பகுதி 5: உறுதியளிக்கப்பட்ட தீர்வுகள் - காமம் பயம் கவலைக்கு...
அதிகமாகும் பொழுது, உங்கள் விழிப்புணா்வும் அதிகரிக்கும். இது உங்களுக்குள் ஒரு சுழற்சியாக நடைபெறும்.
இது போன்ற விழிப்புணர்வுடன், உங்களைச் சுற்றி யிருக்கும் அழகை உங்களால் நன்றாக ரசிக்க முடியும். அழகு திடீரென்று வந்து விடவில்லை; அது எப்பொழுதும் அங்கு இருக்கிறது! ஆனால் நீங்கள்தான் அதைக் கவனிக்கவில்லை. உங்களுக்கு, உங்களிடமே வேலை மிகவும் அதிகம் இருந்ததால், அதை கவனிக்கத் தவறி விட்டீர்கள். இப்பொழுது உங்கள் விழிப்புணர்வுடன் உங்களால் அதைக் கொண்டாட முடியும்! திடீரென்று, இயற்கை முழு அழகுடன் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தத் தொடங்குகிறது. உங்கள் உள் தன்மையில் உருமாற்றம் ஏற்படுகிறது. இது நிகழும் பொழுது வெளியுலகிலும் தானாகவே உருமாற்றம் நிகழ்ந்து விடுகிறது!
நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கக் கற்றுக் கொள்ளும் பொழுது, உங்கள் மனதை உங்கள் விருப்பப்படி உபயோகிக்க முடியும். அது உங்கள் கையில் ஒரு இன்றியமையாத கருவியாகி விடுகிறது. நீங்கள் அதை விரும்பும் பொழுது உபயோகிக்கலாம். அது ஒரு அபாய கரமான எதிரி என்ற நிலையிலிருந்து ஒரு நம்பத்தக்க நண்பன் என்ற நிலைக்கு மாறி விடுகிறது.
உங்களுடைய உள் பேச்சு குறையும் பொழுது, உங்களுடைய TPS (ஒரு வினாடியில் வரும் எண்ணங்கள்) குறையும் பொழுது - இது ஒரு வினாடியில் ஒரு பகுதி நேரம் நிகழுமானால் கூட -அந்த ஒரு வினாடியில் ஒரு பகுதி நேரத்தில் நீங்கள் நிகழ் காலத்தில் முழுமையாக இருக்கிறீர்கள்; அப்பொழுது உங்களால் உங்கள் இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஒரு திறந்த புத்தகம் போல் அணுக முடியும். உங்களுடைய உள் பேச்சு அதிகமாக இருக்கும் பொழுது, TPS-ம் அதிகமாக இருக்கும்; அதனால் நீங்கள் எப்பொழுதுமே
Thoughts Per Second (TPS)
இறந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோதான் இருப்பீர்கள்; ஒருபோதும் நிகழ் காலத்தில் இருக்க மாட்டீடா்கள்.
இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அணுகும் திறன் என்று நான் எதைச் சொல்கிறேன் என்பதை உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன்.
நீங்கள் ஒரு சொற்பொழிவிலோ அல்லது விருந்திலோ இருக்கும் பொழுது, திடீரென்று இந்தக் காட்சிகள் ஏற்கனவே நிகழ்ந்ததைப் போல் உணர்கிறீர்கள். குரல்கள், உரையாடல், இடம், அங்கிருக்கும் சில அரிய பொருட்கள் கூட, எல்லாக் காட்சிகளும் இதற்கு முன் ஏற்கனவே நிகழ்ந்திருப்ப தாகவும், இப்பொழுது மீண்டும் ஒருமுறை நடப்பதைப் போலவும் உணர்கிறீர்கள். நீங்கள் உலுக்கப்படுகிறீர்கள்.
