அறிமுகம்
சரி, நாம் இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்.
நீங்கள் ஏன் இந்த சக்கரங்கள் பற்றிய தியான முகாமில் கலந்து கொள்ள வேண்டும் ? அதில் உங்களுக்கு என்ன இருக்கிறது ? இந்த அமா்வில், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்கிறேன். அதற்கு, நாம் முதலில் நம் மனம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆராய வேண்டும். உங்களுக்கும், உங்களுக்கும் இடையில் நிற்பது உங்கள் மனம் மட்டுமே. உங்களால் உங்கள் மனதை விட்டு விட முடியுமானால், நீங்கள் ஞான மடைந்துவிடுவீர்கள்.
மனம் எவ்வாறு வேலை செய்கிறது? இந்த படத்தைப் பாருங்கள். கண் வழியாக உள்ளே செல்லும் ஒரு தகவல் எவ்வாறு பகுத்தாராயப் படுகிறது என்பதை இப்படம் காட்டுகிறது. உண்மையில், கண்கள் வழியாக மட்டுமல்லாமல், மூக்கு, செவி, நாக்கு, தொடுதல் மற்றும் கண் ஆகிய ஐம்புலன்கள் வழியாகவும் தகவல்கள் உள்ளே செல்கிறது. ஒரு உதாரணத்திற்காக நாம் கண்ணை எடுத்துக் கொள்கிறோம். இதை உங்களுக்கு விளக்குகிறேன்.
நீங்கள் எதையாவது காணும்பொழுது, முதலில் உங்கள் கண்கள் பார்க்கிறது. ஸமஸ்கிருதத்தில் சக்ஷூ என்று அழைக்கப் படும் ஒரு சக்கி, கண் வழியாகப் பெறப்படும் செய்திகளை, மின் துணுக்குகளாக மாற்றுகிறது. இது மின் துணுக்குக் குறிப்புப் பகுப்புமானியைப் (DSP) போன்றது. கண் வழியாக உள்ளே செல்லும் செய்தியானது, இந்த சக்ஷூவால் மின் துணுக்குத் தொகுப்பாக
உங்களுக்கும் உங்களுக்கும் இடையில் நிற்பது உங்கள் மனம் மட்டுமே!
மாற்றப்படுகிறது. கண்களால் மட்டுமின்றி, ஏனைய ஐம்புலன்கள் வாயிலாகவும் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் இவ்வாறே மாற்றப்படுகின்றன.
பிறகு இந்தச் செய்தித் தொகுப்பு நினைவகத்திற்குச் செல்கிறது. ஸ்மஸ்கிருதத்தில் இந்தப் பகுதியை சித்தம் என்று அழைக்கிறோம். நினைவகத்தில், இந்தத் தொகுப்பின் மீது இன்னும் சிறிது நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள் என்றால், அந்தத் தொகுப்பு சக்ஷூவால் பகுத்தாராயப்பட்டு, சித்தத்திற்கும், பிறகு நினைவகத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நினைவகத் தால் ஆராயப்படுகிறது. தொகுப்பு பகுத்தாராயப்பட்டு, அல்லாத விஷயங்கள் தள்ளப்படுகின்றன. அதாவது, இது ஒரு விலங்கல்ல, இது ஒரு தாவரம் அல்ல, இது ஒரு பாறை அல்ல என்பது போல. அல்லாதவற்றைத் தள்ளும் இந்தச் செயல்முறை சித்தத்தால் செய்யப்படுகிறது.
பிறகு இந்தத் தொகுப்பானது மனம் அல்லது மனஸ்-ஐ அடைகிறது. மனம் இந்தத் தொகுப்பின் மீது அடையாளம் காணும் வேலையைச் செய்கிறது. அதாவது, 'இது ஒரு மனிதன்', 'வகுப்பை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்' என்று மனம் 'இதுதான்' என்று தீர்மானம் செய்கிறது.
பிறகு, இந்தத் தொகுப்பானது ஒரு பெரிய தாவலில் அஹங்காரத்தை அடைகிறது. அஹங்காரம், உங்கள் பழைய அனுபவங்களின் அடிப்படையில், உங்களின் அடுத்த செயல் அல்லது தீர்மானம் என்ன என்பதை முடிவு செய்கிறது. இது போன்ற, யோகா அல்லது தியான வகுப்புகளில், உங்களுக்கு முன்பே அனுபவம் இருந்தால், அவை உங்களுக்கு சரியென்றுபட்டால்,
Memory
மின் துணுக்குக் குறிப்பு பகுப்புமானி-Digital Signal Processor (DSP)
அவை உங்களுக்கு உதவுவதாக நீங்கள் நினைத்தால், 'சரி இங்கே அமரலாம்' என்று தீர்மானிப்பீர்கள், அல்லது 'இங்கிருந்து போய் விடுவது நல்லது' என்று நினைப்பீர்கள்!
இந்த செயல்முறையைப் புரிந்து கொள்ள முழுயற்சி செய்யுங்கள்: நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். கண் இந்தச் செய்தியை சக்ஷூவிற்கு அனுப்புகிறது. சக்ஷூ இதனை மின் துணுக்குக் குறிப்புகளாக மாற்றுகிறது. பின் நினைவகம், 'இது அல்ல,' 'இது அல்ல' என்று அல்லாதவற்றைத் தள்ளுகிறது. பின்னர், மனம் 'இதுதான்' என்று அந்தத் தொகுப்பை அடையாளம் காணுகிறது. பிறகு இந்த மொத்தத் தொகுப்பும் ஒரு பெரிய தாவலில் அஹங்காரத்தை அடைகிறது. இங்கு உங்கள் முன் அனுபவத்திலிருந்து, உட்காரலாமா அல்லது அறையை விட்டு வெளியேறி விடலாமா என்று தீர்மானிக்கிறீர்கள்.
