KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/ஸ்வாமிஜி, கடவுளுடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது ?Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

ஸ்வாமிஜி, கடவுளுடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது ?

நீங்கள் அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள கடவுள் ஏதோ ஒரு தனி வஸ்து அல்ல. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர் உங்கள் தலைக்கு மேலாக சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, நீங்கள் அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. அவர் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் இருக்கிறார். அனைத்தும் அவராலேயே உருவாக்கப்பட்டது.

இது எல்லாமே வெறும் நாடகம்தான். நீங்கள் அதில் ஒரு பாத்திரம்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவரே படைப்பவர், படைத்தல் மற்றும் படைக்கப் பட்டது. அவரே அனுபவிப்பவர், அனுபவித்தல் மற்றும் அனுபவம். பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு நாம் கடவுள் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறோம், அவ்வளவே. இதைப் புரிந்து கொள்வீர்களானால், கடவுளை உணரத் தொடங்கி விட்டீர்கள்; பிறகு கடவுளுடன் தொடர்பு கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை.

மக்கள் என்னிடம், நான் கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறேனா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், நானே கடவுள்தான் என்று! நான், அவர்களும் கடவுள்தான் என்று சொல்கிறேன்! ஆனால், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் எவ்வாறு கடவுளுக்கு நெருக்கமாகச் செல்வது என்று அறிய விரும்பு கிறார்கள். நெருக்கம் என்று சொல்லும் பொழுதே, உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி இருக்கிறதென்று அர்த்தம். நான் செ ால்கிறேன் நீங்களே கடவுள்தான் என்று! பிறகு நெருக்கம் என்ற கேள்வி எங்கு வருகிறது?! நான் சொல்ல முயற்சிப்பதைப் புரிந்து கொள்கிறீர்களா? அது மிகவும் எளிமையானது! கடவுள் என்பது பிரபஞ்ச இருப்புக் கன்மைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பெயரைக் தவிர வேறல்ல; நீஙகள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதி.

நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவுடன் வாழ்வீர்களானால், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான உங்கள் தொடர்பைக் கண்டுபிடித்து விட்டீர்களானால், ரீங்கள் கடவுள்தான், அவ்வளவே. உங்கள் வழியில் எதிர்ப்படும் எதனுடனும் அல்லது எவருடனும் ஒரு நெருக்கமான உணர்வுடன் வாழ்வீர்களானால், நீங்கள் தூய விழிப்புணர்வாகி விடுகிறீர்கள்.

வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையை புரிந்து கொண்டால், ரீங்கள் வாழ்வதன் பொருளையும் புரிந்து கொள்வீர்கள்.

உங்களால், உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும், அவர் தெரிந்தவரோ அல்லது தெரியாதவரோ யாராயிருப்பினும், ஒரே விதமான அன்பை உணர முடியுமானால், நீங்கள் உங்களிடம் கடவுளை உணர்கிறீர்கள். இது, கடவுள் உணர்விலிருந்து நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என்பதை அறிய உதவும் ஒரு எளிய அளவுகோலாகும்.

நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், இசைந்து செல்ல ஆரம்பிக்கும் பொழுது, உங்களுக்குள் ஒரு உள் குரலைக் கேட்க ஆரம்பிப்பீர்கள். பிறகு எந்த வழிகாட்டலும் தேவையில்லை. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைச் சொல்வதற்கும் யாரும் தேவையில்லை. வெறுமனே உங்களுக்கே தெரியும்; உங்கள் அறிவே உங்களை வழிநடத்திச் செல்லும். நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டிய சுமையான உணர்வின்றி இசைவுடன் சென்று கொண்டிருப்பீர்கள். உங்களுக்குள் அந்த உள்குரலை எழுப்பக் கூடியவரே குரு எனப்படுகிறார். அவர் உங்கள் அறிவுக் கூர்மையை எழுப்புவதற்காக உங்களிடம் செயல்படுகிறார்.

நம்மில் பலரால் ஏதேனும் ஒரு காரணத்துடன் மட்டுமே நேசிக்க முடியும். நமது அஹங்காரம் அவ்வளவு வலுவாக இருக்கிறது. மிகவும் தெளிவாக இருங்கள் ... நீங்கள் இது போன்று இருக்கும் பொழுது, கடவுளிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள்! நாம் நமது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அன்பைப் பொழிவதாக உரிமை கோரலாம். இதுவரையிலும் பூமியில் தோன்றியுள்ள குருமார்கள் அனைவரையும் வெறுமனே பாருங்கள். அவர்களுடைய சேவைக்கு, அவர்களை இழுத்த பொதுவான தன்மை என்ன? தூய அன்பு, அவ்வளவே. நீங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையில் உணரும் சாதாரண அன்பையே

இலக்குகளை விட்டுவிட்டு, பாதையை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.

அவர்களும் அனுபவித்திருந்தால், அவர்களால் இந்த சேவை ஸ்தாபனங்களை நிறுவியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ?

வெறும் சாதாரண அன்பைக் கொண்டு ஒரு உலகளாவிய சேவை ஸ்தாபனத்தை நிறுவுவது சாத்தியமா ? சாதாரண அன்பால் எவ்வளவு உத்வேகத்தைக் கொடுக்க முடியும் ? உண்மையில், அது உங்களைச் சீக்கிரத்திலேயே களைப்படையச் செய்து விடும் ! குருமார்கள் மீண்டும் மீண்டும் உலகெங்கிலும் உள்ள மக்களை அடைந்து, அவர்களின் வாழ்க்கையை உருமாற்ற முடிந்ததென்றால், அதன் காரணம் தெய்வீக அன்பும், இந்த பூமியில் ஒவ்வொரு தனி மனித உயிருடனும் அவர்கள் உணர்ந்த ஒன்றான தன்மையுமே யாகும்.

