Doing1 Having2 Being3
வரை, அது இந்த முழு உலகத்திற்கும் ஈடாகத் தெரியும் - அனால் அதை அடைந்த பின்னரோ, எப்படியோ இனி அது முக்கியமற்றதாகி விடுகிறது. நீங்கள் உங்களை அறிந்து கொண்டு, உங்களுக்குச் சரியாக என்ன வேண்டும் என்று புரிந்து கொண்டு, அதை மட்டும் செய்ய முயற்சி செய்வீர்களாயின், ஒருபோதும் இது போன்ற சுயமுரண்பாடான மற்றும் சிதறுண்ட குழ்நிலைகளில் இறங்க மாட்டீர்கள்.
ரமண மஹரிஷி அழகாகச் சொல்கிறார் ...
"அடைவதன் முன் கடுகே ஆனாலும் மலையாய்க் காட்டி, அடைந்த பின் மலையே ஆனாலும் கடுகாய்க் காட்டும் மாய மனம்''
அதன் பொருள்: மனமானது அடைவதற்கு முன் கடுகைக் கூட ஒரு பெரிய மலையைப் போலக் காட்டி, அடைந்த பிறகு அது மலையாகவே இருந்தாலும் அதை அற்பமான கடுகைப் போல காட்டும் ஒரு மாயை !
ஒப்பிடுதலே இதுபோன்ற மனோபாவத்திற்கு மூல காரணம். மனம் வெறுமனே அதைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் பார்த்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் உங்களுடைய எல்லா ஆசைகளையும் துறந்துவிடச் சொல்லவில்லை. ஒப்பிட வேண்டாம் என்றும் சொல்லவில்லை. உங்களுடைய ஒப்பிடுதலில் தெளிவைக் கொண்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன். பொறாமையில் தெளிவைக் கொண்டு வாருங்கள். ஏன் ஒடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். வேறு யாரோ ஒருவர் ஓடிக் கொண்டிருக்கிறார் என்பதற்காக ஓடாதீர்கள், அவ்வளவே.
தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. தேவைகள் சில. ஆனால் ஆசைகளோ பல.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, ஒப்பிடா விட்டால் நாம் எங்கு நின்று கொண்டு இருக்கிறோம் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?''.
பாருங்கள் ... ஒப்பிடுதலில் இரண்டு வகை இருக்கிறது: ஆக்கபூர்வமான - ஒப்பிடுதல் மற்றும் அழிவுபூர்வமான -ஒப்பிடுதல்².
ஆக்கபூர்வமான ஒப்பிடுதலில், மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து, நீங்கள் அறியாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் விஷயங்களைப் பார்த்து உங்கள் அனுபவபூர்வமான அறிவை வளர்த்துக் கொள்கிறீர்கள். விஷயங்களை எவ்வாறு இன்னும் நன்றாகச் செய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொள்கிறீர்கள்.
உண்மையில், இதை ஒப்பிடுதல் என்று கூடச் சொல்ல முடியாது; அறிவைச் சம்பாதிப்பது அல்லது அனுபவபூர்வமான அறிவை வளர்த்துக் கொள்வது என்று வேண்டுமானால் சொல்லலாம். மேலும், மற்றவர்களிடம் இருப்பதைப்பார்த்து நீங்கள் பொறாமையோ அல்லது வேறு ஏதாவது விரும்பத்தகாத எண்ணங்களையோ அடைவதில்லை. இதுதான் மிகவும் முக்கிய மான விஷயம்.
நாம் பேசிக் கொண்டிருக்கும் உண்மையான ஒப்பிடுதல், மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் அழிவுபூர்வமான ஒப்பிடுதலைப் பற்றி.
அழகோ, பணமோ, அறிவோ அல்லது அந்தஸ்தோ மற்றவர்கள் அணுபவிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பொழுதுதான் நீங்கள் அதை அடைய விரும்ப
Constructive Comparison1 Destructive Comparison2
ஆரம்பித்து, கடன் வாங்கப்பட்ட ஆசைகளின் சுழலில் விழுகிறீர்கள். இது பொறாமையை நோக்கி இட்டுச் செல்கிறது.
இந்த உலகத்தில், நீங்கள் எதைச் செய்யினும் அதை விட நன்றாகச் செய்பவர்கள் நிச்சயமாக இருப்பார்கள். நீங்கள் உலகத்தின் தலைசிறந்த பொறியாளராகவோ அல்லது வேகமாக ஓடக் கூடியவராகவோ அல்லது மிகவும் திறமை வாய்ந்த ஒரு ஒவியராகவோ இருப்பதற்கான சாத்தியக் கூறு 99.99 சதவிகிதம் இல்லை. அப்படியெனில் நீங்கள் இவற்றை அனுபவிப்பதில் ஏதேனும் குறை இருக்கிறதென்றா பொருள் ? நீங்கள் வேறு எவரையும் விட குறைவாக அனுபவிக்கிறீர்களோ என்று எண்ணும் பொழுதுதான் உங்கள் மகிழ்ச்சி குறைய ஆரம்பிக்கிறது! ''வேறு யாரோ ஒருவர் உங்களை விட அதிகமாக அனுபவிக்கிறார்களோ" என்ற எண்ணம் எழும் கணத்திலேயே, உங்கள் மொத்தச் சுவையும் மாறி விடுகிறது. நீங்கள் பொறாமையுடன் அமைதியற்றும் போய் விடுகிறீர்கள்.
பாருங்கள், செய்வதில்லை. நாம் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம்தான் நம்மைத் தொந்தரவு செய்கிறது. நாம் இருக்கும் நிலையிலேயே ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம் நம்முள் நுழைந்தவுடன், நாம் துன்பமடைகிறோம். எவ்வாறு இந்த எண்ணம் வந்தது? மற்றவர்களைப் பார்த்து ஒப்பிட்டுக் கொள்வதால். நாம் இவ்வாறு உணர்வதற்குக் காரணம், இந்த எண்ணம் நேரடியாக நமது அஹங்காரத்தைத் தாக்கி, நம்மை ஒரு மாவடுவைப் போலச் சுருங்கிப் போக வைப்பதால்தான்.
