KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/இணைந்து செயல்படுதல்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

இணைந்து செயல்படுதல்

உங்கள் அனைவரையும் அன்புடனும் மரியாதைகளுடனும் வணங்கி வரவேற்கிறேன்.

நீங்கள் அனைவரும், உங்கள் அறிவை வளப்படுத்திக் கொள்ளவும், வாழ்க்கையைப் பற்றிய புதிய பார்வையைப் பெறவும், உங்கள் வாழ்க்கையை சிறப்பான வழியில் வாழ இயலுமா என்று தெரிந்து கொள்ளவும், சில எதிர்பார்ப்புகளுடனும், சில நம்பிக்கைகளுடனும் வந்திருக்கிறீர்கள்.

நாம் நிகழ்ச்சிக்குள் செல்வதற்குமுன் சில விஷயங்களைச் சொல்லிவிட விரும்புகிறேன்; அதனால் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து அதிகபட்ச பலனைப் பெற முடியும்.

நீங்கள் இங்கு வருவதற்கு முன்பே, பல இடங்களுக்குச் சென்றிருக்கலாம், கேட்டிருக்கலாம், பல உத்திகளைப் பயிற்சி செய்திருக்கலாம். அதெல்லாம் சரி. ஆனால் ஒரு விஷயம்: நீங்கள் இங்கு இருக்கும் பொழுது, இங்கு முழுமையாக இருங்கள், அவ்வளவுதான்.

நீங்கள் இதுவரை மற்ற இடங்களில் கற்ற அனைத்தையும் விட்டுவிட்டு இங்கு வாருங்கள். ''உங்கள் காலணிகளையும் மனதையும் வெளியே விட்டு விடுங்கள்' என்று சொல்லும் அறிவிப்புப் பலகையை வெளியே கண்டு இருப்பீர்கள். அதன் பொருள் என்னவென்று வியந்திருக்கலாம். அதன் பொருள்: நீங்கள் வெளியே காலணிகளை விடும் பொழுது, மனதையும் வெளியே விடுவதாகத் தீர்மானித்து விடுங்கள். இதுவரை நீங்கள் சேகரித்த அறிவனைத்தையும் உங்கள் காலணிகளுக்கு

உங்கள் காலணிகளையும் மனதையும் வெளியே விட்டு விட்டு வாருங்கள்

அருகிலேயே விட்டுவிட்டு உள்ளே வாருங்கள். நீங்கள் வெளியே செல்லும் பொழுது மீண்டும் எடுத்துக் கொள்ளலாம். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் ! உங்கள் மனதை யாரும் எடுத்துக் கொண்டு விட மாட்டார்கள். அது நிச்சயமாகப் பாதுகாப்பாக இருக்கும் .

மக்கள் உங்கள் காலணிகளையாவது எடுத்துச் செல்லக் கூடும். ஆனால் உங்கள் மனதைக் கண்டிப்பாக தொடக் கூட மாட்டார்கள்; நான் அந்த உத்தரவாதத்தைத் தருகிறேன்! ஏனெனில் மக்களால் அவர்களது மனதையே கையாள முடிய வில்லை; அவர்கள் கண்டிப்பாக உங்களுடையதைத் தொடவோ, ஆராயவோ மாட்டார்கள்!

நீங்கள் பாரபட்சமற்ற, வெறுமையான மனதுடன் உள்ளே வரும் பொழுது, உங்களால் நான் சொல்வதை முழுமையாகக் கிரஹித்துக் கொள்ள முடியும். உங்கள் கல்வியறிவுடன் உள்ளே வரும் பொழுது, நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும், அதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றுடனும், அதைப் பற்றி இதற்கு முன்பே வேறு யாரோ ஒருவரிடம் கேட்டவற்றுடனும், தொடர்ந்து ஒப்பிட்டுக் கொண்டு, நான் சொல்ல முயற்சிப்பதைத் தவறவிட்டு விடுவீர்கள். உங்களுக்குள் ஒரு சிறிதாவது வெற்றிடம் இருந்தால்தான், நான் சொல்வதை கிரஹித்துக் கொள்ள முடியும். நீங்கள் ஏற்கனவே நிரம்பியிருந்தால், நான் சொல்வதை உள்ளே எடுத்துக் கொள்ள முடியாது.

ஒரு சின்ன கதை ....

மேலை நாட்டிலிருந்து ஒரு கற்றறிந்த பேராசிரியர், கீழை நாடான ஜப்பானிலுள்ள ஒரு ஜென் குருவைக் காணச் சென்றார். பேராசிரியர் நிரம்பப் படித்தவர், நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர்.

ரீங்கள் இதுவரை மற்ற இடங்களில் கற்ற அனைத்தையும் விட்டுவிட்டு இங்கு வாருங்கள்

அவர் அந்த குருவிடம் ஆன்மீகம் சம்பந்தமான அறிவைப் பெறவும், பல விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடவும், ஆன்மீகம் பற்றி சிறப்பான முறையில் புரிந்து கொள்ளவும் செ ன்றார். அவர் ஜென் குருவின் இருப்பிடத்திற்கு வந்த பொழுது, குரு தேநீர் தயாரித்துக் கொண்டு இருப்பதைக் கண்டார். பேராசிரியரைக் கண்ட குரு அமரும் படிச் சைகை செய்து விட்டு தேநீர் வடிப்பதைத் தொடர்ந்தார். பேராசிரியா் அமர்ந்து, சிறிது நேரம் கழித்து, அவரது பின்னணி, கல்வி, கண்டுபிடிப்புகள், உலகப் பயணம், வித விதமான மக்களைச் சந்தித்த அனுபவங்கள், பலவிதமான விஷயங்களில் அவரது முடிவுகள் என்று பல விஷயங்களையும் பற்றிப் பேசத் தொடங்கினார்.

தேநீர் வடிப்பதை முடித்து, அவர்களுக்கிடையே (குரு இரண்டு கோப்பைகளை வைத்தார். பேராசிரியரின் கோப்பையில் தேநீரை ஊற்றத் தொடங்கினார். அவர் ஊற்ற ஊற்றக் கோப்பை மெதுவாக நிரம்பி வழியத் தொடங்கியது.

தேநீர் தட்டிலிருந்து நிரம்பி வழிந்து மெல்ல மேசையில் ஒடத் தொடங்கியது. போராட்டம். அதற்கு மேலும் அவரால் தனது பொறுமையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர், ''குருவே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஊற்றுவதை நிறுத்துங்கள்! கோப்பை நிரம்பி வழிகிறது!' என்று அலறினார். குரு நிறுத்தி விட்டு அமைதியாக ''நீயும் அப்படித்தான் இருக்கிறாய்''என்று சொன்னார். பேராசிரியர் அதிர்ச்சியடைந்தாலும், குரு சொல்ல வருவதைப் புரிந்து கொண்டார். இபேராசிரியர், இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாத துடுதேநீர்க் கோப்பையைப் போல நிறைந்திருந்தார். குரு அவரிடம் எதைச் சொல்லியிருந்தாலும், அது உள்ளே செல்லாமல் வெளியேதான் வழிந்தோடியிருக்கும்.

என்னால் உங்களுக்கு ஆன்மீகத்தை கற்றுத்தர முடியாது. ஆனால், உங்களால் கற்றுக்கொள்ள முடியும்.

குரு சொல்ல வந்ததை, சொல்ல முயற்சித்ததை, பேராசிரியா அந்த ஒரு வார்த்தையில் புரிந்து கொண்டார்.

அதனால் அனுப வத்தை விரும்பினால், இங்கு வந்ததனால் உண்மையிலேயே ஏதேனும் லாபமடைய விரும்பினால், இங்கு ஒரு வெறுமையான கோப்பையைப் போல இருங்கள். முழுமையாகத் திறந்தும், ஏற்றுக் கொள்ளும் தன்மையுடனும் இருங்கள். ஒரு குழந்தையைப் போன்று கள்ளம் கபடமற்றும், ஆர்வத்துடனும், பஞ்சு போல கிரஹித்துக் கொள்ளத் தயாராகவும் இருங்கள். அது போதுமானது.

அறிவு மூன்று வகைப்படும்: முதலாவது புத்தி பூர்வமான அறிவு, மூளையைச் சார்ந்த அறிவு. இதற்கு உங்கள் மூளையைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. நீங்கள் கொஞ்சம் கவனத்துடனும், கொஞ்சம் நினைவாற்றலுடனும் இருந்தாலே போதுமானது. உங்களால் தர்க்கத்தைப் பயன்படுத்த முடியுமானால், விஷயங்களை இணைத்துப் பார்த்துப் புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதுமானது. இந்த வகையான அறிவை நீங்கள் பள்ளியிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும் பெறுகிறீர்கள். உங்கள் மூளையே போதுமானது. நீங்கள் ஒரு சிறந்த கணித மேதையாகவோ அறிவியல் அறிஞராகவோ ஆகிவிட முடியும்.

இரண்டாவது வகையான அறிவு இதயம் சார்ந்தது . இங்கு உங்கள் மூளையுடன் இதயத்தையும் உபயோகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. கலை, இசை, கவிதை, நாட்டியம் முதலியவை இந்த வகையில் வரும். இவற்றிற்கெல்லாம் மூளையை மட்டுமே உபயோகப்படுத்த முடியாது. மூளையை

Intellectual Knowledge1 - Knowledge of the Mind Knowledge of the Heart2

மட்டுமே உபயோகப்படுத்தினால் எதுவும் நடக்காது. நீங்கள் உங்கள் இதயத்தையும் உபயோகப்படுத்த வேண்டும். ஓவியம் வரைய, கவிதை எழுத, பாட்டுப் பாட நீங்கள் உணர்ச்சி வசப்பட வேண்டும்.

இவையனைத்தும் படைப்புகள். இதயத்திலிருந்து வரும் படைப்புகள். உங்கள் இதயத்தின் வெளிப்பாடுகள். உங்களால் உணர்வேயின்றி ஒரு கவிதை எழுத முடியுமா ? ஒரு ஓவியனால் மூளையை மட்டும் வைத்துக் கொண்டு ஒவியம் வரைய முடியுமா ? முடியாது. இதயத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது கலை தானாகவே எழுகிறது.

நீங்கள் கவிதை எழுதுவது பற்றியோ அல்லது ஓவியம் வரைவது பற்றியோ, உங்கள் மூளையில் சில குறிப்புகளையோ அல்லது உத்திகளையோ எடுத்து வைத்திருக்கலாம்! ஆனால், இறுதியாக அது இதயத்திலிருந்து மட்டுமே எழும். யாரும் உங்களுக்குக் கவிதை எழுதுவதற்கோ அல்லது ஓவியம் வரைவதற்கோ கற்றுத் தர முடியாது. அவர்கள் உங்களுக்கு சில உத்திகளைக் கற்றுத் தர முடியும், அவ்வளவே. பின்னர் நீங்களே விஷயத்தை கிரஹித்துக் கொண்டு, சொந்தமாகத்தான் செய்யத் தொடங்க வேண்டும்.

முன்றாவது வகை ஆன்மீக அறிவு - இது உங்கள் மூளையையோ அல்லது இதயத்தையோ சார்ந்தது அல்ல; உங்கள் இருப்புத் தன்மையைச் சார்ந்தது ! உண்மையில் அதை அறிவு என்று கூடச் சொல்ல முடியாது; அது தா்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஆழ்ந்து புரிந்து கொள்ளும் தன்மையாகும். அது கற்றுத் தரவோ, எடுத்துக் கொள்ளவோ முடியாதது. அது இருப்புத்தன்மை நிலையில் ஆழ்ந்து சங்கமிக்கும் பொழுது தானாகவே நிகழ்கிறது.