உண்மையில், அவர்களது சுயசரிதைகளைப் படித்தால், ஏறக்குறைய அவர்கள் அனைவருமே அவர்களது குடும்பத்தை ஒரு பக்கமாக வைத்து விட்டு, அவர்களது கடுங் கோபத்துடனேயே மக்களைச் சென்றடைந்துள்ளதைக் காண முடியும். இது போன்ற சம்பவங்களில், குடும்பத்தினர் எப்பொழுதுமே எதிர்ப்பைக் காட்டுகின்றனர். ஆனால் பக்குவமும், விழிப்புணர்வும் வந்து விட்டால், அவர்களும் மற்றவர்களைப் போலவே ஏற்றுக் கொள்ளவும், பின் தொடரவும் ஆரம்பிக்கின்றனர்.

உங்களைக் கடவுளிடமிருந்து பிரித்து தனியாக உணர வைப்பது எதுவானாலும், அதுவே அஹங்காரம். அஹங்காரம் இருக்கும் பொழுது, உங்களால் எப்பொழுதும் ஒரே சீராக, அதே ஆழமான உணர்வுடன், நேசிக்க முடியாது. உங்கள் அன்பு வெகுவாக உங்களைப் பொறுத்து இருக்கும். அது இரண்டு எல்லைகளுக்கிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும்.

உங்களால் வேறுவிதமாகச் சிந்திக்க முடிந்தால் அது அறிவுக்கூர்மை.

குருமார்களுடைய உடல் மொழியைக் கவனியுங்கள்; தெய்வீக அன்புடன் ஒத்திசைந்து இருப்பது என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்வதற்கு சுலபமான வழி, குருமார்களின் உடல் மொழியைக் கவனிப்பதே. ஒரு குருவானவர் எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவுடன் இருக்கிறார். அவர் எப்பொழுதும், அவர் முன் இருப்பவர் யார் என்ற பாரபட்சமின்றி, அன்பைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். அவருடைய உடல் மொழியைக் கவனிக்கும் பொழுது, அதன் பின்னால் இருக்கும் தன்மையை நீங்கள் கிரஹித்துக் கொள்வீர்கள்.

நீங்கள் சில காலம் குருவை கவனித்து வந்தீர்களானால், அவர் எவ்வாறு பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து, மிகவும் அழகாக, கவிதை ரசம் பொங்க, மிகவும் ஒருமித்து, ஒரு நதியைப் போல பிரவகித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உங்களால் உணர முடியும். அவருடைய ஒவ்வொரு செயலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் மிகவும் சரியாக ஒத்துப் போகிறது, அதனால்தான் அவரைக் கவனிப்பது மிகவும் அற்புதமான ஒரு விஷயமாக இருக்கிறது! வெறுமனே குருவை கவனிப்பதன் மூலமே, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அழகையும், அது பிரவகிப்பதையும், உணர்ந்தும், புரிந்தும் கொள்ள முடியும்.

ஒரு குரு அஹங்காரமற்றிருப்பதால், அவர் தடைகளின்றி பிரவகித்துச் செல்கிறார். அவரிடம் 'நான்' மற்றும் 'எனது' என்னும் உணர்வில்லையாதலால் அவர் பிரவகித்துச் செல்கிறார். அவர் அன்பைத் தவிர வேறெதையும் பரப்பாததால், குணப்படுத்துகிறார். குணப்படுத்துதல் என்பது அடர்த்தி மிக்க அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை. அதனால்தான் நாம் மீண்டும் மீண்டும் குருமார்களின் அற்புதமான குணப்படுத்தும் ஆற்றல்களைப் பற்றிக் கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் குருமார்கள் கடவுளாகப் பார்க்கப்படுகிறார்கள். மிகவும் தெளிவாக இருங்கள்... குருமார்கள் மட்டுமே வாழும் கடவுள்கள்! அவர்கள் இறுதியான சக்தியின் உச்சபட்ச வெளிப்பாடு!

அதனால், கடவுளுடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது என்ற கவலையை நிறுத்துங்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இருக்க ஆரம்பியுங்கள்; கடவுளாகி விடுங்கள்!

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ... உங்களால் பிரபஞ்ச இருப்புத் தன்மையை வெல்ல முடியாது. நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையால் வெல்லப்பட மட்டுமே முடியும். உங்களுடைய அஹங்காரம் அனைத்தையும் இழந்து விட்டீர்களானால், நீங்கள் வெல்லப்பட்டு விட்டீர்கள், அவ்வளவுதான்! நீங்கள் கடவுளுக்கு இசைவாயிருக்கிற உங்களிடம் குடி கொண்டிருப்பார். ஆரம்ப நிலைகளில், நீங்கள் விருந்தினராகவும், அவர் விருந்தளிப்பவராகவும் இருப்பீர்கள். இறுதியில், நீங்களே விருந்தளிப்பவராகி விடவேண்டும்; அவரை வரவேற்கும் ஒரு கருவறையாகி விட வேண்டும். கருவறையாகி விடுதல் என்றால், உருகி மென்மையாகி விடுதல். மென்மையாகி விடுதல் என்றால், உங்கள் முழு அஹங்காரத்தையும் விடுத்து, கடவுள் அல்லது பிரபஞ்ச இருப்பத் தன்மையில் கரைந்து விடுதல். பிறகு வாழ்க்கை ஒரு இசையாகவும், முடிவற்ற கொண்டாட்டமுமாகி விடும்!

சரி ... இப்பொழுது நாம், இந்த ஆக்ஞா சக்கரத்திற்கான, அற்புதமான, மிகவும் பலன் தரக்கூடிய தியான முறையான, திவ்ய நேத்ரா தியானத்தைச் செய்யலாம்.

ஆனந்தமாக இருங்கள்!