நாம் அமைதியாக இல்லாத பொழுது மட்டுமே, மற்றவர்களுடைய அமைதியைக் கெடுப்போம்.
நாம் மீண்டும் மீண்டும் நமது மனதை அலசி ஆராய்ந்து நமக்கு மகிழ்ச்சி அல்லது ஆனந்தத்தைத் தருவது எது என்று பார்க்க வேண்டும். மிகவும் தெளிவாக இருங்கள்... மகிழ்ச்சியும் ஆனந்தமும் வேறு வேறாகும். ஆனந்தம் என்பது உங்களுள் எழும் ஒரு அற்புதமான ஆனந்த உணர்வு; அது உங்களை இந்த பிரபஞ்ச இருப்புத் தன்மையின் வேறொரு தளத்தில் இருப்பதான ஒரு உணர்வைக் கொடுக்கும். மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் என்பது
ஆன்மீகவாதியாக இருக்க ஹிந்துவாக மாற வேண்டுமா?
வெளியுலகப் பொருள்களோடு தொடர்புடையது; அது நமக்கு தொடர்ந்து வலியையே தரும்.
மகிழ்ச்சி என்பது சார்புடையது; ஆனந்தமோ முழுமையானது. ஆனந்தத்திற்கு எதிர்ப்பதம் கிடையாது. நீங்கள் சந்தோஷமாக இருக்கும் பொழுது, வருத்தம் கையருகில் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியில் திளைக்கும் பொழுது, அடுத்து வலியை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆனந்தத்தில் இருக்கும் போது, வெறுமனே இருக்கிறீர்கள். அதற்கு எதிர்ப்பதம் கிடையாது. மகிழ்ச்சியும், சந்தோஷமும் திரும்ப வருவதற்கு முன்னால் மறுமுனைக்கு ஊசலாடிச் செல்லும் ஊசல் குண்டைப் போன்றது. ஆனால் ஆனந்தம் ஊசல் குண்டைப் போன்றதல்ல; அது இருமைக்கு அப்பாற்பட்டது. அது வெறுமனே இருக்கிறது.
உங்களுக்கு ஆனந்தத்தைத் தருவது எது என்று உங்கள் மனதை மீண்டும் பரிசீலித்துப் பாருங்கள். அதைப் பின்தொடருங்கள். உங்களுக்குள் ஏதோ ஒன்று நீங்கள் நிரந்தரமான ஆனந்தத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக் கிறீர்கள் என்று சொல்லுமானால், அதில் உங்களுக்கு திடமான நம்பிக்கை இருக்குமானால், உங்கள் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் இந்த ஆனந்தத்தை நோக்கியே இருக்குமாறு சற்று மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயலும் எண்ணமும் இந்த ஆனந்தத்தை உணர்வதை நோக்கியே அமைய வேண்டும். அப்பொமுது செலவமித்த சக்தி சேமித்த சக்தியாகி விடும். நீங்கள் எப்பொழுதும் சக்தியுடன் இருப்பீர்கள்.
சிலர் சொல்கிறார்கள், அவர்கள் கவலைகள் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று. அவர்கள் பேசும் அமைதி உயிருள்ள அமைதியன்று; அது இறந்து போன அமைதி. அது
####
வாழ்க்கையில் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாமல் உயிரற்றும் செயலற்றும் இருக்கிற அமைதி. அவர்களுக்கு வாழ்க்கை கையாளுவதற்கு மிகவும் கடினமாக இருப்பதால் அமைதிக்காக ஏங்குகிறார்கள். அது இந்தப்பழம் புளிக்கும் என்று அதை விட்டுவிட்டு சென்று விடுவதைப் போல இருக்கிறது.
உண்மையான அமைதி என்பது வெளியில் நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் உங்களுக்குள் இருந்து கொண்டிருப்பது; நீங்கள் வெறுமனே உங்களுக்குள்ளேயே மகிழ்ச்சியாக இருப்பீர்கள்; நீங்கள் எதையும் அல்லது யாரையும், உங்களைக் கடந்து செல்லும் ஒரு தென்றல் முத்தமிட்டுச் செல்வதைப் போலவே காண்பீர்கள். அது மனிதனாக இருந்தாலும் சரி, அல்லது வேறென்னவாக இருந் தாலும் சரி, உங்கள் அமைதி அப்படியேயிருக்கும். மனிதர்களோ அல்லது சூழ்நிலைகளோ அதை எந்த விதத்திலும் மாற்ற முடியாது.
அமைதி என்பது நீங்கள் உள்ளுக்குள் உணரும் ஆனந்தம். அமைதி ஆனந்தத்திலிருந்து பிறக்கும் பொழுது, அது உங்களையும் மற்றவர்களையும் ஒரு அமைதியான நிலையில் வைத்திருக்கிறது. அதை நீங்கள் ஒரு முறை உங்களுக்குள் கண்டு கொண்டு விட்டால், 'என்னை அமைதியாக இருக்க விடுங்கள்', 'நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன்' என்றெல்லாம் ஒருபோதும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டீர்கள். எப்பொழுது நீங்கள் இப்படி யெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அப்பொமுது நீங்கள் அடுத்தவர்களின் கருணையில்தான் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம்; அது அமைதியே அல்ல.
உங்களுடைய 'நான் அது' மற்றும் 'நான் இது' என்கிற எல்லாக் கருத்துக்களையும் விட்டுவிடுங்கள்.
அமைதி என்பது உங்களுக்குள் உருவாகும் ஒரு உறுதியான மையம்; அது உங்களை எப்பொழுதும் இயல்பாகவே மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வெளியில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியுமே பத்தோடு பதினொன்றாகி விடும். அதை உங்கள் அமைதியுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பீர்களேயானால், உங்களுக்குள் இன்னும் அமைதி நிகழவேயில்லை, என்பதில் தெளிவாக இருங்கள்.
நாம் வருடந்தோறும் செல்லும் இமயமலை யாத்திரையில், சிலர் தங்களது கஷ்டங்களையும், சுகாதார மற்ற சூழ்நிலை களையும் பற்றி குறை கூறுகின்றனர். நான் அவர்களிடம் மீண்டும், 'இமயமலையில் இருப்பதே ஒரு பெரும் பாக்கியம், பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை, அதனால் அற்ப விஷயங்களை விட்டு விட்டு வெறுமனே மகிழ்ச்சியாயிருங்கள்' என்று சொல்வதுண்டு. ஆனால் மக்கள் இதையெல்லாம் பெரிய தொல்லையாக எடுத்துக் கொண்டு இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு இளைய பக்தர்கள் ஒரு முறை என்னிடம் சொன்னார்கள், 'ஸ்வாமிஜி, இவர்களெல்லாம் கஷ்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு அதனால் பாதிக்கப்படாமல் இருக்க முயற்சி செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எந்தக் கஷ்டமும் தெரியவில்லை! நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்''. இதைத்தான் நான் இயல்பாகவே மகிழ்ச்சியாய் இருப்பது என்று சொல்கிறேன். என் அமைதி, உங்கள் அமைதி என்றெல்லாம் தனியாக ஒன்றும் கிடையாது. என்ன இருக்கிறதோ, இருக்கிறது, அவ்வளவுதான். நீங்களும் இருக்கிறீர்கள், அதுவும் இருக்கிறது, ஆனால் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நீங்கள் வெறுமனே அமைதியான ஆனந்தமான நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்.
கருணையற்ற மக்களை நரகத்தில் போட முடியாது. ஏனெனில் ஏற்கனவே அவர்கள் நரகத்தில்தான் இருக்கிறார்கள்.
குறைகூறுதல் கவலையுடன் தொடர்புடையது. ஏனெனில் நீங்கள் நிம்மதியற்று, வார்த்தைகளில் சிக்கிக் கொண்டிருக் கிறீர்கள். நீங்கள் இமயமலையில், ஒரே ஒரு தண்ணீர் கூஜா மற்றும் இரண்டு மாற்றுடைகளுடன் திரிந்து கொண்டிருக்கும் சாதுக்களைக் கண்டால், உங்களிடம் இருப்பதற்கும் மேலாக வேறு எதுவும் தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். அதனால் குறை கூறுவதற்கு எதுவும் இல்லை.
நீங்கள் ஏன் குறை கூறுகிறீர்கள்? உண்மையிலேயே, குறை கூறுபவர்கள் நிறைய வைத்திருக்கும் பாக்கியவான்கள்; அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையாகலால் குறை கூறுகிறார்கள்! உங்களிடம் போதுமானது இருக்கும்போது, வாழ்க்கை ஒரு பெரிய போராட்டமாக இல்லாதபோது, குறைகூற நேரம் இருக்கிறது. ஆனால் உங்கள் உயிர் வாழ்தலே அபாயத்தில் இருக்கும் போது, குறை கூறாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள்; ஏனெனில் நீங்கள் குறைகூற ஆரம்பித்தால், உங்களுடைய வேலையை யார் செய்வார்கள் ? !
இமயமலையில் தகுதியுள்ளது மட்டுமே உயிர் வாழ முடியும். நீங்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாகவும் கவன மாகவும் இருக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் நிலச்சரிவு ஏற்பட்டு உங்கள் மீது இறங்கலாம்; பனிப் பொழிவினால் பழக்கமான பாதைகள் மூடப்பட்டு விடலாம்; திடீரென்று உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம், இவ்வாறு இன்னும் எத்தனையோ.
இது போன்ற சூழ்நிலைகளில், நீங்கள், அங்குள்ள மக்களை கவனிக்க வேண்டும். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமலும், குறை கூறாமலும், வரவேற்கும் தன்மையுடனும், கள்ளம் கபடமற்றும்
நீங்கள் நரகத்தில் இருந்தால் மட்டுமே, மற்றவர்களுக்கு நரகத்தை உருவாக்குவீர்கள். ஏனெனில் உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் உங்களால் கொடுக்க முடியும் ?