Spritual Knowledge1 - Knowledge of the Being

நான் எப்பொழுதும் மக்களிடம் சொல்வதுண்டு; என்னால் உங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தர முடியாது. ஆனால், உங்களால் கற்றுக்கொள்ள முடியும் ! இருப்புத் தன்மை நிலையில் - சக்தியைக் கிரஹித்துக் கொள்வதைப் போல் - குருவின் வார்த்தைகளைக் கிரஹித்துக் கொள்வதன் மூலம் ஆன்மீகத்தைக் கற்றுக் கொள்ள முடியும். குருவின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் ஆற்றல் மிகவும் சக்தி வாய்ந்தது. குருவின் வார்த்தைகளை அனுமதித்தால், அது ஊடுருவிக் கொண்டு சென்று உங்களை இருப்புத் தன்மை நிலையில் தொடவல்ல சக்தி நிரம்பியது. அது முளையிலிருந்து வரும் சாதாரண வார்த்தைகளாலோ அல்லது இதயத்தின் உணர்வு களாலோ நிகழ முடியாத உருமாற்றத்தைக் கொண்டு வரவல்லது.

நான் பேசும் பொழுது, என்னுடைய இருப்புத் தன்மை யிலிருந்து, இறுதி உண்மையை அறிந்த என் அனுபவத்திலிருந்து பேசுகிறேன். நீங்கள் கேட்கும் பொழுது, உங்கள் இருப்புத் தன்மையில் இருந்து முழுமையாகக் கேளுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு என் அனுபவத்தின் க்ஷண நேரக் காட்சியாவது கிடைக்கும். நான் இங்கு உங்களுக்கு வெறும் வார்த்தைகளைக் கொடுப்பதற்காக வரவில்லை. உங்களை வார்த்தைகளுக்கு அப்பால் எடுத்துச் செல்லவே வந்திருக்கிறேன். இங்கு நீங்கள் அமைதியுடனும், கூர்மையான விழிப்புணர் வடனும் இருந்தால், வார்க்கைகளுக்கு அப்பால் சென்று உங்கள் இருப்புத்தன்மையைத் தரிசிக்க முடியும்.

சரி, இப்பொழுது நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இருக்கை அமைப்பைச் சற்று மாற்றியமைப்போம். நீங்கள் அமரும் பொழுது, உறவினர்கள், நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களுடன் அமராதீர்கள்.

நீங்கள் சமூகத்தில் யாராக இருப்பிரைம் இங்கு சாதாரணமாகவும், இதயப்பூர்வமாகவும் அனைவருடனும் கலந்திருக்கவும் முயற்சி செய்யவும்

பழக்கமில்லாத எவரருகிலாவது அமருங்கள். ஏனெனில் தெரிந்தவர்கள் அருகில் அமரும் பொழுது, நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் பார்வைகளையோ அல்லது வார்த்தைகளையோ பரிமாறிக் கொள்ளும் நிர்பந்தம் ஏற்படலாம். முன்பின் அறிமுகமற்றவர்களுடன் அமரும் பொழுது, தனியாக இருப்பதால், என்னை இன்னும் நன்றாக உட்கிரவித்துக் கொள்ள முடியும்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்: நான் இதை எப்பொழுதும் என் உரைகளில் சொல்வதுண்டு. வகுப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு அழகான பிரவாகம், ஒரு ச க்தி உற்பத்தியாகி அறை முழுவதும் அதிர்ந்து கொண்டிருக்கும். உங்களுக்கும் எனக்குமிடையே ஒரு ஆழமான சங்கமம் நிகழ்ந்து கொண்டிருக்கும். தாமதமாக வந்து அந்தச் சக்தியோட்டத்தைத் தடைப்படுத்தி விடாதீா்கள். அந்தப் பிரவாகம் தடைபட்டு விடும்.

அது உங்கள் வாகனம் ஒரு நெடுஞ்சாலையில் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்ப்படும் ஒரு வேகத் தடை போன்றது. வேகத்தடை ஒரு சின்னத் தடங்கல்தான். ஆனால் அதைக் கடப்பதற்கு, கொஞ்சம் வேகத்தைக் குறைத்து, அதைக் கடந்து பின்னர் மீண்டும் வேகமெடுக்க வேண்டும். மென்மையான சீரான ஒட்டம் தடைப்பட்டு விடும்.

தயவு செய்து உங்கள் செல்போன்களை அணைத்து விடுங்கள். இந்நாட்களில் அவை இன்னொரு பொதுவான வேகத்தடையாக இருக்கிறது! உண்மையில் அவை பயணம் முழுவதையும் - ஒன்றன் பின் ஒன்றாகப் பல வேகத்தடை களால் - மேடும் பள்ளமுமாக அக்கி விடுகிறது! நீங்கள் அனைவரும் ஆளுக்கொரு செல்போன் வைத்திருப்பீர்கள் என்று நிச்சயமாக என்னால் முடியும்!

உங்களுக்குள் ஒரு சிறிதாவது வெற்றிடம் இருந்தால்கான் என்னை கிரஹித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் இங்கு இருக்கும் பொழுது கடுமையாகவும், கனமாகவும் இருக்காதீர்கள். கேட்கும் பொழுது இலகுவாகவும், திறந்த தன்மையுடனும் இருங்கள். முதல் அமர்விலேயே, கடவுளை உணரலாம் என்ற எதிர்பார்ப்புடன் வராதீர்கள்! எதிர்பார்ப்புகள் இன்றி, எளிதான, இலகுவான மனதுடன் இருந்தால், நீங்கள் இன்னும் அதிகமாகப் பெறுவீர்கள்.

நீங்கள், முழுவதும் எதிர்பார்ப்புடன், பாரபட்சமான மனதுடன் வருவீர்களானால், உங்கள் எதிர்பார்ப்புகள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை கவனிப்பதற்காக நீங்கள் இங்கு வரவில்லை; நான் சொல்வதில் கவனம் வையுங்கள்.

அடுத்த விஷயம்: உங்கள் சமூக அந்தஸ்துகளை வெளியே விட்டுவிட்டு, இங்கு ஒரு சாதாரண மனிதராக இருக்க முயலுங்கள். ஆசிரமும் குருவின் இருப்பும் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும், அஹங்காரத்தையும் போலித்தனங்களையும் விடுவதற்கும், நீங்கள் இந்த பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான் என்பதைப் புரிந்து கொள்வதற்கும், உங்கள் இருப்புத் தன்மையை அனுபவிப்பதற்கும் ஒரு சிறந்த உள்ளுலகச் சோதனைச் சாலையாகும்.

நீங்கள் சமூகத்தில் யாராக இருந்தாலும், இங்கு சாதாரணமாகவும் கலந்திருக்க முயற்சி செய்யுங்கள். என்னுடைய வார்த்தைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு கணப் பரிமாற்றமும், இங்கிருக்கும் ஒவ்வொரு கணமும் உங்களுள் ஒரு உருமாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். அதை உணர்ந்துகொள்ள நீங்கள் சற்று விழிப்புடன் இருந்தால் போதும். அவ்வளவே.

இங்கு இருக்கும்பொழுது ஒரு வெறுமையான கோப்பையை போல இருங்கள்.

ஒரு சின்ன கதை ...

ஜென் புத்த மதத்தைச் சார்ந்த சிறந்த துறவி ஒருவர் இருந்தார். அவர் ஒரு ஞானியும் குருவுமாவார். ஒருநாள், ஜப்பானின் ஆளுநர் அந்த ஜென் குருவைப் பார்ப்பதற்காக வந்தார். கவர்னர், தனது 'தன்குறிப்புச் சீட்டை' குருவிடம் அனுப்பினார். அதில் 'ஜாக்சான், ஜப்பான் ஆளுநா்' என்று பொறித்திருந்தது. அந்தச் சீட்டை ஒரு பார்வை பார்த்த குரு சீடனிடம் ''இந்த மடையனிடம் எனக்கு எந்த வேலையும் இல்லை! இந்த நிமிடமே இவர் இந்த இடத்தை விட்டுச் சென்று விட வேண்டும் என்று சொல்" என்று சொன்னார். ஜென் குருமார்கள் ஒருவருடைய கா்வத்தை, அஹங்காரத்தை உடைக்க விரும்பினால் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்கள். கடுஞ்சொற்களை உபயோகிக்கவும் தயங்க மாட்டார்கள்.

அவர்களது வார்த்தைப் பிரயோகத்தின் பின் உள்ள சக்தியானது உருமாற்றத்தை உண்டுபண்ணக் கூடிய ஆற்றல் பெற்றது. சீடன் கவர்னரிடம் திரும்ப வந்து, அவரது சீட்டைத் திரும்பக் கொடுத்தான். குரு சொன்னதை அப்படியே ஒப்புவித்தான். சீட்டைப் பார்த்த கவானர் புரிந்து கொண்டார். அவர் ஒரு அறிவாளி. புத்திசாலி மட்டுமல்ல... அறிவாளியும் கூட! சீட்டும் செய்தியும் அவரிடம் திருப்பிக் கொடுக்கப் பட்டதும், அவர் அமைதியாக "ஜப்பான் ஆளுநர்' என்ற வார்த்தையை மட்டும் அடித்து விட்டு, மீண்டும் அந்தச் சீட்டை குருவிடம் தருமாறு அனுப்பி வைத்தார். அதனைப் பார்த்த குரு ஒரு புன்னகையுடன், "அவரை உள்ளே அனுப்பு" என்று சொன்னார்.

நமது எல்லாப் பட்டங்களும், பதவிகளும் நம்மீது ஒட்டப்பட்ட, சமூகம் நம்மீது குத்திய முத்திரைச் சீட்டுக்களே.

ஆனால் நாமோ, அந்த முத்திரை குத்தப்பட்ட துண்டுச் சீட்டுகள்தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் அந்த முத்திரை குத்தப்பட்ட சீட்டு அல்ல, உள்ளே இருக்கும் வஸ்து என்பதையே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுகிறோம். அந்த முத்திரை குத்தப்பட்ட சீட்டாக இருப்பதையே சிறப்பாகக் கருதுகிறோம். ஆனால், இது போன்ற முத்திரை குத்தப் பட்ட சீட்டுகளுடன், உங்களால் ஒருபோதும் ஒரு குருவை அணுக முடியாது. இந்தத் முத்திரைச் சீட்டுகளுடன் உங்களால் ஒரு போதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையை அறிய முடியாது.

ஆளுநர் செய்ததை தவறு என்று சொல்ல முடியாது. சமூகத்தை அணுகவும், சமூகத்தின் நடைமுறைகளுடன் ஒத்துப் போகவும் அது சரியான வழியாக இருக்கலாம். ஆனால், ஒரு குருவை அணுக அது சரியான வழியல்ல !

அதனால் உள்ளே வரும் பொழுது, உங்கள் ஆளுநர் தன்மையை வெளியே விட்டு விடுங்கள்! இல்லாவிடில் நீங்கள் அதிகம் இழக்க நேரிடும். இங்கே குருவுக்கும் தேடுபவருக்கும் இடையே ஏதோ ஒன்று நிகழ்கிறது. நாம் உள்உலகம் பற்றிய சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். அப்பொழுது வெளியுலகம் சார்ந்த முத்திரை குத்தப்பட்ட சீட்டுகள், இந்த நிகழ்வுகளுக்குக் குறுக்கே நிற்கும். உங்களுடைய புற இயல்பை மறந்து விடுவதே ஆன்மீகமாகும் . ஏனெனில், புற இயல்பானது சமூகம் சார்ந்தது. நாம் இங்கிருப்பது நமது தனித்தன்மையை கண்டு பிடிப்பதற்காக. அதுவே நமது உள்-இயல்பு. நமது தாயின் கருவறையில் அனுபவித்தத் தனிமை, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் நமக்கு இருக்கும் தொடர்பு - இவையே நாம் கண்டுபிடித்துக் கொண்டாட வேண்டியதாகும்.