அல்லது, திடீரென்று நீங்கள் வெகு நாளாகத் தொடர்பு கொள்ளாத உங்கள் நண்பரைப் பற்றி நினைக்கிறீர்கள், அவர் தொலைபேசியில் உங்களை அழைக்கிறார். அடுத்த சில கணங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை உங்களால் முன்கூட்டியே சொல்ல முடிகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் பொழுது நீங்கள் நீங்கள் உலுக்கப்பட்டு நிகழ்காலத்திற்குள் தள்ளப் படுகிறீர்கள். அவ்வளவுதான், அது கூட எதிர்பாராத விதமாக; வேண்டுமென்றே நிகழ்ந்ததல்ல !
நீங்கள் ஒருபோதும் விழிப்புடன் நிகழ்காலத்தில் இருப்பதேயில்லை. அல்லது எதிர்காலத்திலோதான் இருக்கிறீர்கள். நீங்கள் இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு, நிகழ்காலத்தைத் தொடாமலேயே சென்றுவிடுகிறீர்கள். இதுதான் உண்மை. ஆனால் ஒரு கணம்
உண்மையான அமைதி என்பது விழிப்புணர்வால் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பது. அது வெறுமனே உங்கள் வாயை மட்டும் மூடிக் கொண்டிருப்பதல்ல.
எதிர்பாராத விதமாக உங்கள் எண்ணங்கள் - TPS - குறைந்து நீங்கள் உலுக்கப்பட்டு நிகழ்காலத்திற்குள் தள்ளப்படுகிறீர்கள்.
நீங்கள் முழுமையாக நிகழ்காலத்தில் ஒரே ஒரு வினாடி இருந்தால் கூட, உங்களுடைய இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் உங்களால் ஊடுருவிப் பார்க்க முடியும். அதனால்தான் உங்களுக்கு இது போன்ற நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் நிகழ்வதைக் காண்கிறீர்கள்.
பாருங்கள் ... நம் இருப்பதில்லை. அது எப்போதும் வெறும் இணைத்தல் மட்டுமே; ஒருபோதும் உண்மையான சிந்தனை அல்ல.
இணைத்தல் என்றால் நான் என்ன பொருள் கொள்கிறேன் என்று விளக்குகிறேன்.
நீங்கள் காலையில் எழுந்து உங்கள் தோட்டத்தில் மலர்ந்த ஒரு ரோஜாவைப் பார்க்கிறீர்கள். உடனே உங்கள் மனம் சில காலத்திற்கு முன் ஒரு ரோஜாவைக் கொடுத்த யாரோ ஒருவரிடம் செல்கிறது; பிறகு உங்கள் எண்ணம் அந்த சமயத்தில் அந்த மலருக்கான எதிர்ச்செயலைப் பார்க்கிறது அல்லது நீங்கள் அந்த மனிதரைப் பற்றி நினைக்கத் தொடங்குகிறீர்கள். பிறகு அவருடன் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி நினைக்கத் தொடங்குகிறீர்கள். இறுதியில் என்ன நடக்கிறது? உங்கள் கண் முன்னே இருக்கும் ரோஜாவை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள்!
இவ்வாறுதான் நீங்கள் இறந்த காலத்தின் பின் ஓடி நிகழ்காலத்தைத் தவற விட்டு விடுகிறீர்கள். இணைத்தல் என்ற வார்த்தைக்கு நான் கொள்ளும் பொருள் இதுதான். இதுதான் உங்களுடைய தற்போதைய மனநிலையின் இயல்பு.
வெறுமனே மனதைக் கவனியுங்கள், அவ்வளவதான் எந்தக் கருத்தும் சொல்லாதீர்கள். உள் அமைதிக்கு இதுவே முதல்படியாகும்.
குருமார்கள் வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்களால் பெரும் கடலான இறந்த காலம் மற்றும் எதிர்காலங்களை சுலபமாக அணுக முடிகிறது. உங்களுக்கு அது ஒரு விபத்து. அது உங்களுக்கு ஒரு வினாடியில் ஒரு பகுதி நேரமே நிகழ்கிறது. நீங்கள் சமயத்தில் அதைக் கண்டு அஞ்சுகிறீர்கள்! நீங்கள் விழிப்பின்றி வாழப் பழகி விட்டதால்,
விழிப்புணர்வுக்குள் குலுக்கித் தள்ளப்படும் போது, அதை உங்களால் தாங்க முடியவில்லை. உண்மை தாங்க முடியாததாகி விடுகிறது!