இருக்கிறார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்கள் எதுவும் சரியாக இல்லையென்று நினைப்பதில்லை : அவர்கள் வெறுமனே சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களைச் சுற்றி என்ன நிகழ்கிறதோ, அதற்கேற்றார் போல் அவர்களது செயல்முறை களை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் கவலைப்படுவதில்லை, குறை கூறுவதுமில்லை.
நீங்கள் ஏன் கிடைப்பதை வைத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்கக் கூடாது ? பாரதத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள், அமெரிக்காவிற்குச் சென்று திரும்பியவுடன், குளியலறை முதல் சாலைகள் வரை பாரத சூழ்நிலைகளைப் பற்றி குறைகூற ஆரம்பித்து விடுகிறார்கள். இது நீங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டது, உங்களை மேலும் விரிவடைந்து மலர வைப்பதற்குப் பதிலாக மேலும் அதிருப்தி யாகவும், புகார் கூறுபவராகவுமே செய்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
நீங்கள் ஆழ்ந்து புரிந்து கொண்டீர்களானால், குறை கூறுவதை நிறுத்தி விடுவீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிவதற்குக் காரணம் உங்கள் தகுதியல்ல; அது வெறுமனே எல்லார் மீதும் எல்லாவற்றின் மீதும் பொழிந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டீர் களானால், புகார் கூறுவதை நிறுத்திவிடுவீர்கள். நீங்கள் குறை கூறுவதற்குக் காரணம், நீங்கள் எதற்கோ தகுதியானவர், ஆனால் அது உங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற எண்ணம்தான்.
தெளிவாக இருங்கள்... இருங்கள் ... தகுதியானவரோ அல்லது தகுதியற்றவரோ அல்ல; யாரும் புனிதரோ அல்லது பாவியோ அல்ல; பிரபஞ்ச இருப்புத் தன்மையையும் அதன் பரிசு
நாம் அமைதியாக இல்லாதபொழுது மட்டுமே, மற்றவர்களுடைய அமைதியைக் கெடுப்போம்.
களையும் பெறுவது அனைத்தும் அதைப் புரிந்து கொள்வதிலும், இயற்கையோடு இசைந்து இசைந்து எப்பொழுதும் ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலே, விழிப்பணர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் திறந்த தன்மையில் இருந்தால், பிரபஞ்ச இருப்புத்தன்மை பொழிகிறது. பிரபஞ்ச இருப்புத்தன்மை தொடர்ந்து பொழிந்து கொண்டுதான் இருக்கிறது; நமக்குத்தான் அதை எப்படி பெற்றுக் கொள்வது என்று தெரிவதில்லை. நாம் எப்பொழுதும் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் மணிபூரக சக்கரத்தில் அமிழ்ந்திருக்கிறோம்! வார்த்தைகளைச் சேகரிப்பதில் சுறுசுறுப்பாயிருக்கிறோம் !
நீங்கள் உங்களுடனே இருக்கக் கற்றுக் கொண்டால், உங்களால் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் நாம் ஒரு போதும் நம்முடன் இருப்பதில்லை. நாம் எப்பொழுதும் மனிதர்களுடனும், இரைச்சலுடனுமே இருக்கிறோம். நாம் நம்மை மற்றவர்களுடன் அடையாளப் படுத்திக் கொள்கிறோம்; நம்முடன் அல்ல. நாம் நம்முடனே இருப்பதற்கு அஞ்சுகிறோம். நாம் நம்முடன் இருக்கும் போது தனியாகவும், பயமாகவும் உணருகிறோம். நாம் நம்முடன் இருக்கும் போது மனச் சோர்வடைகிறோம்.
நீங்கள் உங்கள் தாயின் கருவறையில் தனியாகவே இருந்தீர்கள்; அதுவே உங்கள் உண்மை இயல்பு. அதற்குப் பிறகு என்னவாயிற்று? நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு மனிதர்கள் வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டீர்கள். நீங்கள் மனிதர்களுடன் சேர்ந்து சிரிக்கிறீர்கள், மனிதர்களுடன் சேர்ந்து அழுகிறீர்கள், மனிதர்களுடன் பேசுகிறீர்கள், மனிதர்களாலேயே
மகிழ்ச்சி என்பது சார்புடையது, ஆனந்தமோ முழுமையானது. ஆனந்தத்திற்கு எதிர்ப்பும் கிடையாது.
கஷ்டமும்படுகிறீர்கள். கொண்டாடுவது எப்படி என்பது தெரியவில்லை.
நீங்கள் தனியாக இருக்கும் பொழுது, உங்களுக்குள் போராட ஆரம்பித்து விடுகிறீர்கள், உங்கள் உள் பேச்சுக்கள் ஆரம்பித்து விடுகின்றன, உங்கள் கவலைகள் ஆரம்பித்து விடுகின்றன. எவ்வாறு இரைச்சலை ஏற்படுத்துவது அல்லது யாரைக் கூப்பிட்டுப் பேசுவது அல்லது யாருடன் கணினி வழியாக உரையாடுவது என்பது போன்ற மடத்தனமான விஷயங்களை எண்ண ஆரம்பித்து விடுகிறீர்கள்.
எப்பொழுதும் இருக்க வேண்டிய தேவை இருந்தால், நீங்கள் உங்களுடன் இருப்பதற்கு நிச்சயமாக அஞ்சுகிறீர்கள் என்று அர்த்தம். உள்ளே பார்ப்பதற்கு அச்சமாக இருப்பதால் வெளியே பார்க்கிறீர்கள். நீங்கள் தியானிப்பவராக ஆகிவிட்டால், சந்தோஷமாக இருப்பதற்கு உறவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு நீங்களே போதும். உங்களால் உங்களுடனே அமைதியாக இருக்க முடியவில்லை என்றால், பெயரளவிலான உறவு முறைகளில் சிக்கி, உங்கள் இருப்புத் தன்மையின் விளிம்பிலேயே தங்கி விடுவீர்கள்.
முதலில் உங்களுக்கு உங்களுடனேயே ஒரு உறவு தேவைப்படுகிறது. இது உறுதியாகவும் நிலையாகவும் இருக்கு மானால், மற்றவர்களுடன் உறவு கொள்வது தற்செயலாகவே நிகழ்ந்து விடுகிறது. தற்சமயம், வெளி விளிம்பில் இருக்க வேண்டியது முக்கியமானதைப் போலவும், முக்கியமானது வெளி விளிம்பில் இருக்க வேண்டியதைப் நடத்தப்படுகிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள்
குறைகூறுதல் கவலையுடன் தொடர்புடையது.
பார்வையை உள்நோக்கித் திருப்ப வேண்டும். நீங்கள் உங்களுக்குள் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்.
அதற்கு உங்கள் மனதைத் தாண்டிச் செல்லும் தைரியம் வேண்டும். நீங்கள் உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் உங்களைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கத் தயாராக இருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்குகிறீர்கள். ஏனெனில் அது உங்கள் அஹங்காரத்தைத் திருப்தி செய்கிறது.
நீங்கள் உங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. ஏனெனில் உண்மை வெளியே வந்து விடும், அதை உங்களால் தாங்க முடியாது என்று அஞ்சுகிறீர்கள். ஆனந்தத்தை தவறான இடங்களில் தேடி விட்டு, அது உங்களிடமிருந்து நழுவி விடுவதாக குறை கூறுவது உங்களுக்கு வசதியாக இருக்கிறது. உங்களுக்கு உண்மையிலேயே ஆனந்தத்தைக் கண்டுபிடிக்கும் விருப்பம் இருக்குமானால், அதைக் கண்டுபிடிப்பீர்கள். ஆனால் அதற்கு தைரியம் தேவைப்படுகிறது.
உண்மையில், நாம் அனைவரும் தேடுவது ஒன்றைத்தான் -அதுவே ஆனந்தம். ஆனால் நாம் தொடர்ந்து தவறான இடங்களிலேயே தேடிக் கொண்டிருக்கிறோம். நான் ஒரு இளைஞனை அவனுக்கு எது சந்தோஷத்தைத் தருகிறது என்று கேட்டால், அவன் உடனே போதைப் பொருள் என்று சொல்வான். அவனும் ஆனந்தத்தையும், முடிவற்ற அமைதியையும்தான் தேடுகிறான்; ஆனால் தவறான திசையில் !
நாம் நமது பாதையிலிருந்து வெகு தூரம் தள்ளி வந்து விட்டோம். நமது சுயமான சிந்தனை முறையே எதிர்மறையான எண்ண வடிவ அமைப்புகளால் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு விட்டது. நமது வாழ்க்கையே இருக்க வேண்டிய முறையிலிருந்து
நீங்கள் ஏன் கிடைப்பதை வைத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்கக் கூடாது?
மிகவும் உட்கொள்வதனால் நீங்கள் உங்களிடமிருந்து தப்பிப்பது மட்டுமல்ல ; சூழ்நிலையையும் மோசமாக்கி விடுகிறீர்கள்: ஏனெனில் ஒரு நாள் உங்கள் உடல்நிலை கவலைக்கிடமாகி விடும். இவை அனைத்திலும் உள்ள முட்டாள்தனத்தைப் பாருங்கள்.
