பதைப் போன்றது. நாம் எப்பொழுதும் திருப்தியாக இருக்க விரும்புவதாகச் சொன்னாலும், அது நிகழும் பொழுது நாம் தயாராக இல்லாமல் இருப்பதற்கு, இதுவும் ஒரு காரணம். நமது மனம் தந்திரமாக விளையாடுகிறது; ஏனெனில் அது மெல்வதற்கு ஏதேனும் தேவை.
தொடுவானத்தை நோக்கி ஓடும்பொழுது நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். தொடுவானம் என்பது கற்பனையான ஒரு கோடு; ஆனால், அதன் பின்னால் ஓடும்பொழுது பாதுகாப்பாக உணர்கிறோம்; இருக்கிறது! மனம் எப்பொழுதும் ஒடிக் கொண்டே இருப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது !
நீங்கள் இதுபோன்றிருந்தால், உண்மையில் உங்களையே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், அவ்வளவுதான். நீங்களே உங்களுக்கு சுய முரண்பாடான விளைவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உதாரணமாக, உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் திருப்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்; ஆனால் தொடர்ந்து குறை கூறிக் கொண்டிருப்பதன் மூலமும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்க மறுப்பதன் மூலமும், உங்களை நீங்களே திருப்தியடைய விடாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் விரும்புவது ஒன்று; ஆனால் உங்கள்
மீது கொண்டு வருவது வேறொன்று. திருப்தியடைவகை வாம்நாள் சாதனையாகத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பது உங்களுக்கு வசதியாக இருக்கிறது !
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... உங்களுக்கு சுயமுரண்பாடான விளைவுகளை உருவாக்கிக் கொள்ளும் அந்தக் கணத்திலேயே, உங்களுடைய துயரம் ஆரம்பித்து விடுகிறது. உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க முயற்சி செய்யுங்கள்; உங்களுடைய ஒவ்வொரு அவுன்ஸ் சக்தியையும் அவ்வாறு செய்வதற்கான வழியில் செலுத்துங்கள். இதுபோன்ற தெளிவுடன் செயல் படுவீர்களானால், உங்களை ஒருபோதும் ஏமாற்றிக் கொள்ள மாட்டீர்கள்; விரைவில் நீங்கள் விரும்புவதைப் போல் ஆகி விடுவதையும் காண்பீர்கள்!
நன்றியுணா்வே உங்கள் தியானமாகி விடும் ஒரு வெளியில் நீங்கள் நுழையும் பொழுது, தானாகவே திருப்தி ஏற்படுகிறது. நமக்குத் தெரிந்த சாதாரண திருப்தியானது எப்பொழுதும் ஒரு காரணத்துடனேயே வருகிறது. அது வெளியுலகில் நிகழ்ந்த ஏதோ ஒன்றுடன் தொடர்புடையது; அது உங்களுடைய சுறுசுறுப்பான மனதிற்குத் தற்காலிகமாக கொஞ்சம் ஒய்வு கொடுக்கிறது, அவ்வளவே. உங்கள் மனம் ஓய்வில் இருக்கும்பொழுது, நீங்கள் திருப்தியென்பது இது அல்ல.
உண்மையான திருப்தியென்பது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கருணையை நோக்கி நீங்கள் நிரட்தரமான நன்றியணா்வுடன் இருப்பதாகும். உண்மையான திருப்தி என்பது எதையும் கேட்காது. அது எல்லாவற்றையும் வெறுமனே
ஆற்றிவுள்ள ஒரு மனிதன் நாலறிவுள்ள ஒரு கிளியிடம் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கேட்பது எவ்வளவு முட்டாள்தனம் ?
எந்தவிதமான காரணமும் இன்றி மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் ; அதற்குக் காரணம் தேவையில்லை. நீங்கள் இந்த நிலையை அடைந்தீர்களானால், என்னவென்று தெரியாது.
ஒரு சின்ன கதை ...
ஒருவன் டாக்டரிடம் சென்று அவனுக்குத் தூக்கமின்மை இருப்பதாக முறையிட்டான். டாக்டர் கேட்டார், '' அதனால், உங்களால் இரவில் தூங்கவே முடிவதில்லையா?'. அவன் சொன்னான், "நான் இரவில் நன்றாகத் தூங்குகிறேன் டாக்டா்". டாக்டர் கேட்டார், ''பிறகு உங்கள் பிரச்சினைதான் என்ன?''. அவன் சொன்னான், ''என்னால் முடிவதில்லை''.