உங்கள் தேவைகளைத் திருப்திப் படுத்திவிட முடியும். ஆனால் உங்கள் ஆசைகளை திருப்திபடுத்துவது முடியாத காரியம்.
ஒரு சின்ன கதை....
ஒரு தெருவின் இரு புறமும் எதிரெதிரே இரண்டு கடைகள், ஏறக்குறைய ஒரே மாதிரியான பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தன. கடுமையான போட்டி நிலவியது. அவற்றில் ஒரு கடைக்காரர் ஒருநாள் வெளியே ஒரு விளம்பரப் பலகையை வைத்தார்: ''1929-ஆம் வருடம் நிறுவப்பட்டது''. எதிர்ப்புறமுள்ள கடைக்காரர் இதைக் கடைக்குள்ளிலிருந்து கவனித்துக் கொண்டி ருந்தார். அடுத்த நாள் அவர் ஒரு விளம்பரப் பலகையை அவரது கடையின் முன் வைத்தார்: ''எல்லாம் புதிய பொருட்கள். பழய சரக்குகள் ஏதுமில்லை''.
(சிரிப்பு)
நீங்கள் உங்களை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொண்டு அதற்கு எதிர்வினையாற்றிக் கொண்டு இருந்தீர்களானால், உங்கள் மதிப்பை இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்று பொருள். நீங்கள் வெறுமனே உங்கள் மூளையிலிருந்து எதிர்ச்செயல் புரிகிறீர்கள்; அறிவிலிருந்து அல்ல. உங்கள் மூளை தான் காணும் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொண்டு, நீங்கள் ஒரு தர்க்க ரீதியற்ற வகையில் எதிர்ச்செயல் புரிவதற்கு ஒரு உடனடி அட்டவணையாக உதவுகிறது. அதே சமயத்தில், உங்கள் உள் அறிவுக்கூர்மையோ விஷயங்களை உள்ளது உள்ளவாறே நோக்கி மேலே செல்கிறது.
நீங்கள், உங்களுக்கு அருளப்பட்ட ஆற்றலைப் புரிந்து கொள்ளாதபோது, நீங்களே உங்களுக்குப் போதுமானதாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்காத போது, தானாகவே உங்களுக்குள்ளிருக்கும் வலிமையின் மீது நம்பிக்கையற்று, மற்றவர்களைப் பின்பற்ற ஆரம்பிக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறை ஒரு ஆசை நிறைவேறும் பொழுதும் இன்னும் நூறு வந்து விடுகிறது.
சார்பின்றி எதுவுமில்லை என்று புத்தா் சொல்கிறார். ஒரு புதிய கோளில் நீங்கள் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உயரமானவரா அல்லது குள்ள மானவரா ? அசிங்கமா அல்லது அழகா? பணக்காரரா அல்லது ஏழையா? சொல்லுங்கள்! நீங்கள் உங்களை எதுவென்றும் அமைத்துக் கொள்ள முடியாது, சரிதானே ? நீங்கள் வெறுமனே நீங்களாகவே இருப்பீர்கள்! அவ்வளவுதான். புரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் இந்தக் கோளில் இருக்கும் பொழுதும் இதுதான் உண்மை.
ஒவ்வொரு தனி மனிதரும் தனித் தன்மையுடையவர். உங்களால் ஒரு சிங்கத்தையும் குதிரையையும் ஒப்பிட முடியுமா ? நாம் எப்பொழுதாவதுநம்மை மலர்களுடனோ அல்லது பறவைகளுடனோ அல்லது மலைகளுடனோ ஒப்பிட்டுக் கொள்கிறோமோ ? நாம் வெறுமனே அவற்றின் அழகை அனுபவிக்கிறோம், இல்லையா ?
அதே போல், நீங்கள் ஏன் மற்ற மனிதர்களைக் கண்டும் மகிழ்ச்சியடையக் கூடாது ?
ஒரே மனிதர்கள் ஒவ் வொருவரும் தனித்துவம் வாய்ந்தும், வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டும் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பாதையில் முழுக் கவனத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் வரை ஒவ்வொரு நிமிடமும் மன நிறைவை அனுபவிப்பீர்கள். இன்னொரு மனிதரின் பாதையைப் பார்ப்பது என்றால் என்ன என்பது கூட உங்களுக்குத் தெரியாது.
'ஏன் ஒடிக்கொண்டிருக்கிறோம் ?' என்று சிந்திப்பதற்குக் கூட நேரமின்றி ஒடிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு சின்ன கதை....
நிட்டி முதலியார் தெரு விளக்குகள் இல்லாத ஒரு இருளான கிராமச் சாலையில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு பாதுகாப்பிற்காக முன்னால் சென்று கொண்டிருந்த காரைப் பின் தொடர்ந்து செல்வது என்று தீர்மானித்தார். சிறிது தூரம் சென்ற பிறகு முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று நின்றது. நிட்டி நிறுத்த முடியாமல் அதன்மீது மோதினார். ''நீ ஏன் நிறுத்தப் போவதாக சைகை செய்திருக்கக் கூடாது ?'' என்று நிட்டி அலறினார். தலையை வெளியே நீட்டிய ஓட்டுனர் சொன்னார், ''என்னுடைய கேரேஜிற்குள்ளேயேவா ?''.
(பலத்த சிரிப்பு!)
உங்களுடைய பாதையில் கவனம் செலுத்துவீர் களானால், நீங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டும் உங்கள் திறனில் விரிவடைந்து கொண்டும் இருப்பீர்கள். நீங்கள் உங்களை உங்களுடன் மட்டுமே ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும்; ஒருபோதும் மற்றவர்களுடன் அல்ல. நீங்கள் உங்களை அல்ல. மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுடைய சொந்த முன்னேற்றத்திற்கு உதவாத வீணான நேரம்தான்.
ஒருவன் 1000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்தான். 200 மீட்டர் ஓடிய பிறகு, பின்னால் திரும்பிப் பார்த்து, மற்றவர்கள் அவனுக்குப் பின்னால்தான் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் தொடர்ந்து ஒடினான். 500 மீட்டர் ஓடிய பிறகு, மீண்டும் திரும்பிப் பார்த்து, தான்தான் முன்னால் இருக்கிறோம் என்று சந்தோஷமடைந்து தொடர்ந்து ஓடினான். இவ்வாறே ஒவ்வொரு சில மீட்டருக்குப் பிறகும் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி, இறுதியில்
ஏன் ஒடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். வேறு யாரோ ஒருவர் ஒடிக்கொண்டிருக்கிறார் என்பதற்காக ஒடாதீர்கள். அவ்வளவே.
