KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/திவ்ய நேத்ரா தியானம்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

திவ்ய நேத்ரா தியானம்

(நீடிக்கும் காலம் : 25 நிமிடங்கள்)

இந்த தியான முறை இரண்டு பகுதிகளைக் கொண்டது -முதலாவது, ஆக்ஞா சக்கரத்தைத் தூய்மைப்படுத்துதல்; அடுத்தது, அதற்குச் சக்தியூட்டுதல். ஆக்ஞா சக்கரம் அல்லது மூன்றாவது கண் என்பது மாயையையும் இச்சையையும் அழிப்பதாக அறியப் படுகிறது. அது உங்களுடைய உயர் விழிப்புணர்வைத் திறக்க உதவுகிறது.

இங்கு உங்கள் முன், ஏற்றப்பட்ட பிரார்த்தனை தீபம் ஒன்று இருக்கிறது. அது நல்லெண்ணெய் அல்லது பசு நெய் உபயோகிக்கப்பட்டு ஏற்றப்பட்டிருக்கிறது. நீங்கள் வர்த்தியைக் கூட உபயோகிக்கலாம்; ஆனால் அது தாவரக் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது வழிகாட்டுதலுடன் செய்யும் ஒரு தியான முறை. நான் சொல்வதை வெறுமனே கவனமாகப் பின்பற்றுங்கள்.

தரையில் கால்களை சப்பணமிட்டு அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் உட்காரலாம்.

ஆனந்தமாக இருங்கள்!

(மென்மையான இசை போடப்படுகிறது)

உங்கள் ஆக்ஞா சக்கரத்தை ஊடுருவுவது போன்று அதில் கவனத்தைக் குவியுங்கள். (5 நிமிடங்கள்)

கண்களைத் திறந்து உங்கள் புருவ மத்திக்கு இடையே உள்ள மூன்றாவது கண் வழியாக விளக்கின் சுடரைப் பாருங்கள். உங்கள் கண்கள் சிமிட்டலாம் அல்லது எரியலாம் அல்லது கண்ணீர் வரலாம். வெறுமனே அது நிகழ அனுமதியுங்கள். (5 நிமிடங்கள்)

கண்களை மூடி மீண்டும் ஆக்ஞா சக்கரத்தில் மனதைக் குவியுங்கள். (5 நிமிடங்கள்).

கண்களைத் திறந்து, உங்கள் புருவ மத்திக்கு இடையே உள்ள மூன்றாவது கண் வழியாக விளக்கின் சுடரைப் பாருங்கள். (5 நிமிடங்கள்)

கண்களை மூடுங்கள்; ஆக்ஞா சக்கரத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டாம்; வெறுமனே தளர்வாக இருங்கள்.

(5 நிமிடங்கள்)

ஒம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!

மெதுவாக, மிக மெதுவாக, உங்கள் கண்களைத் திறவுங்கள்.

நாம் அடுத்த அமர்வில் சந்திப்போம். நன்றி.