KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/அத்தியாயம் - 9 அதிருப்தியிலிருந்து நன்றியுணர்விற்குSign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அத்தியாயம் - 9 அதிருப்தியிலிருந்து நன்றியுணர்விற்கு

  • ஸஹஸ்ரார சக்கரம் -
  • ஸஹஸ்ரார தியானம் -

ஸ்வறஸ்ரார சக்கரம் தலையின் உச்சியில் இருக்கிறது.

ஸம்ஸ்கிருதத்தில், ஸஹஸ்ராரா என்றால் 'ஆயிரம் இதழ்களையுடைய' என்று பொருள் - இந்தச் சக்கரம் தூண்டப்படும் பொழுது, சிரசின் உச்சியில் ஆயிரம் இதழ்களையுடைய தாமரை மலர்கிறது; அப்பொழுது நிகழும் ஆன்மீக அனுபவத்திலிருந்து இவ்வாறு பெயரிடப் பட்டிருக்கிறது.

இந்தச் சக்கரம் அதிருப்தியாலும், வாழ்க்கையை சாதாரணமாக (அலட்சியமாக) எடுத்துக் கொள்வதாலும் சீர்குலைகிறது ;

இதைத் திருப்தியாலும் பொங்கும் நன்றியுணர் வினாலும் மலரச் செய்ய முடியும்!

தியானமுறை: ஸ்ஹஸ்ரார் தியானம் - ஒரு குரு சூஃபி தியானமுறையிலிருந்து எடுக்கப்பட்டது.

ஒரு மனிதன் தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறான், ''கடவுளே, என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. குறைந்த பட்சம் ஒரு கோடி அளவிற்காவது இருக்கும் ஒரு பெரிய பரிசு விழுவதற்குத் தயவு செய்து உதவு! அவ்வாறு விழுந்தால், எனக்கு விழுவதில் 20 சதவிகிதத்தை உன் கோயிலில் காணிக்கையாகப் போட்டு விடுகிறேன் என்ற உறுதி கூறுகிறேன். உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையென்றால், தயவு செய்து நீயே 20 லட்சத்தைக் கமித்துக் கொண்டு மீதி 80 லட்சத்தை மட்டும் எனக்குக் கொடு''.

(கூட்டத்திலிருந்து பெருஞ்சு சிரிப்பு!)

நமது எல்லா விவகாரங்களுமே இவ்வாறுகான் வெறும் வியாபாரமாகவே இருக்கிறது! இவ்வளவு வெளிப்படையாக வேண்டுமானால், நமது வாழ்வில், இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிரார்த்தனை பற்றிய உங்கள் மனோபாவத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்தீர்களானால், எப்பொழுதும் எல்லாருடனும்- கடவுளுடன் கூட-வியாபார பரிவர்த்தனைதான் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

ஒரு நாள் ஒரு ஏழை, சக்ரவர்த்தி அக்பரின் அரண் மனைக்குச் சென்றான். அவன் அக்பரிடம் தனது மகனின் படிப்புச் செலவுக்காகக் கொஞ்சம் பணம் வேண்டுமென்று கேட்க விரும்பினான். அக்பரிடம் உதவி கேட்டு வந்தவர் எவரும் திருப்பியனுப்பப்பட்டதில்லை என்பது தெரிந்ததுதான். அவன் அரண்மனையை அடைந்த பொழுது, அக்பர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார். அதனால் அவனும் மற்றவர்களுடன் பிரார்த்தனை அறைக்கு வெளியே காத்திருந் தான். அக்பர் வெளியே வந்த பொழுது, ஒவ்வொருவரும் அவரவரது விண்ணப்பத்தை வைத்து அவரிடம் உதவி பெற்றனர். அந்த ஏழை மட்டும் எதுவும் கேட்காமல் திரும்பிச் சென்றான். ஆனால் அக்பர் அவனைக் கண்டுபிடித்துத் திருப்பி அழைத்தார். அவர் கேட்டார், 'ஏன் எதுவும் கேட்காமல் செல்கிறாய் ?''. அவன் பதிலளித்தான், ''மாட்சிமை பொருந்தியவரே, நான் தங்களிடம் தருமம் பெறலாம் என்று வந்தேன், அனால் தாங்களே பிச்சையெடுப்பதைக் கண்டேன்!''.

நாம் வெறுமனே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நமது பிரார்த்தனை என்பது வெறும் பிச்சைப் பாத்திரத்தைத் தவிர வேறல்ல.

நமது பிரார்த்தனைகளைக் கவனித்தாலே, நாம் அனைவருமே உண்மையில் பிச்சைக்காரர்கள்தான் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நாம் வெறுமனே மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நமது பிரார்த்தனை என்பது பிச்சைப் பாத்திரத்தைத் தவிர வேறல்ல. நாம் லோகாயதமான விஷயங்களுக்காக, அதிகாரத்திற்காக, நமது இலக்கை அடைவதற்காக, உடல் அழகிற்காக மற்றும் இன்னும் பலவற்றிற்காகவும் கடவுளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் எப்பொழுதும் தொடர்ந்து எதற்காகவாவது நமது மனதிற்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். உண்மையில் நாம் கேட்பதுடன் மிகவும் இசைந்து போய் விட்டதால், கேட்கிறோம் என்பதைக் கூட நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு, அது நமக்குள் ஒரு விழிப்பற்ற செயல்பாடாகவே ஆகிவிட்டது. நாம் அதைக் கேட்பதாகப் பார்ப்பதில்லையாதலால், நாம் ஒன்றும் கேட்பதில்லை என்று வாதம் பண்ணலாம். அதை வாழ்க்கையில் ஒரு இயல்பான வழியாகவே பார்க்கிறோம்! நாம் அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதால், நம்மை அதிலிருந்து விலக்கிக் கொண்டு ஒரு புதிய மனதுடன் பார்க்க முடியவில்லை.

புரிந்து கொள்ளுங்கள் ... உலகில் இரண்டே இரண்டு வகையான மதங்கள் மட்டுமே உண்டு; பிரார்த்தனையை1 அடிப்படையாகக் கொண்ட மதம், மற்றும் நன்றியுணர்வை2 அடிப்படையாகக் கொண்ட மதம்.

பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்ட மதம் என்பது, கடவுளிடம் ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பது. அதைக்கூட்டுப் பிரார்த்தனை வாயிலாகச் செய்யலாம் ; ஏனெனில் அது நமது கேட்கும் மனோபாவத்துடன் மிகவும் இசைந்திருக்கிறது. அது

சிறுவயது முதலே நமக்குள் பதிந்து விட்ட நெறிப்படுத்தல்களுடன் இசைந்திருக்கிறது. நாம் குழந்தைகளாக இருக்கும் பொழுதிலிருந்தே பிரார்த்தனை என்றால் கேட்பது என்று கற்றுக் கொடுக்கப்பட்டு விட்டது. அதுவே கடவுளை அல்லது பிரபஞ்ச இருப்புத்தன்மையை அணுகும் ஒரு மிகவும் இயல்பான வழி போல் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம், நன்றியுணர்வு மதமானது, கடவுளை அல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய, உள்ளிருந்து பொங்கும் தாங்க முடியாத நன்றியுணர்வை அடிப்படையாகக் கொண்டது. அது நமக்குக் குழந்தைப் பருவத்திலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்டதற்கு முற்றிலும் மாறானது. நமக்கு எப்பொழுதும், பெற்றுக் கொண்டதற்கு மட்டுமே நன்றி தெரிவிக்குமாறு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். நமக்கு, நன்றியுணர்வு என்பது ஒரு சமூகப் பண்பாடு என்பதற்கு மேலாகக் கற்றுத் தரப்படவில்லை! பிறகு, எப்படி நாம் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருக்க முடியும் ? அது மிகவும் அதிகம்! அதனால்தான் இந்த நன்றியுணர்வு குறிப்பிட்ட மிகச் சிலராலேயே பின்பற்றப்படுகின்றன.

மிகச் புத்தமதம் மற்றும் சூஃபி போன்ற மதங்கள் மட்டுமே நன்றியுணர்வை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் மிகச் சிலராகவே இருந்தாலும், அவர்களது தரம் மிகவும் உயர்வாக இருக்கிறது.

பாருங்கள், பிரார்த்தனையில் ஒன்றும் தவறு கிடையாது; ஆனால் பிரார்த்தனையில் கேட்பதிலேயே சிக்கிக் கொண்டு விடுவதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. பிரார்த்தனை என்பது தியானத்திற்குள் - நன்றியுணர்வே பிரார்த்தனையாகவும், உங்கள்

உலகில் இரண்டே இரண்டு வகையான மதங்கள்தான் உண்டு; பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்ட மதம் மற்றும் நன்றியுணர்வை அடிப்படையாகக் கொண்ட மதம்.

இருப்புத் தன்மையே ஆனந்தமாகவும் ஆகி விடும் தியானத்திற்குள் - நுழையும் குதிபலகையாக உபயோகப்படுத்த வேண்டும்!

''உங்கள் நன்றியுணர்வைக் காட்டுவது ஒரு சமூகப் பழக்கமாக இருக்கலாம்; அது எவ்வாறு தியானமாக முடியும்?'', என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், உண்மையிலேயே நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும் பொழுது, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்வீர்கள். நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்து கொள்வீர்கள்.