வெற்றி பெற்று விட்டான். அவன் திரும்பிப் பார்க்காமல், வேகமாக ஒடுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்தால், இன்னும் குறைந்த காலத்திற் குள்ளாகவே அவன் ஒட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஒருவேளை ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கக் கூடும்! அதே போல, நம் வாழ்க்கையிலும், மற்றவர்களைக் கவனிப்பதற்குப் பதிலாக, எப்பொழுதும் நமது சொந்தமுன்னேற்றத்திலேயே முழுக்கவனத்துடன்இருப்போமாயின், நமது முழுத் திறனையும் வெளிக் கொணர்ந்து உண்மையாக்க முடியும். ஆனால் நாம் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு, நமது முழுத் திறனையும் வெளிக் கொணர்ந்து உண்மையாக்காமல் தவற விட்டு விடுகிரோம்.
நீங்கள் ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு மற்றவர்களுடன் ஒப்பிடுவதில் எவ்வளவு நேரத்தையும் சக்தியையும் விரையமாக்குகிறீர்கள் சதவிகிதத்திற்கும் மேலாக என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல மடியும். முக்கியமாக, ஒப்பிடுதலும் பொறாமையும், மற்றவற்றை விட அதிகமாக, உங்கள் சக்தியை உறிஞ்சி விடும். மற்றவரிடம் எது இருப்பினும், எவ்வாறு அவர் சமாளித்து அதை அடைந்திருப்பார் என்றெல்லாம் திட்டமிடுவதிலும், கணக்குப் போடுவதிலும் உங்கள் மனம் மும்முரமாக வேலை செய்யும். உங்கள் மூளை சூடேறும். இந்தத் தேவையற்றக் கணக்குகளால் உங்கள் ஒட்டு மொத்த அமைப்புமே தன் சக்தியை இழந்து விடும். ஒப்பிடுதலாலும் பொறாமையாலும் நீங்கள் வெறுமனே உங்கள் சக்தியை வெகு சீக்கிரத்திலேயே வடித்து விட முடியும்.
நாம் எப்பொழுதும் பெட்ரோல், தண்ணீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நமது
இந்த எலி ஒட்டப் பந்தயத்தில் ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் வெற்றி பெற்றாலும் எலியாகவேதான் இருப்பீர்கள். 'ததா கிம்? ததா கிம்?' - 'அடுத்தது என்ன? அடுத்தது என்ன?'
சொந்த சக்தியைச் சேமிப்பது பற்றி என்ன சொல்வது? நமது சொந்த சக்தியைச் சரியான வழியில் உபயோகிப்பது பற்றி என்ன சொல்வது ?
நாம் ஏன் நமது சொந்த சக்தியைப் பற்றிய விழிப்பின்றி இருக்கிறோம் ? நாம் நம்மை சக்தி அருளப் பெற்றவர்களாய் காண்பதில்லை; அதுதான் காரணம். நம்மால் வெளியில் இருக்கும் சக்தி மூலங்கள் வீண்டிக்கப்படுவதைக் காண முடிகிறது; ஏனெனில் அங்கு சக்தியை நாம் உணர முடிந்த வடிவில் காண்கிறோம். அதே சமயத்தில், நமது சொந்த சக்தியை, நாம் வெறுமனே ஆமமான விழிப்பற்ற வழிகளில் விரையம் செய்து விட்டு, பிறகு நமக்குப் போதுமானது கொடுக்கப்படவில்லை என்று குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் உங்கள் சொந்த வளர்ச்சிக்காக உங்கள் எல்லா ச க்தியையும் உபயோகப்படுத்தினால், உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்; சுலபமாக விரிவடைந்து விடுதலை பெற்ற உணர்வை அனுபவிக்கலாம்.
ஒப்பிடுதலைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் உங்கள் பலவீனத்தையோ அல்லது பலவீனமான செயல் பாட்டையோதான் அளவிட எடுத்துக் கொள்கிறீர்கள். அதுதான் பிரச்சினை. ஏன் அவ்வாறு செய்ய விரும்புகிறீர்கள் ? ஒருபோதும் உங்களை உங்கள் பலவீனத்தைக் கொண்டு அளவிடாதீர்கள். நீங்கள் அணங்காரத்துடன் உங்களை ஏதோ சிறந்தவராக பறைசாற்றிக் கொள்ளவும் வேண்டாம். அனால் கொஞ்சம் சுயமரியாதையுடன் நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் என்பதைக் காண முடியும். அப்பொழுது உங்களை இவ்வாறு அளவிட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
நீங்கள் எப்பொழுதாவது உங்களை கண்பார்வையற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு, உங்களுக்குக் கண்பார்வையைக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறீர்களா ?
உங்களுக்குச் சுயமரியாதை இருக்குமானால், ஒவ்வொரு வரின் தனித்துவத்தையும் உணர்ந்து, ஒப்பிடுவதற்கே இடமில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். வெறுமனே நமது இருப்பிற் காகவே நன்றியுணர்வுடன் இருப்பதற்கு இது முதல் படியும் கூட! ஒரு சின்ன கதை....
