KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/ஸ்வாமிஜி, நாம் ஆழமான கனவற்ற உறக்கத்திலும், உண்மையான தியானத்திலும், ஒரே மாதிரியான மனமற்ற நிலையில்தான் இருக்கிறோமா?Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

ஸ்வாமிஜி, நாம் ஆழமான கனவற்ற உறக்கத்திலும், உண்மையான தியானத்திலும், ஒரே மாதிரியான மனமற்ற நிலையில்தான் இருக்கிறோமா?

இல்லை. நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது விதை நிலைக்குச் சென்று விட்டு மீண்டும் தூங்குவதற்கு முன்பிருந்த பழைய நிலைக்கே திரும்பி வருகிறீா்கள். உங்களுக்குள் வளர்ச்சி எதுவும் நிகழ்வதில்லை. நீங்கள் உண்மையான தியானத்தில் இருக்கும் பொழுது, விதை நிலைக்குச் செல்கிறீர்கள்; விதை பிளந்து நீங்கள் அடுத்த உயர் நிலைக்குச் செல்கிறீர்கள். அதுதான் வித்தியாசம். இரண்டும், இரண்டு எல்லைகள். நீங்கள் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, இரண்டு எல்லைகளும் ஒன்று போலத் தோன்றலாம். ஒரு பித்தன் ஞானி போலத் தோன்றலாம்.

நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல. பூரண சரணாகதி செய்யும் எண்ணமே, உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமான ஒன்றாக மாற்றவல்ல ஆற்றல் பெற்றது.

இருவரும் தங்களது மனதைத் தொலைத்தவர்கள்தான், ஆனால் வெவ்வேறு திசைகளில்.

சொல்லுங்கள்...

ஸ்வாமிஜி, எப்படி நீங்கள் எப்பொழுதுமே மிகவும் அழகாக இருக்கிறீர்கள்... ? !

( THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார் ! )

ஆம், இது ஒரு சுவையான கேள்வி! எப்படி நான் எப்பொழுதும் அழகாகத் தோன்றுகிறேன்!

பாருங்கள், அது வடிவத்தை மட்டும் பற்றியதாக இருந்தால், நீங்கள் ஈர்க்கப்படும், உங்களுக்கு அழகாகத் தோன்றும், இந்த வடிவமும், அதன் ஈர்க்கும் திறனும் காலப்போக்கில் தடுமாற்றம் கண்டு விடும். அது சூழ்நிலையைப் பொறுத்தும், ஆடை அணிகலன் களைப் பொறுத்தும் தடுமாற்றம் அடையும். எண்ணிப்பாருங்கள்... நீங்கள் என்னை இதே உடையில் பார்க்கிறீர்கள், அதே பாடல்களைக் கேட்கிறீர்கள், தினமும் அதே குரலைக் கேட்கிறீர்கள்; ஆனாலும் எப்பொழுதும் அதே ஆர்வத்துடன் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் வேறு யாருடனாவது இதே போன்று தொடர்ந்து இருக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் உணரும் அந்த அழகை ஒளிவீச்ச் செய்வதும், உங்களை ஈர்ப்பதும் இருப்புதான், நபர் அல்ல.

உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு நபர்'. ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு வெறும் இருப்பு², அவ்வளவுதான். அஹங்காரமற்ற இருப்பு மிகுந்த ஆற்றலுடையது; அதுவே உங்களை வெறுமனே கவர்கிறது. என்னை விட இன்னும் சிறந்த தோற்றத்துடன் மிகவும் அழகாக இருக்கும் ஆண்களும், நடிகர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், இல்லையா?

அவர்களிடமும் நீங்கள் கவர்ந்து இழுக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் என்னிடம் இருப்பது போன்ற ஒரு ஆழமான ஏக்கத்துடன் அல்ல.

இங்கு, ஏக்கம் உங்கள் இருப்புத்தன்மையிலிருந்து வருகிறது ; ஏனெனில் உங்கள் இருப்புத்தன்மை இந்த வடிவத்தின் பின்னாலுள்ள தெய்வீகத்தைப் பார்க்கிறது. அதுவே உங்கள் இருப்புத் தன்மையின் ஒரே நோக்கம். உங்கள் இருப்புத் தன்மைக்கு, அஹங்காரமற்ற இருப்பு மிகவும் பரவசத்தைத் தருகிறது. அதனால்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் என்னை நோக்கி ஈர்க்கப் படுகிறீர்கள்!

பாருங்கள், ஒவ்வொரு மனிதனின் அடி ஆழத்திலும் கடவுளை உணரும் ஏக்கம் இருக்கிறது; ஆனால் அதை அவனால் உணர முடிவதில்லை! நீங்கள் என்னைப் பார்க்கும் பொழுது, என்னிடம் ஈர்க்கப்படுகிறீர்கள்; அந்த ஈர்ப்பு எதனால் என்று ஆச்சரியப்படுகிறீர்கள். அந்த ஈர்ப்பு உங்கள் இருப்புத் தன்மையின் அழைப்பு.

ஆனால் நீங்கள் உடனே அது என்னவாக இருக்கும் என்று எண்ண ஆரம்பித்து விடுகிறீர்கள்; உங்களுக்கு உங்கள் மூளையை உபயோகித்து எல்லாவற்றையும் தர்க்கமாகக் குறைத்து விட மட்டுமே தெரியும். கடவுள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவர். அதனால்தான் உங்களால் உங்கள் தர்க்கத்தைக் கொண்டு, என்னிடம் ஏன் ஈர்க்கப்படுகிறீர்கள் என்பதை விளக்க முடியவில்லை.