நீங்கள் உண்மைக்கு அல்லது நிகழ்காலத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு உங்களுடைய TPS மிகவும் உதவிகரமாக இருக்கிறது. உங்களுடைய TPS மிகவும் அதிகமாக இருக்கும் போது, நீங்கள் விழிப்பின்றி வாழ்கிறீர்கள். நீங்கள் உண்மையிலிருந்து வெகு தூரத்தில் வீசப்பட்டிருக்கிறீர்கள்.
புரிந்து கொள்ளுங்கள் ... உங்கள் செயல் மட்டுமே உங்களுக்காக பேசும். உங்கள் பேச்சு உங்களுக்கு எதையும் செய்யாது. நீங்கள் உள்ளே பேசுகிறீர்களா அல்லது வெளியே பேசுகிறீர்களா என்பது முக்கியமல்ல. வெறுமனே விழிப்புணர்வைக் கொண்டு வந்தால், தேவையற்ற பேச்சு தானாகவே நின்று விடும்.
மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், ''ஸ்வாமிஜி. நாங்கள் விடுமுறைக்காகச் சென்றிருந்தோம். ஆனால் அது நரகமாகி விட்டது'. நான் சொல்கிறேன், உங்களுக்குள் தான் நாகம் இருக்கிறது. நீங்கள் செல்லுமிடமெல்லாம் அதை உங்களுடனேயே எடுத்துச் செல்கிறீர்கள். அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் அதைக் கண்டுதானே ஆகவேண்டும் ! நீங்கள் வாழும்போது, மற்றவர்களுக்கு
நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க கற்றுக் கொள்ளும்பொழுது, உங்கள் மனதை உங்கள் விருப்பப்படி உபயோகித்துக் கொள்ள முடியும்.
நாகத்தைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் இறக்கும்பொழுது உங்களுக்கு நரகம் கிடைக்கிறது! நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் நாகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லவே விரும்புகிறீர்கள். நீங்கள் நரகத்துடன் மிகவும் பரிச்சயமாகி விட்டீர்கள். அதனால் சொர்க்கத்தைக் காட்டினாலும், நீங்கள் அங்கே பொருத்தமற்று இருப்பதாக உணர்கிறீர்கள் !
ஒரு சின்ன கதை...
ஒரு நாள் மூன்று மீனவப் பெண்கள் மீன் விற்று விட்டு வீட்டிற்குத் திரும்பும் சமயம் இரவு வெகுநேரமாகி விட்டது. அன்று இரவு, வழியில் ஏதாவது ஒரு வீட்டில் தங்கலாம் என்று முடிவு செய்தார்கள். பிழைப்பிற்காக மல்லிகைப் பூக்களை விற்று வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்று அன்று இரவு அங்கு தங்கிக் கொள்ள அனுமதி கேட்டனர். அந்தப் பெண் சம்மதிக்க, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் உறங்கச் சென்றனர். அந்த வீடு முழுவதும் மல்லிகையின் மணம் நிரம்பி இருந்தது. ஆனால், எவ்வளவு முயன்றும், அந்த மீனவப் பெண்களால் உறங்க முடியவில்லை. அவர்கள் உருண்டு புரண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு, திடீரென்று, அவர்களில் ஒருவர் எழுந்து சென்று காலியான மீன் கூடையை கொண்டு வந்து அவர்கள் தலை மாட்டருகே வைத்துக் கொண்டவுடன், சிறிது நேரத்தில் உறங்கி விட்டனர்!
(சிரிப்பு!)
நாம் எங்கு சென்றாலும் நமது கவலைகளையும் உடன் கொண்டு செல்கிறோம். அவைகளை போஷிப்பதில் இதமாக உணர்கிறோம். ஆனால் எப்போதும் கவலையுடன் இருப்பதாக புகாரும் செய்கிறோம் ! நாம் சில விஷயங்களிலிருந்து விடுதலை பெற
நீங்கள் நிகழ்காலத்தில் முழுமையாக ஒரே ஒரு வினாடி இருந்தால் கூட, உங்களுடைய இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் உங்களால் ஊடுருவிப் பார்க்க முடியும்.