(பலத்த சிரிப்பு ! )
நாம் மேலும் மேலும், ஒரு அளவு முறையே இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு வேளை ஒரு அளவுகோல் இருந்தாலும், அது முடிவற்றதாக இருக்கிறது; அதுதான் பிரச்சினை. நமது மேலும் மேலும் கேட்கும் மனோபாவத்தால், முழுவதுமாக குருடாக்கப்பட்டு விட்டோம். இதனால், நாம் எங்கு நிற்கிறோம் என்பது கூட நமக்குத் தெரிவதில்லை. நாம் வெகுகாலமாக உள்நோக்கிப் பார்க்கவேயில்லை. நாம் வெறுமனே நமது மனதால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய அறியாமை நிறைந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமே துன்பத்தை உள்ளே உருவாக்கிக் கொண்டு, நிவாரணத்தை வெளியே தேடிச் செல்கிறோம்.
உங்களால் இந்த நகைச்சுவைக்குச் சிரிக்க முடிந்ததன் காரணம், நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்
ரீங்கள் குருவின் காலடியில் இருக்கும் ரோஜா இதழ்களை மட்டும் தான் பார்க்கிறீர்கள். அந்நிலையை அடைவதற்கு அவர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
என்பது உங்களுக்குத் தெரியும்; நீங்களும் அதில் ஒரு பகுதியல்ல என்பது உங்களுக்குத் தெரியும். வாழ்க்கையில், பல சமயங்களில், நீங்களும் இதே சூழ்நிலையில் இருக்கிறீர்கள்; அது உங்களுக்குத் தெரிவதில்லை. அந்த சமயங்களில், நீங்கள் கவனிப்பவர் அல்ல. நீங்கள் முழு விஷயத்திலும் மிகவும் ஆழ்ந்துவிட்டதால், அது உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகிவிடுகிறது. அது உங்களுக்கு ஒரு திடமான உண்மையாகிவிடுகிறது.
ஏதேனும் ஒரு விஷயம் உங்களைத் தொந்திரவு செய்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம். இந்த நகைச் சுவையை ஞாபகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உடனே இந்த நகைச்சுவையுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து, விழிப்புணர்வுடன், உங்களைத் தொந்திரவு செய்வது எது என்பதைப் பாருங்கள். ஆழமாகச் சென்று, உண்மையிலேயே உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறதா, அல்லது வெறுமனே உங்கள் மனதை விளையாட அமைதித்துக் கொண்டிருக்கிறீர்களா, என்பதைப் பாருங்கள். இறுதியில் ரீங்கள் வெறுமனே சிரித்து விடக் கூடும்!
ஒரு பெண்மணி நீண்ட தூர விமானப் பயணம் செய்து கொண்டிருந்தாள். உணவு பரிமாறிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவள், அந்தப் பெண்மணி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு, அடுத்தவரை நோக்கி நகர்ந்து சென்று விட்டாள். சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணி விழித்துக் கொண்டு, அவளது உணவைக் கேட்டாள். விமானப் பணிப்பெண் அவளுக்கு உணவைக் கொண்டு வந்தாள். உணவைத் தொட்டுப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு சுரீர் என்று கோபம் வந்தது, "நீங்கள் என்ன விமானக் கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? உணவு குடாக இல்லை. நான் இந்த
இழப்பதற்கு எது உன்னுடையது ?
விமானத்திற்கு மூக்கு முட்டப் பணம் கொடுத்திருக்கிறேன்; எனக்கு குடான உணவு கூடக் கொடுக்க முடியாதா!". விமானப் பணிப்பெண் மன்னிப்புக் கேட்டாள், "மேடம், தயவுசெய்து எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். சூடு செய்யும் அடுப்பு வேலை செய்யவில்லை. மற்ற அனைவரும் இப்படித்தான் சாப்பிட்டார்கள்''. அந்தப் பெண்மணி சொன்னாள், "அப்படியா? அப்படியென்றால் சரி!".
