KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/சுதந்திரமாகச் சார்ந்திருங்கள் !Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

சுதந்திரமாகச் சார்ந்திருங்கள் !

எது உங்களுடைய வெளி, எது மற்றவர்களுடையது என்பதில் தெளிவாக இருங்கள். மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல், உங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள உங்களாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.

என்னால், குறைபாடுகளற்ற ஒரு முழுமையான தீர்வைத் தர முடியாதுதான் ... கணவன் மனைவிக்கிடையே உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மந்திரத்தை என்னால் கொடுக்க முடியுமானால், நான்தான் இந்த உலகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மனிதனாக இருப்பேன்!

(பலத்த சிரிப்பு மற்றும் கைதட்டல்!)

ஸ்வாமிஜி, மற்றவருடைய மூலாதார சக்ரத்தைத் திறக்க முடியுமானால், அவருடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் விட்டு விடுவார் இல்லையா ?

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார்!) அதை நீங்கள் எப்படிச் செய்வீர்கள் ? உங்களுடைய எதிர்பார்ப்புக்களை விட்டு விடுவதை மட்டும்தான் உங்களால் உறுதிப்படுத்த முடியும்- அதனால் நான்கு பேர் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து, உங்களால் அதை மூன்றாகக் குறைக்க முடியும் !

மற்ற மனிதரை எவ்வாறு மாற்றுவது… ? இந்நாட்களில் திருமண ஆலோசகர்கள், மனோவசியத்தைக் கூட பரிந்துரைக் கின்றனர். நான் அதை அடுத்தவரின் சுதந்திரத்தில் ஒரு உச்ச பட்சத் தலையீடாகக் கருதுகிறேன். அது முற்றிலும் தவறானது.

அன்றொரு நாள், ஒரு பெண் அவளது கணவருடைய கோபத்தின் அளவைக் குறைக்க விரும்பிய ஒரு சம்பவத்தை பற்றிப் படித்தேன். நீங்கள் படித்திருக்கலாம் - சிகாகோ பல்கலைக்கழகத்தில், மூளையில் மின் கம்பிகளைப் பதிய வைப்பதன் மூலம் கோபத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்து வதைப் பற்றிய சில ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன!

அவர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க தன்னார்வ தொண்டர்களைக் கேட்ட பொழுது, நூற்றுக்கணக்கான பெண்கள் வலுக்கட்டாயமாகத் தங்கள் கணவன்மார்களை அழைத்துக் கொண்டு வந்ததாக அறிகிறோம் !

(சிரிப்பு!)

பரிசோதனைக்குப் பிறகு, 72 பெண்கள் (இது உண்மை) பல்கலைக்கழகத்திற்குத் திரும்ப வந்து, 'தயவு செய்து இந்த மின் கம்பிகளை எடுத்து விடுங்கள். எனக்கு திரும்பவும் பழையபடியே என் கணவன் தேவை. நான் மீண்டும் என் பழைய கோபக்கார கணவனையே விரும்புகிறேன்!'' என்று சொன்னார் களாம். அவர்கள் சொல்கிறார்கள், ''வாழ்க்கை அதன் சுவையை இழந்துவிட்டது! நாங்கள் சண்டை போடாவிடில் எந்த விதமான பரிமாற்றமும் இல்லை. அவர் என்னைக் கவனிப்பதேயில்லை!''.

அனைவருக்குமே கவனம் தேவைப்படுகிறது ! நடத்தையியல் மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள், ஒரு சாதாரணமான மனிதன் உணவில்லாமல் 90 நாட்கள் வரை உயிர் வாழ முடியும், ஆனால் மற்றவர்களுடைய கவனம் இன்றி 14 நாட்கள் மட்டுமே வாழ முடியும்! அவன் பைத்தியமாக ஆரம்பித்து விடுவான்!

என்ன நடந்திருக்கிறதென்றால், நாம் ஒருவரை யொருவர் நேசிப்பதையும், ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்வதையும் மறந்து விட்டோம். அன்பு, மறக்கப்பட்ட ஒரு மொழியாகிவிட்டது!

நீங்கள் உங்கள் கணவர் ஒரு அடக்கி ஆளும் வகை என்று தீர்மானித்து விட்டால், அவர் என்ன செய்தாலும் உங்களுக்கு அப்படித்தான் தோன்றுவார்.

அதனால் ஒருவருக்கொருவர் இணைந்து செயலாற்றவும், கவனம் கொள்ளவும் நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை ஒருவரோடொருவா் சண்டை போடுவது தான்!

இங்கு அமர்ந்திருப்பவர்கள், தங்கள் கணவன்மார்கள் அல்லது மனைவிமார்கள் ஆன்மீக வழியில் இல்லை என்று குறை கூறிக் கொண்டு இருப்பவர்களே கூட, அவர்கள் கணவன் அல்லது மனைவி ஆன்மீக வழியில் சென்று விட்டால், திரும்ப வந்து அவர்களது பழைய கணவன் அல்லது மனைவியே திரும்ப வேண்டும் என்று குறை கூறக் கூடும்.