விரும்புகிறோம். ஆனால் உருமாற்றமடைவதையும் அதிலிருந்து விடுதலையடைவதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் ! இவ்வாறு நாம் நமக்குள்ளேயே முரண்பட்டிருக்கிறோம்.
சொல்லுங்கள்... ஏதேனும் கேள்விகள் ?
ஸ்வாமிஜி, இதிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவது ? எங்களுடைய மனோபாவம் எப்படி இருக்க வேண்டும் ?
எவ்வாறு விடுதலை பெறுவது, மேலும் உங்களுடைய மனோபாவம் எப்படி இருக்க வேண்டும். இரண்டு கேள்வி களுக்கும் ஒரே ஒரு பதில்தான்; நீங்கள் என்ன செய்தாலும், ஆனந்தமான உணர்வுடன் செய்ய முடிய முடிய வேண்டும், அவ்வளவுதான்! பாருங்கள், உங்களுக்குள் இருக்கும் அந்த வெற்றிடம் அல்லது உங்கள் விழிப்புணர்வுதான் உங்கள் வாழ்க்கையின் தன்மையைத் தீர்மானிக்கிறது. இந்த வெளி எப்பொழுதும் தூய்மையாகவும் ஆனந்த மாகவும் இருக்க வேண்டும்.
ஒரு விஞ்ஞானி செய்யும் பரிசோதனைகளில் அவரது விழிப்புணர்வு ஒரு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதே பரிசோதனை அதேபோன்ற கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளிலும் வேறு விஞ்ஞானிகள் செய்யும் பொழுது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துவது கவனிக்கப்பட்டிருக்கிறது. நமது உள் எண்ணங்கள் நமது செயல்களையும் அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நான் அதிர்ஷ்டத்தைக் கவர்ந்து இழுக்கிறது1. இது ஒரு பெரும் உண்மை. நீங்கள் ஆனந்த மயமாக இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிகிறது. மேலும் லோகாயதமான செல்வமும் உங்களை நோக்கிப் பாய்கிறது. எப்பொழுதும் ஒருவிதமான நன்றியுணர்வுடனேயே இருங்கள். மற்றவை தானாகவே நிகழும்.
வெறுமனே எதைப் பற்றியும் துயாப்படுவதில்லை என்று தீர்மானியுங்கள். ஏதேனும் கவலை அல்லது குற்ற உணர்வு அல்லது வருத்தப்படத்தக்க சம்பவங்கள் உங்கள் மனதில் எழும் போது அதை வெறுமனே பார்த்து சிரியுங்கள், பிறகு அதனிடம் சொல்லுங்கள், 'நான் உன்னால் பாதிக்கப்படப் போவதில்லை. நீ என்ன செய்வாய்?'. அதை வெறுமனே பார்த்து இவ்வாறு சொல்லுங்கள். தானாகவே அந்த சம்பவமோ அல்லது குற்ற உணர்வோ உங்களிடம் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது உங்களைத் தாக்குவதற்கு அனுமதிப்பதன் மூலம், நீங்கள் ஏதாவது லாபம் அடையப் போகிறீர்களா? இல்லை! அதைப் பார்த்து, அது உங்களைத் தாக்கவிடப் போவதில்லை என்று சொல்வதன் மூலம், நீங்கள் துயரத்தைத்தான் தவிர்க்கிறீர்கள், நான் அதிலிருந்து விலகி ஓடச் சொல்லவில்லை. அதைப் பார்த்து இப்படிச் சொல்லுங்கள் என்று சொல்கிறேன். இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த எண்ணங்களை அடக்க முயன்றால், அவை உங்கள் மனதின் பின்புறமாக ஒளிந்து கொண்டு, எப்பொழுது வேண்டுமானாலும் வரக் தயாராக அச்சுறுத்திக் கொண்டே இருக்கும். அவைகள் மேலே வருவதற்கு அனுமதியுங்கள். ஆனால் அவைகளை வெறுமனே பார்த்து அவைகள் சக்தியற்றவை என்று சொல்லுங்கள் : அவைகள் தானாகவே மறைந்து விடுவதைப் பார்ப்பீர்கள். உங்களை
ஆனந்தம் அதிர்ஷ்டத்தைக் கவர்ந்து இழுக்கிறது. இது ஒரு பெரும் உண்மை.
