KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/சமயங்களில், தேவையாக இருக்கிறது. அப்பொழுது நாங்கள் என்ன செய்வது ?Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

சமயங்களில், தேவையாக இருக்கிறது. அப்பொழுது நாங்கள் என்ன செய்வது ?

உங்கள் செதுக்குதலை விழிப்புடன் செய்யுங்கள். என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்து செய்யுங்கள். அப்பொழுது தேவைக்கதிகமாக செய்ய மாட்டீர்கள். உங்கள் தொழிலாளிகளிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் நியாயமானவையா என்று பாருங்கள். வேறு ஏதேனும் மாற்று தீர்வுகள் இருக்கிறதா என்று பாருங்கள். முற்றிலும் தேவையென்றால் மட்டுமே, நீங்கள் மற்றவரை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்யலாம்.

உங்களிடம் எந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதை கவனத்துடன் உபயோகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! கோபமும், இச்சையும் கூட உங்களுக்குக் கடவுளால் கொடுக்கப் பட்ட மிகப் பெரும் சக்திகள்தான். அந்த சக்தியிடம் உங்களுக்கு மரியாதை இருக்குமானால், நீங்கள் அதை வீணாக்கவோ, தவறாகப் பயன்படுத்தவோ மாட்டீர்கள்.

நாம் எப்பொழுதாவது பணத்தைத் தவறாகப் பயன்படுத்து கிறோமா? நீங்கள் பணத்தை ஒரு போதும் தவறாகப் பயன்படுத்த மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதை மதிக்கிறீர்கள். ஒருவன் பத்து ரூபாய் மதிப்புள்ள வேலையைச் செய்தால், நீங்கள் அவனுக்கு ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுப்பீர்களா ?

ஆனால் எப்பொழுதுமே அதிகமாகத்தான் கொடுக்கிறீர்கள். ஒருவன் பத்து ரூபாய் அளவு கோபப்படும் அளவிற்குத் தவறு செய்தால், நீங்கள் ஐம்பது ரூபாய் அளவிலான கோபத்தைக் கொடுக்கிறீர்கள்! இல்லையா ? ஏன் ? ஏனெனில் உங்கள் கோபத்தை விழிப்பின்றி உபயோகப்படுத்துகிறீர்கள்; விழிப்புடன் அல்ல. நீங்கள் உங்கள்

உங்களால் முடிந்த வரையில் குழந்தைகள் தொலைக்காட்சியில் டூயட் காட்சிகளைக் காண அனுமதிக்காதீர்கள்.

கோபத்தை விழிப்புடன் உபயோகிப்பீர்களானால், அது பலன் கொடுக்கும். அதன் பிறகு குற்ற உணர்வடைய நேராது. இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

உங்கள் கோபத்தினால், ஒருபோதும் உங்கள் அமைதி குலையக் கூடாது. அவ்வாறு அமைதி குலையுமாயின், நீங்கள் கோபத்தில் விழிப்புணர்வுடன் செல்லவில்லை என்று பொருள்; கோபம் உங்களை வெல்ல அனுமதித்து விட்டீர்கள். இதுதான் உங்கள் கோபத்தை நீங்கள் சரியாக உபயோகப் படுத்துகிறீர்களா என்பதை அறியும் அளவுகோல் !

ஒரு சின்ன கதை...

ஒரு முறை ஒரு சாது, அலைந்து திரிந்து இரந்து உண்டு வாழும் ஒரு மனிதர், ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, அந்த கிராம மக்களிடம் இருந்து, அவர்களது வாழ்க்கையில் பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்த ஒரு நாகத்தைப் பற்றி, ஒரு புகார் வந்தது. அவருக்கு மிருகங்களுடன் தொடா்பு கொள்ளும் சக்தி இருப்பது தெரியுமாதலால், எப்படியாவது அந்த நாகத்திடம் பேசி அவர்களை விட்டு விடுமாறு செய்ய வேண்டும் என்று அவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். அந்த சாது நாகத்திடம் பேசினார். நாகமும் இனிமேல் எந்த கிராமவாசியையும் கடிப்பதில்லை என்று சத்தியம் செய்தது. சில மாதங்கள் கழித்து, அந்த சாது மீண்டும் அதே கிராமம் வழியாக வந்த போது, உடலெங்கும் சிராய்ப்புகளுடன், கிட்டத்தட்ட சாகும் தறுவாயில் அந்த நாகத்தைக் கண்டார். ''உனக்கு என்ன ஆயிற்று ? ஏன் இப்படி காயமடைந்திருக்கிறாய் ?'' என்று அந்த சாது கேட்டார். அந்த நாகம் அழுதது, ''ஓ சாதுவே! நீங்கள்தான் நான் இனிமேல் கிராமவாசிகளைக் கடிக்கக் கூடாதென்று சத்தியம் செய்ய வைத்தீர்கள்! நான் இன்று வரை என் சத்தியத்தைக்

எதிர்பார்ப்புகளின் சுமையே மூலாதாரத்தின் அமைதியைக் குலைத்து விடுகிறது. அதனால் இந்தச் சக்கரம் பூட்டப்பட்டு விடுகிறது.

காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்னர் என்னைக் கண்டு பயந்த கிராமவாசிகளோ என் மென்மையை பலவீனமாக எடுத்துக் கொள்கிறார்கள். நான் கடிக்காமல் இருப்பதைக் கண்டு, தினமும் என்னைச் சித்திரவதைப் படுத்துகின்றனர். நான் என்ன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் என்று பாருங்கள்!''. அதற்கு சாது சொன்னார், "என் அனுதாபத்திற்குரிய முட்டாள் நண்பனே! நான் மக்களைக் கடிக்க வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொண்டேன். அவர்களைப் பார்த்து சீற வேண்டாம் என்று சொன்னேனா ?''.

நீங்கள் கோபத்தை சரியான வழியில், சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். சரியாக உபயோகப் படுத்தத் தெரிந்தால் கோபம் ஒரு மிகப்பெரும் சக்தி. கோபத்தைப் பற்றிய அறிவு கோபத்தைக் குறைக்கிறது.

பலர் என்னிடம் வந்து சொல்கிறார்கள், "ஸ்வாமிஜி. நான் என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான் நான் நல்லதற்காக அவள் மாற வேண்டும் என்று விரும்புகிறேன்! அதனால்தான் நான் அவளுடன் சண்டை போடுகிறேன்''.

நான் சொல்கிறேன், ''நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கவில்லை, உங்கள் மனதிலிருக்கும் உருவத்தைத்தான் நேசிக்கிறீர்கள்' '.

நீங்கள் உங்கள் மனதிலிருக்கும் உருவத்தை நேசிக் கிறீர்கள்; மேலும் உங்கள் மனைவி நீங்கள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளும் பொழுது, நீங்கள் அவளை அவளை நேசிக்கிறீர்கள். உங்களுடைய உண்மையான அன்பு, உங்கள் மனைவிக்கானது அல்ல; உங்கள் மனதிலிருக்கும் உருவத்திற்கானது. நீங்கள் உண்மையிலேயே உங்கள் மனைவியை நேசித்தால், மன உருவத்தை உங்கள் மனைவியுடன் பொருந்துமாறு மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.

பிரம்மச்சரியம் என்பது நமக்குள் இருக்கும் அடக்கி வைக்கப்பட்ட பாதிக்காக ஏங்கிக் கொண்டிராமல் இருப்பது.

ஆனால் உங்கள் மன உருவத்தை நேசித்தால், உங்கள் மனைவியை அந்த உருவத்துடன் பொருந்துமாறு மாற்ற முயற்சி செய்வீர்கள்.

நம்மில் பலரும் நமது மன உருவங்களை நேசிக்கிறோம். அதுதான் உண்மை. நமது இல்லங்களின் அமைதியின்மைக்கு ஆரம்பம் இதுதான். இதுதான் 'நெருக்கமான சண்டைக்கு' ஆரம்பம்! நான் சொல்கிறேன்... உண்மையிலேயே காதலர்கள் நெருங்கிய எதிரிகள்! அவர்கள் நெருக்கமாக இருந்தாலும் எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஓயாமல் ஒருவரையொருவர் மேலோங்கி நிற்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் ஒரு நெருங்கிய பகைமை நிலவுகிறது; அதை அவர்கள் நெருக்கம் என்கிறார்கள். உண்மையிலேயே நெருக்கம் என்பது நீங்கள் மற்றவருடன் முற்றிலும் தளர்வாக இருப்பதேயாகும். அதுவே உண்மையான நெருக்கம்.

ஸ்வாமிஜி, நீங்கள் சொல்வது, நாம் மற்றவரை முழுமையாக, அவருடைய எல்லாத் தவறுகளுடனும், ஏற்றுக் கொள்வது என்பதுதானே ?

இல்லை !

ஏற்றுக் கொள்ளுதல் என்ற வார்த்தை கூட நிராகரித்தல் என்ற எண்ணத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது. 'அவருடைய எல்லாத் தவறுகளுடனும்' என்று சொல்லும் பொழுது, அது ஒரு மௌனமான புகாரைப் போல இருக்கிறது. அது "வேறு என்ன செய்வது? அதனுடன்தான் வாழ்ந்தாக வேண்டும்' என்று சொல்வதைப் போல இருக்கிறது. அது அல்ல! நான் சொல்வது, அடுத்தவரை உங்கள் வாழ்க்கைக்குள் மனப்பூர்வமாக வரவேற்றுக் கொள்ளுங்கள்; வெறுமனே அவனோ அல்லது அவளோ எப்படி இருக்கிறார்களோ, அப்படியே. ஏற்றுக் கொள்வதற்கும்

பிரம்மச்சாரிய நிலையை நீங்கள் அடைந்து விட்டீர்களானால், நீங்கள் வெளியுலகத்தில் ஒரு பெண்ணுடனோ அல்லது இன்றியோ வாழமுடியும்.

வரவேற்றலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏற்றுக் கொள்ளுதல் ஒரு சமரச உடன்பாடு செய்து கொள்வதைப் போல. வரவேற்றல் என்பது எந்தவிதமான எதிர்பார்ப்புகளோ நிபந்தனைகளோ இன்றி மற்றவருக்கு உங்கள் இருப்புத் தன்மையைத் திறப்பது.