Part 6: Guaranteed Solutions - For Lust Fear Worry
சொல்வதானால் தன்மையிலிருந்து பன்மை மறைந்து விட்டது. ஆனந்தம் இருக்கும் பொழுது, பன்மை இருக்க முடியாது. பன்மை மறையும் பொழுதுதான், ஆனந்தம் நிகழ முடியும்.
என் இருப்புத் தன்மையில் காமமோ, பயமோ, பார்றோ. வெறுப்போ அல்லது மற்ற எந்த எதிர்ப்பதங்களை உடைய உணர்ச்சிகளோ இல்லை. ஒரே உணர்ச்சி ஆனந்தம் மட்டுமே! நான் சொல்வதை புரிந்து கொள்வது உங்களுக்குக் கடினமாக இருக்கும். அது உங்களிடம் ஒரு அனுபவப்பூர்வமான புரிந்து கொள்ளுதலாக இல்லாத வரையில், அதைப் புரிந்து கொள்வது கடினம்தான். அதை ரீங்கள் பக்திபூர்வமான நிலையில் புரிந்து கொள்ளலாம். தற்சமயம், நான் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், அது போதும் !
புரிந்து கொள்ளுங்கள் ... ஆனந்தத்திற்கு முதல் படி கவனிப்பவராக ஆதலே. வாழ்க்கையை வெறுமனே ஒரு நாடகத்தைப் போல கவனியுங்கள். நீங்கள் கவனிக்கும் பொழுது, உங்கள் மனம் அசைவற்று அமைதியாக நிற்கிறது. அது அசை வற்று, அமைதியாக நிற்குமானால், நீங்கள் இழையைப் பிடித்து விட்டீர்கள். அந்த அசைவற்ற அமைதித் தன்மையை நீங்கள் ஒரே ஒருமுறை அனுபவித்து விட்டீர் களானால், நீங்கள் அந்த இழையைப் பிடித்து விட்டீர்கள்.
அந்த இழையே உங்களை நீண்டநேர அசைவற்ற அமைதித் தன்மையை நோக்கி அழைத்துச் செல்லும். இந்த அசை வற்ற அமைதித் தன்மையே உங்கள் குரு. வெளியேயுள்ள குரு உங்கள் உள்ளேயுள்ள குருவைக் கண்டுபிடிக்க உதவி செய்கிறார், அவ்வளவே. நீங்கள் இந்த அசைவற்ற அமைதித் தன்மையைக் கண்டுபிடித்து விட்டீர்களானால், எல்லா
வாரத்தின் 7 நாட்களும் தினமும் 24 மணி நேரமும்
உணர்ச்சிகளுமே வெறும் மனதின் விளையாட்டே என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
உங்களால் எந்த உணர்ச்சியையுமே விழிப்புடன் முயற்சி செய்து விட்டுவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதை விட்டுவிட அதிகமாக முயற்சி செய்தால், அதன் மீது உங்கள் பற்று அதிகமாகி, அதுவே ஒரு பெரிய தொந்தரவாகி விடும். உணர்ச்சி கள் உங்களை வட்டமிட்டு சுற்றி வந்து தொந்தரவு கொடுக்கும். ஒரே வழி உணர்ச்சிகளைக் கவனிப்பதே. உணர்ச்களைக் கவனிக்க கவனிக்க, உங்களுக்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
தற்சமயம், உங்கள் உணர்ச்சிகளில் நீங்கள் மிகவும் சிக்கிக் கொண்டிருப்பதால், உங்களால் அங்களை அவற்றிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் உங்களுக்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கும் இடையே ஒரு தூரத்தை உருவாக்க ஆரம்பித்து விடுவீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தூரம் அதிகரிக்கும். ஒரு நாள், கவனிப்பவா் காட்சியிலிருந்து மறைந்து விடுவார்.
பிறகு, நீங்கள் உணர்ச்சிகளை விட்டுவிட எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளத் தேவையில்லை. அவைகள் தானாகவே நமுவி விழுந்து விடும்; நீங்கள் அவற்றிலிருந்து துண்டிக்கப்பட்டதை உணர்வீர்கள். உங்களால் இனிமேல் அவைகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. அவைகள் உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வெறுமனே மறைந்து விடும். உங்கள் விழிப்புணர்வில் ஒரு மாற்றம் நிகழும். பிறகு நீங்கள் புது மனிதனாகி விடுவீர்கள்.
நான் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்கிறேன். உங்கள் மொழியில் சொல்வதானால் 24 x 7.
நீங்கள் வலிக்கும் இடமில்லை. உங்களிடம் அன்பு மட்டுமே இருக்கும். பின்னர் நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அன்பை, அது ஒவ்வொரு நிமிடமும் உங்கள் மீது பொழியும் எல்லையற்ற அன்பைப் புரிந்து கொள்வீர்கள்.
