KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/ஸ்வாமிஜி, நீங்கள்தான் என்னுடைய குரு என்பது எனக்குத் தெரிந்தாலும், உங்கள் முன்னிலையில் தயக்கமாகவும், அச்சமாகவுமே இருக்கிறது!Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

ஸ்வாமிஜி, நீங்கள்தான் என்னுடைய குரு என்பது எனக்குத் தெரிந்தாலும், உங்கள் முன்னிலையில் தயக்கமாகவும், அச்சமாகவுமே இருக்கிறது!

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார்!) நீங்கள் இதைச் சொல்வதில் இருந்தே, இந்த நிலையில் இருந்து வெளியே வர விரும்புகிறீர்கள் என்று அர்த்தமாகிறது. நீங்கள் ஒரு மிகப்பெரிய அடியை எடுத்து வைக்கத் தீர்மானித்து விட்டீர்கள்.

நான் இதை விளக்குகிறேன் ... உங்களுடைய இருப்புத் தன்மை என்னைத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டு விட்டது ; ஆனால் உங்கள் மனமோ சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் இருப்புத் தன்மை என்னை அடையாளம் கண்டு கொள்ளாவிடில்,

மனமற்ற நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு வந்து கொண்டிருக்க மாட்டீட்டிகள். நீங்கள் இங்கு வருவதற்கு வீட்டில் நிறைய தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, இல்லையா? உங்களுக்கு மிகவும் சுலபமானது என்னவென்றால், பேசாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பது. அது உங்கள் குடும்பத்தினரையும் சந்தோஷப்படுத்தியிருக்கும், இல்லையா ?

நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஆசிரமத்திற்கு வந்து என்னைப் பார்க்க விரும்புகிறீர்கள் ? என்னிடம் வருவதற்காக ஏன் மீண்டும் மீண்டும் வீட்டில் விவாதங்களை எதிர்கொள்கிறீர்கள் ? வெறுமனே வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்களைச் சந்தோஷமாக வைத்திருப்பது மிகவும் சுலபமல்லவா? காரணம் என்னவெனில், நீங்கள் இழுக்கப்படுவது, இருப்புத்தன்மை நிலையில். அது ஒரு முறை என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டால், மீண்டும் உங்களைத் திரும்பிச் செல்ல அனுமதிக்காது. முடியுமானால் முயற்சி செய்து பாருங்கள், உங்களால் தப்பிக்க முடியாது!

உங்களுடைய இருப்புத்தன்மைக்கு என்னைத் தெரியும். ஆனால் உங்கள் மனம்தான் தடையாக இருக்கிறது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... எப்பொழுதும் உங்கள் இதயத்தையே பின்பற்றுங்கள். நீங்கள் இங்கு அதைத்தான் செய்ய வேண்டும். உங்கள் இதயத்தைப் பின்பற்றினால், என்னை அடைந்து விடுவீர்கள். உங்கள் மனதைப் பின்பற்றும் பொழுது, என்னைத் தவறவிட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

நீங்கள் உங்களை என்னிடம் இழப்பதற்கு மிகவும் அஞ்சுகிறீர்கள். அதுதான் பிரச்சினை. உங்கள் அணங்காரம் அச்சு றுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. உங்கள் அடையாளத்திற்குப்

சிரிக்கும் பொமுது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். ஏனெனில் சிரிக்கும்பொழுது எண்ணங்கள் இருக்க முடியாது. எண்ணமற்று இருக்கும்பொழுது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள்.

பாதுகாப்பில்லாமல் உங்கள் அடையாளம் கரைந்து மறைந்து கொண்டிருப்பதாக உணர்கிறீர்கள். உங்கள் அடையாளம் இன்றி எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று ஆச்சரியப்படத் தொடங்கியிருக்கிறீர்கள். உங்கள் அஹங்காரம் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது.

இது நிகழும் பொழுது, வாழ்க்கையில் மற்ற சூழ்நிலைகளைப் போலவே, உடனே அஹங்காரம் அதன் ஆகாரத்தைக் கேட்கிறது; ஆனால், இங்கு உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. அதனால் என்னை சந்தேகப்பட ஆரம்பித்து விடுகிறீர்கள்; பலவகையிலும் உங்கள் உணர்வுகளுக்கான காரணங்களை ஆராய ஆரம்பித்து விடுகிறீர்கள். முழுமையானதும் தீர்வு காண முடியாததுமானதற்கு தீர்வு காணத் தொடங்குகிறீர்கள். உங்கள் மனம் யானையின் துதிக்கையைப் போல இங்கும் அங்குமாக - ஒரு புறம் என் மீது தீவிரமான அன்பில் இருந்து, மறுபுறம் அந்த அன்பையே தீவிரமாக சந்தேகப்படும் அளவிற்கு -ஆடுகிறது.

நினைவில் வையுங்கள்... அன்பு உங்கள் இதயத்தில் இருந்து வருகிறது; இருந்து வருகிறது. எப்பொழுதும், எப்பொழுதுமே, உங்கள் இதயத்தையே பின்பற்றுங்கள். அன்பு இயற்கையானது; அச்சமோ சமூகத்தாலானது. பயமும், சந்தேகமும் ஒன்றுக்கொன்று ஆழமாகத் தொடர்புள்ளவை: அவை உங்களுக்குள் பதிந்து விட்ட வெறும் நெறிப் படுத்தல்கள்தான்.

மிகவும் தெளிவாகப் பரிந்து கொள்ளுங்கள் ... சந்தேதப் படுவதில் எந்தவிதத் தவறும் இல்லை. சந்தேகம் ஞானமடைவற்கு தீப்பந்தம் போல வழிகாட்டும். சந்தேகமின்றி மேலே செல்வது உங்கள் மனதிற்கு மிகவும் கடினமான செயல். ஆனால் இறுதியில்

உங்களால் சிரிக்க முடியுமானால், கவனிப்பராகிவிட முடியும்.

உங்கள் சந்தேகங்கள் விசுவாசமாக மாற்றமடைந்து விட வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்று பொருள். நீங்கள் உள்நோக்கி செல்லச் செல்ல, இது நிகழும்.

நாங்கள் செய்ய வேண்டியது என்ன, ஸ்வாமிஜி ?

வெறுமனே, முழுமையாக அன்பில் விழுந்து விடுங்கள், அவ்வளவுதான்! முழுமையாக அன்பில் விழுதல் என்பது, முழுமையாக அஹங்காரமற்ற நிலையில் விழுந்து விடுதலாகும். அதனால்தான், அஹங்காரமற்ற நிலையில் இருக்கும் ஒரு குருவால், அன்பாகவும் பரிவாகவும் மட்டுமே இருக்க முடியும். கோபம், எரிச்சல் போன்ற மற்ற எல்லா உணர்ச்சிகளுமே அவருடைய எல்லையற்ற அன்பின் போலியான வெளிப்பாடுகள்தான். அவர் கோபமாகவும், எரிச்சலாகவும் இருப்பதாக பாவனை செய்கிறார். அவர் உங்கள் நிலைக்குக் கீழிறங்கி வந்து, உங்கள் நிலையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, இன்னுமொரு புரிந்து கொள்ளும் நிலை வாயிலாக அழைத்துச் செல்கிறார், அவ்வளவே. நீங்கள் அவரது மொழியான, பிரபஞ்ச இருப்புத்தன்மையின் மொழியைப் புரிந்து கொள்ளும் வரை, அவர் உங்கள் மொழியிலேயே பேசுகிறார்!

ஆனால் ஸ்வாமிஜி, எவ்வாறு முழுமையாக அன்பில் விழ ஆரம்பிப்பது? அது சொல்வது சுலபம், செய்வது கடினம் போல் தோன்றுகிறதே!

முதல் விஷயம் ... உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வைப் பாய்ச்சுங்கள். கவனிப்பவராக மாறுங்கள். இது எல்லாமே ஒரு நாடகம்தான்; நீங்கள் தற்செயலாக அதில் ஒரு பாத்திரத்தில் நடித்தாலும், அதை வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள், என்பதை உணர ஆரம்பித்து விடுவீர்கள். இரண்டாவது விஷயம் ... நீங்கள் பார்ப்பது

சிரிப்பாக மிக உயர்ந்த ஆன்மீகத் தன்மை. அதனால் ஞானமடைதலை நோக்கி இட்டுச் செல்ல முடியும்.