இது மிகவும் கடுமையாக இருப்பதால் உங்களுக்கு முட்டாள்தனமாகப் படுகிறது. இது உங்கள் ஒழுக்க அளவு கோலின்படி சரியில்லாததால் உங்களுக்கும் சரியற்றதாகப் படுகிறது. ஆனால் இன்பத்தைத் தேடும் மற்ற நுட்பமான செயல்களும் இதைப் போன்றதுதான். ஆனால் வேறு அளவு கோலில், அவ்வளவாக ஒழுக்கமற்றதாக கருதப்படாத அளவு கோலில் இருப்பதால், நீங்கள் அவற்றை முட்டாள் கனமாகக் கருதவில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது, மனதைத் தூய்மைப் படுத்துங்கள். அப்பொழுது நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்பது தெரியும்.
எவ்வாறு உங்கள் மனம் வேலை செய்கிறது, எவ்வாறு உங்கள் கவலைகள் வேர் விடுகின்றன என்பதை விழிப்புணர் வுடன் உங்களுக்குள் உற்று கவனியுங்கள். நாம் வார்த்தைகளைச் சேகரிப்பதும், அபிப்பிராயங்களை உருவாக்குவதுமாக, இதையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறுதான் கவலை வேர்விட்டு தன்னை பலப்படுத்திக் கொள்கிறது.
ஒரு நாள் உங்கள் மகன் வீட்டிற்கு வரத் தாமதமானாலும், ஏதோ கெட்ட சகவாசத்தினால்தான் இவ்வாறு தாமதமாகிறது என்று நீங்களாகவே முடிவு செய்கிறீர்கள். இது உங்களுக்குள் ஒரு பதிவாகி விடுகிறது. அடுத்த முறை, அவன் வகுப்பிலிருந்து தாமதமாக வந்தாலும், இந்தப் பதிவு மேலே வந்து, நீங்களும் அதற்கேற்றார் போல் செயல்படுகிறீர்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிவதற்குக் காரணம் உங்கள் தகுதியல்ல.
இது உங்கள் மகனை விரக்கியடையச் செய்வது மட்டு மல்ல, உங்கள் பேச்சை மீறி எதிர்த்து நடக்கவும் நிர்பந்திக்கிறது. ஒவ்வொருவரும் வளர்ந்து கொண்டும் மாறிக் கொண்டும்தான் இருக்கிறார்கள்; நீங்கள் உங்கள் சொந்த கற்பனை அமைப்பில் இருப்பது உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கற்பனைகளுடன் வாழ்வது மிகவும் சுலபம். ஆனால் நான் சொல்கிறேன், 99% நீங்கள் நம்புவது எல்லாமே தவறாகவே இருக்கிறது. உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே பெரிய திரை இருப்பதை நீங்கள் உணருவீர்கள். நீங்கள் பச்சை நிறக் கண்ணாடி அணிந்திருந்தால், இந்த உலகம் முழுவதையும் பச்சையாகவே காண்பீர்கள், அவ்வளவே.
முகமது நபி சொல்கிறார், "நீங்கள் இந்த உலகத்தை எதுவாகப் பார்க்கிறீர்களோ, அதுதான் நீங்கள்''. நீங்கள் என்னிடம் பேசினாலோ அல்லது யாரையேனும் பற்றி குறை கூறினாலோ, நீங்கள் கவலைப்படுவதாலேயே இவற்றை யெல்லாம் என்னிடம் சொல்வதாகச் சொல்லலாம்; ஆனால் உங்கள் மனதைத் தெளிவாகக்காட்டி விடுகிறீர்கள்; ஏனெனில், விஷயங்களை நீங்கள் விரும்பியபடிதான் பார்க்கிறீர்களே ஒழிய, ஒருபோதும் உள்ளபடி பார்ப்ப தில்லை. நீங்கள் விரும்பியபடி மட்டுமே பார்க்கும் பொழுது, நிறைய தவறவிட்டு விடுகிறீர்கள்.
உண்மையில் நிகழ்ந்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறுகிறேன் ...
சில வருடங்களுக்கு முன்பு, தினமும் அதே டிரைவருடன் ஆசிரமத்திலிருந்து நகர மையம் வரைக்கும் செல்லும் வழக்கத்தைக்
உங்கள் வாழ்க்கையைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். அதுவே ஆன்மீகத்திற்கு அடிப்படை.
கொண்டிருந்தேன். ஒருநாள் ஒரு குறிப்பிட்ட தெருவிற்குச் செல்ல விரும்பி, டிரைவரிடம் அடையாளத்திற்காக அதன் அருகிலுள்ள ஒரு மசூதியைச் சொன்னேன். அவர் அங்கே ஒரு மசூதியே இல்லை என்று சொல்லி விட்டார். பிறகு மசூதிக்கு அருகிலுள்ள ஒரு பிரபலமான ஹோட்டலைச் சொல்லி நினைவுபடுத்த முயற்சி செய்தேன். ஆனால் அதுவும் அவர் கவனத்திற்கு வரவில்லை. இறுதியாக, அங்கிருக்கும் ஒரு அனுமார் கோவிலைப் பற்றிச் சொன்னதும்தான் அவர் முகம் பிரகாசமாயிற்று. பிறகு அங்கு சென்றோம். கோவிலுக்கு அருகிலேயே அதை விட ஐந்து மடங்கு பெரிதான அந்த மசூதியை அவருக்குக் காட்டினேன். அவர் ஆச்சரியமடைந்தார்! அவர் ஒரு தீவிரமான ஹிந்து. அதனால் அத்தனை மாதங்களில் ஒரு முறை கூட அந்த மசூதியைப் பார்க்கவேயில்லை.
நான் சொல்கிறேன்... வாழ்க்கையில் ஒரு ஒரு கொள்கை வெறியராகவோ அல்லது எதையேனும் பற்றித் தொங்கிக் கொண்டோ இருக்காதீர்கள்.
ஒரு நதியை எண்ணிப் பாருங்கள். உங்கள் காலை அதில் ஒரு முறை விட்டு எடுத்து விட்டு, இரண்டாம் முறையாக அதில் விடும் பொழுது, அது அதே நதியாகவா இருக்கிறது? இல்லை! அதன் முகம் மாறி விட்டது; அங்கிருப்பது அதே தண்ணீர் அல்ல; புதிய தண்ணீர் பாய்கிறது, இல்லையா?
அதனால் உங்களை எந்த ஒரு மதத்துடனோ அல்லது ஏதோ ஒன்றுடனோ அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள் ; வாழ்க்கை எப்பொழுதும் மாறிக் கொண்டேயிருக்கிறது. உங்களுடைய நம்பிக்கைகளின் குறுகிய எல்லையால், உங்கள் ஆன்மீக வளர்ச்சி தடுமாறி தடைப்படுகிறது. நீங்கள் சேணம் கட்டப்பட்ட குதிரையைப் போல ஆகிவிடுகிறீர்கள். அதனால் அதன் முன்னே இருக்கும்
யாரும் தகுதியானவரோ அல்லது தகுதியற்றவரோ அல்ல. யாரும் புனிதரோ அல்லது பாவியோ அல்ல.
சாலையில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் பார்க்க முடியும். ஆனால் வாழ்க்கையில் ஒரு பரந்த பார்வை அவசியம்.
நமது முன்னோர்கள் நமக்கு நிறைய உணவை அளித்தனர், ஆனால் அதை சுவைப்பதற்கான நாவை அளிக்கவில்லை. இந்த உலகத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது நம்மிடம் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது அதை நீங்கள் எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது; வெளியுலகத்தில் இருக்கும் பொருள்களில் இல்லை. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவோ அல்லது துயரமானதாகவோ ஆக்குவது உங்கள் மனநிலையே ஆகும்.
உங்களுடைய தற்போதைய மனநிலையிலேயே நீங்கள் சந்தோஷமாக இருந்தால், அது மிகவும் சரி. ஆனால் அதைக் கொஞ்சம் திருத்தி சரி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அப்பொழுது எங்கேயோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். செடிகளை வெட்டி அழகுபடுத்துவது போல, நீங்களும் உங்கள் மனநிலையை அடிக்கடி திருத்தி சரி செய்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள். திருத்தி வெட்டி அழகு படுத்தப்பட்ட செடிகள் வேகமாய் வளர்கின்றன!
ஒன்று நீங்கள் தற்போதைய மன நிலையிலேயே வாழுங்கள், அல்லது அதை வேரோடு களைந்து விட்டுப் புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் துணிகளுக்கு சாயம் போட்டு, அதை பார்ப்பதற்கு வேறு மாதிரி ஆக்கி விடுவது போல், உங்கள் மனநிலைக்கு சாயம் போட முடியாது. உங்கள் மன நிலையை செதுக்கி சரி செய்ய முடியாது. ஒரு முழுமையான உருமாற்றம் ஏற்படாத வரையில் மீண்டும் பழைய வழிகளில் விழுந்து விடும் அபாயம் எப்பொழுதும் இருக்கிறது.
நீங்கள் உங்களுடனேயே இருக்கக் கற்றுக்கொண்டால், உங்களால் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் தொடர்பு கொள்ள முடியும்.
உங்களிடம் ஒரு தூய்மையான மனநிலை இருக்குமானால், நீங்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டீர்கள். சிக்கலான எண்ண வடிவ அமைப்புகளாலும் வார்த்தைகளாலும் குழப்பமடையும் போதுதான் நீங்கள் எப்பொழுதும் கவலைப்படுகிறீர்கள். நான் எப்பொழுதும் உறுதியாக இல்லாத போதுதான், கோள்களின் நிலையைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்! எந்தக் கோள் எங்கே மையம் கொண்டிருக் கிறது, அது உங்களை எவ்வாறு ஆட்சி செய்கிறது என்பதைப் பற்றியெல்லாம் ஆராயத்தொடங்குகிறீர்கள். உண்மையான பிரச்சினை என்னவென்றால் நீங்கள் மையத்தில் இல்லை.