(சிரிப்பு!)
பாருங்கள், உணவு இப்பொழுதும் குளிர்ந்துதான் இருக் கிறது; ஆனால், அந்தப் பெண்மணிக்கு இப்பொழுது வருத்த மில்லை; ஏனெனில் எல்லாரும் அப்படித்தான் சாப்பிட்டனர் என்பது அவளுக்குத் தெரியும்! எல்லாம் மனதின் விளையாட்டு என்று நான் சொல்வது இதைத்தான்; எல்லாம் மனதின் சரி செய்து கொள்ளுதல் - மனது அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறது; நீங்கள் அதை ஆக்ரமிக்க அனுமதித்து விட்டதால், உங்களிடம் விளையாடுகிறது. நீங்கள் திருப்தியில் மையம் கொள்ளவில்லை; அதனால் உங்கள் மனதிற்கேற்றவாறு அலை பாய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
அதனால், நான் சொன்னதுபோல், இறுதியில் உங்களால் சிரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அனைத்தையும் பற்றி இன்னும் கடுமையாகத்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்; நீங்கள்தான் மொத்த உலகத்தையும் உங்கள் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், உங்களால்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
பாருங்கள், ஆழ்ந்து பார்க்கும் பொழுது, உண்மை என்ன வென்றால், நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையைச் சேர்ந்தவர்கள்;
Adjustment¹
அதுவே இறுதியான, எங்கும் பரவியிருக்கும் சக்தியாகும்: அதுவே அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. நமது உள்ளார்ந்த இயல்பும் கூட, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை திரும்பப் பெறுவதுகான்; அதனால் நாம் எந்தப் பிரச்சினையும் இன்றி இசைந்து செல்ல முடியும். ஆனால், எங்கோ நாம் புரிந்து கொள்ளுதலைத் தவறவிட்டு விட்டு, நம்மைப் பிரபஞ்ச இருப்புத் தன்மையில் இருந்து துண்டித்துக் கொண்டு, லோகாயதமான
என்ற எண்ணத்தில், ஒடிக் கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது மிருகக்காட்சி சாலைக்குச் கூண்டுகளின் முன்னால் மிக நீண்ட வரிசையிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். எப்பொழுதும் மக்கள் சிங்கம் மற்றும் புலிகளின் முன்னால் வெகுநேரம் நின்றுவிட்டு, ஒரு பயங்கலந்த வியப்புடனும், மரியாதையுடனும் அவற்றைப் போற்றிப் பாராட்டி
விட்டுச் செல்வதைக் காணலாம்.
விஷயங்களின் பின்னால், அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்
உணர்ந்து கொள்ளாமல் கூட, இதை நாம் செய்வதன் காரணம், நம்மை விடப் பெரிய அல்லது வலிய விஷயங்களைப் பார்ப்பதன் மூலம், நாம் மீண்டும் உறுதி செய்து கொள்கிறோம்; நாம் இறுதியான உயர்ந்த ஆற்றல் அல்ல என்பதே நமக்கு ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. நாம் இறுதியான உயர்ந்த ஆற்றல் அல்ல என்பது நமக்குத் தெரியும். உண்மையில் நமது இருப்புத் தன்மை, இந்த பேரண்டப் பிரபஞ்சத்தில், நமது உண்மையான பங்கை ஞாபகப்படுத்தும் இது போன்ற ஏதாவதொரு கம்பீரத் தன்மையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.
அதிருப்தியுடன் இருப்பது என்பது மனதிற்கு மெல்வதற்குக் கொஞ்சம் உணவு கொடுப்பதை போன்றது. மனம் அதை உட்கொண்டு தன்னை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.
மக்கள் பார்க்கும் பொழுது அவர்களுக்குக் கிடைக்கும் இந்த உறுதி மொழிக்காகவே. இது போன்ற உறுதி மொழியைக் கோயில்களில் பெறுகிறார்கள். எப்படியோ, நமது உள் ஆழத்தில், நாம் இறுதியான உயர்ந்த ஆற்றல் அல்ல என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோம். இந்த உணர்வு நமக்கு அனுபவமான உண்மையாக வேண்டும். பிறகு நாம் நிச்சயமாகத் தெரிந்து கொண்டு விடுவோம்.
