ஆம், ஸ்வாமிஜி ....
சரி, அதே வானொலி, அதில் எந்தவிதமான உருவ மாற்ற மும் செய்யாமல், பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பும் பல வானொலி நிலையங்களுடன் இணைக்கப்பட முடியும், இல்லையா ? நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைய ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஏதேனும் இடையூறோ அல்லது குறுக்குப் பேச்சோ வந்தால், என்ன செய்கிறீர்கள் ?
நாங்கள் இன்னும் அதை நுட்பமாக இசைந்திருக்குமாறு சரி செய்கிறோம், ஸ்வாமிஜி.
மிகச் சரி! ஏதேனும் ஒரு நிலையத்தை இன்னும் மிகத் தெளிவாகக் கேட்பதற்கு, நீங்கள் அதை நுட்பமாக இசைந் திருக்குமாறு சரி செய்ய வேண்டும், அவ்வளவே. இப்பொழுது, இதே கருத்தை, நம்மை பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக வைத்திருப்பதற்கும் பிரயோகியுங்கள்.
நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் நம்மை எதனுடன் இசைவாக வைத்திருக்கிறோமோ, அந்த அனுபவத்தை அடைகிறோம். இப்பொழுது, ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நம்மை இசைவாக வைத்திருப்பது என்பது, முழுவதுமாக நமது சொந்தத் தேர்வு ; இதை யாராவது மறுக்கிறீர்களா? இல்லை. நீங்கள் கேட்க விரும்பும் நிகழ்ச்சியை தோ்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது, சரிதானே?
(கூட்டத்திலிருந்து முணுமுணுப்பு) ஆமாம், ஸ்வாமிஜி ...
அதே போல, நீங்களும் உங்களைச் சுற்றி மனித மனதால் உருவாக்கப்பட்டுள்ள குழுப்பத்துடன் உங்களை இசைவாக வைத்திருப்பதைத் தேர்ந்தெடுப்பீர்களானால், நீங்களும் குழுப்பத்தில் ஆழ்ந்து விடுவீர்கள். நீங்கள் கவலை, அதிருப்தி, தடுமாற்றம் முதலியவற்றால் ஆன, முடிவற்ற சுழலில் சிக்கிக் கொள்வீர்கள்.
அதே சமயத்தில், உங்களை, இந்த மொத்தக் காட்சியையும் நடத்திக் கொண்டிருக்கும் மைய இழையான, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக வைத்திருப்பதைத் தேர்ந்தெடுப்பீர் களானால், உங்களைச் சுற்றி இருக்கும் குழப்பத்திலிருந்து நீங்கள் சரியான இழையைப் பிடித்து விட்டீர்கள்; நீங்கள் எல்லா உணர்ச்சிகளிலிருந்தும் விடுதலை பெற்று விடுவீர்கள். நீங்கள் ஒரு அழகான நறுமணம் பரப்பும் மலராக மலர்ந்து விடுவீர்கள்.
முன்பிருந்த உணர்ச்சிகளுடன், வாழ்க்கை ஒரு நிரந்தரமான அதிருப்தி நிலையாகத் தோன்றும். பிந்தையதில், வாழ்க்கையே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மொழியான - இசையாகிவிடும்; நீங்கள் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டே இருப்பீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு வாழ்க்கை மிகுந்த பரவசமாக இருக்கும்.
அதிருப்தி உங்களை கீழ்நோக்கி இழுக்கும் ; கனமாகவும், துயரமாகவும் ஆக்கும். இன்னொரு பக்கம், நன்றியுணர்வும் அதனுடன் வரும் மனநிறைவும், உங்களை இலேசாகவும், ஆனந்த மயமாகவும் ஆக்கும். நாம் அதிருப்தியுடன் இருப்பதற்குக் காரணம், விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்வதுதான். நீங்கள் விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்பொழுது, நிறைய தவறவிட்டு விடுகிறீர்கள்; பிறகு உங்களை எதுவுமே சந்தோஷமாகவோ அல்லது மகிழ்ச்சியாகவோ ஆக்காது. நான் சொல்கிறேன் .... ஒரு போதும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இந்தச் சின்னக் கதையைக் கேளுங்கள்.....
ஒரு பிச்சைக்காரன் தெருவில் நடந்து கொண்டிருந்த ஒருவனை நிறுத்திக் கேட்டான், ''இரண்டு வருடங்களுக்கு முன்பு, நீங்கள் எனக்கு 20 ரூபாய் கொடுப்பது வழக்கம்; சென்ற வருடம் முழுவதும் 10 ரூபாய்தான் கொடுத்தீர்கள்; கடந்த சில மாதங்களாக நீங்கள் வெறும் 2 ரூபாய்தான் கொடுக்கிறீர்கள். ஏன்?''. அவன் சொன்னான், ''முதலில் நான் பிரம்மச்சாரியாக இருந்தேன்; பிறகு எனக்குக் கல்யாணமாயிற்று; இப்பொழுது எனக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அதனால்தான்''. அந்தப் பிச்சைக்காரன் கத்தினான், ''என்ன! உன் குடும்பத்தை நடத்துவதற்கு என் பணத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறாயா ? ''.
(பலக்க சிரிப்பு!)
அந்தப் பிச்சைக்காரன் சொல்கிறான், "உன் குடும்பத்தை நடத்துவதற்கு என் பணத்தை உபயோகிக்கிறாயா!' என்று. உண்மையில், நம்மில் பலரும், இன்னொருவர் நமக்கும், நம் தேவைகளுக்கும் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நமது பிறப்புரிமை என்றே எண்ணிக் கொண்டிருக்கிறோம். முழு அவற்றை நாம் வெறுமனே சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற மனோபாவம் நம்மிடம் இருக்குமானால், நாம் எவ்வளவு ஆழமான அறியாமையில் இருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. நாம் இவ்வாறு இருக்கும் பொழுது, முழுக்குறைபாட்டுடன் இருக்கிறோம் என்பதைக் கூட அறிவ தில்லை. இந்த முழு மனோபாவமும் ஒரு அடிப்படையான மாற்றத்திற்குள்ளாக வேண்டும். உங்களுடைய சொந்தத் தந்தையோ அல்லது தாயோ அல்லது கணவனோ அல்லது மனைவியோ கூட, சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடக் கூடாது.