நான் சொல்கிறேன் ... உங்களுக்குத் தேவையானவற்றை அளிப்பதற்கும், கவனித்துக் கொள்வதற்கும் நேரடிப் பொறுப் பிலுள்ளவர்களை மட்டும்தான் நீங்கள் அறிவீர்கள். ஆனால் இந்த எல்லாச் சமயங்களிலும், உங்களுக்கு உதவி புரியும், பாதுகாப்பளிக்கும், கவனித்துக் கொள்ளும் பிரபஞ்ச இருப்புத் கன்மையைப் பற்றியோ, பிரபஞ்ச சக்தியைப் பற்றியோ நீங்கள் அறியக் கூட மாட்டீர்கள்.

ஆனால், நீங்கள் எப்பொழுதுமே, உங்களுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அது உங்கள் தகுதியாலோ அல்லது எதேச்சையாக நிகழ்ந்ததென்றோதான் நினைக்கிறீர்கள். எப்போது உங்களை கவனித்துக் கொள்ளும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கண்ணுக்குத் தெரியாத கைகளை, நீங்கள் காணவும் உணரவும் ஆரம்பித்த பிறகே, பிரபஞ்ச இருப்புத்தன்மை நீங்கள் இங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அப்பொழுதுதான் நீங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து உங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்ட மதம் என்பது, கடவுளிடம் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பது.

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்ற உண்மை, பிரபஞ்ச இருப்புத்தன்மை நீங்கள் இங்கிருப்பதை விரும்புகிறது என்பதையும், அது உங்களை கவனித்துக் கொள்கிறது என்பதையும் காண்பிக்கப் போதுமானதாகும். இதை நீங்கள் புரிந்து கொள்ளாத பொழுதுதான், மந்தமாகவும், மனச் சோர்வுடனும், எப்பொழுதும் கேட்டுக் கொண்டும், ஏதோ நீங்கள் மட்டும்தான் இந்த உலகில் ஏதுமற்றவர் போலவும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

இங்கு சொல்லப்பட்டவற்றை நீங்கள், உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து கவனமாகக் கேட்டீர்களானால், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அற்புதமான கொடுக்கும் வழிகளுக்கு உங்களை இசைவாக வைத்துக் கொள்ளவும், அதனை நுட்பமாக உணரும் திறனையும் பெறுவீர்கள்!

நம்மில் பலரும் கடவுளிடம் ஒரு பயத்துடனேயே பிரார்த்தனை செய்கிறோம். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம், அவர்கள் சில விஷயங்களைச் செய்யவில்லையென்றால் கடவுள் அவர்கள் மீது கோபமடைவார் என்று சொல்வதைக் கண்டிருக்கலாம். இதுபோன்ற கடவுளைப் பற்றிய ஒரு தவறான கருத்து வேரூன்றக் காரணமாகி விடுகின்றன. இவையெல்லாம்தான் குழந்தைகளுக்கு, அவர்களின் இளம் பிராயத்திலேயே, நாம் கொடுக்கும் நெறிப்படுத்தல்கள். இதனால் அவர்கள் வளரும் பொழுது கடுமையான குழுப்பத்தை எதிர்கொள்கிறார்கள். பிரபஞ்ச இருப்புக் கன்மையை அன்புடனும் நன்றியுணர்வுடனும் அரவணைத்துக் கொள்வதற்குப் பதிலாக, மரியாதையுடனும் பயத்துடனும் அதிலிருந்து விலகி நிற்கிறார்கள்.

பயத்துடன் எங்கேயும் எடுத்துச் செல்லாது; அது உங்களுள் உருமாற்றம் நிகழ்வதற்கான வழியமைக்காது. உங்களுக்குக் கேட்பதன் மீதுள்ள

நன்றியுணர்வு மதமானது, கடவுளை அல்லது பிரபஞ்ச இருப்புத்தன்மையை நோக்கிய, உள்ளிருந்து பொங்கும் தாங்க முடியாத நன்றியுணர்வை அடிப்படையாகக் கொண்டது.

விசுவாசத்தினால் நீங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறக் கூடும்; ஆனால், இருப்புத் தன்மை நிலையிலோ நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நகர மாட்டீர்கள். வாழ்க்கையின் நோக்கம் அல்லது உண்மையான நிறைவு ஒருபோதும் பொருளாதார ரீதியாக நிகழ முடியாது; அது இருப்புத் தன்மை நிலையில்தான் நிகழ முடியும். வெற்றியினால் வரும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களால் நான் சொல்வதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். வெற்றியினால் வரும் மனச்சோர்வைப் பற்றி, இதற்கு முந்தைய அமர்வுகளில், நாம் நிறையப் பேசி யிருக்கிறோம்.

தெய்வீகம் அல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய, ஆழமான அன்பினாலும் நன்றியுணர்வினாலும், மதமானது பின்பற்றப்பட வேண்டும். சமூகம் பயத்தின் பெயரால் கடவுளை வழிபடக் கற்றுக் கொடுப்பினும், நான் சொல்கிறேன், ஒரு போதும் அதைச் செய்யாதீர்கள். எப்பொழுதும் தெய்வீகத்தை நோக்கிய அன்புடனும் நன்றியுணர்வுடனுமே பிரார்த்தனை செய்யுங்கள்.

ஒரு சின்ன கதை ....

ஜுன்னாயத் என்னும் ஒரு சூஃபி குரு, தினமும் ஐந்து முறை கடவுளுக்குத் தன் நன்றியுணர்வைச் செலுத்துவார். ஒரு சமயம், அவரும் அவரது சீடர்களும், சூஃபி மதம் ஒரு மதமாக ஏற்றுக் கொள்ளப்படாத சில கிராமங்கள் வழியாக அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். முதல் கிராமத்தில், மக்கள் அவர்களைப் பிச்சை எடுப்பதற்காகப் பழித்து, மிகவும் சொற்பமான அளவு உணவையே அவர்களை நோக்கி வீசி எறிந்தனர். இரண்டாவது நாள், மக்கள் அவர்களுக்கு எந்தவிதமான பிச்சையும் இட மறுத்தனர். மூன்றாவது நாள், அவர்கள் கடந்து சென்ற கிராம மக்கள் மிகவும் விரோதத்துடன் நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும்பொழுது, உங்கள் வாழ்க்கையின் மதிப்பைப் பரிந்து கொள்வீர்கள்.

அவர்களைக் கம்புகளையும் கற்களையும் கொண்டு விரட்டியடித்தனர். அன்று இரவும் வழக்கம் போலவே, ஜுன்னாயக் முழந்தாளிட்டு, கடவுளுக்குத் தன் நன்றியணர்வைச் சமாப்பித்துக் கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இதை அவர்களால் தாங்க முடியவில்லை. ஜுன்னாயத் ஏன் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவர்களால் பரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் மிகவும் ஆவேசத்தில் இருந்தனர். "குருவே! மூன்று நாட்களாக நாம் உணவில்லாமல் இருந்து கொண்டிருக்கிறோம். இன்று நம்மை அந்த கிராமத்தை விட்டு நாயைப் போலத் துரத்தியடித்தனர்! அதற்காகத்தான் நீங்கள் உங்கள் நன்றியுணர்வைச் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறீர்களா ?' - என்று அவர்கள் கூக்குரலிட்டனர். ஜுன்னாயத் அவர்களைப் பார்த்துச் செ ான்னார், "நீங்கள் மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் முப்பது வருடங் களாக உங்களுக்கு உணவு கொடுத்ததற்காகக் கடவுளுக்கு என்றைக்காவது நன்றி சொல்லியிருக்கிறீர்களா? இன்னொரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்; என்னுடைய நன்றியுணர்வானது எனக்கு எதுவும் கிடைத்ததற்காகவோ அல்லது கிடைக்காமல் போனதற்காகவோ அல்ல. அது வெறுமனே என்னுடைய இருப்புத் தன்மையின் ஆழமான மகிழ்ச்சியின் மற்றும் அன்பின் வெளிப்பாடு; அது தேர்ந் தெடுத்தலற்ற பிரார்த்தனையின் வெளிப்பாடு, அவ்வளவே''.

உங்களால் உங்களுக்குள் தாங்க முடியாத நன்றியுணர் வுடன் வாழ முடிந்தால், வேறெதுவும் தேவைப்படாத ஒரு வெற்றிடத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் தியானத்திற்குள் விழுந்து விட்டீர்கள் என்று பொருள். பிறகு நீங்கள் வேறு எதைப் பற்றியும் கவலைப்படமாட்டீர்கள். நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு, உங்கள் மனம் இனியும் ஒரு தடையாக இருக்காது. உங்கள் மனம் மறைந்து விட்டது. இனியும் உங்கள் மனம் உள்ளே வர முடியாது; ஏனெனில் நீங்கள் இதயத்தில் இருந்து தளும்பிக் கொண்டிருக் கிறீர்கள். உங்கள் மனதிற்கு இடமேயில்லை. உங்கள் மனதிற்கு இடமில்லாதபோது, அதிருப்தி எங்கேயிருந்து வரும் ? அதிருப்தி இதயத்தில் இருந்து வர முடியாது. அது முழுவதும் மனதிலிருந்தே உற்பத்தியாகும் ஒரு பொருள்.