நீங்கள் இமயமலைக்குச் சென்றால், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஆழத்தைப் பற்றி, நிரந்தரமாகவும் உறுதியாகவும் ஞாபகப்படுத்தப் படுவீர்கள். ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்கு மலைகள் எழும்பி நிற்பதும், மலைகள் பள்ளத் தாக்கு களாகி விடுவதும், பள்ளத் தாக்குகள் மலைகளாக எழும்புவதும், ஆதியந்தம் காண முடியாமல் இருக்கிறது; கங்கை நதி பள்ளத்தாக்குகளில் பல மனநிலைகளிலும், பல வண்ணங்களிலும் வழிகளிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மொழியில் சலசலத்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் தொடர்ந்து பிரவகித்துக் கொண்டு இருக்கிறது. மனிதனால் செய்யப்படாத உலகம் ஒன்று இருக்குமானால், அதை நிரூபிக்க இமயமலை எழுந்து நிற்கும். மனிதர்கள் இறுதியான மன்னர்கள் அல்ல என்பதை இமயமலை நிரூபிக்கிறது. நீங்கள் இமயமலையைப் பார்க்கும்பொழுது, எவ்வாறு பல நூறு கிலோ மீட்டர்களில், பனிமலைகள் வெறுமனே பனிமலைகளாக தோன்றுவதையும், பிறகு மலைகளாகவும் நீராகவும் மாறி விடுவதையும், பின்னர் வெறுமனே நீராக மட்டுமே ஆகிவிடுகிறது என்பதையும் காண்பீர்கள். இயற்கையின் அற்புதங்கள் அதன் உச்சத்தில் இத்தகையதாக இருக்கிறது.
ரீங்கள் திருப்தியாக இருப்பதில்லை என்று தீர்மானம் செய்து விட்டீர்களானால், பிறகு உங்களுக்கு யாராலும் உதவ முடியாது.
புத்தகங்களால் வார்க்கைகளால் கற்பிக்க முடியாததை, இமயமலையால் வெறுமனே பார்ப்பதன் மூலமாகவே அனுபவமாகக் கற்றுக் கொடுத்து விட முடியும், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டியது மட்டுமே தேவை. இமயமலை, ஊடுருவிச் செல்லும் அமைதியுடன் இருக்கும், உயிருள்ள ஒரு சக்தி வடிவம். நீங்கள் வெறுமனே அதை ஊடுருவிச் செல்ல அனுமதியுங்கள். நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அற்புகத்தில் ஒரு புள்ளிதான் என்பதை புரிந்து கொண்டீர்களானால், அதை எந்தக் கேள்வியுமின்றி, கருணையுடனும், பணிவுடனும் ஏற்றுக் கொள்வீர்கள்.
நீங்கள் உங்களைப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குத் திறக்கும் பொழுது, அது உங்களை நிரப்புகிறது. நீங்கள் உங்களை எவ்வளவு திறக்கிறீர்களோ, அது அவ்வளவு நிரப்புகிறது. நீங்கள் அனைவரும், கடவுளைப் பற்றிக் கொள்ளக் கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நிச்சயமாக அல்ல. குரங்குக் குட்டி எவ்வாறு அதன் தாயைப் பற்றிக் கொள்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா? அது விட்டுவிட்டு விழுந்து விடும் சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கிறது. ஆனால் பூனை விஷயத்திலோ, தாய் குட்டியைக் கவ்விக் கொள்கிறது; குட்டி மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.
நீங்கள் கடவுளைப் பற்றிக் கொள்ள வேண்டாம். வெறுமனே உங்களை அனுமதியுங்கள்; உங்கள் கடமையைச் செய்து விட்டு மற்றவற்றை விட்டு விடுங்கள்; கடவுள் உங்களைப் பற்றிக் கொள்வார். கடவுளிடம் விழுவது பெரிய விஷயமல்ல. கடவுளை உங்களிடம் விழ வைப்பதே பெரிய விஷயம்! அது, நீங்கள் தோல்விகளால் துவளாத விசுவாசத்துடன்,
உண்மையான திருப்தியென்பது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கருணையை நோக்கி நீங்கள் நிரந்தரமான நன்றியுணர்வுடன் இருப்பதாகும்.