ஒரு சின்ன கதை....
ஒரு மனிதர் பலவீனமான இதயம் உடையவராய் இருந்தார். அவருடைய குடும்பத்தினர் எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் ஜாக்கிரதையாகவே சொல்லுவார்கள். ஒரு நாள், அவருடைய பணக்கார மாமா ஒரு மில்லியன் டாலரை அவருக்கு விட்டுவிட்டு இறந்துவிட்டார். அவர்கள் மிகவும் பரபரப் படைந்தனர்; அதேசமயம் அந்த செய்தியை எப்படி அவரிடம் போட்டு உடைப்பது என்று தெரியாமல் தவித்தனர். அவர் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இறந்து விடுவார் என்று பயந்தனர். அவர்களில் ஒருவர் ஆலோச னை கூறினார், ''குடும்ப மருத்துவரை அழைத்து, அவரை இதைக் கையாளச் சொல்வது தான் நல்லது என்று நினைக்கிறேன்'. அவர்கள் சம்மதித்தனர். அவர்கள் குடும்ப மருத்துவரை அழைத்து, அவரிடம் விஷயத்தை கூறினர். மருத்துவர் சொன்னார், ''கவலைப்படாதீர்கள், நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன். அது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு கடினமானதல்ல''. அவர் உடனே வீட்டிற்கு வந்து, அறைக்குள் சென்று அந்த மனிதரிடம் பேசத் தொடங்கினார். அவரிடம் சாதாரணமாகக் கேட்டார், ''இப்பொழுது திடீரென்று உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால். நீங்கள் என்ன செய்வீர்கள் ?''. அவர் சொன்னார், ''உங்களுக்குப் பாதியைக் கொடுத்துவிடுகிறேன்,
நாம் நமது பிரச்சினைகளைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்.
டாக்டர்''. இப்பொழுது அதிர்ச்சியைத் தாங்காமல் மருத்துவர் விழுந்து இறந்து விட்டார்.
(சிரிப்ப!)
அடுத்தவர்களுக்கு வரும் வரையில் நாம் வாழ்க் கையை ஒரு நாடகமாகப் பார்க்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் நமக்கு வரும் பொழுது அதை ஜீரணிப்பதற்குக் கடினமாக இருக்கிறது!
நாம் எப்பொழுதும் மற்றவர்களுக்கு அறிவுரை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நான் ஒரு புத்தகத்தில் படித்தேன்... அறிவுரை என்பது எல்லோருமே கொடுக்க விரும்பும், ஆனால் எவருமே எடுத்துக் கொள்ளத் தயாரில்லாத ஒரு விஷயம்!
உங்களால் தாமரை போல - தண்ணீருக்குள் ஆழமாக இருந்தும் அதனால் தீண்டப்படாமல் - இருக்க முடியுமானால், ரீங்கள் வாழ்க்கையின் விளையாட்டை விளையாடக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து தன்னைப் பல்வேறு வழிகளில் வெளிப் படுத்திக் கொண்டேயிருக்கிறது. நமது பங்கு, ஆழமான விழிப்புணர்வுடன் அதைப் புரிந்து கொண்டு அதனுடன் பாய்ந்து சென்று கொண்டிருப்பதுதான்.
படைப்பு அனைத்தும், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒருமித்து பாய்ந்து சென்று கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் தானாகவே உங்கள் வேலைகளையும், மன உளைச்சல்களையும் விட்டு விடுவீர்கள். உங்களைச் சுற்றி நடப்பவைகள், உங்கள் மையத்தைத் தீண்ட முடியாத நிலையை நீங்கள் அடைய வேண்டும். பிரபஞ்ச இருப்புத்தன்மை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதை நீங்கள் அபைவ பூர்வமாகப் புரிந்து கொண்டால் இது நிகழும்.
என் இருப்புத் தன்மையிலிருந்து பன்மை மறைந்து விட்டது. ஆனந்தம் இருக்கும்பொழுது பன்மை இருக்க முடியாது. பன்மை மறையும் பொழுதுதான் ஆனந்தம் நிகழ முடியும்.
வெளிப்புறத்தில், நீங்கள் பல விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் உங்கள் உள்மையத்தில், வெளியில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுமே பிரபஞ்ச இருப்புத் கன்மை என்ற பொதுவான இழையில் கோர்க்கப்பட்ட மணிகளைப் போலத்தான் என்பதை உங்களால் தொடர்ந்து பார்க்க முடிய வேண்டும். அவை எல்லாவற்றையும் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப் பது அந்த இழைதான்.
சொல்லுங்கள் ... ?