எப்பொழுதும் உங்களுக்கும், பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் இடையே நிற்பது உங்கள் மனம்தான். அது உங்களை, பிரபஞ்ச இருப்புத் தன்மையைக் கேட்பதிலிருந்தும், பார்ப்பதிலிருந்தும், உணர்வதிலிருந்தும், அதனுடன் உணர்ச்சி பூர்வமாய் இருப்பதிலிருந்தும் தடுக்கிறது. ஒருமுறை உங்கள் மனதைக் கடந்து சென்று பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அழகைக் கண்டு விட்டீர்களானால், நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகி விடும்; ஆனந்தம் உங்கள் இருப்புத் தன்மை யாகி விடும்! பிறகு நீங்கள் விடுதலையையும், நிரந்தரமான மகிழ்ச்சியையும் அனுபவிப்பீர்கள்!

உங்கள் மனதின் சலிப்படைய வைக்கும் தர்க்கத்தை விட்டு விட்டீர்களானால், தேர்ந்தெடுத்தல் இல்லாமலும், முயற்சியின்றி யும், மகிழ்ச்சியாகவும், நீரோட்டத்தின் பிரவாகத்துடன், நீங்கள் ஒரு நதியைப் போலப் பாய்ந்து செல்வீர்கள். பிறகு நீங்கள் உங்கள் பாத்திரத்தைச் சரியாக நடித்து, ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். பிறகுதான் நீங்கள், நீங்களும் ஒரு அற்புதமான நாடகத்தின் ஒரு பகுதிதான் என்பதையும், நீங்கள் எந்த அளவிற்கு இதனை நடத்துபவர்க்கு உணர்வு பூர்வமாக இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் பாத்திரத்தை நன்றாகவும், மகிழ்ச்சியுடன் அபைவித்தும் செய்ய முடியும் என்பதையும் பரிந்து கொள்வீர்கள்!

உங்களை கவனித்துக் கொள்ளும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் கண்ணுக்குத் தெரியாத கைகளை நீங்கள் உணர ஆரம்பிக்க வேண்டும்.

நீங்கள் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும் பொழுது, முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது; மேலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நீரோட்டத்துடன் செல்லும் பொழுது, எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ள வேண்டிய தில்லை; களைப்படைய மாட்டீர்கள்; ஏமாற்றப்பட்டு விட்டதாக எண்ண மாட்டீர்கள் ; இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருப்பீர்கள்! பிறகு உங்களுக்கு எல்லாமே அழகாகத்தான் தோன்றும்.

ஒரு சின்ன கதை ....

நித்ய காந்தி ஒரு நீண்ட இரயில் பயணத்தில் இருந்தாள். அவள், இரசிப்பதில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியிடம் காந்தி, பயணத்தில் சிறந்த பகுதி, அற்புதமான இயற்கைக் காட்சிகளை இரசிப்பதுதான் என்று சொன்னாள். அந்தப் பெண்மணி, தலையாட்டிவிட்டு, அங்கு சிறிது நேரம் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்து விட்டு, எழுந்து சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து, மீண்டும் வந்து, சிறிது நேரம் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்து விட்டு, எழுந்து சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து, மீண்டும் திரும்பி வந்து, காந்தியின் பின்னால் அமர்ந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, காந்தியின் முதுகில் தட்டி, ''என்னை மன்னிக்கவும், அனால் நீங்கள் நான் பார்க்காதது எதையாவது பார்க்கிறீர்களா?'' என்று கேட்டாள்.

(சிரிப்பு)

நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும்பொழுது, உங்கள் வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்து கொள்வீர்கள்.

அதனுடன் எவ்வாறு ஒத்திசைந்து செல்வது என்பது தெரியாத போது, நாம் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மை யின் அழகைத் தவறவிட்டு விடுகிறோம்! நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குக் காரணங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். கொண்டாடுவதற்குக் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். எதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறோம் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறோம். இதனால் நமது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை முழுவதுமாக இழந்து விட்டோம்.

நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் நோக்கிய நன்றியுணர்வுடன் இருப்பதற்கு பதில், எப்பொழுதும் கேட்டுக் கொண்டும், கேள்வி எழுப்பிக் கொண்டும் இருக்கிறோம். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை, நாம் திரும்பவும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நன்றியுணர்வினால் இந்த இழந்த தொடர்பை மீண்டும் கொண்டு வர முடியும். அதனால் மீண்டும் உங்கள் வேர்களைக் கண்டுபிடிக்க உதவ முடியும். அதனால் நீங்கள் இயற்கையுடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமிக்க உதவ முடியும்.

ஒரு சின்ன கதை ....

ஒரு நாள் ஒருவன் கோயிலில் மிகவும் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான் ... ''ஓ கடவுளே! எனக்கு தயவு செய்து ஒரு 15 நாட்களுக்கு 1000 ரூபாய் கொடு. நான் அது கிடைக்குமா என்று மிகவும் அவநம்பிக்கையில் இருக்கிறேன். எனக்கு முதல் சம்பளக் காசோலை வந்ததும், இன்றிலிருந்து சரியாகப் 16-ம் நாள் அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுகிறேன்''. அந்தக் கோயில் புரோகிதா் அவனது பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவனது நிலையைக் கண்டு இரங்கினார். அவரிடம் 500 ரூபாய்

பயக்குடன் பின்பற்றப்படும் மகும் உங்களை எங்கேயும் எடுத்துச் செல்லாது. அது உங்களுள் உருமாற்றம் நிகழ வழியமைக்காது.

இருந்தது. அதை ஒரு உறையில் போட்டு, கடவுள் அந்தப் பணத்தை அவனிடம் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லிக் கொடுத்தார். அவன் மிகுந்த சந்தோஷமடைந் தான். அந்த உறையை வீட்டுக்குச் செ ன்று பிரித்துப் பார்த்தான். அதை எண்ணிப் பார்த்த 500 ரூபாய் தான் இருந்தது; 1000 ரூபாய் இல்லை. அவன் அடுத்த நாள் கோயிலுக்குச் சென்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்தான், "கடவுளே, அடுத்த முறை, தயவு செய்து பணத்தை புரோகிதர் மூலமாக அணுப்பாதே; நேரடியாக அனுப்பி விடு. அவர் அதில் பாதியை எடுத்துக் கொண்டு விட்டார்''.

(பலத்த சிரிப்பு)

நாம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்'; அதனால் அதிருப்தியுடனேயே இருக் கிறோம் !

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ... வாழ்க்கையே உங்களுக்கு ஒரு பரிசுதான்! அதைப் பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைத்தீர்களா? உங்களில் யாராவது இந்த வாழ்க் கையை கடினமாக உழைத்து சம்பாதித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? முடியாது! அதனால்தான் நாம் அதன் மதிப்பை உணர்வதில்லை! நாம் வெறுமனே எல்லாவற்றையும் சாதாரண மாக எடுத்துக் கொள்கிறோம் - நமது உடல், நமது தினசரி உணவு, இயற்கையின் அழகு - எல்லாவற்றையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறோம். நாம் கடவுளிடம் வைர மோதிரங்களைக் கேட்கிறோம் - ஆனால், அவற்றை அணிவதற்கான விரல்களைக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்கிறோமா ? காலப் போக்கில், வைரமோதிரமும் நம்மிடம் அதன் மதிப்பை இழந்து விடும்!

We take everything for granted1

ஒரு நாள், பூகோள ஆசிரியை, பள்ளியில் அவளது மாணவர்களிடம், ஏழு உலக அதிசயங்களை எழுதுமாறு சொன்னாள். எல்லாக் குழந்தைகளும் பெரிய அதிசயங்களான சீனப்பெருஞ் சுவர், பிரமிடுகள், ஈஃபில் கோபுரம் முதலிய வற்றை வரிசையாக எழுதினர். ஒரே ஒரு குழந்தை மட்டும், தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு, எதையோ தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தது. ஆசிரியை அவளிடம் வர்து கேட்டாள், "என்ன ஆயிற்று, நீ கற்றதை மறந்துவிட்டாயா?". அந்த சின்னப் பெண் சொன்னாள், "இல்லை. எனக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. அவை ஏழுக்கும் மேல் இருக்கிறது". ஆச்சரியமடைந்த ஆசிரியை அவளது தாளை எடுத்துப் படித்தாள். பிறகு அவள் அந்த வகுப்பு முழுவதும் கேட்பதற்காக அதைச் சத்தமாகப் படித்தாள், "உலகின் ஏழு அதிசயங்கள்: என்னால் பார்க்க முடியும், என்னால் தொட்டு உணர முடியும், என்னால் முகார்ந்து உணர முடியும், என்னால் கேட்க முடியும், என்னால் சுவைக்க முடியும், என்னால் சிரிக்க முடியும், என்னால் நேசிக்க முடியும் ... '' கிடீரென்று வகுப்பு ஒரு ஊடுருவிச் செல்லும் அமைதியால் நிரப்பியது.

இந்தச் சின்ன விஷயங்கள் மறக்கப்பட்டுவிட்டன. ஏனெனில் நாம் அவற்றை சிறிய விஷயங்கள் என்று எண்ணு கிரோம். எளிதாகக் கிடைக்கும் பொழுது எல்லா விஷயங்களுமே நமக்கு சிறிய விஷயங்களாகி விடுகின்றன. இந்த உலகில் பல இலட்சக் கணக்கான மக்களால் பார்க்க முடியாது, கேட்க முடியாது, பேச முடியாது, சுவைக்க முடியாது. நாம் இவற்றைப் பற்றி ஒரு போதும் எண்ணுவதேயில்லை. நாம் எப்பொழுதும் அடுத்தது என்னவென்றும், இன்றும் அதிகமாக என்ன கிடைக்குமென்றுமே எண்ணிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவே.

