KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/ஸ்வாமிஜி, நீங்கள் சொல்லுவதைப் பற்றிக் கவலைப் படாமல் எப்படி எங்களால் அதை பின்பற்ற ஆரம்பிக்க முடியும் ?Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

ஸ்வாமிஜி, நீங்கள் சொல்லுவதைப் பற்றிக் கவலைப் படாமல் எப்படி எங்களால் அதை பின்பற்ற ஆரம்பிக்க முடியும் ?

நான் சொல்லும் வார்க்தைகளில் உங்கள் மூளையைச் செலுத்தாமல், அதற்குப் ஊக்கத்தையும் கிரஹித்துக் கொண்டு நிகழ்காலத்தில் வாழத் தொடங்குங்கள், அவ்வளவுதான். உங்கள் மூளையை அதில் செலுத்தும் பொழுது தர்க்கம் உள்ளே வந்து விடுகிறது; ஒரு முறை

தர்க்கம் உள்ளே வந்து விடுமாயின், தொல்லைகள் ஆரம்பித்து விடுகின்றன.

என் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சக்தியை உணருங்கள். இதை நான் அமைதி என்று அழைக்கிறேன். இந்த அமைதியினால் உங்களை நான் எப்பொழுதும் ஊடுருவிச் செல்ல முயற்சி செய்கிறேன். இந்த அமைதி உங்களை இறுதியாக எங்கு எடுத்துச் செல்ல வேண்டுமோ அங்கு எடுத்துச் செல்லும். ஒருபோதும் என் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சி செய்யாகீர்கள்.

ஒருபோதும் வார்த்தைகளைச் சேகரிக்காதீர்கள். புத்திசாலிப் பைத்தியங்கள் மட்டுமே மேலும் மேலும் வார்த்தைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வார்த்தைகளைச் சேகரித்து மேலும் மேலும் குழப்பமடைகிறார்கள். என்றாவது ஒரு நாள் தெளிவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் வார்த்தைகளைச் சேகரிக்கிறார்கள். ஆனால் அது ஒரு போதும் நிகழ்வதில்லை.

பாருங்கள், நான் பேசுவது எதுவானாலும், இணைத்து ஆராயும் பொழுது அது முரண்படுவதாகத் தோன்றினாலும், அது பேசப்படும் கணத்தில் முழுமையான உண்மையாக இருக்கிறது. நான் பேசுவது எதுவானாலும் பேசும் அந்தக் கணத்தில் முழுமையாக உண்மையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் என் வார்த்தைகளில் இருந்து மட்டும் எந்த ஒரு அனுமானத்திற்கும் வர முடியாது. அதனால், இப்போதைக்கு அவற்றை எந்தக் கேள்வியுமில்லாமல் வெறுமனே எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் பின்பற்றுவதற்குத் தேவையான சக்தியையும் அறிவுக் கூர்மையையும் அதுவே கொடுக்கும்.

Intellectural Nuts

நீங்கள் முழுமையான விசுவாசத்துடன் இருக்கும் பொழுது, உங்களால் கவலைப்பட முடியாது. இதுவே உண்மையான வழிபாடு. வழிபாடு என்பது உங்கள் கவலைகளையெல்லாம் கொட்டி விட்டு ஒரு தீர்வைக் கேட்பதல்ல. வழிபாடு என்பது பிரபஞ்ச இருப்புத்தன்மை மீது முழுமையான விசுவாசம் வைப்பது; அது உங்களுக்குச் செய்கிறது என்பதை உணர்வது.

அதனால் உங்கள் பத்தியுடன் கேட்காதீர்கள். ஆழமான தியானத்துடன் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில் உங்கள் உணர்ச்சியோ அல்லது பாதையோ எதுவாக இருப்பினும் அதில் ஆழமாகச் சென்று, நான் சொல்வதைக் கேளுங்கள். அது போதும். நீங்கள் தானாகவே சக்தியால் நிரப்பப்பட்டு, வலிமையாக்கப்படுவீர்கள். இவையெல்லாம் நான் உங்களுக்குக் கொடுக்கும் அடிப்படை இரகசியங்கள்.

நீங்கள் என் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருந்தால், அவைகளை மறந்து விடக் கூடும் என்று கவலைப்படுவீர்கள். அவைகளை எழுதிக் கொள்ளத் தொடங்குவீர்கள். நான் சொல்கிறேன், நீங்கள் அவற்றை எழுதிக் கொள்ளத் தொடங்கும் பொழுதே, விஷயம் அனைத்தையும் கவறவிட்டு முழுமையாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள், அவற்றின் பின்னால் இருக்கும் சக்கியையும் கிரஷித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். கிறுக்கல் குறிப்புகளுடன் வீட்டுக்குச் செல்வீர்கள்; சில நாட்களில் அதுவும் எங்காவது ஒரு மூலையில் கிடக்கும். சில காலம் சென்ற பின்னர், அது கிடைத்தாலும் தலையும் புரியாது, காலும் புரியாது.

ஒரே வழி உணர்ச்சிகளை கவனிப்படதே. கவனிக்க கவனிக்க, உங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் கவனிப்பவர் காட்சியிலிருந்து மறைந்து விடுவார்.