தொந்தரவு செய்வதனால் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்து அவைகள் தானாகவே மறைந்து விடும்!
இதை எப்பொழுதும் கவனத்தில் வையுங்கள் ... உங்களுக்கு உடலளவிலோ, மனதளவிலோ அல்லது ஆன்ம அளவிலோ வலிமையைத் தருவது எதுவானாலும் அதுவே ஆன்மீகமாகும்; அது தானாகவே உங்களை ஆனந்தத்தை நோக்கி அழைத்துச் செல்லும். உங்களை பலவீனப்படுத்துவது எதுவானாலும், அது ஆன்மீகமல்ல ; அதனால் அதைப் பின்தொடராதீர்கள். இதுவே நீங்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான விதியாகும். ஆனந்தமே உங்களுடைய உண்மையான இயல்பு என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.
இன்னொரு விஷயம் ... நீங்கள் பார்க்கும் அழகான விஷயம் எதுவானாலும், வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து அதை வகைப்படுத்தி விடாமல், ரசியுங்கள். நீங்கள் சூரியோதயத்தையோ சூரிய அஸ்தமனத்தையோ ஆசிரமத்திலோ அல்லது உங்கள் ஊரில் வேறு எங்காவதோ பார்த்திருக்கிறீர்களா ? நீங்கள் எப்பொழுதாவது நின்று வண்ணங்கள் அற்புதமாக மாறுவதையோ, ஒளிக்கதிர்கள் வானத்தில் பரவுவதையோ கவனித்திருக்கிறீர்களா ? நம்மில் பலருக்கு, ஒன்று சூரியன் அஸ்தமனமாவதே தெரியாது அல்லது, வெறுமனே, "ஆம், சூரியன் அஸ்தமனம் ஆகிறது; அதனால் என்ன; அது எப்படியும் தினமும்தான் அஸ்தமனமாகிறது" என்போம்.
நான் சொல்கிறேன் ... கல்வியறிவு உங்கள் கள்ளங் கபடமற்ற தன்மையைக் கெடுத்து வாழ்க்கையை மந்தமாக்கி விடுகிறது. சூரிய உதயத்தையோ அல்லது சூரிய அஸ்தமனத்தையோ பார்ப்பது ஒரு அற்புதமான தியானமாகக் கூடும். அதை உங்களுடைய உலகாயதமான கல்வியறிவைக் கொண்டு பார்க்காமல், நீங்கள்
நீங்கள் ஆனந்தமயமாக இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிகிறது.
அதன் ஒரு பகுதியாகி, அதனுடன் கலந்து விட்டீர்களானால், கொண்டாட்டத்தில் இருக்கும் பிரம்மாண்ட மான இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் சிறு துளியாக நீங்கள் இருப்பீர்கள். பிறகு நீங்கள் இயல்பாகவே கொண்டாட்டத்தில் கலந்து கொள்வீர்கள்.
ஆனால் நாம் நமது பெயரளவிலான கல்வி அறிவினால் மந்தமாக்கப்பட்டு விடுகிறோம். உள் பேச்சிற்கும் கவலைக்கும் காரணமான நமது கல்வியறிவு, மீண்டும் வார்த்தைக் குவியல் களைத் தவிர வேறில்லை. நாம் நிறைய வார்த்தைகளைச் சேகரித்து வைத்து, அவற்றுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நம்மை எதுவுமே ஆச்சரியப்படுத்துவதில்லை. கடவுளே உங்களிடம் வந்து தான் கடவுள் என்று சொன்னாலும், நீங்கள், 'அதனால் என்ன?' என்று சொல்வீர்கள். உங்கள் அறிவினால் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள்.