சரி, இப்பொழுது நீங்கள் அனைவரும் சென்று உங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் சேர்ந்திருக்கும் இந்த சில நாட்களில், ஒரு கூட்டுச் சக்தியை உருவாக்குவோம் . செல்லுங்கள் ; சென்று உங்களை இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் ஒருவேளை உங்கள் குடும்பத்தின் ராகவே இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்!

நினைவில் கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் வெவ்வேறு மனிதர்களாக இருக்கிறோம். உங்கள் குடும்பத்தினரை உங்களுக்கு நன்கு தெரியும் என்று எண்ணாதீர்கள். உங்களுடனேயே அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பினும் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால், இப்பொழுது சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

(பங்கேற்பாளர்கள் பலத்த பேச்சுக்கும் சிரிப்புக்கு மிடையே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்)

சரி. இப்பொழுது நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டு விட்டதால், நிம்மதியாகவும், இயல்பாகவும் உணருவீர்கள். இனி உங்களுக்கு முகம் தெரியாதவர்களுடன் உட்காரும் கவலையில்லை !

அடுத்த சில நாட்களில் நாம் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். அனைத்தையும் கேளுங்கள். கேட்டதை கிரஹித்துக் கொள்வதற்கு, திறந்த தன்மையில் இருப்பற்கு ஏதுவாக உங்களுக்குள் வெற்றிடத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நினைவில்

நாம் முத்திரை குத்தப்பட்ட சீட்டு அல்ல. உள்ளே இருக்கும் வஸ்து என்பதையே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுகிறோம். நீங்கள் போதிக்க வேண்டாம்; பயிற்சி செய்யுங்கள். பயிற்சி யைத் தொடங்குவதற்கு சிறப்பான நேரம் இப்பொழுதுதான். அதனால் ஆரம்பிப்பதற்கு நல்ல நேரத்தைத் தேடாதீர்கள். அது இப்பொழுது இங்கேயிருக்கிறது அல்லது எங்கேயுமில்லை!

நான் சொல்வகையெல்லாம் நீங்கள் கேட்டால், உங்கள் மனம் இரண்டு வழிகளில் வேலை செய்யக் கூடும். ஒன்று சந்தேகப்படும் அல்லது நம்பிவிடும்.

புத்திசாலித்தனமான மனதின் வழி சந்தேகப்படுவது. சந்தேகப்படுவதில், எக்கச்சக்கமான தர்க்கமும், காரணங்களும், என்னை உங்களுக்குள் ஏற்றுக் கொள்வதன் குறுக்கே வந்து நிற்கும். இது நிகழுமானால், நீங்கள் என்னை முழுவதுமாக தவறவிட்டு விடுவீர்கள்.

நம்புவதில் கூட, நீங்கள் அப்படியே என்னை நம்பி விட்டால், தவறவிட்டு விடுவீர்கள். புரிந்து கொள்ளுங்கள்: என்னை விடுங்கள், நீங்கள் யாரையும் நம்ப வேண்டியதில்லை. மதநம்பிக்கை உடையவர்கள் என்று பெயரளவில் அழைக்கப் படுபவர்களெல்லாம் மிகவும் பலவீனமானவர்கள். ஏனெனில் எந்த நம்பிக்கையும் இன்றி வாழ்வதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். உங்களிடம் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாவிடில், உங்கள் செயல்களை நியாயப்படுத்த எந்தவிதமான ஒரு பாதுகாப்பு அமைப்பும் இல்லாமல் போய் விடுகிறது. என்ன நினைப்பது, எவ்வாறு செயல்படுவது என்பதைச் சொல்வதற்கு எந்தவிதமான கருத்தும் தயார் நிலையில் இல்லை. எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமல் இருப்பதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். ஏனெனில் அப்பொழுது நீங்கள் எல்லாவற்றிற்கும் உங்கள்

சொந்த அறிவையே சார்ந்திருக்க வேண்டும். அதனால் நிச்சயமற்றும் பாதுகாப்பற்றும் உணர்வீர்கள்.

சந்தேகமும், நம்பிக்கையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் நிலையில், உங்களின் மிகப் பெரும் சந்தேகங்களிலும் ஒரு துளி நம்பிக்கையிருக்கும், மிகப்பெரும் நம்பிக்கைகளிலும் ஒரு துளி சந்தேகம் இருக்கும், அதை என்னால் நிச்சயமாகக் கூற முடியும்.

பிறகு நீங்கள் என்னதான் செய்யவேண்டும் ? எவ்வாறு கேட்கவேண்டும் ?

வெறுமனே மனப்புர்வமான நம்பிக்கையுடன் கேளுங்கள், அவ்வளவே. மனப்பூர்வமான நம்பிக்கையுடன் இருப்பதே சக்தி; போதனைகளை வாழ்க்கையில் அனுபவ பூர்வமாக மாற்றுவதற் கான திறமை. நான் 'சூரியன் கிழக்கே உதிக்கிறது' என்று சொன்னால், நீங்கள் நம்பவோ அல்லது சந்தேகப்படவோ தேவை யில்லை. உங்களுக்குத் தெரியும், அவ்வளவுதான்; சரிதானே? அல்லது ஒருவேளை நீங்கள் கவனித்திருக்கவில்லையென்றால், மறுநாள் காலையில் எழுந்து-ஒரு பரிசோதனையாக - சரிபார்த்துக் கொள்ளலாம்! சரிதானே? இந்த மனோபாவத்தைத்தான் நான் உங்களிடம் ஒவ்வொரு கணமும் எதிர்ப்பார்க்கிறேன். நீங்கள் எதிர் கொள்ளும் வெவ்வேறு சூழ்நிலைகளிலும், அனைத்தையும் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு, நான் சொல்வதை அனுபவபூர்வமாக உணர்வதையே விரும்புகிறேன்.

அதனால் மனப்பூர்வமான நம்பிக்கையுடன் இருங்கள், குருட்டு நம்பிக்கை வேண்டாம். நான் சொல்வதை ஒரு கொள்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்; அதை உங்கள் வாழ்க்கையில் ஒருங்கிணைத்து வேலை செய்கிறதா, இல்லையா என்று பரிசோதித்துப் பாருங்கள்.

ஒரு ஆப்பிள் சுவையாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, நீங்கள் நம்பவோ சந்தேகப்படவோ வேண்டாம். சற்று கடித்துப் பாருங்கள்... தெரிந்து கொள்வீர்கள்!

ஆதிகாலம் தொட்டே ரிஷிகளும், குருமார்களும் மனிதனின் உண்மையான இயல்பு ஆனந்தம் என்று சொல்லி வந்திருக்கிறார்கள். காலங்காலமாகப் பல குருமார்கள் இந்த பூமியில் அவதரித்திருக்கிறார்கள். அது புத்தரோ, இயேசுவோ, கிருஷ்ணரோ அல்லது மஹாவீரரோ, யாராக இருந்தாலும் அவர்களது மையச்செய்தி ஒன்றுதான். அவர்கள் அனைவரும் சொன்னது மனிதனின் உண்மையான இயல்பு ஆனந்தம் என்பதுதான். அந்த மையத்துடன், அனந்தத்துடன் மீண்டும் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளையும் உத்திகளையும் கொடுக்கனர்.

அவர்கள் அதனை வெளிப்படுத்திய விதம் வெவ் வேறாக இருந்தாலும் செய்தி ஒன்றேதான். ஆயினும், மீண்டும் மக்கள் குருமார்களின் செய்தியைத் தவறவிட்டுக் கொண்டேயிருக் கின்றனர். ஏனெனில் அவர் களின் செய்தியை விட குருமார்களின் புறத்தோற்றத்தின் மீதே அதிகப் பிடிமானம் கொண்டு விடுகின்றனர். இந்த பூமியில் நடக்கும் அனைத்து வன்முறை களுக்கும் மதப்போர்களுக்கும் இதுவே மூலகாரணமாகி விடுகிறது.

எது எப்படியாயினும், மனிதனின் ஸ்வபாவம் ஆனந்த மயமானது என்பதே இந்த அனைத்து குருமார்களின் ஒரே செய்தியாகும். மனிதனின் எல்லா முயற்சிகளும், உண்மையில் இந்த உள் வெளியை, அவனுள் இருக்கும் ஆனந்தமயமான இந்த வெளியைத் தேடுவதேயாகும். அனால் காலப்போக்கில், சமூக நெறிப்படுத்தல்களாலும் கவனச் சிதறல்களாலும் மனிதன் தன்

உங்களுடைய புற இயல்பை, புறத்தன்மையை மறந்து விடுவதே ஆன்மீகம் ஆகும்.

நோக்கத்தை மறந்து, ஆனந்தத்தை வெளியுலகப் பொருள்களிலும், லெளக்க விஷயங்களிலும், பெயர், உருவம் மற்றும் சமூகத்தால் கொடுக்கப்பட்ட உறவுகளிலும், தொழில் பற்றிய குறிக்கோள்களிலும், இன்னும் பலவற்றிலும் தேடிக் கொண்டிருக்கிறான்.

ஒரு சின்ன கதை ...

வயதான பெரியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கத்திற்குச் சென்றார். படம் அப்பொழுதுதான் ஆரம்பமாகியிருந்தது. ஆனால் அவரோ இருட்டில் தரையில் எதையோ துழாவிக் கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த அவருடைய பேத்தி எரிச்சலடைந்து ''தரையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்'' என்று கேட்டாள். அவர் சொன்னார் ''என்னுடைய சூயிங்கம் கீழே விழுந்து விட்டது''. இப்பொழுது எரிச்சலடைந்து அந்தச் சிறுமி சொன்னாள் ''தாத்தா, பரவாயில்லை, அதை விட்டு விடுங்கள். நாம் பிறகு வேறு சூயிங்கம் வாங்கிக் கொள்ளலாம். இப்பொழுது படத்தைப் பாருங்கள்''. பெரியவா் சொன்னார் ''எனக்கு அந்தச் சூயிங்கம்தான் வேண்டும்'. சிறுமி சொன்னாள் ''தாத்தா, குழந்தை மாதிரி நடந்து கொள்ளாதீர்கள். நாம் வேறு சூயிங்கம் வாங்கிக் கொள்ளலாம்'. பெரியவர் சொன்னார் ''ஆனால் என் பற்கள் அதில் இருக்கிறதே''.

(பலக்க சிரிப்பு ! )

நீங்கள் பாருங்கள்: உண்மையில் நாம் தேடுவது ஒன்று, ஆனால் தேடிக் கொண்டிருப்பதோ வேறு ஏதோ ஒரு பெயரில்! அதனால்தான் இறுதியில், நாம் தேடும் அனைத்து வெளி உலக விஷயங்களையும் சாதித்த பிறகும், உள்ளே ஒரு

அது இப்பொழுது இங்கே இருக்கிறது அல்லது எங்கேயும் இல்லை

வெறுமை இருப்பதை உணருகிறோம். நம்மிடம் நிச்சயமாக ஒரு ஏக்கம் இருக்கிறது. இந்த ஏக்கம் உண்மையில் ஆனந்தத் தேடலுக்கானதுதான். ஆனால் நாம் அதைத் தேடுவதோ வேறு விஷயங்களில். அதனால்தான் நமக்கு எப்பொழுதும் எதிலும் ஒரு நிறைவு ஏற்படுவதில்லை. இந்த ஏக்கம் இருப்புத்தன்மையின் அழைப்பாகும்.