நீங்கள் மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததைப் பற்றிப் பேசுகிறீர்கள் ; ஆனால் முப்பது வருடங்களாக உங்களுக்கு உணவு கொடுத்ததற்காகக் கடவுளுக்கு என்றைக்காவது நன்றி சொல்லியிருக்கிறீர்களா ?

ஒரு சின்ன கதை....

ஷேக் கோவிந்தா அவரது கிராமத்தை நோக்கி நெடுஞ் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அவரது கார் ஒரு குலுக்கலுடன் நின்று விட்டது. பீதியடைந்த அவர், எரிபொருள் தீர்ந்து விட்டிருந்ததைக் கண்டார். சில கிலோமீட்டர்கள் வேண்டுதலுடனும், வியர்வையுட னும், மேல் மூச்சும், கீழ் மூச்சும் வாங்கிக் கொண்டு நடந்து சென்று இறுதியாக ஒரு நகரத்தை அடைந்தார். ஒரு எரிவாயு நிலையத்தைக் கண்டுபிடித்து, தன்னிடம் காசில்லாததையும், ஆயினும் எப்படியாவது தனது கிராமத்திற்குச் செல்ல எரிபொருள் தேவையென்றும் தன் நிலையை விளக்கிக் கூறினார். அனால் அவர்கள் அவரைத் திருப்பியனுப்பி விட்டனர். பிறகு அவர் அதற்கு எதிரிலேயே, சாலையின் மறுபுறத்தில் இன்னொரு எரிவாயு நிலையத்தைப் பார்த்து, தனது சூழ்நிலையை விளக்க உள்ளே நுழைந்தார். நிலைய மேலாளர் அவர் மீது இரக்கப்பட்டு, இலவசமாகவே சில லிட்டர் கொடுப்பதற்குச் சம்மதித்தார். கோவிந்தா கேட்டார், "அதற்கு பதிலாகப் பணமாகத் தர முடியுமா? சாலையின் மறுபறத்தில் இருக்கும் நிலையத்தில் மலிவாக இருக்கிறது!''.

எகுவாயிடைம் நமக்குக் க் கிடைக்கும் வரையில், அது மிகவும் விலைமதிப்பற்றதாகத் தெரிகிறது; நாமும் ஒரு பிரார்த்தனையான மனநிலையில் இருக்கிறோம்; அது கிடைத்த கணமே, தன் மதிப்பை இழந்து விடுகிறது; நாமும் அடுத்ததற்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறோம் !

நாம் எப்பொழுதுமே, 'அடுத்தது என்ன' என்ன' எனும் மனோபாவத்திலேயே வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

என்னுடைய நன்றியுணர்வானது எனக்கு எதுவும் கிடைத்ததற்காகவோ அல்லது கிடைக்காமல் போனதற்காகவோ அல்ல! அது வெறுமனே என்னுடைய இருப்புத் தன்மையின் ஆழமான மகிழ்ச்சியின் மற்றும் அன்பின் வெளிப்பாடு!

நன்றியுணர்வுடன் அதனால்தான் இருக்க முடிவதில்லை.

உதாரணத்திற்கு, நாம் ஒரு கடைக்குச் சென்று, சில புதிய அம்சங்களுடன் ஒரு புதுவிதமான அலாரம் கடிகாரத்தைப் பார்த்தோமானால், உடனே நாம் அந்தப் புதிய அம்சங்களுடன் நமது வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணு கிறோம். அந்தப் புதிய அம்சங்கள் நமக்குக் கிடைக்குமானால், நமது வாழ்க்கையின் முழுத் தன்மையுமே மாறி விடும் என்று எண்ணுகிறோம். அதனால் அதை வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் செ ல்கிறோம்.

சில நாட்கள் கழித்து, என்ன நடக்கிறது? அந்த விலைமதிப்பற்ற கடிகாரத்தைத் துடைத்து வைப்பதற்குக் கூட நமக்கு நேரம் இல்லை! பாவப்பட்ட அந்த கடிகாரமோ எங்கோ ஒரு மூலையில் புழுதி படிந்து கிடக்கும்; இன்னொரு பொருளை வாங்கிவந்து வீட்டின் அடைசலுக்குக் காரணமான உங்களுக்கும் திட்டு கிடைக்கும்! நீங்களும் வேறொரு சாதனத்தை நோக்கி, வேறொரு ஆசையை நோக்கி நகர்ந்து விடுவீர்கள்!

நாம் எப்பொழுதுமே, நம்மிடம் இல்லாத எதுவுமே ஒரு மலையளவு பெரிதாக இருப்பதாகவும், அது இல்லாவிடில் நம்மால் உயிர் வாழ முடியாதென்றும் எண்ணுகிறோம்; ஆனால், உண்மையிலேயே அது கிடைத்து விடும் பொழுது, எவ்வாறோ அது மிகவும் சிறியதான ஒன்றாகி விடுகிறது. இவ்வாறுதான் நம் வாழ்வில், மிகவும் அற்புதமான மனோபாவமான நன்றியுணர்வைத் தவற விட்டு விடுகிறோம். அடுத்தது என்ன என்பதன் பின்னாலேயே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.

பகவான் ரமண மஹரிஷி இறைவனிடம் சொல்கிறார்: "நான் மிகவும் அறிவாளி. நான் என்னிடம் இருப்பதை எல்லாம்

உங்களால் உங்களுக்குள் தாங்க முடியாக நன்றியுணர்வுடன் வாழ முடிந்தால், வேறெதுவும் தேவைப்படாத ஒரு வெற்றிடத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள்! நீங்கள் தியானத்திற்குள் விழுந்து விட்டீர்கள்! - என் துன்பமயமான வாழ்வையெல்லாம், உன்னிடம் கொடுத்து விட்டேன். நீயோ, உன்கருணையினால், அதற்கு பதிலாக எனக்கு ஆனந்தமயமான உன் இருப்பைக் கொடுத்திருக்கிறாய்!''.

இந்த அறிவுபூர்வமான பரிமாற்றத்தினால், கடவுளை விட தானே மிகவும் அறிவாளி என்று கடவுளிடம் பகவான் சொல்கிறார்! பகவானது பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய நன்றியுணர்வு இத்தகைய மரியாதைக்குரியது ! அது படிக்கும் பொழுதே உங்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றிய இன்னொரு சின்ன கதை ...

சைதன்ய மஹாப்பிரபுவின் ஊரிலிருந்து வந்த யாரைக் கண்டாலும், இராமகிருஷ்ண பரமஹம்ஸர், அவர்களது காலில் விழுந்து விடுவார் என்று கூறப்படுகிறது. சைதன்ய மஹாப்ரபு இந்தியாவின் ஒரு தலைசிறந்த ஞானியும் குருவும் ஆவார்.

அவர் என் சாகாரணமான மனிதர்களின் கால்களில் விமுகிறார் என்று மக்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் சொல்வார், '' அவர்கள் சாதாரணமானவர்களா அல்லது அசாதாரணமானவர்களா என்பது ஒரு பொருட்டல்ல; அவர்கள் சைதன்யா் ஒரு முக்கியமான சங்கீர்க்கனத்தைச் செய்த பானிகாட்டியிலிருந்து வருகிறார்கள். அவர்கள் அங்கிருந்து வருகிறார்கள் என்பதைக் கேட்டவுடனேயே, அந்தப் பெயரே என்னுள் சைதன்யரைப் பற்றிய நினைவுகளை எழுப்பப் போது மானதாக இருக்கிறது. அவர்கள் என் மனதிற்குள் சைதன்யரைக் கொண்டு வந்ததற்காக, அவர்கள் காலில் விழுவதன் மூலம் அவர்களுக்கு என் நன்றியுணர்வைச் செலுத்துகிறேன். அவர் களைச் சந்தித்திருக்காவிட்டால், அந்த க்ஷணங்களில்,

நாம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். அதனால் அதிருப்தியுடனேயே இருக்கிறோம்.

வேறெதையாயினும் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை எண்ணிக் கொண்டிருந்திருப்பேன். அதனால் அவர்கள் எனக்குள் தெய்வீகமான நினைவுகளையும், கருத்துகளையும் தூண்டிவிடும் கருவிகளாக இருக்கிறார்கள்' - இதுதான் இராம கிருஷ்ணரின் பதில்!

சைகள்யரைப் பற்றிய எண்ணங்களைக் குகைக் கொண்டு வருவத னால், இராமகிருஷ்ணா் அவா்களது கால்களில் விழுந்தாராம் ! இதை இன்று கற்பனை செய்து பார்க்க முடியுமா? அவர்கள் செய்வது எதுவாக இருப்பினும், எல்லோரையும், எல்லாவற்றையும் நன்றியணர்வுடன் நோக்க வேண்டும் என்று இதைத்தான் நான் சொல்கிறேன். அவர்கள் அனைவருமே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதிகள்தான்; அவர்கள் அனைவருமே, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஸ்ருதிக்கேற்ப, ஏதோ ஒரு ஒருமித்த நிகழ்வில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். உங்களால் இந்த நிகழ்வை நட்பமாக உணரமுடிந்தால், விஷயங்கள் நிகழும் விதத்திற்காக, உங்களால் நன்றியுணாவுடன் இருக்க முடியும்.

