KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/Cells SynchoronousSign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

Cells Synchoronous

இந்தப் போலியான அடையாளத்துடன், உங்களால் வெளியுலகத் துடன் தொடர்பு கொள்ள முடியும். இந்தப் போலியான அடையாளம் தான் உங்கள் அஹங்காரம். அது முழுவதும் மற்றவர்களால் உங்கள் மீது ஒட்டப்பட்ட முத்திரை குத்தப்பட்ட சீட்டுகளால் ஆனது. உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாது.

'நீங்கள் யார்' என்று நான் கேட்பதாக வைத்துக் கொண்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? 'நான் இன்னாரின் தந்தை' அல்லது 'நான் இன்னாரின் சகோதரி' அல்லது 'நான் ஒரு மருத்துவர்' என்று இவ்வாறு எதாவது சொல்வீர்கள். ஆனால் இவைகளெல்லாம் என்ன ? இவையெல்லாம் உங்கள் உறவுமுறைகளும், தொழிலும் தான். நீங்கள் உங்கள் தந்தைக்கு மகள், உங்கள் கணவருக்கு மனைவி, உங்கள் குழந்தைகளுக்குத் தாய் இவ்வாறு ... நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு இவைகளாக இருக்கிறீர்கள். அப் பொழுது, உங்களுக்கே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் ?

நீங்கள் தற்சமயம் உறவு முறைகளிலும், தொழிலிலும் தான் இருக்கிறீர்கள். உங்கள் அஹங்காரம் இதிலிருந்தே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. உங்கள் அடையாளமும் இதன் வழியாகவே ஏற்படுகிறது. அதனால்தான் உங்கள் அடையாளத்தை இழந்து விடும் அபாயம் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. அது மனிதனால் செய்யப்பட்ட வலுவற்ற ஒரு விஷயமாதலால், எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விடக் கூடியதுதான். அதனால்கான் நீங்கள் அதனைப் பாாமரிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

உண்மையிலேயே உங்கள் உள்ளார்க்க தன்மை 'தனிமை'தான். உங்கள் தாயின் கருப்பையில் தனிமையில் தான் இருந்தீர்கள். உண்மையில் நீங்களே உங்களுக்குப் போதும். இதுவே உங்கள் தனித்தன்மை. காலப்போக்கில்

நீங்கள் பார்ப்பது எல்லாவற்றையும் எடை போடுவதை நிறுத்துங்கள்.

இந்தத் தனித்தன்மை உங்கள் புறத்தன்மையால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. தனித்தன்மை இயல்பானது; புறத்தன்மை சமூகத்தால் ஆனது.

அது எவ்வாறு இருக்கிறதென்றால்... ஒரு பார்சல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கிறது ; ஒவ்வொரு இடத்திலும் அதன் மீது வெவ்வேறு விவரங்கள் முத்திரை குத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்தப் பார்சலானது இந்த முத்திரைகள் அல்ல; அதன் உள்ளிருக்கும் வஸ்துதான், இல்லையா? அதே போல், நீங்களும் மக்கள் உங்கள் மீது குத்திய முத்திரைகள் அல்ல; உங்களுக்குள் இருக்கும் வஸ்துதான்.

எப்படியோ, காலப்போக்கில், உங்கள் அஹங்காரம் இந்த முத்திரைகளின் மீது கட்டமைக்கப்பட்டு, அதற்கு மேலும் மேலும் உணவளிக்க மக்கள் தேவைப்படுகிறார்கள். அதனால்தான் உங்களால் முழுவதுமாக தனிமையில், உங்களுடனேயே, இருக்க முடியவில்லை என்பதைக் கவனியுங்கள். நீங்கள் உங்களுடன் மட்டுமே இருக்கும் பொழுது, உங்கள் அஹங்காரத்திற்கு உணவளிக்கும், மற்றவர்களின் குரல்களைச் கேட்க முடிவதில்லை. உங்கள் அஹங்காரம் உணவளிக்கப் படாததாக உணர்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? குறைந்தபட்சம் தொலைக்காட்சியையாவது போட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறீர்கள்!

ஒரு சின்ன கதை...

ஒரு பாரம்பரியும் மிக்க அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவன் இறந்து கொண்டிருந்தான். அவன் சாகும் தருவாயில் எதிர்க்கட்சிக்கு மாறி விட்டது, அவனுடைய நண்பர்களுக்குத் தெரிய வந்தது. வியப்படைந்த அவர்கள், ஏன் அப்படிச் செய்தான் என்று

எடை போடும்பொழுது நீங்கள் என்ன இருக்கிறதோ, அதைப் பார்ப்பதில்லை. எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அதையே பார்க்கிறீர்கள்.

அவனிடமே கேட்டனர். அவன் பதிலளித்தான், 'ஓ! அவர்களில் ஒருவர் சாகட்டுமே என்றுகான்!''.

(சிரிப்பு!)

நமது போலி அடையாளம் அவ்வளவு உறுதியானது! நம்மை வேறு எதையும் பார்க்க விடாமல் நமது கண்களைக் குருடாக்கும் அளவிற்கு அது நமக்கு திடமான உண்மையாகி விட்டிருக்கிறது. இறக்கும் சமயத்தில் கூட, நமது கௌரவத்தை விடுவது நமக்குக் கடினமாக இருக்கிறது! நாம் விழிப்பின்றியே வாழ்ந்தும், இறந்தும் விடுகிறோம்.

உங்களுடைய ஒரே பிடிமானமான புறத் தன்மையை இழந்து விடும் அச்சமே, நீங்கள் நடந்து கொள்ளும் விதத்திற்குக் காரணம். அதனால்தான் நாம் இதை அஹங்காரத்தின் விளையாட்டு என்கிறோம். மொத்த ஆன்மீகமுமே எல்லாம் இந்த புறத்தன்மையை யும், போலி அடையாளத்தையும் இழப்பது பற்றித்தான்.