நாம் வெளியுலகில் ஆழ்ந்து அமிழ்ந்து இருப்பதால், நமது இருப்புத்தன்மையை முழுவதுமாக புறக்கணித்து விடுகிறோம். நாம் நமது இருப்புத் தன்மையில் மையம் கொண்டு, வெளியுலக விஷயங்களை ஒரு நாடகக் கதாபாத்திரத்தைப் போல செய்ய வேண்டும். ஆனால் அதற்கு எதிர்மறையாக, வெளியலக விஷயங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, உள்ளே மையத் திலிருந்து முழுவதுமாக விலகியிருக்கிறோம்.

நாம் இருப்புத்தன்மையில் மையம் கொள்ளாவிடில், நம்மால் ஒரு முழுமையை, நிறைவை அனுபவிக்க முடியாது. வெளியுலக ச ாதனைகளில் நாம் நிரம்பலாம், ஆனால் நிறைவையடைய முடியாது. நிறைவடையாததால், உள்ளே ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. நாம் எதையோ இழக்கிறோம் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. நாம் எதையோ இழக்கிறோம் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருப்பதால், மீண்டும் வெளியுலகில் தேடத் தொடங்குகிறோம். நீங்கள் விழிப்புணர்வுடன் உங்கள் உள்தன்மையில் மையம் கொண்டிருந்தால், வெளியுலகில் எதைச் செய்தாலும், ஒவ்வொரு நிமிடமும் நிறைவுடனேயே இருப்பீர்கள். ஏனெனில் நிறைவென்பது வெளியில் செய்யும் செயல்களிலிருந்து வருவதல்ல, அது உள்ளேயிருந்து வருவது.

அதனால் நாம், குருமார்கள் காலங்காலமாகச் சொல்லி வந்ததை ஆழ்ந்து நோக்க வேண்டியிருக்கிறது. தேடுபவர்கள் என்று பெயரளவில் சொல்லிக் கொள்பவர்களெல்லாம் குருமார் களை ஜென்ம ஜென்மமாகத் தவறவிட்டுக் கொண்டே இருந்திருக் கிறார்கள். குருமார்களின் வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் உண்மையையும் சக்தியையும் ஒரு கூஷணம் நின்று நோக்காமல் வெறுமனே தேடிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அவர்கள் உள் நோக்கிய ஒரு முடிவற்ற பயணத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பயணம் செய்வது எப்படியிருக்கிறதென்றால், 'ஒரு புத்தகத்தை எடுக்க முயற்சி மட்டுமே செய்வது ஆனால் எடுத்துவிடுவது அல்ல!'. இதுபோன்று, 'முயற்சி செய்வது' என்று ஏதாவது இருக்கிறதா? எடுக்கலாம் அல்லது இல்லை. அதை எடுக்க எவ்வாறு முயற்சி செய்வீர்கள் ?. நீங்கள் எடுக்க முயற்சி செய்கிறேன் என்று சொல்வது, உங்களையே ஏமாற்றிக் கொள்வ தாகும். நீங்கள் மற்றவர்களை ஏமாற்ற முடியாது. ஏனெனில் அது எவ்வளவு முட்டாள்தனமானது என்று அவர்களுக்குத் தெரியும்,

அது, பணம் பண்ணும் திறமை இல்லாத மக்கள், தாங்கள் மிகவும் ஒழுக்கமாக இருப்பதால்தான் பணம் பண்ண முடியவில்லை என்று கூறுவது போலத்தான். அவர்களிடம் திறமை இல்லை என்பதே உண்மை. ஆனால் ஏதோ சில காரணங்களைக் கூறி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

நம்மால் உண்மையிலேயே ஆன்மீகத்திற்குத் தாவ முடியவில்லையென்றாலும், அதே சமயத்தில் அதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்று ஒத்துக் கொள்ள மனமில்லாததால், நமது அணங்காரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு நாமே சில

எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமல் இருப்பதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்

தத்துவங்களைத் தயாரித்து, ''ஆன்மீகம் பற்றி எனக்கு எல்லாம் தெரியும், ஞானமடைவதற்கு இன்னும் கொஞ்ச தூரம்தான்' என்று சொல்லிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்.

நான் சொல்கிறேன் ... ஆன்மீகத்தில் நாம் இன்னும் ஏழையாகத்தான் இருக்கிறோம் என்ற தெளிவே, நம்முள் ஒரு உருமாற்றத்தை ஏற்படுத்த, இரசவாதம் நிகழத் தொடங்கப் போதுமானது. ஒழுக்கமும் உண்மையும் தானாகவே அதை நோக்கி இட்டுச் செல்லும். ஆனால் நாம் அதை விரும்பவில்லை, 'தேடுபவரின் அஹங்காரத்தை' உண்மைக்கும் நமக்கும் இடையே ஒரு ஒரு பாதுகாப்பு அமைப்பாக படுத்திக்கொள்கிறோம்.

கார்களில் இருக்கும் அதிர்ச்சி தாங்கும் அமைப்பு அதிகக் குலுக்கல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவது போல, தேடுபவரின் அஹங்காரம் உண்மையிலிருந்து நம்மை வெகுதூரத்திலேயே வைத்திருக்கிறது. அது உண்மைக்கும் நமக்குமிடையே ஒரு பாதுகாப்பு அமைப்பாக வேலை செய்கிறது. இந்தப் பாதுகாப்பு அமைப்பின் சுகத்தில், நாம் வாழ்நாள் முழுவதும் தேடுபவர்தான் என்ற சந்தோஷமான முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

இந்த சில நாட்களில், நான் சொல்வது எதுவானாலும், அதை முழுமையான விழிப்புணர்வுடன் கேட்டு, அதனுள் இருக்கும் மைய இழையைப் பற்றிக் கொள்ளுங்கள். அந்த ஒருங்கிணைந்த இழையே அனைத்திலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைச் செய்வீர்களானால், நீங்கள் உங்களுள் ஒரு உருமாற்றம் நிகழ்வதற்கான வெற்றிடத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். இல்லாவிடில், நீங்கள் வெறும் வார்த்தைகளை மட்டுமே சேகரித்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டே இருப்பீர்கள். உங்களிடம்

உருமாற்றம் ஏற்படாத வரையில், எல்லா வார்த்தைகளும் பயனற்றவைதான். இதை நீங்கள் ஆழ்ந்த விழிப்புணர்வுடன் பார்த்தால் மட்டுமே, உருமாற்றம் சாத்தியமாகும்.

இதில் மிகவும் தெளிவாக இருங்கள்: இந்த அறையில் நீங்கள் ஆயிரம் போ் இருந்தாலும், நான் உங்களிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் என்று சொன்னால், உங்களிடம் மட்டுமே. உங்கள் ஒவ்வொருவரையும் இணைக்கும் ஒரு இழை என்னிடம் இருக்கிறது; அதனால் ஒருபோதும் நான் சொல்வதை மற்றவர்களுக்கு என்று எண்ணிவிடாதீா்கள்; பிறகு நீங்கள் எல்லாவற்றையும் வெறுமனே தவறவிட்டு விடுவீர்கள்.

நம்மிடம் பொதுவாகவே ஒரு மனப்போக்கு இருக்கிறது: உடல் நலத்தைப்பற்றி யாரேனும் விவாதிப்பதைக் கேட்டால், உடனே நாம் அதை நம்மிடம் பிரயோகித்து நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று பார்க்கத் தொடங்கி விடுகிறோம். அந்த விவாதத்தில் கேட்ட அறிகுறிகள் நம்மிடம் இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்குகிறோம். தோலைப் பற்றி நான் பேசினால், உடனே நீங்கள் தோலை உணர்ந்து பார்க்கத் தொடங்குகிறீர்கள்; இதயத்தைப் பற்றி நான் பேசினால் உடனே இதயத்தின் துடிப்பைப் பார்க்கத் துவங்கி விடுகிறீர்கள்.

ஆனால் ஆன்மீகம் சம்பந்தமாக நாம் எதையேனும் கேட்கும் பொழுது மட்டும், எப்படியோ, நம்மைத் தவிர மற்றவர்களுக்கு நமது குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் ஆகியவர்களுக்கே - அதைப் பிரயோகித்துப் பார்க்கிறோம். பிரச்சினை என்னவென்றால், நான் என்ன சொன்னாலும், நீங்கள் '' ஆ! இது எனக்கு நன்றாகத் தெரியும். என் கணவருக்குத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதைச் சொல்கிறார். எனவே இனிமேல் என் கணவர் தன் வழிமுறைகளை மாற்றிக் கொள்வார். அவர்

ரீங்கள் விழிப்புணர்வுடன் உங்கள் உள் தன்மையில் மையம் கொண்டிருந்தால் வெளியுலகில் எதைச் செய்யினும் நிறைவுடனேயே இருப்பீர்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஜியின் இந்தச் செய்தியைப் புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்'' என்று நினைக்கிறீர்கள்.

(சிரிப்பு)

நான் கவலைகளைப் பற்றிப் பேசும் பொழுது, உடனே நீங்கள் உங்கள் தாயார் எத்தனை கவலைப்படுகிறார் என்று எண்ணுகிறீர்கள். நீங்கள் எத்தனை கவலைப்படுகிறீர்கள் என்பதை மறந்து விடுகிறீர்கள். நீங்களும் கவலைப்படுவதால்தான் நான் உங்களிடம் சொல்கிறேன். ஒருவேளை உங்கள் தாயார் உங்களை விட அதிகமாகக் கவலைப்படலாம். ஆனால் அது முக்கியமல்ல.

ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது ஒரு அம்பு போல, அதனுடன் சக்தியையும் எடுத்துக் கொண்டு வரும்; அதனிடம் போக்குக் காட்டாதீர்கள். அது உள்ளே சென்று உங்களிடம் உருமாற்றத்தை ஏற்படுத்த அனுமதியுங்கள். அடுத்தவர்கள் பரிந்து கொண்டிருக் கிறார்களா என்று பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள்.

உங்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அறிந்து கொண்டிருப்பீர்களானால், கவலையோ, அதிருப்தியோ, வலியோ, பயமோ, காமமோ, காமமோ, பொறாமையோ அல்லது அணங்காரமோ உங்களிடம் சிறிதும் இருக்காது. ஆனால், இவையனைத்துமே உங்களிடம் இருக்கின்றன. அதுவே நீங்கள் உங்களைப் பற்றி அனைத்தையும் அறியவில்லை என்பதைக் காட்டுகிறது. முதலில், உங்களுக்குத் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் உங்களுக்குத் தெரியாது என்பதாவது தெரிகிறதல்லவா! உங்களுக்கு தெரியாது என்பது கூட தெரியவில்லை என்றால் தெரியாது என்பது தெரியாமலேயே போய்விடும்.

நிறைவு என்பது வெளிச் செயல்களில் இருந்து வருவது அல்ல -அது உள்ளே இருந்து வருவது.

சொல்லுங்கள் ... ?

ஆனால் சுவாமிஜி, நாங்கள் எங்களைத் தெரிந்து கொள்ளத்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால், இந்தச்சமயத்தில் எங்களுக்குக் கொஞ்சம்தான் தெரிந்திருக்கலாம் ...

