ஸ்வாமிஜி... எப்பொழுதும் ஓய்வாகவும் தளர்வாகவும் இருப்பது எப்படி ?
உங்கள் விழிப்புணர்வு எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்குமானால், நீங்கள் எப்பொழுதும் ஒய்வாகவும்
நமது கற்பனைகள் மிகையாக இருந்தால், உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாக இருக்கும். அதனால் மன இறுக்கமும் அதிகமாக இருக்கும்.
தளர்வாகவும் இருக்கலாம். இந்த நிலையை அடைவதற்கு தியானம் ஒரு திறவுகோலாகும். குறைந்தபட்சம் புத்தி பூர்வமான நிலையிலிருந்தாவது இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பிறகு இதைச் சிறு சிறு இடைவெளிகளில் உணர ஆரம்பிப்பீர்கள். சிறிது சிறிதாக இந்த இடை வெளிகள் பெரிதாக்கப்பட்டு, இறுதியில் அது உங்கள் நிரந்தரமான நிலையாகி விடும்.
நான் எப்பொழுதும் சொல்வதுண்டு... ஒரு குரு உண்மையான குருவா என்பதைக் கண்டறிய, அவர் தூங்கும் பொழுது கவனியுங்கள். உண்மையான குரு தூங்கும் பொழுதும் பூவைப் போல இருப்பார். அவர் தூங்கும் பொழுதும் மிகவும் தளர்வாகவும், மிகவும் அழகாகவும் இருப்பார். அவர் தூங்கும் பொழுதும் ஒரு குழந்தையைப் போன்ற கள்ளம் கபடமற்ற தன்மை அவரிடமிருந்து ஒளிவீசிக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு சாதாரணமான மனிதனோ தூங்கும் பொழுது மிகவும் இறுக்கமாகவும், பிடிப்பாகவும் காணப்படுவான்.
ஒரு குரு எப்பொழுதும் உயர் விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார். அவர் தூங்குவது உடலிற்கு ஓய்வு கொடுப்பதற்காக மட்டுமே. நீங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு நிலையில் இருப்பீர்களானால், உங்களால் எப்பொழுதும் இறுக்கமாக இருக்க முடியாது. நீங்கள் விழிப்புணா்வற்ற நிலையில் விழும் பொழுது மட்டுமே, மன மயக்கத்தில், மன இறுக்கத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். எப்பொழுதும் தளர்வாக இருப்பதற்கு ஒரே வழி, உள்ளேயும் வெளியேயும் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதே!
விழிப்புணர்வுடன் தளர்வாக இருப்பதைக் குற்றுக் கொள்ளுங்கள். ஒரு குருவுடன் இருக்கும் பொழுது, நீங்கள்
உங்களுடைய எல்லா மன இறுக்கங்களும், கவலைகளும் உண்மையிலேயே, நிஜத்திலிருந்து நீங்கள் மறைந்து கொள்ளும் ஆறுதல் பிரதேசங்கள்.
உங்களை தளர்வாக இருப்பதற்கு அனுமதிப்பீர்களானால், அவர் உங்களுக்குள் பிரவேசிப்பார்; அவர் நிலை உங்களை ஊடுருவிச் செல்லும். நீங்கள் மூடியும், இறுக்கத்துடனும் இருந்தால், அவரால் உங்களுக்குள் பிரவேசிக்க முடியாது.
'உபநிஷதம்' என்ற வார்த்தையின் பொருள், 'குருவின் காலடியில் அமர்தல்' என்பதாகும். உங்களால் திறந்த மனதுடன், தளர்வாக, குருவின் காலடியில் அமர முடிந்தால், அவர் உங்களுள் பிரவேசித்து, தன் முழுக்கருணையுடன் உங்களிடம் செயலாற்றுவார். அதன் பிறகு வார்த்தைகளுக்கு அவசியமில்லை. அவர் வார்த்தைகளை உபயோகித்து, நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும் போது, உங்களை ஊடுருவிச் செல்ல முயற்சி செய்கிறார். எப்படித் தளர்வாக இருப்பது என்பதை ஒரு குருவால் கற்றுக் கொடுக்க முடியும்.
ஒரு குருவின் இருப்பில் நீங்கள் தளர்வாக இருக்கையில் உங்கள் சொந்த உடலில் நிலைபெறுகிறீர்கள்; உங்கள் சொந்த தனித் தன்மையில் நிலை பெறுகிறீா்கள்; நீங்கள் உங்கள் சொந்த புற இயல்பில் தளர்வாக இருப்பதாக உணர்கிறீர்கள். பின்னர் உங்களிடம் எந்தப் பிளவும் இல்லை; நீங்கள் ஒருங்கிணைக்கப் படுகிறீர்கள். அதனால், ஒரு குருவின் இருப்பில் தளர்வாக இருக்கப் பயிற்சி செய்யுங்கள். அதுவே ஓய்வாகவும், தளர்வாகவும் இருப்பதற்கு குறுக்கு வழியும், இறுதியான வழியுமாகும். சொல்லுங்கள் ...
ஸ்வாமிஜி, நீங்கள் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்கிறீர்களா ? உங்களை எப்பொழுதும் உணர்ச்சிகள் அலைக்கழிப்பதில்லையா?
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார் ... ) ஆம்! நான் எப்பொழுதும் இருக்கிறேன். ஆனந்தமயமாக
'உப நிஷதம்' என்ற வார்த்தையின் பொருள், 'குருவின் காலடியில் அமர்தல்' என்பதாகும்.