ஒரு முறை ஒரு அரசன் மந்திர சக்திகளை அடைவதற்காக ஒரு குருவிடம் சென்றான். அவனது அண்டை நாட்டு அரசா்களை விட மிகவும் சக்தி வாய்ந்தவனாக ஆக விரும்பினான். அவன் குருவின் முன் அமர்ந்து தான் வந்ததன் நோக்கத்தைப் பற்றிக் கூறத் தொடங்கினான். குரு அரசன் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டார். பிறகு அவர் அவனைத் தனது தோட்டத்தில் ஒரு ரோஜாச் செடியும், ஒரு சைப்ரஸ் செடியும் அருகளுகே வளர்ந்திருந்த இடத்திற்குப் போகச் சொன்னார். அவர் சொன்னார், "அவைகளே உனது ஆசான். நீ கற்றுக் கொள்ள வேண்டியதை அவை உனக்குக் கற்றுக் கொடுக்கும்'. தோட்டத்திற்குச் சென்ற அரசன் அந்த இரண்டு செடிகளையும் பார்த்தான். அந்தச் செடிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் குருவிடம் திரும்பி வந்து கேட்டான், "தாங்கள் என்ன சொல்கிறீர்கள் குருவே ? எவ்வாறு அவை எனக்குக் கற்றுத் தர முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'. குரு அவனை அந்தச் செடிகளிடம் அழைத்துச் சென்று விளக்கினார், ''இந்த சைப்ரஸ் செடி ரோஜாச் செடிக்கு அருகில் பல வருடங்களாக இருக்கிறது. அது ஒருபோதும் ரோஜாச் செடியாக விரும்பியது இல்லை. அதே போல், ரோஜாச் செடியும் ஒருபோதும் சைப்ரஸ் செடியாக விரும்பியது இல்லை. அவைகள் தினமும் வெறுமனே தங்களது கடமைகளான வளர்தலையும்
நாம் அனைவரும் இந்த மூன்று அச்சுக்களைச் சுற்றியே இருக்கிறோம்; செய்தல், பெறுதல், இருத்தல்.
மலர்தலையும் செவ்வனே செய்து வருகின்றன. மனிதன் சைப்ரஸ் செடியாக இருந்திருந்தால், தன்னை ரோஜாச் செடியுடன் ஒப்பிட்டுக் கொண்டு, மக்களின் கவனத்தைக் கவரும் ரோஜாச் செடியின் மீது பொறாமை கொண்டிருப்பான். அல்லது ஒருவேளை ரோஜாச் செ டியாக இருந்திருந்தால், பொறாமையுடன் சைப்ரஸ் செடியைப் பார்த்து, தினமும் மக்களால் பறிக்கப்படும் அவஸ்தைகள் இல்லாமல் அது எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்று எண்ணியிருப்பான்''. குரு சொன்னார், 'இதுவே நீ அடையக் கூடிய மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திர சக்தி!''.
பாருங்கள், இரண்டு செடிகளும் செழுமையாக வளர்ந்த தற்குக் காரணம், அவை தங்கள் எல்லாச் சக்தியையும் தங்கள் சொந்த வளர்ச்சிக்காக உபயோகித்ததுதான். ஒரு அணுவளவு சக்தி கூட மற்றவற்றின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதற்காக விரையமாக்கப்படவில்லை. அவற்றின் 100 சதவிகித சக்தியும் அவற்றின் வளர்ச்சிக்கே உபயோகப்படுத்தப்பட்டது.
அதே போல, உங்களுடைய எல்லாச் சக்தியையும், உங்களுடனேயே பந்தயத்தில் ஓடவும், உங்களுடனேயே போட்டி யிடவும் செலவழித்தீர்களானால், உங்களுடைய முன்னேற்றம் அபரிமிதமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு தூரம் முன்னேறி யிருக்கிறீர்கள் என்று திரும்பிப் பார்த்தால், அதை உங்களாலேயே நம்ப முடியாது. மேலும் இடையூரற்ற நிரந்தரமான அமைதியைப் பெறுவதற்கும் இதுவே ஒரே வழி!
''இடையூறு அற்ற' அமைதியைப் பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுடன் ஓடும் பொழுது, உங்களுக்கு ஒரு குறுகிய கால அமைதி, ஒவ்வொரு ஆசை நிறைவேறும் பொழுதும், கிடைக்கலாம். அதுவும் அடுத்த
இருத்தலை அழைவிக்காமல் பெறுவதற்காகச் செய்வதே நமது எல்லாத் துயரங்களுக்கும் ஒரே காரணம்.
ஒப்பிடுதலை ஆரம்பித்தவுடன் மறைந்து விடும். இன்னொரு பக்கம், நீங்கள் உங்களுடன் மட்டுமே ஓடும் பொழுது, விரைவான முன்னேற்றமும் இடையூரற்ற அமைதியை யும் பெறுவீர்கள்.
மற்றவர்களால் இடையூறு செய்யப்பட முடியாத அமைதி, மிகப் மெரிய விடுதலையாகும். தெளிவாக இருங்கள் ... இன்னொருவரால் இடையூறு ஏற்படுவதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்குள் ஏதோ தடை அல்லது புரிந்து கொள்ளுதலில் குறை இருக்கிறதென்று அர்த்தம். அதாவது, நீங்கள் உங்கள் அமைதிக்கு இன்னும் மற்றவர் களைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று பொருள்.
உங்கள் குறைவிற்கு நீங்கள் சமூகம் என்று பெயர் கொடுக்கிறீர்கள். சமூகம் என்று ஒன்றுமில்லை. வானமே எல்லை, வானம் என்ற ஒன்றே இல்லை! விரிதலே வாழ்வு; சுருங்குதல் சாவு. நீங்கள் உங்களுக்குள் தெளிவாக இல்லை; அதன் பழியை மக்கள் மீது போடுகிறீர்கள்.
நீங்கள் நிஜமாக்கிக் கொள்ளும் சுழலில் சிக்கிக் கொண்டு விட்டால், எலி ஒட்டப் பந்தயத்தில் இருக்கிறீர்கள்! ஒப்பிடுதலும் பொறாமையும் மற்றவர்களின் கனவுகளைக் கடன் வாங்கிக் கொண்டு அவற்றை உங்களுடைய நிஜமாக்கிக் கொள்ளும் முயற்சியைத் தவிர வேறல்ல. எலி ஒட்டப் பந்தயத்தில் இருப்பதற்கு சக்தி அல்லது ஆற்றல் தேவை. சக்தி அல்லது ஆற்றல்தான் உங்கள் கனவுகளை நனவாக்குகிறது. ஆனால் நிஜம் உண்மையில் உங்கள் கனவு என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான சாதனை! இதைப் புரிந்து கொள்வதற்கு ஆற்றல் தேவையில்லை; புத்தி அல்லது அறிவே தேவை.