நீங்கள் அனைவரும், இங்கு மணிக்கணக்காக, கண் இமைக்காமல், வாய்பிளந்து என்னைப் பார்த்துக் கொண்டு, எது அவ்வாறு உங்களை வாய்பிளக்க வைக்கிறது என்று வியப்பிலாம்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஏக்கம், வீட்டை அடைந்து விடும் ஏக்கம். பல பிறவிகளாக நீங்கள் இந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்து

சரணடையும் செயலே முக்கியத்துவம் வாய்ந்தது. கடவுள் இலக்கல்ல, ஒரு சாக்கு மட்டுமே. சரணாகதியே உண்மையான இலக்கு.

கொள்ள முயற்சி செய்து, வெற்றி பெறாததால், மீண்டும் திரும்பி வந்திருக்கிறீர்கள்; இன்னொரு பிறவி எடுத்திருக்கிறீர்கள்.

இந்த ஏக்கத்தை உணரும் பொழுது, உங்களில் சிலர் அதைத் தொடர்ந்து சென்று உங்கள் உள் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கிறீர்கள்; ஆனால் இன்னும் சிலரோ அச்சமடைந்து தப்பியோடி விடுகிறார்கள். நீங்கள் வெளி வட்டத்திலேயே தயங்கி நின்று கொண்டு, என்னை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அதனால் ஏதேனும் நடந்தாலும் சுலபமாக ஓடிவிட முடியும்! பிறகு நான் உங்களை ஏமாற்றி, கற்றுக் கொடுத்து, 'நீங்கள் வந்து சேர்ந்து விட்டீர்கள், இனி நீங்கள் உங்கள் அஹங்காரத்தை விட்டு விடுவதைத் தவிர செய்ய வேண்டியது வேறு ஏதுமில்லை' என்பதைக் காண்பிக்க வேண்டியதாக இருக்கிறது!

நீங்கள் எப்பொழுதும் அச்சத்தில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள்; ஏனெனில் அவ்வாறுதான் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அச்சம் அஹங்காரத்தின் இன்னொரு சாத்வீகமான வடிவம். எங்கேயாவது விட்டுக் கொடுத்து விடுவோமோ என்ற அச்சத்தில், பயம் என்ற போர்வையில் கொஞ்சம் விலகியே நின்று கொண்டிருக்கிறீர்கள். அச்சத்தை அடக்கம் என்று எண்ணி விடாதீர்கள். அச்சம் அஹங்காரத்தின் மிகவும் ஏமாற்றக்கூடிய ஒரு வடிவம். நீங்கள் விட்டுவிட மிகவும் அஞ்சுகிறீர்கள். கரைந்து போய்விடுவீர்களோ என்று மிகவும் அஞ்சுகிறீர்கள்.

புரிந்து கொள்ளுங்கள் ... பிரபஞ்ச இருப்புத் தன்மை அன்புமயமானது. அது அன்பைத் தவிர வேறெதுவுமில்லை. மேலும், பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு உங்களைத் தெரியும்; ஏனெனில் நீங்களும் அதன் ஒரு பகுதிதான். இருப்புத் தன்மைக்கே உங்களைத் தெரியவில்லையென்றால், வேறு யாருக்குத் தெரியும் ? அதனால் அச்சப்படுவதற்கு ஏதுமில்லை.

ஒரு குருவானவர், நீங்கள் சரணடைவதற்கு ஒரு கருவியாக இருந்து உதவுகிறார்.

நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் பாசாங்கு ஏதும் செய்யத் தேவையில்லை. வெறுமனே சாதாரணமாக நீங்களாக இருந்தாலே போதும்; பிரபஞ்ச இருப்புத்தன்மை தானாகவே உங்கள் மீது தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கும். பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு அன்பு செய்யவும், மன்னிக்கவும் மட்டுமே தெரியும். அதற்கு வேறு எந்தப் பண்பும் தெரியாது. நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையை, உங்களுடைய சொந்த, அஹங்காரம் பிடித்த, பெயரளவிலான, ஒழுக்க நியதிகளைக் கொண்டு எடை போடுகிறீர்கள்; அதுதான் பிரச்சினை; அதனால்தான் நீங்கள் இது போன்ற செயல்களைச் செய்ய ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்களும் இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒரு பகுதிதான் என்பதைத் தெரிந்து கொள்ளும் பொழுது, ஒரு விடுதலை பெற்ற உணர்வை அடைவீர்கள். நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையில் இருந்து வேறுபட்டவர் என்று எண்ணுவீர்களானால், துயரத்தில் விழுவீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாக இருப்பது என்பது மிகவும் உயர்ந்த ஒரு உணர்வைத் தரும். உங்கள் அஹங்காரத்தினால்தான், நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையில் இருந்து வேறுபட்டவர் என்று எண்ணுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் பயணத்தை உள்நோக்கித் திருப்பும் பொழுது, நீங்களும் இந்தப் பிரபஞ்சத்தின் பகுதிதான் என்பதை மேலும் மேலும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அஹங்காரத்தை அகற்றி விடும். விழிப்பணர்வு ஆட்கொள்ளும் பொழுது, அஹங்காரம் கரைந்து விடத்தான் வேண்டும். வேறு வழியே இல்லை. விழிப்புணர்வு ஆட்கொள்ளும் வரையில், உங்களை ஒரு திடமான வஸ்துவாகவே உணர்ந்து, பிரபஞ்ச இருப்புத் தன்மையிலிருந்து உங்களை முழுவதுமாக துண்டித்துக் கொண்டு விடுகிறீர்கள்.

'நான் யார்?' – என்ற கேள்விக்கு பதிலைத் தேடுவோமாயின், அதுவே ஒரு தியான முறையாகி, நாம் கடவுளை உணர்ந்துவிட முடியும்.