இது, நீங்கள் ஈடுபடுவதற்கும், நம்புவதற்கும் பதிலாக கவனிக்க ஆரம்பிக்கும் பொழுது நிகழும். கவனிக்க ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் பார்சலுக்குள் உள்ள வஸ்துதான் என்றும், அதன் மேல் உள்ள பெயர்களோ அல்லது முத்திரைச் சீட்டுக்களோ அல்ல என்பதையும் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்குள் இந்த விழிப்புணர்வு வரும் பொழுது, நீங்கள் உரையோ, பிரசங்கமோ, போதனையோ, உபதேசமோ செய்யத் தேவையில்லை.

சொல்லுங்கள்... ?

ஸ்வாமிஜி, எங்கள் குருவான உங்களிடம் நாங்கள் சரணடைந்தால், எங்கள் அவறங்காரத்தை நீங்கள் கவனித்துக் கொள்வீர்களா ?

முதலில், நீங்கள் உண்மையிலேயே சரணடைந்து விட்டால், ஞானமடைந்து விடுவீர்கள். 'நான் சரணடைந்தால்' என்பது போன்ற

குரு - சிஷ்ய உறவே உங்கள் அஹங்காரத்தை இழப்பதற்காகத்தான்.

கேள்விக்கே இடமில்லை. எப்படியோ ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால், என்னை உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல நீங்கள் அனுமதிப்பதாகத் தீர்மானித்துவிட்டால், நீங்களாகவே அதை முழுமையாக இழந்து ஞானமடையும் வரை, நான் அதை வெட்டிச் சீர்படுத்தி ஒரு போன்சாய்- மரம் போல செய்து வைத்திருப்பேன்.

உங்கள் தொழிலை நடத்தவும், தினசரிச் செயல்களைச் செய்யவும், மற்றவர்களையும் உங்களையும் புண்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் தேவையான அஹங்காரம் மட்டுமே இருக்கும். உங்கள் அஹங்காரம், இனி வளர முடியாத, வறுக்கப்பட்ட விதையைப் போலாகி விடும்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... இன்னும் ஞானமடையாத மனிதனிடம், அஹங்காரமானது ஏதோ ஒரு வழியில் இருந்து கொண்டுதான் இருக்கும். அது செயல்படும் அஹங்காரமோ அல்லது சாத்வீகமான அஹங்காரமோ எதுவாயினும், நீங்கள் எந்த அளவிற்குக் கவனிப்பவராகத் தொடங்குகிறீர்களோ, உங்கள் அஹங்காரம் அந்த அளவிற்குக் கரையும். இப்பொழுது இந்தப் புரிந்து கொள்ளுதல் போதுமானது

சாதாரண மக்களிடம், உங்கள் அஹங்காரத்தை சுலபமாக மறைத்துக் கொண்டு சென்று விடலாம். ஆனால் ஒரு குருவை உங்களால் ஒரு போதும் ஏமாற்ற முடியாது. வேண்டுமானால் அவரை ஏமாற்றி விட்டதாக ஒரு எண்ணத்தை வைத்துக் கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் அஹங்காரத்தையும், தந்திரத்தையும் எவ்வளவுதான் ஆழமாக மறைந்து, நன்றாக மூடி வைத்துக் கொண்டாலும், குருவின் கூர்மையான பார்வையில் அவை வெறுமனே வெளிப்பட்டு விடும். நீங்கள் அதை மறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, குரு அதை குணப்படுத்த முயற்சி செய்கிறார்.

அஹங்காரம் எத்தகைய அழிவை ஏற்படுத்தும் கொடிய வியாதியென்பதை அவர் மட்டுமே அறிவார்.

நான் பகவத் கீதையில் இருந்து சில விஷயங்களைச் சொல்கிறேன். பகவத்தீதை.

பகவத் கீதையின் துவக்கத்தில், அர்ஜுனன் குழுப்பத்தில் இருக்கிறான். அவன் சொல்கிறான், 'ஓ பிரபுவே! எனக்கு வாழ்க்கையில் என்ன செய்வதென்று தெரியவில்லை, தயைகூர்ந்து என்னை வழிநடத்திச் செல்லுங்கள்''. கிருஷ்ணர் அவனுக்கு, ஆத்மனை அடையும் வழியான, சாங்கிய யோகத்தைவிளக்குகிறார். பிறகு காம் யோகத்தையும், பக்தி யோகத்தையும், காம ஸ்ந்யாஸ் யோகத்தையும், ஞான கா்ம ஸந்யாஸ யோகத்தையும், ராஜ வித்யா யோகத்தையும், இவ்வாறு பல யோகங்களையும் விளக்குகிறார். அவர் 18 அத்தியாயங்களில், 700 சுலோகங்களில் பல்வேறு தியான முறைகளையும் விவரிக்கிறார். இறுதியில் அர்ஜுனன் சொல்கிறான், "கிருஷ்ணா, நீங்கள் விளக்க ஆரம்பித்த பொழுது இருந்ததை விட இப்போழுது மிகுந்த குழுப்பத்தில் இருக்கிறேன். நான் எந்த முறையைப் பின்பற்றுவது ? எந்த முறை மிகவும் சிறந்ததும், விரைவானதும் ? எது சுருக்கு வழி-இறுதியான முறை?'. கிருஷ்ணர் இதற்கு இறுதியான 18-ம் அத்தியாயத்தில் பதிலளிக்கிறார்.