அது எப்படி இருக்கிறதென்றால்.. நீங்கள் ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு அதன் கடைசி இரண்டு பக்கத்தை மட்டும் உங்கள் கையில் வைத்திருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இரண்டு பக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு உங்களால் அந்த முழு புத்தகத்தையும் திரும்பத் தொகுக்க முடியுமா? முடியாது! அதே போல், என்னுடைய சில வார்க்கைகளை மட்டும் எழுதி வைத்துக் கொண்டு, மொத்த விஷயத்தையும் நினைவுபடுத்திக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நான் பேசும் பொழுது வெறுமனே முழுமையாக இருங்கள். அதுவே போதுமானது.

என்னுடைய வார்த்தைகளை மறந்து விடுவதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி விடுங்கள். நீங்கள் முழுமையாக இங்கு இருப்பீர்களானால், என்னுடைய வார்த்தைகள் உங்களை ஊடுருவுக் சென்று அதன் வேலையைச் செய்யும். உருமாற்றமே முக்கியம், என் வார்த்தைகள் அல்ல. உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து கேளுங்கள், மூளையில் இருந்து அல்ல. நீங்கள் புரிந்துகொண்டு, உருமாற்றம் நிகழுமானால், ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். மறந்து விட்டீர்களானால், நீங்கள் புரிந்து கொள்ளவேயில்லை என்று அர்த்தம்.

என்னுடைய வார்த்தைகளை மட்டுமல்ல, எதையுமே பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். ஒவ்வொரு கணமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது; பிறகு பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு என்ன இருக்கிறது ? பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பது மேலும் மேலும் துன்பத்தையே கொண்டு வரும். எதிர்காலத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதிலும் அர்த்தம் ஏதுமில்லை. அது இனிமேல் வரப் போவது. நீங்கள் எதைப் பற்றி

உங்களால் தண்ணீரில் தாமரை போல் இருக்க முடியுமானால், நீங்கள் கற்றுக் கொண்டு விட்டீர்கள்.

எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் ? எதிர்காலமும் நிகழ்காலமாகவே வரும். அதனால் நிகழ் காலத்தைக் கவனியுங்கள்.

பாருங்கள் ... நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் தேர்ந்தெடுப்பதில்லை. கவலை எழுவதற்கு அடிப்படைக் காரணம் கொண்டிருப்பதுதான். இனி தேர்ந்தெடுப்பதேயில்லை என்று தீர்மானித்து, அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டு முழு அனுபவத்தையும் பருகுவீர்களானால், எல்லாக் கவலைகளும் வெறுமனே மறைந்து விடும். நீங்கள் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் என்னவெனில், உங்களை திடமான ஒரு விஷயமாக அடையாளப்படுத்திக் கொள்வதுதான். நீங்கள் எப்பொழுதும் கேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக உணர்கிறீர்கள். அது உங்கள் அஹங்காரத்தின் விளையாட்டைத் தவிர வேறல்ல. அதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, உலகம் ஒருநாள் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எண்ணும் பொழுது அச்சமாக இருக்கிறது'' என்று.

உலகம் ஒரு நாள் முடிவுக்கு வந்து விடப் போகிறது; அதனால் என்ன ? உலகம் ஒரு முடிவுக்கு வருவதானால், அதனுடன் எல்லோருக்கும்தான் ஒரு முடிவு வரப்போகிறது. யாரும் எதைப் பற்றியும் கவலைப்படுவதற்கு, எதுவும் யாரிடமும் இருக்கப் போவதில்லை. நீங்கள் இதற்கு முன் கவலைப் பட்டதற்குக் காரணம் உலகத்தில் கவலைப்படுவதற்கு ஏதோ இருந்தது. உலகமே ஒரு முடிவுக்கு வரும் பொழுது, கவலைப்படுவதற்கு எதுவுமே இருக்க முடியாது, இல்லையா ? ஆனால் நீங்கள் அதைப் பற்றியும் கவலைப்படுகிறீர்கள்!

உங்களுக்கு எப்படி இயல்பாக இருப்பது என்று தெரியாததால், எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

மனம் எப்படித் தானே முரண்படுகிறது பாருங்கள். அது கவலைப்படுவதற்கு ஏதேனும் இருந்தாலும் கவலைப்படுகிறது, இல்லாவிட்டாலும் கவலைப்படுகிறது. உங்களுடைய எல்லாக் கவலைகளையும் விழிப்புணர்வோடு பார்த்தீர்களானால், உங்கள் விழிப்பற்ற நிலையில், அவைகள் எவ்வளவு தந்திரமாக உங்கள் மீது ஆகிக்கம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் கவலைகள் மிகவும் நுணுக்கமும் தன்மையிலும் ஆகாரமற்றும் இருப்பதைக் காண்பீர்கள். அவைகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இருப்பதால் உங்களால் அவற்றை ஒரு போதும் பிடிக்க முடியாது. அவைகள் திடமாக இருப்பதில்லை.

உண்மையில், உங்களுடைய எல்லா உணர்ச்சிகளுமே விழிப்பற்ற தன்மையின் விளையாட்டைத் தவிர வேறல்ல. நீங்கள் முழு விழிப்புணர்வோடு வாழும் பொழுது, ஒரு போதும் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட மாட்டீர்கள், அதனால்தான் மீண்டும் மீண்டும் உங்களை விழிப்புணர்வால் நிரம்பிக் கொள்ளச் சொல்கிறேன்.