'நான் இப்பொழுது வேலை செய்து விடுகிறேன், பிறகு அனுபவித்துக் கொள்கிறேன்' என்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.
ஆற்றல் உங்கள் கனவுகளை நனவாக்கும்; அறிவு நிஜமே உங்கள் கனவுதான் என்பதைப் புரிய வைக்கும்! நீங்கள் ஏற்கனவே என்னவாக இருக்க வேண்டுமோ அதுவாகத்தான் இருக்கிறீர்கள். விழித்துக் கொள்ள வேண்டியது மாத்திரமே தேவை, நீங்கள் நிஜமாக்க முயற்சி செய்யும் மற்ற அனைத்துமே கடன் வாங்கப்பட்டதும் பொய்யானதும்தான் என்பதை அறிவு உங்களுக்குப் புரிய வைக்கும் !
நாம் எப்பொழுதும் வெளியுலகில் சாதிப்பதைத்தான் பார்க்கிறோம். இதுவே ஒப்பிடுதலுக்கும் பொறாமைக்கும் மூல காரணம். நீங்கள் வெளியுலகில் ஏதேனும் உணரத்தக்க வகையில் சாதித்திருந்தால் மட்டுமே மக்கள் உங்களை மதிக்கிறார்கள். கல்வி சார்ந்த பட்டங்கள், அழகிற்கான பட்டங்கள், தொழில் சார்ந்த பதவிகள், ஆராய்ச்சி வெளியீடுகள், வங்கி இருப்பு ஆகியவையே சமூகம் உங்களை மதிப்பிட வைத்திருக்கும் அளவு கோல்கள்.
பாருங்கள், முதலில் நீங்கள் யாராலும் மதிப்பிடப் பட வேண்டியதில்லை. உங்கள் சொந்த அறிவின் மீது நம்பிக்கை வைத்து நீங்களே உங்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் வெளியுலகில் சாதிக்க வேண்டியதும், மனித குலத்திற்குச் சேவை செய்ய வேண்டியதும் நிறையவே இருக்கிறது. அறிவியலின் சாதனையால்தான் இன்று நான் இந்த மின் ஒலி பெருக்கியின் மூலம் பேசுவதை உங்களால் கேட்க முடிகிறது.
ஆனால் நீங்கள் உள்ளுலகிலும் சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வெளியுலக சாதனைகள் தற்செயலானவை. அவை உங்களுக்கு உடனடியாகப் பெயரையும், புகழையும், பணத்தையும் தரலாம். ஆனால் உண்மையான சாதனை உள்ளுலகத்தில்தான் இருக்கிறது.
ஒவ்வொரு 'நாளை'யும் 'இன்று' என்ற ரூபத்திலேயே வருகிறது.
உங்களில் மையங்கொண்டு, கூரிய விழிப்புணர்வுடன் வெளியுலக செயல்பாடுகளில் வெறுமனே தாமரையிலைத் தண்ணீர் போலப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். வெளிச் செயல்பாடுகள் இடையூறின்றி நடைபெறட்டும்; ஆனால் நீங்கள் உங்கள் இருப்புத்தன்மையில் மையம் கொண்டிருங்கள். அவ்வாறு செய்தால், உங்களால் வெளியுலகில் இன்னும் சிறப்பாகச் செயலாற்ற முடியும்; ஏனெனில் உங்கள் உள் அறிவு வளர்ந்து கொண்டும், நீங்கள் செயலாற்றுவதில் வழிகாட்டிக் கொண்டும், அவற்றின் விளைவை ஒரு வெறும் பார்வையாளராக கவனித்துக் கொண்டும் இருக்கும்.
பிறகு நீங்கள் வெளியுலக சாதனைகளுக்கேற்றவாறு அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருப்பதை நிறுத்தி விடுவீர்கள். உங்கள் இருப்புத் தன்மையின் மையத்தில் உறுதியாக நிலைபெற்று மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். இந்த ஒப்பிடுதல் மற்றும் பொறாமைச் சுழலில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி உங்கள் மையத்தைக் கண்டுபிடிப்பதுதான்.
வெற்றிகரமான தொழிலதிபர்கள் இன்று எத்தனை வெற்றியினால் வரும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா ? அவர்கள் விரும்பிய அனைத்தையும் சாதித்து விட்டார்கள்; அவர்களுடைய சொந்தக் கனவுகள், கடனாகப் பெற்ற கனவுகள் அனைத்தையும் நிஜமாக்கிவிட்டார்கள். ஆனாலும் மனநிறைவடையவில்லை; அவர்களிடம் ஒரு வெறுமை இருக்கிறது.
எதற்காக இவ்வளவு ஓடினார்கள் என்று ஆச்சரியப்படத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களது எலி ஓட்டப்பந்தயத்தில் இத்தனை நாளும் அவர்களைத் தூண்டி விரட்டிக் கொண்டிருந்த ஆசைகளும், வலிமையான உணர்வுகளும் இப்பொழுது இல்லை.
வாழ்தலைத் தள்ளிப் போடாதீர்கள். கொண்டாடுங்கள். அனுபவியுங்கள். இப்பொழுதில்லையெனில் எப்பொழுதும் இல்லை.
அவர்கள் தங்களைப் பற்றிய ஒரு குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தொழிலில் இருந்த காலத்தில், அவர்களின் மீதே இருந்த பிடிமானம், இப்பொழுது திடீரென்று வலுவிழந்து விட்டது போல் கோன்றுகிறது.
இதற்குக் காரணம் அவர்கள் விழிப்புணர்வில்லாமல் ஓடியதுதான்; அவர்களுக்கே நேரம் ஒதுக்கக் கூட நிற்காததுதான்; சுய விசாரணை செய்து கொள்ளாததுதான். அதன் விளைவாக, இப்பொழுது அவர்கள் நிற்கும் பொழுது அல்லது திடீரென்று இனிமேல் ஓட முடியாது என்ற நிலை வரும் பொழுது, அவர்கள் தங்களிடமே தஞ்சம் புகுந்து, தங்கள் இருப்புத் தன்மையுடனேயே தாங்கள் இசைவாக அல்லது இயல்பாக இல்லாததைக் கண்டு கொள்கிறார்கள். இதுவே ஒரு வியாதியாக அல்லது மனச் சோர்வாக உருவெடுக்கிறது.