எந்தகுருவுடனும், அவர்முடிவாகச்சொல்லும் வார்த்தைகளே, கடைசியானதும், உறுதியானதும், இறுதியான உண்மையுமாகும். கிருஷ்ணர் சொல்கிறார், "சாவ தாமன் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வ சா்வபாபேப்யோ மோக்ஷாயிஷ்யாமிமா சுசஹ". அவர் சொல்லும் இந்த வரிகள் எது போன்றவை என்றால், எல்லா மதங்களையும், தத்துவங்களையும், ஆன்மீக நூல்களையும் ஒரு பானைப் பாலாக நாம் கற்பனை செய்து கொண்டால்,

அஹங்காரம் தன்னை பலவழிகளிலும் வெளிப்படுத்திக் கொள்கிறது. நாம் ஒவ்வொரு நிமிடமும் அதன்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இது அவை எல்லாவற்றிலும் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட அவற்றின் சாரமான வெண்ணெயாகும். அவர் சொல்கிறார், "நான் உனக்கு எல்லாவிதமான நீதிகளையும் விளக்கி விட்டேன். எல்லாவற்றையும் வெறுமனே என்னிடம் சரணாகதி செய்து விடு. என்னிடம் சரணடைந்து விட்டால் நானே உன்னை கவனித்துக் கொள்கிறேன். நான் உன்னை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து உனக்கு முக்தியளிக்கிறேன்''.

கிருஷ்ணர் சுலோகத்தின் இந்தப் பத்தியில் உண்மையிலேயே அற்புதமான ஒரு உறுதி மொழியை அளிக்கிறார். இந்தப் பத்தியின் வாயிலாக, கிருஷ்ணர் உலகிற்கு சரணாகதியே முடிவான, உறுதியான, இறுதியான முறையாகும் - அஹங்காரமற்ற நிலைக்கும், மோக்ஷத்திற்கும் சுருக்கு வழியாகும் என்பதைக் காட்டுகிறார்.

கிருஷ்ணரையும் அர்ஜுனனனையும் ப பற்றி இன்னொரு அருமையான கதை இருக்கிறது ...

ஒரு மாலையில், கிருஷ்ணரும் அர்ஜுனனனும் ஒன்றாக அமர்ந்து அளவளாவிக் கொண்டு இருந்தனர். திடீரென்று கிருஷ்ணர் ஒரு காகத்தைச் சுட்டிக் காட்டிச் சொன்னார், "அர்ஜூனா, அந்தக் கருப்புக் காகத்தைப் பார்!'. அர்ஜுனன் அந்தத் திசையில் பார்த்துச் சொன்னான், ''ஆமாம் கிருஷ்ணா, நான் பார்க்கிறேன்!''. சில நிமிடங்கள் கழித்து, கிருஷ்ணர் ஆச்சரியத்தில் கத்தினார், "அா ஜுனா, அந்தப் பச்சைக் காகத்தைப் பார்!'. அர்ஜுனன் செ ான்னான்,' ஆம் கிருஷ்ணா, நான் பார்க்கிறேன்!'. கிருஷ்ணர் வெறுமனே அர்ஜுனனைச் சோதிப்பதற்காகக் கேட்டார், ''அர்ஜுனா, நீ எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறாய்! எங்காவது பச்சைக் காக்கை இருக்கிறதா? நீ எவ்வாறு அதைப் பார்த்திருக்க முடியும் ?''. அர்ஜுனன் சொன்னான், 'கிருஷ்ணா, நீ அதைப் பச்சைக் காக்கை

நீங்கள் முகமூடிக்கும் அப்பால் ஏதோ ஒன்றாக இருக்கிறீர்கள் என்பது தெரிந்தால்தான் உங்களால் ரசிக்க முடியும்.

என்று சொன்ன பொழுது, நான் அதைப் பச்சைக் காக்கையாகவே பார்க்கேன்!''.

அர்ஜுனனுடைய புலன்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்து விட்டன. குருவிடம் புலன்களைச் சரணாகதி செய்வதே, எக்காலத்திலும் மிகவும் கடினமான செயலாகும். குரு பிரபஞ்ச இருப்புத் தன்மையேதான்; அவர் உருவத்தில் இருப்பினும் உருவமற்றவர். உங்களுடைய புலன்கள் எப்பொழுது குரு சொல்வதை மட்டுமே உணர்கிறதோ, அப்பொழுது நீங்கள் சரணாகதியில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறீர்கள்.

சரணாகதி என்பது என்ன? சரணாகதி என்ற வார்த்தை மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டது. நாம் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லாயின், தவறாகப் புரிந்து கொண்டு விடுவோம் ! ஒரு மோசமான தவறைச் செய்து விடுவோம். ஆழமான உண்மைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு விடுவோம்.

ஒரு சின்ன கதை ...

ஒரு இரவில், இரண்டு குடிகாரர்கள் தெருவில் ஒரு ஹேலஜன் விளக்கைக் கடந்து சென்று கொண்டு இருந்தனர். ஒருவன் அதைப் பார்த்து ஆச்சரியத்தில் கத்தினான், ''பார், நமக்காக சூரியன் வந்திருக்கிறது!'. மற்றவன் சொன்னான், ''இல்லை, இது இரவு நேரம், அது சந்திரன்!''. முதலாமவன் தொடர்ந்தான், ''அது மஞ்சள் நிறத்தில் இருப்பதால் சூரியன்தான்'. அப்பொழுது மூன்றாவதாக ஒரு குடிகாரன் அவர்களைக் கடந்து சென்றான். அவர்கள் அவனிடம் கேட்டனர், 'ஐயா, தயவு செய்து சொல்லுங்கள், இது குரியனா அல்லது சந்திரனா?'. அவன் சொன்னான், ''நான் இந்த ஊருக்குப் புதுசு; எனக்கு ஒன்றும் தெரியாது!''.

(பலக்க சிரிப்பு!)