உங்களுடைய பெயரளவிலான கல்வியறிவினால், இந்த முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையையே மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள். இதனால் முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையையுமே தவறவிட்டு விடுகிறீர்கள். மேலும் மேலும் பேராசையையும், கொடுக்கும் உலக விஷயங்களின் பின்னால் ஓடுகிறீர்கள். இவைகள் உங்களை உள் மையத்திலிருந்து மேலும் துண்டித்து விடுகின்றன. அவைகள் உங்களை உள்ளே பார்ப்பதற்கு பதிலாக வெளியே பார்க்க வைக்கின்றன. அவைகள் உங்களை உங்கள் சொந்த உள்பலத்தைச் சார்ந்திராமல் முழுவதும் வெளியுலக விஷயங்களைச் சார்ந்திருக்குமாறு செய்து விடுகின்றன. அவைகள் உங்களை நிரந்தரமான ஆனந்தத்தில் மையங்கொள்ளவிடாமல் மனச்சோர்விற்கும் சந்தோஷத்திற்கும் இடையே ஊசலாடுமாறு செய்து விடுகின்றன.
எப்பொழுதும் ஒருவிதமான நன்றியுணர்வுடனேயே இருங்கள். மற்றவை தானாகவே நிகழும்.
நீங்கள் எல்லாம் வெளியில் நிகழ்வதாகவும், மிகவும் தாமதமாகி விடுவதற்கு முன்னால் ஓடி அதைப் பிடித்து விட வேண்டும் என்றும் எண்ணுகிறீர்கள். அதனால்தான், நீங்கள்
எப்பொழுதுமே ஒரு ஒரு அவசரத்தில் இருக்கிறீர்கள் ; எப்பொழுதுமே உங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் நீங்கள் எலி ஒட்டப் பந்தயத்தில்- இருக்கிறீர்கள். அதனால்தான் நீங்கள் எப்பொழுதும் எதிர்காலத்திலேயே இருக்கிறீர்கள்; ஒரு போதும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை.
கல்வியறிவு என்பது வெறும் தகவல் துளி, உண்மைச் சம்பவம், புள்ளி விவரம்; அது இறந்து போனது. கல்வியறிவைச் சேகரியுங்கள் ; ஆனால் அது உங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். அதை ஒரு பக்கமாக வைத்து விட்டு வாழ்க்கையை வியப்புடன் நோக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மனம் எப்பொழுதும் எதைக் கண்டாலும் உடனே ஒரு தீர்மானத்திற்கு வர, சுருக்கி எளிதாக்கிக் கொள்ள, எடை போட, மேலும் விவரங்களைச் சேகரிக்க முயற்சி செய்யும். நீங்கள் மேலும் வார்த்தைகளைச் சேகரிக்க விரும்புகிறீர்கள், அவ்வளவே. அதனால் என்ன பயன் ?
நான் இரண்டு பக்தர்களை, கிருஷ்ணனின் பிறந்த இடமான மதுராவிற்கு அழைத்துச் சென்றேன். அது மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் கிருஷ்ணர் இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு யமுனை ஆற்றில் படகில் சென்றோம். என்னுடைய ஆனந்தத்தை, மிகவும் புத்திசாலித்தனமான மக்களான, பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். கிருஷ்ணனின் நாட்களை நினைவு கூர்ந்து கொண்டு, ராச லீலை நிகழ்ந்த இடத்தை காண்பித்துக் கொண்டே மிகவும் பரவசத்தில் ஆழ்ந்திருந்தேன்; பக்தர்கள் அங்கிருந்த கற்பலகைகள் புதுப்பிக்கப்பட்டது போல் தெரிகின்றன என்று
Rat Race1
சொல்லிக் கொண்டிருந்தார்கள்! அவர்களைக் கண்டு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் அவர்களிடம் சொன்னேன். 'குறைந்த கல்வியறிவுடன் நிறைய வியப்படையும் பக்கர்கள் சிலரை அமைத்து வர்கிருந்தால், அவர்களுடன் என்னுடைய பரவசத்தைப் பகிர்ந்து கொண்டிருக்க முடியும்' என்று.
