அழகு, ஸ்வாமிஜி...
ஆ! அழகு! ஒவ்வொருவரும் ஒப்பிடுவதற்கு சொந்த விஷயங்கள் வைத்திருக்கிறார்கள்! மிகவும் சரி, அடுத்தது ....
செல்வம் ... பெயர் மற்றும் புகழ் ... அதிகாரம், கௌரவம்.. அறிவு ... ஆரோக்யம் ...
நாம் எப்பொழுதும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு. மற்றவர்களிடம் இருப்பது அல்லது மற்றவர்கள் சார்ந்திருப்பது நம்மை விட அதிகம் என்ற உணர்வில் பொறாமைப்பட ஆரம்பிக்கிறோம்.
சரி, இவையெல்லாம் பொதுவாக நாம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொள்வதற்கு உபயோகிக்கும் விஷயங்கள் இல்லையா ? இவற்றை நாம் 4 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்: பணம், அறிவு, அழகு (இது ஆரோக்யத்தை உள்ளடக்கியது) மற்றும் அந்தஸ்து. உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளும், எல்லாச் சிக்கல்களும் இந்த நான்கு விஷயங்களைத் தவிர வேறில்லை, சரிதானே?
இப்பொழுது ... உலகத்திலுள்ள எல்லா மக்களையும் அவர்களிடமிருக்கும் செல்வத்திற்கேற்ப ஏறுவரிசையில் ஒரு வரிசையாக நிற்க வைப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்களும் அந்த வரிசையில் ஒரு பகுதிதான். நீங்கள் எங்கிருப்பீர்கள் என்று நினைக்கிறீர்கள் ?
நடுவில் எங்கேயாவது ஸ்வாமிஜி.....
மிகவும் சரி! நீங்கள் நடுவில் எங்கேயாவது இருப்பீர்கள், இல்லையா ? உங்களால் வரிசையில் உங்களுக்கு இரண்டு பக்கமும் உள்ளவர்களை எண்ணக் கூட முடியாது. உங்களுக்கு முன்னரும் எண்ணற்றவர்கள் இருப்பார்கள். பின்னரும் இருப்பார்கள்.
மேலும் ஒவ்வொரு நிமிடமும் மக்களின் செல்வநிலை மாறிக்கொண்டே இருப்பதாலும், வரிசையில் அவர்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்! இப்பொழுது உங்களுக்கு முன்னால் உள்ள வரிசையின் நீளத்தைப் பார்த்து பொறாமைப்படுவதா அல்லது உங்களுக்குப் பின்னால் உள்ள வரிசையின் நீளத்தைப் பார்த்து தளர்வுடனும் கடவுளுக்கு நன்றியுணர்வுடனும் இருப்பதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.
ஒப்பிடுதலும் பொறாமையும் உண்மையில் இல்லாத ஒன்று. நாமே அவற்றை உருவாக்கி விட்டு, பின்னர் அவற்றை வெல்வதைப் பற்றி முடிவின்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் வரிசையில் எங்கிருப்பீர்கள் என்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அந்த எண்ணம் உங்களைத் தொடர்ந்து தொல்லை செய்து கொண்டே இருக்கும்! இல்லாத ஒரு நிகழ்வு உங்கள் மனதை வாட்டிக் கொண்டே இருக்கிறது! அது எதிர்மறை இருப்புடையது!
எதிர்மறை இருப்பு என்றால் என்ன என்பதை விளக்குகிறேன். எனக்குப் பக்கத்தில் இருக்கும் இந்த மணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மணியை நான் இங்கிருந்து அகற்ற விரும்பினால், இதை நான் சுலபமாக இந்த அறைக்கு வெளியே கொண்டு வைத்து விட முடியும். அதற்குப் பிறகு அது இங்கு இருக்காது, சரிதானே ? இந்த மணிக்கு நேர்மறை இருப்பு இருப்பதால், என்னால் இதைச் செய்ய முடிகிறது. நாம் இப்பொழுது, இந்த அறையில் இருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். உங்களால் அந்த இருளை எடுத்து வெளியே வைக்க முடியுமா? முடியாது...
ஆனால் நான் இந்த அறைக்குள் ஒளியைக் கொண்டு வந்தால், இருள் தானாகவே மறைந்து விடுகிறது, சரிதானே? ஏனெனில், இருளிற்கு நேர்மறையான-இருப்பு கிடையாது. அது எதிர்மறையான-இருப்பை உடையது. அதற்கு எதிர்மறை இருப்பு இருப்பதால், நம்மால் அதைச் சுலபமாக அகற்ற முடியாது.