நான் ஒன்று சொல்கிறேன்: ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில், பயணிப்பது என்று ஒன்றுமில்லை. அது ஒரு க்ஷண நேர அனுபவம், அவ்வளவுதான். நாம் தெரிந்து கொள்ளுதல் என்று பெயரளவில் சொல்வதெல்லாம், முழுவதும் அறிந்து கொள்வதற்காக, உள்ளே ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திக் கொள்ளவேயாகும். ஆனால், இறுதியில், ஆழ்ந்த நோக்கில், நமக்குத் தெரியும் அல்லது தெரியாது என்பதே உண்மை. ஆனால், நாம் மேலும் மேலும் ஆழ்ந்து தெரிந்து கொள்ளும் பொழுது நமக்குத் தெரியாது என்பது தெளிவாகிறது! அதுவே போதுமானது. அதுவே நம்மை உண்மையாக அறிந்து கொள்வதற்கு ஊக்கப் படுத்தும்.

பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தில், அர்ஜுனனின் துக்கம் பற்றிய யோகமான, அர்ஜுன விஷாத யோகத்தில், அர்ஜுனனே முழுவதும் பேசிக் கொண்டிருக் கிறான்; கிருஷ்ணர் மௌனமாகவே இருக்கிறார். இறுதியில், 'எனக்கு எதுவும் தெரியாது' என்று அர்ஜுனன் சரணாகதி அடையும் பொழுதே, கிருஷ்ணரின் உபதேசத்தைப் பெறத் தயாராகிறான்.

கிருஷ்ணரும் அர்ஜுனனும் சிறுவயது முதலே விளை யாட்டுத் தோழர்களாக இருப்பினும், பல நூற்றுக்கணக்கான ஓய்வான சூழ்நிலைகள் அமைந்திருந்த போதிலும், அர்ஜுனனுக்குப் பகவத் கீதை இதற்கு முன்னர் கொடுக்கப்படவில்லை.

உங்களிடம் உருமாற்றம் ஏற்படாதவரையில் எல்லா வார்த்தைகளும் பயனற்றவையே.

என் ?

ஏனெனில், அதுவரையில் பெறுவதற்கான பக்குவத்தைப் பெறவில்லை! 'எனக்குத் தெரியாது' என்ற வார்த்தையை உச்சரித்த பின்னரே, தெரிந்து கொள்ளும் தகுதியை அடைகிறான். தெரியாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே ஆன்மீக முன்னேற்றத் திற்கு அடிப்படைத் தகுதியாகும். உண்மையிலேயே தெரிந்து கொள்வதற்கான முதல்படி இதுவேயாகும்.

சரி, ஏதேனும் கேள்விகள் .... ?

தயவு செய்து கேள்வி கேட்பதற்குத் தயங்காதீர்கள். நான் ஒரு பிரசங்கம் செய்யப் போவதில்லை. அதனால் கருத்துக்களை பரிமாறிக் அல்லது உங்கள் குழப்பங்களையாவது வெளிப்படுத்தினால், நான் தெளிவுபடுத்த முயல்கிறேன்! இன்னொரு விஷயம். கேள்விகளைக் கேட்கும் பொழுது, நீங்கள் தூங்கிவிடவில்லை என்ற உறுதியுடனாவது நான் இருப்பேன்!

ஒரு சின்ன கதை...

ஒரு பேருந்து ஓட்டுனரும், ஒரு சிறந்த மத போதகரும் இறந்த பின்னர், மரணத்தின் கடவுளான யமதர்மனின் நீதி மன்றத்திற்குச் சென்றனர். முதலில் பேருந்து ஓட்டுனரிடம் அவரது வாழ் நாளில், அவரது செயல்களைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. பிறகு அவரிடம் ஒரு தங்கச் சாவியும், கைத்தடியும் கொடுக்கப்பட்டு, ஒரு ஆடம்பரமான அறைக்கு அனுப்பப்பட்டார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மத போதகர் அவரது முறைக்காகக் காத்திருந்தார். அவர் நினைத்துக் கொண்டார். ''பேருந்து ஒட்டுனருக்கே தங்கச்

முதலில் உங்களுக்குத் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சாவியும், மற்ற ஆடம்பரமான பொருட்களும் கொடுக்கப்பட்டால், கண்டிப்பாக எனக்கு அதை விடவே அதிகமாகக் கிடைக்கும்'. வாழ்க்கை முழுவதும் கடவுளைப் பற்றியே போதித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவரது முறையும் வந்தது. ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தீர்ப்பும் அறிவிக்கப்பட்டது. அவர் நரகத்திற்கு அனுப்பப்பட்டார். இந்தத் தீர்ப்பைக் கேட்டு அவர் மிகவும் கோபமடைந்தார். அவரால் தீர்ப்பை நம்பமுடியவில்லை. இவ்வாறான ஒரு தீர்ப்பின் காரணத்தை அறிந்துகொள்ள விரும்பினர். யமதர்மா விளக்கினார், ''உங்கள் வாழ்நாளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் கவலைப்படுவதில்லை; உங்கள் செயல்களின் விளைவை மட்டுமே பார்க்கிறோம். பேருந்து ஓட்டுனர் ஓட்டும்பொழுது, அவர் ஓட்டும் விதத்தினால், மக்கள் எப்பொழுதும் இறைவனைச் சிந்தித்தவண்ணம் இருந்தனர். ஆனால் உங்கள் போதனையில், நீங்கள் கடவுளைப் பற்றிப் பேசியபோதும் மக்கள் பெரும்பாலும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

(மக்களிடமிருந்து பலத்த சிரிப்பு ! )

அதனால் தயவு செய்து உங்களுக்காக இல்லாவிடினும் எனக்காகவாவது விழிப்பாக இருங்கள். அதனால் யமதேவனின் நீதிமன்றத்தில் எனக்கு சரியான வரவேற்பு கிடைக்கும்! உங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் கேள்விகளைக் கேட்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். கேள்வி களைக் கேட்பதன் மூலம்தான் விஷயங்களை நடைமுறைக்கேற்ற வகையில், உங்கள் வாழ்க்கைக்குத் தக்கவாறு அமைத்துக் கொடுக்க முடியும்.

உங்களில் சிலா், கேள்விகளைக் கேட்பது முட்டாளைப் போல தோற்றமளிப்பதாக நினைக்கலாம். நான் சொல்கிறேன்:

கீதையில் அர்ஜூனன் 'எனக்குத் தெரியாது' என்ற வார்த்தையை உச்சரித்தப் பின்னரே தெரிந்து கொள்ளும் தகுதியை அடைகிறான்.

நீங்கள் கேள்விகளைக் கேட்டால் முட்டாளைப் போல தோன்றலாம்; அனால் கோமல் இருந்து விட்டால் முட்டாளாகவே இருந்து விடுவீர்கள்! அதனால் உங்களால் ஒத்துக் கொள்ள முடியாத கருத்துகள் ஏதேனும் இருந்தால், தயவு செய்து உங்கள் கைகளை உயர்த்தி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

சொல்லுங்கள்…. ?

ஸ்வாமிஜி, இந்த சில நாட்களில் நாங்கள் எங்களிடமிருக்கும் எதிர்மறையானதன்மைகளை¹ அழித்து புதிய மனிதனாகப் பிறக்க விரும்புகிறோம் ...

புரிந்து கொள்ளுங்கள். இந்தப் பூமியில் அழித்தல் என்பதே கிடையாது. எப்பொழுதும் உருமாற்றம் மட்டுமே நிகழ்கிறது. உங்களுடைய எதிர்மறை உணர்வுகள் என்று பெயரளவில் அழைக்கப்படும் அனைத்தும் தூய அன்பு, விழிப்புணர்வு போன்ற நேர்மறை உணர்வுகளாக உருமாற்றப்பட முடியும்.

சமூகம் எப்பொழுதுமே உங்களுக்கு, உங்களைப் பிளவுபடுத்திக்கொள்ளவும் 2, அழித்துக் கொள்ளவுமே கற்றுத் தருகிறது. அது எப்பொழுதுமே உங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள கற்றுத் தருவதில்லை. அது உங்களைத் தன் கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ள, உங்களுக்கும், உங்களுக்கும் இடையிலேயே ஒரு பிளவை ஏற்படுத்தி விடுகிறது. அது உங்களிடம் எப்பொழுதும் தாழ்ந்த, உயர்ந்த என்ற மொழியிலேயே பேசுகிறது. அதனால்தான் நீங்கள் இத்தனைக் துன்பப்படுகிறீர்கள்.

அது நீங்கள் தாழ்ந்தவர் என்று உங்களை எண்ண வைக்கிறது. அது உங்களை உங்களுடனேயே சண்டையிட

வைக்கிறது. உங்களுக்குள் ஒரு குழப்பம் இருந்தால்தான் சமூகத்தால் உங்களை ஆளமுடியும். அது முதலில் உங்களை நீங்கள் நல்லவர் அல்ல என்று எண்ணவைத்துப் பின்னர் பரிகாரங்களைத் தருகிறது. அதனால்தான் நீங்கள் இவ்வாறான மொழியில் பேசுகிறீர்கள்.

ஒரு சின்ன கதை ....

ஒருவன் சாதாரண ஜலதோஷத்தினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் ஒரு மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டான். அது ஒரு சாதாரண ஜலதோஷம்தான். அவனைச் சிறிது நேரம் உற்று நோக்கிய மருத்துவர் அவனிடம் 'நீ ஏன் இப்படிச் செய்யக்கூடாது. இரவில் குளிர்ந்த காற்றில் சிறிது நேரம் சென்று விட்டுத் திரும்பி வா' என்று சொன்னார். அவன் அதிர்ச்சியடைந்தான். ''ஆனால் டாக்டர் அப்படிச் செய்தால் எனக்கு நிமோனியா வந்து விடுமே'' என்றான். டாக்டர் சொன்னார், ''ஆம். நிமோனியாவை என்னால் உடனே குணப்படுத்திவிட முடியும்''.

(சிரிப்பு)

சமூகம் உங்களை ஏதோ ஒன்றாக ஆக்கிவிட்டுப் பிறகு அதிலிருந்து வெளிவரும் வழிகளைக் கற்றுத் தருகிறது. நான் இப்பொழுது சொல்கிறேன்: உயர்ந்த, தாழ்ந்த என்று எதுவும் இல்லை; உருமாற்றம் ஒன்று மட்டுமே இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வுடன் உள்ளே பார்க்கக் கற்றுக் கொள்ளும் பொழுது, தானாகவே உருமாற்றமடைகிறீர்கள். இதுவே எப்பொழுதும் குருவின் அணுகுமுறை. அவர் உள்ளே பார்க்கக் கற்றுக் கொடுக்கிறார். அவர் உங்களை ஒருபோதும் பிளவுபடுத்துவ தில்லை. அவர் உங்களை எப்பொழுதும் ஒன்றிணைக்கிறார்.

நீங்கள் கேள்விகளைக் கேட்டால் முட்டாளைப்போலத் தோற்றம் அளிக்கலாம் - ஆனால் கேட்காமல் இருந்துவிட்டால் முட்டாளாகவே இருந்து விடுவீர்கள்.

அவர் ஒருபோதும் நீங்கள் எதிர்மறையானவர் என்று சொல்வதில்லை. எதிர்மறை என்பது இல்லை. நீங்கள் எதிர்மறை 1, ரோமலை என்று அழைப்பதெல்லாம் ஒரே நிறமாலையின் இரண்டு எல்லைகளே. எதிர்மறை என்பது வெளியில் தூக்கி எறிந்து விடக்கூடிய பருப்பொருள் அல்ல. நீங்கள் உருமாற்றமடையும் 4 பொமுது. நிறமாலையில் உயர்ந்த நேர்மறை சக்திகளை நோக்கி நகர்ந்து விடுகிறீர்கள், அவ்வளவே.