நாம் இப்பொழுது, கண்ணிற்கும் மனதிற்கும் இடையே நடைபெறும் செயல்முறைக்கான நேரத்தை Tp என்று அழைப்போம். Tp என்பது கண்ணிற்கும் மனதிற்கும் இடையே நடைபெறும் செயல்முறைக்கு எடுத்துக் கொள்ளும் காலம். இந்த, கண்ணிற்கும் மனதிற்கும் இடையே நடைபெறும் செயல்முறையானது, தா்க்க ரீதியானது மற்றும் விழிப்புடன் நடைபெறுவது. இந்தச் செயல் முறையை நீங்கள் முழுவதுமாக அறிகிறீர்கள். இது உங்கள் விழிப்புணர்வுடன் நிகழ்கிறது.
இப்பொழுது, மனதிலிருந்து அஹங்காரத்திற்குச் செல்லும் இந்தப் பெரிய தாவலானது, பெரும்பாலும் விழிப்பற்ற நிலையில் நிகழ்கிறது. வாஸ்தவத்தில் இந்தச் சமயத்தில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் பெரும்பாலும் ஒரு விழிப்பற்ற செயல்பாடாகவே
இருக்கிறது. இது உங்கள் விழிப்பணர்வில்லாமலேயே நிகழ்கிறது. இந்த நேரத்தை நாம் Tq என்றழைப்போம். இந்த சமயத்தில் நீங்கள் வெறுமனே கர்க்கரீதியற்றுத் தீர்மானிக்கிறீர்கள். உங்கள் தர்க்க ரீதியான சிந்தனைக்கு எதிராகத் தீர்மானிக்கிறீர்கள். அதன் விளைவாக நீங்கள் தர்க்கரீதியற்ற அவசரமான முடிவை எடுக்கிறீர்கள்.
ஏன் இவ்வாறு நிகழ்கிறது? நீங்கள் ஏன் விழிப்பின்றி தீர்மானித்துவிட்டு பின்னர் வருத்தப்படுகிறீர்கள் ?
இதற்குக் காரணம், இந்த விழிப்பற்றபகுதியானது எதிர்மறை நினைவுகளாலும், அமைதியின்மையாலும் நிரப்பப் பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் ஸம்ஸ்காரங்கள் என்றழைக்கப் படும், உங்களின் அனைத்து இறந்தகால நினைவுகளும், எல்லா இறந்தகால எண்ண வடிவ அமைப்புகளும், இந்தப் பகுதியில் தான் தொகுப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. உளவியலில் இந்த நினைவுப் பதிவுகளைக் குறிக்க என்கிராம்கள் என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனர். இந்தப் பகுதியில் இது போன்ற எக்கச் சக்கமான தொகுதிகள் இந்த நினைவுகளும், நிகழ்ச்சிகளும் அவற்றிற்கிடையே எந்த விதமான தர்க்கரீதியான தொடர்பும் இல்லாமல் இங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
என்ன நிகழ்கிறது என்றால், ஒரு தொகுதி இந்தப் பகுதிக்கு ஒரு பெரிய தாவலில் வரும் பொழுது, ஏராளமான எண்ணப் பதிவுகளால் ஏற்கனவே அமைதியற்றிருப்பதால், ஒரு சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு ஏதுவாக, இந்தத் தொகுதியானது, அஹங்காரத்தைச் சரியாகச் சென்றடைவது கூட இல்லை. ஏற்கனவே இருக்கும் எண்ணப் பதிவுகள், உள்ளே வரும் தகவலின் மீது தன்
எண்ணப் பதிவுகள் / ஸம்ஸ்காரங்கள் - Engrams
கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விடுகிறது. அவை உள்ளே வரும் செய்திகளின் மீது படர்ந்து, தீர்மானிக்கும் முறையில் ஒரு பெரிய சேகத்தை விளைவித்து விடுகிறது.
அதனால் நிலையிலிருந்தே மிக வேகமாக ஒரு தீர்மானத்தை எடுத்து, அந்தத் தொகுதியை திருப்பியனுப்புகிறது. இந்தச் செயல்முறை விழிப்பற்ற நிலையில் மின்னல் வேகத்தில் நிகழ்ந்து விடுகிறது.
உதாரணத்திற்கு, நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தகவல் களின்படி, புகைபிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது, அது உடலுக்கும் மனதிற்கும் நல்லதல்ல என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் Tp நிலையிலிருக்கும் வரை இந்தத் தீர்மானத்தில் உறுதி யாக இருப்பீர்கள். ஆனால் மனதிலிருந்து அஹங்காரத்திற் குத்தாவும் பொழுது, ஏற்கனவே பதிந்திருக்கும் எண்ணப் பதிவுகள் உங்களைப் புகைபிடிக்கத் தூண்டுகின்றன; நீங்களும் புகைபிடிக்கத் தீர்மானிக்கிறீர்கள். விழிப்பில் நடக்கும் செயல் முறையானது, 'வேண்டாம், அது உடல் நலத்திற்கு நல்லதல்ல' என்று சொல்கிறது. ஆனால் விழிப்பற்ற நிலையில் நடைபெறும் செயல் முறையானது, வாஸ்தவத்தில் .... சொல்வது கூட இல்லை. தீர்மானமே எடுத்து விடுகிறது, நீங்கள் அதனை செயல்படுத்து கிறீர்கள்! இது உள்ளுணர்வு நிலையிலேயே எடுக்கப்படும் தீர்மானமாகும்.
இந்த விழிப்பற்ற பகுதியானது மிகவும் சக்தி வாய்ந்தது. அதை மூன்று வழிகளில் பயன்படுத்தலாம். உள்ளுணர்வு நிலையில், புக்கிபுர்வமான நிலையில் மற்றும் நுண்ணறிவு நிலையில். விழிப்பற்ற மனம் எதிர்மறை நினைவுகளாலும் அமைதியின்மையாலும்
அதிக சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் வரையில், நாம் இப்பொழுது கண்ட உள்ளுணர்வு நிலையிலேயே வேலை செய்கிறது. நீங்கள் வெறுமனே விழிப்பற்ற நிலையில் உள்ளுணர்விலிருந்து தீர்மானிக்கிறீர்கள்.