இறுதியில், கல்வியறிவு ஒரு இறந்த விஷயம். எப்படியோ, ஒரு மனிதன் பயனுள்ளவனா என்பதை அறிய கல்வியறிவை அளவுகோலாக உபயோகிக்கிறார்கள். உங்களிடம் அதிக கல்வி அறிவு இருந்தால், நீங்கள் அதிகமாக மதிக்கப்படுவீர்கள்.
கல்வியறிவுடன் இருக்கும் பொழுது, நீங்கள் நிரந்தரமாக மூளையுடன் வாழ்கிறீர்கள். மூளையுடன் உங்களால் ஒருபோதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையை அறிய முடியாது. பிரபஞ்ச இருப்புத் தன்மையை இதயத்தின் வழியாக மட்டுமே அறிய முடியும். அன்பின் வழியாக மட்டுமே உங்களால் பிரபஞ்ச இருப்புத் தன்மையை அறிந்து கொள்ள முடியும். மேலும் மூளைக்கு அன்பு தெரியாது; இதயம் மட்டுமே அன்பை அறியும். முளைக்குத் தெரிந்ததெல்லாம் திட்டமிடப்பட்ட அன்பு மட்டுமே; அது அன்பே அல்ல. அது மேலோட்டமான நிலையில் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ள, நீங்கள் செய்யும் இன்னொரு திட்டமிடல்.
ஆன்மீகம் என்பது மனிதனுக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் இருக்கும் ஆழமான தொடர்பையும், முழுமையான ஒத்திசைவையும் புரிந்து கொள்ளுதல். இதைப் புரிந்து கொண்டு உங்களுடைய எல்லாப் போராட்டத்தையும் விட்டு விட்டால், நீங்கள் ஒரு நதியைப் போல வெறுமனே பாய்ந்து ஓடிக் கொண்டிருப்பீர்கள்.
இனி எதைப்பற்றியும் கவலைப்பட போவதில்லை என்று தீர்மானியுங்கள். வெறுமனே அதைப்பார்த்து சிரியுங்கள்.
நதியானது அதன் வழியில் சென்று வலிமையான கடலை அடைகிறது. நீங்கள் வெறுமனே விட்டுவிட்டாலே போதும்.
நீங்கள் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கலாம், ஒரு நதியினால் அடித்துச் செல்லப்படுவீர்கள் என்று நான் சொல்ல வில்லை. அப்படி இல்லை! இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நடத்திக் கொண்டிருக்கும் உயிர்ச்சக்தி ஒன்று உங்களையும் பாதுகாக்கிறது, அதுவே உங்கள் மூச்சு உள்ளே செல்லவும் வெளியே வரவும் செய்கிறது என்கிற உணர்வுடன், அசைக்க முடியாத விசுவாசத்துடன், உங்கள் வேலையை வெறுமனே செய்து கொண்டிருங்கள்; அதுவே போதுமானது.
வெறுமனே பொறுப்பை உயர் அதிகாரத்திடம் நகர்த்தி விட்டு ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் அரசனைப் போல வாழ்வீர்கள்! பிறகு நீங்கள் ஒருமித்து நிகழும் பாயும் நதியின் இசையை, உங்களை நடத்திச் செல்லும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் இசையை, உங்களுக்கும் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கும் இருக்கும் ஒத்திசைவின் இசையைக் கேட்கத் தொடங்குவீர்கள். இந்த ஒத்திசைவுடன் தான் நீங்கள் இசைந்திருக்க வேண்டும். பிறகு உங்கள் எல்லாக் கவலைகளும் மறைந்து விடும்!
ஆனால், பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்மைப் பாதுகாக்கிறது என்பதற்கு எந்த வித நிரூபணமும் இல்லை. சில விஷயங்களை நிரூபிக்க முடியாது. இந்த திசைதான் கிழக்கு என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? முடியாது! உங்களால் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற நிகழ்வுகளை நிரூபிக்க முடியுமா? முடியாது! அதை உங்களால் அனுபவிக்க மட்டுமே முடியும். அதை உங்களால் நிரூபிக்க முடியாது என்பதால், இல்லையென்றாவது
நீங்கள் சூரிய உதயத்தையோ அல்லது அஸ்தமனத்தையோ என்றாவது பார்த்து ரசித்திருக்கிறீர்களா ? அது ஒரு அற்புதமான தியானமாகக் கூடும்.