நாம் இந்த நன்றியுணர்வை தலைசிறந்த குருமார்களிடம் இருந்து உட்கிரஹித்துக் கொள்ள வெண்டும். இதுமட்டுமே உட்கிரஹித்துக் யனைத்தும் தானாகவே கவனித்துக் கொள்ளப்படும்; ஏனெனில், இதை உட்கிரஹித்துக் கொள்ளும் பொமுது, எதேச்சையாக ஒன்றாக நிகழும் ஆற்றல், உங்களுக்காகத் தானே விஷயங்களை நிகழக் செய்யும்; பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே உங்கள் மீது பொழியும்.

புரிந்து கொள்ளுங்கள். அசையும் நன்றியுணர்வும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது. உங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஆசைகள் வருமானால், நீங்கள் நன்றியணர்வுடன் வாழவில்லை என்று பொருள். நீங்கள் நன்றியுணர்வுடன்

வாம்க்கையே உங்களுக்கு ஒரு பரிசுதான். அதைப் பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைத்தீர்களா ? வாழும் பொழுது, உங்களுக்கு ஒருபோதும் எந்தவிதமான ஆசை களும் வர முடியாது. நீங்கள் நன்றியுணர் வுடன் வாழும் பொழுது உங்களுக்கு எது கொடுக்கப்படினும், அது வெறுமனே அந்தக் கணத்திற்குத் தேவையானதை நிறைவு செய்வதாக இருக்கும், அவ்வளவே. அதுவும் நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடும்; அதனால் கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை !

நீங்கள் எப்பொழுதும் எல்லா விஷயங்களும் சரியாகவே இருக்கும். இல்லாவிடில், அசிங்கமாகவுமே இருக்கும். மனிதனின் பேராசை எத்தகைய தென்றால், அவனை இந்த பூமிக்கே அரசனாக்கினாலும், அவன் ''இந்தக் கடல்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை; இந்த சூரியனும் விண்மீன்களும் என் ஆணைக்குக் கட்டுப்பட வில்லை!'' என்று எண்ணுவான்.

சிவபுராணத்தில், சிவனும் பிரம்ம கபாலமும் என்றொரு கதை வருகிறது. பிரம்ம கபாலம் என்பது, சிவன் ஆண்டிக் கோலத்தில் அலைந்து திரியும்பொழுது, பிச்சைப் பாத்திரமாக உபயோகப்படுத்தும் ஒரு மண்டையோடு. பிரம்ம கபாலத்தைப் பற்றிய ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், மக்கள் அதில் என்ன பிச்சையிட்டாலும், அது உடனே விமுங்கி விடும்! சிவன் அதை நிரப்ப எவ்வளவு கடின முயற்சி செய்தும், அந்தப் பாத்திரம் எப்பொழுதும் காலியாகவே இருக்கும்! உண்மையில், இந்த பிரம்ம கபாலம் நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. அது நமது அஹங்காரத்தைத் தவிர வேறெதுவுமில்லை; அணங்காரமே எல்லா வற்றையும் விழுங்கி இன்னும் நிறைய வேண்டும் என்று கேட்கிறது! இந்த அஹங்காரம்தான் நம் மீது பொழியப்படுவதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது.

எப்பொழுதும் உங்களுக்கும் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கும் இடையில் நிற்பது உங்கள் மனம்தான்.

உங்களுடைய வாழ்க்கையை, கேட்பதன் அடிப்படையில் அமைத்துக் கொள்வதா அல்லது நன்றியுணா்வின் அடிப்படையில் அமைத்துக் கொள்வதா என்பது முழுவதும் உங்களைப் பொறுத்தது. நன்றியுணர்வு என்பது வெளியிலிருந்து உங்கள் மீது திணிக்கக் கூடிய ஏதோ ஒரு விதமான நல்லொழுக்கம் அல்ல. அது பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பற்றியும் அதன் வழிகளைப் பற்றியும் ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலில் இருந்து, உள்ளிருந்து மலர வேண்டிய ஒரு மனோபாவம். உண்மையான நன்றியுணர்வு நிகழும் பொழுது, அது வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையே உருமாற்றி, உங்களுக்கு கொண்டுவரக் கூடியது.

ஒரு முறை ரமண மகரிஷியிடம் ஒருவர் சென்று, ''பகவான், எனக்கு அமைதி வேண்டும்!' என்றாராம். ரமணர் சொன்னாராம், ' நீங்கள் சொன்ன வாக்கியத்தில் இருந்து, என்ற வார்த்தையையும், 'வேண்டும்' என்ற வார்த்தையையும் அகற்றி விடுங்கள் - பிறகு அங்கே இருப்பது அமைதிதான்!''.

நிஐத்துடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், உயிர்ப்புள்ள தொடர்பு வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, உங்கள் நெறிப்படுத்தல்களையும், அஹங்காரத்தையும் விட்டுவிட்டு, உங்களைச் சுற்றி நீங்களே எழுப்பிக் கொண்டுள்ள சுவரை உடைத்துத் தள்ளிவிட வேண்டியது தான் ; அப்பொழுதுதான் உங்களால் அந்தத் தொடர்பு எப்பொழுதுமே இருக்கிறது என்பதைக் காணமுடியும்! அதற்காக நீங்கள் விசேஷமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை; நீங்கள் எது இல்லையோ அதை வெறுமனே விட்டுவிட வேண்டும், அவ்வளவு தான்!

உங்கள் மனதின் சலிப்படைய வைக்கும் தாக்கத்தை விட்டு விட்டீர்களானால். தேர்ந்தெடுத்தல் இல்லாமலும், முயற்சியின்றியும், மகிழ்ச்சியாகவும், நீரோட்டத்தின் பிரவாகத்துடன் ஒரு நதிபோலப் பாய்ந்து செல்வீர்கள்.

நீங்கள் தன்மையுடனும், நன்றியுணா்வால் நிரம்பியும் இருப்பீர் களானால், உங்கள் வழியாகப் பாய்ந்து செல்லும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மாபெரும் சக்தியை உங்களால் எப்பொழுதும் உணர முடியும்; நீங்கள் எப்பொழுதும் ஒரு மன நிறைவான உணர்வுடன் இருப்பீர்கள்; அதனால் எதுவும் லாபம் கிடைக்கும் என்பதனால் அல்ல, அதுவே உங்கள் இருப்புத் தன்மையாய் ஆகி விடுவதால்! இந்த மன நிறைவே, அவன் அறியாவிடினும், ஒவ்வொரு மனிதனும் தேடும் இறுதியான மனநிறைவாகும். அவன் மீண்டும் மீண்டும் அதை லோகாயதமான விஷயங்களில் தேடித் தேடி, தவறவிட்டுக் கொண்டே இருக்கிறான்.

நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறது; நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம், அதன் மீது விசு வாசம் வைத்து, நன்றியுணர்வுடன் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்க வேண்டியதே. பிறகு, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கும்.

ஆனால், நம்மிடம் விசுவாசம் இல்லை. ஒரு சின்ன கதை....

கடவுளிடம் எந்தவிதமான விசுவாசமும் இல்லாத ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் திடீரென்று மலையுச்சியில் இருந்து விழுந்து விட்டான்; வெறுமனே ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் திகிலால் நிரம்பியிருந்தான். அவனுக்கு திடீரென்று மக்கள் எப்பொழுதும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. கடவுளை ஏன் உதவிக்கு அழைக்க முயற்சி செய்யக் கூடாது என்று எண்ணினான். "ஓ கடவுளே! நான் ஒரு போதும் உன்னிடம்

நீங்கள் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும்பொழுது, முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது, மேலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

விசுவாசம் வைத்ததில்லை; நீ உண்மையிலேயே இருக்கிறாயா ? உன்னால் என்னைக் காப்பாற்ற முடியுமா?' - என்று கத்தினான். கடவுளின் குரல் இடிபோல முழங்கியது, "கண்டிப்பாக மகனே, நீ பிடித்துக் கொண்டிருக்கும் வேரைச் சற்று விட்டு விடு; நான் உன்னைக் கீழேயிருந்து தாங்கிக் கொள்கிறேன்''. அவன் மீண்டும் கத்தினான், ''எனக்கு உதவ வேறு யாராவது இருக்கிறார்களா?''.

(சிரிப்பு!)

நாம் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மை மீது மனப் பூர்வமான நம்பிக்கை வைக்கத் தயாரில்லை! உங்கள் இருப்புத் தன்மையில் பிரபஞ்சத்தின் மீது மனப்பூர்வமாக நம்பிக்கை வைக்கும் தன்மையே, உங்களை இந்தப் பூமியில் கடவுளைப் போல வாழ வைக்கும்! உங்கள் சொந்த அறியாமையினாலும் அஹங்காரத்தினாலும் இந்த அற்புதமான வாய்ப்பைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களால் விழிப்புடன், இந்தப் பிரபஞ்ச சக்தியை நோக்கிய ஒரு தொடர்ந்த நன்றியுணர்வில் இருக்க முடியு மானால், உங்களை அதன் மடியில் வைத்துப் பாதுகாப்பதை உணர முடியும். ஒரு தாய் தன் குழந்தைக்குச் செய்வது போல, நம்மை இந்த சக்தி, தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவதைக் காணலாம். நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிடினும் இதுதான் உண்மை.

ஒரு மனிதன், அவனும் கடவுளும், இந்த வாழ்க்கைப் பயணத்தில், ஒரு கடற்கரையில் நடந்து செல்வதாகக் கனவு கண்டான். அவன் கடவுளிடம் சொன்னான், ''ஓ பிரபுவே! நாமிருவரும் கடற்கரை மணலில் நடந்து செல்வதாகக் கனவு கண்டேன். மணலில் நாம் கடந்து வந்த பாதையின் அடிச்சுவடுகளைப் பார்க்கும் பொழுது,

நீரோட்டத்துடன் செல்லும்பொழுது, எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ள வேண்டியதில்லை : மேலும் களைப்படைய மாட்டீர்கள்; இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருப்பீர்கள்.