ரீங்கள் உள்ளுணர்வு நிலையில் எடுத்த முடிவு களுக்காக பெரும்பாலும் பின்னர் வருத்தப்பட நேரிடுகிறது. 'நான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன் ? அது நான் இல்லை! அதை எவ்வாறு நான் அனுமதித்தேன்? எப்படி நான் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை எடுத்தேன்?' என்று உங்கள் செயல் குறித்து ஆச்சரியப்படுகிறீர்கள். விழிப்பற்ற மனம் உள்ளுணர்வு நிலையில் செயல்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. இந்த நிலையில், நீங்கள் எந்தவிதமான தர்க்கரீதியாகவும் இல்லாமல், வெறுமனே விஷயங்களை இணைத்து விழிப்பற்ற நிலையில் ஒரு தீர்மானத்திற்குத் தாவி விடுகிறீர்கள்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு வெள்ளை உடை அணிந்த யாரேனும் ஏதேனும் இடையூறு ஏற்படுத்தி யிருந்தால், பிறகு வெள்ளை உடையணிந்த யாரைப் பார்த்தாலும், உங்கள் அறிவிற்கு எட்டாமலேயே பழைய நினைவுகள் மேலெழும்பி உங்களைக் கோபமடையச் செய்கிறது. இது உள்ளுணர்வு நிலை. உங்கள் விழிப்பான மனம் இன்றியே, உங்கள் புரிந்து கொள்ளுதல் கூட இன்றியே, வெறுமனே இது நிகழ்ந்து விடுகிறது.
சக்ஷூ படத்தில், Tp-ஐ விட Tq குறைவாக இருக்கும் பொழுது, அஹங்காரத்திற்குச் சென்றுதிரும்பும் நேரம், கண்ணிலிருந்து மனதிற்குச் செல்லும் நேரத்தை விட மிகவும் குறைவாக இருக்கும்
உங்களால் உங்கள் மனதை விட்டுவிட முடியுமானால் நீங்கள் ஞானடைந்து விடலாம்.
பொழுது, நீங்கள் உள்ளுணர்வு நிலையில் இருக்கிறீர்கள். பெரிய தாவலுக்கு நேரமே கொடுக்கப்படுவ தில்லை. தொகுதி, விழிப்பற்ற மனதையடைந்த உடனேயே தீர்மானம் எடுக்கப்பட்டு விடுகிறது. Tq-விற்கு நேரமே கொடுக்காமல், தொடர்ந்து எடை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விழிப்பற்ற மனம், உங்கள் நினைவுத் தொகுதிகளால் அதிகமாக சுமையேற்றப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையில் நீங்கள் செயலாற்றும் பொழுது களைப்படைந்து விடுகிறீர்கள்.
இது எவ்வாறு இருக்கிறதென்றால், கணிப்பொறியில் உள்ள சேமிப்புத் தகடு, அடர்த்தி மிகுந்த புகைப்படங்களால் நிரப்பப்படும் பொழுது, அதில் வேறு ஏதும் வேலை செய்ய இடமிருக்காது அல்லவா? அதேபோன்று, உங்கள் விழிப்பற்ற மனமும் பழைய நினைவுகளாலும் எண்ண வடிவ அமைப்புகளாலும் அதிக சுமையேற்றப்படும் பொழுது, அது தன் திறமையை இழந்து, மேலோட்டமான, தர்க்கரீதியற்ற முடிவுகளை எடுக்கிறது.
அடுத்தது புத்திபூர்வமான - நிலை. இந்த நிலையில் Tq, Tp-க்கு சமமாக இருக்கும். இங்கு நீங்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள் ; தர்க்கரீதியாக முடிவுகளை எடுக்கிறீர்கள்; ஆயினும் அதில் அதிகப் படியான உற்சாகமோ சக்தியோ இல்லை. நீங்கள் வெறுமனே விழிப்பான மனதுடன் இருக்கிறீர்கள். அவ்வளவே; உங்களிடம் படைப்புத் திறனோ, புதிய கருத்துக்களோ இல்லை; நீங்கள் பெரிய அடிகள் எடுப்பதில்லை ; வளர்வதுமில்லை. நீங்கள் ஒரு விசுவாசமான வேலைக்காரனைப் போல இருக்கிறீர்கள். ஐன்ஸ்டீன் சொல்கிறார், "புத்தி என்பது ஒரு விசுவாசமான வேலைக்காரன்'' என்று. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரு வேலைக்காரனாக
இருக்கலாம். நீங்கள் ஒரு வெறும் வேலைக்காரன் மட்டுமே; உங்களால் அதிகமாகவோ பெரிதாகவோ எதையும் சாதித்து விட முடியாது.
இந்த சேகரித்து, கணிப்பொறியை விட மேலான நிலையில் இல்லை. உங்கள் விழிப்பற்ற பகுதி புத்திபூர்வமான நிலையில் இருக்கும் பொழுது, Tq-வானது ஏறக்குறைய Tp-க்குச் சமமாக இருக்கும். நீங்கள் அமைதியின்மையாலும், விழிப்பற்ற பகுதியின் அதிக சுமையேற்றத்தாலும் ஏற்படுகிற விரைவான தீர்மானங்களுக்கு வருவதில்லை ; எடுக்கிறீர்கள்.
நீங்கள் புத்திபூர்வமான நிலையில் இருக்கும் பொழுது, களைப்பாக இல்லாவிடினும், சக்தியுடனும் இல்லை. இரண்டுக்கும் இடையில் இருக்கிறீர்கள். இந்நிலையில், நீங்கள் உங்கள் ஆற்றலை முழுமையாக உபயோகப்படுத்துவதில்லை.
நீங்கள் உங்கள் முழு ஆற்றலையும் வெளிக் கொணரும் அடுத்த நிலையே நுண்ணறிவு ் நிலை. உங்களால் ஒரு ஆழ்ந்த அமைதியையும், விழிப்புணாவையும் இந்த விழிப்பற்ற பகுதியில் செலுத்தி, நினைவுப் பதிவுகளை அல்லது தொகுதிகளை, உங்கள் அமைதியாலும் விழிப்புணர்வாலும் அகற்ற முடியுமானால், உங்களால் நுண்ணறிவு நிலையில் இருக்க முடியும்.
