ஒரு ஞானமடைந்த மனிதன் மட்டுமே, உங்களுக்கு காமத்தைப் பற்றிய அறிவியலைக் கொடுக்க முடியும்.
கடந்த பல ஆண்டுகளில் பாரதத்தின் பெருஞ் செல்வ மும் நிலங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இவை எதுவுமே பாரதத்திற்குப் பெரிய இழப்பல்ல. ஒவ்வொரு அந்நியப் படையெடுப்பிற்குப் பிறகும் நமது சமூதாயம் திரும்ப எழுந்து நின்றது. இறுதியாகப் பழங்காலத்தில் குருவின் காலடியில் அமர்ந்து கற்கும் முறையான குருகுல முறையும், காமத்தைப் பற்றிய அறிவியலான காம சூத்திரத்தைச் சிறுவர்களுக்குப் போதிப்பதும் ரத்து செய்யப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது. இதுதான் பாரதத்திற்குப் பெரிய அடி. இந்த சமயத்தில்தான் மக்கள் காமக்கின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் இச்சையின் பின் செல்ல ஆரம்பித்தனர்.
இரண்டு பேர் சதுரங்கம் விளையாடிக் கொண்டு இருப்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா ? நீங்கள் வெறுமனே விளையாட்டை கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது, அடிக்கடி, சரியான ஆட்டம் தானாகவே உங்களுக்குத் தோன்றுகிறது; ஆனால் எப்படியோ விளையாடும் இரண்டு பேருக்கும் ஒருபோதும் தோன்றுவதில்லை! கவனித்திருக்கிறீர்கள் ? இதன் காரணம் என்னவாக இருக்கமுடியும் ? சொல்லுங்கள் ...
நாம் விளையாட்டில் ஈடுபடாமல் இருப்பதாலா ஸ்வாமிஜி ?
ஆம்! உண்மையில் சாட்சியாக இருப்பவனுக்கு வெல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. நிர்ப்பந்தமும் மன அழுத்தமும் மனதை மந்தமாக்கிவிடும். அதனால் விளையாட்டைவிட்டுவெளியே வந்து விட்ட, வெறும் கவனிப்பவனாக மட்டுமே இருக்கும் ஒரு மனிதனே அதைப் பற்றிய சரியான கருத்தைக் கொடுக்க முடியும்.
காமம் என்பது என்ன ?
இன்று, உயிரியல் எந்த ஆணும் 100 சதவிகித ஆணல்ல, எந்தப் பெண்ணும் 100 சதவிகித பெண்ணல்ல என்று நிரூபித்திருக்கிறது. ஒரு ஆண் 51 சதவிகிதம் அணாகவும் 49 சதவிகிதம் பெண்ணாகவும் இருக்கிறான். அதே போன்று, ஒரு பெண் 51 சதவிகிதம் பெண்ணாகவும், 49 சதவிகிதம் ஆணாகவும் இருக்கிறாள்.
வெறும் 1 சதவிகித வித்தியாசம்தான்.
நமது பண்டைய ரிஷிகளும், குருமார்களும் நமக்கு இதைப்பற்றிய சிறந்த தெளிவை அளித்திருக்கின்றனர்.
நீங்கள் உங்கள் தந்தையின் மூலாதாரத்தில் இருந்தும், தாயின் மூலாதாரத்தில் இருந்தும் பிறந்திருக்கிறீர்கள். பிறகு எவ்வாறு நீங்கள் வெறும் ஆணாக மட்டுமோ அல்லது பெண்ணாக மட்டுமோ இருக்க முடியும் ? இருவரது குணாதிசயங் களும் உங்களிடம் நிச்சயமாக இருக்கும் ! இல்லையா ?
சிவபெருமானை அர்த்த நாரீஸ்வரராக - பாதி ஆணும் பாதி பெண்ணுமான உருவமாக உருவகப்படுத்தியிருப்பதன் காரணம் இதுவே. ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், நாம் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு சக்திகளின் உடல் வெளிப்பாடு. நாம் முழுமையானவர்கள்; பிளவுபட்டவர்கள் அல்ல.
காமத்தைப் பற்றிய அனைத்துக் கருத்துக்களையும் தந்த்ரா மிகவும் அழகாகக் கையாள்கிறது. புனித நூல்களில், சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த விஷயங்களைப் பற்றி விளக்குவதாக வருகிறது.
5000 வருடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அந்த உள்நோக்குப் பார்வை இன்றும் உயிரியல் கூற்றுப்படி பொருத்த மாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
முழுமையாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாக வும் இருப்பதற்கு, நமது இயல்பான ஆண் தன்மையையும் பெண் தன்மையையும் ஏற்றுக் கொள்வதும் வெளிப்படுத்து வதும் அவசியம்.
ஆனால் உண்மையிலேயே அது நடக்கிறதா? நாம் வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறோமா ?
பிறந்த கணம் முதற்கொண்டே உங்களுக்கு சமூகம் ஆண் அல்லது பெண் என முத்திரை குத்தி விடுகிறது. மேலும் நீங்கள் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. ஆண்கள் தங்களது பெண் தன்மையை வெளிப் படுத்துவதையும், பெண்கள் தங்களது ஆண் தன்மையை வெளிப் படுத்துவதையும் சமூகம் அமைதிப்பதில்லை. மிகச் சிறு வயதிலிருந்தே நமது இருப்புத் தன்மையின் ஒரு பாதி அடக்கி வைக்கப்படுகிறது.
ஏழு வயது வரையில், சமூக நெறிப்படுத்தல்கள் இன்னும் ஆழமாக வேரூன்றாத வரையில், குழந்தைக்குத் தான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பது பற்றிய விழிப்பு கிடையாது. அதனால்தான் சிறு குழந்தைகளிடம் ஒரு முழுமையான உணர்வு இருக்கிறது. அவன் மையத்திலும், பாதுகாப்பாகவும் இருக்கிறான். அதனால் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறான்! கிட்டத்தட்ட ஏழாவது வயதில், குழந்தை சமூகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறது.
ஒரு ஆண் குழந்தை பொம்மைகளுடனும், சமையல் அறைச் சாமான்களுடனும் விளையாடுவது ஊக்குவிக்கப்படுவ தில்லை. ஒரு பெண் குழந்தை பந்தயக் கார் மற்றும் ராக்கெட் பொம்மைகளுடன் விளையாட விரும்புவது அங்கீகரிக்கப் படுவதில்லை. அவர்களின் துணிமணிகள் மற்றும் மற்ற பொருட்களின் வண்ணங்களில் கூட பாகுபாடு இருக்கிறது. நீங்கள் நீலத்தைப் பையன்களுக்கும் இளஞ் சிவப்பைப் பெண்களுக்கும் தேர்ந்தெடுக்கிறீர்கள், சரிதானே?
முந்தைய நாட்களில் குழந்தையைப் பெறுவது மட்டுமே பெற்றோர்களின் பொறுப்பு. நான்கு வயதில் குழந்தையை குருகுலத்தில் குருவிடம் ஒப்படைத்து விடுவார்கள். குருகுலத்தில் குழந்தைகளுக்கு 7 வயதில், அறிவுக் கூர்மையைத் தூண்டி விடுவகற்கான மந்திர கீட்சையான காயத்ரி மந்திரம் போதிக்கப்படும். அவர்களுக்கு ஏதேனும் ஆன்மீக அபைவங்கள் கிடைத்திருந்தால் 14 வயதில், உலக தத்துவ நூல்களில் தலை சிறந்த நூலான பிரம்மசூக்திரம் போகிக்கப்படும். இல்லை யெனில், காமத்தைப் பற்றிய அறிவியலான காமசூக்திரம் போதிக்கப்படும். அதனால் அவர்கள் குடும்ப வாழ்க்கைக் கலையைக் கற்றனர். 21 வயதிற்குள் அவர்களுக்கு ஞானம் கிடைத்துவிட்டால், அவர்களுக்கு சந்யாச தீட்சை கொடுக்கப்பட்டது. இல்லாவிடில், அவர்களுக்கு யோக சூத்திரங்கள் கற்பிக்கப்பட்டன. இவ்வாறு தான் ஒரு குழந்தை, ஒரு குருவின் வழிகாட்டுதலிலும் அன்பிலும், தன் இயல்பான வழியில் வளர அனுமதிக்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது, பெரும் சேதத்தை விளைவிக்கும் கடுமையான நெறிப்படுத்துதல்கள் குழந்தையின் மீது திணிக்கப் படுகின்றன. குழந்தை, சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத பகுதியை தனக்கு உள்ளே அடக்கி வைக்க ஆரம்பிக்கிறது. நாம் உணராவிடினும், குழந்தைக்கு இந்தக் கால கட்டம் மனதளவில் மிகவும் வேதனையை ஏற்படுத்தக் கூடியது. இருப்புத் தன்மையின் ஒரு பாதியிலிருந்து துண்டிக்கப்பட்டு, திடீரென்று தான் வேரூடன் பிடுங்கப்பட்டதாக உணர்கிறான். இந்த அடக்கப்பட்ட பாதியையே பின்னர் அவன் வெளியே தேடத் தொடங்குகிறான்.
பாருங்கள் ... மனிதனின் உள்ளார்ந்த இயல்பு நிறைவடைந்திருப்பது. அவன் பூரணத்தில் இருந்தே வருகிறான்; மீண்டும் அதையே அடைய விரும்புகிறான். அதனால் இழந்த ஒரு பாதியை, அடக்கப்பட்ட பாதியை விழிப்பின்றியே தேடத் தொடங்குகிறான். தன்னிடமிருந்து இழந்த பாதிக்கான மாற்றை, வெளியுலகத்தில் தேடத் தொடங்குகிறான். ஆண் குழந்தை பெண்ணின் சமீபத்தையும், பெண் குழந்தை ஆணின் சமீபத்தையும், தேடத் தொடங்குகிறகு.
காமத்தைப் பற்றிய முழுக் கருத்தும் இங்குதான் ஆரம்பிக் கிறது. காமத்தைப் பற்றிய கருத்து வேர் விடுவது இவ்வாறுதான்.
7 வயதுமுதல் 14 வயது வரையிலான கால கட்டத்தில், குழந்தை பெற்றோரின் அருகாமையில் இருக்கிறது. அவர் களிடமிருந்து ஒரு இலட்சியப் பெண்- அல்லது இலட்சிய ஆண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது போன்ற முன்மாதிரி உருவங்களைச் சேகரிக்கிறது. ஆண் குழந்தைக்கு, அவனது அடக்கப்பட்ட இயல்பின் பாதியை அவன் தாயின் உருவமும், பெண் குழந்தைக்கு அவளது அடக்கப்பட்ட இயல்பின் பகுதியை அவள் தந்தையின் உருவமும் மாற்றாக இருந்து நிரப்புகிறது.
அதனால்தான் ஒவ்வொரு ஆண் குழந்தையின் முதல் கதாநாயகி அவனது தாயாகவும், ஒவ்வொரு பெண் குழந்தையின் முதல் கதாநாயகன் அவளது தந்தையாகவும் இருக்கிறார்கள். இதுவே எழுதப்படாத சட்டம்! இந்த ஆழமான தேடலே, ஃபிராய்டின் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் மற்றும் இலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ் என்றழைக்கப்படும் உளவியல் தத்துவங்களின் பின்னால் இருப்பது.
ஒரு ஆண் தன் மனைவியிடமிருந்து, தன் தாயிட மிருந்து பெற்றதைப் போன்ற அரவணைப்பையும், ஒரு பெண் தன் கணவரிடமிருந்து தன் தந்தையிடம் இருந்து அனுபவித்ததைப் போன்ற பாதுகாப்பையும், உறுதியையும் எதிர்பார்க்கின்றனர்.
உடைந்து போன இல்லங்களில், இறப்பாலோ அல்லது விவாகரத்தாலோ, தாயின் அல்லது தந்தையின் அருகாமையை இழந்த குழந்தைகள் ஒரு முழுமை பெறாத உணர்வைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் பெற்றோர்களால் ஏற்படும் பதிவு முதலானதும், ஆழமானதும் ஆகும். வளர்ந்து, நீண்ட காலம் ஆன பிறகு கூட, உங்கள் தாய் அல்லது தந்தையுடன் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தப் பதிவை உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து ஒருபோதும் அழிக்கவே முடியாது.