ஒருவன் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்து, தன் மனைவி ஒரு மோசமான மனநிலையில் இருப்பதைக் கண்டான். அவள் அவனை நோக்கிக் கத்தினாள், "கடைசியில் நான் எப்படியோ சமாளித்து வேலைக்காரியை வீட்டு வேலையனைத்தும் அவளே செய்து விடுமாறு பழக்கியிருந்தேன்; அவள் இப்பொழுது விட்டுவிட்டுச் சென்று விட்டாள்!''. அவன் இரக்கத்துடன் கேட்டான், ''என்ன காரணத்திற்காக, அன்பே?''. அவள் சொன்னாள், ''நல்லது, அதற்கு நீங்கள்தான் காரணம்! தொலை பேசியில் அவளுடன் பேசும் பொழுது மிகவும் மூர்க்கத்தனமாக பேசினீர்கள் என்று சொல்கிறாள்; அவளுடைய சுய மரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைப்பதால் வேலையை விட்டுவிட்டாள்''. அவன் குழப்பமடைந்து உள்றினான், ''ஆனால், நான் உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதாக அல்லவா நினைத்தேன்!''.
(சிரிப்பு)
நாம் எப்பொழுதுமே உறவு முறைகளைச் சாதாரண மாகவே எடுத்துக் கொள்கிறோம்; அதனால் சிக்கலுக்கு உள்ளாகிறோம். ஒவ்வொரு தனி மனிதரையும், முழுமையின் பகுதியாக நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள்; அவர்களை நோக்கிய நன்றியுணர்வுடன் இருங்கள்; பிறகு நீங்கள் ஒருபோதும் யாரையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். பிறகு நீங்கள் ஒவ்வொருவரையும், அவரும் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதியாக இருப்பதற்காக, வழிபடுவீர்கள்; மரியாதையுடன் நடத்துவீர்கள்.
வெறுமனே நன்றியுணர்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்; அற்புதங்கள் நிகழ்வதைக் கவனியுங்கள்.
நீங்கள் கொள்ளாத பட்சத்தில், உங்களுக்குக் கிடைத்தவற்றைப் பெரிதாகக் கருதுவீர்கள். நீங்கள் உட்கார்ந்து ஆராய்ந்து பார்ப்பீர்களானால், நாம் எப்பொழுதுமே நமக்குக் கிடைக்காதவற்றைதான் பெரிதாகக் கருதுகிறோம் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்! நமக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டாலும், நாம் சந்தோஷமாக இருப்பதில்லை; ஏனெனில் நாம், நமக்குக் கிடைக்காதவற்றைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருக்கிறோம் !
வாழ்க்கை உங்களுக்குக் கொடுத்ததாக நீங்கள் கருதுவதை யெல்லாம், அமர்ந்து பட்டியலிட வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் அந்தப் பட்டியலை உங்கள் சொந்தக் கண்களிலிருந்தே ஆரம்பிக்கலாம். நான் முன்பே சொன்னது போல், எத்தனை போகளுக்குக் கண் பார்வை அருளப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாள் நீங்கள் எழுந்திருக்கும் பொழுது, பார்வையை இழந்து விட்டீர்கள் என்பதை உணர நேர்ந்தால், என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடிகிறதா?. உங்களால் படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைக்குக் கூடச் செல்ல முடியாது! நன்றியுணர்வேயின்றி நீங்கள் முன்னர் செய்த ஒவ்வொரு செயலும் இப்பொழுது உங்கள் முழுப் பிரயத்தனத் தையும் எடுத்துக் கொள்ளும்.
எவ்வாறாயினும், வாழ்க்கையில் உங்களுக்குக் கொடுக்கப் பட்ட எல்லா விஷயங்களையும், நீங்கள் பட்டியலிட ஆரம்பித்தால், அது ஒரு நீண்ட பட்டியலாக முடியும். அதை முடித்த பிறகு, உங்களுக்குக் கொடுக்கப்படாததாக நீங்கள் கருதும் விஷயங்களைப் பட்டியல் இடுங்கள். இதுவும் ஒரு நீண்ட பட்டியலாகவே... உண்மையில் மிக நீண்ட பட்டியலாகவே இருக்கும் ! அது ஒருவேளை பென்ஸ் காரில் ஆரம்பித்து, பென்ஸ் காரை விடவும் நீளமான ஒரு பட்டியலாக முடியக் கூடும் ! நீங்கள் சிரத்தையுடன் ஒரு விஷயத்தைக் கூடத் தவற விடாமல் எழுதுவீர்களானால், இரண்டு பட்டியல்களுமே முடிவற்றவையாக, உண்மையில் எல்லையற்றவையாக இருக்கும்.
நீங்கள் நன்றியுணர்வுடன் செயல்படும்பொழுது, எப்பொழுதும் எல்லா விஷயங்களும் சரியாகவே இருக்கும்.
சரி, இப்பொழுது இரண்டு பட்டியல்களும் நம் முன் இருக்கிறது. இப்பொழுது நாம் எந்தப் பட்டியலைப் பார்க்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பது நம்மிடம்தான் இருக்கிறது. நாம் நமக்குக் கொடுக்கப்படாத விஷயங்களைப் பார்த்து, நமது வாழ்க்கையை மந்தமாகவும், உயிரற்றதாகவும் ஆக்கிக் கொள்ளப் போகிறோமா, அல்லது நமக்குக் கொடுக்கப்பட்ட விஷயங்களைப் பார்த்து, மகிழ்ச்சியுடன், நமது வாழ்க்கையை அற்புதமாக ஆக்கிக் கொள்ளப் போகிறோமா? அது முழுமை யாக நமது தேர்வுதான்!
எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒருவன், இரண்டாவது பட்டியலைப் பேராசையுடனும், அதிருப்தி யுடனும் பார்ப்பான். நீங்கள் பேராசையுடன் இருப்பீர்களானால், தானாகவே அதிருப்தியுடன்தான் இருப்பீர்கள்; ஏனெனில் உங்கள் பேராசைக்கு ஒரு முடிவே கிடையாது; அதனால் திருப்தி என்பதே உங்கள் வாழ்வில் ஒருபோதும் நிகழ முடியாது! எப்படியோ, இவன், முதல் பட்டியலிலிருந்து கிடைக்கும் வாழ்வின் மகிழ்ச்சியை முழுவதுமாகத் தவறவிட்டு விடுகிறான்!
அவன் வழியில் வரும் எதுவுமே, அது பெரியதோ அல்லது சிறியதோ, அவனுக்குச் சாதாரணமாகத்தான் தெரியும்; அவன்
நாம் மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை போர் பெற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம் ?
அடுத்ததன் வருகையை நோக்கி மட்டுமே காத்துக் கொண்டிருப்பான். அடுத்தது வரும் பொழுது, அதுவும் சாதாரணமாகத்தான் தெரியும்; ஏனெனில் ஏற்கனவே அவன் அதற்கடுத்ததைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டு இருக்கிறான்!
அதே சமயத்தில், எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருக்கும் ஒருவருக்கு, இரண்டாவது பட்டியல் என்ற ஒன்று இருப்பது கூடத் தெரியாது! அவருக்கு ஒவ்வொரு கணமும் நன்றியுணர்வுடன் இருக்கவும், அதையே சுவாசிக்கவும் மட்டும்தான் தெரியும். அவருக்கு வாழ்க்கை என்பது ஒரு நிரந்தரக் கொண்டாட்டமாக இருக்கும். அவர் மிகவும் இலேசாகவும், மகிழ்ச்சியுடனும் இருப்பார். அவர் கவனிப்பதற்கு ஒரு நல்ல உதாரணம். அவர், அவருக்கேயுரிய தனித்துவம் வாய்ந்த அழகைப் பரப்பிக் கொண்டிருப்பார். அவருக்கு இரண்டாவது பட்டியல் என்று ஒன்று இருப்பது கூடத் தெரியாது. அவருக்கு அந்த மொழியே தெரியாது ! அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஆழ்ந்த அன்புடனும், நன்றியுணர்வுடனும் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது மட்டுமே, அவ்வளவுதான்.
எப்பொழுதும், வெறுமனே நன்றியுணர்வுடன் இருப்பதன் மூலமே, வாழ்க்கையில் ஒவ்வொரு பெயரளவிலான லோகாயதமான விஷயமும் புனிதமானதாகவும், அற்புதமானதாகவும் ஆகிவிடும் ! நான் சொல்கிறேன் ... வாழ்க்கை மிகவும் சலிப்பாகி விட்டது என்று நீங்கள் நினைப்பதற்குக் காரணம், உங்களு டைய எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கை கொள்ளும் மனோபாவம்தான். வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல் சலிப்பானதல்ல. ஒவ்வொரு சின்ன விஷயமும் மிகவும் அழகாகவே இருக்கிறது. சலிப்பாக இருப்பது உங்கள் மனம்தான்; உங்கள் மனம்தான், பிரபஞ்ச இருப்புத்தன்மை
உங்கள் குடும்பம் அல்லது உங்கள் வியாபாரம் உங்களால் தான் நடக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா ?
அற்புகமாக பிரவகித்துச் செல்வதை ஊடுருவிப் பார்க்க உங்களை அமைதிப்பதில்லை.
உங்கள் மனம், எப்பொழுதும் தொடர்ந்து 'அடுத்தது என்ன' என்றே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு உயிரற்ற வடிவ அமைப்பாகி விட்டது.
உங்களால் மனோபாவத்துடனும், வியப்புடனும் நோக்க முடியுமானால், அது உங்களை மிகுந்த நன்றியுணர்வாலும், மன நிறைவாலும் நிரப்புகிறது; ஏனெனில் அந்த சமயத்தில் நீங்கள் கேள்வி எதுவும் கேட்பதில்லை. நீங்கள் உங்கள் மனதை விளையாட அனுமதிப்பதில்லை. நீங்கள் வெறுமனே உங்கள் இதயத்துடன் ஒத்திசைந்து கொண்டு இருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் ஒரு குழந்தையாகி விடுகிறீர்கள்; நீங்கள் ஒரு குழந்தையாகி விடும் பொழுது, எதுவுமே சலிப்பாக இருப்பதில்லை; எல்லாமே அற்புதமாகத் தான் இருக்கிறது!
அதனால்தான் குழந்தைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் மனம் உயிரற்றுப் போய் விடுவதில்லை ; அது புத்துணர்ச்சியுடனும் பிரவகிக்கும் தன்மையுடனும் இருக்கிறது. சமூகம் இன்னும் அவர் களுடைய மனதை பழக்கமான வடிவ அமைப்புகளால் நெறிப்படுத்தி விடவில்லை.
எல்லாவற்றையும் ஒரு நன்றியுணர்வுடனும், வியப்புடனும் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் சொந்த உடலையே எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, வெறுமனே இந்தச் சின்னப் பயிற்சியை முயற்சி செய்யுங்கள்! கீழே அமர்ந்து, கண்களை மூடிக் கொள்ளுங்கள். ஒரு சின்ன விபத்தில் உங்கள் வலது கைச் சுண்டு விரல் துண்டாகி விட்டதாக, வெறுமனே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் சுண்டுவிரல், அதன் அசலான
நீங்கள் வெறுமனே நன்றியுணர்வாகிவிட வேண்டும். ரன்றியுணர்வாகிவிடச் சிறந்த வழி, காரணமின்றியே மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்வதுதான்.
அளவில் இப்பொழுது முக்கால் பாகம் தான் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலில் வேறு எந்தவிதமான உருவச்சிதைவும் இல்லை. எல்லாம் சரியாக இருக்கும் உடலையே பெற்றிருக்கிறீர்கள். திடீரென்று உங்கள் சுண்டு விரல் மட்டுமே துண்டாகி விட்டது.