நீங்கள் வெற்றியினால் வரும் மனச்சோர்வில் விழுந்து விட்டீர்களானால், மூன்று வழிகளில் புகலிடம் தேடலாம். முதலாவது, போதை மருந்துகள் - இதற்கு அடிமையாவது மேலும் மனச்சோர்வை நோக்கியே இட்டுச் செல்லும். இரண்டாவது வழி, தற்கொலை - இது தப்பித்தல். மூன்றாவது வழி, தியானம் - தீர்வை உள்ளே தேடுவது. அறிவுக்கூர்மை யுடையவர்கள் மூன்றாவது வழியையே தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த மனச்சோர்விலிருந்து விடுதலை பெற சுய விசாரணை ஒரு வழியாக முடியும். பிரச்சினை உள்ளே இருக்கும்போது, நீங்கள் தீர்வை வெளியே தேடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் இருப்புத்தன்மையை வெகுகாலமாக அலட்சியம் செய்து விட்டீர்கள். இந்த மனச் சோர்வு உண்மையில் உங்கள் இருப்புத் தன்மையின் அழைப்புதான். அதனால்தான் மீண்டும் மீண்டும் குருமார்கள் உங்கள் உள் மையத்தில் மையங்கொண்டு வெறுமனே
'அடைவதை விட துரத்திக் கொண்டிருப்பதில்தான் அதிக சுகம் இருக்கிறது' என்று ஒரு கூற்று இருக்கிறது.
வெளியில் செயலாற்றிக் கொண்டிருக்கும் உத்திகளை எப்போதும் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
இதையே நீங்கள் தொழிலில் உச்சத்தில் இருக்கும் பொழுது சொன்னால், கவனம் செலுத்த விரும்பமாட்டீர்கள். ஏனெனில் உங்களிடம் போதுமான, நீங்கள் கொண்டு வந்த அனைத்துச் சக்தியும், உங்களது மையத்தை விட்டு விலகிய நடத்தையினால் வீணாக்குவதற்கென்றே இருக்கிறது. உங்கள் சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும் பொழுது, எங்கேயோ ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்வீர்கள். அந்த ''ஏதோ'' வைத்தான் குருமார்கள் மீண்டும் உங்களுக்குச் சொல்ல முயற்சி செய்கிறார்கள்.
சிறந்த இயற்பியலாளரான ஆல்பாட் ஐன்ஸ்டீன் மரணப் படுக்கையில் இருந்தார். அவருக்கு நெருக்கமான சிலா் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் அவரிடம், இன்னொரு முறை பிறக்க நேர்ந்தால் என்னவாகப் பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அனைவரும், அவர் இன்னும் சிறந்த விஞ்ஞானியாக அல்லது அதுபோல ஏதாவதாக பிறக்க விரும்புகிறேன் என்று சொல்வாரென எதிர்பார்த்தனர். ஐன்ஸ்டீன் பதிலளித்தார், ''நான் மீண்டும் பிறப்பதாயிருந்தால், ஒரு குழாய் ரிப்பேர் செய்பவராகப் பிறக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்''.
அவர் சாதிக்க வேண்டியதையெல்லாம் சாதித்து விட்டதாகவும், ஆனால் எதற்காக இதையெல்லாம் சாதித்தாரோ அதை சாதிக்கவில்லையென்றும் உணர்ந்தார். அவர் உலகிற்கு மகத்தான உண்மைகளை அளித்தார். ஆனால் அவரது முழு வாழ்க்கையுமே ஒரு பொய்யாகி விட்டதாக உணர்ந்தார். அவரது கடைசி நாட்களில், அவரது வாழ்வு முழுவதும் வெளியுலக
'அடைவதன் முன் கடுகே ஆனாலும் மலையாய்க் காட்டி, அடைந்த பின் மலையே ஆனாலும் கடுகாய்க் காட்டும் மாய மனம்'.
நிகழ்ச்சிகளில் சிக்கிக் கொண்டு விட்டதாகவும், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான ஒரு ஆழமான தொடர்பைத் தவறவிட்டு விட்டதாகவும் உணர்ந்தார்.
அதனால்தான் மீண்டும் ஒரு விஞ்ஞானியாக விரும்பாமல் குழாய் ரிப்பேர்க்காரராகப் பிறக்க விரும்புவதாகக் கூறுகிறார். நீங்கள் வெளியுலக செயல்பாட்டின் உச்சத்தில் சிக்கிக் கொண்டு விட்டாலும், ஒரு இயந்திரமாகி விடாதீர்கள். இது ஒரு ஆன்மீக வாதிக்குச் சுலபமான வேலை; உலகாயதவாதிக்குக் கடினமான வேலை.
பாருங்கள், இந்த ஒப்பிட்டு ஒடிக் கொண்டிருக்கும் செயல்முறையில் நீங்கள் உண்மையிலேயே ஒரு இயந்திரமாகி விடுகிறீர்கள். உங்களுடைய வெகுவான தினசரி செயல்பாடுகள் விழிப்பற்றதாகி விடுகின்றன. நீங்கள் ஒரு காரை வழட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற விழிப்பு கூட இல்லாமல் உங்களால் ஒரு காரை ஒட்ட முடியும். நீங்களும் காரைப் போல ஒரு வெறும் இயந்திரமாகி விட்டீர்கள்.
காலையில் செல்லும் வரை, உங்களைப் பற்றிப் பரிபூரணமான விழிப் புணர்வே இல்லாமல், ஒரு நிகழ்ச்சி நிரலிடப்பட்ட இயந்திர மனிதனை-போல வேலை செய்கிறீர்கள். நீங்கள் செய்வது எல்லாவற்றையும் திறமையாகவே செய்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் மனிதத் தன்மையை இழந்து விட்டீர்கள்! நீங்கள் இந்த பூமியில் பிறந்த நோக்கத்தை விட்டு வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டீர்கள். நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வெகுவாகத் துண்டிக்கப்பட்டு விட்டீர்கள் !