நான் முன்னரே சொன்னது போல், நீங்கள் இங்கு நிகழும் விஷயங்களுக்கு திறந்தும் ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் இருந்தால், இந்த உருமாற்றம் சாத்தியமாகும்.

சொல்லுங்கள் ... ?

ஸ்வாமிஜி, மனம் என்பது மாயை அல்லது வெறும் பொய்த் தோற்றமே தவிர வேறில்லை என்றும், எல்லாக் கேள்விகளும் பொய்த் தோற்றங்களே என்றும் பல புத்தகங்களில் படித்திருக் கிறோம். தயவு செய்து நீங்கள் இதைப் பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார்...) மாயை பற்றிய பிரபலமான கேள்வி மீண்டும் ஒரு முறை கேட்கப்பட்டு விட்டது! முதலாவது: சிக்கலான விஷயங்களைப் படித்து உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டாவது: மனதின் வழியாகப் புரிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்வின் புதிருக்கு மனதால் விடை காண முடியாகு. வாழ்வின் நோக்கத்தை மனதைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியாது. அதனால் தான் மனம் ஒரு மாயக்குதாற்றம் என்று சொல்கிறார்கள்.

'மனதை விட்டு விடுதலே' வாழ்வின் புதிருக்கு விடை காணும் முதல் படியாகும். உங்கள் மனதை விளையாட அனுமதித்தால், நீங்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பீர்கள், அவ்வளவே.

ஜென்ம கொண்டிருக்கலாம். உங்கள் ஆழமான உள்தாகம் தணிக்கப் படாமலேயே இருக்கும். ஒருவேளை உங்களுடைய தேடுபவரின் அஹங்காரமானது வேண்டுமானால் பூர்த்தியடையலாம். ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை. உங்கள் உள்ஆழத்தில் அதிகக் குழப்பமே மிஞ்சியிருக்கும்.

உங்கள் இதயத்திற்கு அல்லது இருப்புத் தன்மைக்கு நகர்த்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் மூளையை மையமாகக் கொண்டு செயல்பட்டால், மைலும் மேலும் குள்விகளே தொடர்ந்து கொண்டிருக்கும். கேள்விகளுடன் உங்களால் அறிந்து கொள்ள முடியாது. விழிப்புணர்வுடன் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் இதயத்திலிருந்து இயங்கும் பொழுது விழிப்புணர்வும், புரிந்து கொள்ளுதலும் உங்களிடம் நிகழும்; கேள்விகள் தானாகவே கரையத் தொடங்கும்; குரியன் எழும்பும் பொழுது இருள் தானாகவே மறைவதைப் போல, விழிப்புணர்வு உங்களிடம் நிகழும் பொழுது, புரிந்து கொள்ளுதலும் தானாகவே நிகழும். கேள்விகளும் கரைந்து விடும்.

கேள்விகள் எழுவதற்கு முன்னரே நீங்கள் விஷயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விடுவீர்கள்; குகள்விகளும்

வாழ்வின் புதிருக்கு மனதால் விடைகாண முடியாது.

கரைந்துவிடும். இதைப் புரிந்து கொள்வதற்கு சற்று கடினமாக இருப்பினும், ஒரு முறை உங்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்து விட்டால், நான் விழிப்புணர்வு எதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் சரியாகத் தெரிந்து கொண்டுவிடுவீர்கள். கேள்விகள் மறைந்து எப்பொழுதும் ஒரு புரிந்து கொள்ளுதல் உங்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்.

இந்த அளவிற்குப் பரிந்து கொள்ளுதல் இருப்பின், மாயை அல்லது பொய்த் தோற்றங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். என் வார்த்தைகளை புத்திசாலித்தனமாகப் புரிந்து கொள்வதுடன், தியானமும் சுலபமாக இந்த விழிப்புணர்வை அடைய உதவும். நாம் மாயையைப் பற்றியும் பொய்த் தோற்றங்களைப் பற்றியும் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டி ருக்கலாம். அதனால், அதிகக் குழப்பமே மிஞ்சும்.

அதற்குப் பதிலாக, அறிவுபூர்வமாக வாழும் வழி முறைகளைக் கற்பதே போதுமானது. உங்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். இந்த மாயை, பொய்த் தோற்றம் எல்லாம் மனதின் பிரதிபலிப்புகளே - அதனால் தான் சொல்கிறேன் - உங்கள் மனதை விட்டுவிடுங்கள், அவ்வளவுதான்.

சரி, இப்பொழுது நீங்கள் அனைவரும் இங்கு முழுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களில் பலர் உடலால் இங்கிருந்தாலும், மனதால் வேறெங்காயினும் இருப்பீர்கள். நான் சொல்வதெல்லாம் மிகப்பெரும் உண்மைகள். அதனால் நீங்கள் அதைக் கவனமாகக் கேட்டு புத்திசாலித்தனமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆயினும், அனுபவப் பூர்வமாகப் புரிந்து கொள்ளுதலும் வேறு நிலையில் உங்களுள் நிகழும்.

மனதின் வழியாகப் புரிந்து கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

பாருங்கள், நான் முன்பே சொன்னது போல், ஆனந்தப் பரவசம் நம்முள் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது அடிப்படை உண்மை. ஆனால் நாம் இந்த ஆனந்தப் பரவசப் பிரவாகத்தைத் தொடர்ந்து தடுத்து நிறுத்திக் கொண்டேயிருக்கிறோம்; இதைத்தான் நமது வாழ்க்கையில் துன்பமாக அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனந்தப் பரவசம் என்பது வெளியேயிருந்து கிடைத்து உள்ளே எடுத்து வைத்துக் கொள்ளும் ஒரு வஸ்து அல்ல. கண்டிப்பாக அல்ல. அது உங்கள் உள்ளார்ந்த இயல்பு. நீங்கள் இந்த உலகத்திற்கு வரும் பொழுது, ஒரு ஆனந்தப் பரவச நிலையில் இருக்கிறீர்கள். சமூக நெறிப் படுத்தல்களால், இந்த ஆனந்த நிலையில் இருந்து வெகு தூரத்திற்கு விலகிச் செல்வதில் வல்லுனராகி, பின்னர் உங்களுக்கு வெளியிலிருந்து அதை அடைவதற்கான வழிகளைத் தேடி அலைகிறீர்கள்.

இந்தச் சில நாட்களில், நமக்குள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆனந்தப் பரவசத்தைத் தடுத்து நிறுத்துவதைத் தடுப்பது எவ்வாறு என்பதைக் காணப் போகிறேம். ஆனர்தப்பரவசம் என்று நான் சொல்வது, நம் வாழ்க்கையில் தினந்தோறும் அனுபவிக்கும் சாதாரண சந்தோஷத்தை2 அல்ல. நம் வாழ்க்கையில் நிகழும் சாதாரண சந்தோஷமானது வெளியில் நிகழும் ஏதோவொன்றின் விளைவு - சில சந்தோஷமான தருணங்கள், சில பொருள் சார்ந்த லாபங்கள், சில சந்தோஷமான செய்திகள், வெற்றிகரமான சில உறவுகள் அல்லது வெளியுலகில் ஒரு மனிதருடனோ, அல்லது ஏதோ வொன்றுடனோ ஏதாவது செய்வது, ஆகியவைதான்.

இது போன்ற சந்தோஷமானது, நமக்கு வெளியே உள்ள மனிதர்களையோ, சூழ்நிலைகளையோ சார்ந்திருக்கிறது. இது

Bliss1 Happiness2

போன்ற சந்தோஷமானது நம்மை வருத்தத்தை நோக்கியும் இட்டுச் செல்லும்; ஏனெனில் மனிதர்களும் சூழ்நிலைகளும் மாறிக் கொண்டே இருப்பவை. அவை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை; வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமாக நடந்து கொள்கின்றன. அவற்றின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் பொழுது நமது சந்தோஷமும் பாதிக்கப்படுகிறது.

நாம் பேசும் இந்த ஆனந்தப் பரவசம் என்பது வேறு விதமானது. அது உங்கள் உள்நிலை; வெளியுலகில் நடக்கும் சம்பவங்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதது. அதுவே உங்கள் மையம், உங்கள் நிரந்தரமான நிலை. அதை நீங்கள் கண்டுபிடித்து விட்டால், வெளியுலகிற்கு ஒரு வெறும் சாட்சியாகி விடுவீர்கள். நீங்கள் ஒரு ஆனந்தமயமான, கவனிப்பவராகி விடுவீர்கள். நீங்கள் உங்கள் ஆனந்தப் பரவசத்தை இழக்காமலேயே, அதில் முழுமையாகக் கலந்து கொள்வீர்கள்.

ஒரு சின்ன கதை ....

ஒரு குடும்பத்தில் என்ன செய்தாலும் திருப்திப்படுத்த முடியாத, வயதான ஒரு முதியவர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அவரை ஒரு சந்தோஷமான மனநிலையில் வைக்க எவ்வளவு முயன்றாலும், அவர் பிடிவாதமாவும், கடுகடுப்பாகவுமே இருந்தார். அவருடைய குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் அவரைப் பார்க்க வந்தும், அவரை மகிழ்ச்சியாக வைக்க முனைந்தும், அவர் மாறாமல் அப்படியே இருந்தார். திடீரென்று ஒரு நாள், ஒரே இரவில், அவர் மிகவும் மென்மையானவராகவும் மகிழ்ச்சியான வராகவும் மாறிவிட்டார். அவருடைய இந்த திடீர் உருமாற்றம் அவரது குடும்பத்தினருக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. துணிச்சலான அவரது பேத்திகளில் ஒருத்தி அவரிடம் கேட்டாள், 'தாத்தா, நீங்கள் எப்படி திடீரென்று

மனதை விட்டுவிடுதலே வாழ்வின் புதிருக்கு விடை காணும் முதல் படியாகும்.

மாறி விட்டீர்கள் ?''. அந்தப் பெரியவர் பதிலளித்தார், ''என் வாழ்க்கை முழுவதும் ஒரு திருப்தியான மனதை அடைய நான் முயற்சி செய்தேன். ஆனால், அதில் வெற்றியடைய முடியவில்லை. அதனால், இப்பொழுது நான் அதனுடனேயே திருப்தியாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்''.

(சிரிப்பு ! )

எல்லாம் நம் மனதின் பிரதிபலிப்பே! மனதின் உதவியுடன் நாம் உள்ளே நிகழும் ஆனந்தப் பரவசப் பிரவாகத்தை நிறுத்தி விட்டோம். ஆனந்தப் பரவசத்தை நாம் ஒருபோதும் வெளியிலிருந்து பெற முடியாது. அது ஏற்கனவே நம்முள்ளேதான் இருக்கிறது. நாம் வெறுமனே உள்ளே பார்க்க வேண்டும், அவ்வளவே.

புரிந்து கொள்ளுங்கள்: எங்கும் நிறைந்திருக்கின்ற பிரபஞ்ச விழிப்புணர்வு ஒன்று இருக்கிறது. அது இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நிரப்பியிருக்கிறது. தனி விழிப்புணர்வு ஒன்று இருக்கிறது. அது நம்மை நிரப்பியிருக்கிறது. இவ்விரண்டிற்கு மிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே மனிதனின் நோக்கமாகும். இந்தத் தொடர்பு நிகழ்வதைத்தான், ஞானமடைதல் அல்லது எல்லையற்ற ஆனந்தப் பரவசம் அடைதல் அல்லது நித்யானந்தம் அடைதல் என்று சொல்கிறோம். நித்யானந்தம் என்பது நிரந்தரமான ஆனந்தப் பரவசம்.