எல்லாவற்றையும் எடைபோடுவதை நிறுத்துங்கள். எடை போடுவதை நிறுத்தினாலே, எல்லாரையும், எல்லாவற்றையும் முழுமையான நேசிப்பீர்கள்.

எடை போடும் பொழுது, நீங்கள் என்ன இருக்கிறதோ அதைப் பார்ப்பதில்லை; எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ அதையே பார்க்கிறீர்கள். நம்மில் பலரும் ஏற்கனவே, முன்ன தாகவே முடிவு கட்டி விட்டோம். அவையே நமக்கு அடித்தளக் கற்களாகும். பின்னர் நாம், அதையே ஒரு திடமான அடிப்படை யாகக் கொண்டு, வெறுமனே செயல்படுகிறேம். பிறகு நாம் எதைப் பார்த்தாலும், முதலில் செய்வது, அதை முன்கூட்டியே எடுத்த தீர்மானத்தின் கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான்.

நாம் இது போன்று செயல்படுவோமாயின், எவ்வாறு விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்ப்பது ? எவ்வாறு எப்பொழுதாவது அன்பில் விழுவது ? நீங்கள் எல்லாவற்றையும் புத்துணர்ச்சியுடனும், தன்மையுடனும் வரவேற்கும் பொழுதுதான், உங்களால் அன்பில் விழ முடியும். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? நேசிப்பதற்குக் கூட, சாதக பாதகங்களை ஆராய ஆரம்பித்து விடுகிறீர்கள். ஆராய ஆரம்பிக்கும்பொழுதே, அதைத் தவறவிட்டு விடுகிறீர்கள். நீங்கள் இறுதியாக செய்யலாம் என்று தீர்மானிக்கும் பொழுது, அது மிகவும் கால தாமதமாகி விடக் கூடும்.

பாருங்கள், குரு-சிஷ்ய உறவே உங்கள் அவறங்காரத்தை இழப்பதற்காகத்தான். நீங்கள் தனியாக இருக்கும் பொழுது, உங்கள் அஹங்காரத்தை இழக்க முடியாது. உங்கள் அஹங்காரத்தை இழப்பதற்கு குரு கருவியாக இருந்து உதவுகிறார். நீங்கள் அவரில் எவ்வளவு கரைகிறீர்களோ, அந்த

அளவிற்கு திறக்கவும், அஹங்காரத்தை இழக்கவும் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் அஹங்காரம் கரைவது எப்பொழுது தெரியும் ? நீங்கள் இதற்கு முன் அனுபவித்திராத ஒருவிதமான மகிழ்ச்சியை அனுபவிக்க ஆரம்பிக்கும் பொழுது.

நீங்கள் எந்தக் காரணமும் இன்றியே மகிழ்ச்சியாக உணர ஆரம்பிப்பீர்கள். வெறுமனே இருப்பதே உங்களுக்கு சந்தோஷத்தைத் தரும். ஆனால், குருவுடன் இருக்கும் பொழுது, எப்பொழுதும் உங்கள் அஹங்காரம் அறுவை சிகிச்சைக்கு உள்ளாவதாலும், அது வெட்டியெடுக்கப்படுவதாலும், ஆழமான துயரம் மிக்க கணங்களும் இருக்கும். ஆனால் அந்தக் கணங்களில் இருந்து வெளிவரும் பொழுது, உங்கள் வளர்ச்சியில் பல அடிகள் முன்னேறியிருப்பீர்கள் ; எந்தக் காரணமும் இல்லாமலேயே எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

இளஞ்சிறார்களைப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மிகவும் அன்புடன் இருக்கிறார்கள். நீங்களும் ஏன் அவர்களைப் போல் உற்சாகமாக இருப்பதில்லை என்று எப்பொழுதாவது ஆச்சரியப் பட்டிருக் கிறீர்களா? நீங்களும் ஒரு காலத்தில் அவா்களைப் போல்தான் இருந்தீர்கள், இல்லையா? பிறகு, இந்த உற்சாகத்தையும், கள்ளம் கபடமற்ற தன்மையையும் எங்கே இழந்தோம் ? சொல்லுங்கள். நாம் இதை எங்கே இழந்து விட்டோம் என்று நினைக்கிறீர்கள் ?

நாம் வளர்ந்து மிகுந்த பக்குவம் பெற்று விட்டோம், ஸ்வாமிஜி. நாம் அவர்களை விட மிகுந்த அனுபவ சாலிகள் ...

ஆ...ஆ.... ஆ... ! பாருங்கள் ... மிகவும் தெளிவாக இருங்கள் ... நாமெல்லாம் குழந்தைகளை விட மிகுந்த பக்குவம் பெற்றவர்கள் என்றும்,

சிரிப்பு ஒரு பெரிய குணப்படுத்தும் சக்தி. உங்கள் நோயைக் கண்டு சிரித்தால் நீங்கள் ஆரோக்கியம் பெற்று விடுவீர்கள்.

வாழ்க்கையைப் பற்றிய சரியான மனோபாவத்தை உடையவர்கள் என்றும், குழந்தைகள்தான் வாழ்ந்து இந்தப் பக்குவத்தை சம்பாதிக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

உண்மை என்னவெனில், நாம் மிகவும் புத்தி பூர்வமாக ஆகி விட்டதால், நமது இதயத்துடனான தொடர்பை இழந்து விட்டோம். நாம் முழுவதுமாக மூளையில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கிறோம். நமது உணர்ச்சிகள் கூட மூளையில் இருந்தே உத்தரவிடப்படுகிறது. நாம் நமது இருப்புத் தன்மையில் இருந்து உணர்ச்சியடைவதையே நிறுத்தி விட்டோம். நமது மையத்துடனான தொடர்பையே இழந்து விட்டோம்.

நாம் இந்த உலகத்திற்கு வந்த போது, தன்னிச்சையாகவும், கொண்டாட்டமான ஒரு நிலையிலும் இருந்தோம். சில வருடங் களில் சமூகம் நம்மை நெறிப்படுத்தி, நமக்கான மனத்தை உருவாக்கி விட்டது. மனமானது தானகவே திடப்பட்டு, நமக்கு நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்துவிட்டது. நமது தன்னிச்சையான இயல்பு தொலைந்துவிட்டது.

நான் சொல்கிறேன் ... நமது அஹங்காரத்தை விடும் இந்த முழுச் செயல்முறையுமே, நமக்குளிருக்கும் குழந்தையை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான முயற்சிதான். நமது இளம்பிராயத்தில், கடவுளை உணர, மிகவும் நெருக்கத்தில் இருந்தோம். நாம் வளர்ந்து, பெயரளவிலான பக்குவத்தை அடைந்த பிறகு, நமது சமூக நெறிப்படுத்தல்கள், நமக்கு உள்ளிருந்த குழந்தையை அழித்து விட்டது,

பலர் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, எவ்வாறு உங்களால் மிகப்பெரிய உண்மையைப் பற்றி பேசினாலும், ஒரு குழந்தையைப் போல இருக்க முடிகிறது ?''. இப்பொழுது

தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்கள் அஹங்காரமுடையவர்கள்.

சொல்லுங்கள், நான் வளர்ந்து பக்குவம் அடையாததால் ஒரு குழந்தையைப் பொல இருக்கிறேனா ?! நீங்கள் வெறுமனே விஷயங்களை உங்களுக்கு சௌகரியமான வழிகளில், உங்கள் செ ாந்த தத்துவ வழிகளில், அர்த்தம் கொண்டு விடுகிறீர்கள், அதுதான் பிரச்சினை.

சமூக நெறிப்படுத்தல்கள் இல்லாவிடில், பயிற்சியின்றியே நமக்கு நீந்தும் மற்றும் பறக்கும் திறமைகள் இருக்கின்றன. இது உங்களுக்கு அபத்தமாகத் தோன்றினாலும், உண்மை. நம்மிடம் இந்தத் திறமைகள் இருக்கின்றன. நம்மால் நீந்தவும் பறக்கவும் முடியாது என்று மக்கள் நம்மிடம் சொல்லத் தொடங்கும் வரை, நம்மால் நீந்தவும் பறக்கவும் முடியும். நீங்கள் ஒரு பிறந்த குழந்தையை நீச்சல் குளத்தில் விட்டால், அது மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கும்.

