KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/இருள் தியானம்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

இருள் தியானம்

(நீடிக்கும் காலம் : 30 நிமிடங்கள்)

கண்களை மூடி, முதுகு, கழுத்து, தலை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையுமாறு வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். இது ஒரு வழிகாட்டுதலுடன் செய்யப்படும் தியானம். நான் சொல்லச் சொல்ல, நீங்கள் நான் சொல்வது போல மனதில் கற்பனை செய்து இதனுள் ஆழமாகச் செல்லுங்கள். இந்த தியானம் நீங்கள் இருளுடன் பழக்கம் கொள்ளவும், நட்புணர்வை வளர்த்துக் கொள்ளவும் உதவும். இது இருளை அன்புடன் அரவணைத்துக் கொள்ள உதவும். இது இறப்பு அல்லது இருளைப் பற்றிய பயத்தில் வோ விட்டுள்ள உங்கள் தினசரி பயங்களை வெற்றி கொள்ள உதவும். சரி... நாம் இப்பொழுது ஆரம்பிப்போம்.

ஆனந்தமாக இருங்கள்!

(மென்மையான இசை போடப்படுகிறது)

ஆழமாக மூச்சை வெளியே விடுங்கள். உடல் தானாகவே மூச்சை உள்ளே எடுத்துக் கொள்ள அமைதியுங்கள் ... (2 அல்லது 3 நிமிடங்கள்)

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து, நடந்து, தெருக்களின் வழியே, நகரத்திற்கு வெளியே, ஒரு அடர்த்தி யான, இருள் மிக்க, காட்டுப் பகுதிக்குச் செல்கிறீர்கள். இருள் அதிகரிக்கிறது; நீங்கள் இப்பொழுது பழக்கமான பகுதியில் இல்லை ; அடர்ந்த காட்டின் வழியே நடந்து செல்கிறீர்கள்; நீங்கள் ஒரு விதமாக நிச்சயமற்றும் அச்சத்துடனும் இருக்கிறீர்கள் ; தூரத்தில் ஒரு குகையைக் காண்கிறீர்கள்; அதனை நோக்கி நடந்து செல்கிறீர்கள்; குகைக்குள் மிகவும் இருளாக இருக்கிறது ... (5 நிமிடங்கள்)

குகைக்குள் இருள் மிகவும் சக்தி மிக்கதாக இருக்கிறது; அது இதற்கு முன் நீங்கள் ஒரு போதும் அறியாதது; நீங்கள் குகையின் உள்ளே சென்று அமர்கிறீர்கள்; நீங்கள் கைகளை நீட்டினால் கூட எதையும் உணர முடியவில்லை; ஒரு சப்தமும் இல்லை; உங்கள் புலன் களால் எதையும் உணர்ந்து, சொல்ல முடியவில்லை; நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை ... (5 நிமிடங்கள் )

இருள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் உங்களிடம் இருப்பதையெல்லாம் இழப்பதைப் போல் உணர்கிறீர்கள்; உங்களுடைய உடலையும் உணர முடியவில்லை; உங்கள் மனம் எண்ணுவதை நிறுத்திவிட்டது; உங்களிடம் ஞாபக சக்தியும் இல்லை; உங்களிடம் புலன்கள் இல்லை, உடல் இல்லை, மனம் இல்லை, நினைவும் இல்லை ; உடலும் மனமும் இல்லாத நீங்கள் யார் என்று வியப்படைகிறீர்கள்.

நீங்கள் உங்களை கேட்டுக் கொள்கிறீர்கள், "நான் யார்?". நீங்கள் உடல் சார்ந்த கட்டுப்பாடுகளில் இருந்தும், உணர்ச்சித் தொடர்புகளில் இருந்தும் விடுபட்டு, தனியாக உணர்கிறீர்கள்; இதை ஆழமாக உணருங்கள் ... (5 முதல் 10 நிமிடங்கள்)

இப்பொழுது இருள் உங்களுக்குப் பழகி விடுகிறது; இருள் நண்பனாக, வழிகாட்டியாக ஆகி விட்டது; அது உங்களிடம் செ ால்கிறது, 'நீங்கள் உடலோ அல்லது மனமோ அல்ல' என்று; அவை இல்லாமலே நீங்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்; இருள் உங்களுக்கு வழி காட்டுகிறது; நீங்கள் உங்கள் தாயின் கருவறையில் இருப்பதைப் போல கதகதப்பாகவும் சுகமாகவும் உணர்கிறீர்கள்; பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணர்கிறீர்கள்; நீங்கள் வீட்டில் இருப்பது போல உணர்கிறீர்கள்; நீங்கள் எதைச்

சேர்ந்தவரோ ... எங்கிருந்து வந்திருக்கிறீர்களோ ... எங்கு செல்லப் போகிறீர்களோ ... அதுவாகத்தான் இருக்கிறீர்கள் ... (5 நிமிடங்கள்)

இப்பொழுது, மெதுவாக உங்கள் எல்லைக்குள் வாருங்கள். உங்கள் உணர்கிறீர்கள்; உங்களுக்கு ஞாபகம் வருகிறது; நீங்கள் நிலை பெறுகிறீர்கள்.

இப்பொழுது மெதுவாக எழுந்து குகையை விட்டு வெளியே வாருங்கள்; வெளியில் இருக்கும் வெளிச்சத்திற்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்; திரும்ப நடக்க ஆரம்பித்து நகரத்திற்குள் சென்று, நீங்கள் அமர்ந்திருந்து இடத்திற்கு வாருங்கள் ; மெதுவாக, மிக மெதுவாக, உங்கள் கண்களை திறவுங்கள் (2 அல்லது 3 நிமிடங்கள்)

ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!

நாம் அடுத்த அமர்வில் சந்திக்கும் வரை, இந்த அமைதியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நன்றி.