வாழ்க்கையின் மிகவும் சோதனையான கால கட்டங்களில், நான் ஆழமான பிரச்சினை களில் இருந்தபோதெல்லாம், ஒரு வரிசைக் காலடிகளை மட்டும் தான் காண்கிறேன். மற்றதைக் காணவில்லை. அந்த சமயங்களில் எவ்வாறு நீ என்னை விட்டு விலகிச் செல்லலாம் ?'. கடவுள் சொன்னார், ''மகனே! அந்தச் சமயங்களில் நான் உன்னைச் சுமந்து கொண்டு நடந்தேன்!''.

என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நான் அலைந்து திரிந்து கொண்டிருந்த நாட்களில், கிலோ மீட்டருக்கும் அதிகமானதூரம் பயணம் செய்திருக்கிறேன். அதில் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடந்திருக்கிறேன். வெறும் இரண்டே இரண்டு துண்டுத் துணிகளுடனும், உணவுக்காக ஒரு பிச்சைப் பாத்திரத்தையும் மட்டுமே வைத்துக் கொண்டு பயணம் செய்தேன். பணத்தைத் தொடுவதில்லையென்றும், அடுத்த வேளைக்காக உணவைச் சேமித்து வைப்பதில்லை என்றும் சபதம் செய்திருந்தேன்.

இது எவ்வாறு சாத்தியம் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் சொல்கிறேன் .... நான் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைத்து, என்னுடைய குறிக்கோளான ஞானமடைதலில் மட்டுமே மனதை ஒருமுகப் படுத்தியிருந்தேன். பிரபஞ்ச இருப்புத் தன்மை என்னை கவனித்துக் கொண்டது; அது இவ்வாறுதான் நிகழ்ந்தது.

பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது விசுவாசம் வையுங்கள் என்பது போன்ற விஷயங்களை நான் சொல்லும்போது, நீங்கள், இந்தக் கருத்தெல்லாம் அந்தக் கால நியாயமென்றும், மகான் களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நினைக்கலாம். கண்டிப் பாக அவ்வாறு அல்ல. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து,

உலகின் ஏழு அதிசயங்கள்: என்னால் பார்க்க முடியும், கேட்க முடியும், சுவைக்க முடியும், தொட்டு உணர முடியும், (முகர்ந்து உணரமுடியும், சிரிக்க முடியும், நேசிக்க முடியும் ...

இப்பொழுது உங்கள் முன்னால் அமர்ந்திருக்கும் எனக்கு நிகழ்ந்தவற்றில் இருந்து சொல்கிறேன்! மேலும் நான்தான் இந்தக் கூட்டத்திலேயே மிகவும் இளையவன் என்று எண்ணுகிறேன்! அதனால் நான் அந்த காலத்தைப் பற்றிய எதையும் பேசவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

வெறுமனே நன்றியுணர்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்; அற்புதங்கள் நிகழ்வதைக் கவனியுங்கள். நீங்கள் பொங்கும் இதயத்துடன், கேள்விகள் எதுவுமின்றி, பெற்றுக் கொள்ளத் தயாராயிருந்தால், பிரபஞ்ச இருப்புத் தன்மை கொடுக்கிறது.

ஒருவன் சொர்க்கத்திற்குச் செல்வதாகவும், அங்கு ஒரு தேவதை அவனுக்கு சொர்க்கத்தைச் சுற்றிக் காண்பிப்பதாகவும் கனவு கண்டான். அவர்கள் இருவரும் அருகருகே ஒன்றாகச் சென்றனர். முதலில் அவர்கள், நிறைய தேவதைகளால் நிரம்பி இருந்த ஒரு பெரிய தொழிற் கூடத்தினுள் நுழைந்தனர். அந்த அறையில் செயல்கள் சுறுசுறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. அந்த வழிகாட்டும் தேவதை, நின்று அவனுக்கு விளக்கியது. "இதுதான் பெற்றுக் கொள்ளும் பிரிவு. இங்குதான் பிரார்த்தனை மூலமாக கடவுளுக்கு வரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வகைவகையாகப் பிரிக்கப்படுகிறது''. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்; அந்த அறை மிகவும் சுறுசுறுப்பாயிருந்தது ; நிறையதேவதைகள்பல்வேறுவிதமான - நீளமான காகிதங்கள், வீணான காகிதங்கள் என்று பலவிதமாகவும் இருந்த - காகிதங்களிலும் இருந்து வந்த விண்ணப்பங்களை வகைப்படுத்திக் கொண்டிருந்தனர். அவை உலகெங்கிலும் உள்ள மக்களிடம் இருந்து, பல்வேறு மொழிகளிலும் இருந்தன.

அவர்கள் மேலே சென்று இரண்டாவது பிரிவிற்குள் நுழைந்தனர். இதுவும் நிறைய சுறுசுறுப்பான தேவதைகளாலும்,

இந்த உலகில் பல இலட்சக்கணக்கான மக்களால் பார்க்க முடியாது. கேட்க முடியாது, பேச முடியாது, சுவைக்க முடியாது ... நாம் இவற்றைப் பற்றி ஒரு போதும் எண்ணுவதேயில்லை.

நிறைய பாக்கெட்டுகளாலும், காகிதங்களாலும் நிரம்பியிருந்தது. வழிகாட்டும் தேவதை விளக்கியது, ''இதுதான் பார்சல் கட்டும் மற்றும் வழங்கும் பிரிவு; இங்கு தான் மக்கள் கேட்கும், அருளும் ஆகளும், பகுத்தாராயப்பட்டு, கீழே பூமியில் வழங்கப்படுகிறது''.

அவர்கள் மேலே நடந்து சென்று, அந்த நீளமான வராந்தாவின் இறுதியில் உள்ள, ஒரு சிறிய அறையில் கதவின் முன்பு நின்றனர். அவனுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, அங்கு ஒரே ஒரு தேவதை மட்டுமே, உட்கார்ந்து, மேசையின் மீது கவிழ்ந்தவாறு இருந்தது. அவன் தேவதையிடம் கேட்டான், "ஏன் இந்தப் பிரிவு மட்டும் இவ்வளவு அமைதியாக இருக்கிறது? இது என்ன பிரிவு?''. அதற்கு தேவதை அமைதியாகப் பதில் அளித்தது ''இதுதான் ஆசி களைப் பெற்றுக் கொண்ட தகவலைத் தெரிவிக் கும் பிரிவு. மக்கள், தாங்கள் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு விட்டதாகத் தெரிவிக்கும் தகவலைப் பகுத்தாராயும் பிரிவு இது''.

நாம் மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், நம்மில் எத்தனை போ, பெற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம்? நம்மில் எத்தனை போர், நமது பிரார்த்தனையில் கேட்பதுடன் நன்றியுணர்வையும் சேர்த்துக் கொள்கிறோம் ?

நீங்கள் உங்களுடன் இருக்கும் பொழுது, இந்தச் சின்னப் பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்: ஒரு இரண்டு மணி நேரத்திற்கு, உங்களுடைய எல்லாக் கவலை களையும் தேவை களையும் ஒதுக்கி வைத்து விட்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்களுக்கு ஏற்கனவே கொடுத்த எல்லாவற்றையும் உங்கள் கவனத்தில் கொண்டு வாருங்கள். நீங்கள் உடனே, "என்னுடைய தேவைகளைப் பற்றி, நான் கவலைப்படவில்லையென்றால், எவ்வாறு அவற்றை

நாம் எப்பொழுதும் அடுத்தது என்னவென்றும், இன்னும் அதிகமாக என்ன கிடைக்கும் என்றுமே எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

நிறைவேற்ற முடியும் ? யார் என் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வார்கள்? என்னுடைய வியாபாரம் என்னவாகும் ?'', என்றெல்லாம் எண்ணலாம். நீங்கள் இவற்றை யெல்லாம் பற்றி எண்ணத்தான் வேண்டும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டும், இந்த எல்லாச் சுமைகளையும் உங்கள் தலையிலிருந்து எடுத்து விட்டு, நான் சொல்வதைச் செய்யுங்கள்.