அஹங்காரம் தன்னை பலவழிகளிலும் வெளிப்படுத்திக் கொள்கிறது; நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் அதற்கேற்றபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நமது தினசரி வாழ்வில் உண்மையில் முகமூடிகளை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நமது அம்மாவிடம் ஒரு முகமூடியை உபயோகப்படுத்துகிறோம்; அப்பாவிடம் இன்னொரு முகமூடியை உபயோகப் படுத்துகிறோம் ; நமது மேலதிகாரிக்கு வேறு ஒன்று, என்று இவ்வாறுபல முகமூடிகளைஉபயோகப்படுத்திக்கொன்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கேற்ற சரியான முகமூடியை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் வரை சரிதான். யாராவது ஒருவரிடம் தவறான ஒரு முகமூடியை உபயோகப்படுத்தி விடும் கணத்தில், உங்கள் அஹங்காரம் உள்ளே நுழைந்து விட்டது என்று பொருள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், முகமூடியை

திறமையாக மாற்றிக் கொண்டு, காட்சியை ரசித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அப்பொழுது நீங்கள் கவனிப்பவா் மட்டுமே; விளையாட்டில் ஒரு திடமான வஸ்துவாக ஈடுபடவில்லை.

நீங்கள் முகமூடிக்கும் அப்பால் ஏதோ ஒன்றாக இருக்கிறீர்கள் என்பது தெரிந்தால்தான் உங்களால் ரசிக்க முடியும். இல்லாவிடில், முகமூடியால் உணர்ச்சிகளில் அடித்துச் செல்லப்பட்டு,வாழ்க்கையின் மொத்தக் கவர்ச்சியையும் இடிந்து விடுவீர்கள். நீங்கள் முகமூடிகளைத்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிந்தால், உங்கள் ஆசைகள் தானாகவே நமுவி விழுந்து விடும்.

அது எவ்வாறு இருக்கிறதென்றால் ... நீங்கள் பெரியவர்களாக வளரும் பொழுது, தானாகவே உங்கள் பொம்மைகளை விட்டு விடுகிறீர்கள், இல்லையா? அதன் பிறகு பொம்மைகள் உங்களை ஈர்ப்பதில்லை, அதே போன்று, நீங்கள் இந்த முகமூடிகளை அறிவுக் கூர்மையுடன் நோக்கும் பொழுது, அவற்றின் மீது ஆசை வைப்பதில்லை; அதை வெறுமனே உபயோகப்படுத்தி விட்டு, மேலே சென்று கொண்டு இருக்கிறீர்கள்.

அவரங்காரம் தன்னைப் பல கந்திரமான வழிகளிலும் வெளிப்படுத்திக் கொள்கிறது - அதனால்தான் இவ்வளவு விளக்கம் தேவையாக இருக்கிறது. இவையெல்லாம் உங்கள் உள் நோக்கிய பயணத்தில் நீங்கள் எங்கு தடையாக நின்று கெண்டிருக்கிறீர்கள் என்று பார்க்க உதவும்.

உங்களுக்குள் தடைகள் குறைவாக இருக்குமானால், நீங்கள் அதிக திரவத் தன்மையுடனும் இசைவுடனும் இருப்பீர்கள். உங்களிடம் தடைகள் குறைவாக இருக்குமானால், நீங்கள் அதிக உள்வாங்கும் தன்மையுடனும், மென்மையாகவும் இருப்பீர்கள். உங்களிடம் தடைகள் அதிகமாக இருக்கும்பொழுது, நீங்கள்

குறைந்தபட்சம், எப்பொழுதாவது உங்கள் வீட்டிலேயே ஏதேரைம் ஒரு இசையைப் போட்டு விட்டு, நடனமாடுங்கள். திடமாகவும், ஊடுருவிச் செல்வதற்குக் கடினமாகவும் இருப்பீர்கள். இவ்வாறு உங்கள் அஹங்காரம் எல்லாவற்றிற்கும் ஒரு திடமான தடையாக இருக்கிறது.

உதாரணமாக, எப்பொழுதும் யாராவது உங்களிடம் ஏதாவது சொல்லும் பொழுது, அதற்கு உங்கள் முதல் எதிர்ச்செயல் என்னவாக இருக்கும் ? உங்கள் முதல் எதிர்ச் செயல், ஒருவிதமான எதிர்ப்பு, ஒரு 'இல்லை' என்பதாகவே இருக்கும். நீங்கள் 'இல்லை' என்று சொல்லும் பொழுது, அது உங்கள் அஹங்காரத்தை வெகுவாக நிறைவடையச் செய்கிறது. நீங்கள் உங்களுக்குள் திடமாகவும், உறுதியாகவும் உணர்கிறீர்கள். நீங்கள் 'சரி' என்று சொல்லும் பொழுது, திரவமாகவும், மென்மையாகவும் உணர்கிறீர்கள். உங்கள் அஹங்காரம் கீழ்ப்படிவதைப் போல உணர்கிறீர்கள். அதனால் 'இல்லை' என்று சொல்கிறீர்கள்.

அதனால்தான் அலுவலகத்திலோ அல்லது வேறெங்காவதோ விதிகளை மீறும் பொழுது ஒரு சந்தோஷத்தை அடைகிறீர்கள். உண்மையில், நீங்கள் ஒரு விதியை மீறும் பொழுது, உங்களைப் பற்றி உயர்வாகக் கருதிக் கொள்கிறீர்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளுக்குச் செல்லாமல் டிமிக்கி கொடுத்து விட்டுச் செல்வதில் ஒரு சந்தோஷம் அடைகிறார்கள். ஏன்? ஏனெனில் விதிகளை ஏற்க மறுப்பது அஹங்காரத்திற்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. சிறு குழந்தைகளிடம், சில விஷயங்கள் குழந்தைகளுக்கானதல்ல என்று சொன்ன கணமே, அதுதான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். பெரியவர்களும் பல வழிகளில் ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

கணவனும், மனைவியும் எந்த யோசனையாயினும் முதல் முறையிலேயே ஒத்துப்போவது மிக அரிது! உதாரணத்திற்கு நமது

சிரிப்பும், நடனமும் உங்கள் அஹங்காரத்தை விடுத்து பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் கலந்து விடும் சுலபமான உத்திகளாகும்.

பக்தர்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். முதலில் கணவன் என் மீது பற்று வைத்து விட்டால், மனைவியின் முதல் எதிர்ச் செயல் என்னை எதிர்ப்பதாகத்தான் இருக்கும். அவள் என்னுடைய புத்தகங்களை இரகசியமாகப் படித்து ரசித்திருக்கக் கூடும்; அனால் கணவனின் முன்னிலையில், என்னை ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டாள். அதே போல் முதலில் மனைவி என்னிடம் பற்று கொள்ளும் சம்பவங்களிலும், இதே கதைதான். கணவன்மார்கள் அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க என்னவெல்லாம் முடியுமோ அத்தனையையும் செய்து விட்டு, இறுதியில் என்னிடம் வருவார்கள்.

இதுதான் அஹங்காரத்தின் விளையாட்டு. 'சரி' என்று சொல்வது, நீங்கள் தடைகள் இல்லாமல் ஒரு திரவ நிலையில் இயல்பாக இசைந்து செல்ல உதவுகிறது. இதற்கு, நீங்கள் எல்லாவற்றிற்கும் குருட்டுத்தனமாக 'சரி' என்று சொல்ல வேண்டும் என்று அர்த்தமல்ல. அப்படியல்ல ! அதன் பொருள், அஹங்காரத்தின் பாதிப்பில்லாமல், உங்கள் தன்னிச்சையான இயல்பின்மீது விசுவாசம் வைத்து தீர்மானியுங்கள் என்பதே, அவ்வளவுதான். பிறகு ரீங்கள் தானாகவே சரியானவற்றுடன் இணைந்து செல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

'இல்லை' என்று சொல்வது ஒரு எச்சரிக்கையான அடியோ அல்லது உங்கள் காக்கும் தேவதையான ஏதேனும் பாதுகாப்பு சக்தியோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எந்தவிதமான எதிர்ப்பும், முன்கூட்டிய முடிவும் இல்லாமல் வெறுமனே திறந்திருங்கள், அதுவே போதுமானது.

சொல்லுங்கள்... ?

