KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/இந்த படைப்பு முழுவதுமே உங்களுக்கு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பரிசு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

இந்த படைப்பு முழுவதுமே உங்களுக்கு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பரிசு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

அதைப் பெருந்தன்மையுடனும், பணிவுடனும் பெற்றுக் கொள்ளுங்கள். இதை நீங்கள் செய்வீர்களானால், மூலாதார சக்கரத்தின் மிகப் பெருஞ்சக்தி உங்களுக்கு திறக்கப்படும். இந்த சக்கரத்தை எழுப்புவதென்பது முடிவற்ற சக்தியின் மூலத்தைத் தொடுவதாகும். பேராசையிலும் இப்பொழுது அடைந்து கிடக்கும் மிகப்பெருஞ் சக்தியை படைப்பாற்றலுக்கும், தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் நிஜத்திற்கும் கிடைக்குமாறு செய்ய முடியும்!

அது மட்டுமல்ல, உங்கள் வீடே ஒரு குஷத்திரம் (அமைதியின் ஆலயம்) ஆகிவிடும். நமது இல்லங்கள் தர்ம கேஷத்திரங்களாக (நற்பண்புகளின் இருப்பிடமாக) இருக்க வேண்டியவை. ஆனால் அவை குருக்கூத்திரங்களாக (போரின் இருப்பிடமாக) ஆகிவிட்டன! நான் சொல்வது சரிதானே? ஏன் அவை போரின் இருப்பிடமாகி விட்டன? ஏனெனில் நாம் மனிதர்களைச் செதுக்குகிறோம். நாம் சிலைகளையோ அல்லது மரத்தையோ செதுக்கினால், அழகான வடிவங்களையும், மேசை நாற்காலிகளையும் செதுக்கினால் மரண வேதனைதான் ஏற்படும்.

பிரம்மச்சரிய நிலையை அடையாவிடில், திருமணம் செய்துகொண்டால் கூட நீங்கள் தொடர்ந்து ஹார்மோன்களின் தொல்லைக்குட்பட்டுதான் இருப்பீர்கள்.

ஒருவர் என்னிடம் கேட்டார், "ஸ்வாமிஜி, பதினெட்டுக் கைகளையுடைய தேவியுடன் தொடர்பு கொள்ள ஏதேனும் வழியை உங்களால் சொல்ல முடியுமா?". நான் சொன்னேன், '' முதலில் இரண்டு கைகளையுடைய உங்கள் மனைவியுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்: பதினெட்டு கைகளையுடைய தேவியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் !' '.

(சிரிப்பு!)

இன்னொருவர் என்னிடம் வந்து விவாகரத்திற்கு ஆசிகளைக் கேட்டார். நான் கல்யாணத்திற்கு மட்டும்தான் ஆசிகளைத் தருவேன், விவாகரத்திற்கெல்லாம் கொடுப்ப தில்லை என்று சொல்லி விட்டேன். நான் அவரிடம், ''என்ன பிரச்சினை, என்னால் தீர்க்க முடியுமா என்று பார்க்கிறேன்' என்றேன். அவர் சொன்னார், "ஸ்வாமிஜி, இன்று காலை, நான் காபி கேட்டேன். அவள் காபியுடன் வந்த வேகத்தில் அது என் ஆடையெல்லாம் சிந்தி விட்டது'. நான் அதிர்ச்சியடைந்து அவரிடம் "இந்த அற்பமான விஷயத்திற்கெல்லாமா விவாகரத்து கேட்பது' என்றேன். அவர் சொன்னார், "ஸ்வாமிஜி, உங்களுக்குத் தெரியாது, இன்று அவள் காபியை ஊற்றினாள். நாளைக்கு அமிலத்தை ஊற்றுவாள்''. நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். அவரிடம் சொன்னேன், "ஐயா, எந்தக் காரணமும் இல்லாமல் ஏன் காபியிலிருந்து அமிலக்கிற்குத் தாவுகிறீர்கள் ? அவள் செய்ததெல்லாம் ஏதோ கோபத்திலும், அவசரத்திலும் கொஞ்சம் காபியைச் சிந்திவிட்டாள். எப்படியாயினும், அவள்தான் ஆடைகளை துவைக்கப் போகிறாள்!'. அவர் தொடர்ந்தார், ''ஸ்வாமிஜி, எங்கள் கல்யாணத்தில். மூன்று பானைகளில் தண்ணீரை வைத்து, அதில் தம்பதியா் இருவரும் கையை விட்டு, அதில் ஒன்றில்

இந்த ஹார்மோன்களின் தொல்லை உங்கள் மனநிறைவுக்கான ஏக்கத்தைத் தவிர வேறல்ல. அது உண்மையில் உங்களுக்குள்ளிருந்து அடைய வேண்டியதாகும்; வெளியிலிருந்து அல்ல.