சீரான நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் மனதை ஆராயுங்கள். அதைப் பார்த்து தூய்மைப் படுத்துங்கள். ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் நீங்கள்தானே உங்கள் மனதுடன் இருக்கிறீர்கள், இல்லையா ? பிறகு ஏன் அதை சுத்தமாகவைத்திருக்கக் கூடாது ?
தங்கள் வீட்டை அழகாக நிர்வகித்துக் கொண்டிருக்கும் 'வீட்டுப் பெருமை'யுடைய மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் 'வாக்யுவம் க்ளீனா்' பயன்படுத்தி வீட்டைச் சிறிது கூட தூசியில்லாமல் வைத்திருக்கின்றனர். ஒரு சின்ன தூசியையும் அவர்களால் தாங்க முடியாது. அவர்கள் தரை விரிப்பை, அது ஒட்டையாகும் வரை சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள்! நீங்கள் 24 மணி நேரமும் வசிக்கும் வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி என்ன சொல்வது? உங்கள் மனம்? நீங்கள் அதனுடன் 24 மணி நேரமும் இருக்கிறீர்கள்; உங்களுடைய ஒவ்வொரு எண்ணமும் செயலும் அதை ஈடுபடுத்துகிறது.
உங்கள் சக்தியூட்டப்பட்ட நிலையிலும் வைத்திருக்க வாஸ்து சாஸ்திரம்,
ஃபெங்ஷூயி முதலிய அறிவியலை உள்ளே கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டீர்கள் ... நீங்கள் உங்களுடைய வீட்டிற்குத் தொடர்ந்து சக்தியூட்டிக் கொண்டேயிருக்க வேண்டிய காரணம், உங்கள் எதிர்மறைத் தன்மையால் அதைத் தொடர்ந்து அசுத்தப்படுத்திக் கொண்டேயிருப்பது தான். இதுதான் உண்மை.
நீங்கள் உங்கள் கூட்டு எதிர்மறை எண்ணங்களாலும் கவலைகளாலும் உங்கள் வீட்டிலுள்ள வெற்றிடத்தை அசுத்தப் படுத்துவதால், அது எதிர்மறை எண்ணங்களைத் திருப்பி உங்களை நோக்கி பரப்பத் தொடங்குகிறது. நீங்கள் உங்கள் வீட்டினுள் நுழையும் போதே எதிர்மறைத் தன்மையை உடைய ஒரு கொடிய சுழலில் சிக்கிக் கொள்கிறீர்கள்.
எத்தனை முறை நீங்கள் உங்கள் வீட்டினுள் நுழையும் வரை மிகவும் சரியாகவே இருந்ததாக உணர்ந்திருக்கிறீர்கள் ? நுழைந்த அடுத்த கணமே, ஒரு பழக்கமான எதிர்மறை வடிவ அமைப்புகளின் பிடியில் சிக்கிவிட்டதாக உணர்கிறீர்கள். இது உங்கள் வீட்டினுள் நீங்களே நிரப்பியிருக்கும் உங்கள் சொந்த எண்ணங்களைத் தவிர வேறில்லை. பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? வீட்டின் அமைப்பையே மாற்றுவதற்காக ஒரு வாஸ்து நிபுணரை வரவழைக்கிறீர்கள். அல்லது ஒரு ஹோமம் செய்து வீட்டைத் தூய்மைப்படுத்துவதற்காகக் கோயிலிலிருந்து புரோகிதரை வரவழைக்கிறீர்கள் அல்லது ஃபெங் குயி முறைப்படி உங்கள் வீட்டிற்கு எதையாவது செய்கிறீர்கள்.
இவற்றையெல்லாம் சிரத்தையுடன் செய்தோமானால், அவை உங்கள் வீட்டிற்குத் தேவையானதைச் செய்யும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் இரண்டாம் பட்ச முறைகளே.
நாம் எப்பொழுதும் மனிதர்களுடைனும் இரைச்சலுடனுமே இருக்கிறோம். நாம் நம்மை மற்றவர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.
உண்மையிலேயே முறையானது என்னவென்றால் உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொண்டு ஒரு ஆனந்தமயமான மன நிலையை பரப்புவதே; அதனால் நீங்கள் வசிக்கும் இடமானது தானாகவே அதைப் பரப்புகிறது.
ஒரு மனிதனிடம் அவனது இறந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் என்ன வேறுபாடு என்று கேட்கப்பட்டது. அவன் சொன்னான், 'முன்பெல்லாம் நான் தரையில் பாயின் மீது அமாந்து உணவருந்துவேன். இப்பொழுது மேசையில் உணவருந்துகிறேன்'.
பாருங்கள் ... இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அவனது வாய் ஒன்றேதான். உங்களிடம் ஒரு அடிப்படை மாற்றம் நிகழவில்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் இந்த அளவு மாற்றம்தான் காணப்படும். எவ்வாறு அழகு பார்ப்பவனின் கண்களில் இருக்கிறதோ, அதேபோன்று சுவை அதை அனுபவிக்கும் நாவில் இருக்கிறது. உங்கள் மனநிலை உங்கள் வாழ்க்கையின் தரத்தை வரையறுக்கிறது.
பல சமயங்களில், மாற வேண்டிய தேவையை நாம் உணர்ந்தாலும், இருக்கும் நிலையிலேயே இருப்பது வசதியாக இருக்கிறது. மீண்டும் அதே சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறோம். நமது ஒரு ஒரு பக்கம் நாம் மாற வேண்டிய தேவையைச் சொன்னாலும், இன்னொரு பக்கம் விழிப்பின்றி மீண்டும் பழக்கமான வடிவ அமைப்புகளிலேயே நழுவி விழுந்து விடுகிறது. நீங்கள் மாறுவதற்குப் பல வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டாலும், தற்சமயம் இருக்கும் நிலையையே சௌகரியமாக உணர்ந்து, அவற்றைத் தவற விட்டு விடுகிறீர்கள்.
இந்த மனநிலை உங்களைப் பொறுத்தவரை ஒரு திடமான உண்மையாகி விடுகிறது. நீங்கள் அதை வெறுமனே பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் மனிதர்களுடன் சேர்ந்து சிரிக்கிறீர்கள், மனிதர்களுடன் சேர்ந்து அழுகிறீர்கள், மனிதர்களுடன் பேசுகிறீர்கள், மனிதர்களாலேயே கஷ்டப்படுகிறீர்கள்.
அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். நான் சொல்கிறேன்... நீங்கள் இது போன்ற திடமான மனநிலையுடன் வாழ்ந்தீர்களானால், அதில் இன்னொரு அபாயம் இருக்கிறது. உங்கள் குழந்தைகள் அதை உங்களிடமிருந்து கிரஹித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனக்கு ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு கணவனும் மனைவியும் தொழில் முறை ஜேப்படித் திருடர்கள். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் அது எவ்வளவு வளமாக இருக்கும் என்று அடிக்கடிப் பேசிக் கொள்வார்கள். ஒரு குழந்தையும் பிறந்தது. அது தனது வலது கையை இறுக்கமாக மூடியே வைத்திருந்தது. அவர்களால் அதை எவ்வளவு முயன்றும் திறக்க முடியவில்லை. அதை கவனிக்கும் டாக்டரும் எவ்வளவோ முயன்றார். இறுதியாகத் தனது தங்கச் சங்கிலியை அதன் கண் முன்னே ஆட்டினார். குழந்தை மெதுவாகத் தன் கையைத் திறந்தது. உள்ளே நர்ஸினுடைய தங்க மோதிரம்!
(பலத்த சிரிப்பு!)
இது ஒரு நகைச்சுவை மட்டுமே. ஆனால் ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் மனநிலையைக் கொடுத்து விடக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனால் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் உங்கள் விழிப்புணா்வில் செயலாற்றுங்கள். உள்பேச்சுகளையும் மன அமைப்புகளையும் சுத்தம் செய்வதில் முனையுங்கள்.
நாம் எப்பொழுதும் குழந்தைகளைக் பொம்மைகளாக்கி கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். குழந்தைகள் கட்டுக்கடங்காத சக்தி. நாம் அதைக் கையாளும் சுலபத்திற்காகப் பெட்டிக்குள் அடைத்து விடப் பார்க்கிரோம்.
நீங்கள் தனியாக இருக்கும்பொழுது, உங்களுக்குள்ளேயே போராட ஆரம்பித்து விடுகிறீர்கள். உங்கள் உள்பேச்சுக்கள் ஆரம்பித்து விடுகின்றன.
இரண்டு நாய்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தன. முதல் நாய் சொன்னது, ''என் பெயர் ஸாண்டி, உன் பெயர் என்ன?''. இரண்டாவது சிறிது இடைவெளி விட்டு பிறகு சொன்னது, "என் பெயர் No No (எதையும் செய்ய விடாமல் தடுப்பதனால்!) ரோஜர் என்று நினைக்கிறேன்''.
(சிரிப்பு!)
இந்த நாயைப் போலவே, குழந்தைகளும் நமது வார்த்தைகளிலிருந்தும் உடல் மொழியிலிருந்தும் கிரஹித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் தொடங்குகிறார்கள். குழந்தைகள் சிறுவயதில் எதையாவது பார்த்து ஆச்சரியப்படும் பொழுது, அது தொடர்பாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்த வார்த்தைகளை அல்லது செயல்களை நினைவு கூர்ந்து அதன் அடிப்படையில் அவர்களது தீர்மானங்களை அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் குழந்தைகளுடன் இருக்கும்பொழுது, எப்பொழுதும் தடை செய்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, இன்னும் கவனத்துடன் அவர்களது அறிவுக் கூர்மையை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
தாய்மார்கள் இதைத் தொடர்ந்து செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, மழை பெய்யும் சமயத்தில், உடனே உள்ளே வந்து விடுமாறும் இல்லாவிடில் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்றும் சொல்வார்கள். இது சில முறை திரும்பத் திரும்ப நடக்கும் பொழுது, மழையைப் பார்த்தவுடனே, குழந்தையின் மனது தானாகவே ஜலதோஷத்துடன் இசைந்து சென்று விடும். அடுத்த முறை சிறிது தூறல் வந்தாலே குழந்தை தும்ம ஆரம்பித்து விடும்.