ஆனால் ஸ்வாமிஜி, நான் இதுவரையில் தனது முக்கியத் துவத்தை நிலைநாட்டிக் கொள்வது மட்டுமே அஹங்காரத்தின் வெளிப்பாடு என்று எண்ணிக் கொண்டிருந்தேன்!

ரீங்கள் இந்தப் பிறவியில் மட்டுமின்றி, பல பிறவிகளாக சேர்த்து வைத்த, விட்டுவிட வேண்டிய வஸ்து, உங்களுக்குள் ஏராளமாக இருக்கிறது. உங்களுக்குள் உங்களுக்கே இடமில்லை.

இல்லை! அஹங்காரம் நாம் இதுவரையில் விவாதித்தது போல், செயல்படும்- மற்றும் சாத்வீக நிலைகளில், பல வடிவங்களில் வருகிறது. அதனால்தான் இது பகுத்துணர்வ தற்கு மிகவும் ஒரு தந்திரமான வஸ்துவாக இருக்கிறது.

செயல்படும் நிலையிலுள்ள அஹங்காரத்தைக் கண்டு கொள்வது சுலபம். செயல்படும் நிலையில் உள்ள அஹங்காரம் உள்ளவர்கள் ஒருவித ஆணவத்துடன் நடந்து கொள்வார்கள்; அவர்கள் வெளிப்படையாக தனது முக்கியத்துவத்தை நிலை நாட்டிக் கொள்வார்கள்; அவர்கள் மற்றவர்களுக்கு வளைந்து கொடுக்க மாட்டார்கள்; அகந்தையுடன் இருப்பார்கள். ஒரு குருவுக்கு, உண்மையில், இந்த விதமான அஹங்காரத்தைக் கையாள்வது சுலபம். சில முறை வெறுமனே அதன் மீது மோதினாலே, அது உடைந்து விடும் !

ஒரு சின்ன கதை....

ஒருவன் அனைத்தையும் இழந்து ஏழையாகி விட்டான். ஒரு நாள் அவன் ஒரு சாலையோர கையேந்தி பவணுக்குச் சென்று காலைச் சிற்றுண்டிக்காக ஒரு மேசையில் அமாந்தான். என்ன வேண்டும் என்று கேட்பதற்காக உணவு பரிமாறுபவர் வந்தார். அவனுக்கு ஒரே ஆச்சரியம். உணவு பரிமாறுபவர் அவனது பழைய நண்பர்; அவன் முன்பிருந்தது போலவே அவரும் ஒரு பெரிய பணக்காரர். அவன் அவரைப் பார்த்துக் கேட்டான்,''நீ இது போன்ற ஒரு உணவு விடுதியிலா பரிமாறுபவராக இருக்கிறாய் ?''. அவர் சொன்னார்,'' நான் பரிமாறுபவராக மட்டும்தான் இருக்கிறேன். இங்கு சாப்பிடுவ தில்லை''.

(சிரிப்பு!)

செயல்படும் நிலையிலுள்ள அஹங்காரத்தைக் கண்டு கொள்வது சுலபம். செயல்படும் நிலையில் உள்ள அஹங்காரம் உள்ளவன், அவனுடைய மற்ற பாதுகாப்புகளான பணம், சொத்து முதலியவற்றை அவனிடம் இருந்து எடுத்து விட்ட போதிலும், விட்டு விடுதலை விரும்பமாட்டான். செயல்படும் நிலையிலுள்ள அஹங்காரத்தை சுலபமாக வெட்டி சீர் செய்து விட முடியும்.

ஆனால் சாத்வீகமான அஹங்காரம் மிகவும் நுட்ப மானது, தந்திரமானது. சாத்வீகமான அஹங்காரம் உள்ளவர்கள், தங்களை மிகவும் பணிவாகக் காட்டிக் கொள்வார்கள்; மக்களை எதிர்கொள்ள தைரியம் அற்றவர்கள்; தனக்குரிய மதிப்பை எடுத்துக் கொள்ள வெட்கப்படுபவர்கள். இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், அனுங்காரம் இல்லாததால்தான் தாங்கள் இவ்வாறு இருப்பதாக அவர்கள் எண்ணுவது. உண்மை என்னவெனில், மற்றவர்களை விட, இவர்களே அதிக அஹங்காரம் உள்ளவர்கள்! இது போன்ற பணிவான விஷயங்களைச் செய்வதன் மூலம், தங்களது அஹங்காரம் புண்பட்டு விடாமல், மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாக்கிறார்கள்.

உங்களிடம் ஆழமான விழிப்புணர்வும், புரிந்து கொள்ளுதலும் இருந்தால், நீங்கள் உங்கள் அஹங்காரத்தை வெறும் கவனிப்பவராக மட்டுமே இருப்பீர்கள்; மேலும் இந்த நிலையில் தானாகவே நீங்கள் அடக்கத்துடனோ அல்லது அஹங்காரத்துடனோ இருக்க மாட்டீர்கள்; நீங்கள் உங்களுக்குரிய மதிப்பை எடுத்துக் கொள்ளவோ அல்லது அதிலிருந்து வெட்கப்பட்டு விலகிச் செல்லவோ மாட்டீர்கள். நீங்கள் இதில் எதுவும் இல்லை என்பதைக் கூட எண்ணவோ அல்லது நிலைநாட்டவோ மாட்டீர்கள்; நீங்கள் வெறுமனே இருப்பீர்கள், அவ்வளவுதான். யாராவது உங்களைப் பாராட்டும் பொழுதோ அல்லது உரிய மதிப்பளிக்கும்

உங்களுடைய அவறங்காரம் கரைந்துவிடும் பொழுது, ரீங்களே இல்லாமல் போய் விடுவதால், வெறுமனே பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் கலந்து விடுகிறீர்கள்.

பொழுதோ, நீங்கள் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து சென்று, அதை அத்துடன் விட்டு விடுவீர்கள், அவ்வளவே. மேலும் எதையும் ஒப்பிடவோ அல்லது உரிமை கொண்டாடவோ வேண்டிய அவசியம் இல்லை.

அதனால் மிகவும் தெளிவாக இருங்கள் ... பெரும் பாலும், மக்கள், செயல்படும் நிலையில் உள்ள அஹங்காரம் தான் ஒரே வகையான அஹங்காரம் என்று எண்ணுகிறார்கள். இல்லை. இப்பொழுது நாம் விவாதித்த, சாத்வீகமான நிலையில் உள்ள அஹங்காரம் ஒன்று இருக்கிறது; இதைக் கையாள்வதே மிகவும் கடினமானது.

செயல்படும் நிலையில் உள்ள அஹங்காரத்தை உடைய மக்கள், காய்ந்த கடினமான குச்சியைப் போன்றவர்கள். அவர்களை சுலபமாக உடைத்து விடலாம். சாத்வீகமான நிலையிலுள்ள அஹங்காரத்தை உடையவர்கள், புதியதாகவும் பசுமையாகவும் உள்ள குச்சியைப் போன்றவர்கள். ஒவ்வொரு முறை அவர்கள் அஹங்காரம் அடிபடும் பொழுதும், வளைந்து விடுகிறார்கள்; ஆனால் உடைவதில்லை. அவா்களது அஹங்காரம் மிகவும் நன்றாகப் பாதுகாக்கப்படுவதால், அதனைக் கையாள்வது கடினமாகிறது. உண்மையில், அவர்கள் அதைப் பாதுகாக்க, இனிமையான மற்றும் சாத்வீகமான வழியில், மிகவும் கடினமாகவே உழைக்கிறார்கள். சாத்வீகமான அஹங்காரம் செயல்படும் அஹங்காரத்தை விட மிகவும் ஆபத்தானது.

உதாரணத்திற்கு, இப்பொழுது நீங்கள் என்னுடன் இந்த வகுப்பில் இருக்கிறீர்கள். உங்களுக்குள் நிறைய கேள்விகள் எழும். ஆனால் நீங்கள் அவற்றையெல்லாம் உடனேதன்னிச்சையாக எழுப்பி விடுகிறீர்களா ? இல்லை. நீங்கள் அவற்றை உள்ளுக்குள்ளேயே

எது நீங்கள் இல்லையோ, அதை அழித்து விடுங்கள்.