உங்கள் வாழ்க்கையை ஆக்குவதும் அழிப்பதும் உங்கள் கவலைகளும் உங்கள் வார்த்தைகளும்தான். அவைகளுக்கு அத்தனை சக்தி - உங்கள் மீதும், மற்றவர்கள் மீதும் செல்வாக்கு - இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் பசு என்ற வார்த்தையை உச்சரித்தவுடன் என்ன நிகழ்கிறது? நான்கு கால்களுடனும், இரண்டு கொம்புகளுடனும், ஒரு வாலுடனும் ஒரு உருவம் உங்கள் மனதில் தோன்றுகிறதல்லவா ? ஒரு சாதாரண இரண்டெழுத்து வார்த்தை உங்கள் மனதில் மொத்த உருவத்தை யும் கொண்டு வந்து விடுகிறது. வார்த்தைகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. நாம் வார்த்தைகளை மதிக்காமல் தவறாகப் பயன்படுத்துவோமாயின், தொல்லைக்கு உள்ளாக நேரிடும்.

நீங்கள் முழுமையான விசுவாசத்துடன் இருக்கும்பொழுது, உங்களால் கவலைப்பட முடியாது. இதுவே உண்மையான வழிபாடு.

ஒரு சின்ன கதை....

ஒரு நாள் ஞானமடைந்த குருவான பீர்பாலும், அவரது மன்னரான அக்பரும் தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். ஒரு சந்தன மர வியாபாரியைப் பார்த்தனர். அக்பர் பீர்பாலிடம் சொன்னார், "எனக்கு ஏனென்று தெரியவில்லை. ஆனால் இந்த மனிதனைத் தூக்கிலிட வேண்டும் போல் தோன்றுகிறது!''. ஒரு மாதம் கழித்து, அவர்கள் அதே சந்தன மர வியாபாரியைக் கடந்து சென்றனர். இந்த முறை அக்பர் சொன்னார், "இது வினோதமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த மனிதனுக்கு இப்பொழுது ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும் போலிருக்கிறது!'. சற்றுப் பொறுத்து பீர்பால் சொன்னார், "ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சந்தன மர வியாபாரியின் வியாபாரம் மிகவும் நொடித்துப் போயிருந்தது. அவன் உங்களைக் கடந்து செல்லும் பொழுது, நீங்கள் இறந்தால் உங்கள் இறுதிச் சடங்குகளுக்காக உங்கள் மந்திரி பிரதானிகள் தன்னிடம் நிறைய சந்தனைக் கட்டைகளை வாங்குவார்கள் என்று நினைத்தான். அவன் அனுப்பிய இந்த எதிர்மறை அதிர்வுகள் உங்களை அவன் மீது வெறுப்புக் கொள்ள வைத்தது. நான் உடனே நமது இராஜாங்கத்திற்கு மேசை நாற்காலிகள் செய்வதற்காக நிறைய சந்தனக் கட்டைகளை அவனிடம் வாங்கினேன். இன்று அவன் உங்கள் மீது மிகவும் நன்றியுணா்வோடு இருப்பதால், இந்த நேர்மறையான அதிர்வுகளால் நீங்கள் தாக்கப்பட்டு அதனால் அவனுக்குத் தானமாக ஏதேனும் தரவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்!

உங்கள் எண்ணங்கள் நிறைய சக்தியைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் ஒரு

ஒவ்வொரு கணமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிறகு பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு என்ன இருக்கிறது. கவலையற்ற தெளிவான மனநிலையைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்று.

சொல்லுங்கள் ... ?

ஸ்வாமிஜி, 'சிந்தாதீகள்' என்று சில புத்தகங்கள் சொல்கின்றனவே-அவைகளை எப்படி துச்சமாகக் கருத முடியும், ஸ்வாமிஜி?

நீங்கள் அறிவு பூர்வமாகச் செயல்பட்டால், 'சின்ன விஷயங்களுக்காக உயிரை விடும்' வகையில் விழ மாட்டீர்கள்.

ஒரு சின்ன கதை....

ஒரு இளைஞன் அவனது நண்பனைக் காணச் சென்றான். அவன் கொண்டிருந்தான். அவன் கேட்டான், ''நீ சுவற்றுக்கு மீண்டும் பெயின்ட் அடிக்கப் போகிறாயா? நண்பன் சொன்னான், 'நான் வீட்டை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன்''.

பாருங்கள் ... நீங்கள் சின்ன விஷயங்களை அலட்சியம் செய்து விட முடியாது. ஆனால் நீங்கள் அதற்குப் போதுமான அளவு மட்டும் கவனம் செலுத்துமளவிற்கு அறிவுக் கூர்மையுடன் இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்காக வியா்வை சிந்த நேரிடும். சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள் என்று சொல்பவர்களின் பேச்சை ஒருபோதும் கேட்காதீர்கள். சின்ன ஒட்டை ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்து விடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அங்கு அறிவுக் கூர்மையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னால், எப்படி ஆனந்தமயமாக இருப்பது என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.