இந்த உரைகளைக் கேட்பதன் மூலமும் தியான முறைகளைப் பயிற்சி செய்வதன் மூலமும், நாம் இந்தத் தொடர்பைப் பற்றி மேலும் மேலும் விழிப்படைந்து, அதை மேலும் விழிப்புணர்வுடன் அனுபவிக்க முயற்சி செய்கிறோம். இதுவே நமது எல்லா முயற்சி களின் ஒரே நோக்கமாகும்.

நான் எப்பொழுதும் சொல்வேன்: இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவர்களுடன் போரிட்டு வெல்கிறார். முற்றொருவர் தன்னுடனேயே போரிட்டு வெல்கிறார். மற்றவர்களுடன் போரிடுவது எளிது. அது பெரிய விஷயமல்ல. அனால் உங்களுடனேயே போரிடுவது கடினமானது. நீங்கள் தைரியசாலியாக இருந்தால் மட்டுமே, உங்களுடனேயே போரிட்டு வெல்கிறீர்கள். எது நீங்கள் இல்லையோ, அதனை அழித்து, ஒரு ஆனந்தமயமான இருப்புத் தன்மையாகவெளிப்படுகிறீர்கள்; நீங்கள் மலர்கிறீர்கள்.

மனிதனுக்கிருக்கும் மிகப்பெரிய சவால் அவனுடைய முழுச் சக்தியையும் உணர்வதுதான். இனிமேலும், மாசு சேர்க்காமல் இருப்பதற்குத் தேவையான அறிவைப் பெறும் வரையில், அவன் உள்நோக்கிச் சென்று மீண்டும் மீண்டும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டேயிருந்தால்தான் இது சாத்தியமாகும்.

ஸ்மஸ்கிருதத்தில், ஸ்வாமி என்னும் வார்த்தையின் பொருள், தன் முழுச் சக்தியையும் உணர்ந்தவர் என்பதாகும். இந்தப் பூமியில் நமது எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம் நமது சக்தியை உணர முடியாமையே. ஒரு பழமொழி இருக்கிறது; சிங்கமாக இருக்க அனுமதிக்கப்படாத சிங்கம் நரியாகி விடுகிறது. நாம் நமது உண்மையான சக்தியை உணர அனுமதிக்கப் படாவிட்டால், தவறான வழிகளில் வெளிப்படுத்தத் தொடங்கி விடுவோம் - தன்னையே அழித்துக் கொள்வோம் அல்லது மற்றவர்களை அழிக்கக் கொடங்குவோம்.

அதனால் அக்கபூர்வமான சக்தி அல்லது சக்திக்கான சாத்தியக்கூறு சுதந்திரமான பிரவாகத்தின் மூலமாக தன்னை

உங்கள் மனதை விளையாட அனுமதித்தால், நீங்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பீர்கள். அவ்வளவே.

வெளிப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். சமூகம் அதனை அனுமதிப்பது ஒன்று. மற்றொன்று, நமக்கும் அதை வெளிப்படுத்தும் உத்தி தெரிந்திருக்க வேண்டும். எவரொருவர் தன் ஆற்றலை உணர்ந்திருக்கிறாரோ, எவரொருவர் தான் இருப்பது போலவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாரோ, எவரொருவர் தன் இருப்புத் தன்மையுடன் முழுமையாக இசைந்து இருக்கிறாரோ, அவரே ஸ்வாமி எனப்படுகிறார்!

உங்களிடம் அளப்பறிய ஆற்றல் இருக்கிறது. காலங் காலமாக உளவியலாளர்களும் ஞானிகளும் மனிதன் தன் முழு ஆற்றலையும் உணரவில்லை என்றே சொல்லி வந்திருக்கின்றனர். நாம் எங்கே தடுமாறி நிற்கிறோம்? நம்மால் ஏன் நமது முழுக் சக்கியையும் உணர முடியவில்லை ?

எது நடப்பினும் சரி என்று விட்டுவிட்டு, அதனை ஆராயும் தைரியம் வேண்டும், அவ்வளவே. இந்த எல்லா கேள்விக்குமான விடைகளை நாம் தெரிந்து கொள்வோம். நீங்கள் சிரத்தையுடன் ஆராயத் தொடங்கும் பொழுது, விழிப்புணர்வில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்; இந்த மாற்றம் நீங்கள் மலர்வதற்கான ஒரு வெற்றிடத்தை உங்களுக்குள் திறக்கும்.

அவ்வாறு நீங்கள் மலரும் பொழுது, நீங்கள் அரச னாகிறீர்கள். பிறகு இந்தப் புவியில் நீங்கள் ஒரு கடவுளைப் போல வாழ்கிறீர்கள். மக்களிடம் எல்லாவிதமான வசதி வாய்ப்புகளும், பணம், கல்வியறிவு முதலிய அனைத்தும் இருக்கலாம். ஆயினும் உள்வெளியைக் கண்டுபிடிக்காத வரை அவர்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்கிறார்கள். உங்கள் இருப்புத்தன்மையைக் கண்டுபிடிப்பதே வளம் பெறும் வழி. உள் வளமே உண்மையான வளம்.

இதுவரை நாம் வெளியே நடக்கும் விஷயங்களில் வெகுவாக சிக்கிக் கொண்டு விட்டதால், நமது உள் தன்மையைப் பற்றி புரிந்து கொள்ளாமல் முழுவதும் அறியாமையில் இருந்து விட்டோம். நாம் வெளியுலக தீரச் செயல்களில் வெகுவாக சிக்கிக் கொண்டு விட்டதால், உள்ளுலகின் அற்புதமான தீரச் செயல்களைத் தவற விட்டு விடுகிறோம். சிறந்த ரிஷிகளும், குருமார்களும் அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்ததை நாம் தவற விட்டு விடுகிறோம். அவர்களது அனுபவத்தையே நான் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சரி.... ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா ?

ஸ்வாமிஜி ... அன்மீகம் என்பது என்ன என்ன என்று எங்களுக்குச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

ஆன்மீகம் என்பது உங்களிடம் நான்கு விஷயங்கள் மலர்வதைத் தவிர வேறில்லை. உடல் அரோக்கியம், மன ஆரோக்கியம், இனிமையான மனித உறவுகள் மற்றும் (எந்த ஒரு நிகழ்வுக்கும்) தன்னிச்சையாகத் தக்க பதில் கொடுக்கும் திறமை - இதையே நான் பொறுப்புணர்வு என்கிறேன்.

உடல் ஆரோக்கியம் என்பது நோய்களிலிருந்து விடுதலை பெற்றிருப்பது. நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்றால், நீங்கள் மருத்துவ ரீதியாக சரியாக இருப்பதாக அவர் அறிக்கை தர வேண்டும் .

இரண்டாவது-மன ஆரோக்கியம் என்பது, ஆழ் மனம் மற்றும் ஆழமாக செதுக்கப்பட்டிருக்கும் எதிர்மறை எண்ண வடிவ அமைப்புகளிலிருந்து விடுதலை பெற்றிருத்தல், மற்றும் கவலைகள், வலி, பொறாமை, அதிருப்தி, அஹங் காரம், காமம் முதலியவற்றிலிருந்து விடுதலை பெற்றிருத்தல்.

முன்றாவது - - மனிதர்களுக்கிடையேயான உறவுகள், உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் சுமுகமான உறவு வைத்திருப்பது. அனைவரிடமும் ஒரு நல்ல உறவு வைத்திருந்தால் மட்டும் போதாது. யாரிடமும் எந்த அளவு தொடர்புவைத்திருந்தாலும், அதில் வலியோ, நிர்ப்பந்தமோ இல்லாது வைத்திருக்கும் திறமை. அப்படி நீங்கள் ஏதேனும் வலியையோ நிர்ப்பந்தத்தையோ உணர்ந்தால், அது உங்களுக்குள் ஒரு தடை இருக்கிறது, உங்கள் மன ஆரோக்கியத்தில் ஏதோ தடை இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

நான்காவது - தன்னிச்சையாகத் தக்க பதில் கொடுக்கும் திறமை; இதை நான் பொறுப்புணர்வு என்று சொல்கிறேன். உங்களால் பொறுப்பெடுக்க முடிந்தால், உங்களால் தன்னிச்சை யாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடிந்தால், நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அந்த க்ஷணத்தில் விரிவடைகிறீர்கள்; அதை வெற்றி கரமாகச் செய்து முடிக்க உங்கள் வழியாக ஒரு சக்தி பாய்கிறது. ஆனால், அந்தச் செயலைச் செய்து முடிப்பதற்கு, அந்தச் சக்தியை உபயோகிப்பது உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் இதைச் செய்து கொண்டிருந்தால், விரிவடைந்து கொண்டேயிருக்கிறீர்கள்.

இந்த நான்கு விஷயங்களும் உங்களிடம் மலர்ந் திருந்தால், நீங்கள் ஆன்மீகத்தில் இருக்கிறீர்கள். அப்பொமுது நீங்கள் என்ன வேலையில் இருக்கிறீர்கள், நீங்கள் கல்யாணமானவரா அல்லது கல்யாணமாகாதவரா, நீங்கள் சிறுவரா அல்லது வயதானவரா அல்லது ஏதாவதா என்பதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது.

சொல்லாங்கள் ... .

ஸ்வாமிஜி, நீங்கள் சைவ உணவு சாப்பிடுவது பற்றியும், அசைவ உணவு சாப்பிடுவது பற்றியும் என்ன சொல்கிறீர்கள் ?

நீங்கள் இதயத்தில் இருந்து இயங்கும்பொழுது விழிப்புணர்வும் புரிந்து கொள்ளுதலும் உங்களிடம் நிகழும்; கேள்விகள் தானாகவே கரையத் தொடங்கும்.

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார்!)

முதலில், மற்றவர்களிடம் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்று சொல்லிக் கொண்டு திரிந்து கொண்டிருக்காதீர்கள். நமக்குத் தெரியாத விஷயங்களில் ஈடுபட்டு தொல்லைக்கு உள்ளாவதைத் தவிர்ப்பது நல்லது! நல்லது! பாருங்கள்: சில பிரச்சினைகளைத் தா்க்க ரீதியான காரணங்களைக் கொண்டு தீர்க்க முடியாது. நீங்கள் மக்களிடம் அசைவ உணவைச் சாப்பிடாதீர்கள் என்று சொன்னால், அவர்கள், பிராணிகளைப் போலவே தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது, அதை மட்டும் ஏன் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பார்கள். அவர்களிடம் என்ன சொல்வீர்கள்? இதற்கு ஒரு முடிவேயில்லை.

ஆனால், இதைச் சொல்ல முடியும்: நான் ஒரு சுத்த சைவம். நான் சைவ உணவையே சாப்பிடுகிறேன்; ஏனெனில் அது என் உடலுக்கு ஏற்றதாக இருக்கிறது, அவ்வளவே. ஞானமடைந்த பல குருமார்கள் அசைவ உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந் திருக்கிறார்கள். ஆனால், செயல்களுக்கெல்லாம் நம்மால் தீர்ப்பு கூறிக் கொண்டிருக்க முடியாது; ஏனெனில் அவர்களின் செயல்களுக்கு நமது அகராதிப்படி விளக்கம் கொடுக்க முடியாது. பிறகு நாம் முழுவதையும் தவறாகப் புரிந்து கொண்டு தவற விட்டு விடுவோம்.