நிரூபிக்க முடியுமா ? உங்களால் விஞ்ஞானத்தின் வாயிலாக தினமும் சூரியன் எழுவதையும் அஸ்தமிப்பதையும் தடுக்க முடியுமா?
புரிந்து கொள்ளுங்கள் ... தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரே விஷயம் பிரபஞ்ச இருப்புத் தன்மைதான். உங்களால் தர்க்க ரீதியாக பிரபஞ்ச இருப்புத் தன்மையை நிரூபிக்க முடியுமானால், தாக்கம் பிரபஞ்ச இருப்புத் தன்மையை விட பெரிதென்று ஆகி விடுகிறது; அது ஒரு போதும் சாத்தியமாகாது!
என்னிடம் ஒருவர் கேட்டார், "ஸ்வாமிஜி, நான் ஆன்மீகவாதியாக இருக்க ஹிந்துவாக மாற வேண்டுமா?'' என்று. எனக்கு இந்தக் கேள்வியைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது! நான், அவர் ஹிந்துவாக மாற வேண்டாம் என்று சொன்னேன். பாருங்கள் ... உங்களுடைய புரிந்து கொள்ளுதலுக்கு தடையாக இருக்கும் எதுவும் ஆன்மீகத்துடன் தொடர்புடையது அல்ல என்பதில் தெளிவாக இருங்கள். ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
உங்களுடைய 'நான் அது' மற்றும் 'நான் இது' என்கிற எல்லா கருத்துகளையும் விட்டு விடுங்கள்.
உங்கள் வாழ்க்கையைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவே ஆன்மீகத்திற்கு அடிப்படை. அது எப்படி இருக்கிற தென்றால் ... எப்பொழுதும் பூட்டிய அறையிலேயே இருக்கும் ஒருவனுக்கு திறந்த வெளியைப் பற்றியும் தென்றலைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. அவன் எண்ணங்கள் மிகவும் குறுகியிருக்கும். இதுபோன்ற கட்டுப்பாடுகளை உங்கள் மீது சுமத்திக் கொள்ளும் பொழுது உங்களுக்குள் இருக்கும் எல்லையற்ற அன்பைப் பற்றியும், கருணையைப் பற்றியும் உங்களால் தெரிந்து கொள்ள முடியாது. நீங்கள் கவலைப்பட்டுக் குறை மட்டுமே கூறுவீர்கள். உங்களால் மலர
மூளையுடன் உங்களால் ஒருபோதும் பிரபஞ்ச இருப்புத்தன்மையை அறிய முடியாது. அதை இதயத்தின் வாயிலாக மட்டுமே அறியமுடியும்.
கருணையற்ற மக்களுக்கு எந்த விதமான நரகம் கிடைக்கும் என்று புத்தரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. அவர் சொன்னார், ''உங்களால் அவர்களை நரகத்தில் போட முடியாது. ஏனெனில் ஏற்கனவே அவர்கள் நரகத்தில்தான் இருக்கிறார்கள்!''. நீங்கள் நரகத்தில் இருந்தால் மட்டுமே, மற்றவர்களுக்கு நரகத்தை உருவாக்குவீர்கள்; ஏனெனில் உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் கொடுக்க முடியும்.
ஒரு சின்ன கதை ....
ஒரு தாயும் மகனும் சூடான வாக்குவாதத்தில் இருந்தனர். தாய் மகனிடம் கேட்டாள், ''உனக்கு ஏதாவது மூளை இருக்கிறதா?''. மகன் சிரித்தான். தாய் அவனிடம் 'ஏன் சிரிக்கிறாய்?' என்று கேட்டாள். அவன் சொன்னான், ''உங்களிடம் ஏதாவது இல்லை என்றால் மட்டுமே மற்றவர்களிடம் கேட்பீர்கள்!''.
(சிரிப்பு!)