உங்கள் பார்வையை உள்நோக்கி திருப்ப வேண்டும்.
நான் சொல்கிறேன்... உண்மையிலேயே மனிதனுடைய உடல் அறிவுக் கூர்மை மிக்கதும், தானே சரி செய்து கொள்ளக் கூடியதும், தானாகவே நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தன்மையும் உள்ள ஒரு அமைப்பு. ஆனால் எப்படியோ, நமது உடலின் உள்ளுரையும் அறிவுக் கூர்மையை விட, நமது மூளையை அதிகம் நம்புகிரோம். அங்கே தான் நமது பிரச்சினையும் எல்லாக் கவலைகளும் ஆரம்பமாகின்றன.
ஒரு சின்ன கதை....
ஒரு தந்தை ஒட்டகம், தன் மகன் ஒட்டகத்திடம் தங்கள் இனத்தின் உடல் அமைப்பு பற்றி விளக்கிக் கொண்டிருந்தது. தந்தை சொன்னது, ''உனக்குத் தெரியுமா, நாம் பாலைவனத்தில் இருக்கும் போது பல நாட்களுக்குத் தேவையான தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ளத்தான் நமக்குத் திமில் இருக்கிறது". மகன் கேட்டது, "நமது கண் இமைகள் ஏன் நீளமாக இருக்கின்றன?''. தந்தை சொன்னது, "மணற் புயல்களிலிருந்து நம் கண்களைக் காப்பாற்றுவதற்காகத் தான்''. மகன் கேட்டது, "நமது பாதம் ஏன் வீங்கி உப்பலாக இருக்கிறது ?'. தந்தை சொன்னது, "பாலைவனங்களில் வேகமாக பயணம் செய்வதற்காகத்தான்''. அதற்கு மகன் சொன்னது, "தந்தையே, இப்பொழுது நாம் இந்த மிருகக் காட்சி சாலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ?''.
(பலத்த சிரிப்பு!)
பாருங்கள், வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் அதை வெறுமனே அதன் இயல்பான அறிவுக் கூர்மையில் செயல்பட விட்டாலே, அது நன்றாகச் செயல்படும். உங்கள் ஒழுக்க நியதிகளை உடலின் மீது சுமத்தும்போது துன்பமடைய ஆரம்பிக்கிறீர்கள். உங்கள்
முதலில் உங்களுக்கு உங்களுடனேயே ஒரு உறவு தேவைப்படுகிறது.
கவலைகளும் மனநிலையுமே எல்லாவிதமான உடல் மற்றும் மனம் சார்ந்த வியாதிகளுக்கு மூல காரணம்.
இமயமலையில், திரிந்து கொண்டிருக்கும் சாதுக்கள் குகைகளினுள் வாழ்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை விட மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். வெயிலோ, மழையோ, பனியோ எது வந்தாலும் அவர்கள் தொடர்ந்து வசிக்கிறார்கள்; அவர்களது உடல், சூழ்நிலைக்கேற்பத் தானாகவே சரி செய்து கொள்கிறது. நாம் வெறுமனே இயற்கையின் மீதும், அதனோடிணைந்த நோய் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் மீதும் விசுவாசம் வைக்க வேண்டும்.
மேலும் புரிந்து கொள்ளுங்கள் ... குருவானவர் உங்களுக்கு ஒரு புதிய மனநிலையை, ஒரு மறு பிறப்பைக் கொடுக்கக் கூடியவர். அதை எளிதாக ஒரு குருவின் இருப்பைக் கிரஹித்துக் கொள்வதன் மூலம் அடைந்து விட முடியும். குருவின் சக்கியானது உங்கள் மீது வெள்ளமாகப் பாயும் பொழுது, உங்கள் மனநிலை மாறி, நீங்கள் மறுபிறப்பெடுக்கிறீர்கள். உங்களுக்கு இதற்கு முன் தெரிந்திராத வெளிகளில் பிரவேசிக்கிறீர்கள்.
இவ்வாறு நீங்கள் மறுபிறப்பெடுக்கும் பொழுது, கவலைகள், நோய்கள் மற்றும் இதர உணர்ச்சிகளின் பிடியிலிருந்து விடுதலை அடைந்து விடுவீர்கள். ஒருவேளை இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்கு நேர்ந்தால் கூட, அதை இதற்கு முன் தெரிந்திராத அளவு சுலபமாக உங்களால் கையாண்டு விட முடியும். நீங்கள் உங்களையும், உங்களைச் சுற்றியும் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உற்றுக் கவனிப்பவராக ஆகிவிடுவீர்கள்.
முகமது நபி சொல்கிறார், இந்த உலகத்தை எதுவாகப் பார்க்கிறீர்களோ அதுதான் நீங்கள்.
அன்றொரு நாள், நமது தியான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு ஹோட்டலில், நான் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இந்து அலைவரிசையில் ஒரு பழைய படத்திலிருந்து டூயட் ஓடிக் கொண்டிருந்தது. இன்னொரு இந்து அலைவரிசையில் ஒரு புதிய படத்திலிருந்து டூயட் ஓடிக் கொண்டிருந்தது. இந்த இரண்டு அலைவரிசைகளும் மனிதனின் விழிப்புணர்வில் வளர்ச்சியே ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது என்று என் செயலரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் என் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும் நான் சொல்வதை ஒப்புக் கொண்டார்.
ஒரு மூடிய அறையில் ஐந்து பேர் ஒரு பந்தை அங்கும் இங்கும் உதைப்பது போல், ஒரே மாதிரியான வடிவ அமைப்புகள் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டிருக் கின்றன. குறைந்தபட்சம் மேலை நாடுகளிலாவது, இறுதி வரை சென்று விஷயங்களை ஆராய்ந்து விட்டுத் திரும்பி வருகிறார்கள். மேலை நாடுகளில் ஒரு வளரும் விழிப்புணர்வு இல்லா விட்டாலும், குறைந்தபட்சம் ஒரு சமூக அறிவுக் கூர்மையாவது இருக்கிறது. பழக்கமான வடிவ அமைப்புகள் நமது அறிவுக் கூர்மையை முழுமையாகச் சாகடித்து விடக் கூடும்.
நான் இவற்றையெல்லாம் மக்களிடம் சொல்லும் பொழுது, அவர்கள் சொல்கிறார்கள், ''ஸ்வாமிஜி, நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது; ஆனால் என்னால் அவற்றை விட்டுவிட்டு வெளியே வரமுடியவில்லை". நான் சொல்கிறேன் ... என்னுடைய வார்த்தைகள் உங்களை ஊடுருவிச் சென்று உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்க அனுமதி அளியுங்கள். இங்குதான் தியானம் துணை புரிகிறது. என்னுடைய தியான முகாம்களில், வெளிப்புறப் புரிந்து கொள்ளுதலை கொடுக்கிறேன்; பிறகு
வாழ்க்கையில் ஒரு கொள்கை வெறியராகவோ அல்லது எதையேனும் பற்றிக் கொண்டு தொங்கிக் கொண்டோ இருக்காதீர்கள்.
தியானத்தின் மூலமாக உங்களுக்குள் ஊடுருவிச் சென்று அதன் மீது செயலாற்றுகிறேன்.
ஆனால் மக்கள் சொல்கிறார்கள், "ஸ்வாமிஜி, எங்களுக்கு வேலை இருக்கிறது, பணம் கட்ட வேண்டிய பில்கள் இருக்கின்றன, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டியவைகள் இருக்கின்றன, பிறகு எப்படி எங்களால் தியானம் செய்ய முடியும்?''. நான் அவர்களுக்கு ஒரு எளிய தியான முறையைப் பதிலாகச் சொன்னேன்; உங்கள் பில்களுக்கு பணம் கட்டுவதற்கோ அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியவற்றை முடிப்பதற்கோ நேரம் இருக்கிறதோ இல்லையோ, முச்சு விடுவதற்குக் கண்டிப்பாக நேரம் இருக்கிறதல்லவா? இல்லாவிடில் நீங்கள் உயிருடன் இருக்க முடியாது! இப்பொழுது, நீங்கள் சுவாசத்துடன் வெறுமனே விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள், அவ்வளவுதான்! வெறுமனே உங்கள் மூச்சைக் கவனியுங்கள். அது உங்களால் செய்யக் கூடிய, மிகவும் எளிமையான, அதிக சக்தி வாய்ந்த ஒரு தியான முறையாகும்.
ஞாபகம் வரும் பொழுதெல்லாம் இந்த முறையைப் பயிற்சி செய்யுங்கள். வெகு சீக்கிரத்திலேயே அது ஒரு பழக்கமாகி விடும். உங்கள் மூச்சில் விழிப்புணர்வைக் கொண்டு வரும் பொழுது, நீங்கள் நிகழ்காலத்தில், இந்தக் கணக்கில் இருக்கிறீர்கள். நிகழ்காலத்தில் வாழ்வது உங்களை ஆனந்தத்திற்கு இட்டுச் செல்லும். 'இப்பொழுதின்' ஆற்றல் ஆனந்தத்திற்கு நேரான வழியாகும். ஒவ்வொரு உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் வெறுமனே விழிப்புணா்வையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனால் ஆனந்தத்தை அடைய, உங்களுக்குத்
உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவோ அல்லது துயரமானதாகவோ ஆக்குவது உங்கள் மனநிலையே ஆகும். தனியாக நேரம் தேவையில்லை. தனியாக நேரம் ஒதுக்கித் தனிமையை நாடிச் செல்லவோ அல்லது தியான முகாமிற்குச் செல்லவோ தேவையில்லை. உங்கள் தினசரி செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம். நீங்கள் உருவாக்கும் அதிக விழிப்புணர் வினால் உங்களுடைய காலக் கெடுக்களும், ஏனைய இலக்கு களும் மிகவும் திறமையுடன் நிறைவேற்றப்படும்.