முதலில், சம்பந்தப்பட்ட, சின்ன விஷயங்கள் என்று சொல்லப்படும் விஷயங்களை, நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்க முடியாமல் இருப்பதால், அந்த விஷயங்களைச் செய்வதற்கான சக்தியைத் தானாகவே பெறுவீர்கள். நீங்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், அதன் பின் சென்று, உங்கள் வழியில் அதைச் செய்து முடிக்கப் போதுமான உறுதியும் சக்தியும் உங்களிடம் இருக்காது. அதன் பொருள், உங்கள் அறிவுக் கூர்மை முழுமையாக உங்கள் பின் இல்லை. ஏனெனில், அறிவுக் கூர்மையே சக்தி, சக்தியே அறிவுக் கூர்மை.

நீங்கள் அவற்றிற்காக வியர்வையைச் சிந்தினால், எங்கோ ஏதோ தவறாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மிகவும் எழுவதற்குக் காரணம் சுய-முரண்பாடுகளே. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் நீங்களே முழுத் தெளிவாக இல்லாததனால் உங்களால் அதைச் செய்ய முடிவதில்லை. அந்தத் தெளிவு பிறக்க வேண்டுமானால், நீங்கள் உங்கள் அறிவுக் கூர்மையைப் பேணி வளர்க்க வேண்டும்.

அறிவுக் கூர்மை மேலெழும் பொழுது, சுய-முரண் பாடுகள் மறைந்து நீங்கள் ஒருங்கிணைக்கப்படத் தயாராகி விடுவீர்கள். நீங்கள் ஒருங்கிணையத் தயாராகி விட்டால், உங்கள் அறிவுக் கூா்மை மேலும் வளரும். நீங்கள் இந்த சுழற்சிக்குள் வர வேண்டும். இந்தச் சுழற்சி உங்கள் கவலை களையும் அகற்றி விடும்.

உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் எதிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு ஒரே வழி அறிவு பூர்வமாக இருப்பதே.

நீங்கள் எதைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் ? எதிர்காலமும் நிகழ்காலமாகவே வரும். அதனால் நிகழ்காலத்தை கவனியுங்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே உள் பேச்சையும் கவலை களையும் விட்டுவிடும் ஆர்வம் இருந்தால், ஒரு சின்ன பயிற்சியை முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எல்லா விஷயங் களையும் நினைத்துப் பாருங்கள். மற்ற விஷயங்களை அண்ட விடாமல் இந்த விஷயங்களை மட்டுமே உங்கள் மனதை விட்டு நீங்காமல் வைத்திருப்பதாக உறுதியான முடிவெடுங்கள். வேறு எதுவானாலும், அதை முடிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொடுத்து விட்டுப் பிறகு அதைப் பற்றி மறந்து விடுங்கள். இந்தப் பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்; ஏராளமான சக்தி சேமிக்கப்படுவதைக் காண்பீர்கள்.

பாருங்கள் ... மேலும் மேலும் அதைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பதன் மூலம் உங்கள் கவலைகளுக்கு நிறைய சக்தியைக் கொடுக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, எடுத்தவுடன், அவளது தோழிகளிடம் அன்று வேலைக்காரி வரவில்லை என்றுதான் ஆரம்பிப்பாள். அதுதான் அவளது அன்றைய மனச்சோர்வு. நீங்கள் உண்மையிலேயே வேலைக்காரி வரவில்லை என்று மனச்சோர்வடைந்திருந்தால், உங்களுக்கு உண்மையிலேயே அதை விட்டு வெளியே வரும் விருப்பம் இருந்தால், அதை அப்படியே விட்டுவிட்டு, நீங்களே வேலையை செய்து முடித்திருக்க வேண்டும்! தர்க்க ரீதியாக இது மிகவும் சரியாகப்படவில்லையா?

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? நீங்கள் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்; உங்கள் தோழியும் உங்கள் மனச்சோர்விற்குத் தீனி போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது நீங்கள் தேர்ந்தெடுப்பதில்லை. கவலையின் அடிப்படைக் காரணம் எப்பொழுதும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருத்தலே.

அவள் உங்களுக்காக இரக்கப்பட வில்லை என்றாலோ அல்லது 'வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும், நீங்கள்தான் எல்லாவற்றையும் தாண்டி மேலே செல்ல வேண்டும்' என்று சொன்னாலோ, நீங்கள் உடனே இன்னொரு தோழியை அமைத்து அவளிடம் இவள் எப்படி அக்கறையின்றி இருந்தாள் என்று விவரிப்பீர்கள்! எண்ணிப்பாருங்கள் ... உண்மையிலேயே உங்களுக்கு வாழ்க்கையில் மேலே செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், தோழியின் வார்க்கை களைப் பாராட்டியிருப்பீர்கள், இல்லையா?

உங்களுக்கு உண்மையிலேயே மனச்சோர்வை விட்டு வெளியே வந்து வாழ்க்கையில் மேலே செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நீங்கள் நிச்சயமாக அதைச் செய்வதில் உங்கள் அறிவைப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் நீங்கள் ஏன் வேறு மாதிரி எதிர்ச்செயல் புரிகிறீர்கள் ? அதற்குக் காரணம், கவலைகளிலிருந்து வெளியே வரும் வழியைக் கண்டுபிடிப்பதை விட, அதைப் பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருப்பது மிகவும் சுகமாக இருக்கிறது.