போடப்பட்டிருக்கும் மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பது வழக்கம். அப்பொழுதே அவள் நகத்தால் என் கையில் கீறி விட்டாள்!' ' .

  • (சிரிப்பு!)

தம்பதியருக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்காக, ஹிந்து திருமணங்களில், இதுபோன்ற சிறு விளையாட்டுக்கள் விளையாடப்படுகிறது. அந்த மனிதர் இது போன்ற அற்ப விஷயங்களை பத்து வருடங்களாக பத்திரமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார். நான் சொன்னேன், "ஐயா, இது போன்ற போலீஸ் பதிவேடுகளை வைத்துக் கொண்டிருந்தால், ஒருவரால் உங்களுடன் எப்படி வாழ முடியும்!''.

பாருங்கள் ... நாம் இரண்டு விஷயங்களைச் செய்கிறோம். ஒன்று, வாதங்களை வைத்து விட்டு தீர்ப்பை எதிர்நோக்குவது. இரண்டாவது, தீர்ப்பை முடிவு செய்து விட்டு, அதை ஆதரிக்கும் வகையிலான வாதங்களைச் சேகரிப்பது. நாம் 99 சதவிகித நேரம் இரண்டாவதைத்தான் செய்கிறோம்.

பாருங்கள், நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் நாம் பதிவு செய்து கொள்ள விரும்புவதை மட்டும்தான் பதிவு செய்து கொள்கிறோம்; ஒருபோதும் உண்மையில் நடப்பதை அல்ல. இதனால் நீங்கள் நிஜத்தைத் தவற விடுகிறீர்கள். நிஜம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது; ஆனால் நீங்கள் பார்க்க விரும்புவதை மட்டுமே பார்க்கிறீர்கள். திருமணத்தில், முதல் சில மாதங்களில், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவரைப் பற்றி ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுகின்றனர். பிறகு அடுத்தவர் எது செய்தாலும், அவன் அல்லது அவள், அந்த தீர்மானத்தின் கோணத்திலிருந்தே பார்க்கின்றனர். அவர்கள் தீர்ப்பை நிலைநிறுத்தும் வகையிலான வாதங்களைத் தேடிச் சேகரிக்கின்றனர்.

நீங்கள் பார்ப்பவற்றில் எல்லாம் உங்கள் மனதின் விளையாட்டை விழிப்புணர்வுடன் கவனிக்க முயற்சி செய்யுங்கள்.

அதனால்தான், நீங்கள் உங்கள் மனைவி ஒரு முட்டாள் என்று தீர்மானித்து விட்டால், அவள் எப்பொழுதுமே உங்களுக்கு ஒரு முட்டாளாகவே தெரிவாள். நீங்கள் உங்கள் கணவர் ஒரு அடக்கி ஆளும் வகை என்று முடிவு செய்து விட்டால், அவர் என்னசெய்தாலும், எப்பொழுதுமே உங்களுக்கு அப்படித்தான் தோன்றுவார்.

நீங்கள் இவ்வாறு செய்தீர்களானால், உங்களால் ஒரு போதும் உங்கள் கணவரின் அல்லது மனைவியின் உண்மையான தன்மையைக் காண முடியாது; உங்கள் தீர்மானத்திற்கு தீனி போடும் தன்மையை மட்டும்தான் நீங்கள் பார்ப்பீர்கள். இது எப்படி இருக்கிறதென்றால், நீங்கள் பசியுடன் இருக்கும் பொழுது, சாலையில் உள்ள உணவகங்கள் மட்டுமே உங்கள் கண்களில் படும். ஒரு நாயைச் சாகடிப்பதற்கு முன்னால், நாம் என்ன செய்கிறோம் ? அதற்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்லி விட்டுச் சாகடிக்கிறோம்.

இந்த மனோநிலையை விட்டு விடுங்கள். பிறகு நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் மற்றும் விஷயத்திலும் ஒரு புத்துணர்ச்சியைப் பார்ப்பீர்கள்.