அதே போல், ஒப்பிடுவதற்கு நேர்மறையான இருப்பு கிடையாது. அது நம் மனதில் மட்டுமே இருக்கிறது; அது நம் மனதில் ஒருவிதமான எண்ணத்தைச் செயல்படுத்தும் பொழுதே நிகழ்கிறது. ஒப்பிடுதல் நிஜத்தில் இல்லாததால், உங்களால் அதைச் சுலபமாக வெளியேறச் சொல்லி வெற்றி கொள்ள முடியாது. வெளிச்சத்தைக் கொண்டு வரும் பொழுது, இருள் மறைவது
போல, உங்கள் மனதில் ஒரு புரிந்து கொள்ளுதலைக் கொண்டு வருவதன் மூலம் அதை வெல்ல முடியும்.
சமஸ்கிருதத்தில் மாயை, மாயா என்று மொழி பெயர்க்கப்படுகிறது. யாமா இதி மாயா என்று சொல்கிறோம்; அதன் பொருள், எது இல்லையோ அது மாயா எனப்படுகிறது!
எது இல்லையோ, அது தொடர்ந்து தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது! அதுதான் மாயையின் தன்மை! நீங்கள்தான் அதற்கு உயிர் கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான். ஒப்பிடுதல் கலப்படமற்ற மாயை. சொல்லுங்கள்... ?
ஸ்வாமிஜி, நாம் வரிசையில் எந்தப் பக்கத்தையுமே பார்க்காமல் இருப்பதே மிகவும் நல்லது!
ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்? மேலும், எப்படியாயினும், பார்ப்பதற்கு ஏன் பயப்படுகிறீர்கள். நீங்கள் அதைப் பார்க்க பயப்படுவதே உங்கள் மனதிலிருந்து தப்பி ஓடப் பார்க்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. உங்களால் பாதிக்கப்படாமல் பார்க்க முடியுமானால்-நீங்கள் விட்டுவிட்டீர்கள்.
உங்களால் எல்லாவற்றையும் - உங்களிடம் இருப்பதையும் மற்றும் மற்றவர்களிடம் இருப்பதையும் பார்க்க முடியுமானால், அதன் பிறகும் உங்களால் எப்பொழுதும் நிறைவாக இருக்க முடியுமானால், இந்தச் சக்ரமானது சக்தியூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும். பாருங்கள், மிகவும் தெளிவாக இருங்கள் ... நான் "திருப்தி" என்ற வார்க்கையை உபயோகப்படுத்தவில்லை. மக்கள் அடிக்கடி
விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடிவதற்கு நாம் நமது ஒப்பிடும் மனோபாவத்தை விட்டுவிட வேண்டும்.
சொல்கிறார்கள், ''திருப்தியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று. உங்களால் ஒருபோதும் திருப்தியாக இருக்கக் கற்றுக் கொள்ள முடியாது.
ஒப்பிடுதல் மற்றும் பொறாமையின் எதிர்மறையான இருப்பை அனுபவ ரீதியாக புரிந்து கொள்ளுதலின் விளைவாக திருப்தி மலர வேண்டும். அது, உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைக்கான ஆழ்ந்த நன்றியுணர்விலிருந்து மலர வேண்டும். அதை வெளியிலிருந்து சுமத்த முடியாது. அது உள்ளேயிருந்து தான் மலர வேண்டும்.
உங்களுக்குச் சொல்லப்பட்டவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். மீண்டும் உண்மையைக் கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம், உங்களுக்குள் அதை அனுபவிக்கக் கூடிய, ஒரு வெளியைத் திறக்க முடியும். எந்த ஒரு பிரச்சினையானாலும் அதற்குள்ளேயே தீர்வும் இருக்கிறது. உங்களுக்கு, சிரத்தையான மனதுடன், அதை ஆழ்ந்து பார்க்கும் விருப்பம் மட்டுமே இருந்தால் போதுமானது. நீங்கள் வெறுமனே ஒப்பிடுதலையும் பொறாமையையும் விழிப்புடன் ஆழ்ந்து பார்த்தாலே அது உங்கள் மனதின் வெறும் விளையாட்டைத் தவிர வேறல்ல என்பதைக் காண முடியும்.
நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது, உங்களுக்கென்று ஒரு வீடும், காரும் மட்டும் இருந்தாலே போதுமானது என்று நினைப்பீர்கள். இந்த எண்ணமே உங்களைத் தளர்வாக இருக்கச் செய்து விடும். நீங்கள் சில கணங்கள் நன்றியுணர்வுடனும், நிறைவுடனும் கூட இருப்பீர்கள். கொஞ்ச நேரம் கழித்து, நீங்கள் உங்கள் காரில், வீட்டை விட்டு வெளியே வந்து, போக்குவரத்து சிக்னலில் நிற்கும் பொழுது, என்ன நடக்கிறது? ஒரு மெர்ஸிடிஸ்
இல்லாத ஒன்று (ஒப்பிடுதலும் பொறாமையும்) நம் மனதை வாட்டிக் கொண்டேயிருக்கிறது. அது எதிர்மறை இருப்புடையது.
பென்ஸ் கார் உங்கள் கார் அருகில் வந்து நின்றதும் ... உங்கள் மனம் அந்த சிந்தனையை அப்படியே மாற்றிக் கொண்டு விடுகிறது. உங்கள் கார் அவ்வளவாக நன்றாக இல்லை என்று நினைக்கத் தொடங்கி விடுகிறீர்கள். அது மெர்ஸிடிஸ் பென்ஸ் காராக இல்லாவிட்டாலும், நீங்கள் புதிய கார் வாங்க உகந்த நேரம் வந்து விட்டதாக நினைக்கத் தொடங்குகிறீர்கள்.
சில நிமிடங்களுக்கு முன்னர், உங்களிடம் இருந்த வற்றுடன் நீங்கள் சந்தோஷமாகத்தானே இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது என்னவாயிற்று? நீங்கள் புதிய ஆசையுடன்-கடன் வாங்கப்பட்ட ஆசையுடன் செயலாற்றத் தொடங்குகிறீர்கள். மிகவும் தெளிவாக இருங்கள் ... இது உங்கள் சொந்த ஆசையல்ல. அது மற்ற எவருக்கோ சொந்தமான, கடன் வாங்கப்பட்ட ஆசை. அது அந்த பென்ஸ் காரினுடைய சொந்தக்காரரின் ஆசை. இவ்வாறு தான் நீங்கள், உங்கள் மனதில், ஒப்பிடுதல் மற்றும் பொறாமைப்படுதலின் விளைவால், மற்றவர்களின் ஆசையின் மீது செயல்படத் தொடங்குகிறீர்கள்.
உங்கள் வீட்டில் ஒரு குளிர்சாதனப் பெட்டியின் அவசியத்தை நீங்கள் ஒருபோதும் உணர்ந்திருக்கமாட்டீர்கள். ஆனால், உங்கள் அண்டை வீட்டுக்காரர் ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்கியவுடன், நீங்கள் அது இல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ண ஆரம்பித்து விடுகிறீர்கள்! உடனே ஒரு குளிர்சாதனப் பெட்டி வேண்டியதன் அவசியத்திற்கான, உலகத்திலுள்ள எல்லாக் காரணங்களையும் கண்டுபிடித்து விடுவீர்கள். இவ்வளவு நாட்கள் குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் சமாளித்துக் கொண்டுதானே இருந்தீர்கள்! எதுவும் மாறவில்லை, ஆனால் என்ன நடந்தது ? உங்கள் மனம் ஒப்பிட ஆரம்பித்து விட்டது.
வெளிச்சத்தைக் கொண்டு வரும்பொழுது இருள் மறைவது போல, உங்கள் மனதில் ஒரு புரிந்து கொள்ளுதலைக் கொண்டு வருவதன் மூலம் அதை (ஒப்பிடுதலையும் பொறாமையும்) வெல்ல வேண்டும்.
ஆனால் கடன் வாங்கப்பட்ட ஆசைகள் ஒருபோதும் உங்கள் சொந்தமாக முடியாது. அது உங்கள் மனதில் மிகவும் நுட்பமாக நிகழ்வதால், கடன் வாங்கப்பட்ட ஆசையின் சரியான மூலம் தெரிந்து கொள்ளப்படாமலேயே போய் விடுகிறது. அது மனதின் மிகவும் நுட்பமான, தந்திரமான ஒரு விளையாட்டு. ஆனால் நாம் எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம்.
ஒரு சின்ன கதை ....
ஒருவன் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு அவன் இருந்த இடத்திற்குத் திரும்ப வந்தான். அவன் நண்பர்களுடன் அக்கம்பக்கமெங்கும் சுற்றி வந்தான். அங்கு பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரிய மடைந்தான். நண்பனிடம் விமர்சித்தான், ''வளமை சுற்றுப்புறத் தோற்றத்தையே முழுமையாக மாற்றி விட்டது!'. நண்பன் சொன்னான், ''இல்லை, வளமை இல்லை, வெறும் சாதாரணப் பொறாமை''.