அன்பும் சேவை மனப்பான்மையும் கூடிய வாழ்க்கையை வாழும் பொழுது நிகழும்.
ஒரு அருமையான சின்ன ககை ...
கடவுள் சிந்தனையும், அன்பும் நிறைந்த, தன் வாழ்வில் நிறைய நற்கருமங்களைச் செய்த மனிதர் ஒருவர் இருந்தார். யாரோ ஒருவரிடம் ஒரு புத்தகம் இருப்பதாகவும், அதில் கடவுளை மிகவும் நேசிப்பவர்களின் பெயர்கள் இருப்பதாகவும் அவருக்குத் தெரிய வந்தது. அவர் தன் பெயரும் அதில் இருக்கிறதா என்று பார்க்க விரும்பி, அவனிடம் சென்று, தான் அந்த புத்தகத்தைப் பார்க்க முடியுமா என்று கேட்டார். அவர் பலமுறை எல்லாப் பக்கங்களிலும் தேடிப் பார்த்தும் அவர் பெயரைப் பார்க்க முடியவில்லை. அவர் மிகவும் ஏமாற்ற மடைந்து திரும்பிச் சென்றார். ஒரு வருடம் கழித்து, தன் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க மீண்டும் திரும்பி வந்தார். இந்த முறையும், அவரால் எங்கும் காணமுடியவில்லை. அவர் திரும்ப முயற்சிக்கும் பொழுது, அவன் சொன்னான், "ஐயா, தயவு செய்து பொறுங்கள். இந்த புத்தகத்தில் கடவுளை நேசிக்கும் மனிதர்களின் பெயர்கள்தான் இருக்கிறது. கொஞ்சம் பெயர்களுடன், என்னிடம் இன்னொரு சின்ன புத்தகம் இருக்கிறது. அதில் கடவுள் நேசிக்கும் மனிதர்களின் பெயர்கள் இருக்கிறது'. அவன் அவரிடம் அந்தப் புத்தகத்தைக் காண்பித்தான். அதில் அவரது பெயர் இருந்தது.
கடவுளிடம் விழுவது மிகவும் சுலபம். ஏனெனில் கடவுள் அன்புமயமானவர்; அனைத்தையும் கொடுப்பவர்; ஆற்றல் மிக்கவர். நீங்கள் தொடர்ந்து அவரை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டு இருந்த இடத்திலேயே இருக்கலாம். ஆனால் நீங்கள் இறைவனை இருப்புத்தன்மை நிலையில் உணர ஆரம்பித்தீர்களானால்,
நான் மேலும் மேலும் ஒரு அளவு முறையே இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
உங்களிடம் உருமாற்றம் நிகழும்; கடவுள் உங்களிடம் விமவார்! இதுவரை உங்களுக்குத் தெரியாத பல வழிகளிலும் நீங்கள் நேசிக்கப்படுவதைக் காண்பீர்கள். இறைவனின் பரிவான அன்பு அக்ககையது.
ஆரம்பத்திலிருந்தே நாம் இயற்கையைப் பற்றியும், கடவுளைப் பற்றியும், பிரபஞ்ச இருப்புத்தன்மை பற்றியும் எச்சரிக்கையுடன் இருக்கவே கற்றுக் கொடுக்கப்பட்டிருக் கிறோம். பூமி நம்மை காயப்படுத்தி விடாமல் இருக்க, செருப்புகளை அணியக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம். மழையில் இருந்து விலகி இருக்கக் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறோம். காற்று பலமாக வீசும்பொழுது வீட்டிற்குள் இருக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம் மிருகங்களிடம் இருந்து விலகி நிற்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம்.
நான் சொல்கிறேன் ... இந்த பூமியில், பிரபஞ்ச இருப்புத் தன்மையே உங்களுடைய ஒரே சிரேகிதம். இந்த பூமியை உணர்ந்து நடப்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் என் சிறுவயதில், கல்லூரி நாட்களைத் தவிர, ஒருபோதும் செருப்பை அணிந்ததே கிடையாது. கல்லூரி நாட்களில் கூட அவர்களது விதிமுறைகள் அவ்வாறு இருந்ததால் அணிந்து கொண்டேன். வீட்டிலோ அல்லது பள்ளியிலோ அல்லது அலைந்து திரிந்த நாட்களிலோ, நான் வெறுமனே வெறும் காலுடன் நடப்பதுதான் வழக்கம்.