ஒரு சின்ன கதை ...

ஒரு மனிதர் கடந்த மூன்று மணி நேரமாக தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுப்பதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்றார். போலீஸ்காரர் அவரிடம் கேட்டார், ''உங்களால் உங்கள் மனைவியைப் பற்றிய உயரம், எடை போன்ற விபரங்களைத் தர முடியுமா?''. அந்த மனிதர் சொன்னார், ''ஓ! எனக்குத் தெரியாது''. போலீஸ்காரர் கேட்டார், ''உங்கள் மனைவி வீட்டை விட்டுச் சென்ற பொழுது என்ன அணிந்து கொண்டிருந்தாள் ?''. அந்த மனிதர் சொன்னார், ''நான் கவனிக்கவில்லை. ஐயா, சற்றுப் பொறுங்கள் ...

திருஷ்டி சிருஷ்டி என்பது உலகத்தை உள்ளவாறே பார்ப்பது. நிஜத்தை ஏற்று வரவேற்பது.

அவளுடன் நாயை அழைத்துச் சென்றாள் ... எனக்கு அது தெரியும்''. போலீஸ்காரர் கேட்டார், ''அது என்ன நாய் ?''. அந்த மனிதர் சொன்னார், ''கறுப்புக்கு பதிலாக சாம்பல் நிறப் புள்ளிகளுடன் கூடிய அது டால்மேஷன் இனத்தைச் சேர்ந்தது; அதன் எடை 50 பவுண்டு; அதன் வால் புள்ளிகளற்ற தூய வெண்மையானது; அது வெள்ளிச் சங்கிலியுடன் கூடிய பழுப்பு நிற கழுத்துப்பட்டை அணிந்திருக்கிறது ; அதன் பெயர் ஸ்பாட்''. போலீஸ்காரர் சொன்னார், ''அது போதும்''. நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து விடுவோம்'.

(சிரிப்பு!)

ஒரு கணவனும் மனைவியும் திருமணத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் ஒரு வித புத்துணர்ச்சியுடன் அனேகமாக சில மாதங்களே வாழ்கின்றனர். அந்த சில மாதங்களில், அவர்கள் ஒருவர் மற்றவரைப் பற்றி தீர்மானங்களைச் சேகரிக்கின்றனர். அதன் பிறகு, அவர்கள் ஒருவர் மற்றவருடன் உறவு கொள்வதே இல்லை. அவர்கள் உண்மையில் மற்றவரைப் பார்ப்பது கூட இல்லை; அவர்கள் தீர்மானங்களுடன் மட்டுமே உறவு கொள்கின்றனர், அவ்வளவுதான்.

கணவன் மனைவியைப் பற்றி சேகரித்த தீர்மானங் களுடன் உறவு கொள்கிறான்; மனைவி கணவனைப் பற்றிச் சேகரித்த தீர்மானங்களுடன் உறவு கொள்கிறாள். உண்மையான கணவனும், உண்மையான மனைவியும் வேறாக இருக்கிறார்கள்! அவர்கள் மீண்டும் ஒரே வீட்டில் நான்கு மனிதர்களாக ஆகி விடுகிறார்கள்.

சிருஷ்டி, திருஷ்டி என்பது உலகத்தை நாம் விரும்பிய வண்ணம் நமது சொந்த வண்ணக் கண்ணாடிகளின் மூலமும், நமது கற்பனைகளின் மூலமும் பார்ப்பது.

வெறுமனே ஒரு நேர்மையான சோதனையைச் செய்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கணவனின் அல்லது மனைவியின் கண்களைப் பார்த்துப் பேசி எத்தனை நாட்களாகிறது ? வெகு காலம் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும் நாம், முந்தைய நாட்கள் பொன்னான நாட்கள் என்றும், இப்பொழுது வாழ்க்கை மிகவும் சலிப்பாகிவிட்டது என்றும் எண்ணுகிறோம். உங்களுடைய மனோபாவம்தான் வாழ்க்கையைச் சலிப்பாக்குகிறது.

