KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/ஆனால் ஸ்வாமிஜி, நாங்கள் வேண்டுமென்றே கவலைப் படவில்லை. பிறகு, எங்கள் கவலைகளுக்கு நாங்கள்தான் காரணம் என்று எவ்வாறு சொல்கிறீர்கள் ?Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

ஆனால் ஸ்வாமிஜி, நாங்கள் வேண்டுமென்றே கவலைப் படவில்லை. பிறகு, எங்கள் கவலைகளுக்கு நாங்கள்தான் காரணம் என்று எவ்வாறு சொல்கிறீர்கள் ?

கவலை உங்கள் மனதின் விழிப்பற்ற நிலையாகிவிட்டது. அதற்கு உங்கள் முயற்சியெல்லாம் தேவையில்லை. அது வெறுமனே இருக்கிறது, அவ்வளவுதான். நீங்கள் அதற்காக விழிப்புடன் முயற்சி ஏதும் செய்ய வேண்டியதில்லை, அது எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறது.

ஒரு சின்ன கதை....

ஒரு பெண், ஹோட்டலின் வரவேற்பாளரை அழைத்து உதவுமாறு கத்தினாள். வரவேற்பாளர் அவளது அறைக்கு வந்தாள். மற்றொரு அறையில் ஒரு மனிதர் நிர்வாணமாக நிற்பதை ஜன்னல் வழியாக என்னால் பார்க்க முடிகிறது என்று அந்தப் பெண் கத்தினாள். வரவேற்பாளரும் ஒரு மனிதன் மேல் பாதி வெற்றுடம்புடன் நின்று கொண்டு இருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அவள் சொன்னாள், "மேடம், அவர் உடம்பின் மேல் பாகம் மட்டும்தான்

ஆனந்தத்திற்கு முதல்படி கவனிப்பராக ஆதலே. வாழ்க்கையை வெறுமனே ஒரு நாடகத்தைப் போல் கவனியுங்கள்.

வெற்றுடம்பாக இருக்கிறது. எப்படி நீங்கள் அவர் நிர்வாணமாக இருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம் ?'. அந்தப் பெண் கத்தினாள், ''அந்த அலமாரியின் மேல் ஏறிப் பாருங்கள், தெரியும்''.

(பலத்த சிரிப்பு ! )

எல்லாம் சரியாக இருந்தாலும், ஒரு மின் விளக்குடன் நாம் கவலைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்! நாம் இதை வேண்டுமென்றே செய்வதில்லை. நாம் அதை முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் இயல்பாகச் செய்கிறோம் - அதுதான் பிரச்சினையே! நமது மனநிலை 180° மாற்றம் அடைய வேண்டும்.

இன்னொரு சின்ன கதை ...

ஒரு போலீஸ்காரர் இரவு ரோந்து போய்க் கொண்டு இருக்கும் பொழுது வழியில் ஒரு பசு மாடு ஒரு சந்தின் நடுவில் இறந்து கிடப்பதைப் பார்த்தார். அவர் அதை அருகிலுள்ள ஒரு தெருவை நோக்கி இழுத்துச் செல்ல ஆரம்பித்தார். ஒரு வழிப்போக்கா் அவரிடம் ஒரு செத்துப் போன பிராணியை ஏன் இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்தப் போலீஸ்காரர் சொன்னார், "அப்பொழுதுதான் நான் நாளைக்குப் புகார் செய்ய சுலபமாக இருக்கும். ஏனெனில் எனக்கு அந்தத் தெருவின் பெயர் தெரியும்''.

(சிரிப்ப !)

நமக்கு எப்படி தன்னிச்சையாக, இயல்பாக இருப்பது என்பது தெரியாததால், நாம் எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். நமது திட்ட வடிவப்படி பொருந்தி

வருவதற்காக, நாம் வாழ்க்கையில் விஷயங்களைச் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் திரவத்தன்மையோடு வாழ்வதில்லை. நீங்கள் ஒரு திரவத்தன்மையோடு வாழ்ந்தால், வேலை செய்ய வேண்டிய தேவையில்லை. நீங்கள் வெறுமனே மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருக்கலாம்.

உதாரணத்திற்கு. நீங்கள் எப்பொழுதும் ஆனந்த மயமாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னால், எப்படி ஆனந்தமயமாக இருப்பது என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவீர்கள்! உங்களுக்கு எதையும் கவலையுடன் மட்டுமே ஆரம்பிக்கத் தெரியும்; அதுதான் பிரச்சினை. அதனால்தான் பல சமயங்களில் நீங்கள் என்னிடம் ஏதேனும் கேட்கும் பொழுது, நான் எதையும் நேரடியாகவோ அல்லது விளக்கமாகவோ ஒருபோதும் செ ால்வதில்லை. நான் வெறுமனே சில சுருக்கமான எளிதில் புரியாத வாக்கியங்களை - உங்கள் மனம் கவலையாக எடுத்துக் கொள்ளாத வகையில் - சொல்லி விடுவேன். அதே சமயம் அதை ஊடுருவிப் புரிந்து கொள்ளும் சக்தியையும் கொடுப்பேன்.

சொல்லுங்கள்...