தியானம் என்பது உங்கள் விழிப்புணர்வில் ஒரு மாற்றம் என்பதைத் தவிர வேறில்லை. அது உங்கள் இருப்புத் தன்மையில் ஒரு சக்தி மாற்றம். அது ஒரு மூலையில் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டு, நேரான முதுகுடன் மனதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதல்ல. நீங்கள் இவற்றையெல்லாம் செய்ய முயற்சி செய்தால், அது கழுத்து வலியிலும் முதுகு வலியிலும்தான் முடியும் ! உங்களால் அமர்ந்து தியானம் செய்ய முடியவில்லை என்ற இன்னொரு கவலையும் சேர்ந்து கொள்ளுளும்.
ரீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நிகழ் காலத்தில், இப்பொழுது, இங்கேயே வாழ முயற்சி செய்வதே. நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையை உணர்ந்து மகிழலாம். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்வீர்கள். நீங்கள் நிகழ் காலத்தில் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையே உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒரு சிறந்த குருவாகும். வாழ்க்கை ஒரு சிறந்த ஆசான் என்று சொல்வது இதைத்தான். அதைத் தவற விட்டால், கற்றுக் கொள்வதற்கு உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். கற்றுக் கொள்வதற்கு, நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது,
ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் நீங்கள்தானே உங்கள் மனதுடன் இருக்கிறீர்கள்? பிறகு ஏன் அதை தூய்மையாக வைத்திருக்கக் கூடாது ?
நீங்கள் விழித்துக் கொண்டு விரைவில் கற்றுக் கொள்வதற்காக வேண்டி வாழ்க்கை சில அதிர்ச்சிகளைக் கொடுக்கும். இல்லாவிடில் நீங்கள் ஜென்ம ஜென்மங்களாகக் கற்றுக் கொண்டே இருப்பீர்கள்.
இப்பொழுது பாருங்கள், நீங்கள் இறந்த காலத்தின் பின்னால் வருத்தத்துடனோ அல்லது எதிர் காலத்தின் பின்னால் மன உளைச்சலுடனோ ஒடிக் கொண்டிருக்கிறீர்கள். இது போன்ற வடிவ அமைப்புகளால் நீங்கள் நிகழ்காலத்தை முழுவதுமாக அழித்து விடுகிறீர்கள். என்ன நிகழ்கிறது என்றால், நீங்கள் ஒருபோதும் சரியாக செயல்படுவதில்லை; உங்கள் இறந்தகால நினைவுகளின் அல்லது எதிர்கால மன உளைச்சலின் அடிப்படை யில் வெறுமனே எதிர்ச்செயல் புரிகிறீர்கள். நீங்கள் எதிர்ச்செயல் மட்டுமே புரியும்போது, உங்களுடைய முழுழு ஆற்றலையும் பயன்படுத்துவதில்லை. நீங்கள் வெறுமனே ஒரு புரோகிராம் செய்யப்பட்ட இயந்திர மனிதனைப் போல நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் அறிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்தாமல், குருட்டுத் தனமான தர்க்கத்தைப் பின்பற்றுகிறீர்கள்.
உங்களுடைய சக்தியில் 80% இறந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ பூட்டப்பட்டு, 20% மட்டுமே நிகழ்காலத்திற்குக் கிடைக்கிறது. அதனால்தான் நீங்கள் மந்தமாகவும், உங்கள்சக்தி வடிந்து விட்டதாகவும் உணர்கிறீர்கள். மிகுந்த விழிப்புணர்வுடன் இந்தச் சூழ்நிலையை மாற்றி விட முடியும்; உங்கள் வாழ்க்கையை ஒரு உயர்ந்த தளத்தில், அதிக ஆனந்தத்துடனும், மகிழ்ச்சியுடனும் சிலிர்ப்புடனும் வாழ முடியும்! "ஸ்வாமிஜி, வெறுமனே நமது சுவாசத்தை சாட்சியாக
இருந்து கவனிப்பதன் மூலம், ஆனந்தத்தை அடைய முடியும் என்று கருதுகிறீர்களா ?''
வெறுமனே உங்கள் மூச்சைக் கவனியுங்கள். அது உங்களால் செய்யக்கூடிய, மிக எளிய, மிக சக்திவாய்ந்த ஒரு தியான முறையாகும்.
ஆம். அது ஒருமிகவும் சக்தி வாய்ந்ததியான முறையாகும். பாருங்கள் ... உங்கள் சுவாசத்தை கவனிக்கும் பொழுது, உங்கள் விழிப்புணர்வு தீவிரமடைகிறது. ஒரு எண்ணம் கூட உங்கள் விழிப்புணா்விலிருந்து தப்பித்துச் செல்ல முடியாது. ஒவ்வொரு எண்ணமும் உங்கள் விழிப்புணர்வைக் கடந்து செல்லும் பொழுது, நீங்கள் தானாகவே எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குவதை நிறுத்தி விடுகிறீர்கள்.
நீங்கள் உங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்வ தற்காகத் தனியாக நேரம் செலவிட வேண்டியதில்லை; அதை விழிப்புணர்வே உங்களுக்காகச் செய்து விடும். உங்களு டைய சிந்தனை அமைப்பு தானாகவே மாற்றியமைக்கப்பட்டு விடும். விழிப்புணர்வின் ஆற்றல் இவ்வாறு உங்களுடைய சிந்திக்கும் முறையையே நேர்மறை சக்தியாக மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது.
வலியை உணர்ந்தால்தான் நமது ஆசைகள் நிறைவேறிய தாக நாம் எப்படியோ நம்ப ஆரம்பித்து விட்டோம். வலிக்கும் வரை ஒடுகிறோம்; வேலியில் முட்டிக் கொள்ளும் வரை ஒடுகிறோம். வேலியைப் பற்றிய கருத்து ஆழமாகப் பதிந்து விட்டதால், வேலி என்று ஒன்றும் கிடையாது, எல்லை என்று ஒன்றும் கிடையாது என்று சொன்னால் கூட நாம் நம்பத் தயாராக இல்லை. நாம் ஓடி எப்படியோ ஒரு வேலியில் இடித்துக் கொண்டு வலியை உணர்கிறோம்; பிறகு வலியை உணர்ந்த திருப்தியில் நிறுத்தி விடுகிறோம். பிறகு நமது ஆசை தீர்ந்ததாக நினைக்கிறோம். நாம் எப்பொழுதுமே பொழிவதற்கு தகுதி பெற வேண்டுமானால் மன உளைச்சலையும் கவலையையும் கடந்து செல்ல வேண்டும் என்று
உங்கள் மூச்சில், விழிப்புணர்வைக் கொண்டு வரும்பொழுது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். நிகழ்காலத்தில் வாழ்வது உங்களை ஆனந்தத்திற்கு இட்டுச் செல்லும்.
எண்ணுகிறோம். நாம் கவலைக்காகவும் வலிக்காகவும் முடிவற்ற தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
மேலும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் ... அவர்கள் தானாகவே கவலைகளை உருவாக்கிக் கொள்ளுவார்கள். பிறகு அதை மறப்பதற்காகக் குடிப்பார்கள்! இது இன்று மிகவும் சாதாரணமாகி விட்டது. அது எப்படி இருக்கிற தென்றால், ஒரு பன்றி தான் இருக்குமிடத்தின் சகதியையும் நாற்றத்தையும் தாங்க முடியாமல், அதனுள்ளே மூக்கை நுழைத்துக் கொண்டதாம். குடிப்பதன் மூலம் உங்கள் கவலைகளை நீங்கள் வென்று விட்டதாக நினைக்கிறீர்கள்; ஆனால் உண்மையில் நீங்கள் இன்னும் வேகமாக அதனுள் மூழ்குகிறீர்கள்.
நாம் எதையோ நினைத்து, ஆனால் நமக்கே முரண்பாடான விளைவுகளை உருவாக்கி இன்னும் அதிகமான கவலைகளுக்கு ஆளாகிறோம். நமக்குத் தெரியாவிடினும், இதுவே தலையாய பிரச்சினை.
ஒரு சின்ன கதை ...
ஒரு மனிதரின் வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி ஒருவர் வந்தார். அந்த மனிதர் விருந்தாளிக்கு ஒரு காபி கொண்டு வரும்படி சமையலறையிலிருந்த தன் மனைவியை நோக்கிக் கத்தினார். மனைவியோ பதிலுக்கு வீட்டில் காபியும் இல்லை கடையில் சென்று வாங்குவதற்கு பணமும் இல்லை என்று உள்ளேயிருந்து திருப்பிக் கத்தினாள். கணவன் கோபமடைந்து அவளைத் திட்டத் தொடங்கினான். இறுதியில் காபி கொடுக்க முடியாமல் போனதற்காக அவளுக்கு ஒரு அறையும் கொடுத்தான். மனைவி அழ ஆரம்பித்தாள். நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த விருந்தாளி மெதுவாக எழுந்து சென்றுவிட்டார். கண்களைத்
ஒவ்வொரு உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் வெறுமனே விழிப்புணர்வையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனால் ஆனந்தத்தை அடைய, உங்களுக்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை.