கையாண்டு இறுதியில் அடக்கி வைத்து விடுகிறீர்கள். நீங்கள் அவற்றைக் கையாள்வதற்குக் காரணம், கேள்விகளைக் கேட்டு முட்டாள்கனமாகத் தோற்றமளித்து விடுவோமோ என்ற அச்சம்தான். முட்டாள் தனமாகத் கோற்றமளிக்க விரும்பாததால் கேட்பதில்லை. உங்கள் அவைங்காரத்தைக் காப்பாற்றிக் கொள்கிறீர்கள். என்னுடைய இருப்பினால், உங்கள் கேள்விகள் தானாகவே கரைந்து விடுமாயின், அது வேறு விஷயம். ஆனால் இது அவ்வாறல்ல.

நீங்கள் உங்களைப் பற்றிய மற்றவர்களின் எதிர்ச் செயல் களிலும், அபிப்பிராயங்களிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறீர்கள். நீங்கள் இத்தனை ஆண்டு காலமாக மிகவும் கவனத்துடன் பேணிக் காத்து வரும் உங்கள் அஹங்காரத்தின் மீது, தழும்பு விழும் துயரத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த அஹங்காரம்தான் உங்கள் ஆதாரமாக இருக்கிறது. அது பலமாகக் குலுக்கப்படும் பொழுது, நீங்கள் ஆதாரமற்றுப் போய் விட்டதாக உணர்கிறீர்கள். அதனால் கீழ்ப்படிவது போன்ற சாக்கில் பேசாமல் இருந்து விடுகிறீர்கள். குருவின் இருப்பில் உங்கள் அஹங்காரத்தை வெளிப்படுத்தும் இன்னொரு வாய்ப்பையும் தவற விட்டு விடுகிறீர்கள். நீங்கள் மலர்தலை நோக்கி இன்னொரு அடி எடுத்து வைக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு விடுகிறீர்கள்.

ஒன்று சாமி கேள்விகளுமே முட்டாள்தனமானதுதான். சில கேள்விகள் முட்டாள்தனமானவை, அறிவுள்ளவை என்று ஒரு கணமும் எண்ணாதீர்கள். ஆழமான புரிந்து கொள்ளுதல் நிகழும் பொழுது, கேள்விகள் தானாகவே கரைந்து விடும். இதுவே உண்மையான ஞானம். எப்படியோ, நாம் நமது அஹங்காரத்தைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொள்கிறோம்.

ரீங்கள் படைக்கும் பொழுது, கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள். கடவுளை படைப்பவர், படைக்கப்பட்டது மற்றும் படைத்தல்.

நாமெல்லாம் நன்றாகப் பேணிக்காக்கும், அஹங்காரத்தின் இன்னொரு விளையாட்டும் இருக்கிறது- அதன் பெயர் சமூக அஹங்காரம்.

இந்த சமூக அஹங்காரம் என்பது என்ன ?

உங்கள் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் அந்தரங்க மானது எனவும், அதற்குள் எவரையும் அனுமதிக்கக் கூடாது எனவும் எண்ணுகிறீர்கள்.

உதாரணத்திற்கு, மக்கள் என்னிடம் தங்கள் குழந்தைகளின் தவறான போக்கைப் பற்றி விவாதிக்க வருகிறார்கள். ஆனால் சுற்றி மற்றவர்கள் இருக்கும் பொழுது அவர்கள் இயல்பாக இருப்பதில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் மற்றவர்கள் தெரிந்து கொள்வதை நீங்கள் விரும்புவதில்லை; ஏனெனில் நீங்கள் உங்களைப் பற்றியும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் சமூகத்தின் கண்களில் ஒரு 'தோற்றத்தை' உருவாக்கி வைத்து இருக்கிறீர்கள். உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை அனுமதிப்பீர்களேயானால், நீங்கள் உங்கள் முழு இருப்பையுமே அவர்களுக்கு வெளிப்படுத்தி விட்டதாக உணர்கிறீர்கள். உங்கள் முழுத் தோற்றமுமே சரிந்து விழுந்து விடக் கூடும் என்றும், பிறகு உங்களைச் சமூகத்தில் தாங்கி நிறுத்த எதுவுமே இல்லை யென்றும் அஞ்சுகிறீர்கள். இதுதான் சமூக அஹங்காரம் என்பது.

நீங்கள் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய தோற்றம், உங்கள் அடையாளமாகி விட்ட, உங்களை சமூகத்தில் அடையாளம் காட்டுகிற தோற்றம், ஆபத்தில் இருக்கிறது. அது மற்றவர்களை விட உங்களுக்கே ஒரு பெரிய அடையாளமாக இருக்கிறது! நீங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களை உள்ளபடியே வெறுமனே காட்ட முடியுமானால், இன்னும் தளர்வாக இருப்பீர்கள்; ஏனெனில் அப்பொழுது எதையும் மூடி மறைக்க வேண்டிய நிர்பந்தம் இருக்காது.

ஸ்வாமிஜி, இவைகளை நாங்கள் இரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புவதன் காரணம், மக்கள் இவற்றைப் பற்றி வம்பளக்க ஆரம்பித்து விடுவார்கள்; அதில் எங்களுக்கு விருப்பமில்லை'' என்று நீங்கள் சொல்லக்கூடும். நான்சொல்கிறேன், ஒருவருக்கும் இன்னொருவரைப் பற்றிப் பேசத் தகுதி கிடையாது. அப்படிப் பேசுவார்களாயின், அவர்கள் முட்டாள்கள். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தானாகவே நீங்கள் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் சக்தியும், அவர்களது பேச்சும் வெறுமனே மறைந்து விடும். நீங்கள்தான், உங்களை பாதிக்கும் சக்தியை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள், இல்லையா? இப்பொழுது அந்த சக்தி காணாமல் போய் விடும்.

வெறுமனே ஒரு திறந்த புத்தகம் போல் வாழத் தீர்மானித்து, அதன்படியே வாழுங்கள், அவ்வளவே. உங்கள் தைரியத்தையும், உடல் மொழியையும் பார்த்து மக்கள் தானாகவே உங்களைப் பற்றி வம்பளப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள்! உங்கள் சமூக அஹங்காரத்தை விடுத்து, எந்த விதமான அந்தரங்கமும் இல்லாமல் வாழ்வதே ஒரு மிகப்பெரிய விடுதலைதான் என்று சாமி சொல்கிறேன்.

நமது சமூக அஹங்காரத்தினால், நாம் எப்பொழுதும் நம்மைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம், மக்கள் எப்பொழுதும் நம்மைப் பார்த்து, நம்மைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதாக, நாம் எண்ணிக் கொண்டு இருப்பதுதான். மிகவும் தெளிவாக இருங்கள்... நீங்கள் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால், மிகவும் அஹங்காரம் உள்ளவர்களாகிறீர்கள். உங்களை ஏதோ பெரிதாக நினைத்துக் கொண்டு, எல்லோரது கண்களும் எப்பொழுதும் உங்கள் மீதே இருப்பதாக நினைக்கிறீர்கள். அதனால்தான் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் உங்களை 'இல்லாதவர்' என்று எண்ணும் பட்சத்தில், உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் உங்களை உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதன் மூலம்தான் நீங்கள் தன்னடக்கத்தைக் காட்டுகிறீர்கள் என்று வேறு நினைக்கிறீர்கள். உண்மையில் இது உங்களுக்குத் துன்பத்தையே அளிக்கிறது என்பதைக் கூட நீங்கள் அறிந்து கொள்ளாத ஒரு விஷயம். நீங்கள் வெறுமனே கண்ணியமாகவும், அடக்கத்துடனும் இருப்பதாகத் தொடர்ந்து நினைக்கிறீர்கள்; அது போன்றே தொடர்ந்து இருந்தும் கொண்டிருக் கிறீர்கள்.

நீங்கள், உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தால், வாழ்ந்தும் வாழாமலேயே இருக்கிறீர்கள். அது உங்கள் அழகிற்கும், வசீகரத்திற்கும் ஒரு தடையாகவே இருக்கிறது. இதனால் உங்கள் அழகு இயல்பாக வருவதில்லை. விலங்குகளையும் இயற்கையையும் பாருங்கள்; அவை மிக அழகாகவும் தடையற்றும் இசைவாகவும் செல்கின்றன. அது ஏன் ? ஏனெனில் அவை தங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதில்லை; அவை வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றாக இருப்பதிலேயே மகிழ்ச்சியடைந்து விடுகின்றன. மக்கள் உங்களை கவனிக்கிறார்கள் என்று எண்ண ஆரம்பித்த கணத்திலேயே, அஹங்காரம் உள்ளே நுழைந்து விடுகிறது; நீங்கள் உங்கள் இயல்பான சுயத்தை இழந்து விடுகிறீர்கள்.