ஒரு மனிதன் வளர்ச்சியடைவதற்குக் கொஞ்சம் கூட இடம் கொடுப்பதேயில்லை. நீங்கள் உடனே அவர்களை வகைப்படுத்தி விடும் அவசரத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அவர்களது கணக்கில் புதிதாக எதையும் எடுத்துக் கொள்ள விரும்புவதேயில்லை. நான் சொல்கிறேன், திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு, நீங்கள் உங்கள் கணவனை அல்லது மனைவியைப் பார்ப்பது கூட இல்லை. ஏனெனில் உங்கள் மனதிலுள்ள அவர்களது உருவத்துடன் உறவு கொள்வதிலேயே மகிழ்ச்சியடைந்து விடுகிறீர்கள்.

பிறகு என்ன நடக்கும் ? தன் மனைவியைப் பற்றியே எந்த விவரமும் கொடுக்க முடியாத அந்த மனிதனின் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். மனைவியைப் பற்றிய விவரம் தெரியாமல் இருப்பது மிகவும் மேலோட்டமான ஒரு பிரச்சினை. ஆனால் கருத்து இன்னும் ஆழமானது. நீங்கள் உங்களுடன் வாழும் நிஜமான மனிதரை உண்மையிலேயே தவற விட்டு விடுகிறீர்கள். நீங்கள் அந்த மனிதரைப் பற்றிய உங்கள் கருத்துடன் மட்டுமே வாழ்கிறீர்கள், அவ்வளவே!

ஒரு 24 மணி நேரத்திற்கு, உங்கள் மனைவியை அல்லது கணவனை முதல் தடவையாகப் பார்ப்பது போல் பார்ப்பதற்கு

உங்கள் செதுக்குதலை விழிப்புடன் செய்யுங்கள்! அப்பொழுது தேவைக்கதிகமாகச் செய்ய மாட்டீர்கள்.

உங்கள் மனதைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையையும் அல்லது செயலையும் தீர்மானத் திற்குத் தாவி விடாமல், ஒரு புத்துணர்ச்சியுடனும் கள்ளங்கபட மற்ற தன்மையுடனும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் அவளை நோக்கிய ஒரு அன்பை உணருங்கள். அவள் உங்களைத் தூண்டி விடுவதுபோல் ஏதாவது சொன்னாலும், அந்த வார்த்தை களை விழிப்புணர்வுடன் கேட்டு, வழக்கம் போல விவாதங்களில் இறங்காமல், ஒரு அமைதியான அன்பான வழியில் பதில் கொடுங்கள். உங்கள் இருவருக்குமே நீங்கள் உண்மையிலேயே புதிய பாதைகளைத் திறப்பதைக் காண்பீர்கள்; நீங்கள் இருவரும் வளர்ச்சியடைவதற்கு ஒரு புதிய வெளியைக் கொடுக்கிறீர்கள்.

திடீரென்று, இதுவரையில் துயரமாகத் தெரிந்ததற்குக் காரணம் உங்கள் மனோபாவம்தான் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். ஆயினும், உங்கள் மனைவியும் திருப்பியளிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் நான் சொல்கிறேன் .... உங்களிடம் உங்களையும் மற்றவர்களையும் மாற்று வதற்கான சக்தி இருக்கிறது. உங்கள் மன அமைப்பில் ஒரு சாதாரண மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், உங்களால் நிறைய சாதிக்க முடியும். நீங்கள் மாறுவதாகத் தீர்மானித்து விட்டால், உங்கள் மனைவியும் தானாகவே அவள் வழிகளை மாற்றிக் கொள்வாள்.

ஒரு சின்ன கதை....

ஒரு நாள், ஒரு மனிதர் ஒரு கல்லறையைக் கடந்து நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, அங்கிருந்து உரத்த அழுகைச் சத்தம் கேட்டது. அவர் நின்று, ஏதேனும் உதவ முடிந்தால் உதவலாம்

கோபமும் இச்சையும் உங்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சக்திகள் என்பதை உணர்ந்தால், அதை வீணாக்கவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ மாட்டீர்கள்.

என்று நினைத்தார். உள்ளே நடந்து சென்று, ஒரு மனிதன் ஒரு சமாதியின் அருகே உரக்க அழுது கொண்டிருப்பதைக் கண்டார். அவன் மீண்டும் மீண்டும், ''நீ ஏன் இறந்து போனாய், நீ ஏன்

இறந்து போனாய் ?' என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவனது துயாத்திற்கு வருந்தி, அவனருகில் சென்று, "ஐயா, நான் மிகவும் வருந்துகிறேன், அது உங்கள் மனைவியா ?'' என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், ''இல்லை, அவளுடைய முதல் கணவன்''.

(பலத்த சிரிப்பு!)