நான் கொடுத்த அந்தச் சின்னப் பயிற்சியை நீங்கள் செய்ய ஆரம்பித்தால், உங்களுடைய எல்லாக் கவலைகளும் மறைந்து, நீங்கள் முற்றிலும் ஒரு புதிய மனநிலையைப் பெறுவதைக் காண்பீர்கள். உங்களுக்குள் ஒரு புதிய சக்தி அலைமோதுவதைக் காண்பீர்கள்; இப்பொழுது திடீரென்று கிடைக்கும் அந்தச் சக்தி, இதற்கு முன் நீங்கள் கவலைப்படுவதற்காகத் தேக்கி வைத்த சக்திதான் !

நீங்களே உங்களுக்கு நோ்மையான ஒரு சோதனை செய்து, இரகசியமாக உங்கள் கவலைகளைப் பேணிக்காக்கிறீர்களா,

உண்மையில் உங்களுடைய எல்லா உணர்ச்சிகளுமே, விழிப்பற்ற தன்மையின் விளையாட்டைத் தவிர வேறல்ல. நீங்கள் உருமாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரா என்பதைக் கண்டுபிடியுங்கள்.

நீங்கள் கவலைகளுக்குப் பின்னால் செல்வதை நிறுத்திய வுடன், மற்றவர்கள் எவ்வாறு ஆதரவற்று அந்தச் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியும். கவலைகளைப் பற்றி மக்களிடம் முடிவில்லாமல் பேசிக் கொண்டிருப்பதன் மூலம் அதை எப்படிப் பெரிதுபடுத்துகிறார்கள் என்பதை உங்களால் காணமுடியும். இந்தக் 'கவலையைப் பற்றிப் பேசுபவதையே', 'கவலையைப் பற்றிக் கவலைப்படுதல்' என்று அழைக்கிறேன்! உங்களால் கவனிக்க முடிந்தால் மட்டுமே, இது நிற்கும். நீங்கள் கவனிப்பவர் ஆகும் வரை, உணர்ச்சிகளில் சிக்கிக் கொண்டு, அவைகளுக்கு மிகுந்த சக்தியையும் அதிகாரத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன்... உங்களை உங்கள் கவலைகளிலிருந்து ஓடி விடச் சொல்லவில்லை. அதைப் பற்றிப் பேசுவதன் மூலம் பெரிதுபடுத்தாதீர்கள் என்று சொல்கிறேன். உங்கள் சக்தியை அதில் செலவழிக்காதீர்கள். அதற்குப் பதில் செய்ய வேண்டியதை கவனித்தீர்களானால், அவைகள் உங்களைக் கவலைப்படுத்துவதை நிறுத்திவிடும். நேரத்தை வீணாக்காமல் அவைகளை உடனே கவனியுங்கள், அவ்வளவுதான்.

உங்கள் கவலைகளுடன் நீங்கள் சுகமாக இருக்கத் தொடங்கி விட்டீர்களா என்று உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள். கவலைகள் உங்களைக் கட்டுப்படுத்து கின்றனவா அல்லது நீங்கள் கவலைகளைக் கட்டுப்படுத்துகிறீர்களா என்பதை அறிய இதுவே அளவுகோலாகும். நீங்கள் எந்த நடவடிக்கையும்

நீங்கள் முழு விழிப்புணர்வோடு வாமும்பொருக்கு. ஒருபோதும் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுவதில்லை. மீண்டும் பேசுவதில் சுகம் காணுவீர்களானால், கவலைகள் உங்களைக் வைத்துக்கொண்டிருக்காமல், செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்வீர் களானால், நீங்கள் அவற்றைக் கட்டுப்படுத்துகிறீர்கள்!

ஸ்வாமிஜி, நீங்கள் இதற்குமுன் குடிப்பதைப் பற்றிச் சொன்னீர்கள். என் கணவர் எப்பொழுதுமே குடித்துக் கொண்டிருக்கிறார்; குடிப்பதாகச் சொல்கிறார். நான் என்ன செய்வது ?

நான் சொன்னது போல, இது ஒரு பொதுவான பிரச்சினை. எப்படியாயினும், உங்கள் கணவர் இங்கிருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். குடிப்பழக்கத்தை ஆராய்ந்து பார்த்தீர்களானால், நீங்கள் எவ்வளவு சுய-முரண்பாட்டுடன் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதை விளக்க முயற்சி செய்கிறேன்.

நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்காகக் குடிக்கிறீர்கள்; ஆனால் அது துயரமான துயரமாக முடிந்துவிடுகிறது. நீங்கள் சமுதாயத்தோடு இணக்கமுள்ளவர் என்று அழைக்கப்படுவதற்காக, சமுதாயம் உங்களை ஏற்றுக் கொள்வதற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் ஆடம்பரத்திற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் தாங்கமுடியாத துன்பம் உடையவராகி விடுகிறீர்கள். உங்கள் கவலைகளை யெல்லாம் மறந்து தூங்கலாம் என்று குடிக்கிறீர்கள், ஆனால் எழுந்திருக்கும் போது முன்னை விடப் பலவீனமாக உணர்கிறீர்கள்! பரவச அனுபவத்திற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் மனச்சோர்விற்கு ஆளாகி விடுகிறீர்கள். தன்னம்பிக்கையைப் பெறுவதற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் உங்களையே கண்டு அஞ்சுகிறீர்கள். உரையாடலைத் தொடர்வதற்காகக் குடிக்கிறீர்கள்,

உங்கள் கவலைகளுடன் நீங்கள் சுகமாக இருக்கத் தொடங்கி விட்டீர்களா, என்று உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள்.