குழந்தைகள், பெரியவர்களைப் போல் தங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் விளையாடுவதைப் பார்க்கால் தெரியும்- எல்லாமே மிக அழகாகவும் கள்ளங்கபடமற்றும் இருக்கும். நீங்கள் புகைப்படம் எடுக்கும் பொழுதும் கூடப் பார்த்திருக்கலாம்- நீங்கள் தெரிந்து நின்று கொண்டு எடுத்த புகைப்படத்தை விட, உங்களுக்குத் தெரியாமலேயே எடுத்த புகைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கும்.

உங்களைப் புகைப்படத்திற்காக நிற்கச் சொன்ன வுடனேயே, நீங்கள் உங்களைப் பற்றி எண்ண ஆரம்பித்து விடுகிறீர்கள். மக்கள் என்ன சொல்லி விடுவார்களோ என்று உங்கள் அஹங்காரம் அஞ்சுகிறது. எப்பொழுதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் அஹங்காரமானது எல்லாவற்றிலும் சாதக பாதகங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது. அது எப்பொழுதும் எல்லாருடைய கண்களுக்கும், அபிப்பிராயங் களுக்கும் மதிப்புக் கொடுத்து தனது சொந்த சுதந்திரத்தை இழந்து விடுகிறது.

நமது தியான வகுப்புகளில்கூட, நீங்கள் பார்த்தீர்களானால், தியான முறைகளை ஆரம்பிப்பதற்கு முன்னால், உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கண்கட்டும் துணியினால் உங்கள் கண்களை கட்டிக் கொண்டு விடுமாறு நான் சொல்வேன். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? முதலில் மற்றவர்கள் தங்கள் கண்களை ஒழுங்காகக் கட்டிக் கொண்டிருக்கிறார்களா என்று பார்க்கிறீர்கள். நீங்கள் தியானக் கூடத்தில் கூட இந்த அளவிற்கு உங்களைப் பற்றிய எண்ணத்தி லேயே இருக்கிறீர்கள். சிலா் தியானங்களைக் கூடச் சரியாகச் செய்வதில்லை; ஏனெனில் தன்னார்வத் தொண்டர்களும், நானும் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறோமே! நீங்கள் தியானங்களை வெறுமனே ஒரு கட்டுப்படுத்தப்பட்ட

நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு இழக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அஹங்காரமற்று விடுவீர்கள்.

வகையில் செய்து விட்டு, இறுதியில் இந்த தியான முகாமிற்கு வந்த நோக்கத்தையே இழந்து விடுகிறீர்கள்.

நீங்கள் கணக்குப் பார்ப்பதை நிறுத்தி விட்டு, கள்ளங் கபடமற்றும், திறந்தும் இருக்க ஆரம்பித்தால், எப்பொழுதும் ஆச்சரியத்தாலும், வாழ்க்கை உங்களுக்கு எப்பொழுதுமே ஒருபோதும் மந்தமாகவும், தடையாகவும் இருக்காது.

இன்னொரு விஷயம் ... கள்ளங்கபடமற்றவர்கள் யாருக்கும் எந்த விதத் தீங்கும் செய்வதில்லை; ஏனெனில் தீங்கு செய்வதற்கும் திட்டமிட வேண்டும். அவர்கள் அறியாமல் தீங்கு செய்து விட்டால் கூட, மக்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்; ஏனெனில் அவர்களுக்குத் தெரியும், அது வேண்டுமென்றே செய்யப்பட்ட தல்ல என்று. அவர்களுடைய உடல் மொழியே, அவர்களது கள்ளம் கபடமற்ற தன்மையை அறிவித்து, அவர்களுக்கு ஆதரவாகவும் நிற்கும்.

சரி... இப்பொழுது ... நாம் அஹங்காரத்தின் இன்னொரு முக்கிய வடிவத்தைப் பார்ப்போம் - இது கல்வியறிவினால் வரும் அஹங்காரம்.

நீங்கள் வளர்ந்து, கலந்து பழகுகுவதன் மூலம் மக்களைப் பற்றிய தீர்மானங்களையும், புனித நூல்களிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும் தகவல்களையும் சேகரிக்கிறீர்கள். இந்த இரண்டும் சேர்ந்து உங்கள் மொத்த மன அமைப்பையும் நிர்ணயிக்கிறது. பிறகு, நீங்கள் பார்க்கும் எதையும், இந்த மன அமைப்பின் வழியாகவே பார்க்கிறீர்கள்.

நீங்கள் பார்க்கும் எதுவும், நீங்கள் ஏற்கனவே இயற்றிய தீர்மானங்களுக்கு, ஒரு வெறும் ஆதரிக்கும் வாதமாகவே ஆகிவிடும்.

ரீங்கள் எந்த அளவிற்கு அஹங்காரமற்று இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களை இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு இழந்து விடுவீர்கள்.

நீங்கள் கிட்டத்தட்ட ஒரு சவம் போல இருக்கிறீாகள்! உங்களிடம் வளர்வதற்கு இடமேயில்லை. நீங்கள் எப்பொழுதும், நீங்களே வண்ணம் பூசிய, ஒரு குறிப்பிட்ட வண்ணக் கண்ணாடியின் வழியாகவே பார்க்கிறீர்கள்! இதனால், அற்புதங் கள் நிரம்பிய இந்த உலகில், நீங்கள் எவ்வளவு இழக்கிறீர்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

ஒரு சின்ன கதை ....

ஒருவன், தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ... ''உனக்குத் தெரியுமா, உண்மையிலேயே நானே என்னை ஒரு முட்டாளாக்கிக் கொண்டு விட்டேன்'. நண்பன் கேட்டான், ''ஏன், என்ன நடந்தது?''. அவன் சொன்னான், ''நான் என் வீட்டில் பத்து விரிசல் விட்ட ஜன்னல் கண்ணாடிகளை மாற்றினேன்; பிறகுதான் தெரிந்தது விரிசல் என் மூக்குக் கண்ணாடியில் என்று!''.

நாம் ஒரு க்ஷணம் வெறுமனே உள்ளே பார்த்தோமானால், நாம் பார்க்கும் அனைத்திலும் பொதுவாக இருப்பது 'நாம்' தான் என்பதைப் புரிந்து கொள்வோம். ஆனால், எப்படியோ, நாம் ஒரு போதும் உள்ளே பார்க்க விரும்புவதில்லை. நமக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணுகிறோம்; அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. லோகாயதமான கல்வியறிவு நாம் வளர்ச்சியடைவதற்கு வெறுமனே ஒரு வாய்ப்பு கொடுப்பதில்லை.

இதில் மிகவும் ஆபத்தான ஒரு விஷயம் என்னவெனில், நீங்கள் உங்கள் கல்வியறிவுடன் திடமாகி விட்டதாக எண்ணுகிறீர்கள். உங்கள் கல்வியறிவின் பண்பினாலேயே நீங்கள் ஒரு திடமான குணத்தை அடைந்து விட்டதாக எண்ணுகிறீர்கள். ஆனால், உங்கள் இருப்புத் தன்மையின் மீது நீங்கள் ஒரு சுமையாகி விட்டதைத் தவிர வேறெதுவுமில்லை என்பதை நீங்கள் அறியவில்லை.

உங்களுடைய அவரங்காரத்தைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதையும், அது இப்பொழுது நீங்கள் இருப்பதைவிட ஆனந்தமயமானது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை.

உங்கள் இருப்புத்தன்மை, ஒரு நதியைப் போல இருக்கிறது ; ஆனால், நீங்கள் பெயரளவிலான கல்வியறி வினால் அதைத் தேங்கி நிற்கும்படி செய்து விட்டீர்கள். உங்கள் வழியில் வரும் கல்வியறிவை எவ்வாறு விட்டுவிட்டு ஒரு குழந்தை போல வாழ்வது, தன்னிச்சையாக சென்று கொண்டு இருப்பது என்பதை அறிந்து கொள்வதிலேயே உண்மையான அறிவு அடங்கியிருக் கிறது. நீங்கள் அஹங்காரத்தில் இருந்து தன்னிச்சை நிலைக்குச் செல்ல வேண்டும்.