உண்மையில், வானம் முழுவதையும் உங்களால் பார்க்க முடியும். ஆனால் நீங்கள், உங்கள் அஹங்காரம் எவ்வளவு அனுமதிக்கிறதோ அவ்வளவு மட்டுமே, உங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள்; அந்தச் சட்டங்களுக்குள் தெரிவதே உண்மையான வானம் என்றும் எண்ணுகிறீர்கள்.

இது போன்ற எல்லா விளையாட்டுக்களுமே அஹங்காரத் தின் விளையாட்டைத் தவிர வேறல்ல. இதை அறிந்து கொள்வதே, இதை விட்டு வெளியே வருவதற்கான முதல் படியாகும். உங்களுக்குள் இருக்கும் எந்தப் பூட்டையும் திறப்பதற்கு, விழிப்புணர்வே பிரதான திறவுகோலாகும். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்- விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள் என்று.

ஸ்வாமிஜி, உங்களுக்கு எங்கள் மீதுள்ள அக்கறையை எவ்வாறு விவரிப்பீர்கள் ?

எனக்கு உங்கள் மீதுள்ள ஒரே அக்கறை, நீங்கள் மலர உதவுவதுதான். அதுவே நான் உங்களுக்குச் செய்யக் கூடிய, நீங்கள் எனக்குச் செய்யக் கூடிய மிகச் சிறந்த விஷயமாகும் ! மக்கள் உள்ளுறை சக்தியையும் உணர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இப்பொழுது, மனிதன், தன்னை ஒரு ஆண்மீக அனுபவத்திற்காகக் காத்திருக்கும் மனிதப் பிறவியாக எண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் மனித அனுபவத்திற்காகக் காத்திருக்கும் ஆன்மீகப் பிறவியென்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நான் அவனுக்கு அதைக் கற்றுத் தரவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அவன் அதைக் கற்றுக் கொள்ள ஒரே வழி, அவனை ஒரு ஆன்மீகப் பிறவி என்று அறிய விடாமல், ஒரு மனிதப் பிறவி

எல்லாம் ஒன்றே. அதுவே பிரபஞ்ச இருப்புத் தன்மை அல்லது கடவுள்.

என்று எண்ண வைக்கும் அஹங்காரத்தின் வடிவங்களை அறிந்து கொள்வதே. மனிதன் பிரார்த்தனை செய்வதில் இருந்து ஆகுதலை நோக்கி நகரும் பொழுது, அவன் திறவுகோலைக் கண்டுபிடித்து விட்டான் என்று அர்த்தம்.

சொல்லுங்கள் ...

ஸ்வாமிஜி, தியானம் செய்யும் பொழுது எவ்வாறு உருமாற்றம் நிகழ்கிறது? அதில் குருவின் பங்கு பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா ...

ஒருவன் கீழ்நிலை உணர்வுகளான கோபம், இச்சை, பொறாமை, அதிகப்பற்று முதலியவை உயர் நிலைச் சக்திகளாக உருமாறி விடுகிறது. இது அவனை உணர்வு நிலையிலும், விழிப்புணர்விலும் பிரதேசங்களை நோக்கி உந்தித் தள்ளுகிறது. பிறகு அவன் முன்பிருந்ததைப் போன்று அமைதியற்றிருக்க மாட்டான். சக்தி உருமாற்றம் தியானத்தின் மூலமாக மட்டுமே நிகழ முடியும்.

இந்த உருமாற்றம் ஒவ்வொரு தனிமனிதனிடமும் நிகழும் பொழுது, சமூகம் முழுவதும் உருமாற்றம் அடையும். மூர்க்கத்தனங்கள் குறைந்து பெருமளவில் இணக்கம் ஏற்படும். தனிமனித உருமாற்றமே உலக அமைதிக்கு மிகவும் அனுபவ சாத்தியமான ஒரு வழியாகும்.

தியானத்துடனும், குருவின் வழிகாட்டுதலுடனும் நீங்கள் கடந்து செல்லும், எவையெல்லாம் நீங்கள் இல்லையோ அவற்றை அழித்து விடும், செயல் முறையே உருமாற்றம் என்பது. குருவின் துணையுடன் கடந்து செல்லும் இந்தச் செயல்முறை வலியும் வேதனையும் தரும் ஒன்றாகும்; ஏனெனில் இதில் நீங்கள், நீங்கள் என்று நினைத்து, உங்கள் இதயத்திற்கு அருகில் வைத்திருக்கும் பல விஷயங்களையும் விட்டுவிட வேண்டியிருக்கும்.

குருநாதர், எவையெல்லாம் நீங்கள் இல்லையோ, அவற்றையெல்லாம் உங்களுக்குத் தொடர்ந்து காட்டிக் கொண்டேயிருப்பார்; அவையெல்லாம் தானாகவே நழுவி விழுந்து விடும். அவர் உங்களுடைய அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை உருவாக்குவார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவர் உங்களிடம் செயல்பட அனுமதிப்பதே; அவர், நீங்கள் பல பிறவிகளிலும் சேர்த்து வைத்த குப்பைகளையெல்லாம் எரித்து விடுவார்.

நான் மக்களிடம் சொல்வது வழக்கம்... நீங்கள் விலகி ஒடிவிட முயற்சி செய்தால், இன்னொரு முறை என்னைத் தவற விட்டு விடுகிறீர்கள். அதனால் தப்பி ஒடிவிட முயற்சி செய்யாதீர்கள். என்னுடைய கைகளை சரியாக உங்களுக்குள் மறைந்திருக்கும் கட்டிகளின் மீதுதான் வைக்கிறேன். வெறுமனே என் மீது விசுவாசம் வைத்து, திறந்து கொள்ளும் தைரியத்தைப் பெறுங்கள். பிறகு என்னால் உங்களுடைய எல்லாக் கட்டிகளையும் குணப்படுத்தி விட முடியும். வெறுமனே குருவுக்குத் திறந்து கொள்வதிலேயே உங்களுடைய பாதி அஹங்காரம் உங்களை விட்டுச் சென்று விடுகிறது. மீதியை அவர் கவனித்துக் கொள்வார். நீங்கள் கைகளை வெறுமனே நீட்டினாலே போதும்; அவர் உங்களை வெளியே தூக்கி விடுவார், அவ்வளவுதான்.

நீங்கள் ஒரு சிரத்தையுடன் தேடுபவராக இருந்தால், ஒரு உருமாற்றத்திற்குத் தயாராக இருந்தால், குருவுக்குத் திறந்த நிலையில் இருப்பீர்கள்; எல்லாம் தானாகவே நடக்கும். நீங்கள் வெறும் வேடிக்கை பார்ப்பவராக இருந்தால், பெரிதாக எதுவும் நிகழாது; நீங்கள் வெறுமனே ஒரு குருவிடமிருந்து இன்னொரு குருவிடம் தாவிக் கொண்டு இருப்பீர்கள்; எவரிடமிருந்தும் எதுவும் கற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

தியானம் என்பது மக்கள் நினைப்பதுபோல் மனதை ஒருமுகப்படுத்துவதல்ல.

நீங்கள் தியானம் செய்யும் பொழுது, தீவிரமாக தியானம் செய்யுங்கள். தியானத்துடன் தீவிரத் தன்மை இருக்கும் பொழுது, உருமாற்றம் நிகழ்ந்தே தீரும்; உயர் விழிப்புணர்வு ஏற்படுவது நிச்சயம். சாதாரணமாக, நாம் தீவிரமாக இருக்கும் பொழுது, தியானத்தைத் தவறவிட்டு விடுவோம் அல்லது தீவிரத்தன்மை இல்லாமல் தியானம் செய்வோம். ஒன்றைப் பிடித்து இன்னொன்றை விட்டு விடுவோம். உண்மையிலேயே மலர வேண்டுமாயின், இரண்டையும் பிடித்துத்தான் ஆகவேண்டும்.

நீங்கள் எவ்வளவு நேரம் தியானத்தில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை; ஆனால் எவ்வளவு தீவிரமாக தியானத்தில் ஆழ்த்திருக்கிறீர்கள் என்பது முக்கியமானது. விழிப்பணர்வின் தன்மையே முக்கியமானது. நீங்கள் உள்நோக்கித் திரும்புவதாக விழிப்புடன் ஒரு தீர்மானம் எடுத்து விட்டீர்களானால், அதுவே தியானத்தில் ஒரு தீவிரத் தன்மையைக் கொடுத்து விடும் .

சொல்லுங்கள்... ?

ஸ்வாமிஜி, நாங்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இதுவும் எங்கள் அஹங்காரத்தின் விளைாட்டுதானா ?

ஆம், நிச்சயமாக! நீங்கள் விஷயத்திற்கு வந்து விட்டீர்கள். நீங்கள் வாழ்க்கைக்கு ஏதோ நோக்கம் இருப்பதாக எண்ணி, அதன் பின்னால் ஒடினீர்களானால், அஹங்காரமிக்கவர்களாக இருக்கிறீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அழகை உணர்ந்து அதனுடன் இசைந்து சென்றீர்களானால்- வாழ்க்கையே அதன் நோக்கம்தான், மற்ற எல்லா இலக்குகளுமே வெறும் மாயையே என்பதைப் புரிந்து கொண்டீர்களானால் - விழிப்புணர்வை பெற்று விட்டீர்கள்; பிறகு நீங்கள் அஹங்காரமிக்கவர் அல்ல.

குருநாதரே உங்களுக்கு வாழ்க்கையின் 'நோக்கமற்ற தன்மை'யை புரிய வைப்பவர். நீங்கள் ஒரு நோக்கத்துடன் தேடும் பொழுது, நிஜத்தைத் தவற விடுகிறீர்கள்; ஏனெனில் ஒரு நோக்கத்தின் பின்னால் ஓடும் பொழுது, நிகழ்காலத்தைத் தவற விட்டு விடுகிறீர்கள். வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையையே தவறவிட்டு விடுகிறீர்கள்.

வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையை உணரும் பொழுது, உங்களிடம் ஒரு புது விழிப்புணர்வு மலரத் துவங்கும். பிறகு நீங்கள் இதுகாறும் பாதுகாத்து வந்த வைரக்கற்கள் எல்லாம் வெறும் கற்களே என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் இதுவரை பெரிய விஷயங்களாகக் கருதி வந்தவை வெறும் விளையாட்டு பொம்மைகளே என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் தேடும் உண்மையான ஆனந்தம் பணத்திலல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் தேடல் அதற்கும் அப்பாற்பட்டது.

நீங்கள் வாழ்க்கையை, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு மிகப்பெரும் தெய்வீக விளையாட்டாகக் காண ஆரம்பிப்பீர்கள். அந்த நாடகத்தை மிகவும் ரசிப்பீர்கள். உங்கள் பாத்திரத்தையும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அனைத்தையும் சரியாகவும் செய்வீர்கள். இலக்குகளுக்காக வாழ மாட்டீர்கள்; வாழ்வதற்காகவே வாழ்வீர்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.

பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் பணம் சம்பாதிப்பதை நிறுத்தி விடுங்கள் என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் பணமின்றி எதையும் செய்ய முடியாது. வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்; இந்த முழு செயல் முறையிலும் உங்கள் இலக்கு களை வெறும் தற்காலிகமான நிகழ்வாகவே அமைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன். இது எல்லாமே வெறும் நாடகம்தான், நீங்கள் அதில் ஒரு

தியானம் என்பது வெறுமனே எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு, தளாவாக இருப்பது.

பாத்திரம்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலக்குகளின் மீது பற்று வைக்கும் பொழுது, இதில் உள்ள முழு கருத்தையுமே தவற விட்டு விடுகிறீர்கள்.

ஒரு நாடகத்தில், உங்கள் பாத்திரத்தின் மீதோ அல்லது வேறெவர் மீதோ அல்லது எதன் மீதோ பற்றுவைப்பதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? கிடையாது! அது நேரடியாகவே நகைப்புக்குரியதல்லவா? அதே போல, வாழ்க்கையும் ஒரு பெரிய நாடகம்தான்; அதனால் அதன் மீது எந்த வகையிலும் பற்று வைத்து விடாதீர்கள். வெறுமனே உங்கள் பாத்திரத்தை நடியுங்கள்; மொத்த விளையாட்டையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.

வாழ்க்கையே இலக்கல்ல, அது பாதைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு இலக்கு இருந்தால், நீங்கள் ஒடிக் கொண்டிருப்பீர்கள். ஓடும்பொழுது, உங்கள் கால்கள் தரையில் படாது; கால்கள் தரையில் படவில்லையென்றால் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அழகைத் தவற விட்டு விடுவீர்கள். நீங்கள் ஓடும்பொழுது, உங்களின் காலடியில் உள்ள பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பற்றிய ஒருஉணர்வேயின்றி, அதைத்தவறவிடுகிறீர்கள். இலக்கை விட்டுவிடும் பொழுது, தானாகவே பாதை முக்கியத்துவம் பெற்று விடுகிறது. பாதை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கே; இலக்கு தானாகவே கவனித்துக் கொள்ளப்படும்.

வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையைப் புரிந்து கொண்டால், நீங்கள் வாழ்வதன் பொருளையும் புரிந்து கொள்வீர்கள். இதைப் புரிந்து கொள்ளும் வரை, உங்கள் வாழ்க்கையை ஒரு விழிப்பற்ற வகையில்தான் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் சரியான விழிப்புணர்வின்றியே வாழ்கிறீர்கள். இலக்குகளை மட்டுமே குறியாகக் கொண்ட,

தியானம் உங்களுக்கு, வாழ்க்கையில் நீங்கள் ஒரு கவனிப்பவர் மட்டுமே என்பதை உணர உதவி செய்யும். வாழ்க்கையின் அழகைக் காணாத, ஒரு திடமான அஹங்காரத்துடன் தான் வாழ்கிறீர்கள்.

இலக்குகளுக்காக வாழ்க்கை முழுவதையுமே தியாகம் செய்து விடுவது சரியான வாழும் வழியல்ல. இந்த வகையில் வாழ்ந்தால், ஒவ்வொரு இலக்கை அடையும் பொழுதும், அற்ப மான விஷயங்களுக்காக வாழ்க்கை முழுவதையும் வீணடித்து விட்டதற்காக வருத்தப்பட மட்டுமே நேரிடும். இலக்குகளை விட்டுவிட்டு, பாதையை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். இந்த போதனையின் மீது மீண்டும் மீண்டும் தியானம் செய்யுங்கள். உங்களிடம் உண்மை ஒருநாள் உதயமாகும்.

இன்னொரு விஷயம் ... உங்கள் வாழ்க்கையில் இருந்து எதையும் விலக்காதீர்கள்; நீங்கள் வாழ்க்கையில் எதையோ தவற விடுகிறீர்கள் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். ஆன்மீகம் என்பது எதையும் ஒருபோதும் விலக்குவதல்ல; எப்பொழுதும் எல்லாவற்றையும் அரவணைத்துக் கொள்வது. உங்கள் வாழ்க்கை யிலிருந்து எதையாவது விலக்குவீர்கள் களானால், எதையோ தவற விடுகிறீர்கள் என்று பொருள். அதற்கு பதில், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்பொழுது முழுமையாகி விடுவீர்கள். முழுமையாகும் பொழுது புனிதமாகி விடுவீர்கள்!

சில விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இல்லை யென்றால், அது வேறு விஷயம். அவற்றை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. வெறுமனே விழிப்புணர்வுடன் செயல்பட்டு, மேலே சென்று கொண்டேயிருங்கள்.

புரிந்து கொள்ளுங்கள் ... ஒரு விஞ்ஞானியானவன் வெளியுலகில் தான் கண்டுபிடித்ததை, மற்றவர்களும் அனுபவிக்க,

தியானத்தினால் அறிவு வளர்கிறது. எல்லா விஷயங்களிலும் ஒரு தெளிவு பிறக்கிறது.

அதை உருவாக்குகிறான்.

ஒரு குருவோ உள்ளுலகில் தான் அனுபவித்ததை மற்றவர்களும் அனுபவிப்பதற்காக, அந்த அனுபவத்தை மீண்டும் உருவாக்குவதற்காக, ஒரு சூத்திரத்தை உருவாக்குகிறார். அவர் தனது விழிப்புணர்வில், தான் அனுபவித்த ஆனந்தத்தை மற்றவர்களும் அனுபவிப்பதற்காக, அதை மீண்டும் உருவாக்கு வதற்கான ஒரு சூத்திரத்தை உருவாக்குகிறார்.

நான் இப்பொழுது உங்களுக்கு இறுதியான ஆனந்தம் அல்லது நித்யானந்தத்தை உணர்வதற்கான ஒரு சூத்திரத்தைத் தருகிறேன்.