ஆனால் முடிவில் தெளிவற்றுப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினைகள் கரைவதற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் அவை பெருகுவதைத்தான் காண்கிறீர்கள்.

இவையெல்லாம் உண்மை என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்! இப்பொழுது நேர்மையுடன் சொல்லுங்கள், குடிப்பது உண்மையிலேயே பிரயோஜனமுள்ள ஒரு செயலா? இவ்வாறுதான் நீங்கள் இந்த விஷயத்தில் மட்டு மின்றி வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் சுய-முரண்பாட்டுடன்- இருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியுமானால், உங்களின் ஒவ்வொரு அவுன்ஸ் சக்தியையும் அந்த திசையில் செலவழிப் பீர்களானால், நீங்கள் நிலையாக வளருவீர்கள்; மகிழ்ச்சியை உணருவீர்கள். பிறகு நீங்கள் ஒரு போதும் சுய-முரண்பாட்டுடன் இருக்க மாட்டீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு முறை குடிக்கும் பொழுதும், முழுமையான விழிப்புணர்வுடன் குடியுங்கள். அதை விளக்குகிறேன் ... நீங்கள் ஒவ்வொரு முறை குடிக்கும் பொழுதும், விழிப் புணர்வுடன், மெதுவாக, உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்து, ஒவ்வொரு துளியையும் ரசித்து, குடியுங்கள்; அதற்கு உங்களுடைய உடலின் எதிர்வினையைக் கவனியுங்கள். அதைக் கூர்மையான விழிப்புணர்வால் நிரப்பப்பட்ட ஒரு செயலாகச் செய்யுங்கள். இதை நீங்கள் ஒவ்வொரு முறை குடிப்பதாகத் தீர்மானித்தவுடன் செய்தீர்களானால், நீங்கள் குடிப்பழக்கத்தை விட வேண்டியதில்லை ; அதுவே உங்களை ஒரேயடியாக விட்டுவிடும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

Self - contradictory

எதற்கும் அடிமையாக இருப்பது என்பது ஒரு விழிப்பற்ற அல்லது இயந்திரத்தனமான செயல். அடிமைத்தனம் என்பது குடிப்பழக்கத்திற்கோ அல்லது புகையிலைக்கோ மட்டுமல்ல. மதத்திற்கும்கூட அடிமையாக இருக்க முடியும். விழிப்புணர் வற்றும் இயந்திரத்தனமாகவும் வழிபடும் மக்கள், ஒரு குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றுபவர்கள், ஒருநாள் வழிபாட்டைத் தவறவிட்டாலும் மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு, அது ஒரு அடிமைத்தனம்; ஆதலால் அதைத் தவற விடுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எவ்வாறு போதைக்கு அடிமை யானவர் ஒரு மாலை குடிக்காமல் தவற விட்டாலும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வில் நடுங்கத் தொடங்குகிறாரோ, அதேபோல இயற்திரகதியிலான மதவாதியும் அவரது ஒரு பழக்கமான வழிபாட்டைத் தவற விடும் பொழுது ஒரு பெரிய வெறுமையை உணர்கிறார்.

விஷயங்களை விழிப்புணர்வுடன் செய்வதற்கும், பயத்தின் காரணமாகவும், இயந்திரத் தனமாகவும் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வதில்தான் விடை இருக்கிறது. விஷயங்களை முதல் வகையில் செய்வது உங்களை ஒருபோதும் எந்தவிதமான கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வராது. அது உங்களை இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்படுத்தாது. நீங்கள் எஜமானராக இருப்பீர்கள். விஷயங்களை இரண்டாவது வகையில் செய்வது உங்களைக் கட்டுப்படுத்தித் துயரத்தை ஏற்படுத்தும். நீங்கள் அடிமையாக இருப்பீர்கள்.

அடிமைத்தளையிலிருந்து ஒரு விழிப்புணர்வால் நிரப்புங்கள்; அது உருமாற்றம் அடையும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ... ஒரு

உங்கள் எண்ணங்கள் நிறைய சக்தியைக் கொண்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அடிமைத்தனத்தை விட்டுவிட வேண்டிய குவை இருப்பதாக ஒரு போதும் நினைக்காதீர்கள். நீங்கள் எதிர்க்கும் எதுவும் உங்களை விட்டுப் போக மறுக்கும். நீங்கள் வெறுமனே ஆழ்ந்த விழிப்பணர்வுடன் அதில் உருமாற்றத்தைக் கொண்டு வரவேண்டும், அவ்வளவே. நீங்கள் உருமாற்றத்தின் மொழியைப் பரிந்து கொள்வீர் களானால், சரியான பாதையில் இருக்கிறீர்கள்; திறந்த தன்மையின் பாதையில் இருக்கிறீர்கள்.

மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், "ஸ்வாமிஜி, உங்கள் பேச்சைக் கேட்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இப்பொழுது அதை எங்கள் தினசரி வாழ்வில் உபயோகப்படுத்தி அது வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும்''.

பாருங்கள் ... நான் விஷயங்களையே சொல்கிறேன் என்பதில் தெளிவாக இருங்கள். தினசரி வாழ்க்கையில் செய்ய முடியாத விஷயங்களை நான் சொல்வேன் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.

உண்மையில் நான் செய்வதெல்லாம், திரும்பத் திரும்ப அதே வேதாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் - ஆனால் வெவ்வேறு வார்த்தைகளில், தற்காலத்திற்கு ஏற்றவகையில் ; அதனால் அது உங்களுக்குக் கேட்பதற்கு இதமாக இருக்கிறது; உங்களுக்கு அது பொருத்தமாக இருப்பதாக நினைப்பதால், உங்களால் அதைப் பின்பற்ற முடிகிறது. அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது ... இந்தக் கருத்துக்களை நீங்கள் ஒரு புத்தகத்தில் படித்தால், அது வெறுமனே எழுதுபவரின் தலையிலிருந்து உங்கள் தலைக்குள் சென்று விடும். எந்தவிதமான அனுபவத்திற்கும் சாத்தியம் இல்லை. ஆனால் நீங்கள் இந்த வார்த்தைகளை ஒரு குருவிடம் - தனது

எதற்கும் அடிமையாக இருப்பதென்பது ஒரு விழிப்பற்ற அல்லது இயந்திரத்தனமான செயல்.

ஆத்மாவின் அனுபவத்திலிருந்து சொல்லும் ஒருவரிடம் இருந்து கேட்கும்பொழுது, நீங்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும், அது உங்களுக்குள் ஆழமாக நுழைந்து செல்கிறது.

தெளிவாக இருங்கள்... நான் உங்களுடன் என் அறிவைப் பகிர்ந்து கொள்ளவில்லை. என் அனுபவத்தை, என் வாழ்க்கை யைப் பகிர்ந்து கொள்கிறேன். என் இருப்புத் தன்மையிலிருந்து பேசும்பொழுது அது உங்கள் இருப்புத் தன்மையைத் தொட வேண்டும். அது உங்கள் வாழ்க்கையில் உருமாற்றத்தை ஏற்படுத்தும். வேறு வழியே இல்லை.

''எனது சகோதரிகளே…'' பேசியபொழுது, அரங்கத்தில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஒரு பெண்மணி எழுதினார், ''வெறும் கரவொலியை மட்டும் அல்ல, அவர் நாடு முழுவதையும் வென்றார். ஒரு அன்பின் ஒட்டம் எங்கள் அனைவரையும் கடந்து சென்றதாக, எங்கள் இருப்புத் தன்மையைக் கடந்து சென்றதாக உணர்ந்தோம்... ''. பின்னர் அந்தப் பெண்மணி, விவேகானந்தரிடம் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று கேட்ட பொழுது, அவர் சாதாரணமாகச் சொன்னார், ''ஏனெனில் அது எனக்குள் இருந்து வந்தது''.

விவேகானந்தர் அவரது இருப்புத் தன்மையிலிருந்து பேசினார். வார்த்தைகள் மூளையிலிருந்து வெளிவரும் பொழுது, அது மற்றவரின் மூளையைத் தொடுகிறது; இதற்குத் "தொடர்பு கொள்ளுதல் " என்று பெயர். வார்த்தைகள் ஒருவரின் இதயத்திலிருந்து வரும் பொழுது அது மற்றவரின் இதயத்தைத் தொடுகிறது. இதற்கு "சங்கமித்தல்" என்று பெயர். தொடர்பு கொள்ளுதல் போதுமானதல்ல; நாம் எப்படி சங்கமிப்பது

Communication

என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இப்பொழுது சொல்கிறேன் ... என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பேசுகிறேன். அதனால் நீங்கள் முழு மனதுடன் கேட்கிறீர்கள்.

பேசுபவர் முழுமையாகப் பேசும்பொழுது, கேட்பவரும் முழுமையாகத்தான் கேட்க முடியும். அவருடைய வாழ்க்கையில் உருமாற்றம் நிகழும். உங்களுடைய வாழ்க்கை என் வார்த்தைகளால் தொடப்படவில்லையானால், எனக்குப் பேசுவதற்கு உரிமையில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். என் அனுபவத்தின் உண்மைத் தன்மையை சந்தேகப்படுவதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு. என்னுடைய வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் உருமாற்றம் ஏற்படுத்தவில்லை என்று எண்ணுவீர் களானால், அதற்காக நீங்கள் குற்ற உணர்வடைய வேண்டிய தேவையில்லை. அதனை வெளியே சொல்லுங்கள். ஆனால் நான் சொல்கிறேன். நீங்கள் என்னால் தொடப்படாமல் போவதற்கு வழியே கிடையாது!

ரீங்கள் இதயத்தின் வழியாகக் கேட்பீர்களானால். சமயம் வரும்பொழுது, என் போதனைகள் உங்கள் வாம்க்கையில் தானாகவே வேலை செய்வகைக் காண்பீர்கள். தானே உறுதி யில்லாத ஒரு ஆசிரியரே தன் மாணவர்களை திரும்பிச் சென்று அவரது வார்க்கைகளைப் பயிற்சி செய்யச் சொல்லி வற்புறுத்த வேண்டியதிருக்கிறது.