நீங்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது, விஷயங்களைத் திறமையாக மட்டுமின்றி, ஒரு ஒரு நிறைவான
Programmed Robot1
உணர்வுடன், பிண்டமான நீங்கள், அண்டமான பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்திருப்பீர்கள்; உங்கள் வேர்கள் பூமியில் இருக்க, நீங்கள் வானில் பறந்து கொண்டிருப்பீர்கள். இவ்வாறில்லாமல் பறக்கும் பொழுதுதான், நீங்கள் எப்பொழுதும், எப்பொழுது விழுந்து விடுவோமோ என்ற பயத்திலேயே இருப்பீர்கள். அதனால் பரிந்து கொள்ளுங்கள், விழிப்புணா்வுடன் வேலை செய்வது உங்கள் திறமையை மட்டும் அதிகப்படுத்துவதில்லை; உங்கள் இருப்புத் தன்மையின் நோக்கத்திலிருந்து விலகாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.
சரி, இப்பொழுது ... நாம் பொறாமையைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசுவோம்! பொறாமை நீங்க ளெல்லாம் அறிந்தது போல் ஒப்பிடுதலிலிருந்து எழுவதே. மற்றவர்களின் உயர்வை எவ்விதத்திலும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாதபோது, நாம் பொறாமை கொள்ளத் தொடங்குகிறோம். நாம் ஏன் பொறாமை கொள்கிறோம் என்பதற்கு எப்பொழுதுமே பல காரணங்களை வைத்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு, உங்களை விட மற்றொருவர் அழகாக இருக்கிறார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே உங்களால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உங்களுக்குள் மிகவும் மோசமாக உணர்கிறீர்கள். மேலும் இன்னொருவர் உங்களை விட அமகாக இருப்பதைக் கண்டு நீங்கள் பொராமைப்படுவது இயற்கையானதுதான் என்றும் நினைக்கிறீர்கள்.
முதலில் புரிந்து கொள்ளுங்கள் ... கடவுள் ஒரு கலைஞர், பொறியாளர் அல்ல. அவர் ஒரு பொறியாளராக இருந்திருந் தால் ஒவ்வொரு பெண்ணையும் அல்லது ஒவ்வொரு ஆணையும் ஒரே அச்சால் செய்திருப்பார். ஒருவேளை எல்லாப்
ஒப்பிடுதலில் இரண்டு வகை இருக்கிறது; ஆக்கப்பூர்வமான ஒப்பிடுதல் மற்றும் ஆமிவுப்பூர்வமான ஒப்பிடுதல்.
பெண்களையும் முன்னாள் உலக அழகியான ஐஸ்வா்யா ராயைப் போன்ற அச்சில் செய்திருக்கக் கூடும்!
அவர் மிகவும் அமகான பெண்ணாகக் கருதப்படுகிறார் அல்லவா? எல்லா ஆண்களையும் ஹ்ருதிக் ரோஷனைப் போன்றோ அல்லது ஷாரூக்கானைப் போன்ற அச்சிலோ செய்திருப்பார்! ஆனால் கடவுள் ஒரு பொறியாளர் அல்ல. அவர் ஒரு கலைஞர். அவர் ஒவ்வொருவரையும் ஒரு தனித்துவம் வாய்ந்த வழியில் செய்கிறார்.
நீங்கள் போதுமான அளவு அழகாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு உயிருமே அழகாகத்தான் இருக்கிறது. எந்த அளவு கோலைக் கொண்டு அழகை அளக்கிறீர்கள் ? அளவுகோல் எதுவும் கிடையாது. அவையெல்லாம் உங்களுடைய எண்ணங் களும் கருத்துக்களுமே. மேலும் வெறுமனே எண்ணிப் பாருங்கள்... உங்களுடைய பெயரளவிலான திரையுலக நாயகன் அல்லது நாயகி எவ்வளவுதான் அழகாக இருந்தாலும், உங்களால் அவர்களது உருவத்தைக் கொண்டு ஒரு கோப்பைத் தேநீரையாவது சுவைக்க முடியுமா ?
நீங்கள் போதுமான அளவு அழகாக இருக்கிறீர்கள் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர் களின் உடலைக் கண்டு ஏங்க ஆரம்பித்தால், உங்களுக்குள்ளேயே ஒரு பிளவை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே பிளவுபட்ட தன்மைகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களையே வெறுக்கத் தொடங்குகிறீர்கள்.
மற்றவர்களின் உடலைக் கண்டு ஏங்காத கண்கள் ஒருவிதமான அழகையும் கள்ளங்கபடமற்ற தன்மையையும் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடவுள்
நான் உங்களுடைய எல்லா ஆசைகளையும் துறந்து விடச் சொல்லவில்லை. ஒப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுடைய ஒப்பிடுதலில் ஒரு தெளிவைக் கொண்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன்.
உங்களுக்குச் செய்தவற்றிற்காக விசுவாசத்துடன் இருங்கள். உங்களுக்கு அந்த விசுவாசம் இல்லாத பொழுது தான், நீங்கள் எல்லா விதமான அபத்தமான வழிமுறைகளிலும் ஈடுபட்டு உங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். நீங்கள் உங்களை (முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பொழுது, உங்களுக்கு ஒருவிதமான வசீகரம் வர்து விடுகிறது. இந்த வசீகரம் உங்கள் பெயரளவிலான அழகைக் காட்டிலும் பன்மடங்கு உயர்வானது.
பாருங்கள், உடலழகு என்பது ஒன்று, வசீகரம் என்பது இன்னொன்று. உடலழகை எவ்வாறாயினும் அடைந்து விடலாம். இந்நாட்களில் உடலழகை அடைவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன - அழகு சாதனங்கள், அழகியல் அறுவை சிகிச்சை கள் மற்றும் பல அறுவை சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆனால் வசீகரம் என்பது உங்களிடம் அசாதாரணமான நம்பிக்கையும் அமைதியும் இருந்தால் மட்டுமே வருவது; அடங்காக ஆசைகள் அற்ற பிறகு வருவது; நீங்கள் உங்கள் உடலுடன் முழுவதுமாக இயல்புடன் இருக்கும்பொழுது வருவது.