சொல்லுங்கள் ... ?

ஸ்வாமிஜி, நாங்கள் எவ்வாறு எங்கள் அஹங்காரத்தை அழிப்பது ?

முதலில் உங்களிடம் அஹங்காரம், அனஹங்காரம், செயல்படும் நிலையிலோ அல்லது சாத்வீகமாகவோ, ஏதோ வடிவில் இருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு, அது நாம் இது வரையில் விவாதித்த, பல்வேறு வழிகளிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய எல்லா குற்ற உணர்வு, ஆசைகள், பயம், பணிவு, சுய முக்கியத்துவம், ஆகிய அனைத்துமே, உங்களுடைய 'நான்' மற்றும் 'எனது' என்னும் திட உணர்வால் நிகழும், அஹங்காரத்தின் பல்வேறு வடிவங்கள்தான். இதை நீங்கள் புரிந்து கொண்டால், கவனிப்பவராகி விடுவீர்கள்; அதனால் முழு வாழ்க்கையுமே ஒரு நாடகம்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதைச் செய்யும் பொழுது, உங்களுடைய திடமான இருப்பு கரைவதையும், அஹங்காரம் கரைவதையும் உணர்வீர்கள்.

ஒவ்வொரு மனிதனின் அடி ஆழத்திலும் கடவுளை உணரும் ஏக்கம் இருக்கிறது.

இது நிகழத் தொடங்கும் பொழுது, நீங்கள் தானாகவே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒத்திசைந்து செல்வீர்கள்; எவ்வாறு விஷயங்கள் தாமாகவே மாறியமைந்து உங்கள் வாழ்க்கையை அற்புதமாக்குகிறது என்பதையும் காண்பீர்கள். பிறகு உங்கள் அஹங்காரத்தை அழிப்பதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு வாழுங்கள். அதை எவ்வகையிலும் பாதுகாக்காதீர்கள். எப்பொழு தும் உங்கள் அஹங்காரத்தை அழிக்கத் தயாராக இருங்கள். உங்கள் அஹங்காரத்தை அழிக்கத் தயாராகி விட்டால், நீங்கள் விடுதலை அடையத் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம், அவ்வளவுதான்.

ஸ்வாமிஜி, நீங்கள் கள்ளங்கபடமற்ற தன்மையும், அறிவுக்கூர்மையும் ஆக்ஞா சக்ரத்துடன் சம்பந்தப்பட்டது என்று கூறினீர்கள். கள்ளங்கபடமற்ற தன்மையைப் பற்றியும் அறிவுக் கூர்மையைப் பற்றியும் விளக்க முடியுமா ?

நீங்கள் மனதின் கடினமான இயந்திரகதியிலான அமைப்பிலி ருந்து உடைத்துக் கொண்டு வெளியே வரும் பொழுது, திரவ நிலையில், ஒரு ஆற்றைப் போல இசைந்து செல்கிறீர்கள்; அது அறிவுக் கூர்மை. உங்களால் வேறு விதமாகச் சிந்திக்க முடிந்தால், அது அறிவுக்கூர்மை. நீங்கள் தன்னிச்சையாக இருந்தால், அது அறிவுக் கூர்மை. உங்களிடம் சவால் விடுவது கடினமானால், அது அறிவுக்கூர்மை.

வாழ்க்கையே அறிவீர்களானால், அது அறிவுக்கூர்மை. பிரபஞ்ச இருப்புத் தன்மையே இறுதியான உயிர்ச்சக்தி என்பதைப் புரிந்து கொள்வீர்களானால், அது அறிவுக்கூர்மை. உங்கள் உள் அமைதியை உணர்ந்து அறிவீர்களானால், அது அறிவுக் கூர்மை.

உங்களுடைய தன்னிச்சையாக உங்களால் புன்னகைக்கவும் சிரிக்கவும்

பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு உங்களைத் தெரியும். ஏனெனில் நீங்களும் அதன் ஒரு பகுதிதான்.

முடியுமானால், அது அறிவுக்கூர்மை. உங்களுடைய வெறும் இருப்பினாலேயே சக்தியைப் பரப்புவீர்களானால், அது அறிவுக் கூர்மை. நீண்ட நேரத்திற்கு எங்கும் சிக்கிக்கொள்ளாமல், சுலபமாகச் சவால் விடப்பட முடியாமல் இருப்பீர்களானால், அது அறிவுக்கூர்மை. உங்களுடைய அஹங்காரத்தை விழிப்புடன் உங்களால் உணர முடியுமானால், அது அறிவுக் கூர்மை. உங்களுடைய செல்வத் தினால் அன்றி இருப்புத் தன்மையினால் நீங்கள் வளமானவராக இருப்பதாக அறிவீர்களானால், அது அறிவுக் கூர்மை.

உங்களால் உங்கள் குருவை அடையாளம் காண முடிந்தால், அது அறிவுக்கூர்மை. உங்களுடைய அஹங் காரத்தை உங்கள் குருவிடம் விட்டு விடத் தயாராக இருப்பீர்களானால், அது அறிவுக் கூர்மை. வாழ்க்கையின் விளையாட்டை ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியுன் அனுபவித்து விளையாடுவீர்களானால், அது அறிவுக் கூர்மை.

ஒரு சின்ன கதை ...