இந்த விழிப்பற்ற பகுதியில், உங்களால் உங்கள் நினைவுகளிலிருந்து விடுதலை பெற்று வெறுமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க முடியுமானால், ஒவ்வொரு கணமும்
இறந்த காலத்தின் சுமையில்லாமல் உயிரோட்டத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியுமானால், உங்கள் இருப்புத் தன்மையின் சக்தியானது தூய்மையான நிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இது நிகழுமானால் உங்கள் அறிவு அதன் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியும். ஏனெனில் ஆற்றலை அறிவாகும் . இது நிகழுமானால், ரீங்கள், தீர்மானங்களை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஆற்றலிலிருந்து எடுக்கிறீா்கள்; இங்கு உங்களுக்கு வெறுமனே மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
நீங்கள் இந்த நுண்ணறிவு நிலையில் இருக்கும் பொழுது Tp-ஐ விட Tq அதிகமாக இருக்கிறது. நீங்கள் தீர்மானங்களை உங்கள் நுண்ணறிவின் ஆற்றலிலிருந்து, ஆழ்ந்த விழிப்புணர்விலும் அமைதியிலும் ஆனந்தத்திலும் எடுக்கிறீர்கள்.
இந்தக் கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும். நான் நுண்ணறிவு என்று எதைச் சொல்கிறேன் என்று அறிவியல் பூர்வமாக ஆழ்ந்து சென்றால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நுண்ணறிவு என்பது புத்திக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வு.
நுண்ணரிவு என்றால் என்ன?
இதை உங்களுக்கு விளக்குகிறேன். திடீரென்று உங்களுக்கு ஏதோ ஒன்று சரியென்றுபடுகிறது. அதைச் செய்வதற்கான சக்தியும் இருக்கிறது. ஆனால் வழிமுறைகள் மட்டும் தெரியவில்லை. உங்களுக்கு நன்றாகத் தெரியும், உங்களுடைய முடிவு அல்லது தீர்மானம் மிகவும் சரியென்று. ஆனால் எவ்வாறு அந்த முடிவெடுத்தீர்கள் என்பது மட்டும் தெரியவில்லை. இதுவே நுண்ணறிவு.
இதற்குமுன் நிகழ்ந்திராத ஒரு சூழ்நிலையை எதிர் கொள்ள நுண்ணறிவின் ஆற்றல் தேவைப்படுகிறது. மிகக் குறைந்த அளவு தகவல்களுடன் ஒரு முடிவெடுக்க நேரும் பொழுதோ அல்லது பல வாய்ப்புகளிலிருந்து ஒரு முடிவெடுக்க முடியாமல் நீங்கள் திணறும் பொழுதோ நுண்ணறிவின் ஆற்றல் உங்களுக்கு உதவுகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் மட்டுமல்லாமல்... உங்களால் இருப்புத் தன்மையின் இந்த நிலையிலேயே தொடர்ந்து இருக்க முடியுமானால் உங்களால் ஒவ்வொரு கணத்திலும் முழுமையாக இருக்க முடியும். இனி வரும் கணங்களும் அது போன்றே அமையவும் அது ஒரு விக்காகும்.
இப்பொழுது நான் சொல்வதை உங்களால் கிரஹித்துக் கொள்ள முடிந்தால், நீங்கள் உங்களுடனேயே சில நிமிடங்கள் அமர்ந்து உங்களுள் உள்ள பதிவுகள் எத்தகைய ஒரு பேரழிவை ஏற்படுத்தி உங்களுக்குப் பெரும் சுமையாக இருக்கிற தென்பதையும் உங்களால் பார்க்க முடியுமானால், இந்தச் சூழலைவிட்டு வெளியே வருவதற்கான சூட்சுமத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொண்டு, உங்கள் இருப்புத் தன்மையின் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.
நுண்ணறிவு பற்றிய இன்னொரு விஷயம் ... அது தீர்மானிப்பதற்கு மட்டுமல்லாமல் அதைச் செய்து முடிப்பதற் கான ஆற்றலையும் வழங்குகிறது. இதை நான் மக்களிடம் செ ால்லும்பொழுது அவர்கள் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி என்னிடம் இருப்பது நுண்ணறிவா அல்லது வெறும் புத்திசாலித் தனமா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?". அவர்கள் கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி இது புத்திசாலித்தனமா அல்லது நுண்ணறிவா என்று குழப்பமாக இருக்கிறது" என்று. நான்
நீங்கள் விழிப்பற்ற நிலையில் வெறுமனே உங்கள் உள்ளுணர்விலிருந்து தீர்மானிக்கிறீர்கள்.
சொல்கிறேன், இவ்வாறு குழப்பமாக இருக்குமாயின் அது புத்திசாலித் தனம்தான்; அதில் தெளிவாக இருங்கள். குழுப் பமே அது புத்திக ாலித்தனம் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. உங்களிடம் நுண்ணறிவு இருந்தால் நீங்கள் சாவ நிச்சயமாகவும் சக்தியால் தளும்பிக் கொண்டும் இருப்பீர்கள். அங்கு குழப்பத்திற்கு இடமேயிருக்காது.
நுண்ணறிவில் உங்கள் இருப்புத்தன்மையின் உள்ளிருக்கும் ஆற்றல் சாதாரணமாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் திறந்து மிகவும் சுலபமாக அதை வெளிப்படுத்துகிறீர்கள்; செயல்படுத்துகிறீர்கள். கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள், அவர்கள் துறையில் ஏதேனும் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தும் பொழுது, தங்கள் வெற்றிக்குக் காரணம் தங்கள் புத்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று - அதுவே அவர்களுக்குத் தேவையான ஆற்றலைத் தந்தது அல்லது அவ்வாறு ஒரு முடிவையெடுக்கும் துணிவைத் தந்தது என்று மீண்டும் மீண்டும் சொல்வதைப் படிக்கிருப்பீர்கள்.
ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் நுண்ணறிவுக்கான ஆற்றல் உள்ளது. நான் உங்களிடம் கேட்கிறேன், 'உங்களில் எத்தனை போர் வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை அனுபவித்திருக்கிறீர்கள் - நீங்கள் ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; தொலைபேசி மணி அடிக்கிறது; எடுத்தால் அவர்; அல்லது நீங்கள் ஏதோ ஓர் இடத்திற்குச் செல்கிறீர்கள்; அந்த இடத்திற்கு நீங்கள் ஏற்கனவே சென்றிருப்பது போல உணர்கிறீர்கள்; அல்லது இதுபோன்ற வேறு சம்பவங்கள் ? '
(80%-க்கு மேல் மக்கள் கையை உயர்த்துகிறார்கள்)
ரீங்கள் உள்ளுணர்வு நிலையில் எடுத்த முடிவுகளுக்காக பெரும்பாலும் பின்னர் வருத்தப்பட நேரிடுகிறது.
பாருங்கள் ... இவை எதிர்பாராவிதமாக நுண்ணறிவை உங்கள் வாழ்க்கையில் சந்தித்த தருணங்கள். இந்தத் தருணங்களில் நீங்கள் எதிர்பாராதவிதமாக தியானநிலையில் இருந்திருக்கிறீர்கள். இவற்றின் மூலம் உங்கள் இருப்புத் தன்மை உங்களுடன் தொடர்பு கொள்ள முயல்கிறது. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? இவற்றை காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதை என்று ஒதுக்கித் தள்ளி உங்கள் இருப்புத் தன்மையை புறக்கணித்து விடுகிறீர்கள். நாம் நமது இருப்புத் கன்மையின் உயர் பரிமாணங்களை முழுவதுமாக புறக்கணித்து விடுகிறோம். உங்களில் 80% பேருக்கு நிகழ்ந்த ஒன்று எவ்வாறு காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்க முடியும் ?
இது போன்ற நுண்ணறிவின் கணங்கள் உங்களுள் மறைந்துள்ள ஆற்றலின் தெளிவான அறிகுறி என்பதில் தெளிவாக இருங்கள். நீங்கள் இதனைக் கண்டு கொண்டு ஊக்கப்படுத்தினால் உங்களால் இருப்புத்தன்மையின் வெளிப்படுத்த முடியும்.
லேஸர் மற்றும் மேஸர் துறையில் பெரும் மேதை டாக்டர் சார்லஸ் டவுன்ஸுடன் ஒரு நாள் உணவருந்தும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவரிடம் கேட்டேன். ''இது எவ்வாறு நிகழ்ந்தது ? இதை எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது ?' என்று. அவர் மிக அழகாக இவ்வாறு பதில் அளித்தார். 'ஒருநாள் வாஷிங்டன் D.C-யில் உள்ள ஒரு பூங்காவில் அமாந்திருந்த பொழுது திடீரென்று எனக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது. அந்த முடிவு எனக்குள் தெரிந்தது. திடீரென்று அந்தத் தீர்மானம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. எனக்குக் கிடைத்ததை நான் உடனே எழுதி வைத்து விட்டேன். பிறகுதான் நான் அந்தக் கஷ்டத்தை உணர்ந்தேன். என்னிடம் முடிவு
LASER'
இருந்தது. ஆனால் வழிமுறைகள் இல்லை. அதை எவரிட்டும் சமாப்பிக்க முடியாது. ஏனெனில் எனக்கு முடிவு மட்டுமே தெரியும். வழிமுறைகள் தெரியாது. பிறகு நான் நிதானமாக அமர்ந்த பொழுது தர்க்கரீதியான வழி முறைகள் கிடைத்தன்'.
சார்லஸ் டவுன்ஸ் மட்டுமல்ல ஐன்ஸ்டீனும் இதையே தான் சொல்கிறார். 'எனக்குள் புதிதாக நிகழ்ந்த எதுவுமே நுண்ணறிவு மூலமாக வந்ததே அன்றி புத்தியின் மூலமாக அல்ல'. அவர் அழகாக சொல்கிறார் 'நுண்ணறிவு பெற்ற மனம் ஒரு புனிதப் பரிசு. பகுத்தறியும் மனமோ ஒரு விசுவாசமான வேலையாள்" என்று. நாம் பரிசை மறந்து வேலைக்காரனை கௌரவிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம்.
நாம் நம்பினாலும் நம்பாவிடினும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிடினும், நுண்ணறிவு என்ற ஒன்று நம்மிடம் இருக்கிறது. அதை எப்பொழுதும் ஒரே சீராக அடைய முடியுமா என்பது தெரியாததனாலேயே ஐன்ஸ்டீன் அதை பரிசு என்கிறார். அது எப்பொழுது நிகழும் அல்லது நிகழுமா அல்லது நிகழாதா என்பது அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் யோகிகளும் ஞானிகளும், அதை முயற்சி செய்து அடைய முடியும், அது உன்னிடம் எப்பொழுதும் இருக்கும் என்பதையும் உறுதியாகச் செ ால்ல முடியும் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வந்தி ருக்கிறார்கள். நீங்கள் நுண்ணறிவைப் பரிசு என்று எண்ண வேண்டாம். நீங்கள் அதற்காக முயற்சிக்க முடியும். முயன் றால் அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விடும்.
உங்கள் புத்திக்கு அப்பால் நுண்ணறிவு நிகழும் பொழுது உங்கள் முழு இருப்புத்தன்மையும் ஒருங்கிணைக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் உச்சத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உச்சத்தில் இருக்கும்பொழுது ஏதோ ஒன்று திறக்கிறது. நீங்கள் அதை
உங்களிடம் நுண்ணறிவு இருந்தால் நீங்கள் சாவ நிச்சயமாகவும், சக்தியால் தளும்பிக் கொண்டும் இருப்பீர்கள். அங்கு குழப்பத்திற்கு இடமேயிருக்காது.
வெளிப்பாடு என்றோ அல்லது நுண்ணறிவு என்றோ அல்லது ஏதோ ஒன்று என்றோ அழைக்கலாம். யோகிகள் இது ஒரு விஞ்ஞானம் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் இந்த நுண்ணறிவு அல்லது இந்த ஆற்றலுடன் உங்களால் இசைந்து இருக்க முடியுமானால் உங்களால் இதை தினசரி வாழ்க்கையில் உபயோகிக்க முடியும்.