ஒரு உண்மையான குரு பேசும்பொழுது, வெறுமனே கேட்பதே போதும். முழுமுமையாகக் கேளுங்கள்; உருமாற்றம் தானாகவே நிகழும்.

சாந்தோக்ய உபநிஷத் அழகாக விவரிக்கிறது...

வார்க்தைகள் மூளையில் இருந்து வரும்பொழுது அது மற்றவரின் மூளையைத் தொடுகிறது. இதற்குத் தொடர்பு கொள்ளுதல் என்று பெயர்.

குரு சீடனிடம் ஒன்பது முறை திரும்பத் திரும்பச் சொல்கிறார், தத்த்வம் அஸி - நீயே அதுவாக இருக்கிறாய். வெறுமனே கேட்பதன் மூலம், குரு சொல்வதை இருப்புத் தன்மையிலிருந்து உண்மையிலேயே ஆன்மீக அனுபவத்தை அடைகிறான்! குரு, சீடன் இருவருமே முழுமையுடன் செயல்படும்பொழுது இது சாக்கியமாகிறது.

நீங்கள் ஒரு குருவைச் சுற்றியிருக்கும் பொழுது, வார்த்தை களுக்கு முழுமையாக முக்கியத்துவம் கிடையாது. ஒரு குருவைச் சுற்றியிருக்கும் பொழுது, வெறுமனே அமைதியாக அவரை கிரஹித்துக் கொள்ளுதலே உங்களிடம் ஒரு உண்மையான உருமாற்றத்தைக் கொண்டு வரும். ஆனால் என்ன செய்வது ? நீங்கள் உங்கள் உள்பேச்சில் நன்றாகச் சிக்கிக் கொண்டிருப்பதால், எனக்கு உங்களை ஊடுருவிச் செல்வது சாத்தியமற்றப் போய் விடுகிறது. அதனால் நான் பேசுகிறேன். நான் வார்க்கைகளை உபயோகப்படுத்தி உங்களை அமைதியில் ஆழ்த்துகிறேன்.

நான் எதற்காக உங்களிடம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள் ? ஏனெனில், நான் பேசவில்லையெனில், நீங்கள் உங்களுக்குள் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பீர்கள் - இறந்த காலத்தைக் கூறுபோட்டு ஆராய்ந்து கொண்டும், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டும், முடிவெடுத்துக் கொண்டும், எடை போட்டுக் கொண்டும் இன்னும் பலவும் செய்து கொண்டிருப்பீர்கள். நான் பேசும் பொழுது, நீங்கள் தவற விட்டுவிடும் பயத்தில் என் வார்த்தைகளில் இலயித் திருக்கும் நேரத்தை நான் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உங்களுக்குள் நுழைந்து விடுவேன்!

வார்த்தைகள் ஒருவரது இதயத்தில் இருந்து வரும்பொழுது, அது மற்றவரின் இதயத்தை தொடுகிறது. இதற்கு சங்கமித்தல் என்று பெயர்.

நான் பேசும் பொழுது, உண்மையில் நான் உள்ளே அமைதியாகத்தான் இருக்கிறேன். பாருங்கள் ... ஒரு குரு பேசும் பொழுது உண்மையிலேயே அவருக்குள் அமைதிதான் நிலவுகிறது. அதனால்தான் அவர் குருவாக இருக்கிறார்! ஆனால் உங்கள் நிலையிலோ, நீங்கள் மௌனமாக இருக்கும் பொழுதும் உள்ளுக்குள் பேசிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். உள்பேச்சு இருந்து கொண்டிருக்கும். அதுதான் வித்தியாசம். உங்கள் மௌனம் என்பது வழக்கமாக உங்களுக்குள் நிகழும் கேட்க முடியாத வெறும் பேச்சுதான். உங்களுக்குள் நீங்கள் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளிற்கு எந்தவித சம்பந்தமுமின்றி ஒருகுரங்கு போலதாவிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரி உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நீங்கள் வெளியே அமைதியாக இருப்பதுபோல் காட்சியளிக்கிறீா்கள், அவ்வளவே.

அதனால் வெறுமனே எவ்வாறு கேட்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தலையால் கேட்காதீர்கள். உங்கள் இருப்புத்தன்மையை எனக்குத் திறவுங்கள். ஆழ்ந்த விசுவாசத் துடன், முழுமையான சாணாகதியுடன் கேளுங்கள், என் வார்க்கை களைப் பற்றிக் கொண்டு, எடுத்துச் செல்ல முயற்சி செய்யாதீர்கள்: என்னை உங்கள் இருப்புத் தன்மையில் எடுத்துச் செல்லுங்கள். அதுவே மிகவும் போதுமானது. உங்களுக்குள் என் இருப்பு இரச வாதக்கை நிகழ்த்தும்.

சரி ... நாம் இப்பொழுது உங்கள் மணி பூரக சக்கரத்தை முழுமையாக சுத்தம் செய்துவிடும் மணி பூரக சுத்திக்ரியா என்னும் தியான முறைக்குள் நுழைவோம் ...

ஆனந்தமாக இருங்கள்!