இப்பொழுது ஆசிரமத்திலும், பல சமயங்களில் நான் வெறும் காலுடன்தான் நடக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்கள் அன்பினால், கால்கள் புண்ணாகி விடும் என்று சொல்லி செருப்பை அணிவித்து விடுகிறார்கள். நான் அவர்களிடம் கேட்பேன்,
இறுதியில் உங்களால் சிரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அனைத்தையும் பற்றி இன்னும் கடுமையாகத்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
'வெறுமனே செருப்பின்றி பாரதத்தின் குறுக்கும் நெடுக்கும் அலைந்த என்னுடைய கால்கள், இப்பொழுது எவ்வாறு புண்ணாகி விட முடியும் ?' என்று !
இவற்றையெல்லாம் செய்வதன் மூலம், நீங்கள் உங்களை இயற்கையிலிருந்து முழுமையாக துண்டித்துக் கொண்டு விடுகிறீர்கள். பலர் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, பல வருடங்கள் கரடு முரடான பிரதேசங்களில் அலைந்து திரிந்தும் எவ்வாறு உங்கள் பாதங்கள் இவ்வளவு மிருதுவாகவும் வெடிப்பின்றி யும் இருக்கிறது?' என்று. நான் இப்பொழுது சொல்கிறேன் ... நான் ஒருபோதும் என்னை பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு அந்நியமாக உணர்ந்ததில்லை, அதனால்தான்; அதுவே உண்மையான காரணம். நான் எப்பொழுதும் என்னை பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாகத்தான் எண்ணுகிரோன்.
நான் எப்பொழுதும் என்னை இயற்கையைச் சேர்ந்தவனாகத் தான் எண்ணுகிறேன். அதனால்தான் நான் ஒரு கவலையுமின்றி, எதைப் பற்றிய அச்சமுமின்றி அலைந்து திரிவது வழக்கம்.
வெறுமனே கற்பனை பண்ணிப் பாருங்கள்.. இருண்ட காட்டில் நீங்கள் தனியே, கொடிய வன விலங்குகளுடன், உணவின்றி, அடுத்த வேளை உணவு எங்கே கிடைக்கும் என்று தெரியாமல், உறங்கக் கூட இடமின்றி, வானமே கூரையாக! எவ்வாறு நீங்கள் இருப்பீர்கள் ? முழுவதும் பயத்துடன், இல்லையா ?
இதற்குக் காரணம், பிரபஞ்ச இருப்புத் தன்மை, உங்களின் ஏமாற்றமடையச் செய்யாக சிரேகிதம் என்பது ஒரு போதும் உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை. நீங்கள் உதவிக்கு எப்பொழுதும் மக்களையே பார்த்து பழக்கப்பட்டு விட்டீர்கள்; ஏனெனில் மக்கள் மட்டுமே உதவுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.
உங்களுக்கு உண்மையிலேயே பிரச்சினை இருக்கிறதா, அல்லது வெறுமனே உங்கள் மனதை விளையாட அனுமதித்துக் கொண்டிருக்கிறீர்களா என்பதைப் பாருங்கள். இறுதியில் நீங்கள் வெறுமனே சிரித்து விடக்கூடும்.
பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் மக்களின் வழியாக உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டீர்கள். உங்கள் விசுவாசம் எப்பொழுதும் மக்களின் மீதே இருக்கிறது; ஒரு போதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது அல்ல.