உங்களுடைய எதிர்ச்செயல் எவ்வாறு இருக்கும் ? உங்களுக்கு அதை ஜீரணிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் உங்கள் கையை உபயோகப்படுத்திச் செய்யும் ஒவ்வொரு சின்ன செயலிலும், உங்கள் சுண்டு விரலுக்கும் ஒரு பங்கு இருக்கிறது, இல்லையா ? உங்களுக்கு என்ன நிகழும் ? நீங்கள் மனச்சோர்வு கூட அடைய நேரிடலாம்.
இப்பொழுது எண்ணிப் பாருங்கள், இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள் எத்தனை விதமான உருவக் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள் என்று. எல்லா விரல்களும் இல்லாத மனிதர்கள் எத்தனை போர் இருக்கிறார்கள்! உங்கள் தலை முதல் கால் பெருவிரல் வரை ஒரே ஒரு சிறு ஊனம் இருந்தால் கூட, நீங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு அம்சத்தை அனுபவிக்காமல் தவறவிட்டு விடுவீர்கள், சரிதானே?
தினமும் சில நிமிடங்கள் நீங்கள் உங்களுடனேயே ஒரு அறையில் அமாந்து, உங்கள் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அன்புடன் தொட்டு, வாழ்க்கையில் பல விஷயங்களை அனுபவிக்க சாத்தியப்படுத்தியதற்காக அந்தப் பகுதிக்கு நன்றி கூறுங்கள்.
நீங்கள் இது போன்ற எப்பொமுதாவது உங்கள் உடலை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா ? எவ்வளவு தூரம் உங்கள் உடலை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? நீங்கள் உங்கள் உடலை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்? நம்மில் சிலா்,
மகிழ்ச்சியாக இருக்கக் காரணங்களைத் தேடாதீர்கள். கேள்விகள் எதுவுமின்றி எல்லாவற்றையும் வெறுமனே மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.
நமது உடல் அவ்வளவாக அழகாக இல்லை என்று எண்ணுவதால், அதை வெறுக்கக் கூட செய்கிறோம். சாமி சொல்கிறேன்... இந்தப் பயிற்சியை நீங்கள் தினமும் செய்வீர்களானால், உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் நோக்கிய ஆழமான அன்புடனும் நன்றியுணா்வுடனும் இருப்பீர்களானால், உங்கள் முழு உடலும் முகமும் முழுவதுமாக ஒரு புதிய பிரகாசத்துடன் ஒளிர்வதைக் காண்பீர்கள்.
உங்கள் உடல் உங்கள் மனதைப் பிரதிபலிக்கிறது. அதை ஒருபோதும் அலட்சியம் செய்து விடாதீர்கள்; அல்லது சாதாரண மாக எடுத்துக் கொண்டு விடாதீர்கள். உங்களுடைய இந்த உடலைக் கொண்டுதான் பல விஷயங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடிகிறது. இன்று இங்கு வருவதற்கும், இந்தப் பேச்சை எந்த முயற்சியுமின்றிக் கேட்பதற்கும் கூட, உங்கள் உடலின் எல்லாப் பகுதிகளும் சரியாகச் செயல்பட வேண்டும் இல்லையா ?
ஒரு சின்ன கதை ...
ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில், ஒரு சிறுமி அவளது தாயுடன், இரவு உணவிற்காக மேசையின் முன் அமர்ந்து இருந் தாள். உணவு பரிமாறப்பட்டது; அவள் பிரார்த்தனை செய்யாமல் சாப்பிட ஆரம்பித்து விட்டாள். அதிர்ச்சியடைந்த தாயோ, அவள் எவ்வாறு அத்தகைய செயலைச் செய்யலாம் என்று கேட்டாள். அதற்கு அந்தக் சிறுமி சொன்னாள், "நான் இதற்கு முன் ஒரு முறையாவது நன்றி சொல்லாத எதுவும் என் தட்டில் இல்லை!''.
எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் என்று இதைத்தான் நான் சொல்கிறேன். அது சிறு குழந்தைகளிடம் வோ் விட்டுக் கொண்டிருப்பதைக் காண வருத்தமாக இருக்கிறது.
ரீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். கண்டிப்பாக அதற்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.
ஒரு சிறுமி, அவளது தாயிடம் கேட்டாள், ''அம்மா. இன்மை கிறிஸ்துமஸூக்கு எத்தனை நாட்கள் இருக்கின்றன?''. அம்மா கேட்டாள், "அதை ஏன் தெரிந்து கொள்ள விரும்பு கிறாய்?". சிறுமி சொன்னாள், "நான் நல்ல பெண்ணாக இருக்க ஆரம்பிப்பதற்கான நேரம் வந்து விட்டதா என்று பார்க்கிறேன்!''.
இவ்வாறுதான் நாம் குழந்தைகளை எண்ணவும், நடந்து கொள்ளவும் பழக்குகிறோம். அவர்களுக்கு எவ்வாறு வர்த்தகப் பரிவர்த்தனை செய்வது என்று கற்றுக் கொடுக்கிறோம். நாம் அவர்களுக்கு எல்லாமே வா்த்தகப் பரிவா்த்தனையைத் தவிர வேறல்ல என்று கற்றுக் கொடுக்கிறோம். நாம் அவா்களுக்குத் தன்னிச்சையாகவும், பிரவகிக்கும் தன்மையுடனும் இருக்கக் கற்றுத் தருவதில்லை. ஒரு நோக்கமின்றி வாழ்வதற்குக் கற்றுத் தருவதில்லை. நாம் அவர்களுக்கு எல்லாவற்றையும் ஒரு குறிக்கோளை நோக்கியே இருக்குமாறு செய்து வைத்து விட்டோம். இவை அனைத்தும் முற்றிலும் அபத்தமானவை.
இவையெல்லாவற்றையும் நாம் அவர்களுக்குச் செய்து விட்டபடியால், முதலில் அவற்றைத் திருப்புவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும். மிகவும் தெளிவாக இருங்கள் ... நான் உங்களுக்குச் செய்வது எல்லாமே திருப்புவதற்காகத்தான். நான் தொடர்ந்து திருப்பி செய்து கொண்டு இருக்கிறேன். ஏற்கனவே உங்களுக்கு எவ்வளவு செய்யப்பட்டு விட்டது என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். தலைமுறை தலைமுறையாக, மக்கள் தங்கள் கருத்துக்களை உங்களிடம் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் அவற்றையெல்லாம் முதலில் திருப்பி விட்டு, பிறகு நீங்கள் மலர்வதற்கான ஒரு வெற்றிடத்தை உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.