நாம் எப்பொழுதும் மற்றவர்களைத் தோற்கடிக்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் கடன் வாங்கப்பட்ட ஆசைகளுடன் இருப்பீர்களானால், ஒருபோதும் நிறுத்த மாட்டீர்கள். ஏனெனில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் சமயத்தில் இன்னொரு கடன் வாங்கப்பட்ட ஆசை எங்கிருந்தாவது வரும்; நீங்கள் மீண்டும் ஒரு முறை ஓடத் தயாராகி விடுவீர்கள்!
நீங்கள் உங்களுக்குள் மையம் கொள்ளாததால் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பீர்கள். உங்கள் மையம் மாறிக் கொண்டே இருக்கிறது. உங்கள் மையம் மற்றவர்களிடம் இருக்கிறது, உங்களுக்குள் அல்ல! அவர்களுடைய மையமும் வேறெங்கோ இருக்கிறது, அவர்களுக்குள் அல்ல! ஒட்டு மொத்தமாக ஊசலாடிக்
எது இல்லையோ, அது தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் மாயையின் தன்மை, நீங்கள்தான் அதற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கொண்டிருக்கும் மையத்தில் இல்லாத எண்ணங்கள், மற்ற உணர்ச்சிகளுக்கேற்றவாறு நீங்கள் எவ்வளவு ஓட வேண்டும், எவ்வளவு இழுபறி செய்ய வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் ஒரு பொம்மையாகி விடுகிறீர்கள்.
நான் சொல்கிறேன் ... ஒவ்வொரு முறை நீங்கள் எதையேனும் விரும்பும் போதும், தனியே அமர்ந்து உண்மையிலேயே அது உங்களுக்கு வேண்டுமா அல்லது மற்றவர்களிடம் இருப்பதால் அதை விரும்புகிறீர்களா என்று எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு ஆசை எழும் போதும், அதை நேர்மையாக ஆராய்ந்து பாருங்கள். உங்களுடைய எல்லா கௌரவப் பிரச்சினைகளையும் விட்டு, ஒரு சுய ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் தனியாக இருக்கும் பொழுதே உங்கள் கௌரவத்தை விட முடியவில்லை யென்றால், மக்களுடன் இருக்கும் பொழுது எவ்வாறு விடப் போகிறீர்கள் ?
நீங்கள் உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதாயிருந்தால், நடைபாதையில் இறப்பதாயிருந்தாலும், அமைதியுடனும், முழுத் திருப்தியுடனும் இறக்க முடியும். கடன் வாங்கப்பட்ட ஆசைகளுடன் முழு வாழ்க்கை வாழ்ந்தாலும், நீங்கள் பளிங்கு மாளிகையில் வாழ்ந்தாலும், உங்களால் ஒருபோதும் உண்மையான மன நிறைவைக் காண முடியாது. மேலும் நிறைவேற்றப்படாத, கடன் வாங்கப்பட்ட ஆசைகளில் இருந்து விடுதலை பெற முடியாமல் நீட்டிக்கப்பட்ட, இழுபறியான இறப்பையே பெறுவீர்கள்.
ஜைன மதத்தில், நீங்கள் பிறக்கும்பொழுதே உங்கள் வாழ்க்கைக்குத் உங்களுடனேயே அனுப்பப்பட்டு விடுவதாக ஒரு நம்பிக்கை
நீங்கள் வெறுமனே விழிப்புணாவுடன் ஒப்பிடுதலையும் பொறாமையும் பார்த்தாலே, அது உங்கள் மனதின் வெறும் விளையாட்டைத் தவிர வேறல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள். இருக்கிறது. இதன் பொருள், பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களை இந்த பூமிக்கு அனுப்பும் முன்னரே, உங்களுடைய உண்மையான தேவைகளை கொடுத்தே அனுப்புகிறது என்பதுதான்.
ஆனால் இந்த சக்தியை உங்களுடைய கடன் வாங்கப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள உபயோகிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான், நீங்கள் உங்களுக்கு ஒன்றுமே கொடுக்கப்படவில்லை, எதுவுமே போதுமான அளவு இல்லை என்று உணர ஆரம்பிக்கிறீர்கள். எதுவும் நிகழாததால் நீங்கள் சோர்வாகவும், எல்லாச் சக்தியையும் இழந்துவிட்டதாகவும், ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் உணர்கிறீர்கள். இவ்வாறுதான் பிரச்சினை உருவாகிறது.