உங்கள் விசுவாசத்தைப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது வைத்தீர்களானால், நீங்கள் இந்த பூமியில் கடவுளைப் போல வாழ முடியும். நான் அலைந்து திரிந்த நாட்களை மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். எங்கு போகிறோம் என்ற எண்ணம் துளியுமின்றி, வெறுமனே கால்போன போக்கில் நடப்பது வழக்கம். ஏதோ ஒரு இரயிலில் ஏறி, எங்கு என்னை இயற்கைக் காட்சி கவர்கிறதோ, அந்த இரயில் நிலையத்தில் இறங்கி விடுவது வழக்கம். அப்பொழுது எனக்கு ஹிந்தியும் தெரியாது; பெரும்பாலும் அலைந்து திரிந்தது வட பாரதத்தில், இமய மலையில்தான். வழியைத் தெரிந்து கொள்வதற்காக, வெறுமனே அனுபவத்தில் ஹிந்தி வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன்.
உண்மையில், ஏதேனும் ஒரு மொழியைக் கற்பதானால், முதல் தடை, உங்களுக்கு அந்த மொழி தெரியாது என்ற எண்ணம்தான். நீங்கள் முதலில் உங்களை அந்த மொழியிலிருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள்; அது கடினமாகத் தோன்றுகிறது. இங்கு மீண்டும், உங்களுடைய 'எல்லாம் தெரிந்த' இயல்பினால், உங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள்.
எப்படியோ, பல சமயங்களிலும், நான் எந்த சாதுக் கூட்டத்துடனும் இல்லாமல், தனியாகவே அலைந்து திரிந்தேன். ஒருபோதும் நான் தனியாக இருந்ததாக எண்ணவில்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்.
நீங்கள் உங்களைப் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்குத் திறக்கும்பொழுது, அது உங்களை நிரப்புகிறது. நீங்கள் எவ்வளவு திரக்கிறீர்களோ அவ்வளவு நிரப்புகிறது.
நீங்கள் இயற்கையுடன் தொடர்பு கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டால், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மகிழ்ச்சியை உங்களால் உணர முடியும். நான் உணவிற்காக ஒரு போதும் பிச்சையெடுக்க வேண்டிய தேவையே இருந்ததில்லை. எனக்குப் பசியெடுக் கிறதோ இல்லையோ, உணவு யார் மூலமாகவோ ஏதோ ஒர் வடிவத்தில் வந்து விடும். இதைத்தான் நான், வெறுமனே நம்பிக்கை வை, (எது நடந்தாலும் சரி என்று) விட்டுவிடும், பிரபஞ்ச இருப்புத் தன்மை கவனித்துக் கொள்ளும், என்று சொல்கிறேன்.
மக்கள் ''நீங்கள் வாழ்க்கையில் மிகவும் போராடியே உங்கள் இலக்கை அடைந் திருக்கிறீர்கள். நாங்களும் எங்கள் இலக்கை அடைய கஷ்டப்பட வேண்டாமா?'' என்று. அவர்களிடம் சொல்கிறேன், என்னுடைய போராட்டத்திற்குக் காரணம், நான் ஒரு பூட்டைத் திறக்கும் முயற்சியில் 10,000 சாவிகளை உபயோகப் படுத்தியதுதான். நான் பல வருடங்களாக சோதனை செய்து சரியான சாவியைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்பொழுது என்னிடம் சரியான சாவி இருக்கிறது. நான் அதை யார் விரும்பினாலும் அவா்களுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அதைக் கொண்டு திறப்பதற்கு உங்களுக்கு ஒரே ஒரு கணம் மட்டுமே பிடிக்கும்! ஆயினும், நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணினீர்களானால், அது உங்களுடைய சுதந்திரம்; நான் அதில் குறுக்கிட மாட்டேன்!
உங்களுடைய ஒரே ஒரு முயற்சி, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் வழியாக பாய்ந்து செல்ல அனுமதிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு உங்களுடைய
Let go1
எதிர்ப்பு குறைவாக இருக்கும் பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியும் குறைவாகவே இருக்கும். அது நேரான விகிதத்தில் தொடர்பு கொண்டுள்ளது. நீங்கள் ஞானமடை யும் பொழுது, ஒரு காலியான ஊடகமாகி விடுகிறீர்கள்; உங்கள் வழியாக பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து பாய்கிறது, அவ்வளவே. உங்கள் தரப்பிலிருந்து எல்லா முயற்சிகளும் நழுவி விழுந்து விடும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையால் உங்கள் வழியாக முயற்சியின்றிப் பாய முடியும்.
சரி, ஏதேனும் கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா ?