பாகம் 7: உறுதியளிக்கப்பட்ட தீர்வுகள் - காமம் பயம் கவலைக்கு...
தங்கக் கவசத்தாலும் பட்டுத் துணியாலும் மூடி, காயமே இல்லை என்று நம்பிக் கொண்டிருப்பீர்களானால் என்ன நிகழும் ? அது வெறும் முட்டாள்தனமாகத்தானே இருக்கும், இல்லையா ?
அதனால் நான் சொல்ல முயற்சிப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைகளை விட்டு விட்டு நிஜத்தில் வாழத் தொடங்குங்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒரு மனிதன் அவனது நண்பனுக்குத் திருமணப் பரிசாக ஒரு நாய்க் குட்டியை அளித்தான். மூன்று மாதங்கள் கழித்து அவனை வீதியில் சந்தித்தான். 'திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது ?' என்று கேட்டான். "ஓ, காலப்போக்கில் சில சிறு மாற்றங்கள், அவ்வளவுதான்'' என்று நண்பன் பதிலளித்தான். ''என்ன மாற்றங்கள் ?' அவன் கேட்டான். "ஆரம்பத்தில் உன்னுடைய நாய்க் குட்டி என்னைப் பார்த்துக் குரைக்கும், என்னுடைய மனைவி செய்தித் தாளைக் கொண்டு வந்து தருவாள். இப்பொழுது என் மனைவி என்னைப் பார்த்துக் குரைக்கிறாள், உன்னுடைய நாய்க் குட்டி செய்தித் தாளைக் கொண்டு வந்து தருகிறது!'' என்று அவன் பதிலளித்தான்.
(சிரிப்பு!)
தேன் நிலவு முடிந்தவுடன் என்ன நடக்கிறது? அதை தேன் குழி என்று சொல்லாமல் தேன்நிலவு என்று சொல்வதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை! அந்த சந்தோஷம் தேய்வதற்கு வெறும் 15 நாட்களே ஆகிறது! நான் சொல்கிறேன் ... நீங்கள் மிகவும் அழகான ஒரு விளம்பர அழகியை மணந்தாலும், அவள் அழகு உங்கள்
உயிருடன் இருக்கும் எந்த மனிதனாலும் நம் மனதில் இருக்கும் உருவத்தின் அளவிற்கு வாழ முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கண்களில் வெறும் 15 நாட்களில் மங்கி விடும். ஏனெனில் நீங்கள் ஏற்கனவே வேறு எதையோ பற்றி மனக் கோட்டை கட்டி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! ஏனெனில் நீங்கள் உண்மையில் நிறைவைத் தேடுவது உங்களுக்குள்ளே தான்; ஆனால் அது தெரியாமல், அதை வெளியே பல்வேறு விதமான பொய்த் தோற்றங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு பெண்மணி அவளது மகளுக்கு கல்யாண சம்பந்தமாக அறிவுரை கூறிக் கொண்டிருந்தாள்: "கேள் அன்பே! நீ யாரையாவது காதலிப்பாயானால், அது வாழ்க்கைக்காக இருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அது உண்மையான காதலாக இருக்கும்'. மகள் அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தாள். தாய் தொடர்ந்தாள், "என்னுடைய அறிவுரை வார்த்தைகளை எடுத்துக் கொள். நான் என்ன பேசுகிறேன் என்பதை நன்றாக அறிவேன் என் அன்பே. எது எப்படியாயினும், நான் மூன்று முறை மணந்து கொண்டிருக்கிறேன்''.
(பலத்த சிரிப்பு!)
பிரச்சினை அறிவுரை கூறத் தயாராக இருக்கின்றனர், ஆனால் அதை எடுத்துக் கொள்ளத்தான் ஒருவர் கூட இல்லை! ஒவ்வொரு வருமே காதல், கற்பனை, கனவுகள் மற்றும் இதுபோன்ற பல விஷயங்களைப் பற்றி சொற்பொழிவாற்றத் தயாராகவே இருக்கின்றனர். ஆனால் அதுவே அவர்கள் வாழ்க்கை என்று வரும் பொழுது, அனைத்திற்கும் என்னவாகிறது ? அது வெறும் இன்னொரு கனவாகவே, இன்னொரு கற்பனையாகவே இருந்து விடுகிறது, அவ்வளவே!
எப்படியாயினும், இந்தச் சமயத்திலாவது, நிஜத்தை ஏற்றுக் கொண்டோமாயின், பிரச்சினை ஏதும் இருக்காது. ஆனால் நாம்
காதலில் எப்போதும் 'விழுவதுதான்'. ஒரு போதும் காதலில் 'எழுவது' அல்ல என்பதை கவனியுங்கள்.
சும்மா இருக்கிறோமா? இல்லை! நாம் நமது தூரிகையையும் வண்ணங்களையும் எடுத்துக் கொண்டு, வெள்ளையை மீண்டும் பசுமையாக மாற்ற முயற்சிசெய்கிறோம் ! அடுத்தவரை நமது மனதிலுள்ள உருவத்துடன் பொருந்துமாறு மாற்ற முயற்சி செய்கிறோம். எந்த உறவிலும் இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செயலாகும். நாம் ஒருவரையொருவர், மற்றவர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தோமோ, அதன்படி செதுக்க முயற்சி செய்கிறோம். நாம் அடுத்தவரை உடைமையாக்கிக் கொண்டு அவர்களையும் ஒரு பொருளாக மாற்ற முயற்சி செய்கிறோம். சக்தியைப் பொருளாக்கி இழிவுபடுத்துகிறோம். இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது - வாழ்க்கையின் முடிவற்ற போராட்டம் !
ஒரு சின்ன கதை ...
ராம்கோபால் ஒரு தொழில் முறை பெயின்டர். அவர் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், ''உனக்குத் தெரியுமா, ஒரு நாள் ஒரு பெண் கையில் ஒரு சிறு கருநீல வண்ணம் தீட்டப்பட்ட மரத்துண்டுடன் உள்ளே நுழைந்து, அதே வண்ணத்தில், ஒரு மாதிரி வீட்டிற்கு நான் வண்ணம் தீட்ட வேண்டும் என்று விரும்பினாள். அந்த வண்ணம் பொருந்தி வருவதற்குள், நான் தொழிலையே விட்டு விடலாம் என்று எண்ணுமளவிற்கு ஆகி விட்டது. எதுவுமே அவளுக்குத் திருப்திகரமாக இல்லை''. நண்பர் கேட்டார். ''கடைசியாக அது பொருந்தி வந்ததா?''. ராம்கோபால் சொன்னார், "என் அதிர்ஷ்டம்தான்; அவளுக்கு செல்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. அவள் பேசி முடிப்பதற்குள் அந்த மரத்துண்டிற்கு வேகமாக பெயின்ட் அடித்துவிட்டேன்! ' '.
(சிரிப்பு!)
கனவும் நிஜமும் முற்றிலும் வெவ்வேறானவை.
நாள் முழுவதும், ஒவ்வொரு வீட்டிலும், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை கவனமாகக் கேளுங்கள்; செதுக்குதல் நடந்து கொண்டே யிருப்பதை கேட்கலாம். திருமணங்களுக்கு இனிமேல் நாம் மங்கல நாண் அல்லது மோதிரத்திற்குப் பதிலாக ஒரு உளியையும் சுத்தியலையும் பரிசாகக் கொடுக்கலாம்.
ஒரு மாலையில், ஒருவர் அவரது நண்பருடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அவர் நண்பரிடம் சொன்னார். "நான் என் மனைவியை விவாகரத்து செய்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். கடந்த 6 மாதங்களில் அவள் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை''. அதற்கு நண்பர் சொன்னார், ''அதுபோன்ற ஏதாவது தீர்மானம் எடுப்பதற்கு முன்னால் கவனமாக யோசித்துப் பார். உனக்கு அது போன்ற இன்னொரு மனைவி கிடைக்க மாட்டாள்''.
(பலத்த சிரிப்பு ! )
வாழ்க்கையில், நாம் தொடர்ந்து நமக்குள் இருக்கும் உருவத்தை வெளியில் இருக்கும் நிஜத்துடன் பொருத்த முயற்சி செய்து கொண்டேயிருக்கிறோம். எல்லாம் முழுமையாகப் பொருந்தி வருவதை ஒருபோதும் காண முடியாது. நமக்குள் இருக்கும் இந்த உருவங்களை எல்லாம் விட்டு விட்டால், நாம் முடிவற்ற சாத்தியக் கூறுகளைக் காணலாம் !
நீங்கள் இன்னும் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்கள் மனக்கோட்டைகளை விட்டு விடுங்கள் ; அதனால் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முடியும்; கனவுத் துணையை அல்ல! நீங்கள் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் அவருடன் வாழப் போவது வெறும் சில மாதங்களுக்கல்ல, உங்கள் வாழ்நாள்
உங்களிடம் கனவோ கற்பனையோ இல்லாத பட்சத்தில், நீங்கள் உடனே உங்கள் ஆத்ம நாயகன் அல்லது நாயகியைச் சந்தித்து விடுவீர்கள்.
முழுவதும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதை அலட்சியமாக நினைக்காதீர்கள். அது வாழ்க்கை முழுவதற்குமான ஒரு விஷயம்.
தற்சமயம், ஏதோ ஒரு கறுப்பு ஜீன்ஸ் அல்லது நீல டீ-ஷர்ட் உங்கள் கனவுலகத்துடன் ஒத்துப் போகலாம்; நீங்களும் அதனால் கவர்ந்து இழுக்கப் படலாம். ஆனால் நீலமோ அல்லது கறுப்போ, வெறும் 6 மாத காலத்தில் அது வெளுத்துப் போய் விடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் மனக்கோட்டைகளை விட்டு விடுங்கள்; அப்பொழுது தான் உங்களால் யாருடனுமே ஒரு உண்மையான உறவைத் தொடங்க முடியும். நீங்கள் அதற்குள் ஒரு உளியுடனும் சுத்தியலுடனும் நுழைந்தால், ஒரு உண்மையான உறவு நிகழ முடியாது.
பாருங்கள்:... தென்றால், நீங்கள் செதுக்க ஆரம்பித்து, முடித்து விட்டீர்கள் என்று நினைக்கும் தருவாயில், உங்கள் கற்பனை மாறி விடுகிறது; அது கொஞ்சம் வேறு மாதிரியாகி விட்டதால், அந்த கொஞ்சம் மாறிய கற்பனையுடன் பொருந்த நீங்கள் இன்னும் கொஞ்சம் செதுக்க வேண்டியதிருக்கிறது! இது ஒரு முடிவற்ற சுழற்சியாகி விடுகிறது!
உங்களிடம் மனக்கோட்டைகள் இருக்கும் வரை உறவு ஒருபோதும் நிகழ முடியாது. நீங்கள் 24 மணி நேரமும் வீட்டில் இருந்தாலும், ஒருவர் மற்றவரின் கண்களைப் பார்ப்பதில்லை; ஏனெனில் நீங்கள் நிஜத்தில் வாழாமல் கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே நிஜ மனிதனுடன் வாழவில்லை-மற்றவர் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் கற்பனை வழியாகவே பார்த்து, உங்கள் வாழ்க்கை, கடவுள் உங்களுக்களிக்க தண்டனை என்ற தீர்மானத்திற்கு வந்து விடுகிறீர்கள்.
நீங்கள் திருமணமாகாதவராயிருந்தால், உங்கள் கனவுகளை விட்டு விடுங்கள்; உங்கள் இரத்தம் குளிர்ச்சியடையும்; ஹார்மோனின் தொந்தரவிற்காளாக மாட்டீர்கள். நீங்கள் மனைவியை இழந்தவராயிருந்தால், உங்கள் கற்பனையை விட்டு விடுங்கள்; தனிமையினால் வேதனையுடைய மாட்டீர்கள்.
உங்களால் முடிந்த வரையில் குழந்தைகள் தொலைக்காட்சியில் டூயட் காட்சிகளை காண அனுமதிக்காதீர்கள். அவர்கள் வெறுமனே இசையை ரசித்து அதனுடன் நடனம் ஆடினார்களே யானால் பரவாயில்லை; ஆனால் அவர்கள் பார்க்கும் டூயட்டுகள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் உள்ளே எடுத்துக் கொள்கிறார்கள். இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. அனைத்தும் பால் உணர்வு சக்கரமான, மூலாதார சக்கரத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு வெறும் ஒரு குறிப்பே போதுமானது, மூலாதாரம் தயாராகி விடுகிறது.
எதிர்பார்ப்பகளின் அமைதியைக் குலைத்து விடுகிறது. அதனால் இந்தச் சக்கரம் பூட்டப்படுகிறது. உங்கள் கனவுகளை இன்னொருவரின் மூலம் அல்லது தொலைக்காட்சியைப் பார்ப்பதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்தாலோ அல்லது உங்கள் எதிர்பார்ப்பு களையும் கனவுகளையும் இன்னொருவரின் மீது சுமத்தினாலோ அல்லது பிரதிபலித்தாலோ இந்தச் சக்கரம் பூட்டப்படுகிறது.
அதற்கும் வெளியுலக வாழ்க்கை நியதிகளுக்கும் சம்பந்தமில்லை. அதற்கும் பெயரளவிலான பிரம்மச்சரியத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. அதற்கும் நீங்கள் உங்களுக்குள் பிளவுபட்டிருப்பதற்கும் சம்பந்தம் உண்டு.
உங்களிடம் கனவோ கற்பனையோ இல்லாத பட்சத்தில், நீங்கள் கரம்பிடிக்கும் எவரும் உங்கள் ஆத்ம நாயகன் அல்லது நாயகி ஆகிவிடுவர்.
பிரம்மச்சர்யம் என்பது என்ன ?
பிரம்மச்சர்யம் என்பது நமக்குள் இருக்கும் அடக்கி வைக்கப்பட்ட பாதிக்காக ஏங்கிக் கொண்டிராமல் இருப்பது. நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் அடக்கப்பட்ட பாதி அல்லது பெண்ணை நீங்கள் இழக்கிறீர்கள் என்ற எண்ணமே வராத அளவிற்கு ஒரு மனநிறைவை நீங்கள் உங்களுக்குள்ளேயே அனுபவிக்க வேண்டும். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், இந்த மனநிறைவை வெளியே தேடவேண்டிய தேவையின்றி நீங்களே உங்களுக்கு மிகவும் போதுமானவராக இருக்க வேண்டும்.
இந்நிலையை அடைந்து விட்டீர்களானால், நீங்கள் வெளியுலகத்தில் ஒரு பெண்ணுடனோ அல்லது இன்றியோ வாழ முடியும். இதை அடையாவிடில் திருமணம் செய்து கொண்டால் கூட, நீங்கள் தொடர்ந்து ஹார்மோன்களின் தொல்லைக்கு உட்பட்டுதான் இருப்பீர்கள். இந்த ஹார்மோன்களின் தொல்லை மனநிறைவுக்கான ஏக்கத்தைத் தவிர வேறல்ல ; அது உண்மையில் உங்களுக்குள்ளிருந்து அடைய வேண்டியதாகும்; வெளியிலிருந்து அல்ல.
இந்த மனநிறைவை அடைந்து விட்டால், நீங்கள் திருமண மானவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் மனதில் அமைதி நிலவும். அதன் பிறகு நீங்கள், உங்கள் மண வாழ்க்கை யிலும் பிரம்மச்சாரியாக இருக்க முடியும்! இதுவே உண்மையான பிரம்மச்சரியம் என்பது. அதற்குப் பதிலாக, மக்கள் பிரம்மச் சரியத்திற்காக தங்களுக்கு இயல்பான வழியிலிருந்து விலகிச் சென்று மேலும் அடக்குதலின் காரணமாக மன நோய்க்கு ஆளாகிறார்கள்.
உங்கள் கற்பனைகளை விட்டுவிட்டு நிஜத்தில் வாழத் தொடங்குங்கள்.
சரி... நான் சொல்ல முயற்சிப்பதை உங்களால் பின் தொடர முடிகிறதா ? யாருக்கேயும் ஏதேனும் விளக்கம் தேவையா ?
ஆனால் ஸ்வாமிஜி, நாங்கள் உள்ளே ஒரு உருவத்தைச் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணர்வதில்லை.
ஆம், ஏனெனில் நாம் ஒருபோதும் உள்ளே பார்த்த தில்லை. நாம் உள்நோக்கிச் செல்வதைத் தவிர மற்ற எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். உங்களுக்குத் தெரியுமா, 80 சதவிகித சக்தி இந்த சக்கரத்தில் அடைபட்டிருக்கிறது! இந்தச் சக்கரத்தை சக்தியூட்ட வேண்டிய தேவை கூட இல்லை. அது வெறுமனே திறக்கப்பட்டு தூண்டி விடப்பட்டால் கூட, அதிலிருந்து வெள்ளமாகப் பாய்ந்துவரும் சக்தி உங்கள் முழு வாழ்க்கையையுமே உருமாற்றி விடக் கூடியது.
நீங்கள் உங்களுக்குள் ஆழமாகப் பார்த்தீர்களானால், உங்களுடைய துயரங்களுக்குக் காரணம், நீங்கள் பார்ப்பதற்கும் பார்க்க விரும்புவதற்கும் இடையில் ஒரு பொருத்த மின்மை இருப்பதாக எப்பொழுதும் நீங்கள் எண்ணுவதுதான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்த நீங்கள் பார்க்க விரும்புவதுதான் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் உருவம்.
குறைந்த பட்சம், இப்பொழுதிலிருந்தாவது, நீங்கள் பார்ப்பவற்றில் எல்லாம் உங்கள் மனதின் விளையாட்டை, விழிப்பணர்வுடன் கவனிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் மனம் புகுந்து அவற்றை எடைபோடுவதற்கு முன், காட்சிகளை அது எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே பிடிக்க முயற்சி செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்களால், மனம் எவ்வாறு நுட்பமாகவும் இடையறாமலும் நீங்கள் பார்ப்பவற்றிலெல்லாம் செயல்பட்டு,
அதை ஏன் 'தேன் கூரியன்' என்று சொல்லாமல் 'தேன் நிலவு' என்று சொல்கிறோம்?
எப்பொழுதுமே நீங்கள் பார்ப்பவற்றில் ஏதோ தவறு இருக்கிறது என்று உங்களை நம்ப வைக்கிறது, என்பதைக் காண முடியும்.
சமஸ்கிருதத்தில் நமக்கு உண்மையைக் கற்பிக்கும் இரண்டு சொற்றொடர்கள் உள்ளன; திருஷ்டி சிருஷ்டி மற்றும் சிருஷ்டி திருஷ்டி. முதலாவதான திருஷ்டி சிருஷ்டி என்பது உலகத்தை உள்ளவாறே பார்ப்பது, வருவதை அப்படியே ஏற்பது, நிஜத்தில் எது இருக்கிறதோ, அதை வரவேற்பது. சிருஷ்டி திருஷ்டி என்பது உலகத்தை நாம் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அவ்வாரே நமது சொந்த வண்ணக் கண்ணாடிகளின் மூலமாகவும், நமது கனவுகளின் மூலமாகவும் காண்பது. முன்னது அமைதியான வாழ்வை நோக்கி இட்டுச் செல்லும், பின்னது துயரத்தை நோக்கி இட்டுச் செல்லும். சரிதானே ... ?
ஒரு சின்ன கதை....
ஒருமுறை ஒரு மனிதர் என்னிடம் வந்து சொன்னார், "ஸ்வாமிஜி, எங்கள் வீட்டில் இருப்பது, நானும் என் மனைவியும், வெறும் இரண்டு பேர் மட்டும்தான். ஆயினும் அமைதியில்லை!''. நான் சொன்னேன், 'யார் சொன்னது உங்கள் வீட்டில் இரண்டு பேர் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று? நீங்கள் நான்குபேர் இருக்கிறீர்கள்'. அவர் அதிர்ச்சியடைந்தார். நான் சொன்னேன், ''நீங்கள், உங்கள் உள்ளிருக்கும் பெண், உங்கள் மனைவி, அவள் உள்ளிருக்கும் ஆண்! அதனால்தான் நான் சொல்கிறேன் நீங்கள் நான்கு போ் என்று! உங்கள் உள்ளிருக்கும் ஆணையோ, பெண்ணையோ வெறுமனே விட்டு விடக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் வீட்டில் எப்படி ஒரு மாற்றம் நிகழ்கிறது என்று பாருங்கள்''. அந்த மனிதர் அமைதியாகச் சென்று விட்டார்.
திருமணப் பரிசு : ஒரு உளியும் சுத்தியலும்
ஸ்வாமிஜி, பெற்றோர்கள், குழந்தைகள் போன்ற மற்ற உறவுகளில் கூட நாங்கள் அமைதியின்மையை உணருகிறோம் ...
ஆம், எந்த உறவிலும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாத எந்த உறவுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை.
பெற்றோர்கள் செய்கிறார்கள்; குழந்தைகளும் அதையே பெற்றோர்களின் மீது முயல்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகளை குழந்தைகளின் வாயிலாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். நீங்கள் அனைத்து விஷயங்களையும் ஆழமாக ஆராய்ந்து பார்த்தீர்களானால், நான் சொல்வது உண்மை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மருத்துவராகவும் பொறியாளராகவும் வேண்டுமென்று கனவு காண்கிறார்கள். குழந்தை என்னவாக விரும்புகிறது என்று தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதைப் பற்றி ஏன் கனவு காணக் கூடாது ? அது குழந்தைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
என்றைக்கு ஒரு ஒரு குழந்தை பதிலுக்கு பதில் பேச ஆரம்பிக்கிறதோ, அன்றைக்கு அது வளர்ந்து விட்டது என்று பொருள். அவர்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அவனுடன் சிறிது நேரம் செலவழியுங்கள், அவனுடன் பேசுங்கள், அவனுக்கு நல்ல நண்பனாயிருந்து வாழ்க்கையில் அவன் உண்மையிலேயே என்ன செய்ய விரும்புகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆழமான அன்புடனும், நம்பிக்கையுடனும் அவனுக்கு வழி காட்டுங்கள். பிறகு அவனது குறிக்கோளை உங்களது நிஜமாக்கிக் கொண்டு அவன் அதை அடைய உதவி செய்யுங்கள்.
உங்களிடம் மனக்கோட்டைகள் இருக்கும் வரையில் ஒருபோதும் உறவு நிகழ முடியாது.
பல குழந்தைகள் என்னிடம் சொல்கிறார்கள், "என் தந்தை நான் ஒரு டாக்டா் ஆக வேண்டுமென்று விரும்புகிறார்'' அல்லது "என் தந்தை நான் ஒரு வக்கீல் ஆக வேண்டுமென்று விரும்புகிறார்' என்று. குழந்தையால் தீர்மானிக்க முடியாத நிலையில், அவன் உங்களிடம் என்ன செய்வதென்று கேட்கும் நிலையில், அவனுடைய திறமைகளைப் பற்றிய உங்கள் கணிப்பின் அடிப்படையில், நீங்கள் அவனால் என்ன செய்ய முடியும் என்பதைக் கூறலாம்.
நீங்கள் எப்பொழுதும் ஆலோசனை மட்டுமே கூறலாம்; எதையும் அவன் தொண்டைக்குள் திணிக்காதீர்கள். மேலும் இதைச் செய்வதற்கு அவனுக்கு நீங்கள் சுதந்திரத்தையும் பக்குவத்தையும் அளித்திருப்பதைப் புரிய வையுங்கள். அதனால் பின்னால் யாரையும் குறை கூற முடியாது என்பதையும் தெளிவாக்குங்கள். இதை அவன் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாருங்கள், நாம் எப்பொழுதும் கையில் உளியை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டு, நமது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் முன்பின் தெரியாதவர்களையும் விட்டு வைக்காமல், அனைவரையும் நமது சொந்த கற்பனைப்படி செதுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அவர்களும் பதிலுக்கு அவர்களது உளியைக் கொண்டு உங்கள் மீது முயற்சி செய்வார்கள். என்ன ஒரு வன்முறை!
உங்களுக்கு இன்றைய வீட்டுப்பாடம், ஒரு முழுமையான கணவன், ஒரு முழுமையான மனைவி, ஒரு முழுமையான தந்தை, ஒரு முழுமையான தாய், ஒரு முழுமையான குழந்தை, ஒரு முழுமையான நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். உங்களுக்குப் பொருந்தி வருகிற ஏதேனும் ஐந்து உறவு முறைகளைத் தேர்ந்தெடுத்து, இதை எழுதுங்கள். இதை நேர்மையாகச் செய்யவும். உங்களுடைய ஆழ்ந்த விழிப்பற்ற நிலையில், உங்கள் எல்லாக் கருத்துக்களையுமே பிரபலமான ஊடகங்களில் இருந்து எடுத்திருப்பதை நீங்கள் காணலாம். இதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
நீங்கள் ஒரு தொலைக்காட்சித் தொடரைப் பார்க்கிறீர்கள். அதில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை உங்களுக்குப் பிடிக்க ஆரம்பிக்கிறது. அந்தக் கதாபாத்திரம் உங்களைப் பொறுத்த வரையில் ஒரு திடமான நிஜமாகி விடுகிறது. நீங்கள் விழிப்பின்றி, நிஜ வாழ்வில் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைவரிடமும் அதே போன்ற ஒரு குணத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
உங்களுக்குத் தெரியுமா ... மக்கள் ''இலட்சிய குரு'' என்ற உருவத்தைக் கூட அவர்கள் மனதில் வைத்துக் கொண்டிருக் கிறார்கள் ? வழக்கமாக அது ஒரு வயதான மனிதனின் உருவமாக, நரைத்த தலையுடன், நீண்ட தாடியுடன், நீங்கள் புத்தகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பார்ப்பது போன்று இருக்கிறது! அவர்கள் என்னிடம் வந்து என்னைப் பார்க்கும் பொழுது, இப்படி ஒரு இளைஞன் ஒரு உண்மையான குருவாக இருக்க முடியும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள அதே பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் என்னை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால், நான் அவர்களுக்கு குருவைப் பற்றிய எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை அளிக்க வேண்டியிருக்கிறது !