KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/மணிபூரக சுத்திக்ரியாSign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

மணிபூரக சுத்திக்ரியா

(நீடிக்கும் நேரம் : 31 நிமிடங்கள்)

இந்த தியான முறையானது உங்களிடம் ஆழமாகப் பதிந்துள்ள எதிர்மறை மன அமைப்புகளையும், கவலைக ளையும் காலி செய்து உங்களை வெறுமையாக்கி விடும். இது உங்களுடைய எல்லா அடக்கப்பட்ட கோப உணர்ச்சிகளையும் கவலையையும் அகற்றி விடும். இந்தத் தியான முறையைச் செய்தால் உங்களுடைய கவலைகள் மற்றும் சிக்கலான மன அமைப்புகளின் இருப்பிடமான மணிபூரகப் பிரதேசமான, தொப்புள் மகுதியில் மிகவும் இலேசாக உணர்வீர்கள். இந்தத் தியானத்தைச் செய்த பிறகு புதிய கவலைகளைச் சேகரித்து மீண்டும் மணிபூரகத்தின் மீது சுமையேற்றாமல் இருப்பது உங்களிடம்தான் இருக்கிறது.

இந்தத் தியானத்தை வெறும் வயிற்றிலோ அல்லது உணவிற்குப் பிறகு 2 மணி நேரம் கழித்தோ செய்யலாம்; இல்லாவிடில் வாந்தி எடுக்க நேரிடலாம்.

கண்களை மூடி நில்லுங்கள். உங்கள் மணிபூரகத் திற்குள் ஆம்ந்து சென்று, அந்தப் பகுதியில் எவ்வளவு கனமாக இருக்கிறது என்பதை உணருங்கள். அது உங்கள் கவலைகளால் நிரம்பியுள்ளது. ஒரு நிமிடம் மணிபூரக சக்கரத்தில் உங்கள் கவனத்தைக் குவியுங்கள். பல்வேறு காரணங்களால் உங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் எல்லாக் கோபங்களையும் கவலைகளையும் வெறுமனே உணர முயற்சி செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் தொப்புள் பகுதியில் இருந்து எவ்வளவு உரக்க முடியுமோ அவ்வளவு உரக்க உளற ஆரம்பியுங்கள் (Gibberish). கத்தும் பொழுது வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். வார்த்தைகளை உபயோகிக்கும் பொழுது, பழக்கமான மற்றும் சமீபத்திய உணர்ச்சிகள் மட்டுமே வெளிவரும். மேலும் வார்த்தைகள், உண்மையில் அவற்றின் பின்னால் உள்ள உணர்ச்சிகளில் செயலாற்றுவதற்கு பதில், மேலும் வார்த்தைகளுக்கே வழி வகுக்கும். அது வெறும் பொருளற்ற உளறலாக இருக்கட்டும் ; அது மட்டுமே உங்களுக்குள் உள்ள விழிப்புணர்வற்ற பகுதியை, ஆழமாக மறைந்துள்ள உணர்ச்சிகளை திறந்து வெளியே கொண்டு வரும். கைகளை அசையுங்கள்; கத்துங்கள்; கதறுங்கள்; கண்ணீர் வந்தால் வரட்டும் ; விட்டு விடுங்கள்.

உங்களுடைய எல்லா எதிர்மறை உணர்வுகளையும் கொட்டி விட இதை உங்கள் முழு பலத்துடன் செய்யுங்கள். உங்கள் உணர்ச்சி களில் முழுமையாக மூழ்கி விடுங்கள். மற்ற எல்லாவற்றையம் மறந்து விடுங்கள்.

இருபத்தியொரு நிமிடங்களுக்குப் பிறகு நிறுத்துங் கள். அடுத்த 10 நிமிடங்களுக்கு கண்களை மூடியவாறே அமைதியாக அமர்ந்திருங்கள். உங்கள் எண்ணங்களுக்கு ஒரு வெறும் சாட்சியாக இருங்கள். உங்கள் மணிபூரகப் பகுதி இலேசாகியிருப்பதை உணருங்கள். அது மிகவும் இலேசாகவும் ஆனந்தமயமாகவும் இருக்கும். உங்கள் முழு இருப்புத் தன்மையுமே மிகவும் இலேசாகவும் சுதந்திரமாகவும் இருக்கும்.

( பங்கேற்பாளர்கள். மணிபூரக சுத்திக்ரியாவைப் பயிற்சி செய்கின்றனர்)

ஒம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!

மெதுவாக, மிக மெதுவாக, உங்கள் கண்களைத் திறவுங்கள். அடுத்த அமர்வில் சந்திப்போம். நன்றி.

ஆனந்தமாக இருங்கள்!