எவ்வாறாயினும், உங்கள் குடும்பம் அல்லது உங்கள் வியாபாரம், உங்களால்தான் நடக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? நான் சொல்கிறேன், எல்லாம் இலகுவாக நடந்து கொண்டிருப்பதற்குக் காரணம் நாமல்ல; ஆனால், நாமிருந்தும் அவை மென்மையாக நடந்து கொண்டிருக்கின்றன! பிரபஞ்ச இருப்புத் தன்மை, நமது குடும்பங்களையோ அல்லது நமது செல்வத்தையோ காப்பதற்கு நமது அறிவைச் சார்ந்திருக்க வேண்டியிருந்திருக்குமாயின், நாமனைவரும் தற்சமயம் அனாதை களாயிருப்போம்! மிகவும் தெளிவாக இருங்கள் ... வெறுமனே கவலைப்படுவதன் மூலம், எதையும் சாதிக்க முடியாது. நாம் கவலைப்படுதலைப் பற்றி ஏற்கனவே போதுமான அளவு பேசியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

அதனால், வெறுமனே சில நிமிடங்கள் கண்களை மூடி, ஏற்கனவே உங்கள் மீது பொழியப்பட்டதன் மீதும், ஏற்கனவே உங்களிடம் இருப்பதன் மீதும் கவனத்தை வையுங்கள். மனப் பூர்வமாக எல்லா விஷயங்களையும் - உங்கள் உடல், உங்கள் செல்வம், உங்களை ஆதரிக்கும் மற்றும் உங்களுக்கு உதவும் மக்கள், உங்கள் வீடு, உங்கள் ஆடம்பரப் பொருட்கள், உங்கள் விடுமுறைகள் எல்லாவற்றையும் பாருங்கள். அவை எல்லா வற்றையும் தளர்வுடனும், நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியாக

எதுவாயினும் நமக்குக் கிடைக்கும் வரையில், அது மிகவும் விலைமதிப்பற்றதாகத் தெரிகிறது. ஆனால் கிடைத்த கணமே தன் மதிப்பை இழந்து விடுகிறது. அனுபவியுங்கள். எவ்வளவு நேரம் முடிகிறதோ, அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

மிகவும் அவசரமாகவும், வேகமாகவும் ஓடாதீர்கள். அவை எல்லாவற்றையும் நிதானமாக, உங்கள் மனதளவில் வாழுங்கள். அந்த உணர்விலேயே நிலைத்திருங்கள். சற்று நேரம், அந்த அற்புதமான மனநிறைவான உணர்விலேயே நிலைத்திருங்கள். நீங்கள் நன்றியுணர்வால் நிரம்புவதையும், பொங்கிப் பிரவகிப்பதையும் உணருங்கள். நீங்கள் கண்களைத் திறக்கும்பொழுது, உங்களிடம் இருப்பது, உங்கள் வாழ்க்கையை நடத்தத் தேவை யானதற்கும் அதிகமாகவே இருப்பதைக் காண்பீர்கள்! மேலும் நீங்கள், இதற்கு மேலும் என்ன வேண்டும் என்று ஆச்சரியப் படுவீர்கள்!

நீங்களே வெறுமனே நன்றியுணர்வாகி விட வேண்டும் ! நன்றியுணர்வாகி விடச் சிறந்த வழி, காரணமின்றியே மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்வதுதான். நீங்கள் காணும் எல்லாவற்றையும், நீங்கள் கேட்கும் எல்லாவற்றையும், நீங்கள் செய்யும் எல்லாவற்றையும், பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களைப் பாதுகாக்கிறது என்கிற உயர்ந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் அனுபவியுங்கள். பிறகு, வெறுமனே, வாழ்க்கை உங்கள் கண்ணோட்டத்தில் உருமாறி விடும்; பின்னர் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியில் இருப்பதால், எப்பொழுதுமே பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருப்பீர்கள்.

ஒரு சின்ன கதை....

ஒருவன் விதம் விதமான மாம்பழங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த ஒரு மாஞ்சோலையைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அவன் சோலையின் உள்ளே புகுந்தான்; சுற்றும் முற்றும் பார்த்தான்; ஆராய்ந்தான்; ஏதோ புள்ளி விவரங்களை

நாம் எப்பொழுதும் 'அடுத்தது என்ன?' எனும் மனோபவாத்திலேயே இருக்கிறோம். அதனால்தான் நம்மால் நன்றியுணர்வுடன் இருக்க முடிவதில்லை.

எடுத்தான்; ஒரு அரை மணி நேரங்கழித்து புள்ளி விவரங்களுடன் வெளியேறினான். சிறிது நேரங்கழித்து, இன்னொருவன் அதே மாஞ்சோலை, வழியாகச் சென்றான். அவனும் உள்ளே புகுந்தான்; சில மாம்பழங்களைப் பறித்தான்; அவற்றைச் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுச் சென்று விட்டான்!

( உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறார்! )

இப்பொழுது, தயவு செய்து ஏதாவது மாஞ்சோலையில் நின்று மாம்பழங்களை எடுத்து சாப்பிட்டு விடாதீர்கள். நீங்கள் கல்லடி பட நேரிடலாம்! நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கேள்வி எழுப்பாமல் வெறுமனே மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, எப்பொழுதும் மகிழ்ச்சியாக மட்டுமே இருங்கள் என்று நான் சொல்ல வில்லை.

நீங்கள் வேலை செய்ய வேண்டும்; அதில் சந்தேகமில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக மட்டும் இருந்தால் உங்களுக்கு யாரும் எதுவும் கொடுக்கப் போவதில்லை. நான் சொல்வதெல்லாம், மகிழ்ச்சியாக இருக்கக் காரணங்களைத் தேடாதீர்கள் என்றுதான், அவ்வளவே. கேள்வி இன்றி மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் அடிப்படை இயல்பாகி விடட்டும்; பிறகு நன்றியுணர்வு தானாகவே உங்கள் இருப்புத் தன்மையாகி விடும்.

உங்கள் தொழில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; உங்கள் சமூக அந்தஸ்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; உங்கள் பொருளாதார அந்தஸ்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் மகிழ்ச்சியாக இருப்பது என்பது, இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், எல்லோராலும் செய்யக் கூடியது.

ஆசையும் நன்றியுணர்வும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது. உங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஆசைகள் வருமானால், நீங்கள் நன்றியணர்வுடன் வாழவில்லை என்று பொருள்.

பிரச்சினை என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் கூட ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். நீங்கள் உங்கள் மனதை இது போன்ற எண்ண வடிவ அமைப்புகளைக் கொண்டு பழக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு, உங்கள் முயற்சிகளுக்குத் தகுந்த அளவு கொடுக்கப்படாத போது, மற்றவர்களுக்கு, அவர்கள் தகுதிக்கும் மேலாகக் கிடைக்கிறது என்று நீங்கள் அடிக்கடி எண்ணுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கடினமாக உழைக்க வேண்டும் என்று எப்பொழுதும் எண்ணுகிறீர்கள். கண்டிப்பாக இல்லை! கடினமாக உழைப்பது சரிதான்; அனால் அதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது; அந்தக் கருத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் குறை கூறுவதை அல்லது அதிருப்தியாக இருப்பதை நிறுத்தும் ஒரே வழி இதுதான்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை பொழிந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்பினால், அனுபவிப்பீர்கள். அது முழுவதும் உங்களுடைய தேர்ந்தெடுத்தல் தான். நீங்கள் தவறாகத் தேர்ந்தெடுத்து விட்டு, பிறகு வேறு யாரையாவது குறை கூறுகிறீர்கள் அல்லது பழிக்கிறீர்கள். உங்களுக்கு நிகழும் எதற்கும் வேறு யாரும் பொறுப்பல்ல என்பதை நினைவில் வையுங்கள். எல்லாமே நீங்கள் விழிப்பற்ற நிலையில் செய்யும் விழிப்பான தேர்ந்தெடுத்தல்தான். உங்களிடம் போதுமான விழிப்புணர்வின்மையால், வெறுமனே விழிப்புணா்வற்ற, ஒரே மாதிரியான தீர்மானங்களை எடுத்து விட்டு, பிறகு வாழ்க்கையைப் பற்றிக் குறை கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்.

எப்பொழுதும் நினைவில் வையுங்கள் ... சொர்க்கமும், நரகமும் வெளியுலகில் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல; அவை நீங்களே உங்களுக்குள் உருவாக்கிக் கொள்பவை. நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீதான மனப்பூர்வமான நம்பிக்கையை இழக்கும் கணமே, உங்களை அதிலிருந்து வேறு படுத்திக் கொண்டு, நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்களுடன் நரகத்தையும் சுமந்து செல்கிறீர்கள். நரகம் ஏதோ உங்களுக்கு வெளியே இருக்கும் ஒன்று என்று எண்ணாதீர்கள். அது உங்கள் மனதில்தான் இருக்கிறது. உங்களுடைய தேர்ந்தெடுத்தலே, உங்களுடைய இயல்பே, நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்களா அல்லது சொர்க்கத்தில் இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்கிறது.

ஒரு ஆசிரியை ஒரு முறை அவளது மாணவர்களிடம் கேட்டாள், முடியுமா?''. நீண்ட அமைதிக்குப் பிறகு, ஒரு குழந்தை எழுந்து நின்று சொன்னது, "என் தந்தையின் படிக்கும் அறையில், மிஸ்". ஆச்சரியமடைந்த ஆசிரியை, அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று கேட்டாள். அதற்குக் குழந்தை பதில் சொன்னது, "ஒவ்வொரு முறை நான் என் தந்தையின் படிக்கும் அறைக்குச் செல்லும் பொழுதும், அவர் கத்துவார், 'இங்கிருந்து நரகத்தை எடுத்துக் கொண்டு போய்விடு1' (இங்கிருந்து ஒழி என்பதற்கு ஆங்கில வழக்கு ! ) ' .

(சிரிப்பு!)

குழந்தைகள் சிறுவயது முதலே, சொர்க்கமும், நரகமும் வெளியே இருக்கும் ஸ்தூலப் பொருட்கள் என்று எண்ண, பழக்கப்படுத்தப்பட்டு விடுகின்றனர். கடவுள், நமக்கு மேலாக ஒரு பெரிய சிம்மாசனத்தில் அமாந்து கொண்டு, நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு, நமது பாவச் செயல்களையும், நல்ல செயல்களையும் குறித்துக் கொண்டிருக்கிறார், என்று எண்ணுவதற்கு அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டு விடுகிறார்கள்.