நுண்ணறிவு உங்கள் இருப்புத் தன்மையின் ஆற்றல். இந்தத் தூய சக்தியானது விழிப்பற்ற பகுதியிலிருந்து வரத் தொடங்கும் பொழுது உங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் குணப்படுத்து கிறது. குணப்படுத்துதல் மட்டுமின்றி மன அழுத்தத்தைக் குறைத்து தன்னிச்சையாகத் கீர்மானங்களை எடுக்கவும் உதவுகிறது.
தன்னிச்சையாக இருப்பது நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் தகவல்களைப் பொறுத்ததல்ல. அது அவற்றைப் பகுத்தாராயும் விதத்தில் இருக்கிறது.
ஒரே விதமான தகவலை, ஒரே விதமான செய்தியைப் பல வழிகளில் பகுத்தாராயலாம். நுண்ணறிவு என்பது உங்கள் புத்திக்கு அப்பாற்பட்டு எவ்வாறு தகவல்களைப் பகுத்தாராய் கிறீர்கள், எவ்வாறு முடிவுக்கு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த நுண்ணறிவின் ஆற்றலுடன் இசைந்து இருக்க சில உத்திகள் அல்லது வழிமுறைகளின் மூலம் நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ளலாம்.
இந்த உத்திகளையே நாம் தியானம் என்று அழைக் கிறோம். நம்மை அனுபவிப்பதற்காகத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் நமது இருப்புத் தன்மையிலுள்ள உயர் ஆற்றலுடன் நாம் இசைந்து இருப்பதற்கு தியானம் என்ற வார்த்தையை கீழைநாடுகளில் உபயோகப்படுத்துகிறோம்.
எப்பொழுதெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ, சற்று உங்களுடனேயே அமா்ந்து உற்று கவனியுங்கள் ... நாம்
நம்மைத் தவிர மற்ற அனைவருக்கும் நேரம் ஒதுக்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் சற்று உங்களுடன் அமர்ந்து கவனித்தால் உங்கள் இருப்புத் தன்மையின் ஏதோ ஒரு பகுதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, இன்னும் சற்று அதிகமாகச் செய்ய விழைவதைக் காணலாம். ஆனால் நாம் நாம் நமது இருப்புத் தன்மையின் அந்தப் பகுதிக்கு என்றும் ஒரு வாய்ப்போ நேரமோ கொடுத்ததேயில்லை. நாம் நமது புத்திசாலித்தனத்தில் அதிக பிடிப்புடன் இருக்கிறோம். புத்திசாலித்தனமே இறுதியானது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் யோகிகளோ புத்திச ாலித்தனத்தை விட மேலான ஒன்று சாத்தியம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
இந்த தியான முகாம், மனம் எவ்வாறு வேலை செய்கிறது, விழிப்பற்ற நிலையில் ஆழமாகப் பதிந்துள்ள நினைவுகளை எவ்வாறு இறக்கி வைப்பது, இனிமேல் எவ்வாறு புதிய சுமைகளை ஏற்றிக் கொள்ளாமல் இருப்பது, நமது இருப்புத் தன்மையில் மறைந்துள்ள ஆற்றலை எவ்வாறு எழுப்பி உள்ளுணாவிலிருந்து புத்திக்கும், பிறகு நுண்ணறிவிற்கும் செல்வது (ஏனெனில் அப்பொழுதுதான் அடிமையாக இல்லாமல் ஒரு எஜமானனைப்போல வாழ முடியும்) என்பதைப் பற்றியது.
இந்த நிகழ்ச்சி உங்கள் எல்லா உணர்ச்சிகளையும் வெளிச்ச மிட்டுக் காட்டி, உங்கள் மனதின் விளையாட்டுக் களைக் காண உதவும், நீங்கள் எவ்வாறு உங்கள் உணர்ச்சி களை உருவாக்கிப் பின்னர் அதன் அடிமையாகி விடுகிறீர்கள் என்பதைக் காட்டும். உங்கள் உணர்ச்சிகள் எவ்வாறு உடல் நிலையிலும், மனநிலையிலும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பதைக் காட்டும்.
(பரமஹம்ஸர் ஒரு வரைபடத்தைச் சுட்டிக் காட்டுகிறார்)
(படத்தை நோக்கி) இந்தப் படத்தைப் பாருங்கள். ஏழு இடங்களில் குறிக்கப்பட்டுள்ள ஒரு மனித ரூபத்தைப் பார்க்கிறீர்கள். உங்கள் எல்லாருக்கும் தெரிகிறதா? மனித ரூபத்தி லுள்ள இந்த ஏழு குறிகளே'சக்கரங்கள்' எனப்படுகின்றன.
இந்த 'சக்கரங்கள்' நமது உடலிலுள்ள நுட்பமான ஆற்றல் மையங்கள் - அவை நமது உடலின் ஏழு சக்திச் ச க்கரங்கள் அல்லது மையங்கள்.
நாம் எண்ணுவதுபோல், நாம் ஒரே உடலை மட்டும் பெற்றிருக்கவில்லை. ஏழு உடல்களை - ஆற்றல் உடல்களைப் -பெற்றிருக்கிறோம். இப்பொழுது முதல் மூன்று உடல்களைப் பற்றி விளக்குகிறேன்.
முதல் உடல்-எதில் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்களோ, எதனால் நீங்கள் இங்குமங்கும் செல்கிறீர்களோ, எதனால் நடப்பது மற்றும் எழுதுவது போன்ற செயல்களைச் செய்கிறீர்களோ - அது 'ஜாக்ரத் சரீரம்' எனப்படுகிறது. அது பருவுடல் அல்லது விழிப்பில் இருக்கும் சரீரம்.
அடுத்த உடல் 'சூஷ்ம சரீரம்'-கனவுடல், நீங்கள் கனவில் உபயோகிப்பது. இது கனவு நிலையில் நீங்கள் ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல உபயோகிப்பது. உங்கள் கனவுகளில் ரீங்கள் உங்களைப் பல இடங்களில் காண்கிறீர்கள் இல்லையா? சில சமயங்களில் நீங்கள் விழிப்பு நிலையில் கூட இதுவரை கண்டிராத பல இடங்களில் உங்களைக் காண்கிறீர்கள்.
முன்றாவது உடல் 'காரண சீரேம்'-காரண உடம்பு, உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உபயோகிப்பது. இந்த உடல் அசைவற்றது.
பின் கண்ட இரண்டு உடல்களும், பருவடலை, ஏழ புள்ளிகளில், பருவுடலின் நீளவாக்கில் சந்திக்கின்றன. இந்த ஏழு புள்ளிகளே 'சக்கரங்கள்' எனப்படுகின்றன. நமது உடலில் ஏழு பிரதான சக்கரங்கள் இருக்கின்றன. எண்ணற்ற பல சிறிய சக்கரங்களும் உள்ளன. ஆயினும் இந்த ஏழு சக்கரங்களே
வெகுகாலத்திற்கு முன்னால் வேத காலத்திலேயே இந்த சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. உண்மையில் பல வேத கோஷங்களில் இந்த சக்கரங்களைப் பற்றிய குறிப்புகள் அடிக்கடி வருவதைக் காணலாம். ஒவ்வொரு சக்கரத்திற்கருகிலும் ஒரு சுரப்பி இருப்பதையும், அதற்கு அந்தக் குறிப்பிட்ட சக்கரத்துடன் ஒரு தொடர்பு இருப்பதையும் இன்று அறிவியல் நிரூபித்திருக் கிறது. இந்த ஏழு சக்கரங்களும் சுரப்பிகளுக்கு ஆற்றலைக் கொடுக்கின்றன
இந்த ஏழு பிரதான சக்கரங்களும் நமது உடல், உணர்ச்சி மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை மிகுந்த சக்தி வாய்ந்தவை. சக்தி மையங்களான இவற்றை தூய்மைப்படுத்தி, சக்தியேற்றி வைத்திருந்தால், நாம் ஒரு ஆனந்தமான, ஆரோக்யமான வாழ்க்கை வாழ வழி வகுக்கும்.
நமது எல்லா நோய்களுக்கும் காரணம், இவற்றில் ஏதோ ஒரு சக்கரம் சமச்சீர் நிலையில் இல்லாமையேஃ. ஏனெனில் நமது உடலும் மனமும் நமது உள்-உணர்வு நிலையில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இந்தச் சக்கரங்களை ஆரோக்யமாக வைத்திருப்பதன் மூலம் நமது உடல் மற்றும் மன நிலையில் உருமாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். முதல் உலகப் போருக்குப் பிறகு, ஆசியாவில் பழங்குடி மக்கள் வசிக்கும் கண்காணாத ஒரு பகுதிக்கருகில் ஒரு சிறு விமானம் கைவிடப்பட்ட
நிலையில் இருந்தது. பழங்குடி மக்கள், அவர்கள் வாழ்க்கையில் ஒரு முறை கூட ஒரு விமானத்தைப் பார்த்ததில்லை. அச்சரியத்திலும் திகைப்பிலும் அதைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது. அது என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு ஒரு யோசனை கூறிக் கொண்டிருந்தனர். இறுதியாக, அதற்குச் சக்கரங்கள் இருந்ததனால் அது ஒரு மாட்டு வண்டி என்ற முடிவுக்கு வந்தனர். புது மாட்டு வண்டியைப் பற்றிய செய்தி அந்த கிராமம் முழுவதும் பரவியது. அந்தக் கிராமம் முழுவதும் ஒரே கொண்டாட்டம். மாடுகள் பூட்டப்பட்டு அந்த விமானம் கிராமம் முழுவதும் இழுத்துக் செல்லப்பட்டது. அது ஒரு மாட்டு வண்டியாக உபயோகப்பட்டது.
சில வாரங்கள் கழித்து, நகரத்திற்குப் படிக்கச் சென்ற அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், ஊருக்குத் திரும்ப வந்து அந்த விமானத்தைக் கண்டான். அதன் உள்ளே செ ன்று சுற்றும் முற்றும் பார்த்தான். அதன் கியர்கள் மற்றும் இயந்திர அமைப்புகளைக் கண்டான். அதன் சுவிட்சுகளையும், லீவா்களையும் ஒவ்வொன்றாக நோண்டி னான். திடீரென்று என்ஜின் உயிர் பெற்றது. ஒருவாறு சமாளித்து அதை ஒரு டாக்ஸி போல தரையில் சிறிது தூரம் இங்குமங்கும் ஓட்டினான். அதைக் கண்ட கிராமவாசிகளுக்கு அதிர்ச்சி. இதற்கு முன் டிராக்டர்களைக் கண்டிருக்கிற அந்த சிறுவன், அந்த விமானம் ஒரு மாட்டு வண்டியல்ல, ஒரு வகையான டிராக்டர் என்று அந்த மக்களிடம் அறிவித்தான். மீண்டும் கொண்டாட்டம். அந்த விமானம் டிராக்டராக உபயோகப்படுத்த ஆரம்பிக்கப் பட்டது.
ஆறு மாதங்கள் கழித்து, ஒய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரி அந்தக் கிராமத்திற்கு வந்தார். ஒரு விமானம் டிராக்டராக
நாம் நமது புத்திகாலித்தனத்தில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறோம். புத்திசாலித்தனமே இறுதியானது என்று எண்ணுகிறோம். உபயோகப்படுத்தப் படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்! அவர் கிராமவாசிகளிடம், அது ஒரு ஒரு டிராக்டரல்ல, பறக்கக்கூடிய ஒரு விமானம் என்று கூறினார். அவர்கள் அவரை நம்ப மறுத்தனர். அவர்கள் பறவைகள் பறப்பதை மட்டுமே கண்டிருக்கின்றனர். அந்த இராணுவ அதிகாரி விமானத்திற்குள் சென்றார். அவர்கள் கண்முன்னே விமானத்தில் சிறிது தூரம் பறந்து விட்டு வந்து தரையிறங்கினார். கிராமவாசிகள் ஆச்சரியத்தில் உறைந்தனர். அதன் உண்மையான ஆற்றலை உணர்ந்தனர்.