ரீங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிற்கும் - மகிழ்ச்சியாக இருப்பதற்கும் கூட - ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.
நான் மக்களிடம் அவர்கள் தொடர்ந்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று சொன்னால், அவர்கள் போய் விட்டு திரும்பி வந்து என்னிடம் சொல்கிறார்கள், ''ஸ்வாமிஜி, இப்பொழு தெல்லாம் நான் கார் ஒட்டுனர்களுக்கும், வீட்டில் வேலைக்காரர் களுக்கும் நன்றி சொல்கிறேன்'' என்று. மிகவும் தெளிவாக இருங்கள். நன்றியுணர்வு உங்கள் இருப்புத் தன்மையாகி விடும் பொழுது, நீங்கள் இது போன்ற விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்கள் ... உங்களுக்கு ப்ரியமான ஒருவரை இழந்து துக்கத்தில் தவிக்கும் பொழுது, உங்களுடைய துக்கத்தை வார்த்தைகளாகக் கொண்டு வருவீர்களா ? உங்களுடைய துக்கத்தை வார்த்தைகளாகக் கொண்டு வர முடியுமா? முடியாது! அது மிகவும் ஆழமாக வேர் கொண்டு விட்ட ஒரு உணர்ச்சி; அது உங்களுடைய இருப்புத் தன்மையின் ஒரு நிலையாகி விடுகிறது இல்லையா ? அதை உணர மட்டுமே முடியும்; ஒருபோதும் கூற முடியாது இல்லையா ?
ஆமாம் ஸ்வாமிஜி ...
அதே போல், நன்றியுணர்வு உங்களுடைய அடிப் படையான இருப்புத் தன்மையாகிவிடும் பொழுது, அது வெறுமனே உங்களுடைய ஒரு நிலையாகி விடும்; அதைக் கூறிக் கொண்டிருக்க மாட்டீர்கள். அதை உங்களால் ஒருபோதும் கூறவும் முடியாது. ஆனால், சமூக காரணங்களுக்காக நன்றி சொல்வது சரிதான்; ஏனெனில் நீங்கள் வெளிப்படுத்தாவிட்டால், அது மற்றவருடைய காதுகளை எட்டாது.
ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், மனதின் நன்றியுணர்விலிருந்து, இருப்புத் தன்மையின் நாம்
மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் அடிப்படை இயல்பாகிவிடட்டும் பிறகு நன்றியுணர்வு தானாகவே உங்கள் இருப்புத்தன்மையாகிவிடும்.
நன்றியுணா்விற்கு, நகர்ந்து விட வேண்டும். நாம் பேசிக் கொண்டிருக்கும் வெளிப்படுத்த முடியாது; ஏனெனில் அது மிகவும் ஆழமானது.
மக்கள் என்னிடம் அடிக்கடி சொல்கிறார்கள்; ''ஸ்வாமிஜி, உங்களுடன் இணைந்த பிறகு, எங்கள் வாழ்வில் நடந்த பல விஷயங்களுக்கு, நாங்கள்உங்களிடம் மிகவும் நன்றியணர்வுடன் இருக்கிறோம்''.
நான் சொல்கிறேன் ... சமூகப் பண்பாட்டின் காரணமாக நீங்கள் எதற்காகவாவது ஒருவருக்கு நன்றி சொல்லலாம்; ஆனால் நன்றியுணர்வு என்பது ஒருவரை நோக்கியது அல்ல. நீங்கள் பெற்றுக் கொண்ட எதற்காகவாவது ஒருவரை நோக்கிய நன்றியுணர்வுடன் இருந்தால், அது வெறுமனே மனதின் நன்றி யுணர்வுதான். அது நன்றியணர்வின் ஆரம்பப்பள்ளி நிலை.
உண்மையான நன்றியுணர்வு என்பது உங்களுக்குள் நிகழும் ஒரு ஆழமான, தாங்க முடியாத உணர்வு; அது ஏதேனும் கிடைத்ததன் விளைவாக வருவதில்லை; வெறுமனே இருத்தலினாலேயே வருவது; பரிவுமிக்க உயிராற்றலாகிய பிரபஞ்ச இருப்புக்கன்மையை எண்ணுந்தோறும் எழுவது, அவ்வளவே. இந்த நன்றியுணர்விற்கு எந்தவிதமான உறவு முறையும் தேவையல்ல; அது யாரையும் அல்லது எதையும் சார்ந்து இருப்பதல்ல; அது இச்சை, கோபம், வெறுப்பு அல்லது அன்பு போன்ற உணர்ச்சிகளால் ஊசலாடிக் கொண்டு இருப்பதில்லை. அது வெறுமனே இருக்கிறது, அவ்வளவே.
நீங்கள் வெளிப்படுத்தக் காரணம் உங்கள் அஹங்காரம்தான்; நீங்கள் மரியாதை தெரியாதவர் என்று மக்கள் எண்ணுவதை நீங்கள் விரும்பவில்லை. அதனால், அதை வெளிப்படுத்தும் கணத்திலேயே
சொர்க்கமும் நரகமும் வெளியுலகில் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல. அவை நீங்களே உங்களுக்குள் உருவாக்கிக் கொள்பவை.
அதன் மதிப்பைக் குறைத்து விடுகிறீர்கள் அல்லது அதைப் போலியாக்கி விடுகிறீர்கள்.
உண்மையில், உங்கள் உடல் மொழியே உங்களுடைய நன்றியுணர்வின் நிலையைத் தெரிவித்து விடும்; உங்கள் கண்கள் தெரிவிக்கும்; உங்கள் பன்னகை தெரிவிக்கும்; உங்கள் அன்பும் உற்சாகமும், அதை வார்த்தைகளை விட இன்னும் நன்றாகவே தெரிவித்து விடும். நன்றியுணா்வினால் பெருகும் கண்ணீர் அதை வேறெதை விடவும் இன்னும் நன்றாகத் தெரிவிக்கும். உங்களால் தாங்க முடியாதபோது, நீங்கள் தளும்பிக் கொண்டிருக்கும் பொழுது, கண்ணீர் பெருகுகிறது.