பதினான்கு வயதில் குழந்தை உடலளவில் முதிர்ச்சி அடைகிறது. இயற்கையாகவே, சமூகத்தின் சட்ட திட்டங்கள் பெற்றோராக இருப்பினும் கூட எதிர் பாலினருடன் பழைய நெருக்கத்தை அனுமதிப்பதில்லை. மேலும் அவர்களது செயல் பாடுகள் வேறு பலவிதங்களிலும் சென்று விடுவதால், அவர்கள் முன்போல அவர்களது பெற்றோர்களுடன் நிறைய நோம் செலவிடுவது இல்லை.
அதனால் 14 வயதில் தேடல் தொடர்கிறது; ஆனால் இந்த முறை வெளியுலகத்தில்; இந்நாட்களில் அது 14 வயதிற்கும் முன்னதாகவே நிகழ்கிறது. இந்நாட்களில் சிறுவர்கள் மிக சிறு வயதிலேயே தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய வற்றுக்கு வெளிப்படுத்தப்படுவதால், அவர்கள் மனதளவில் வேகமாக வளர்கிறார்கள். இது ஒரு ஆரோக்யமான அறிகுறி அல்ல. எது எப்படியோ, ஏறக்குறைய 14 வயதில் வெளியுலகத்தில் தேடல் ஆரம்பிக்கிறது.
குழந்தை இப்பொழுது வெளியாட்களிடமிருந்தும், ஊடகங்களின் வாயிலாகவும் கற்பனை உருவங்களைச் சேகரிக் கிறது. ஊடகங்களுக்கும் இது நன்றாகத் தெரியும். அதனால்தான் எல்லா விளம்பரங்களிலுமே ஒரு கவர்ச்சி இழையோடிருப் பதைக் காணலாம். ஒரு கவர்ச்சியான பெண்ணோ அல்லது ஆணோ ஒரு பொருளுக்கு - அவர்களுக்கும் அந்தப் பொருளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்றால்கூட - விளம்பர அமகியாகவோ அல்லது அழகனாகவோ அதில் இருப்பதைக் காணலாம்.
ஏறக்குறைய எல்லா மோட்டார் பைக் விளம்பரங்களும் பெண்களைக் காண்பிக்கின்றன - எத்தனை பெண்கள் மோட்டார் பைக் ஒட்டுகிறார்கள்?! எந்தவிதப் பொருளாக இருந்தாலும், புன்சிரிப்புடன் ஒரு பெண் அதை பரிந்துரைத்துக் கொண்டிருப் பதைக் காணலாம். நீங்கள் கடைக்குச் செல்லும் பொழுது, சரியாக அந்தப் பொருளைத் தேர்ந்தெடுப்பீர்கள் - அந்தப் பெண் அதனுடன் வருவதில்லை என்பதையும் மறந்து! ஒரு சாதாரண 'ப்யூர் மாஜிக் குக்கீஸ்'விளம்பரம் கூட பெண்களைத்தான் காட்டுகிறது. உங்களுடைய அடக்கி வைக்கப்பட்ட அசைகளை இப்படியாகப் பணம் பண்ணுவதுதான் ஊடகங்களின் வழியாகும்.
எல்லா விதமான ஊடகங்களுமே கனவுகளை விற்பவர் களைத் தவிர வேறில்லை. நாம் இந்தக் கனவுகளை எல்லாம் சேகரித்து, நம் மனதில் ஓட விட்டுக் கொண்டிருக்கிறோம் - நமது தாகத்தைத் தணித்து விடலாம் என்ற நம்பிக்கையில். இது சாத்தியமா ? உங்களுடைய தண்ணீருக்கான தாகம் உப்பைத் தின்பதன் மூலம் தணிந்து விடுமா? தணியாது! நீங்கள் அப்படிச் செய்தால், உங்கள் தாகம்தான் அதிகரிக்கும், இல்லையா?
நீங்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருந்தால், விளம்பரப் பலகைகள் உங்களை ஒரு போதும் முட்டாளாக்காது; அவற்றைப் பார்ப்பதன் மூலம், சந்தையில் இருக்கும் சமீப கால விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவை உங்களை ஏமாற்றாது. ரீங்கள் அவற்றால் பாதிக்கப்பட மாட்டீர்கள். அவற்றையும் மற்ற பொருள்களைப் போல் பார்த்து விட்டு அத்துடன் விட்டு விடுவீர்கள். நீங்கள் அதை நோக்கிய ஒரு விழிப்பற்ற, உடனடியான ஈர்ப்பை உணர மாட்டீர்கள். எதிர்வினை புரியும் மனதிற்கு, உரிமையை நீங்கள் அளிக்கும் பொழுது தான் தொல்லைக்கு உள்ளாகிறீர்கள். எதிர்ச்செயல் புரியும் மனதைக் கரைத்து விட்டு, உங்களால் எப்பொழுதும் விழிப்புணர் வுடன் இருக்க முடியும். இதை அடைவதற்கு தியானம் பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் பாருங்கள், ஒரு பக்கம் ஊடகங்கள் உங்கள் கற்பனைகளுக்குத் தீனி போட்டாலும், மறுபக்கம் சமூகம் உங்களை அடக்கி வைக்கவே முயற்சி செய்கிறது. மேலும் உங்களது கற்பனைகளையும், ஆசைகளையும் அடக்கி வைக்க சமூகம் முயற்சி செய்ய முயற்சி செய்ய, அவை மேலும் மேலும் வளர்கிறது; ஏனெனில் சமூகம் அதன் மூல காரணத்தை அறிந்து கொள்ளாமல் அறிகுறிகளை அடக்க முயற்சி செய்கிறது. வெறுமனே ஒரு மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டி விட்டு விட்டு அதன் வேர்களை அப்படியே விட்டு விட்டால் என்னவாகும் ? மரம் இன்னும் செழிப்பாக வளரும், அவ்வளவுதான்!
எப்படியாயினும், இந்த சில வருடங்களில், நாம் எல்லா விதமான ஊடகங்களின் வாயிலாகவும் கருத்துக்களைச் சேகரித்து ஒரு முழுமையான பெண் அல்லது ஆணின் உருவத்தை மனதில் உருவாக்கிக் கொள்கிறோம். ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் சிறந்த நாசி, சிறந்த கண்கள், சிறந்த தோற்றம் என்று சேகரித்து நமது 'இலட்சிய மனிதனை' உருவாக்கிக் கொள்கிறோம். நாம் ஒரு வெட்டி ஒட்டும் முறையைப் பின்பற்றுகிறோம் ! உங்கள் கணினிகளில், நீங்கள் எப்பொழுதும் வெட்டி ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?
ஒவ்வொரு ஆண் குழந்தையின் முதல் கதாநாயகி அவனது தாய். ஒவ்வொரு பெண் குழந்தையின் முதல் கதாநாயகன் அவளது தந்தை. இதுவே எழுதப்படாத சட்டம்.
இந்த நிலை கிட்டத்தட்ட 7 வருடங்கள் நீடித்து இருக்கும்; நாம் 20 அல்லது 21 வயதை அடையும் வரை. இந்த சமயத்தில் ஊடகங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ளுதல் போய் விடுகிறது - ஆனால், அவற்றில் இருந்து பெற்ற கருத்துக்கள் நம் மனதில் ஏற்கனவே ஆழமாக வேரூன்றி விடுகிறது. பிறகு ஒரு புதிய தேடல் ஆரம்பிக்கிறது - அந்த இலட்சிய மனிதனை நமது நிஜ வாழ்வில் தேடுவது. இந்தத் தேடல் நமக்கு கணவனாக அல்லது மனைவியாக வரப் போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியது. இங்குதான் எதிர்பார்ப்புகள் ஆரம்பிக்கின்றன.
அடுத்த 7 வருடங்களுக்கு, இந்தத் தேடல் தொடர்கிறது. நாம் ஒவ்வொரு மனிதராக முயற்சி செய்து ஏமாற்றம் அடைகிறோம். அறிவுள்ள சில மனிதர்கள், சிறிது காலத்தில், கனவுகள் உண்மையாக முடியாது என்பதைக் கண்டு கொள்கிறார்கள். கனவுகள் உண்மையாக முடியாத காரணத்தினால்தான், கனவுகள் என்று அழைக்கப்படுகின்றன! ஆனால், பலர் அதைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு சின்ன கதை....
ஒரு 90 வயது மனிதர் தினமும் கடற்கரையில் காலை முதல் மாலை வரை அமர்ந்து மக்களை கவனித்துக் கொண்டிருப்பது வழக்கம். இதைக் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு மனிதர் அவரிடம் சென்று, ''நீங்கள் தினமும் இங்கு அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், ''நான் எனக்கு மனைவியாக ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன்''. இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த அந்த மனிதர் கேட்டார், 'நீங்கள் ஏன் உங்கள் இளமையிலேயே தேடியிருக்கக் கூடாது ?''. வயதான மனிதர் பதிலளித்தார், ''நான்
எல்லாவிதமான ஊடகங்களுமே கனவுகளை விற்பவர்களைத் தவிர வேறல்ல.
என் 30-வயதிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறேன்''. திகைப்படைந்த அந்த மனிதர் கேட்டார், ''நீங்கள் எந்த மாதிரி பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் ?' அவர் பதில் சொன்னார், ''நான் ஒரு முழுமையான பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன்'. அவர் கேட்டார், ''அது போன்று ஒருவரைக் காணவேயில்லையா?''. வயதான மனிதர் சொன்னார், ''என் மனதில் இருப்பது போன்ற ஒரு பெண்ணைப் பார்த்தேன். ஆனால், அவளுடன் சரிப்படவில்லை''. அந்த மனிதர் ஏன் என்று கேட்டார். வயதான மனிதர் சொன்னார், '' அவளும் ஒரு முழுமையான ஆணைத் தேடிக் கொண்டிருந்தாள்!'' '
(பலத்த சிரிப்பு!)
நமது மனதில் வைத்துக் கொண்டிருக்கும் உருவத்துடன் முழுமையாகப் பொருந்தும் ஒன்றைப் பெற முயற்சி செய்யும் பொழுது இதுதான் நிகழும்.
ஆனால், ஒரு நீண்ட தேடலுக்குப் பிறகு, நமது மனதிலுள்ள உருவத்துடன் பொருந்துவது போன்ற ஒருவரைத் திடீரென்று காண்போம் - ஒரு தொலைவிலிருந்து. நமது மனதிலுள்ள படம் பசுமையாக இருக்கிறது - அந்த மனிதர், நாம் பார்க்கும் உருவமும் பசுமையாகத் தோன்றுகிறது. பிறகு, எல்லாமே பசுமையாக இருக்கிறது! ஒரு பொருத்தமானவரைக் கண்டுபிடித்து விட்டது போல் தோன்றுகிறது!
இந்த நிகழ்வைத்தான் நாம் 'காதலில் விழுவது' என்றழைக்கிறோம். இதுதான் காதலில் விழுவதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல். இது எப்பொழுதுமே காதலில் 'விழுவதுதான்', ஒருபோதும் காதலில் 'எழுவது' அல்ல என்பதைக் கவனியுங்கள்! இது காதல் என்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்கும்
உங்களுடைய தண்ணீருக்கான தாகம் உப்பை தின்பதன் மூலம் தீர்ந்து விடுமா ?
ஹார்மோன்களின் குறும்பைத் தவிர வேறெதுவுமில்லை. ஏனெனில், உண்மையிலேயே என்ன நிகழ்கிறதென்றால், நம்முடைய வலுவான தேவைகளினாலும் எதிர்பார்ப்புகளினாலும், விஷயங்களை நாம் விரும்புவது போன்றே காண்கிறோம். நமது மனதில் இருக்கும் உருவத்தை அடுத்தவர்களின் மீது பிரதிபலிக்கிறோம்.
ஆகவே, எப்படியாயினும் உலகம் பசுமையாலும், இசையாலும் நிரப்பப்படுகிறது. வாழ்க்கை கவிதையாகிறது. இறுதியில் நமது தேடல் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது! இந்த நிலையில்தான் நாம் கவிதை எழுதவும், ஓவியங்கள் வரையவும் இன்னும் என்னவெல்லாமோ செய்யவும் ஆரம்பிக்கிறோம்.
இந்த இடைவெளியைக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கும் வரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருக்கும். நாமும் ஒருவர் மீது மற்றொருவர் கற்பனைகளைத் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டிருப்போம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனிதர் அருகில் வர வர, நாம் பசுமையாகக் காண்பது பசுமையல்ல, வெளிர் பசுமையே என்று உணருகிறோம். அது பரவாயில்லை என்று மேலே செல்கிறீர்கள். சிறிது காலத்தில், இன்னும் நெருங்கி வரும்பொழுது அது வெளிர் பச்சை கூட அல்ல, உண்மையில் ஒரு விதமான மஞ்சள் என்று உணருகிறீர்கள்.
ஆனால், இந்த நிலையில் நமது கற்பனை பொய்த்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லாததால், நாம் ஏதோ சாக்குபோக்குச் சொல்லிச் சமாளிக்க ஆரம்பிக்கிறோம். நாம் நமக்குள்ளேயே 'இதுதான் வாழ்க்கை! எல்லாம் சரியாக இருக்க முடியாது!' என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நிஜத்துடன் வாழ்வதற்கு அசாதாரணமான தைரியமும், அறிவுக்
ஒரு பக்கம் ஊடகங்கள் உங்களுடைய கற்பனைகளுக்குத் தீனி போட்டாலும், மறுபக்கம் சமூகம் உங்களை அடக்கி வைக்கவே முயற்சி செய்கிறது.
கூர்மையும் தேவை. அதனால் நாம் அதற்குப் பதிலாக இந்த நொண்டிச் சாக்குகளை, நமக்குப் பாதுகாப்பு அமைப்பாக, நிஜத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு உபயோகித்துக் கொள்கிறோம்.
இறுதியில், போதுமான அளவு நெருங்கி வந்தவுடன், அது மஞ்சள் கூட இல்லை, வெறும் வெள்ளைதான் என்பதைக் கண்டு கொள்கிறோம்! நமக்கு உள்ளே இருப்பது பசுமையாகவும் வெளியே இருப்பது வெளுப்பாகவும் இருக்கிறது. கனவும் நிஜமும் முற்றிலும் வெவ்வேறானவை.
ஒரு சின்ன கதை ...
ஒரு மனிதன் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி சாலையில் விழுந்து விட்டான். ஒரு வழிப்போக்கன் அவனிடம் ஓடிச்சென்று கேட்டான், ''விழுந்ததில் உங்களுக்கு அடிபட்டு இருக்குமே". அந்த மனிதன் சொன்னான், "இல்லை. விழுந்ததினால் அடிபடவில்லை. திடீரென்று தடுக்கப் பட்டதால்தான் அடிபட்டது!".
(சிரிப்பு)
காதலில் மிதந்து கொண்டும், பாசாங்கு செய்து கொண்டும் இருக்கும் வரையில், போதுமான இடைவெளியும் குறைவான நேரமும் வைத்துக் கொண்டிருக்கும் வரையில், நாம் நன்றாகத் தான் இருப்போம்; ஒரு கனவுலகில் இருப்போம்; செயல்படும் நிலையில் இருப்பதில்லை. மிக நெருக்கம் நின்று உண்மையான உறவு ஆரம்பிக்கும் பொழுதுதான், இடைவெளி குறைந்து நேரம் அதிகரிக்கும் பொழுதுதான், பிரச்சினை ஆரம்பிக்கிறது!
நீங்கள் சேகரிக்கும் கனவுகள் அதிகரிக்க அதிகரிக்கத் தரையைத் தொடுமுன் விழும் நேரமும் அதிகரிக்கும், அதனால்
எப்பொழுதுமே காதலில் விழுவதுதான். எழுவது அல்ல. இது காதல் என்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்கும் ஹார்மோன்களின் குறும்பைத் தவிர வேறல்ல.
பாதிப்பும் அதிகமாக இருக்கும். உங்கள் கனவுகள் குறைவாக இருக்குமானால், நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய விஷயங்களும் குறைவாக இருப்பதால் தொல்லைகளும் குறைவாகவே இருக்கும். உங்களிடம் எந்த விதமான கனவோ கற்பனையோ இல்லை என்றால், நீங்கள் உடனே உங்கள் ஆத்ம நாயகன் அல்லது நாயகியை சந்தித்து விடுவீர்கள். உங்களுக்குக் கனவுகளே இல்லாதபட்சத்தில், நீங்கள் கரம் பிடிக்கும் எவரும் உங்கள் ஆத்ம நாயகன் அல்லது ஆத்ம நாயகி ஆகிவிடுவர்.
உயிருடன் இருக்கும் எந்த மனிதனாலும் நம் மனதில் இருக்கும் உருவத்தின் அளவிற்கு வாழ முடியாதென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அந்த உருவம் நிஜத்திலிருந்து உருவானதல்ல! அந்த உருவம் நமது கற்பனை உலகின் பல பகுதிகளில் இருந்தும் வெட்டி ஒட்டப்பட்டது! எந்த உருவமும் நிஜத்துடன் பொருந்தாது - ஏனெனில், அது ஒரு வெறும் கனவு உருவம் மட்டுமே!
உங்கள் உருவங்களை நிஜவாழ்வின் பாத்திரங்களில் இருந்தும், நீங்கள்பார்த்துக்கொண்டு இருக்கும் -உங்களைச்சுற்றியுள்ள மனிதர்களிடம் இருந்தும் சேகரித்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், நீங்கள் ஊடகங்களில் இருந்து சேகரிக்கிறீர்கள். ஊடகங்களே இச்சையினால் தவித்துக் கொண்டிருக்கிறது! பிறகு அதனால் எவ்வாறு உங்களுக்கு ஏதேனும் ஒரு வழிகாட்டுதலையோ அல்லது நிவாரணத்தையோ வழங்க முடியும் ?
அதனால்தான் பெயரளவிலான காதல் அனைத்தும், அநேகமாக வேதனையிலேயே முடிகின்றன. நாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக, மற்றவரால் சுய நலத்திற்காக உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்ட உணர்வுடன் முடித்துக் கொள்கிறோம். நமது
அடிப்படை இயல்பே நடந்தவற்றிற்கு அடுத்தவரின் மீது பழி போடுவதுதான்!
ஆனால் அது அடுத்தவரின் தவறுதானா?
இல்லை! குற்றம் எப்பொழுதும் உங்களிடமே இருக்கிறது. ஏனெனில் நீங்கள் எதையோ எதிர்பார்த்து, உங்கள் கற்பனையை அடுத்தவரின் மீது திணிக்க முயற்சி செய்தீர்கள்! பிறகு தோல்விக்குப் பொறுப்பானவர் யாராக இருக்க முடியும் ?
சாதாரணமாக, சில சம்பவங்களில் ஒரு மனிதன் கிறுக்குத் தனமாகவோ அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வாத வகையிலோ நடந்து கொள்ளக் கூடும். இவையெல்லாம் விதிவிலக்குகள். இது போன்ற சமயங்களில், இது போன்ற நடத்தையுள்ளவர்களுடன் தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா இல்லையா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நான் சொல்வதை இது போன்ற சமயங்களில் பயன்படுத்தத் தேவையில்லை. எப்பொழுதும் விதிவிலக்குகள் என்பது இருக்கத்தான் செய்யும்.
ஆனால் நான் சொல்வது உண்மையில் பல வீடுகளில் நிஜத்தில் நிகழ்வதுதான் ; இருவருமே சாதாரணமாக இருந்தும் ஒருவித அமைதியின்மை நிலவுகிறது. ஆனால் ஒருபோதும் அதனைப் பார்க்க முயற்சிப்பதில்லை. நாம் ஒருபோதும் உண்மையுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை! நாம் எப்பொழுதுமே விஷயங்களை ஒரு அழகான தரை விரிப்புக்கடியில் பெருக்கித் தள்ளி விட்டு, நம்மையே ஏமாற்றிக் கொண்டு அதன் மீது நடந்து செல்லவே விரும்புகிறோம்.
உங்களிடமிருக்கும் ஒரு திறந்த காயத்திற்கு, உடனே சிகிச்சை அளித்து அதிலிருந்து நிவாரணம் பெறுவதுதானே மிகவும் தர்க்க ரீதியான ஒரு செயலாக இருக்கும்? அதற்குப் பதில் அதை
கனவும் நிஜமும் முற்றிலும் வெவ்வேறானவை.