படத்தில் இந்தச் சக்கரங்கள் படம் பிடிக்கப்பட்டு, தத்துவார்த்தத் தளத்தில் அவற்றின் இருப்பு நிரூபிக்கப் பட்டுள்ளது.
எப்பொழுது ஒருவன் எதிர்மறை எண்ணங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறானோ அப்பொழுது தொடர்புடைய சக்கரமானது ஒரு மேலங்கியின் பொத்தான் அளவிற்குச் சுருங்கிவிடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக் கிறது. அந்த அளவிற்குச் சிறியதாகி விடுகிறது. அதே மனிதன் அதன் தொடர்புடைய நேர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கும் பொழுது, அந்தச் சக்கரமானது ஒரு வண்டிச் சக்கரத்தின் அளவிற்கு விரிவடைகிறது. இது நமது உணர்ச்சிகள், ஆற்றல் மையங்களான, சக்கரங்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்பாகும்.
எதிர்மறை எண்ணங்களால் இந்தச் சக்கரங்களில் நமது சக்தி ஒட்டமானது தடைபடுகிறது. இதை நாம் முழுமையாக அறிவதேயில்லை.
புரிந்து கொள்ளுங்கள்: மனிதன் புழுவைப் போன்று தரையில் உ ஊர்ந்து செல்வதற்காக வடிவமைக்கப்படவில்லை. அவன் காற்றில் பறப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறான். பறப்பதைப் பற்றிய அறிவியலானது, நமது சக்கரங்களை எவ்வாறு கையாள்வது, நமது உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது, என்பதைப் பற்றிய அறிவியலைக் கற்பதைத் தவிர வேறில்லை. இந்த ஏழு சக்கரங்களையும் எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதைக் கற்றாலே போதுமானது.
அந்தக் கிராமவாசிகளுக்கு, அந்தக் கருவி பறக்கும் என்பதைப் பற்றிய சிந்தனை எவ்வாறு கிடையாதோ, அவ்வாறே
இந்தச் சக்கரங்கள் நமது உடலில் பருப்பொருளாக இல்லை. இவை பருவுடலைச் சார்ந்ததில்லை. ஒளியுடலைச் சார்ந்தது.
மனிதனுக்கும் தன்னால் பறக்க முடியும் என்ற எண்ணம் கிடையாது. 'ஞானிகள் அதிர்ஷ்டசாலிகள், அவர்களிடமிருந்து சற்று விலகியே நின்று அவர்களை அச்சத்துடனும் மரியாதையுடனுமே நோக்க வேண்டும்' என்றே மனிதன் எப்பொழுதும் நினைக்கிறான். அவன், தானும் அவர்களைப் போல ஆகவேண்டும் என்று விரும்புவதேயில்லை. நான் சொல்கிறேன்... உங்களுக்கு உண்மையிலேயே உள் உலகில் சாதனை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருப்பின், எதுவரினும் நீங்கள் சாதிப்பீர்கள். உங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லாதது தான் பிரச்சினை. எவ்வாறு கிராமவாசிகள் அந்தக் கருவியால் பறக்க முடியும் என்பதை நம்ப மறுத்தனரோ அவ்வாறே நீங்களும், உண்மையிலேயே நீங்கள் மிக உயர்ந்த விஷயங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒரு சிறுமி பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டிருந் தாள். அவள் ஆசிரியர் கொடுத்த பாடங்களுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்தவனோ பியானோ வாசிப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவன். அவனாகவே ஒரு பாடலை வாசித்துக் கொண்டு இருந்தான். அந்தச் சிறுமி அவனிடம் சென்று, சிறிதுநேரம் அவன் வாசிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இறுதியில் அவனிடம் கேட்டாள், ''ஐயா, ஒருவேளை உங்களுக்கு என்னைவிட அதிகமான விரல்கள் இருக்கிறதோ ?''.