'சரி' - என்று சொல்வது, நீங்கள் தடைகள் இன்றி ஒரு திரவ நிலையில் இயல்பாக இசைந்து செல்ல உதவுகிறது.

அதனால், நீங்கள் தெரியாத ஒருவரிடம் கேட்டால், ஒரு பதிலையும் பெற மாட்டீர்கள் அல்லது தவறான பதிலைப் பெறுவீர்கள்.

அனுபவித்தவர்கள் மட்டுமே தெளிவாக விளக்க முடியும். சரணாகதியின் அர்த்தத்தை, அதை அனுபவிக்காத ஒருவனிடம் கேட்டீர்களானால், அவன், "எல்லாவற்றையும் வெறுமனே கடவுளிடம் கொடுத்துவிடு, அவ்வளவுதான்' என்பான்.

அது சாணாகதி அல்ல.

ஒருவர் என்னிடம் வந்துகேட்டார், ''நான் எல்லாவற்றையும் கடவுளிடம் சரணாகதி செய்து விட்டால், சரியாகிவிடுமா?''. நான் சொன்னேன், ''ஆமாம், நீ உண்மையிலேயே எல்லாவற்றையும் கடவுளிடம் சரணாகதி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்'. அவர் 3 நாட்கள் கழித்து திரும்பி வந்து என்னிடம் சொன்னார், "ஸ்வாமிஜி, நான் எல்லாவற்றையும் கடவுளிடம் சரணாகதி செய்து விட்டேன்''. நான் சந்தோஷமடைந்து அவரிடம் கேட்டேன், ''இப்பொழுது நீ எங்கே போகிறாய் ?''. அவர் சொன்னார், ''குடிக்கும் இடத்திற்கு", அவர் தொடர்ந்தார், 'இப்பொழுதிலிருந்து, நான் என்ன செய்தாலும், அதற்குக் கடவுள்தான் பொறுப்பு''.

இது உண்மையில் உங்களையே முட்டாளாக்கிக் கொள்ளும் ஒரு வழி. அவர் உண்மையிலேயே சரணாகதி செய்திருந்தால், குடிப்பழக்கத்தையும் சரணாகதி செய்திருப் பார். அவரால் அதற்குப் பிறகு குடிக்கக் கூட இயலாது.

ராமகிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார், ' உண்மையான சரணாகதி உங்கள் இதயத்தில் இருந்து வருமானால், கடவுள் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் வழி நடத்திச் செல்வார்; உங்களால் ஒரு போதும் தவறு செய்ய முடியாது''. சரணாகதி உங்கள்

இறுதியில் எல்லாக் கேள்விகளுமே முட்டாள்கனமானதுதான். சில கேள்விகள் முட்டாள்தனமானவை. மற்றவை அறிவுள்ளவை என்று ஒரு போதும் எண்ணாதீர்கள்.

உள்ளுக்குள் இருக்குமானால், முட்டாளாக்கிக் கொண்டிருப்பீர்கள்.

சரணாகதி எப்பொழுதும் உங்களை பிரபஞ்ச இருப்புத் தன்மை பற்றியே எண்ண வைத்துக் கொண்டு இருக்கும். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் சொந்த அடையாளத்தையும், அஹங்காரத்தையும் இழந்து விடுவீர்கள். பாகவதத்தில் ஒரு கோபிகை தனக்குள் சொல்லிக் கொள்வதாக ஒரு சுலோகம் வருகிறது, ''என்னால் கிருஷ்ணனைத் தவிர வேறெதையும் நினைக்க முடியவில்லை. என் மனதை அவனிடம் சரணாகதி செய்து விட்டேன். நான் வேறு எதையாவது நினைக்க வேண்டுமானால், என் மனதை மீண்டும் அவனிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்; ஆனால் அது எவ்வாறு முடியும் ?''.

ராமகிருஷ்ண பரமஹம்ஸா் அவரது கடைசி நாட்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் பலருக்கும் பலவிதமான வியாதிகளையும் குணப் படுத்தியிருக்கிறார். ஒருவர் அவரிடம் கேட்டார், ''நீங்கள் ஏன் ஒரே ஒரு கணம் உங்கள் மனதை உங்கள் வியாதியின் மீது வைத்து குணப்படுத்திக் கொள்ளக் கூடாது ?''. அவர் சொன்னார், ''நான் என் மனதை அந்த எல்லையற்ற சக்தியிடம் சரணாகதி செய்து விட்டேன், அதை எவ்வாறு, என் வியாதியின் மீது வைப்பதற்காக திருப்பி எடுத்துக் கொள்ள முடியும்!''. இதுவே உண்மையான சரணாகதி.

பிரபஞ்ச சக்தி நம்மை கவனித்துக் கொள்ளும். "நான் சரணடைந்தால், இந்தப் பிரபஞ்ச சக்தி என்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் கவனித்துக் கொள்ளுமா?'' என்று நீங்கள் கேட்கக் கூடும். பகவத்தையில், கிருஷ்ணர் மிகவும் அழகாக பதிலளிக்கிறார்-உறுதி அளிக்கிறார் என்று கூடச் சொல்லலாம், ''வேறு

ஆழமான புரிந்துகொள்ளுதல் நிகழும்பொழுது, கேள்விகள் தானாகவே கரைந்துவிடும். இதுவே உண்மையான ஞானம்.

எந்த சிந்தனைகளும் இல்லாமல், ஒருவன் என்னையே நினைத்துக் கொண்டிருப் பானாயின், நான் அவனுக்கு கொடுப்பதோடன்றி, அதைத் தக்க வைத்துக் கொள்வதையும் அனுபவிப்பதையும் பார்த்துக் கொள்கிறேன். என்னிடம் பூரண சரணாகதி அடைந்தவர்களின் வருமானத்திற்கும், கொள்கிறேன். அவர்களுடைய பிரச்சினைகள் கரைந்து விடும்''.