நாம் அனைவரும், நம் வாழ்க்கையில் பார்த்த அனைத்தை யும் வகைப்படுத்தி, முத்திரை குத்தத் தயாராக இருக்கிறோம். இதில், வாழ்க்கையில் இருந்து வெறுமனே தன்னிச்சையான இயல்பைக் களவாடி விட்டோம். நாம், நமது வழியில் வரும் மக்கள், இடங்கள், சூழ்நிலைகள், அனைத்தையுமே வகைப்படுத்தி விடுகிறோம்.

ஒரு சின்ன கதை ...

ஒருவன் திரைப்படம் பார்ப்பதற்கு திரையரங்கத்திற்குச் சென்றான். படம், அதைத் தயாரித்த ஒரு புகழ் பெற்ற சர்வதேச படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைப்புடன் துவங்கியது. அவன், "ஓ! இந்தப் படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்!", என்று அவனுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, எழுந்து சென்று விட்டான்.

(பலத்த சிரிப்பு ! )

அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எல்லாப் படமுமே அந்தக் குறிப்பிட்ட படப்பிடிப்பு நிலையத்தின் முத்திரை யுடன்தான் வரும் ; ஆனால், அவனோ அதைப் பார்த்தவுடன் அந்தப் படத்தைத் தான் ஏற்கனவே பார்த்து விட்டதாக முடிவு செய்து விட்டான்! அவன் வெறுமனே தவறவிட்டு விட்டான், அவ்வளவுதான்!

நாமனைவரும், முக்கியமாகப் பெரியவர்கள், இவ்வாறுதான் இருக்கிறோம். குழந்தைகள் அவ்வாறு அல்ல. அவர்கள்

அவரங்காரமே உங்கள் உயிர் ஆதார வஸ்துவாக இருக்கிறது. ஆனால் எளிமையான உண்மை என்னவெனில் ...

நீங்கள் அதை விட்டுவிட வேண்டியதுதான்.

எல்லாவற்றையும் புதியதாகப் பார்க்கிறார்கள். அவர்கள் முழுமையாக உயிர்ப்புடன் இருக்கிறார்கள்; நம்மைப்போல் நடைப்பிணங்களாக அல்ல.

நீங்கள் கடற்கரைக்குச் சென்றால், குழந்தைகளை வெறுமனே கவனியுங்கள்; அவர்கள் எவ்வளவு துடிப்புடன் இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் கடற்கரைக்குச் சென்றால், அதை ஏற்கனவே அறிந்ததாக எண்ணுகிறீர்கள். இயற்கையின் இணையற்ற அழகும் புத்துணர்ச்சியும் கூட உங்கள் நிறமேற்றப்பட்ட கண்ணாடியின் வழியாகத்தான் வருகிறது. உங்களால், உங்கள் கண்ணாடியை விட முடியவில்லை. கடற்கரை வெறுமனே, உங்கள் பெயரளவிலான கல்வியறிவைப் பலப்படுத்தும், இன்னொரு இடமாகி விடுகிறது. நான் சொல்கிறேன்... உங்களால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியவில்லை என்று நீங்கள் எண்ணுவீர்களானால் அது உங்கள் மனத்தினாலும், திடமான அஹங்காரத்தினாலும் தான்; வாழ்க்கை அற்புதமாக இல்லை என்பதனால் அல்ல.

ஒருவன் விடுமுறைக்கு ஸ்விட்சர்லாந்து சென்று, ஒரு மாதத்திற்குப் பிறகு திரும்பி வந்தான். ஒரு நாள் மாலை அவனது நண்பனைச் சந்தித்தான்; அவனுடன் வெளியே உணவருந்தலாம் என்று தீர்மானித்தான். நண்பன் அவனிடம் கேட்டான், "ஸ்விட்ச ர்லாந்தில் அழகான இயற்கைக் காட்சிகளை ரசித்தாயா?''. அவன் பதில் சொன்னான், ''ஆம்.. ஒரு மாதிரி... ஆனால் வழியில் குறுக்கே ஒரே மலைகளாக வந்து கொண்டிருந்தன்''.

(பலத்த சிரிப்பு ! )

மிகவும் இருக்கிறோம்; நாம் இயற்கையிலிருந்து வெகு தூரம் தள்ளியிருக்கிறோம். நம்மைச் சுற்றி அழகு கொட்டிக் கிடக்கிறது; ஆனால், நமக்கு அனுபவிக்கும் திறன் இன்மையால், அனுபவிக்க ஏதுமில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

உங்களுடைய இருப்புத்தன்மைக்கு என்னைத் தெரியும். ஆனால் உங்கள் மனம்தான் தடையாக இருக்கிறது.

அனுபவிக்கும் திறன் உங்களிடம்தான் இருக்கிறது. வெளியே எதன் மீதும் பழி போடாதீர்கள். குழந்தையாக இருந்த பொழுது, உங்களைச் சுற்றியிருந்த அனைத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தீர்கள். அதன் பிறகு என்னவாயிற்று ? நீங்கள் கடுமையாகி, எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதையே மறந்து விட்டீர்கள். உங்களுடைய பெயரளவிலான கல்வியறிவினால் மர்தமாகி விட்டீர்கள்.

நான் முன்பே சொன்னதுபோல், "ஸ்வாமிஜி, எவ்வாறு நீங்கள் இவ்வளவு அறிவுடன் குழந்தை போலவும் இருக்கிறீர்கள் ? நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு நகைச்சுவை சொல்லும் பொமுதும், உடனே வெகு இயல்பாகச் சிரிக்கிறீர்கள் ; நாங்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! ரீங்கள் ஒரு நகைச்சுவையைச் சொல்ல ஆரம்பிக்கும்பொழுதே, சில சமயங்களில் நாங்கள் அதை முன்பே கேட்டிருப்பதால் சிரிப்பதில்லை; ஆனால், நீங்களோ அதை வேறு யாரோ முதன் முறையாகவே சொல்வது போல் மிகவும் ரசிக்கிறீர்கள்!" என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு.

பாருங்கள், உங்களுடைய தன்னிச்சையான இயல்பையும், மகிழ்ச்சியை அனுபவிக்கும் திறனையும் இழந்து விட்டீர்கள் என்று நான் சொல்வது இதைத்தான். உங்களுடைய கல்வியறிவினால், நீங்கள் 'எல்லாம் தெரியும்' என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்கிறீர்கள்.

இப்பொழுது இதைச் சொல்லி விட்டதால், நான் பேசும் பொழுது அடிக்கடி சொல்லும், இப்பொழுது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும், ஒரு கதையையும் சொல்லி விடுகிறேன்!

தமிழ்நாட்டில் கிராமங்களில் வருடாவருடம் கோயில்களில் திருவிழா நடக்கும். அப்பொழுது திறந்த வெளியில் தற்காலிகமாக

அன்பு உங்கள் இதயத்தில் இருந்து வருகிறது. ஆனால் பயமோ உங்கள் மனதில் இருந்து வருகிறது.

மேடை அமைத்து, புகழ்பெற்ற நாடகக் குழுக்கள், பெரும்பாலும் ஹிந்து இதிகாச புராணங்களான மஹாபாரதம், இராமாயணம் ஆகியவற்றில் இருந்து காட்சிகளை நாடகமாகப் போடுவார்கள். நான் சென்று அவற்றைப் பார்ப்பது வழக்கம்.