(பங்கேற்பவர்களிடம் இருந்து சிரிப்பும் எதிர்ப்பும்!)

சரி! நீங்கள் மாறுபட்டவர்கள் என்று சொல்கிறீர்கள்! பார்ப்போம்...!

இந்த மூலாதார சக்கரத்தைப் பற்றிய அற்புதமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த ஒரு சக்கரத்தைத் திறந்தாலே, உங்கள் பிரச்சினைகள் 50 சதவிகிதம் மறைந்து விடுவதைக் காண்பீர்கள்! இந்த ஒரு சக்கரம் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் 50 சதவீதத்திற்கும் மேல் நிர்வகிக் கிறது. நீங்கள் எதைச் செய்தாலும், அதில் இந்தச் சக்கரத்தின் ஒரு தடத்தைக் காணமுடியும்! உங்களுடைய கையெழுத்தில் கூட, இந்தச் சக்கரத்தின் தடத்தைக் காண முடியும்! மூலாதாரச் சக்கரம் தூண்டி விடப்படுமானால், உங்கள் கையெழுத்துக் கூட மாறி விடும். நீங்கள் ஒரு மலரைப் பறித்தால், அதை நீங்கள் செய்யும் விதம் மாறுபட்டிருக்கும்.

நாயன்மார்கள் என்று அழைக்கப்படும் தமிழ் இறை அடியார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லும் ஒரு பாடல் இருக்கிறது. அவர்கள் மலர்களைப் பறித்தால், அந்த

இந்த மனோநிலையை விட்டுவிடுங்கள். பிறகு நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிட மும், ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு புத்துணர்ச்சியைப் பார்ப்பீர்கள்.

மரத்திற்கு வலியே தெரியாதாம்! அதன் பொருள் என்ன? இந்தச் சக்கரம் திறக்கப்படுமானால், நீங்கள் மிகவும் நட்பமான உணர்வு உடையவர்களாகவும் அன்பு மிக்கவர்களாகவும் ஆகி விடுவீர்கள். இந்தச் சக்கரத்தின் சக்தி உருமாற்றமடையும் பொழுது, அது உங்களிடமிருந்து அன்பாகப் பொங்கிப் பிரவகிக்கிறது!

காமம் கரி போன்றது, அன்பு வைரம் போன்றது; காமம் சேற்றைப் போன்றது, அன்பு அதில் மலரும் தாமரை போன்றது. பொருள் ஒன்றுதான். ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், அதை எவ்வாறு பக்குவப்படுத்துவது என்று தெரிய வேண்டும்.

உங்கள் எதிர்பார்ப்புகளை விட்டு விடுங்கள், ஒரு பெரும் சக்தி அலை போலப் பாய்வதைக் காண்பீர்கள்.

இன்று நீங்கள் அனைவரும் வீட்டில் இந்த உத்தியை முயற்சி செய்து பாருங்கள்; கீழே அமாந்து மூலாதார சக்கரத்தில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். நீங்கள் கவனித்தால், உங்கள் மூலாதாரச் சக்கரம் எப்பொழுதும் இறுக்கமாக இருப்பதைக் காணலாம். அது எப்பொழுதும் இறுக்கமாகத்தான் இருக்கும்.

ஒரு ஐந்து நிமிடங்கள், உங்கள் கணவனை அல்லது மனைவியை, அவர்கள் செய்த எல்லாவற்றையும் மனதால் மன்னித்து விடுங்கள். உண்மையாக மன்னித்து விடுங்கள்; வேர் வரை சென்று சின உணர்வையும் வருத்தங்களையும் விட்டு விடுங்கள். இதை முழுமையாகச் செய்யுங்கள். அவர்களை வெறுமனே உள்ளவாறே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு உங்கள் ஆழமான அன்பை அளியுங்கள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து, மூலாதார சக்கரம் முற்றிலும் தளர்வாக இருப்பதைக் காண்பீர்கள்.

ஒருவருடைய கற்பனைகளுடன் நிஜம் பொருந்தாமையால் உறவுகள் பெரும் வேதனையாக மாறுகின்றன.

வெறும் ஐந்து நிமிடங்களே இவ்வளவு பலன் கொடுக்கு மானால், உங்கள் முழு மனோபாவத்தையும் மாற்றிக் கொண்டீர் களானால் என்ன நிகழும் என்று வெறுமனே கற்பனை செய்து பாருங்கள்! எவ்வளவு பெரிய சக்தி ஓட்டத்தை அனுபவிப்பீர்கள்!