மூன்றுபேரிடம் ஒரேகேள்வி கேட்கப்பட்டது. ''உங்களுடைய வாழ்க்கை இன்னும் 10 நாட்கள் மட்டும்தான் என்று சொன்னால். நீங்கள் என்ன செய்வீர்கள்?'. முதலாமவன் சொன்னான் ''நான் செய்து முடிக்க வேண்டிய எல்லா வேலைகளையும், வரிசைப்படுத்தி, எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து விடுவேன்; அதனால் நான் போன பிறகு என் குடும்பம் கஷ்டப்பட வேண்டாம்; பிறகு நான் நிம்மதியாக வாழ்வேன்'. இரண்டாமவன் சொன்னான், ''நான் இதுவரையிலும் ஒருபோதும் செய்யாதவற்றை எல்லாம் செய்து வாழ்க்கையை அதிகபட்ச மகிழ்ச்சியுடன் அனுபவிப்பேன்''. மூன்றாமவன் சொன்னான், "நான் இன்னொரு டாக்டரிடம் ஆலோசனைக்குச் செல்வேன்''.

(சிரிப்பு!)

பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு அன்பு செய்யவும், மன்னிக்கவும் மட்டுமே தெரியும்.

இது அறிவுக் கூர்மை! உங்களால், உங்களுக்காக நீங்களே கட்டிக் கொண்ட, திடமான பழக்கப்பட்ட பாதைகளில் சிக்கிக் கொள்ளாமல், தன்னிச்சையாக இருக்க முடியுமானால், நீங்கள் திரவத்தன்மையுடனும், அறிவுக் கூர்மையுடனும் இருக்கிறீர்கள்.

ஒரு மருத்துவமனையில், தொலைபேசி மணியடித்தது; செவிலி பதிலளித்தாள். ஒரு குரல் கேட்டது, ''தயவு செய்து அறை எண் 10-ல் இருக்கும் சந்தா பாசு எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?''. செவிலி பதிலளித்தாள், ''அவர் நன்றாக இருக்கிறார்; நாளை மாலை அவரை வெளியே அனுப்பி விடுவோம் என்று நம்புகிறோம். நீங்கள் யார்?'. அந்தக் குரல் பதிலளித்தது, ''சந்தா பாசு. நீங்கள் இங்கு நோயாளிகளிடம் ஒருபோதும் எதையும் சொல்வதில்லை''.

(பலத்த சிரிப்பு ! )

இது அறிவுக்கூர்மை! நீங்கள் எங்கும் வெகுநேரம் சிக்கிக் கொள்ளாமலும், வெகுநேரம் இயலாமல் திணாறாமலும் இருப்பீர்களானால், நீங்கள் அறிவுக் கூர்மையுடைவர்.

இப்பொழுது இதைக் கேளுங்கள் ...

ஒருவன் அவனுடைய பண்ணைக்கு, நகரத்தில் இருக்கும் அவனது நண்பனை அழைத்துச் சென்றான். அதைச் சுற்றிக் காண்பித்தான் ; பிறகு அவனிடம் கேட்டான், ''இவ்வளவு ஆடுகளைப் பார்த்து மிகவும் திகைப்படைந் திருப்பாய்! அவைகளை எண்ண முயற்சித்தாயா?''. நண்பன் சொன்னான், ''ஓ, ஆம், அவைகள் 300 இருந்தன''. அவன் ஆச்சரியமடைந்து கேட்டான், "'எப்படி அவைகளை சமாளித்து எண்ணினாய் ?'. நண்பன் பதிலளித்தான், ''ஓ, அது எளிது. நான் கால்களை எண்ணி நாலால் வகுத்து விட்டேன்!''.

விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அஹங்காரத்தை அகற்றிவிடும்.

இது அறிவுக்கூர்மையல்ல! இது நாம் வாழ்க்கையில் எளிமையான விஷயங்களை எப்படி சிக்கலாக்கி விட்டோம் என்பதைக் காட்டுகிறது.

அடுத்து, கள்ளம் கபடமற்ற தன்மைக்கு வருவோம். கள்ளம் கபடமற்ற தன்மையைப் புரிந்து கொள்ள குழந்தைகளே சிறந்த உதாரணம். அவர்கள் எந்தவிதத் திருத்தங்களும் செய்யாமல் வெறுமனே பேசுகிறார்கள். அவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை: நடத்தையில் மிகவும் முழுமையாக இருக்கிறார்கள்; ஒருபொழுதும் தந்திரமாக இருப்பதில்லை; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை. இதுதான் கள்ளங்கபடமற்ற தன்மை.

ஆனால், நாம் என்ன செய்கிறோம் ?. எவ்வாறு வார்த்தை களைத் திருத்தம் செய்ய வேண்டும், எவ்வாறு அவைகளைத் திரித்துக் கையாள வேண்டும், என்று நம்மால் முடிந்த அளவிற்குச் சிறப்பாகக் கற்றுத்தர முயற்சி செய்கிறோம். நாம் அவர்களுக்கு இதயத்திலிருந்து மூளைக்கு நகர்ந்து விட கற்றுத் தருகிறோம்; அதனால் அவர்களது தூய்மையான கள்ளங்கபடமற்ற தன்மை, மூளையால் மாசுபடுத்தப்பட்டு விடுகிறது.

ஒரு சின்ன கதை ...

ஒரு சிறுவனிடம், அவனது பணக்கார அத்தை அன்று அவனது வீட்டிற்கு வருவதாகவும், அதனால் அவன் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அத்தை வந்தாள்; பெரிய விருந்து கொடுக்கப்பட்டது. விருந்து முழுவதும் அந்தச் சிறுவன் தொடர்ந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்தான்; இறுதியில் அவளிடம் கேட்டான், ''அத்தை நீங்கள் எப்பொழுது உங்கள் வித்தையைச் செய்யப் போகிறீர்கள் ?''. அந்தப் பெண்மணி கேட்டாள், "என்ன வித்தை, என் அன்பே ?". சிறுவன் சொன்னான்,

உங்களுக்குள் இருக்கும் எந்தப் பூட்டையும் திறப்பதற்கு, விழிப்புணர்வே பிரதான திறவுகோலாகும்.