அது போன்ற ஒரு சமயத்தில், மஹாபாரதத்தில் இருந்து துச்சாதனன் திரௌபதியின் துகிலை உரிவதையும், இறுதியில் கிருஷ்ணன் கொண்டிருந்தார்கள். திரௌபதியின் பாத்திரத்தை ஒரு ஆண் புடவையணிந்து நடித்துக் கொண்டிருந்தார். அவர்களுடைய திட்டப்படி, திரௌபதி ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு புடைவைகள் அணிய வேண்டும்; துச்சாதனன் அவற்றை ஒவ்வொன்றாக உருவும் பொழுது கவனமாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஏழாவது புடவை வந்தவுடன், திரௌபதி கிருஷ்ணனை நோக்கி அபயக்குரல் எழுப்ப வேண்டும்; அப்பொமுது கிருஷ்ணன் குரல் கொடுப்பார். எப்படியோ, திரௌபதி வேடம் போட்டவர் அணியும் பொழுது தவறுதலாக ஒரு புடைவையை விட்டுவிட்டு, ஆறு புடவைகளையே அணிந்திருக்கிறார். மேடையில், துச்சாதனன் புடவைகளை இழுக்க ஆரம்பிக்க, ஆறாவது புடவையை இழுக்கும் பொழுதுதான் திடீரென்று திரௌபதிக்குத் தான் செய்த தவறு புரிந்தது! அவர் துச்சாதனனைப் பார்த்து. "ஏய் விடுறா ஏய் விடுறா!" என்று கத்த ஆரம்பித்தார். ஆனால் துச்சாதனனோ, திரௌபதி தனது பாத்திரத்தை மிகவும் அருமையாக நடிப்பதாக நினைத்து தொடர்ந்து இழுத்துக் கொண்டிருந்தான்! இறுதியில், திரௌபதி மேடையில் வெறும் அரை டிராயருடனும், இரவிக்கையுடனும் பெண் வேடத்தில் நின்று கொண்டிருந்தார்! ஆனால் அவருடைய சமயோசித புத்தியால், ''ஏ கிருஷ்ணா! நீதான் எவ்வளவு கருணையுள்ளவன்; அவமானத்திலிருந்து காப்பதற்காக என்னையே ஆணாக மாற்றி விட்டாயே!'' என்று கதறினார். (THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதைச் சொல்லும் பொழுது குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்!) அந்தக் காட்சியை இப்பொழுது நினைத்தால் கூட, என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது !

அதனால் புரிந்து கொள்ளுங்கள் ... கல்வியறிவு இருக்கட்டும்; ஆனால் அதனால் நீங்கள் இறுகி திடமாகி விடாதீர்கள். உங்களுடைய உள்ளார்ந்த இயல்பு ஒரு நதி போன்றது - பிரவகித்துக் கொண்டே இருப்பது. தன்னிச்சையான இயல்பே உங்கள் இயற்கை. பெயரளவிலான கல்வியறிவினால் நீங்கள் அதை விட்டு வெகுதூரம் தள்ளிச் சென்று விட்டீர்கள். நீங்கள் கள்ளம் கபட மற்று வாழ்வீர்களானால், உங்களுக்கு ஒரு புதிய உலகம் திறக்கும்.

ஒவ்வொரு கணத்தையும் வெறுமனே திறந்த நிலையில் எதிர்கொள்ளுங்கள். எதைப் பற்றியும் முன்கூட்டிய கருத்துக்களை வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் இது போன்று வாழ்ந்தீர்களானால், எதுவுமே உங்களுக்கு அலுப்பைத் தராது. அப்பொழுது, நீங்கள் தினசரி உடன் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் மனைவி கூட உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிப்பவராகவும் இருப்பதைக் காண்பீர்கள்.

இதுவே உங்கள் மனோபாவமாகி விடும் போது, மற்றவரும் உங்கள் திறந்த தன்மையை உணர்ந்து, பல மகிமத்தக்க வழிகளிலும் அவரும் உங்களிடம் திறந்த தன்மையுடன் இருக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. பிறகு, இது நீங்கள் ஒவ்வொரு கணமும் புத்துணர்ச்சியில் இருந்து புத்துணர்ச்சிக்கே செல்லும் ஒரு நேர்மறைச் சுழற்சியாகி விடும். பின்னர் எங்கும் புத்துணர்ச்சி மட்டுமே இருக்கும்; எதுவுமே சுவாரஸ்யமற்றிருக்காது!

நீங்கள் அஹங்காரத்துடன் வாமும் பொமுது, உங்களைச் சுற்றி எப்பொழுதும் சில உடமைகள், சில ஆதரவுகள், சில மனிதர்கள் என்று ஏதாவது இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த ஆதரவுகளே உங்களுக்கு ஒரு அடையாளத்தைத் தருகிறது.

அவை இல்லாவிடில், நீங்கள் ஒரு 'இல்லாதவராகி' விடுவீர்கள். ஒரு அரசன், அவனது இராஜ்யம் இருந்தால் மட்டுமே அரசனாக இருக்க முடியும். இன்னொரு பக்கம், ஒரு பரமஹம்ஸருக்கோ எதுவும் தேவையில்லை; அவர் கால்களை நீட்டினால் உறங்குகிறார், கைகளை நீட்டினால் உண்கிறார்! அவர் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து சென்று கொண்டிருக் கிறார். தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவான அவர் தானே தனக்கு அரச னாக இருக்கிறார். அவருக்கு எந்த இராஜ்ஜியமும் தேவையில்லை!

ஆனால் நீங்கள் ஒரு பரமஹம்ஸராகி விடும் பொழுது, உங்களைச் சுற்றி தானாகவே ஒரு பெரிய இராஜ்யம் உருவாகி விடும்; ஆனால் நீங்கள் அதனால் தொடப்படவோ, கறைபடவோ மாட்டீர்கள். பலவீனமானவர்கள் மட்டுமே தங்களுக்காக ஒரு இராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டு, தங்களது ஆதரவையும், பலத்தையும் அதிலிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பலவீனமானவர்களுக்கே அவா்களைத் தாங்கிப் பிடிக்க அந்தஸ்தும், அஹங்காரமும் தேவையாக இருக்கிறது. ஒரு பரமஹம்ஸருக்கோ, அவரது நிலையே அவருக்கு எல்லாவற்றையும் செய்து விடும்; அவரைச் சுற்றியுள்ள அந்தஸ்தால் அவர் தொடப்படுவதேயில்லை.

நீங்கள் உடமைகளைத் தேடுவதன் காரணம், அதுவும் இல்லாவிடில் வாழ்க்கை மிகவும் வெறுமையாகவும், சலிப்பாகவும் இருப்பதாக நீங்கள் எண்ணுவதுதான். வாழ்க்கை மிகவும் அலுப்பாக இருப்பதாக நீங்கள் எண்ணுவதற்குக் காரணம், நீங்கள் எப்பொழுதும் அற்புதங்களைத் தேடிக் கொண்டிருப்பதுதான். பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மிகப்பெரிய அற்புதங்கள் ஒவ்வொரு கணமும் உங்கள் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் நீங்கள் உங்கள் அறைங்காரத்துடன் வேறு சிந்தனைகளில் ஆழ்ந்திருப்பதால், அதைத் தவறவிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்!

உங்கள் சொந்த உடலே ஒரு அதிசயம்தான். அது மனிதனால் எக்காலத்திலும் கண்டுபிடிக்க முடிந்த தலைசிறந்த கணினியை விட மிகச் சிறப்பு வாய்ந்தது. உங்கள் உடலில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்களும் , ஒருமித்து செயல்பாடுகளுமே பூமியில் மிகச் சிறந்த அதிசயங்கள். எவ்வாறு உங்கள் மனதை விட்டுவிட்டு பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து வாழ்வது என்பது தெரிந்தால், நீங்கள் அதிசயங்கள் என்ற பெயரில் தேடுவது பிரபஞ்ச இருப்புத்தன்மையில் நிகழும் இயல்பான ஒருமித்த நிகழ்வுகளைத் தவிர வேறல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் அவைங்காரமே இவற்றை வெறும் சாதாரண விஷயங்களாகப் பார்க்க வைத்து விடுகிறது, அவ்வளவே. உங்கள் கல்வியறிவு எப்பொழுதும் விஷயங்களைக் கூறு போட்டு, ஆராய்ந்து அலுப்பைத் தரும் தர்க்கமாகக் குறைத்து விடுகிறது.

சொல்லுங்கள்… ?

ஸ்வாமிஜி, நாங்கள் இந்த விஷயங்கள் தெரிந்தும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஏன்?

ஆம்...இது ஒரு நல்ல கேள்வி! இன்பமாக வாழும் தேர்வு நம்மிடம் இருக்கும் பொழுது, நாம் ஏன் துன்பத்தைத் தேர்வு செய்கிரோம்… ? !

பாருங்கள், உண்மையிலேயே உங்கள் உண்மையான அடையாளமான, உங்கள் இருப்புத் தன்மையைப் பற்றியே, உங்களுக்குத் தெரியாது. காலப்போக்கில், நீங்கள் வெளியுலகத் துடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து, உங்களுக்கென்று ஒரு போலியான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு விட்டீர்கள்.