பாருங்கள் ... வேறுபாடு இருக்கிறது. உங்கள் தேவைகள் அனைத்திற்கும் ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. உங்கள் தேவைகளைத் திருப்திப் படுத்தி விட முடியும்; ஆனால் உங்கள் ஆசைகளைத் திருப்திப்படுத்துவது முடியாத காரியம். ஏனெனில் எப்பொழுதும் அவை மாறிக் கொண்டும், தெளிவற்றும் இருக்கின்றன. ஒவ்வொரு முறை ஒரு விருப்பம் அல்லது ஆசை நிறைவேறும் பொழுதும், இன்னும் நூறு வந்து விடுகிறது.
முடிவேயில்லாமல் ஆசைப்படுவது நமது இயல்பு. ஏனெனில் நாம் தொடர்ந்து மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து, அவையனைத்தும் நமக்கு வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் இப்பொழுது இந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால் ஆழ்ந்து ஆராய்வீர்களானால், இது உண்மை யென்பதைக் காண்பீர்கள். உங்கள் மனம் மிகவும் தந்திரமாகவும், சாத்வீகமாகவும் செயல்படுவதால், உங்களால் இதை முதல் தடவையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வீட்டிற்கு மின் விசிறி வாங்குவதற்காகக் கடைக்குச் செல்கிறீர்கள். ஆனால் வழியில் சில நண்பர்களைச் சந்திக்கிறீர்கள். அவர்கள் வேறு கடைகளில் வேறு சில பொருட்களை வாங்கப் போவதாகச் சொல்கிறார்கள். உடனே, உங்களுக்கும் அவற்றை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்து விடுவதால், உங்கள் பாதையை மாற்றிக் கொண்டு, அவர்களுடன் சென்று அவற்றை வாங்குகிறீர்கள். பிறகு உங்களுக்குத் தேவையான மின் விசிறியை வாங்குவதற்குப் போதிய பணம் இல்லை என்பதை உணர்கிறீர்கள் !
நீங்கள் ஒப்பிட ஆரம்பித்துக் கொண்டும், மற்றவர்களின் ஆசைகளை வாழ்ந்து கொண்டும் இருந்தீர்களானால், எங்கு நிற்கிறீர்கள் என்பதே தெரியாததால், ஆழமான தொல்லையில் மாட்டிக் கொள்வீர்கள். எப்பொழுதும் உங்களுடைய சொந்த அளவுகோலைக் கொண்டு உங்களை அளந்து கொள்ளுங்கள்; ஒருபோதும் மற்றவர்களின் அளவு கோல்களைக் கொண்டு அல்ல. அது மிகவும் முட்டாள்தனமான மற்றும் அபாயகரமான காரியம்.
பரதத்தில் குரங்குகளைக் குரங்காட்டிகள் இருக்கிறார்கள். அவர்கள் கையில் ஒரு கோலை வைத்துக் கொண்டிருப்பார்கள். குரங்கைக் குத்தி, அவர்கள் சொல்வதையெல்லாம் செய்ய வைக்க, உபயோகப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் கோலை ஆட்டி, ''டான்ஸ் ஆடு ராமா! டான்ஸ் ஆடு!'' என்று சொல்வார்கள். குரங்கு நடனம் ஆடும். பிறகு
கடன் வாங்கப்பட்ட ஆசைகள் ஒருபோதும் உங்கள் சொந்தமான முடியாது.
அவர்கள், ''குட்டிக் கரணம் போடு ராமா! குட்டிக்கரணம் போடு!'' என்று சொல்வார்கள். குரங்கு குட்டிக்கரணம் போடும். குரங்கு வெறுமனே கோலின் இசைக்கேற்ப ஆடும்.
அது போல நாமும் நமது வாழ்க்கையை நடத்த ஒப்பிடுதல் என்னும் கோலை அனுமதித்திருக்கிறோம். நாமும் அதன் இசைக் கேற்ப ஆடிக்கொண்டு, நமக்கு இயல்பான விஷயங்களைச் செய்யாமல், அந்தக் கோலின் கட்டளைக்கேற்றபடி செய்து கொண்டிருக்கிறோம்.