இப்பொழுது நீங்கள் வாழும் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறதென்றால், உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைத்து, அதில் தொண்ணூறாயிரம் ரூபாயை மீட்க முடியாத ஏதோ ஒர் இடத்தில் பூட்டி வைத்திருப்பது போல் இருக்கிறது. மீதி பத்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் சமாளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு இயல்பாகவே நீங்கள் ஏழையாக இருப்பதாகத்தான் உணர்வீர்கள்!

அதே போன்று, நமது எல்லா சக்தியும் தவறாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது; அவை இந்தச் சக்கரத்தில் கோபத்திலும், காமத்திலும் இன்னும் பலவற்றிலும் பூட்டப்பட்டிருக்கிறது. நமது தினசரி வாழ்க்கைக்குத் தேவையான சக்தி கூட நம்மிடம் இல்லை. ஒரு முறை இந்தச் சக்கரம் திறக்கப்படுமானால், உங்கள் வாழ்க்கை வளமாகும்.

உங்களால் இன்னும் நன்றாகச் சிந்திக்க முடியும், இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும், இன்னும் நன்றாகத் திட்டமிட முடியும். இந்த சக்தி விழிப்புடன் உங்களிடம் செயல்பட்டுக் கொண்டிருப்பதை உங்களால் உணர முடியும். அது நீங்கள் இதற்கு முன் அனுபவித்திராத ஒரு புதிய பரிமாணத்தைத் திறக்கும். நீங்கள் உங்கள் கணவன், மனைவி, மற்ற அனைவருமே ஆன்மீக இருப்புத் தன்மைகள்தான் என்பதை உண்மையிலேயே உணர்ந்து கொள்வீர்கள் !

ஒருவர் மற்றவருடன் உறவு கொள்வதேயில்லை. உண்மையில் மற்றவரைப் பார்ப்பது கூட இல்லை. அவர்களுடைய தீர்மானங்களுடன் மட்டுமே உறவு கொள்கின்றனர்.

புரிந்து கொள்ளுங்கள் ... சொர்க்கமும் நரகமும் புவியியல் சார்ந்த இடங்கள் அல்ல. அவற்றை உங்களால் வரைபடத்தில் குறிப்பிட முடியாது. அவை உளவியல் ரீதியாகவே இருக்கின்றன. உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவோ அல்லது நரகமாகவோ மாற்றிக் கொள்வது உங்களிடம்தான் இருக்கிறது. உங்கள் மனம் முழுவதும் எதிர்பார்ப்புகளால் நிரம்பியிருந்தால், நீங்கள் நரகத்தை உங்கள் தலையில்தான் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் சொந்த மூட்டையான நரகமும் உங்களுடனேயே பயணம் செய்கிறது! ஒரு சா்க்கஸ் கலைக்குழு எப்படி எங்கு சென்றாலும் கூடாரத்தை எடுத்துச் சென்று பரப்புகிறதோ, அதே போல நீங்களும் உங்கள் நரகத்தை எங்கு சென்றாலும் சுமந்து சென்று அதில் வசிக்கிறீர்கள். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. மேலும் இரண்டு மனிதர்கள் சந்திக்கும் போது, மணிகள் ஒலிப்பதில்லை, மாறாக நரகங்களின் மோதலால் பெரும் கலவரம்தான் நிகழ்கிறது!

எங்கு சென்றாலும் உங்களுடன் இந்தச் சுமையை ஏன் சுமந்து செல்ல விரும்புகிறீர்கள் ?

அதை அப்படியே விட்டு விடுங்கள்!

உங்கள் எதிர்பார்ப்பகளுக்கு ஏற்ற வகையில் மற்றவரைச் செதுக்கும் முயற்சியில் நீங்கள் வீணாக்கும் சக்தியையெல்லாம் எண்ணிப் பாருங்கள். அதை விட உளியைப் போட்டு விடுவது மிகவும் சுலபம் இல்லையா? அதில் 10 சதவீத சக்தியை தியானத்தை நோக்கித் திருப்பி விட்டால் கூட, உங்கள் வாழ்க்கையை உண்மையான வாழ்தலாக உருமாற்றம் பெறச் செய்து விட முடியும்!

நாம் என்று முதல் நிகழ்காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோமோ, அன்றுதான் ஆனந்தத்தை உணர ஆரம்பிப்போம்.

வாழ்தல் என்பது 'விழிப்புணர்வுடன், சுதந்திரத்துடன் நடத்தப்படும் வாழ்க்கை'. தேர்ந்தெடுத்தல் நம்மிடம் இருக்கிறது! நம்மிடம் விழிப்படைவதற்கான சாத்தியம் இருக்கிறது. இப்பொழுது தீர்மானிப்பது உங்கள் கையில் இருக்கிறது.

சொல்லுங்கள்... ஏதேனும் கேள்விகள் ?