பாருங்கள் ... மனிதனும் விமானத்தைப் போன்றே பறக்கக் கூடிய அற்புதமான ஒரு இயந்திர அமைப்புதான். ஆனால் நமக்கு நமது உண்மையான ஆற்றல் தெரியவில்லை. நம்மைப் பற்றிய நமது பார்வை மிகவும் குறுகிய தாக இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர், உள்ளுணர்வு நிலையில், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி ஒரு மாட்டு வண்டியைப் போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நம்மில் யார் அதிகமாக வீடு, கார், வேலை மற்ற அடிப்படை வசதி வாய்ப்புகள் ஆகியவற்றுடன் மட்டுமே தம்மை இணைத்து, அதைத் தாண்டி பார்வையைச் செலுத்து வதில்லையோ அவர் உடலை ஒரு மாட்டு வண்டியைப் போலத்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சாதாரணமாக செயல் பட்டுக்கொண்டு, விழிப்பற்ற மனதில் அளவுக்கதிகமான சுமைகளுடனேயே இருந்து கொண்டிருக்கிறோம்.
நம்மில் யார், இதைத்தவிர, கலை, படைப்பு, தத்துவம் போன்ற மனதை மட்டுமே சார்ந்திராமல் இதயத்தையும் ஈடுபடுத்தும்
இந்த ஏழு பிரதான சக்கரங்களும், நமது உடல், உணர்ச்சி மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
விஷயங்களை நோக்கி நகர்கிரோமோ, அவர்கள் உடலை டிராக்டரைப் போல உபயோகிக்கிறார்கள். அப்போது நாம் நம்மிடத்திலேயே ஒருவிதமான நிறைவை அடைகிறோம். ஒரு துரு கவிதையைப் பிரசவிக்கும் கவிஞன், ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணை விட மிகுந்த சந்தோஷமாக இருப்பான். பின்னதில் கருப்பை வயிற்றில் மையம் கொண்டிருக்கிறது. முன்னதிலோ இதயத்தில் மையம் கொண்டு இருக்கிறது. அதனால்தான் இந்த மனநிறைவு. இவர்கள் புத்திசாலித் தனத்திலிருந்து செயல்படுகிறார்கள்.
இறுதியாக, எவனொருவன் ஆன்மீகத்தில் நுழைந்து, உண்மையான அறிவிற்கான தாகத்தை வளர்த்துக் கொண்டு, தானே மனித ரூபத்திலுள்ள இறுதியான பிரபஞ்ச சக்தி என்பதை உணர்கிறானோ, அவனே உடலை ஆகாய விமானம் போல உபயோகிக்கிறான். ஞானமடைந்த குருமார்கள் அவர்களது உடலை ஒரு விமானம் போல உபயோகிக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் பரவச நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் மாட்டுவண்டி மற்றும் டிராக்டர் ஆகிய நிலைகளின் அனைத்துத் துயரங்களையும் கடந்து மேலெமும்பிப் பறக்கிறார்கள்! அவர்கள் நுண்ணறிவு நிலையில் செயல்படுகிறார்கள்.
நாம் ஆகாய விமானமாக என்ன செய்ய வேண்டும்? கிராம மக்களுக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையே இருந்த வித்தியாசம் என்ன? ஆகாய விமானம் மாறவில்லை. அதிலிருந்து எதையும் எடுக்கவோ சேர்க்கவோ இல்லை. அதில் எந்தவிதமான உருவமாற்றமும் செய்யவில்லை, சரிதானே? பிறகு என்னதான் வித்தியாசம் ? சொல்லுங்கள் பார்க்கலாம் ...
(ஒரு பெண்மணி பதிலளிக்கிறார்)
நமது எல்லா நோய்களுக்கும் காரணம், இந்த சக்கரங்களில் ஏதோ ஒன்று சமச்சீா் நிலையில் இல்லாமையே.
அறிவு ஸ்வாமிஜி ... ?
சரிதான் ... அறிவு. ஆகாய விமானத்தின் இயந்திர அமைப்பைப் பற்றிய அறிவு. கிராமவாசிகளுக்கு அந்தக் கருவி பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியாது. ஆனால், இராணுவ அதிகாரிக்குத் தெரியும், அவ்வளவுதான். அந்த விமானத்தை அவர்கள் புரிந்து கொண்டு கையாண்ட விதம்தான் அதை முதலில் மாண்டு வண்டியாகவும், பிறகு டிராக்டராகவும், இறுதியில் ஆகாய விமானமாகவும் அக்கியது.
இதைப்போன்றே, நமக்குள்ளும் இயந்திர அமைப்பு அல்லது கியர்கள் உள்ளன. அவை 'சக்கரங்கள்' என்று அழைக்கப் படுகின்றன. எல்லையற்ற ஆற்றல் மையங்களான இவைகள் சரியாகக் கையாளப்பட்டால், நம்மை விமானமாக ஆக்கிக் கொள்ள முடியும். இந்த சக்கரங்களைப் பற்றிய அறிவில்லாதவன் தரையில் நடந்து கொண்டிருக்க, இதனை இயக்கத் தெரிந்த குருவோ சுலபமாகப் பறக்கிறார்!
நாம் இந்த சக்கரங்களைப் பற்றிய அறிவியலைப் புரிந்து கொள்வோமானால், தற்சமயம் நாம் எத்தகைய ஆழ்ந்த விழிப்பற்ற தன்மையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதைப் புரிந்து கொண்டவுடன், இந்த விழிப்பற்ற சுமையிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, நமது இருப்புத்தன்மையின் உயர் பரிமாணங்களை நோக்கி நகர ஆரம்பிப்போம்.
இந்த சக்கரங்கள் நமது உடலில் பருப்பொருளாக இல்லை. தத்துவக் குறியீடுகளான இவை பருவுடலைச் சார்ந்ததல்ல. ஒளியுடலைச் சார்ந்தது. கிர்லியான் புகைப்