நான் உங்களை அழச் சொல்லவில்லை! நீங்கள் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதை உங்கள் உடல் வெளிப்படுத்தி விடும், அதை உங்களால் மறைக்க முடியாது. அதுவே உங்களுடைய இருப்புத்தன்மையின் நிலையைக் காட்டும் உண்மையான அறிகுறி என்றுதான் சொல்கிறேன்.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இந்தக் கண்ணீர் எந்த ஜாதியையோ, இனத்தையோ அல்லது மதத்தையோ சார்ந்ததல்ல! அதை ஹிந்துக் கண்ணீர், முஸ்லிம் கண்ணீர் என்று வகைப்படுத்த முடியாது; அது எந்த மதத்தையும் சோ்ந்ததல்ல. அது இருப்புத் தன்மையைச் சேர்ந்தது; இருப்புத் தன்மை இவையெல்லாவற்றை யும் கடந்தது. நன்றியுணர்வு மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லாத் தடைகளையும், நெறிப்படுத்தல்களையும் கரைத்து விடக் கூடிய ஒன்றாகும்; அதனால்தான் அது இறுதியான, உயர்ந்த பிரார்த்தனையாக இருக்கிறது.
ஆழமான எதையுமே ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்தி விட முடியாது. கவிஞர்கள் அதை வெளிப்படுத்த
நன்றியுணர்வே இறுதியான, உயர்ந்த பூஜை அல்லது சமாப்பணம்.
கவிதைகள் எழுதலாம், ஒவியா்கள் அதை வெளிப் படுத்த ஒவியங்கள் வரையலாம், எழுத்தாளர்கள் அதை வெளிப்படுத்த ஏதேனும் எழுதலாம்; ஆனால் இவை எவற்றின் மூலமாகவும், ஒருபோதும் வெளிப்படுத்த முடியாத ஒரு பகுதி இருந்து கொண்டுதான் இருக்கும். பிரபஞ்ச இருப்புத்தன்மையை ஒருபோதும் சாதாரண விஷயங்களால் வெளிப்படுத்தி விட முடியாது. அதனால்தான் இது பெரும் புதிராகவும், கவர்ந்திமுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதனால்தான் அது உங்களுக்கு நிகழும் பொழுது, வார்த்தைகளின் விவரிப்பிற்கு அப்பாற்பட்ட கிளா்ச்சி தரக் கூடியதாக இருக்கிறது! அதனால்தான் அதை உங்களால் உணர மட்டுமே முடியும்; வெளிப்படுத்த முடியாது. அதனால்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு என்னிடம் வருகிறீர்கள்!
என்னிடம் நீங்கள் எந்தவிதமான நன்றியுணர்வையும் வெளிப்படுத்த வெளிப்படுத்தாமலே கூட, என்னால் அறிந்து கொள்ள முடியும். உங்களிடம் உண்மையான நன்றியுணர்வு தாங்க முடியாமற் போகும் பொழுது, அது உங்களுக்குத் தெரியும் முன்பே கூட எனக்குத் தெரிந்து விடும்! எனக்கு உங்கள் இதயத்தின் துடிப்பு தெரியும்! அதை உங்கள் கண் பார்வையின் ஆழத்தில் இருந்து தெரிந்து கொள்வேன்! உண்மையில், நீங்கள் உங்களை வெளிப் படுத்திக் கொள்ளும் பொழுது, உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடும்; ஏனெனில் பெரும்பாலான சமயங்களில், நீங்கள் முரண்பாடான வழிகளில் எண்ணவும் பேசவும் செய்கிறீர்கள். நீங்கள் உள்ளே ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்; வெளியே வேறொன்றை வெளிப்படுத்தக் கூடும்.
நினைவில் மலரும் பொழுது, அதை பிரபஞ்ச இருப்புத் தன்மை அறிகிறது.
உங்களால் ஒருபோதும் உங்கள் தலையின் வழியாகக் கடவுளை அடைய முடியாது.
வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய ஒரு ஆழமான நன்றியுணர்வுடன் இருங்கள்; அதுவே போதுமானது. அதை வெளிப்படுத்த வேண்டியதில்லை; வெறுமனே அதுவாகவே ஆகிவிடுங்கள், அவ்வளவே!
பாரதத்தில் குருநாதரின் பாதங்களைப் பற்றிக் கொள்ளும் ஒரு பழக்கம் இருக்கிறது. நீங்கள் குருநாதரை நோக்கிய அளவு கடந்த நன்றியுணர்வில் இருக்கும் பொழுது, அதை வெளிப்படுத்த, வழியெதுவும் கிடையாது. அப்பொழுது ரீங்கள் வெறுமனே அவரது பாதங்களைப் பற்றிக் கொள்கிறீர்கள் ; அவருடன் ஒன்றாக உணர்ந்து, உங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறீர்கள்.
என்னைப் பார்க்க, பலரும் பல இடங்களிலிருந்தும் வருகின்றனர். அவர்களில் சிலர், வெறுமனே என் முன் வந்து நிற்கின்றனர்; அவர்கள் எதுவும் சொல்வதில்லை. அவர்கள் கண்களிலிருந்து வெறுமனே ஆனந்தக் கண்ணீர் பொங்குகிறது. அவர்கள் எதையும் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக எண்ணுவதில்லை; கண்ணீரை விட அதிகமாக எதையும் தெரிவித்து விட முடியாது. அவர்கள் வெறுமனே தங்கள் இருப்புத் தன்மையிலிருந்து தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள்.
