அத்தியாயம் - 7 பொறாமையிலிருந்து விடுதலை - விஷூத்தி சக்கரம் -- சக்தி சாகர தியானம் -
விஷூக்கி சக்கரம் இருக்கிறது.
சமஸ்கிருதத்தில், விஷூத்தி அசுத்தங்களுக்கு அப்பாற்பட்ட என்று பொருள்.
இந்த சக்கரம் ஒப்பிடுவதாலும் பொறாமையாலும் பூட்டப்படுகிறது (அடைபடுகிறது).
இதை, மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நமது தனித்தன்மையைக் காட்டுவதன் மூலமும், நமது முழுத் திறனையும், தனித்துவத்தையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதன் மூலமும் மலரச் செய்ய முடியும்.
தியான முறை: சக்தி சாகர தியானம் - ஜென் புத்த மதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
நாம் எப்பொழுதும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம். எப்பொழுதும் மற்றவர்களிடம் இருப்பது அல்லது மற்றவர்கள் சாதித்திருப்பது நம்மை விட அதிகம் என்ற உணர்வில், நாம் மேன்மையை நம்மால் சகித்துக் கொள்ள முடியாத போது, நாம் பொறாமைப்படுகிறோம். ஒப்பிடுதல் விதையென்றால், பொறாமை பழக்கைப் போன்றது!
Freedom from Jealousy
ஒப்பிடுதலும் உண்மையில் இல்லாத ஒன்று?! நாமே அவற்றை உருவாக்கி விட்டு, பிறகு அதை எவ்வாறு வெல்வது என்பதைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். விஷூத்தி என்கிற இந்தச் சக்கரத்தின் பெயரிலிருந்தே, இந்தக் கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஷூத்தி என்றால் சுத்தம் என்று பொருள். அஷூத்தி என்றால் அசுத்தம் என்று பொருள். விஷூத்தி என்றால், சுத்தம் அசுத்தம் இரண்டையும் கடந்த என்று பொருள். அதனால் இந்தப் பெயரின் விளக்கம் என்னவென்றால். இந்தச் சக்கரம் ஒருபோதும் அசுத்தமடைவதில்லை; ஆதலால், ஒருபோதும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவையில்லாதது என்பதாகும்.
அதனால் இந்தச் சக்கரத்தைப் பூட்டும் (அடைக்கும்) ஒப்பிடுதல் பொருளில்லாத ஒரு நிழலைப் போன்றது. ஒப்பிடுவதற்கு அடிப்படையே கிடையாது. அது கலப்படமற்ற கற்பனை. கட்டுக்கதை.
ஒரு சின்ன கதை ....
சந்தா பாசு, உலகம் முழுவதும் நேரடிக் காட்சிகளை நடத்தும் ஒரு இசைக் குழுவின் உறுப்பினர். சந்தா, ஒரு குறிப்பிட்ட மேடை நிகழ்ச்சியில், ஒரு சில பாடல்களுக்குக் கறுப்பு டோபாவையும், மற்ற பாடல்களுக்கு சிவப்பு டோபாவையும் அணிவது என்று முடிவெடுத்தான். அவன் டோபாக்களை மாற்றி மாற்றி, நிகழ்ச்சியின் முதல் பாதியை முடித்து விட்டான். இடைவேளையில், காட்சி இயக்குனர் அவனது உடை மாற்றும் அறைக்கு வந்து, "ஐயா, நீங்கள் மீதிக் காட்சி முழுவதும் சிவப்பு டோபாவைத்தான் அணிய வேண்டும்' என்று சொன்னார். சந்தா ஆச்சரியமடைந்து ஏனென்று
கேட்டான். அவர் சொன்னார், ''மக்கள் கறுப்பு முடியணிந்தவனின் குரலை விட விட சிவப்பு முடியணிந்தவனின் குரலை மிகவும் ரசிக்கிறார்கள்''.
(சிரிப்பு!)
நாம் விஷயங்களை உள்ளது உள்ளவாறு பார்க்க முடியாத அளவிற்கு எப்பொழுதும் ஒப்பிடுவதில் மிகவும் மும்மூரமாக இருந்து கொண்டிருக்கிறோம்! நமது மனம், தான் பார்ப்பதில் உள்ள உண்மையான தன்மையை தவற விடும் அளவிற்கு ஒப்பிடுவதில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடிவதற்கு நாம் நமது ஒப்பிடும் மனோபாவத்தை விட்டுவிட வேண்டும்.
ஒப்பிடுதல் என்றால் என்ன ?
எங்கெல்லாம் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள் என்று யாராவது சொல்ல முடியுமா ? நீங்கள் தயாராகவே இருப்பீர்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் !
(பார்வையாளர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் ... )