ஒப்பிடுதலுக்கும், நமது எதிர்பார்ப்புகளுக்கும் ஒரு முடிவே கிடையாது. நாம் எப்பொழுதும் இன்னும், இன்னும், இன்றும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். நீங்கள் தொடர்ந்து இந்த பகுதிக்கும், அதிகாரத்திற்குமான "எலி ஒட்டப் பந்தயத்தில்" ஒடிக் கொண்டேயிருக்கிறீர்கள். பிறகு எவ்வாறு உங்களால் தளர்வாகவும், மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் இருக்க முடியும் ? மேலும் இந்த எலி ஒட்டப் பந்தயத்தில் ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் வெற்றி பெற்றாலும், எலியாகத்தான் இருப்பீர்கள்!
ஆனால் எப்படியோ, பிற்காலத்தில், ஒரு சமயத்தில், இந்த எலி ஒட்டப்பந்தயத்தில் வெற்றி பெறுவது கூட மன நிறைவைக் கொடுப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள்; வெற்றி கூட ஒரு ஆழமான திருப்தியற்ற உணர்வை நோக்கியே இட்டுச் செல்கிறது. இதற்குக் காரணம், புறவுலகம் சார்ந்த பொருள் ரீதியான ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட போதிலும், நீங்கள் எப்பொழுதும் உங்கள் இருப்புத்தன்மையை அலட்சியம் செய்தே வந்திருக்கிறீர்கள்.
அதிருப்தியின் அழைப்பு உங்கள் இருப்புத் தன்மை யிலிருந்துதான் வருகிறது. அதை நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது,
உங்களுக்கு ஒவ்வொரு ஆசை எழும்பொழுதும், அதை நீங்கள் நேர்மையாக ஆராய்ந்து பாருங்கள்.
மிகவும் திரும்புகிறீர்கள். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாத பொழுது, நீங்கள் மனச் சோர்வை நோக்கித் திரும்புகிறீர்கள். ஏனெனில், உங்களுக்கு எங்கு தவற விடுகிறீர்கள் என்பது தெரியவில்லை ; அந்த இமை எங்கேயென்று தெரிய வில்லை; அதை எங்கே இழந்தீர்கள் என்பது தெரியவில்லை: எங்கே நீங்கள் தவறு செய்தீர்கள் என்பதும் தெரியவில்லை.
பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்பொழுதும் நம் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது; அவ்வளவு அபரிமிதமாக இருக்கிறது - என்பதை என் அறைபவத்திலிருந்து சொல்ல முடியும்! ஆனால் நாம் அதிருப்தியுடன் இருக்கும் ஒழுங்கு முறைக்கு நன்றாகப் பழக்கப்பட்டிருக்கிறோம். நாம் பெற்றுக் கொள்வதனைத்தையும் கொண்டிருக்கிறோம். நாம் எப்பொழுதும் இன்னும் அதிகமாக வேண்டும் என்றே விரும்புகிறோம். ஏனெனில், வேறு யாரோ ஒருவரிடம் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் ஒப்பிடுதல் நமக்குள் ஒரு விழிப்பற்ற செயல்முறையாகி விட்டது; ஏனெனில் நமக்கு உள்ளேயே ஒரு மையத்தைக் கொண்டு ஒரு மனநிறை வான வாழ்க்கையை வாழ்வது எவ்வாறு என்பது நமக்குத் தெரியவில்லை.
ஒரு சின்ன கதை ....
கடவுளைக் காண்பதற்காக ஒருவன் காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தான். கடவுள் மனமிரங்கி அவனுக்குக் காட்சியளித்தார். அவனுக்கு என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்றார். அவன் மிகுந்த சந்தோஷமடைந்து, தான் ஒரு நிலச் சுவான்தாராக இருந்ததாகவும், எல்லாச் செல்வத்தையும் இழந்து விட்டதாகவும், மீண்டும் செல்வந்தனாக விரும்புவதாகவும்
ஒவ்வொரு முறை நீங்கள் எதையேனும் விரும்பும் தனியே அமர்ந்து, உண்மையிலேயே அது உங்களுக்கு வேண்டுமா, அல்லது மற்றவர்களிடம் இருப்பதால் அதை விரும்புகிறீர்களா என்று எண்ணிப் பாருங்கள்.