ஒருவருடைய நிறம் பொருந்தாமையால் உறவுகள் பெரும் வேதனையாக மாறுகின்றன. அடுத்ததாவது அவர்களது கற்பனைகளுடன் பொருந்தி வரும் என்ற எண்ணத்தில், மக்கள் ஒரு உறவிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது இதைவிட மோசமானது. அவர்கள் அதனுடன் சில காலம் சென்ற பிறகு, அதிலும் ஏதோ குறைபாடு இருப்பதாக எண்ணி அடுத்ததற்குத் தாவுகிறார்கள். மற்றவரிடம் எந்தத் தவறும் இல்லை; உண்மையிலேயே அந்தக் குறைபாடுகளுக்குக் காரணம் அவர்களுடைய சொந்த கற்பனைதான் என்பது அவர்களுக்குத் தோன்றுவதேயில்லை.

அவர்கள் கற்பனை உலகில் ஆழ்ந்து நிலைபெற்று விட்டதால், நிஜம் அவர்களுக்கு கற்பனையைப் போல் தோன்றுகிறது! நான் சொல்கிறேன், இதுதான் நமது தொல்லைகளுக்கெல்லாம் ஆரம்பம். நாம், என்று முதல் நிகழ்காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோமோ, அன்றுதான் ஆனந்தத்தை உணர ஆரம்பிப்போம்; அன்றுதான் நாம் இதுவரையில் இந்த அளவிற்கு கற்பனையில் இருந்திருக்கிறோம் என்பதை கண்டுபிடிப்போம்.

உங்கள் கோபத்தினால் ஒருபோதும் உங்கள் அமைதி குலையக் கூடாது.

இன்று, ஒருவரையொருவர் சகித்துக் கொள்வது இளைஞர் களுக்கு மிகவும் கடினமாகிக் கொண்டே போவதால், திருமணங்கள் எளிகில் முறிந்து விடுதின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் பார்ப்பதற்கு மிகவும் அனுதாபத்திற்குரியது. இப்பொழுது ஒரு விழிப்பு தேவை. ஆழமான புரிந்து கொள்ளுதலே இந்த விழிப்பைக் கொண்டு வரும்.

உறவுகள் என்று வரும் பொழுது, நாம் அனைவரும் அடுத்தவரை நோக்கி விரல்களைச் சுட்டத் தயாராக இருக் கிறோம். கை கட்டி ஒலியெழுப்ப இரண்டு கைகள் தேவை என்பதை மறந்து விடுகிறோம். நீங்கள் உங்கள் மீது செயல்படுவீர்களானால், உங்களால் விஷயங்களை உங்களுக்கும், மற்றவர்களுக்கும் சிறப்பாகச் செய்ய முடியும். அடுத்தவரும் மாற வேண்டும் என்பகு பற்றி யெல்லாம் கவலைப்படாகீர்கள்.

நீங்கள் இது வரையில் எழுதப்பட்டுள்ள எல்லாக் காதல் கதைகளையும் படித்தீர்களானால், நிஜத்தில், செயல்படும் நிலையில், ஆணும் பெண்ணும் முழு நேரமும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதை எங்கும் காண முடியாது.

ரவீந்திரநாத் தாகூர் எழுதியுள்ள, நிரந்தரக் காதலர்கள் பற்றிய ஒரு கதையில், கதாநாயகனும், கதாநாயகியும் நிரந்தரக் காதலர்களாக, கங்கையின் இரு கரைகளிலும் தங்கி வசிப்பது என்று தீர்மானிக்கிறார்கள். வாரம் ஒரு முறை அவர்கள் படகில் வந்து சந்தித்து விட்டுத் திரும்பி விடுகின்றனர்.

இப்படிச் செய்தார்களானால், அவர்கள் சந்திக்கும் போது நிச்சயமாக அமைதியாகத்தான் இருப்பார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் சந்திக்கும் பொழுதும் அதில் புத்துணர்ச்சி இருக்கும்; ஏனெனில் அவர்கள் ஒன்றாக இருக்கப் போவது சில மணி

சரியாக உபயோகப்படுத்தத் தெரிந்தால் கோபம் ஒரு மிகப்பெரும் சக்தி.

நேரங்கள்தான் என்பது அவர்களுக்குத் தெரியும்: அந்தக் கணங்கள் விலை மகிப்பற்றது !