''என் அப்பா சொன்னார், நீங்கள் ஒரு மீன் மாதிரி குடிப்பீர்கள் என்று!''.

(சிரிப்பு!)

குழந்தைகள் அதைப் பேசி விடுகிறார்கள். தங்கள் கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்து கிறார்கள். அதனால்தான் அவர்களை கவனிப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. அதனால்தான் நாம் அவர்களை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறோம். அவர்களது கள்ளம் கபடமற்ற தன்மை நம்மைக் கவர்கிறது. ஆனால் நாம் அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களையும் தந்திரமாக இருக்கவும், வார்த்தைகளில் மோசடி செய்யவும் கற்றுக் கொடுத்து விடுகிறோம். இதைத்தான் நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

ஒரு குழந்தை அவளது தாத்தாவிடம் சென்று கேட்டது, "தாத்தா, உங்களால் உண்மையிலேயே ஒரு தவளையைப் போலச் செய்ய முடியுமா?''. ஆச்சரியமடைந்த தாத்தா கேட்டார், ''ஏனம்மா கேட்கிறாய் ?''. ''என் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டார்கள்; நீங்கள் தவளை போலக் கத்தினால், எங்களுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் அடிக்குமாம் !' '.

(சிரிப்பு!)

நாம் எப்பொழுதும் உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசுகிறோம். ஒருபோதும் நமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதில்லை. எதையோ நினைத்து வேறு எதையோ பேசுகிறோம். அதனால் மிகவும் அசிங்கமாகி விட்டோம். வெறுமனே நமது கள்ளம் கபடமற்ற தன்மையை இழந்து விட்டோம். குழந்தைகள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.

அவர்கள் மிகவும் இயல்பாக இருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக தங்களை வெளிப் படுத்திக் கொள்வதால் அழகாக இருக்கிறார்கள்.

ஒரு தாயார் தனது குழந்தையை அவளது சிநேகிதியிடம் ஒருநாள் விட்டுவிட்டுச் சென்றாள். அவள் தனது குழுந்தையிடம் மாலையில் திரும்பி வருவதற்கு முன் ஞாபமாக சிநேகிதிக்கு நன்றி தெரிவித்து விட்டு வருமாறு சொல்லியிருந்தாள். குழந்தை மாலையில் வீட்டிற்குத் திரும்பி வந்தது. தாயார் குழுந்தையிடம் தனது சிநேகிதிக்கு நன்றி தெரிவித்தாயா என்ற கேட்டாள். குழந்தை சொன்னது, ''இல்லை; ஏனென்றால் இன்னொரு குழந்தை நன்றி தெரிவித்த பொழுது, 'பரவாயில்லை, சொல்ல வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள்''.

இதுதான் குழந்தைகள் என்பது! அடிப்படையான விஷயங்களான நன்றியணர்வு முதலியவற்றை, நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதுகான்; ஆனால் நான் உங்களுக்குப் புரியவைக்க முயற்சிப்பது என்னவென்றால் நாம் அவர்களை கபட வேஷ்தாரிகளாக்கி விடக் கூடாது. அவர்களே இந்த விளை யாட்டைப் புரிந்து கொண்டு, அஹங்காரமின்றி, விழிப்பணர்வுடன், விழிப்பணர்வுடன் மட்டுமே விளையாடட்டும். அவர்களே பகுத்து அறிந்து கொள்ள அடிப்படை விதிமுறைகளையும் அறிவுக் கூர்மையையும் மட்டுமே கொடுங்கள்.

ஒரு விஷயம் ... குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன்மைக்குக் காரணம் அதன் அறியாமைதான். குழந்தையிடம் கள்ளம் கபடமற்ற தன்மை நிச்சயமாக இருப்பதன் காரணம், அது இன்னும் சமூக நெறிப்படுத்தல்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படாததே. ஆனால் நெறிப்படுத்தல்கள் நிகழ ஆரம்பித்து, கல்வியறிவும் சேர்ந்துவிட்டால்,

எனக்கு உங்கள் மீதுள்ள ஒரே அக்கறை. நீங்கள் மலர உதவுவதுதான்.

குழந்தை தனது கள்ளம் கபடமற்ற தன்மையை இழந்து விடுகிறது. ஆனால், ஆழமான விழிப்புணர்வின் மூலம், குழந்தையால், பல காலமாக அது இழந்து விட்ட கள்ளம் கபடமற்ற தன்மையுடன், மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். திரும்பப் பெறப்பட்ட இந்த கள்ளங்கபடமற்ற தன்மையே உண்மையான கள்ளங்கபடமற்ற தன்மையாகும்; ஏனெனில் இந்தக் கள்ளங்கபட மற்ற தன்மையானது அறியாமையினால் ஏற்பட்ட தல்ல; ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலினால் ஏற்பட்டது.

இதுவே குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற தன்மைக்கும், குருமார்களின் கள்ளங்கபடமற்ற தன்மைக்கும் உள்ள வேறுபாடாகும். உலகாயதமான கல்வியறிவானது கள்ளங்கபடமற்ற தன்மையை நசுக்கி அஹங்காரத்தையே பேணி வளர்க்கிறது. ஆனால் அறிவுக் கூர்மையும், விழிப்புணர்வும் கல்வியறிவை ஒரு பக்கமாக வைத்து விட்டு, கள்ளங்கபடமற்ற தன்மையை மீண்டும் வெளிக் கொணர்ந்து விடும். இது நிகழுமானால், நீங்கள் வழியைக் கண்டுபிடித்து விட்டீர்கள்.