சொன்னான். கடவுள் அவனிடம் மிகுந்த பரிவுடன், அடுத்த நாள் காலை முதல் மாலை வரை அவன் எவ்வளவு தூரம் ஒடுகிறானோ, அந்தப் பிரதேசம் முழுவதும் அவனுடையதாகி விடும் என்றார். அவன் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். மறுநாள் விடியலுக்கும் முன்பாகவே ஒட ஆரம்பித்தான். அவனால் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடினான். மதியம் நெருங்கிய சமயம், பசி தலை காட்டியது; ஆனால் அவன் அதைக் கண்டு கொள்ளாமல் ஓடிக் கொண்டிருந்தான். முன்மாலையில், தாகமும் சோர்வும் அவனை இறுகப் பற்றியது; ஆனால் பல ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்டிருந்த அண்டை நிலச் சுவான்தாரரைப் பற்றிய எண்ணம் அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது. அவனது சமகாலத்திய செல்வந்தா்களின் உருவங்கள் அவன் மனதில் வந்து கொண்டிருந்தது; அவன் தொடர்ந்து ஒடினான். குரியன் அஸ்தமிப்பதற்குச் சற்று முன்னர், மயக்கம் வருவது போலவும் பலவீனமாகவும் உணர்ந்த போதிலும், இன்னும் சில அடிகள் சமாளித்து ஓடினான். அந்தி மயங்கும் நேரத்தில், அவன் தள்ளாடி... இறந்து விழுந்தான்.
நாம் அனைவரும் நமது வாழ்க்கையை இவ்வாறு தான் வாழ்கிறோம். 'ஏன் ஒடிக்கொண்டிருக்கிறோம் ?' என்று சிந்திப்பதற்குக் கூட நிற்காமல் ஒட்டப் பந்தயத்தில் ஒடிக் கொண்டிருக்கிறோம் ! மற்ற அனைவரும் ஒடிக் கொண்டிருப்பதால் நாமும் ஓடுகிறோம்! சங்கராச்சாரியார் இதை மிகவும் அழகாக "ததாகிம், ததாகிம்…" (இதன் பொருள் - அடுத்தது என்ன, அடுத்தது என்ன ... ) என்று விவரிக்கிறார். நாம் எப்பொழுதும் "அடுத்தது என்ன"'என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம்மை ஒட வைக்கிறது.
சந்தாபாசு அவன் வீட்டு வாயிற்படியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் நண்பன் என்ன விஷயம் என்று கேட்டான்.
நீங்கள் உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதாயிருந்தால், நடைபாதையில் இறப்பதாயின், அமைதியுடனும், முழு திருப்தியுடனும் இறக்க முடியும்.
அவன் சொன்னான், ''என்னுடைய அத்தைப் பாட்டி அவளுடைய எல்லாச் சொத்துக்களையும் எனக்குக் கொடுத்து விட்டு செக்துப் போய் விட்டாள்'. அவன் நண்பன் குழப்பமடைந்து, ''அவளுக்கு மிகவும் வயதாகி விட்டது. மேலும் அவள் எல்லாச் செல்வத்தையும் உனக்குத்தான் விட்டுவிட்டுச் அழுகிறாய் ?'' என்று கேட்டான். சந்தா பதிலளித்தான், ''உனக்குத் தெரியாது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால், என் மாமா அவரது எல்லாச் சொத்துக் களையும் எனக்குக் கொடுத்து விட்டுச் செத்துப் போய் விட்டார்''. நண்பன் குழப்பமடைந்து கேட்டான், ''அதற்கு ஏன் அழுகிறாய்?'. சந்தா தொடர்ந்தான், "அதற்கும் முந்தைய வாரம் என் அத்தை எல்லா சொத்துக்களையும் எனக்குக் கொடுத்து விட்டுச் செக்குப் போய் விட்டாள்'. இதற்குப் போய் சந்தா எதற்கு அழ வேண்டும் என்று நண்பனால் பரிந்து கொள்ள முடியவில்லை. அவன் கேட்டான். "சந்தா, தயவு செய்து சொல், இதற்காக ஏன் அழுகிறாய் ?''. சந்தா சொன்னான், ''உனக்குத் தெரியாது, இனிமேல் செத்துப் போய் சொத்துக்களைக் கொடுப்பதற்கு உறவினர்கள் யாரும் இல்லை!''.
(பலத்த சிரிப்பு!)
இது ஒரு மிகைப் படுத்தப்பட்ட கதைதான். ஆனால் நாமும் இது போல்தான் இருக்கிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். நாமெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையிடமிருந்து எதைப் பறித்துக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டிருக் கிறோம். நமது பெயரளவிலான அன்பெல்லாமே போத்தைத் தவிர வேறல்ல. சில விஷயங்களில் வெளிப்படையாக புலப்படும் வகையிலும், மற்ற விஷயங்களில் நுட்பமாக சுலபமாக உணர முடியாத வகையிலும் இருக்கிறது. உண்மையில், அது, உங்களால் விழிப்பின்றி
கடன் வாங்கப்பட்ட ஆசைகளுடன் முழுவாழ்க்கை வாழ்ந்தாலும், நீங்கள் பளிங்கு மாளிகையில் வாழ்ந்தாலும், உங்களால் ஒருபோதும் உண்மையான மனநிறைவைக் காண முடியாது.