துடைத்துக் கொண்ட மனைவி வெற்றிக் களிப்புடன் கணவனிடம் சொன்னாள். ''பார்த்தீர்களா? நான் அழுவது போல் நடித்து அவரை வெளியே அனுப்பிவிட்டேன்!''. கணவன் சொன்னான், "நல்லது! நான் உன்னிடம் கோபமாக இருப்பதுபோல் நடித்து உன்னை அழ வைத்தேன்!'. அப்பொழுது அந்த விருந்தாளியும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டு சொன்னார். "நானும் வெளியே செ
ல்வது போல் நடித்து விட்டுத் திரும்ப வந்து விட்டேன்!''.
(சிரிப்பு!)
நமது எண்ணங்களும் நமது வார்த்தைகளும் வேறு வேறாக இருக்கின்றன; அதனால் நாம் வாழும் வாழ்க்கையை இழந்து விடுகிறோம். ராமகிருஷ்ணர் சொல்கிறார், "நமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் ஒன்று சேர்த்தல் ஒரு தவம் செய்வது போலாகும்'. ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? நமது எண்ணங்களைத் திருத்தி வார்த்தைகளாக வெளிக்கொண்டு வருகிறோம். வார்த்தைகள் வெளிவருவதற்கு முன் நிறைய கணக்கீடுகள் செய்யப்படுகிறது. நாம் எதிர்கால லாப - நஷ்டங்களைப் பார்த்து ஆராய்ந்த பின்னரே பேச ஆரம்பிக்கிறோம். இதனால் நமது புற இயல்பு ஒருபோதும் ஒருங்கிணைக்கப்படுவதில்லை; நாம் பல துண்டுகளாக பிளவுபட்டிருக்கிறோம்.
எப்படி எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் மணிக் கணக்காக என்னால் பேச முடிகிறது என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். உள்ளவாறே நான் பேசுகிறேன், அவ்வளவுதான். உண்மையை வெளிப்படுத்துவதில் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை! நான் வார்த்தைகளை ஒருபோதும் திருத்துவதில்லை. எனக்கு, எண்ணுவதும் பேசுவதும் ஒன்றுதான். உங்களுக்கு, முதலில்
நீங்கள் செய்ய வேண்டியதல்லாம், நிகழ்காலத்தில், இப்பொழுது இங்கேயே வாழ முயற்சி செய்வகே.
எண்ணம் வருகிறது; பிறகு அதைத் திருத்திய1 பிறகே பேச்சு வருகிறது. இந்த மொத்த நடைமுறையில் கள்ளம் கபடமற்ற தன்மை இழக்கப்படுகிறது; நீங்களும் நிறைய வார்த்தைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்.
நான் தன்னிச்சையாகப் பேசுவதனால் நீங்கள் என்னுடைய பேச்சை மணிக்கணக்காக அமர்ந்து கேட்க முடிகிறது. இல்லா விடில் நீங்கள் அமைதியற்று விடுவீர்கள். நீங்கள் நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உட்கார்ந்திருப்பதே இதற்குப் போதுமான நிரூபணமாகும்.
தன்னிச்சையாக நிகழும் பொழுது, நீங்கள் எண்ணாமல் வெறுமனே பாய்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். இல்லாவிடில், நீங்கள் உங்கள் சொந்த மன அமைப்பிலேயே தேங்கி விடுகிறீர்கள். நீங்கள் ஒரே வழியில் சிந்தித்துக் கொண்டிருக்கும் குறுகிய மனப்பான்மையுடையவராகி விடுகிறீர்கள்.
ஒரு சின்ன கதை....
அண்டை வீட்டுக்காரரின் நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்ததால், ஒருவரால் எவ்வளவு முயுன்றும் தூங்க முடியவில்லை. இது சில இரவுகள் தொடர்ந்தது. இறுதியில் அவர் அவற்றின் சொந்தக்காரரிடம் பேசுவதாக முடிவு செய்தார். அடுத்த நாள் அவருடைய வீட்டிற்குச் சென்று, அதைப் பற்றிப் புகார் கூறினார். அவரோ, அசையவேயில்லை. ''என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ என்ன செய்யப் போகிறாய் ?'' என்று கேட்டார். அதற்கு முதலாமவர் சொன்னார், ''நல்லது, இன்று இரவு அந்த நாய்களை என் வீட்டின் கொல்லைப் புறத்தில் கட்டிப் போட்டு விடுகிறேன். அப்பொழுது உமக்குத் தெரியும் அது எப்படி இருக்கும் என்று!''.
அவரது முட்டாள்தனமானது என்று எண்ணிப் பாருங்கள்! அவர் மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தில் ஒரே சிந்தனையில் சென்று கொண்டிருக்கிறார். அவரால் எப்படி ஒரு தீர்வைக் காண முடியும் ? நீங்கள் தன்னிச்சையாக இருக்கும் பொழுது, உங்களுக்கு எதுவும், ஒருபோதும், ஒரு கணம் கூட சவாலாக இருக்காது. நீங்கள் உடனே ஒரு தீர்வுடன் வந்து விடுவீர்கள். நீங்கள் தன்னிச்சையாக இருக்கும் பொழுது, எந்த உச்சியிலிருந்தும் சுலபமாகக் குதித்து, கீழே வரும் வழியிலேயே உங்கள் இறகுளைக் கட்டிக் கொண்டு விடுவீர்கள்!
சொல்லுங்கள் ... ஏதேனும் கேள்விகள் ?
''ஸ்வாமிஜி, எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இத்தனை கவலை மற்றும் மனஇறுக்கத்திற்கு¹ மூலகாரணம் எது ?''.
உண்மையில் இந்தக் கேள்வியே, நீங்கள் அதனுள் ஆழமாக பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
நாம் தொடர்ந்து எல்லாவற்றையும் பற்றி- நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பற்றி, நாம் வசிக்கும் இடங்களைப் பற்றி, அவ்வப்பொழுது எழும் சூழ்நிலைகள் பற்றி, நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை பற்றி ஏதாவது கற்பனைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் தொடர்ந்து விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் அல்லது பகல் கனவு காண்கிறோம். ஆனால் உண்மை எப்பொழுதும் இந்த கற்பனையிலிருந்து மாறுபட்டிருக்கிறது. உண்மைக்கும் நமது கற்பனைக்கும் உள்ள இடைவெளியே நமது வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கத்திற்குக் காரணம்.
நாம் நமக்குள் ஒரு மாய உலகத்தைப் படைத்துக் கொண்டு அதை நிஜத்தில் மெய்யாக்க முடியுமா என்று தொடர்ந்து முயற்சி
செய்து கொண்டிருக்கிறோம். நமது கற்பனைகள் மிகையாக இருந்தால், உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள இடை வெளியும் அதிகமாக இருக்கும், அதனால் மன இறுக்கமும் அதிகமாக இருக்கும்.
நாம் எப்பொழுதும் நமது கற்பனைகள் மெய்யாகி விடும் என்ற நிலையை நெருங்கி விட்டதாக நினைக் கிறோம். ஆனால் அங்கு செல்லும் பொழுது, நமது கற்பனை இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கும். ஆதலால், நம்மால் ஒருபோதும் அதை நெருங்க முடியாது. இது நம்மிடம் ஏமாற்றத்தையும், மன இறுக்கத்தையும், கவலையையும் உருவாக்குகிறது.
உண்மை என்னவெனில், நாம் கற்பனையில் இருக்கிறோம் என்பது கூட நமக்குத் தெரியாது. நமது கற்பனை அந்த அளவிற்குத் திடமான விஷயமாகி விட்டதால், நம்மால் அதை கற்பனை என்று கூடப் பார்க்க முடியவில்லை. நாம் அதில் சிக்கிக் கொண்டு விட்டோம். தெளிவாக இருங்கள்... எதிலாவது வேலை செய்வது உங்களுக்கு மன இறுக்கத்தை உண்டாக்கினால், நீங்கள் நிஜத்தில் வேலை செய்யவில்லை; கற்பனைப் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு கணமும், நமது எதிர்பார்ப்புகளை வெளி யுலகில் நிஜமாக்க முயற்சி செய்து கொண்டிருக் கிறோம்; மக்கள் நாம் கற்பனை செய்த முறையில் எதிர்ச்செயல் புரியவில்லை என்றாலோ அல்லது தக்க பதில் கொடுக்கவில்லை என்றாலோ நாம் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். சின்னச் சின்ன விஷயங் களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை, எப்பொழுதும் அது நமது கற்பனையுடன் பொருந்தி வருகிறதா என்று பார்க்கிறோம். இது நமக்குள் ஒரு விழிப்பற்ற செயலாக இருப்பதால், நமது மன
நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். இறுக்கத்தின் காரணத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் அனைத்திலும் மிகவும் நுட்பமாக பின்னப்பட்டிருப்பதால், அதை வெளிப்படுத்த முடியவில்லை.
நீங்கள் இந்த விஷயத்தில் கூர்மையான விழிப் புணர்வைக் கொண்டு வந்து உங்களைச் சில மணி நேரங்கள் கவனித்தீர் களானால், உங்களுடைய முழு மனமும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் மனதையும், உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும் கவனிப்பவராக இருப்பதென்று தீர்மானியுங்கள். உங்கள் மனம் எவ்வளவு நுட்பமாக நீங்கள் பார்க்கும் அல்லது செய்யும் ஒவ்வொரு சின்ன விஷயங்களிலும் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதையும், அது எவ்வாறு சில சமயங்களில் உங்கள் எதிர்பார்ப்புகளுடன் பொருந்திப் போகிறது, சில சமயங்களில் தவறி விடுகிறது என்பதையும், இவ்வாறு நிகழும் சமயங்களில் எவ்வாறு உங்கள் மன இறுக்கம் மற்றும் கவலை எழுகிறது என்பதையும் காண்பீர்கள்.