நாம் எப்பொழுதும் வேண்டிய அளவு அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பதில்லை என்று எண்ணுகிறோம். உண்மை என்னவெனில்,
எதிர்மறை எண்ணங்களால் இந்தச் சக்கரங்களில் நமது சக்தி ஒட்டமானது தடைபடுகிறது. இதை நாம் முழுவதுமாக அறிவதேயில்லை.
நமக்குத் தேவையானதெல்லாம் ஏற்கனவே நம்மிடம் இருக்கிறது. அதை எவ்வாறு சரியாக உபயோகப் படுத்துவது என்பது மட்டுமே ருமக்குத் தெரியவில்லை. நம்மில் பலர் நமது வாழ்க்கை, நமது திறமை ஆகியவற்றை ஒரு மாட்டு வண்டியைப் போலவோ அல்லது ஒரு டிராக்டரைப் போலவோதான் உபயோகிக்கிறோம். அதை ஒரு ஆகாய விமானமாக மாற்றிவிட முடியும் என்பது நமக்குத் தெரிவதில்லை. பறப்பதற்கான ஆற்றல் உங்களுள் இருக்கிறது. ஆனால் அது நீங்கள் இந்த சக்கரங்களின் பின்னாலுள்ள அறிவியலைக் கற்கும் வரை மறைந்தேதான் இருக்கும்.
இந்தச் சில நாட்களில், இந்தச் சக்கரங்களின் பின்னால் உள்ள உணர்ச்சிகள், இந்த சக்கரங்களையும் அதன் சக்தியையும் பூட்டி கட்டுப்படுத்துவது எது, அதை எவ்வாறு திறந்து சக்தியூட்டிய நிலையில் வைத்திருப்பது போன்றவற்றைப் பற்றிய ஒரு தெளிவான உள்நோக்கிய பார்வையைப் பெறுவீர்கள்.
ஒரு குருவானவர், இறுதியான உண்மையைப் பற்றி கன் அனுபவத்திலிருந்து பேசுகிறார். தனது இறுதியான அனுபவத்தால் அவர் உறுதியுடன் பேசுகிறார். ஆனால் நாமோ, வயதினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே பக்குவ மடைந்து மலரமுடியும் என்ற பொதுவான எண்ணத்திலி ருக்கிறோம்.
பக்குவமடைவதற்கும், மலர்வதற்கும் காலம் தேவை யில்லை என்பதைக் காட்டுவதற்கு குருமார்கள் ஒரு வாழும் உதாரணம். இதைப் பற்றி நான் மேலும் விளக்குகிறேன்.
நீங்கள் குழந்தையாக இருந்தபொழுது, பொம்மைகளின் மீது மிகுந்த பற்று வைத்திருந்தீர்கள் அல்லவா? யாரேனும் ஒரு
மனிதன் பறக்கக் கூடிய அற்புதமான ஒரு இயந்திர அமைப்பு. ஆனால் நமக்கு நமது உண்மையான ஆற்றல் தெரியவில்லை.
பொம்மையை உங்களிடமிருந்து பறித்துச் சென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள் ? ஏதோ உங்கள் முழு வாழ்க்கையுமே அதையே சார்ந்திருப்பது போல் கதறியழு்து ஆர்ப்பாட்டம் செய்வீர்களல்லவா ? ஆனால் நீங்கள் வளர்ந்த பிறகு, யாரேனும் ஒரு பொம்மையை எடுத்துச் சென்றால், அது உங்களுக்கு ஒரு பொருட்டாயிருக்குமா? நீங்கள் நொந்து போய் விடுவீர்களா? இல்லை. இப்பொழுது உங்களுக்கு பொம்மையின் மீது எந்தவித பற்றும் இல்லை. உங்களுள் அறிவு இறங்கும் பொழுது, பக்குவம் இயல்பாகவே வருகிறது.
இதுபோன்ற அறிவும் பக்குவழும் வயதுடன் வருவதாக நாம் எண்ணினாலும் அதற்கும் உடலின் வயதிற்கும் சம்பந்தமில்லை ; அது மனிதனின் மனதின் வயதைப் பொறுத்தது. ஆராய்ச்சிகள் ஒரு மனிதனின் மனதின் வயதைக் கணிக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு சராசரி மனிதனின் மனதின் வயது 14-ஐத் தாண்டவில்லை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறது.
மனித உடலின் வயதுடன், அவன் எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்து, எல்லாவிதமான தவறுகளையும் செய்து, அனுபவத்தையும் பக்குவத்தையும் அடைய வேண்டும்.
அது இதைப் போன்றது ...
நாம் ஒரு மெழுகுவர்த்தியின் சுடரைத் தொட்டால், காயமேற்பட்டு, மெழுகுவர்த்தியின் சுடர் சுடும் என்று தெரிந்து கொள்கிறோம். பிறகு ஒரு அடுப்பில் உள்ள நெருப்பைத் தொட்டு,
உங்களால் உங்கள் மனதை தேவையானபொழுது மட்டும் உபயோகப்படுத்த முடியுமானால் நீங்கள் அதை விடுவதற்குக் கற்றுக்கொண்டு விட்டீர்கள்! அதன் எஜமானர் ஆகிவிட்டீர்கள்!
அதுவும் சுடும் என்று கற்றுக் கொள்கிறோம். பின்னர் ஒரு சிகரெட்டின் முனையைத் தொட்டு அதுவும் சுடும் என்று தெரிந்து கொள்கிறோம். பின்னர் எரியும் கரியைத் தொட்டு அதுவும் சுடும் என்று கற்றுக் கொள்கிறோம்.
இது போன்று, வெவ்வேறு வடிவங்களிலுள்ள நெருப்பைத் தொட்டு, எல்லா வடிவங்களிலும் நெருப்பு சுடுகிறது என்று கற்றுக் கொள்கிறோம்.
இதை நாம் கற்கும் பொழுது, நாமே சுடுகாட்டிற்குச் செல்லும் காலம் வந்து விடுகிறது! வாழ்க்கையில் இதைத் தான் நாம் அனுபவம் என்கிறோம். இதைத்தான் நாம் அனுபவ வாயிலாகக் கற்பது என்கிறோம். உடலின் வயதுடன் அறிவைத் திரட்டுவது. பாடங்களைக் கற்பதற்கு நாம் வாழ்க்கை முழுவதையும் எடுத்துக் கொள்கிறோம். வயது ஏற ஏற, நாம் நமது இனிய சொந்த நடையில் கற்றுக் கொள்கிறோம்.
இன்னொரு பக்கம், முதல் தடவை தடவை நெருப்பைத் தொடுவதிலேயே, எல்லா விதமான உருவத்திலும் நெருப்பு சுடும் என்பதைப் புரிந்து கொண்டால், நீங்கள் அறிவுள்ளவர். இதைக் கற்பதற்கு வயது தேவையில்லை. அறிவு மட்டுமே போதுமானது. இது உங்களுடைய மனதின் வயதைக் குறிக்கிறது. அதனால்தான் நாம் அறிவிற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை என்கிறோம். இங்கு நீங்கள் எத்தனை அறிவுள்ளவர், விஷயங்களைப் புரிந்து கொள்ள நீங்கள் உங்கள் உள்-அறிவை எவ்வளவு தூரம் போஷித்து வளர்த் துள்ளீர்கள் என்பதே கேள்வி ?
இதை நான் உங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களிலிருந்தே விளக்குகிறேன்.
நாம் ஆகாய விமானமாக என்ன செய்ய வேண்டும் ?
மாணவப் பருவத்தில், கல்லூரியில் இருக்கும்பொழுது, ஒரு வேலை கிடைத்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
வேலை கிடைத்தவுடன், நீங்கள் நினைத்த, எதிர்பார்த்த அளவு சந்தோஷமாக இல்லை, ஒரு கல்யாணமாகி விட்டால் சந்தோஷமாக இருக்கலாம் என்று தேற்றிக் கொள்கிறீர்கள்.
கல்யாணமான சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
ஒவ்வொரு ஆசையின் பின்னாலும் ஓடி, அது திறை வேறினால் சந்தோஷமடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். இது போன்றே, வாழ்க்கையின் இறுதிக் கட்டம் வரை ஓடி ஓடி, பின்னர் எந்த ஆசையுமே உண்மையான சந்தோஷத்தைத் தருவதில்லை என்பதை உணர்ந்து, ஆன்மீகம் மற்றும் தியானத்தை நோக்கித் திரும்புகிறீர்கள்! இதுதான் வயதினாலும் அனுபவத் தினாலும் கற்றுக் கொள்ளும் ஒரு மனிதனின் வாழ்க்கை.
அறிவின் மூலமாகக் கற்பவன் எவனோ, அவனே முன்னேறிய மன வயதையுடையவன். அவன் தன் முதல் அசையிலிருந்தே தெளிவாக உணர்ந்து கொள்கிறான் எந்த ஆசையுமே நிறைவேறியவுடன் உண்மையான சந்தோஷத்தைத் தருவதில்லை என்று; அங்கேதான் வித்தியாசமிருக்கிறது. அவன் முழுவதையும் பார்த்து, அனைத்தையும் ஆராய்கிறான். உண்மையான நிறைவு உள்ளேயிருந்து வருகிறது, வெளியுலக விஷயங்களில் இருந்து அல்ல என்பதைத் தெரிந்து கொள்கிறான்.
இந்த அறிவை அடைவதற்கு, நீங்கள் வயதானவராக இருக்க
எப்பொழுதும் நாம் ஒரு வெறும் கவனிப்பவராக மட்டுமே ஆகிறோமோ, அப்பொழுது நம் மனம் நம் கைகளில் ஒரு கருவியாகிறது. போதுமானது. நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது, இருப்புத் தன்மையே உங்களுக்குப் போதிக்கிறது. இருப்புத்தன்மை ஒரு சிறந்த குருவாகும். நாம் நிகழ்காலத்தில் இல்லாத பொழுது, எப்பொழுதும் இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்தின் பின்னால் ஒடிக் கொண்டிருக்கும் பொழுது, கற்றுக் கொள்வதற்கு நமது இனிய நேரத்தை எடுத்துக் கொள்கிறோம், அவ்வளவே.
கடந்த காலங்களில், புத்தர், சங்கரா், ரமண மஹரிஷி, விவேகானந்தா் முதலிய குருமார்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டோமானால், பாரதத்தின் சரித்திரத்தை உருவாக்கிய ஞானமடைந்த மனிதர்கள் அனைவருமே, மிகச் சிறிய வயதிலேயே ஞானமடைந்திருக்கிறார்கள். கற்பதற்கும், வயதிற்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அதனால்தான் ''உங்கள் வயது உங்களைப் பொறுத்தது'' என்கிறார்கள். அதன் பொருள், உங்கள் வயது உங்கள் மனதின் வயதைப் பொறுத்தது என்பதாகும். எனவே உங்கள் வயது, உங்கள் பக்குவத்தைப் பொறுத்தது. உடலின் வயதையல்ல. உங்கள் வயது 70-ஆக இருக்கலாம்; ஆனால் 20-வயதின் புரிந்து கொள்ளும் தன்மையே இருக்கலாம். அல்லது, உங்கள் வயது 18- ஆக இருக்கலாம் ; ஆனால் 80-வயது ஆனவரின் பக்குவமும் புரிந்து கொள்ளும் தன்மையும் இருக்கலாம். ஆகவே, உங்களின் வயது முதுமை காரணமாக நீங்கள் மேன்மை யானவர் என்று உரிமை கொண்டாடாதீர்கள்.
பரீ ராமகிருஷ்ணரின் பிரம்மானந்தரைப் பற்றி ஒரு அழகான கதை இருக்கிறது...