செயல்படுத்தப்படுவதால், உண்மையான அன்பென்றே எண்ணத் தோன்றுகிறது.
ஒப்பிடுவதற்கான அடிப்படைக் காரணம், நம்மிடம் மன நிறைவில்லாததே; நம்மிடமிருக்கும் அனைத்தும் நமக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை. காலையிலிருந்து இரவு வரை, ஒரு 24 மணி நேரத்திற்கு நீங்கள் கண் பார்வையை இழந்து விட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கண்களை மூடிக் கொண்டு உங்கள் வேலைகளைச் செய்ய முயற்சி செய்யுங்கள். சில நிமிடங்களிலேயே உங்களுடைய வழக்கமான, சகஜமான வேலைகள் கற்பனைக்கெட்டாததாகி விடுவதை உணர்ந்து கொள்வீர்கள். ஏன் 24 மணி நேரம், வெறும் சில நிமிடங்களிலேயே, கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விடுவீர்கள். மீண்டும் கண்களைத் திறந்து உலகத்தைப் பார்ப்பது ஒரு மிகப் பெரும் விடுதலையாக இருக்கும். அப்பொழுது ஒரு வேளை உங்களுடைய கண் பார்வைக்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லக் கூடும்!
எப்பொழுதாவது நீங்கள் பார்வையற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு, உங்களுக்குக் கண்பார்வையைக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறீர்களா? நீங்கள் எப்பொழுதாவது உங்களுடைய கண் பார்வைக்காகத் தன்னிச்சையாக நன்றி யுணர்வுடன் இருந்திருக்கிறீர்களா? இல்லை! ஏன்? ஏனெனில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றை எப்பொழுதும் நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள். அதுதான் காரணம். "அது எப்படியும் இருக்கிறது ... நாம் அடுத்தது என்னவென்று பார்ப்போம்', என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்பொழுதும் நம் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது.
நாம் அனைவரும் இந்த மூன்று அச்சுக்களைச் சுற்றியே செயல்படுகிறோம்: செய்தல்1, பெறுதல்², இருத்தல்³. இருத்தலை அனுபவிக்காமல், பெறுவதற்காகச் செய்வதே நமது எல்லாத் துயரங்களுக்கும் ஒரே காரணம். செய்வதால் ஒருபோதும் பெறுவதை ஈடு செய்ய முடியாது! ஒவ்வொரு முறையும் நாம் கடினமாக உழைத்து நமது ஒரு ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொழுதும், நம்மை ஒட வைக்க இன்னும் பல ஆசைகள் வந்து விடுகிறது.
"நான் இப்பொழுது வேலை செய்து விடுகிறேன். பிறகு அனுபவித்துக் கொள்கிறேன்'' என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். பிறகு, நீங்கள் திரும்ப வந்து அனுபவிக்கலாம் என்று எண்ணாதீர்கள். நான் சொல்கிறேன், அது ஒருபோதும் நடக்காது. ஒவ்வொரு 'நாளை'யும் இன்று என்ற ரூபத்திலேயே வருகிறது. செய்தல் ஒவ்வொரு கணமும் இருத்தலை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும் ; அப்பொழுதுதான் நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வாழ்தலைத் தள்ளிப் போடாதீர்கள்! கொண்டாடுங்கள்! வாழ்க்கையை அனுபவியுங்கள் - இப்பொழுதில்லையெனில் எப்பொழுதும் இல்லை. நாமனைவரும், பிறகு அனுபவித்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இறுதியில் கல்லறையைச் சென்றடைந்து விடுகிறோம். நீங்கள் ஓடு பாதைக்கு வந்து விட்டாலே, வாழ்க்கையை அனுபவிக்கும் உண்மையான திறனை இழந்து விடுகிறீர்கள். எவ்வாறு அனுபவிப்பது என்பதை மறந்து விடுகிறீர்கள்.
"அடைவதை விட துரத்திக் கொண்டிருப்பதில்தான் அதிக சுகம் இருக்கிறது!' என்று ஒரு கூற்று இருக்கிறது. எப்பொழுதுமே, நீங்கள் எதையாவது துரத்திக் கொண்டிருக்கும்