எல்லா நிரந்தரக் காதலர்களுமே, அது ரோமியோ ஜுலியட்டாக இருக்கட்டும், லைலா மஜ்னுவாக இருக்கட்டும், அல்லது அம்பிகாபதி அமராவதியாக இருக்கட்டும், அவர்கள் ஒருபோதும் ஒன்றாக வாழ்ந்ததில்லை! ஒன்றாக வாழ்ந்திருந்தால் அவர்களது நிரந்தரக் காதலை மீண்டும் வேறு மாதிரியாகச் சொல்ல வேண்டியிருந்திருக்கும் !

பிரச்சினை என்னவென்றால், வாழ்க்கைக்குப் பின்னணி இசை கிடையாது ! தொலைக்காட்சியில் காதல் கதைகளைப் பார்க்கும் பொழுது, அவை அனைத்தும் பின்னணி இசையுடன் வருவதால், உங்களால் எளிதாகக் கனவுலகில் நுழைந்து விட முடியும். இசைக்கு உங்களைக் கரைத்து, ஒரு பலவீனமான நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடிய சக்தி இருக்கிறது. நீங்கள் காணும் எல்லாக் காட்சிகளுமே, முக்கியமாக காதல் காட்சிகள், பின்னணி இசையுடன்தான் வருகிறது. பின்னணி இசையால்தான் அதை நீங்கள் மிகவும் இரசிக்கிறீர்கள். நீங்கள் தொலைக் காட்சி பெட்டி உருவாக்கும் சூழ்நிலையால் முழுவதும் மனோவசியம் செய்யப்பட்டு விடுகிறீர்கள்.

நிஜ வாழ்க்கையில், உங்களால் இசையைத் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை! கற்பனையிலிருந்து கவிதை எழுதுவதற்கும் மனதால் உருவகப்படுத்தி கவிதை எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னது வெறும் கற்பனை; அது வானத்தைச் சென்றடைவது போன்றது. பின்னது நிஜம்.

உங்கள் கணவனோ அல்லது மனைவியோ கடவுளின் ஒரு படைப்பு. உங்கள் படைப்பு கடவுளின் படைப்புடன் போட்டியிட முடியாது! அவரது படைப்பே வெல்லும்! மக்கள்

நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கவில்லை. உங்கள் மனதிலிருக்கும் உருவத்தைத்தான் நேசிக்கிறீர்கள். அவர்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள மற்ற கீழ்த்தாமான மாற்று வழிகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று சமூகத்தில் மிகவும் அதிகமான அளவில், ஆபாசப் படங்கள், கட்டுப்பாடற்ற கற்பனைகள், முறை தவறிய நடத்தை முதலியவைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆபாசப் படங்கள் பாலுணர்வு வாழ்க்கையைப் பூர்த்தி செய்வதில்லை; மாறாக அது மேலும் கனவுகளையும், வழி தவறுதலையுமே உருவாக்குகிறது, அவ்வளவே! ஆனால் கனவு காண்பதற்கான நிர்ப்பந்தம் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பலவீனமாகவும் அறிவு கூர்மையற்றும் இருந்தாலொழிய, எதுவுமே ஒரு நிர்ப்பந்தமாக ஆவதில்லை. நீங்கள் அறிவுக் கூர்மையானவராகி விட்டால், உங்களால் எதையும் விட்டுவிட முடியும்.

(ஒரு பெண்மணி அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்) ஸ்வாமிஜி, நீங்கள் எங்களை உள்ளவாறே இருக்கச் சொல்கிறீர்கள். ஆனால் அப்படியே எப்படி சமூகத்தில் வாழ முடியும் ? நான் குடும்பம், சமூகம் ஆகியவற்றுக்கு ஏற்றபடி நாம் மாற வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆம், அனைவருமே இந்தப் பிரச்சினையை நடை முறையில் எதிர்நோக்குகிறார்கள். நீங்கள் நான் மற்றவருக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்''. நான் கேட்கிறேன், மற்றவர்கள் உங்களுக்கேற்ற படி நடந்து கொள்ளுமாறு நீங்கள் ஏன் உறுதி செய்யக் கூடாது ? சமூகத்தில் நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான். வேறு வழியில்லை. ஆனால் உங்கள் எல்லைகளில் மிகவும் தெளிவாக இருங்கள்.

இந்தப் படைப்பு முழுவதுமே உங்களுக்குப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒரு பரிசு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.