இவ்வாறு எண்ணுவதால், நாம், நமது எல்லாச் செயல் களுக்கும் காரண-விளைவுச் சுழற்சியை ஏற்படுத்த ஆரம்பித்து விடுகிறேம். நல்ல செயல்களை சொர்க்கத்துடனும், தீய செயல்களை நரகத்துடனும் இணைக்கிறேம். நாம் கடவுளையும், இந்த முழுப் பிரபஞ்ச இருப்புத் தன்மையையுமே, ஒரு வர்த்தகப் பரிவர்த்தனை மையமாக எண்ண ஆரம்பித்து விடுகிறேம். நாம் வியாபாரியாகி விடுகிறோம்- நமது உண்மையான தொழில் எதுவாக இருப்பினும் !

நீங்கள் கோயிலுக்குச் சென்றால் என்ன செய்கிறீர்கள் ? தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, உள்ளே சென்று கடவுளுக்கு உங்கள் குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை ஒவ்வொருவருடைய பெயர், பிறந்த நக்ஷத்திரம் முதலியவற்றைச் சொல்லி சடங்குகளைச் செய்கிறீர்கள்

பரிதாபத்துக்குரிய அர்ச்சகர் கையில் ஒரு தட்டுடன் நின்று கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு வருடைய பெயரையும், மற்ற எல்லா விவரங்களையும் ஒரு நீண்ட பட்டியலிட்டுக் கொண்டிருப்பீர்கள். கடவுள் தனது ஆசிகளை தவறான நபர்களுக்கோ, தவறான குடும்பத்திற்கோ அனுப்பி விடப் போகிறார் என்று மிகுந்த அச்சத்தில் இருக் கிறீர்கள்! பூகோள ரீதியாக சரியான இடம் முதலியவற்றைச் சொல்லி, இந்த நிவேதனப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பது நீங்கள்தான், வேறு யாரோ ஒருவர் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்கிறீர்கள். இதைச் செய்த பிறகுதான் நீங்கள் கோயிலை விட்டுச் செல்கிறீர்கள். சரிதானே ?

என்னவோ இவற்றையெல்லாம் நீங்கள் சொல்லாவிடில், கடவுளுக்குத் தெரியாது என்பது போல! என்னவோ உங்கள் இருப்பைக் கடவுளுக்கு ஞாபகப்படுத்தினால்தான் அவர் உங்கள் மீது பொழிவார் என்பது போல! நான் சொல்கிறேன் ... தொடர்ந்து அவரை நோக்கிய ஒரு நன்றியுணர்வுடன் இருங்கள், அவ்வளவே. அவர் எப்பொழுதும் உங்கள் மீது பொழிந்து கொண்டுதான் இருக்கிறார்.

அவர் நீங்கள் ஏதோ பிரச்சினையில் இருப்பதைக் கண்டு, உங்களை அதிலிருந்து வெளியே கொண்டு வரத் தீர்மானிக்கிறார் என்பதோ, அல்லது, நீங்கள் பிரச்சினை எதுவுமில்லாமல் நன்றாகத்தான் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டு அலட்சியமாக இருந்து விடுகிறார் என்பதோ அல்ல. இவையெல்லாம் நாம் கடவுளின் மீது பிரதிபலிக்கும் நமது சொந்த நெறிப்படுத்தல்கள். இவையெல்லாம் நமக்கு சிறு வயதிலிருந்தே சமூகம் கற்றுத் தந்தது.

நன்றியுணர்வு என்றும் கருத்தே நம்மிடையே மிகவும் திரிக்கப்பட்டு விட்டது. நன்றியுணர்வு என்பது, நாம் ஏதாவது ஆழமான தொல்லையிலிருந்து மீட்கப் பட்டாலோ அல்லது யாராவது ஒருவர் தனது அக்கறையிலும் பகிர்தலிலும் வழக்கத் திற்கு மாறாக விசேஷமாக நடந்து கொண்டாலோ உணரப்பட வேண்டியது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இது நமக்குக் கற்றுத் தரப்பட்ட மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒரு நம்பிக்கை.

நான் சொல்கிறேன் ... கோயிலுக்குள் வெறுமனே ஒரு நன்றியுணர்வுடன் நுழையுங்கள். ஒவ்வொரு தெய்வத்தின் முன்பும் சில நிமிடங்கள் ஒரு ஆழமான நன்றியுணர்வுடன் நில்லுங்கள். பிறகு கோயிலை விட்டு அதே மனநிலையுடன் செல்லுங்கள். அதுவே போதுமானது. மற்றவை தானாகவே கவனித்துக் கொள்ளப்படும். இதுவே இறுதியான, உயர்ந்த பிரார்த்தனை. நன்றியுணர்வே இறுதியான, உயர்ந்த பூஜை அல்லது சமா்ப்பணம்.

நீங்கள் இங்கிருக்கும் சில நாட்களில், நான் சொல்வதை அனுபவபூர்வமாக உணர, அவற்றை பயனுள்ள வகையில் உபயோகியுங்கள். நீங்கள் வெளியுலகிலிருந்து விலகியிருக்கும் இந்த ஏழு நாட்களில், நன்றியுணர்வு உங்களிடம் வேர் விட அனுமதியுங்கள். நீங்கள் திறந்து, உங்களை மலர அனுமதியுங்கள். இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம். நீங்கள் உருமாற்றமடைவதற்கான ஒரு வாய்ப்பு. தவறவிட்டு விடாதீர்கள். உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்; நீங்கள் இவ்விடத்தை விட்டுச் செல்லும் பொழுது, அதுவும் உங்களுடன் வரும்.

பாருங்கள், பிரச்சினை என்னவென்றால், நாம் எப்பொழுதும் நமது தலையின் (அறிவின்) வழியாகவே கடவுளை அடைய முற்படுகின்றோம். உங்களால் ஒருபோதும் உங்கள் தலையின் வழியாகக் கடவுளை அடைய முடியாது. நீங்கள் வெறுமனே உங்கள் தலையை விட்டுவிட்டால், தானாகவே இதயத்தின் (உணர்வின்) வழியாக இயங்க ஆரம்பித்து விடுவீர்கள்; பிறகு அவரை அடையக் கூட வேண்டாம் - அவர் ஏற்கனவே உங்களுள்தான் இருக்கிறார் -என்பதைக் கண்டுபிடிப்பீர்கள்!

உங்கள் தலையைக் கொண்டு, நீங்கள் எப்பொழுதும் வெளியேதான் தேடுவீர்கள்; ஒருபோதும் உங்களால் கடவுளை வெளியே கண்டுபிடிக்க முடியாது. உங்கள் தலையைக் கொண்டு, நீங்கள் நன்றியுணர்வுடன் இருப்பதற்கான காரணங்களைத் தேடுவீர்கள். நீங்கள் தலையிலிருந்து இதயத்திற்கு நகர்ந்து விடும்பொழுது, ஒரு முழுமையான, புதிய வெளி உங்களுக்காகத் திறக்கும்; அது நீங்கள் எப்பொழுதும் அறிந்ததுதான் என்பதை யும், இதை நீங்கள் உணரவிடாமல் தடுத்ததும், இந்த எல்லா சேதத்திற்கும் காரணமும் உங்கள் மனம்தான் என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள்.

நீங்கள் இதயத்திலிருந்து இயங்கும் பொழுது, எப்பொழுதும் நன்றியுணர்வுடன்தான் இருப்பீர்கள். நாம் எப்பொழுதாவது மூளைப்பூர்வமான நன்றியுணர்வு என்று சொல்கிறோமா ? இல்லை! இதய பூர்வமான நன்றியுணர்வு என்றுதான் சொல்கிறோம், இல்லையா ?

அடுத்ததாக நீங்கள் கேட்பீர்கள், "எவ்வாறு நாங்கள் தலையிலிருந்து (அறிவிலிருந்து) இதயத்திற்கு (உணர்வுக்கு) நகர்வது, ஸ்வாமிஜி?' என்று. வெறுமனே உங்கள் தலையைப் பற்றிய விழிப்புடன் இருங்கள், அதுவே போதும்! நீங்கள், உங்கள் தலையைப் பற்றிய கவனமின்மை யால்தான், ஒரே சீராகவும், ஒரு இயந்திர கதியிலும் அதைச் செயல்பட அனுமதிக்கிறீர்கள். ஒரு முறை உங்கள் தலையைப் பற்றிய விழிப்புடன் இருக்க ஆரம்பித்து விட்டால், உங்களால் அதை விட்டுவிட முடியும்.

நன்றியுணர்வு என்பது ஒரு நற்பண்பல்ல. அதுவே உங்கள் அடிப்படை மனோபாவமாக இருக்க வேண்டும். நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இருக்க, இதைவிட அதிகமாக எதையும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் நன்றியுணர்வுடன் மட்டும் இருந்தாலே, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் அற்புதமாக இசைந்திருக்க முடியும் ; பிறகு பிரபஞ்ச இருப்புத் தன்மை தன்னுடைய மந்திர ஜால வைபவங்களை உங்களுக்கு வெளிப்படுத்தும். பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சாய்ந்து அமாந்து கொண்டு மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டியதுதான்.

உங்கள் இருப்புத்தன்மையில் பிரபஞ்ச இருப்புத்தன்மை மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைக்கும் தன்மையே, உங்களை இந்த பூமியில் கடவுளைப் போல வாழவைக்கும்.