நீங்கள் ஒரு குருவின் இருப்பில் இருக்கும் பொழுது, ஆழ்ந்த நன்றியுணர்வுடனும், அன்புடனும் இருங்கள்; வெறுமனே அவரது அருகாமையில் இருப்பதற்கான இருங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களுடைய எல்லாக் கேள்விகளும் கரைந்து விடுவதையும், நீங்கள் ஒருவிதமான மகிழ்ச்சியால் நிரப்பப்படுவதையும் காண்பீர்கள்! நீங்கள் சுலபமாக நிரப்பப்படுவீர்களானால், சரியான இழையைப் பிடித்துவிட்டீர்கள்
உங்கள் தலையைக் கொண்டு நீங்கள் எப்போதும் வெளியேதான் தேடுவீர்கள். ஒருபோதும் உங்களால் கடவுளை வெளியே கண்டுபிடிக்க முடியாது.
என்று அர்த்தம். நீங்கள் சுலபமாக நிரப்பப்படவில்லையென்றால், அதிருப்தியுடனும் திரும்பிச் சென்றீர்களானால், தவறவிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம் !
ஒரு குருவுடன் இருக்கும் பொழுது, எப்பொழுதும் ஆழமான விழிப்புணர்வுடன் இருங்கள்; அப்பொழுது தவற விட மாட்டீர்கள். ஒரு குருவுடன் இருக்கும் பொழுது, நன்றியுணர் வுடன் இருப்பீர்களானால், குருவின் சக்தியானது உங்கள் இருப்புத் தன்மையின் மீது பொழியும்; வெறுமனே அவரது அனுபவத்தில் திளைப்பீர்கள்.
உங்களால் குருவை நோக்கி நன்றியுணர்வுடன் மட்டுமே இருக்க முடியுமானால், அவரது உடல் அருகாமைக்கான தேவையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து விடும். நன்றியுணர்வானது கால தேசங்களைக் கடந்து செல்ல உதவும். அது எல்லைகளைக் கரைத்து உங்களை விரிவடைய வைக்கும். நீங்கள் விரிவடையும் பொழுது, எல்லாவற்றுடனும் ஒன்றாக உணர்வீர்கள். சில காலம் கழித்து, நன்றியுணர்வு கூட ஒரு இடைஞ்சலாகத் தோன்றும் ; வெறும் அமைதி மட்டுமே நிலவும் !
நான் சொல்கிறேன்... உறவுகளில் கூட, ஏதோ ஓர் உறவு அன்பை இழக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக நீங்கள் எண்ணினால், நீங்கள் வெறுமனே மற்றவரை நோக்கிய ஒரு நன்றியுணர்வுடன் பிரிந்து விடலாம்; அவ்வளவுதான். அவருடன் அத்தனை காலம் சேர்ந்திருந்ததற்காகவும், அவருடன் சேர்ந்திருந்த காலத்தில் அனுபவித்ததற்காகவும், நன்றியுணர்வுடன், அவருக்கு விடை கொடுங்கள். அப்பொழுது, அதுவும் மிக அற்புதமாகவே இருக்கும் !
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைவாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு வாழ்க்கை மிகுந்த பரவசமாக இருக்கும்.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, எவ்வாறு நாங்கள் எதிரிகளிடம் நன்றியுணர்வுடன் இருக்க முடியும் ?'' என்று.
''ஏன் முடியாது?'' என்று நான் கேட்கிறேன். பெயரளவிலான உங்கள் எதிரிகளே உங்களை வலிமையாக்கும் பொறுப்பை ஏற்கின்றனர். அவர்கள் உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கின்றனர் ; உங்களை வளரச் செய்கின்றனர். உங்களைப் புண்படுத்துவதன் மூலம், நீங்கள் கையாள வேண்டிய, வாழ்க்கையின் வேறு விதமான தோற்றங்களைக் காட்டுகிறார்கள். அதனால் ஏன் அவர்களிடம் நன்றியுணர்வுடன் இருக்கக் கூடாது ?
நீங்கள் ஒவ்வொரு கணமும், நீங்கள் மேலும் மேலும் அறிவுக் கூர்மையடைய விரும்புகிறீர்கள், இல்லையா ? இவர்கள், இந்த வாய்ப்புகளை உங்களுக்குத் திறக்கவில்லையெனில், சூழ்ந்துள்ள நண்பர்களால் மட்டுமே ஏமாற்றப்பட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். அது ஒன்றும் பெரிதாக உதவிவிடப் போவதில்லை. நீங்கள் கஷ்டப்பட வேண்டும்; அப்பொழுதுதான் நீங்கள் உடைவீர்கள்; அறிவு மலரும்.
விதை பிளந்தால்தான் மரம் வளர முடியும். விதை, விதையாக இருப்பதிலேயே சந்தோஷமடைந்து விட்டால், அது காலப்போக்கில் சிதைந்து, செத்துப் போய் விடும். அவ்வளவே, அதற்கு எந்த விதமான உருமாற்றமும் நிகழாது.
பெயரளவிலான சாதாரணமானவர்கள் அதை அசிங்கமாகத் தோன்றச் செய்து விடுவார்கள். எல்லாமே, வெறுப்பிலிருந்து வெறுப்பை நோக்கியே செல்லும், கொடிய சுழலாகிவிடும் அளவிற்கு, அதை எடுத்துச் சென்று விடுவார்கள். பல குடும்பங்களில், குடும்பத் தகராறுகள்
அதிருப்தி உங்களை கீழ்நோக்கி இழுக்கும்; கனமாகவும் துயரமாகவும் ஆக்கும்.
இருக்கின்றன. அது அசிங்கமாகவும், கையாள முடியாத அளவிற்கு அதிகமாகவும் ஆகிவிடுகிறது; ஏன்? அதை அவ்வாறு வளர விட்டது நீங்கள்தான். நீங்கள் ஆழமான விழிப்புணர்வுடனும், அறிவுக் கூட்டையுடனும் செயல்படவில்லை. நீங்கள் மனநிறைவுடன் செயல்படவில்லையாதலால், அதை அருவறுக்கத் தக்க வகையில் வளர விட்டு விட்டீர்கள்.