நீங்கள் உங்களை முழுமையாக அனுபவிக்கும் பொழுது, உங்களிடம் ஒருவிதமான வசீகரம் ஏற்படுகிறது. நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள பெயரளவிலான மிகவும் அழகானவா் களை விட மிகவும் அமகாகக் கோன்றுகிறீர்கள். நீங்கள் போக்கை நிர்ணயிப்பவராகிட் விடுகிறீர்கள்.
நான் அமெரிக்காவிற்கு முதன் முறையாகச் சென்ற பொழுது, இதுபோன்ற காவியுடை அணிந்து கொண்டு பேசினால் மக்கள் எவ்வாறு கேட்பார்கள் என விமான நிலையத்திலிருக்கும் அதிகாரிகள் என்னிடம் கைட்டனர்! நான் அவர்களிடம்
Grace1 Trend - setter2
சொன்னேன், "எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள், நான் இதை அமெரிக்காவின் நாகரிகமாக்கிக் காட்டுகிறேன்! '' . தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டவனே தலைவன் எனப்படுகிறான். நீங்கள் உங்களை ஏற்றுக் கொள்ளும் பொழுது, ஒரு தனித்துவம் வாய்ந்த மலராகி விடுகிறீா்கள்; உங்களிடம் அசாதாரணமான சுதந்திரமும் ரம்பிக்கையும் ஏற்படுகிறது. உங்களுடைய எல்லாக் குற்ற உணர்வுகளும் உடலைக் குறித்த வெறுப்பும், தூய நம்பிக்கையாலும் கருணையாலும் அகற்றப்படுகிறது.
நீங்கள் உங்கள் சொந்த உடலுடன் வாமக் கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது. நீங்கள் இன்னொருவரின் உடல் அல்லது இன்னொருவரின் பரிமாணங்கள் மிகவும் கவர்ச்சி யாக இருக்கிறது என்று எண்ணும் கணத்திலேயே, உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கி விடுகிறீர்கள்.
தங்கள் ஆணழகர்களின் படங்களை சுவற்றில் ஒட்டி வைத்துக் கொண்டு, அவர்களைப் உடற்பயிற்சிகளைச் செய்பவர்களை பார்த்திருக்கிறேன். தெளிவாக இருங்கள் ... இன்னொருவருடைய உடல் உங்களுடையதை விட மிக அழகாக இருக்கிறது என்ற எண்ணம் வந்த உடனேயே, உங்களுக்கும் உங்களுக்கும் இடையிலேயே ஒரு இடை வெளியை உருவாக்கி விடுகிறீர்கள்.
இது போன்ற மற்றவரின் உடலைப் பார்க்கும் விழிப்பற்ற வழிகள் உங்கள் இருப்புத் தன்மையில் விரும்பத்தகாத பக்க விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன. நம்மில் ஒருவரும் நமது உடலை ஆழமாக நேசிப்பதில்லை. நாம் அதை ஒரு சுமை போலச்
'Give me one week and I will make this a fashion in America'
சுமந்து கொண்டிருக்கிறோம், அவ்வளவே. அதை ஒரு சத்திரம் போலக் கருதுகிறோம். நாம் அதை வெறுப்பதால், ஒருபோதும் அதனுள் இருப்பதில்லை. நாம் நமது உடலைத் தவிர மற்றெங் கெல்லாமோ இருக்கிறோம். அதனால் தொடர்ந்து அமைதியற்றும், எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்துவிடும் நிலையிலும் இருக்கிறோம்.
உகாரணத்திற்கு, உங்களுடைய ஓட்டுனர் ஏதேனும் சிறிய தவறு செய்தாலும், நீங்கள் முயற்சியின்றியே அவர் மீது வெடித்து விடுகிறீர்கள். வேலையில், தொடர்ந்து ஒரு எரிச்சலான மன நிலையிலேயே இருக்கிறீர்கள். இதற்கான காரணங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இருக்கிறதென்று நினைக்காதீர்கள். மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், ''ஸ்வாமிஜி, என்னுடைய எல்லாத் தொழிலாளர்களும் திறமையின்றி இருப்பதால்தான் நான் எரிச்சலடைகிறேன்''. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எரிச்சலடைவதற்கு காரணம் இதுவல்ல. நீங்கள் உங்கள் உடலுடன் இயல்பாக இல்லை; அதுவே உங்கள் அமைப்பின் அமைதியற்ற தன்மைக்கும் எரிச்சலுக்கும் காரணம். இது மிகவும் நுட்பமாக இருப்பதால் உணர்ந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
நீங்கள் தொடர்ந்து உங்கள் அளவீடுகளை அல்லது பரிமாணங்களை மாற்றிக் கொண்டேயிருக்க விரும்புகிறீர்கள். உங்கள் உடல் கடவுளிடம் இருந்து வந்த பரிசு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்குப் போதுமானதாக இல்லை என்ற எண்ணமே நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் முதல் பாதிப்பு.
ஏதேனும் கேள்விகள் ?
நீங்கள் வேறு எவரையும் விட குறைவாக அரைபவிக்கிறீர்களோ என்று எண்ணும் பொமுதுதான் உங்கள் மகிழ்ச்சி குறைய ஆரம்பிக்கிறது.
ஸ்வாமிஜி, உங்கள் முகம் என்னைப் பொறுத்தவரை மாறிக் கொண்டேயிருப்பது போல் தோன்றுகிறதே, அது என்றுடைய கற்பனையா அல்லது உண்மைதானா ?
(பாமஸம்ஸர் சிரிக்கிறார்!)
புரிந்து கொள்ளுங்கள்... என்றுடைய இருப்புத்தன்மை அஹங்காரமற்று திரவம் பொல் இருக்கிறது. நான் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து சென்று கொண்டிருக்கிறேன். நான் வெளிப்படுத்தும் எதுவும் திரவத்தைப் போன்று எளிதாக வளைந்து கொடுப்பதால் அதை அப்படியே என் முகத்தில் காண்கிறீர்கள். என் முகம் எப்பொழுதும் மாறிக் கொண்டேயிருப்பது போல் தோன்று வகற்குக் காரணம் இதுவே! நாம் அடுத்த சக்கரமான, ஆக்ஞா சக்கரத்தைப் பற்றிப் பேசும்பொழுது, அஹங்காரமற்ற தன்மை தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.