ஒருநாள் ஸ்வாமி தியானத்தில் இருந்தார். அப்பொழுது ஒரு பக்தர் அங்கே வந்து, ஒரு விலையுயர்ந்த கம்பளத்தை அவர் முன் காணிக்கையாக வைத்தார். ஸ்வாமி பிரம்மானந்தர் ஒன்றும் கூறவில்லை. அவர் அமைதியாக நடந்தவற்றைக் கவனிக்குக் கொண்டிருந்தார். இரண்டு மணி நேரம் கழித்து, அங்கு வந்த ஒரு திருடன், அவரருகில் வந்து அந்தக் கம்பளத்தை எடுத்துச் சென்றான். அனால் ஸ்வாமி, அதே அமைதியுடன், எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் கவனித்துக் கொண்டேயிருந்தார். அந்தக் கம்பளத்தைப் பெற்றதோ, இழந்ததோ அவரிடம் எந்தவிதமான வித்தியாசக்கையும் ஏற்படுத்தவில்லை.
அதேபோன்று, ரமண மகரிஷியைப் பற்றியும் ஒரு கதை உண்டு: ஒருநாள் ஆசிரமத்திற்குச் சில திருடா்கள் வந்தனர். அவர்கள் ஒரு துரும்பையும் விடாமல் எடுத்துச் சென்ற தோடல்லாமல், செல்வதற்கு முன், அவருக்கு ஒரு உதையும் கொடுத்து விட்டுச் சென்றனர். பகவான் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை என்பதுடன், இந்த நிகழ்ச்சியின்போது அவரது சுவாசத்தின் வேகத்தில் கூட ஒரு சிறு மாற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவர் இந்நிகழ்ச்சியினால் இம்மியளவு கூட பாகிக்கப் படவில்லை.
எப்பொழுது நாம் ஒரு வெறும் கவனிப்பவராக மட்டுமே ஆகிறோமோ, அப்பொழுது நம் மனம் நம் கைகளில் ஒரு கருவியாகிறது. பிறகு நாம் அதை விரும்பியபடி உபயோகித்துக் கொள்ள முடியும். இல்லாவிடில், நமது மனமானது, நம்மை அதன் அடிமையாக்கி விடும். உங்களால் உங்கள் மனதை தேவையான பொழுது மட்டும் உபயோகப்படுத்த முடியுமானால், நீங்கள்
ஒவ்வொரு ஆசையின் பின்னாலும் ஒடி. அது நிறைவேறினால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள்.
அதனை விடுவதற்குக் கற்றுக் கொண்டு விட்டீடா்கள்! நீங்கள் எஜமானராகி விட்டீர்கள்!
எனவே இந்த சில நாட்களில், எவ்வாறு நம் உணர்ச்சி களைக் கையாண்டு நமது வாழ்க்கையை கவனிப்பவராக மாறுவது என்பதைக் காண்போம்; எவ்வாறு, நாம் நம்மை நமக்குள்ளாக மையப்படுத்திக் கொண்டு, வெளி விளிம்பில் இருந்து பாதிக்கப்படாத வகையில் செயலாற்றுவது என்பதைக் காண்போம்; நமது விழிப்பற்ற தீர்மானங்களுக்குக் காரணமான, மனப்பதிவுகளற்ற, ஒரு மனநிலையை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காண்போம். எவ்வாறு நுண்ணறிவின் என்பதையும், எவ்வாறு விழிப்பற்ற நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கும், உயர் விழிப்பு நிலைக்கும் செல்வது என்பதையும், எவ்வாறு உள்ளுணர்விலிருந்து புத்திக்கும், நுண்ணறிவு நிலைக்கும் செல்வது என்பதையும், எவ்வாறு நமக்குள்ளிருக்கும் ஆனந்த ஊற்றை வெளிக் கொணர்வது என்பதையும் காண்போம். நாம் அடுத்த அமர்வில் சந்திப்போம். நன்றி.
ஆனந்தமாக இருங்கள்!
அத்தியாயம் - 3