நீங்கள் மனநிறைவுடன் செயல்பட்டிருந்தால், பகைமை வளர்வதற்கே இடமிருந்திருக்காது! நான் சொல்வது புரிகிறதா? நீங்கள் எப்பொழுதும் ஒரு மனநிறைவான நிலையிலேயே இருக்கும் பொழுது, இது போன்ற விஷயங்களுக்கு இடமேயிருக்காது. அது உங்களுக்கு ஒரு தெரியாத பாஷையாக இருக்கும். மற்றவர் பகைமையைத் தொடர விரும்பினால் கூட, உங்களுக்கு அவர் மீது எந்தவிதமான வெறுப்பும் இருக்காது. அவர் உறவை முறித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் மீண்டும் அதை நன்றியுணர்வுடனேயே முடிவுக்குக் கொண்டு வருவீர்கள்!
பல குடும்பங்களிலும், மக்கள் ஒருவரையொருவர் கண் களில் பார்த்துக் கொள்வதில்லை அல்லது ஒருவரையொருவர் பொது இடங்களில் தவிர்ப்பதற்காக, உண்மையில் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொள்கின்றனர். ஏன் இந்த தேவையற்ற விஷயங்கள் ? உங்கள் சக்தியை ஏன் இதுபோன்ற விஷயங்களில் விரயம் செய்து கொண்டிருக்கிறீர்கள் ? வெறுப்பு உங்களை விழுங்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அமைதியான விழிப்புணர்வுடனும், அறிவுக் கூர்மையுடனும் அதைப் பாருங்கள்; வெறுப்பு மறைந்து, அன்பும் நன்றியுணர்வும் மட்டுமே எஞ்சியிருக்கும்.
சரி... ஏதேனும் கேள்விகள் ?
ஸ்வாமிஜி... இந்நாட்களில் நன்றியுணர்வுடன் மட்டுமே இருக்கிறேன்; ஒரு விதத்தில்,
நன்றியுணர்வும் அதனுடன் வரும் மன நிறைவும். உங்களை இலேசாகவும், ஆனந்தமாகவும் ஆக்கும்.
உங்களிடம் எதையும் கேட்கும் விருப்பமும் இல்லை. ஆயினும் வினோதமாக நீங்கள் என் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு, அவ்வப்பொழுது என்னைக் கூப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்! இது என் தரப்பிலிருந்து ஒருவிதமான அதிருப்தியா அல்லது ஆசையா, ஸ்வாமிஜி?
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார்...!)
நீங்கள் ஒரு அற்புதமான விஷயத்தைக் கொண்டு வந்திருக் கிறீர்கள். இது, நீங்கள் உங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பாருங்கள், நீங்கள் பொறாமையாலோ அல்லது அதிருப்தியாலோ, உங்கள் மனதிலிருந்து கவனத்திற்காக ஏங்கினால், அது ஆரோக்யமற்றது. ஆனால் அன்புடனும், நன்றியுணர்வுடனும் கேட்கும் பொழுது, அது ஒரு ஆசையல்ல; அது என்னை நோக்கிய ஒரு ஆழமான அன்பு, அவ்வளவே.
ஒரு விருப்பத்துடன் பிரார்த்தனை செய்யும் பொழுது, அது வெறுமனே நன்றியற்றதாகவும், அஹங்காரத்தின் விளையாட்டாக வும் இருக்கிறது. ஆனால் ஆழமான அன்புடன் கேட்கும் பொழுது, அது நன்றியுணர்வும், பக்தியும் பிரார்த்தனை யாகி விடுகிறது. இந்த இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நீங்கள் அதிருப்தியென்றோ அல்லது ஆசையென்றோ அழைக்க முடியாது. காலப் போக்கில், இதுவும் உங்களிடம் இருந்து போய்விடும். இன்னொரு விஷயம்... உங்களுக்கு இந்த கேள்வியைக் கேட்கும் தைரியம் இருந்தது! பலரும் இதே போன்று இரகசியமாக எண்ணியிருப்பார்கள். ஆனால் வெளியே சொல்லவில்லை என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்! அவர்கள் பெயரில் என்ன இருக்கிறது என்றோ அல்லது வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்
உங்களால் எல்லாவற்றையும் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் நோக்க முடியுமானால், அது உங்களை மிகுந்த நன்றியுணர்வாலும், மன நிறைவாலும் நிரப்புகிறது.
கொண்டோ தங்களைத் தாங்களே குற்றிக் கொண்டிருப்பார்கள்! ஆம், பெயரில் ஒன்றும் இல்லைதான். ஆனால், நீங்கள் அனுபவபூர்வமாக புரிந்து கொள்ளுதலுடன் அதைக் கடந்து செல்ல வேண்டும்; உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டதே, அதை நீங்கள் தைரியத்துடன் கடந்து செல்ல விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
சரி! புரிந்து கொண்டீர்களா ? !
ஆமாம் ஸ்வாமிஜி...
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, நாங்கள் எங்கள் நன்றியுணர்வைக் காட்டுவதற்கு, பதிலுக்கு உங்களுக்கு என்ன செய்ய முடியும் ?'' என்று.
பதிலுக்கு நீங்கள் எனக்கு செய்யக் கூடிய மிகச் சிறந்த விஷயம் நீங்கள் மலர்வதே! என்று நான் சொல்வது வழக்கம். அதுவே பதிலுக்கு நீங்கள் எனக்கு செய்யக் கூடிய, நான் உங்களுக்கு செய்யக் கூடிய மிகச்சிறந்த விஷயமாகும். அதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் மனதில் புகுத்தி, நன்றியுணர்வை உங்கள் இருப்புத் தன்மையாகச் செய்தால், நீங்கள் பதிலுக்கு எனக்கு நிறையச் செய்ததாகக் கொள்ளலாம்.
ஆனால் என்னால் ஒரு விஷயம் சொல்ல முடியும் ... நீங்கள் பதிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணினால், சமூகத்திற்கு ஏதேனும் சேவை செய்யுங்கள்; மற்றவர்களுக்கு மகிழ்ச்சிக்கு, மற்றவர்களும் விழிப்படைய உதவுங்கள். அதை அவரங்காரத்தினாலோ அல்லது உயர்வு மனப்பான்மையாலோ
நீங்கள் ஒரு குழந்தையாகிவிடும் பொழுது, எதுவுமே ஒரு சலிப்பாக இருப்பதில்லை, எல்லாமே அற்புதமாகத்தான் இருக்கிறது.