உண்மையான சரணாகதி நிகழ்வதற்கு பொறுப்பு ணர்வும், மனப்பக்குவமும் வேண்டும். நீங்கள் கடவுளிடமோ அல்லது ஏதாவது ஒரு குருவிடமோ சரணடைய வேண்டியத் தேவையில்லை. எதனிடம் வேண்டுமானாலும் சரணடையலாம். சரணாகதியே ஒரு சிறந்த பண்பாகும்; அதில் மிகுந்த சக்தி இருக்கிறது. நீங்கள் சரணடையும் பொழுது, உங்கள் அஹங்காரத்தை விட மிகப் பெரிய உயிர்ச் சக்தி இருக்கிறதென்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள், அவ்வளவே.

உண்மையில், நீங்கள் சரணாகதி அடைவதற்கு கடவுள் ஒரு சாக்காக மட்டுமே இருக்கிறார். சரணடையும் செயலே முக்கியத்துவம் வாய்ந்தது. கடவுள் இலக்கல்ல; சரணாககியே உண்மையான இலக்கு. நீங்கள் சரணடையும் பொழுது அல்லது உங்கள் அவறங்காரத்தை இழக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையில் நீங்கள் அதற்கு மேலும் ஒரு தனி வஸ்துவாக இருப்பதில்லை; பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் அல்லது கடவுளுடன் கலந்து விடுகிறீர்கள். மேலே ஒரு கடவுள் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை என்பதை பிறகுதான் புரிந்து கொள்கிறீர்கள். இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மை மட்டுமே இருக்கிறது; நீங்களும் அதன் ஒரு பகுதிதான்.

ஒருவருக்கும் இன்னொருவரைப் பற்றிப் பேசும் தகுதி கிடையாது. அப்படி பேசுவார்களாயின், அவர்கள் முட்டாள்கள்.

ஒரு சின்ன கதை ...

ஒருவன் சரணடைவதாகத் தீர்மானித்து விட்டான்; ஆனால் யாரிடம் சரணடைவது என்பதுதான் தெரியவில்லை. காட்டுக்குச் செ ன்று, அங்கு எதிர்ப்படும் முதல் மனிதனிடம் சரணடைவது என்று தீர்மானித்தான். அவன் காட்டிற்குச் சென்று காத்துக் கொண்டிருந் தான். அவன் முன் முன் எதிர்ப்பட்ட முதல் மனிதன், வீடுகளில் கன்னம் வைத்துத் திருடும் ஒரு கள்வன்; அவனைத் துரத்திக் கொண்டிருந்த காவலர்களிடம் இருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருந்தான். அவன் கள்வனது கால்களைப் பற்றிக் கொண்டு, அவனே தனது குரு எனவும், தான் அவனிடம் சரணடைந்து விட்டதாகவும் அறிவித் தான். கள்வன் குழப்பமடைந்தான்; அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவன் அவசரமாக "சரி, அப்படியானால் கண்களை முடிக்கொண்டு, நான் திரும்ப வரும் வரை இங்கேயே இரு,' என்று சொல்லி விட்டு ஒடி விட்டான். மிகப் பொறுப்புணர்வுள்ள அந்த மனிதனோ, ஊண் உறக்கமின்றி வெகுகாலம் அங்கேயே இருந்தான். அவனது பொறுப்புணர்வைக் கண்டு, கடவுள் அவன் முன் தோன்றி, அவனை அரவணைத்துக் கொண்டார்; விடுதலையும் தந்தார்.

ரீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல ; புரண சரணாகதி செய்யும் எண்ணமே, உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமான ஒன்றாக மாற்றவல்ல ஆற்றல் பெற்றது. நீங்கள் சரணடையும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையான, தீர்க்க முடியாத சக்திக்குச் சொந்தக்காரராகிறீர்கள்; பிறகு உங்கள் வழியில் வரும் எதையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்.

நீங்கள் உறுதியாகவும், எதுவரினும் அசைக்க முடியாதவராக வும் ஆகி விடுகிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு மிகுந்த ஆறுதலையும், அதுதரவையும் தருபவராகிறீர்கள். அவர்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கண்ணுக்குத் தெரியாத கைகளை, உங்கள் மூலம் உணர்கிறார்கள். நீங்கள் சரணடையாவிடில், உங்கள்

ரீங்கள் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால், மிகவும் அஹங்காரம் உள்ளவர்களாகிறீர்கள். வாழ்ந்தும் வாழாமலேயே இருக்கிறீர்கள்.

அஹங்காரம் உங்களை எல்லையற்ற தன்மையில் கலந்து விடாமல், பின்னோக்கி இழுத்து வைத்திருக்கிறது என்று பொருள்; அதனால் நீங்கள் தானாகவே உங்கள் வளங்களிலும், சக்தியிலும் ஒரு எல்லைக்குப்பட்டவராகி விடுவீர்கள்.

ஒரு குருவானவர் நீங்கள் சரணடைவதற்கு ஒரு கருவியாக இருந்து உதவுகிறார். சரணடைவது என்பதற்கு யாரையும் சார்ந்திருப்பது என்று அர்த்தமல்ல. உங்கள் சொந்த அஹங் காரத்தைக் கரைப்பதற்கு அவர்களுடைய உதவியை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.

சொல்லுங்கள்... ?

ஸ்வாமிஜி, தயவுசெய்து எங்களுக்கு தியானத்தைப் பற்றியும், அது எவ்வாறு அஹங்காரத்தை இழக்க உதவுகிறது என்பது பற்றியும் இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?

நிச்சயமாக ... முதலில், தியான முறைகள் எவ்வாறு வந்தது, ஏன் வந்தது என்பது பற்றிச் சொல்கிறேன்.