இந்த விஷயத்தில் முழுவதும் மிகுந்த விழிப்புணர்வை செலுத்துவதன் மூலம், உங்கள் மனம் எவ்வாறு விளையாடுகிறது, எவ்வாறு மன இறுக்கத்தை உருவாக்குகிறது என்பதைப் பார்க்க முடியும். ஒரு முறை கவனிப்பவராக இருக்கக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், உங்கள் கவலைகள் குறைந்துவிடும்; வெளியுலக நிகழ்ச்சிகளை உள்ளே எடுத்துச் செல்லும்போதுதான், நீங்கள் உங்களுக்குள் ஒரு பெரிய தகவல் அடித்தளத்தையே உருவாக்கி விடுகிறீர்கள்; அதிலிருந்து புதிய கவலைகள் எழுகின்றன.
மேலும் ஒரு விஷயம் ... கால வரிசைப்படி திட்டமிட்டு, அதை மெய்யாக்க கால விரயமின்றி உழைப்பீர்களானால், நீங்கள்
உண்மையின் பாதையில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி, வேலை செய்வதை விட கவலைப்படுவது அதிகமாக இருந்தால், அப்பொழுது நீங்கள் இருக்கும் பாதையில் உண்மைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது. அது உங்களுக்குள் நோக்கி, உங்கள் எண்ணங்களை நேராக்கிக் கொள்ள வேண்டிய நேரம்.
கால வரிசைப்படி திட்டமிடுங்கள், சரிதான்; ஆனால் உங்கள் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறீர்கள் என்று நினைப்பதுதான் சரியற்றது. இதை உளவியல் திட்டம் எனலாம்; இதுவே மன இறுக்கத்தையும் கவலையையும் உருவாக்கிறது.
உங்களுக்குத் திட்டமிடுவதற்கு 2 மணி நேரம் தேவைப் பட்டால், மீதி 22 மணி நேரம், அதைச் செயல்படுத்துவதற்குக் கிடைக்கிறது. பிறகு ஏன் அது அது செயல்படுத்தப்படுவதில்லை ? ஏனெனில், நீங்கள் அதில் 80% நேரத்தை எப்படி உங்கள் திட்டத்தை செயல்படுத்தப் போகிறீர்கள் என்ற கவலையிலேயே வீணாக்கி விடுகிறீர்கள்.
நீங்கள் உங்களுக்குள்ளேயே திட்டத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளும் பொழுது, உங்கள் சக்தி அதிலேயே வடிந்து விடுகிறது. சக்தியை, திட்டத்தைச் செயல்படுத்த உபயோகிப்ப தற்குப் பதிலாக, வெறுமனே வீணாக்கி விடுகிறீர்கள். பிறகு வேலை எப்படி முடியும் ?
இன்னொரு விஷயம்... உண்மையிலேயே உங்களுக்கு வேலையை முடிக்கும் விருப்பம் இருந்தால், இருந்தால், கவலைப்படாமல் அதைச் செய்வதில் இறங்குவீர்கள். நான் சொல்கிறேன் ... மன இறுக்கமும் கவலையும் உண்மையிலிருந்து ஓடி விட உதவும் நொண்டிச் சாக்குகள். மன இறுக்கம் மற்றும் கவலை
நமது எண்ணங்களும் வார்த்தைகளும் வேறு வேறாக இருக்கின்றன.
என்ற போர்வையின் கீழ், நீங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்கிறீர்கள்.
ஒவ்வொரு பிரச்சினையும், தீர்வையும் அதனுடன் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. உண்மையிலேயே உங்களுக்கு அதைத் தீர்க்கும் விருப்பம் இருந்தால், நீங்கள் அதைச் செய்வீர்கள். நீங்கள் செய்ய வேண்டியகெல்லாம் பிரச்சினையை ஆழ்ந்த விழிப்புணர்வுடன் உற்று நோக்க வேண்டியதுதான்; தீர்வு தானாகவே வெளிவந்து விடும். உங்களுக்கு அதைத் தீர்க்கும் விருப்பமின்றி, ஆனால் அதைப் பற்றிப் பேசுவது சுகமாக இருப்பின், நீங்கள் அதைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டும், அதைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டும், கவலைப்பட நிறைய இருப்பதாகப் பெருமிதப்பட்டுக் கொண்டும் இருப்பீர்கள்.
பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் சிறந்த வழி, மன இறுக்கம், கவலை போன்ற மனமயக்க நிலைக்குச் சென்று விடுவது. பல சமயங்களில் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த நிலையிலேயே சுகமாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களால் எல்லாவிதமான பொறுப்புகளில் இருந்தும் விடுதலை பெற்றிருக்க முடியும்.
ஒரு சின்ன கதை....
எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் ஒரு புகழ் பெற்ற மனிதர், ஒரு கிராமத்திற்கு வந்தார். வெகு சீக்கிரத்திலேயே அவரைச் சுற்றி ஒரு கும்பல் கூடி விட்டது. அவர் ஒரு மனிதனைக் கழுத்தில் தொட்டவுடனேயே, அவனுடைய நாட்பட்ட கழுத்து வலியில் இருந்து அவனுக்கு நிவாரணம் கிடைத்தது. இன்னொரு மனிதனைத்
நான் வார்த்தைகளை ஒருபோதும் திருத்துவதில்லை. எனக்கு எண்ணுவதும் பேசுவதும் ஒன்றுதான். உங்களுக்கு முதலில் எண்ணம் வருகிறது. பிறகு அதைத் திருத்திய பிறகே பேச்சு வருகிறது.
கலையில் கொட்டவுடன், அந்தக் கண்மே அவன் தலைவலியும் மறைந்து விட்டது. அடுத்து ஊன்று கோலுடன் இருந்த ஒரு மனிதனை நோக்கி நகர்ந்தார். ஆனால் ஊன்று கோலுடன் இருந்த மனிதனோ விலகிச்சென்று ''என்னைத் தொட்டு விடாதீர்கள்!'' என்று சொன்னான். குணப்படுத்துபவர் குழுப்பமடைந்து ஏனென்று வினவினார். அதற்கு அவன் சொன்னான், ''நான் உடல் ஊனமுற்றவர்களுக்கான நலத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்கிறேன்''.
(சிரிப்பு!)
நாம் நமது பிரச்சினைகளைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அதற்கு ஒரு உடனடி தீர்வு கொடுக்கப்படும் பட்சத்தில், அதை ஏற்றுக் கொள்வது நமக்குக் கடினமாக இருக்கிறது! ஒரு உடனடித் தீர்வு கொடுக்கப்படும் பட்சத்தில், உடனே நமக்குள் ஒரு பெரும் வெறுமையை உணர்கிறோம். நம் வாழ்க்கையில் அதற்குப் பிறகு செய்வதற்கு எதுவுமில்லை என்பது போல் உணர்கிறோம். சுமை மிகவும் குறைந்து விட்டது போல் உணர்கிறோம்! நமது பிரச்சினைகள் திடீரென்று மறைந்து விடும் பொழுது, நம்மால் சரியாக சிந்திக்க முடியாதது போல் உணர்கிறோம். ஏனெனில் நாம் நமது பிரச்சி னைகளைக் கடந்து சிந்தித்ததேயில்லை!
உங்களுடைய எல்லா மன இறுக்கங்களும், கவலை களும் உண்மையிலேயே, நிஜத்திலிருந்து நீங்கள் மறைந்து கொள்ளும் ஆறுதல் பிரதேசங்கள் . உங்களுக்கு உண்மை யிலேயே ஏதேனும் செய்து முடிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அதைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுப்பது எது ?
Comfort Zones
நீங்கள் ஏன் உங்களை மன இறுக்கத்திலும், கவலையிலும் மூழ்கடித்துக் கொள்ளவேண்டும் ? நீங்கள் இதைச் செய்வதற்குக் காரணம் ஒருவேளை உங்களிடம் நிறைய நேரம் இருக்கலாம் அல்லது உண்மையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இருக்கலாம், அல்லது இத்தனை மன இறுக்கத்தையும் கவலையையும் வைத்திருப்பதில் பெரு மிதமாக இருக்கலாம், அவ்வளவே!
அதனால், வாழ்க்கை முறை, மக்கள் முதலியவை பற்றிய எல்லாக் கற்பனைகளையும் விட்டு விட்டு, இந்தக் கணத்தில் வாழுத் துவங்குங்கள்; மற்றவை தானாகவே நிகழும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... உங்களால் இந்த ஆறுதல் பிரதேசத்தில் நீண்ட காலம் வாழ முடியாது. ஒரு நாள் இல்லாவிடினும் இன்னொரு நாள் நிஜத்தைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். அதனால் விழிப்புடன் வாழத் தொடங்குங்கள்; விழிப்புடன் தீர்மானங்களை எடுங்கள்; நீங்கள் எடுத்த ஒவ்வொரு தீர்மானத்திற்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்னொருவருடைய தீர்மானத்தின்படி சென்று விட்டு, இறுதியில் அவர்கள் மீது பழி போடுவது மிகவும் சுலபமானது. அதை ஒருபோதும் செய்யாதீர்கள். அது மிகவும் முட்டாள் தனமான, கோழைத்தனமான செயலாகும். ஒருபோதும் யாரையும் எதற்காகவும் பழி சொல்லாதீர்கள். உங்களால் எதையேனும் கையாள முடியாத பட்சத்தில் மட்டுமே, மற்றவர்கள் மீது பழி போடுகிறீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.