மனிதன், தான்படைக்கப்பட்டதிலிருந்தே, 'இந்த அற்புதமான பிரபஞ்சத்தைப் படைத்தது எது ?' என்று ஆச்சரியமடைந்து கொண்டும், ஆராய்ந்து கொண்டும் இருந்தான். இந்த அழகான பூமியைப் படைத்து ஆகாயத்தில் உருளவிட்டது எது ? நதிகளைப் பாயச் செய்வதும் மலைகளை வளரச் செய்வதும் எது? இவற்றையெல்லாம் நடத்திக் கொண்டிருக்கும் ஆற்றல் அல்லது சக்தி ஒன்றிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஒரு பிரம்மாண்ட மான இருப்பு சக்தியே இந்த மொத்தக் காட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். பிறகு எவ்வாறு அந்த சக்தியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது என்று வியப்படையத் தொடங்கினான்.

ரீங்கள் எப்பொழுதும், நீங்களே வண்ணம் பூசிய, ஒரு குறிப்பிட்ட வண்ணக் கண்ணாடியின் வழியாகவே பார்க்கிறீர்கள்.

இந்த முடிவுக்கு வந்த, இதைப் பற்றி ஆராய்ந்த, இந்த சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட, முதல் மனிதர்களே ரிஷிகள் அல்லது தன்னையுணர்ந்த ஆத்மாக்கள் அல்லது ஞானமடைந்த குருமார்கள். அவர்கள் அடைந்ததும், வருங்கால சந்ததியினரும் இந்த சக்தியை உணர்வதற்காக, பல வழிகளையும் உருவாக்கி வைத்தனர். அவர்கள் ஒவ்வொரு வரும் கொடுத்த வழிமுறைகளே, பல்வேறு தியானமுறைகளும், மதங்களுமாகும்.

ஒவ்வொருவருமே க கடவுளை வழியில், ஒரு வித்தியாசமான முறையில் உணர்ந்து, அவர்களது வழிமுறையைத் தனியாகப் பதிவு செய்து வைத்தனர். இது விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சி அறிக்கைகளைத் தயாரிப்பது போன்றது. ஒவ்வொரு ரிஷியும் தங்களது ஞானமடைதலைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்க, அது ஒரு மதமாகவோ அல்லது தியான முறையாகவோ ஆகி விட்டது,

இந்த ஆரம்பகால, தன்னையுணர்ந்த ஆத்மாக்கள், இந்த உலகத்தை வழிநடத்திச் செல்லும் உயிர்ச் சக்தியைப் பற்றிய கருத்துக்களை நிலைநாட்ட பல்வேறு மதங்களை உருவாக்கினர். இந்த உயிர்ச் சக்திகளையே நாம் இயேசு, அல்லா, சிவன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம். நீங்கள் எந்தக் கடவுளையும் நம்ப வேண்டியது இல்லை. நாத்திகவாதிகள் எந்தக் கடவுளையும் நம்புவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் இருப்பின் மீது நம்பிக்கை வைத்துத்தானே ஆக வேண்டும் ? நாம் நமது சொந்த இருப்பின் மீது நம்பிக்கை வைத்து, "நான் யார்?" என்ற கேள்விக்கு பதிலைத் தேடுவோமாயின், அது ஒரு தியான முறையாகி, நாம் கடவுளை உணர்ந்து விட முடியும். எப்படியோ, இந்தப் பல்வேறு வழிகள் அல்லது தியான முறைகள் காலப்போக்கில் பல்வேறு மதங்களாகி விட்டன.

ஒரு அரசன் இராஜ்ஜியம் இருந்தால் மட்டுமே அரசனாக இருக்க முடியும். ஆனால், ஒரு பரமஹம்ஸருக்கோ, எதுவும் தேவையில்லை. அவர் கைகளை நீட்டினால் உண்கிறார், கால்களை நீட்டினால் உறங்குகிறார்.

ஆனால், பிற்பாடு என்ன ஆயிற்று? மக்கள் மதங் களுக்குப் பின்னால் உள்ள இந்த அடிப்படைக் கருத்தை விட்டுவிட்டு, மதங்களின் பெயரால் சண்டையிடத் தொடங்கி விட்டனர். ஒரு சின்ன கதை ...

ஒரு தமிழன், ஒரு ஆங்கிலேயன், ஒரு வட ஹிந்து, ஒரு பெங்காலி ஆகிய நால்வரும் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தூரத்தில் இருந்து ஒரு ஏரியைப் பார்த்தனர். தமிழன் அதைத் தெற்கேயிருந்து 'தண்ணீர்' என்று அழைத்தான். ஆங்கிலேயன் அதை மேற்கேயிருந்து பார்த்து 'வாட்டா' என்று அழைத்தான். வட ஹிந்துவோ அதை வடக்கேயிருந்து பார்த்து 'பானி' என்று அழைத்தான். பெங்காலி அதைக் கிழக்கேயிருந்து பார்த்து 'ஜல்' என்று அழைத்தான். அந்த நான்கு பேருமே ஒரே விஷயமான 'தண்ணீரை'த்தான் குறிப்பிட்டனர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதே சரி என்று சொல்லி சண்டையிடத் தொடங்கி விட்டனர். அந்த நால்வரில் ஒருவர் கூட ஏரிக்கு அருகில் சென்று அது என்னவென்று சரியாகப் பார்க்க முன்வரவில்லை. தமிழன் அவன் தாத்தா சொன்னதையே பிடித்துக் கொண்டிருந்தான்; ஆங்கிலேயனோ அவன் தாத்தா அதை 'வாட்டர்' என்றுதான் சொன்னதாக சொல்லிக் கொண்டிருந்தான்; வட ஹிந்துவும், பெங்காலியும் கூட அவர்கள் தாத்தா சொன்னதையே பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தனர்.

நாமும் இதையேதான் செய்து கொண்டிருக்கிறோம். மதங்களுக்காக கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கால ஆன்மீக விழிப்படைந்த ஆன்மாக்கள், எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தனரோ, அந்தக் கோணத்தில் இருந்தே பெயரிட்டனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; எல்லாம் ஒன்றே- அதுவே பிரபஞ்ச இருப்புத்தன்மை

உங்கள் சொந்த உடலே ஒரு அதிசயம்தான்!

அல்லது கடவுள். கிருஷ்ணா என்றாலும் கிறிஸ்து என்றாலும் ஒன்றுதான். அவர்கள் வெவ்வேறு கொணத்தில் இருந்து பார்க்கின்றனர், அவ்வளவே.

இந்த நால்வரும், ஏரிக்குச் செல்லாமலேயே, அவர் களுடைய முன்னோர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்! என்ன நடக்கும் ? ஒவ்வொருவரும் அவர்களுடைய முன்னோர்கள் சொன்னகே சரி என்று எண்ணுவதால் சண்டைதான் சொன்னவற்றையெல்லாம் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு, தாங்களாகவே ஏரிக்குச் சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தால், அவர்களுடைய பாட்டனார்கள் சொன்னதெல்லாம் ஒரே விஷயத்தைத்தான் என்பதைப் புரிந்து கொள்வார்கள்! பிறகு சண்டை இருக்காது.

இன்று, ஏரிக்குச் சென்று ஒருவாய் தண்ணீரைக் குடிக்காத வா்கள்தான் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருப்பவர்கள், ஆன்மீகம் என்ற ஏரிக்குச் சென்று, உண்மையின் சுவையை உணராதவர்களே. சண்டையிடும் அந்த நால்வரும் வெறுமனே கரையில் நின்று கொண்டு சண்டையிடுபவர் களே! புரிந்து கொள்ளுங்கள்... உண்மை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.

தியானத்திற்குத் திரும்பி வருவோம்; தியானத்தைப் பற்றி எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், அது உங்கள் மனம் தளர்வாக இருக்க உதவுகிறது, அவ்வளவே. தியானம் என்பது மக்கள் நினைப்பது போல் மனதை ஒருமுகப்படுத்துவது அல்ல. நீங்கள் ஒருமுகப்படுத்தும்பொழுது, உண்மையிலேயே உங்கள்

உங்களுக்கே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் ?

மனதிலிருந்து எல்லாவற்றையும் விலக்கிவிட முயற்சி செய்கிறீர்கள் ; அது ஒரு சாத்தியமற்ற செயல்.

வெறுமனே இரண்டு நிமிடங்கள் அமர்ந்து, உங்கள் மனதிலிருந்து எல்லாவற்றையும் அகற்றி விட முயற்சி செய்யுங்கள்; உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்! நீங்கள் அகற்ற முயற்சி செய்யும் ஒவ்வொரு விஷயமும் திரும்ப வந்து உங்களைத் தொந்தரவு செய்யும். அதனல் மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் அல்ல. தியானம் என்பது வெறுமனே எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு, தளர்வாக இருப்பது. நீங்கள் எதையும் விலக்குவதற்காக மனதை ஒருமுகப்படுத்தாதபோது, தளர்வாக இருக்க முடியும்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது, வெறுமனே தளர்வாகிக் கொண்டு உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் கவனியுங்கள். உங்களைச் சுற்றி எழும் ஒலிகளை இதயபூர்வமாக கேளுங்கள். அது பறவைகளின் சப்தமாகவோ, தென்றலில் தவழும் நாட்காட்டியின் சப்தமாகவோ, உங்களுக்கு மேல் சுற்றும் மின் விசிறியின் சப்தமாகவோ, உங்களைச் சுற்றியுள்ள மக்களின் ஒலியாகவோ அல்லது எதுவாகவும் இருக்கட்டும். வெறுமனே திறந்த இதயத்துடன் கேளுங்கள். கவனத்தில் வையுங்கள்; இவை

யெல்லாம் கவனச்சிதறல் அல்ல. நீங்கள் அவற்றுடன் இசைந்து செல்கிறீர்கள்; அதனல் அவை கவனச்சிதறல் அல்ல. நீங்கள் அவற்றுடன் செல்லும் பொழுது, அவை கவனத்தை திசை திருப்புவதாக இருப்பதில்லை. இதைச் செய்தீர்களானால், ஒருவித அமைதியையும், உள்ளுக்குள் இருக்கும் ஒரு தொகுப்பு மையமே இவையனைத்திற்கும் உண்மையில் சாட்சியாக இருக்கிறது என்பதையும் உணருவீர்கள்; மேலும் உங்களுக்குள் இருக்கும் அந்த அமைதியை ஆழமாக அறிவீர்கள். அவ்வப்பொழுது அந்த அமைதியின் கண நேரக் காட்சியையும் பெறுவீர்கள்.

நாம் விழிப்பின்றியே, வாழ்ந்தும் இறந்தும் விடுகின்றோம்.

கொஞ்சம் கொஞ்சமாக, உங்கள் உடல் உணர்வையும் இழப்பீர்கள். உங்களிடம் விழிப்புணர்வு மாத்திரமே இருக்கும். உங்களை, உங்கள் விழிப்புணர்வாலேயே அறிவீர்கள்; உடலாலோ, மனதாலோ அல்ல. அல்ல. உங்கள் உடல் உணர்வற்று மாத்துப் போயிருக்காது; ஆனாலும் உங்களால் அதை உணர முடியாது, அவ்வளவே. உங்கள் விழிப்புணர்வு மாத்திரமே எஞ்சியிருக்கும். தீவிரமாகச் செய்யும் பொழுது, இது உங்களை மனதிற்கப்பால் எடுத்துச் செல்லும்.

தியானம் உங்களுக்கு, வாழ்க்கையில் நீங்கள் ஒரு கவனிப்பவர் மட்டுமே என்பதை உணர உதவி செய்யும். அது, நீங்கள் உங்கள் இருப்புத் தன்மைக்குள் நன்றாக மையம் கொண்டு, வெளியுலக வேலைகளை இன்னும் திறமையாகவும், ஆனந்தமய மாகவும் தொடர உதவும்; ஏனெனில் எதனாலும் திசைதிருப்ப முடியாத, இடையூறு செய்யப்பட முடியாத ஒரு உள் அமைதியை நீங்கள் சுமந்து கொண்டிருப்பீர்கள். இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், நீங்கள் 'நான்', 'எனது' என்பதை விடத் தொடங்கு வீர்கள். உங்கள் அணங்காரம் கரைந்து விடும். உங்கள் அஹங்காரம் என்பது, உங்கள் மனதையும், உடலையும் பற்றி, நீங்கள் வைத்திருக் கும் வலுவான எண்ணமும் அடையாளமும் தவிர வேறல்ல.

நாம் ஏன் தியானத்திற்காக ஒரு உலகளாவிய இயக்கத்தைத் தோற்றுவிக்க முயற்சி செய்கிறோம் என்று நினைக்கிறீர்கள்? தியானமே உலக அமைதிக்கு ஒரே தீர்வு. நீங்கள் உள் நோக்கிப் பார்க்கத் தொடங்கி விட்டால், அதிகாரம், பணம், வஞ்சம் முதலிய வெளியுலக திசை திருப்பல்களால் கவனம் சிதறடிக்கப்பட மாட்டீர்கள். உங்களுடைய கீழ்நிலைச் சக்தி களெல்லாம் உயர் நிலை ஆன்மீக சக்திகளாக உருமாற்றம் அடையும். கூட்டு விழிப்புணர்வு ஒரு மாறுதலுக்கு உள்ளாகி தானாகவே அமைதி நிலவும்.

Collective Consciousness

அதனால்தான் நான் தனிமனித உருமாற்றத்தில் கவனம் செலுத்துகிறேன். தனிமனிதர்கள் சிலா் உருமாற்றமடைந்து, அனுபவ ரீதியாக புரிந்து கொள்ளும்பொழுது, அவர்கள் மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருப்பார்கள்; இது தொடர்ந்து சமூகத்தில் ஒரு நோ்மறையான புதிய மன அமைப்பை உருவாக்கும்.

உங்களுடைய புரிந்து கொள்ளுதல் அனுபவமாகும் வரை உருமாற்றம் சாத்தியமில்லை. தியானத்தால் உங்கள் புரிந்து கொள்ளுதலை அனுபவமாக்க முடியும். தனிமனித உருமாற்றத் திற்கும், சமூக உருமாற்றத்திற்கும் தியானமே ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.

தியானத்தினால் அறிவு வளர்கிறது. எல்லா விஷயங் களிலும் ஒரு தெளிவு பிறக்கிறது. மாற்று வழிகளுக்காக நீங்கள் யாரையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறுமனே உங்களுக்கே தெரியும், அவ்வளவுதான். அதற்குக் காரணம், நீங்கள் உங்கள் உள் அறிவுடன் மிகுந்த இசைவுடன் இருப்பதே. அது தவறாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் தெரியும்.

நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் இருப்புத் தன்மையில் இருந்து தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக இருப்பதால், சில சமயங்களில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும், அதன் விளைவு அற்புதமாகவும், விடுதலையளிப்பதாகவும் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விடாமுயற்சியுடனும் உங்கள் சொந்த அறிவின் மீது ஆழமான விசுவாசத்துடனும் இருப்பதே.

நீங்களே உங்களை தியானத்துடன் பேணி வளர்த்தால், உங்கள் திறன் விரிவடையும்; நீங்கள் வெளியுலகில் நிறைய சாதிக்க முடியும். உங்களால் செய்ய முடிவதற்கும், வெளிப்படுத்துவதற்கும்

குருவிடம் புலன்களைச் சரணாகதி செய்வதே, எக்காலத்திலும் மிகவும் கடினமான செயலாகும்.

எல்லை எதுவும் இருக்காது, நீங்கள் பல பரிமாணங்களிலும் வளர்ந்து கொண்டிருப்பீர்கள்.

எதுவுமே, நீங்கள் அஹங்காரத்திலிருந்து இல்லாமல், உள் அறிவிலிருந்து செயல்படும் பொழுது சுலபமாக வரும். எதுவுமே உங்களுக்குக் கடினமாக இருப்பதன் காரணம், உங்கள் அஹங்காரம் உங்களை அதிலிருந்து வேற்றுமைப்படுத்தி விடுவதுதான். நீங்கள் உங்களை இழந்து, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து விட்டால், எதுவுமே சிக்கலாக இருக்காது; நீங்கள் வெறுமனே இசைவுடன் சென்று கொண்டிருப்பீர்கள். உங்கள் அறிவுக் கூர்மையே, தானாகவே, பிரபஞ்ச சக்தியை உபயோகப்படுத்திக் கொள்வதற்கான வேலையைச் செய்யும்.

நீங்களே உங்களை ஒரு அதிசய மனிதராகப் பார்ப்பீர்கள்! உங்களுக்கு அப்பாற்பட்டிருப்பதாகத் தோன்றிய விஷயங்கள் திடீரென்று சகஜமாகி விடும். நீங்கள் அறியாமையில் இருந்து ஆழ்ந்த விழிப்புணர்வுக்குச் சென்று விடுவீர்கள்.