ஒரே ஒரு விஷயம்: மனிதர்களை அவர்களின் உணவுப் பழக்கங்களைக் கொண்டு வகைப்படுத்தாதீர்கள்; அசைவ உணவு சாப்பிடுபவர்களை, அதை விட்டுவிடச் சொல்லி கட்டாயப் படுத்தாதீர்கள்.

ஒரு சின்ன கதை ....

பிகைஷ் எடுத்து வாழும் ஒரு மதபோதகரின் குடும்பத்தில், ஒரு தொலைக்காட்சி வாங்கி வைக்கப்பட்டது. ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் தொலைக் காட்சியைப் பார்ப்பது வழக்கம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒருபோதும் தலைவரிடம் சென்று, மற்றவர்கள் எவ்வாறு மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கின்றனர் என்று புகார் கூறுவது வழக்கம். சில தடவை புகார் செய்த பிறகு. தலைவர் அவரிடம் கூறினார், 'நாளையிலிருந்து நீயும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்'. அந்த மனிதர் அதிர்ச்சியடைந்து அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று வினவினார். அதற்குத் தலைவர் சொன்னார், "தொலைக் காட்சியைத் தவிர்த்து விடுவதால்தான் நீங்கள் அவர்கள் செய்வதைப் பற்றி அதிருப்தியடைகிறீர்கள். நீங்களும் பார்க்க விரும்புகிறீர்கள்; ஆனால் நீங்கள் உள்ளுக்குள் அழுத்தமாக இருப்பதால் பார்ப்பதில்லை. இவ்வாறு அடக்கி வைத்திருப்பதே உங்களை அவர்களுக்கு எதிராகப் புகார் கூற வைக்கிறது''.

பாருங்கள், நீங்கள் அசைவத்தைத் தவிர்த்து விடுவதால் முழுவதுமாக மகிழ்ச்சியாக இல்லையென்றால் மட்டுமே, மற்றவர்களையும் சைவமாக மாறிவிட வற்புறுத்துகிறீர்கள். எதையும் நீங்கள் முழுமையாகச் செய்யும்பொழுது, இன்னொரு வரை அதைச் செய்யும்படி நிர்பந்திக்க மாட்டீர்கள். சந்தேகத் துடனும், அரை மனத்துடனும் செய்யும் பொழுது மட்டுமே, மற்றவர்களையும் அதற்குள் இழுக்கிறீர்கள். நீங்கள் எதிலாவது முழுமையாக இருக்கிறீர்களா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள இது ஒரு அளவுகோலாகும். நீங்கள் முழுமையாக இருக்கும்பொழுது, வருத்தம் ஏதும் இல்லாமல் திருப்தியாக

இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள் - ஒருவர் மற்றவர்களிடம் போரிட்டுவெல்கிறார்; மற்றொருவர் தன்னுடனேயே போரிட்டு வெல்கிறார்.

இருப்பதால் வேறு யாரையும் தொந்தரவு செய்ய மாட்டீர்கள். மற்றவர்களைச் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பீர்கள்.

உண்மையில், சைவ உணவை உண்டுவிட்டு, 24 மணி நேரமும் அசைவ உணவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பவர்களை விட, ஒரு மணி நேரம் அசைவ உண்டு விட்டுப் பின் மறந்து விடுபவர்களே மேல் என்று கூறுவேன்!

ஒரு சின்ன கதை ...

ஒரு ஜென் குரு தனது சீடருடன் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதனருகில் ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள். அவர்களைக் கண்டவுடன் குருவிடம் அவள் அந்த ஆற்றைக் கடக்க உதவுமாறு கேட்டாள். குரு அவளைத் தூக்கிக் கொண்டு போய் மறு கரையில் விட்டு விட்டுத் திரும்பினார். இதைக் கண்ட சீடரோ முழுவதுமாகத் தன் அமைதியை இழந்தார். அவர் கண்ட காட்சியால் உள்ளே எரிந்து கொண்டிருந்தார். நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது, மேலும் பொறுக்க முடியாத சீடர் கேட்டார், ''குருவே, தாங்கள் எவ்வாறு ஒரு பெண்ணைத் தொட்டு தூக்கிச் செல்லலாம் ?'. குரு பதிலளித்தார், ''நான் அவளை வெகு நேரத்திற்கு முன்பே அங்கேயே விட்டு விட்டேனே, நீ ஏன் இன்னும் அவளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்!''.

(சிரிப்பு ! )

குருமார்கள் எப்பொழுதுமே கேள்வியைக் கேட்பவர் களுக்குத்தான் பதிலளிக்கிறார்களே தவிர, கேள்விகளுக்கு அல்ல. இந்தக் கதையால், குரு சீடருக்கு தன் உயர்ந்த நிலையை உணர்த்தி, அவர் தூக்கி வந்தது ஆணா அல்லது பெண்ணா என்பது ஒரு பொருட்டல்ல என்பதை விளக்கியிருக்க முடியும். ஆனால்,

உங்கள் இருப்புத் தன்மையைக் கண்டுபிடிப்பதே வளம்பெறும் வழி - உள்வளமே உண்மையான வளம்.

அதை அவர் செய்யவில்லை. தடை, சீடரின் மனதிலிருந்தது; குருவின் செய்கையில் அல்ல என்பதை சீடருக்குப் புரிய வைத்தார் !

அசைவ உணவின் மீதுள்ள ஆசையை உங்களால் விட்டுவிட முடியாது என்று நீங்கள் எண்ணினால், அது தானாகவே போகும் வரை சாப்பிடுங்கள். இதற்கு, நான் அசைவ உணவை ஆதரிப்பதாக அர்த்தமல்ல என்பதை நினைவில் வையுங்கள். என் சொந்த வாழ்க்கையில், உடலிற்கும் மனதிற்கும், சைவ உணவு ஏற்றதாக இருப்பதால், நான் அதைச் சாப்பிடுகிறேன். நீங்களும் வாழ்க்கையில் என் வழியைத் தழுவ விரும்பினால், சைவமாக மாறிவிடுங்கள், அவ்வளவுதான்!

ஆனால் அதை விட்டுவிட்டு, உங்கள் ஆசையை விட முடியாமல், மற்றவர்களை விட்டுவிடுமாறு தொல்லை செய்து கொண்டிருக்காதீர்கள். நாம் அனைவரும் பழக்கம் போன்ற சின்ன விஷயங்களை எடுத்துக் கொண்டு, மணிக்கணக்காக அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் ; அதுதான் பிரச்சினையே.

நீங்கள் இந்த மூன்று வகைக்குள் ஏதாவதொன்றில் வருவீர்கள்:

முதலாவது, அசைவ உணவைச் சாப்பிடுவதும் இல்லை, அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. இரண்டாவது வகை, சாப்பிட்டு விட்டு, அதைப் பற்றி மறந்து விடுவது. மூன்றாவது வகை, தானும் சாப்பிடுவது இல்லை, தனது இழப்பால் வருந்தி மற்றவர்களையும் சாப்பிட விடாமல் தொல்லை செய்வது! தயவு செய்து இந்த மூன்றாவது வகையில் விழுந்து விடாதீர்கள், அவ்வளவுதான்!

மலரும்பொழுது நீங்கள் அரசனாகிறீர்கள் -பிறகு இந்த புவியில் நீங்கள் ஒரு கடவுளைப்போல வாழ்கிறீர்கள்.

சொல்லுங்கள்... ?

ஸ்வாமிஜி, நான் நல்லது செய்ய விரும்பினால், உதாரணத்திற்கு, ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு வயதான மனிதரைப் பார்த்தால், அவருக்கு என்னுடைய இருக்கையைக் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் மீதிப் பயணம் முழுவதும் நான் நின்று கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைக்கும் பொழுது, அதற்கு எதிராகத் தீர்மானிக்கிறேன். ஆனால், நான் புகை பிடிக்க விரும்பினால், உள்ளிருந்து ஒரே ஒரு சிகரெட் ஒன்றும் என் வாழ்க்கையைப் பாழாக்கி விடாது என்று அதற்கு இசைவான பதில் வருகிறது. உண்மையிலேயே சரியானதை மட்டுமே செய்வதற்கு என்னை ஏன் என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை ?

பாருங்கள், வெளியிலிருந்து சொல்லப்படும் எதையும் மனதினால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது, அதை நீங்கள் புத்திசாலித்தனத்திலிருந்து புரிந்து கொண்டிருந் தாலும், அதன் பலன்களைத் தெளிவாகவும், ஆழமாகவும் பார்ப்பதில்லை. ஆனால் ஒன்றை நீங்களே ஆழமாக அனுபவிக்கும் பொழுது, அது உங்கள் சொந்தப் புரிந்து கொள்ளுதல் ஆகிவிடுவதால், எந்தப் பிரச்சினையுமில்லாமல், அதில் நிலையாக நிற்கிறீர்கள்.

சிகரெட் உங்கள் இருப்புத்தன்மையுடன் கலந்து விட்டது. அதை நீங்களே அனுபவித்து விட்டீர்கள். அது மற்றொருவரின் போதனையால் அல்ல; அது உங்கள் சொந்த அனுபவம். அதனால் உங்கள் இதயம் அதனை ஏற்றுக் கொண்டு விட்டது.

ஆனால், புருந்தில் உங்கள் இருக்கையை யாரோ ஒருவருக்கு விட்டுக் கொடுப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியானது, நீங்கள் ஆழமாக அனுபவிக்காத ஒரு விஷயம். பேருந்தில்

குருமார்கள் எப்பொழுதும் கேள்வியை கேட்பவர்களுக்குத் தான் பதிலளிக்கிறார்களே தவிர கேள்விகளுக்கு அல்ல!

வயதான ஒருவருக்கு இருக்கையை விட்டுக் கொடுப்பது நல்ல விஷயம் என்பது உங்களுக்கு மற்றவர்களால் சொல்லப் பட்டது, அவ்வளவுதான். உங்களுக்கு சமூகப் பண்பாடுகளைப் பின்பற்றிய தற்காக வேண்டுமானால், அதிகபட்சமாக, ஒருவிதமான மன நிறைவு ஏற்பட்டிருக்கலாம், அவ்வளவே. ஆனால் சிகரெட் விஷயத்திலோ, நீங்களே அனுபவமாகி விட்டீர்கள்.

நீங்களாக அனுபவிக்காதது உங்களைக் கவராது; உங்களை அதனிடம் இழுக்காது. மற்றவர் களுக்கு உதவும் சந்தோஷத்தை, நீங்கள் உண்மையிலேயே அனுபவித்திருந்தால், உங்கள் இருக்கையை பெரியவருக்கு விட்டுக் கொடுத்திருப்பீர்கள்.

தியானமே உண்மையான அனுபவம் நிகழ்வதற்கான வழி. நாம் தியானம் செய்யும் பொழுது, கல்லைப் போன்று கடினமாக இருக்கும் நமது இதயம், மலர்ந்து பஞ்சு போல் மென்மையாகவும், உணர்வுடையதாகவும் அதி, ஆகி, தாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டிய தேவையை உணர்கிறோம்.

தற்சமயம், இருக்கையை கொடுப்பது நல்ல விஷயம் என்பதை சில பத்திரிகைகளில் படித்தோ அல்லது பெரியவர்கள் சொல்லக் கேட்டோ இருக்கிறோம், அவ்வளவே. அதற்கு பதில் என்ன நிகழ்ந்திருக்க வேண்டும் என்றால், உதவும் மனப்பான்மை நமக்குள் மலர்ந்து, நாம் உதவியிருக்க வேண்டும்.

உங்களுக்குள் தியானம் நிகழ்ந்திருந்தால் மட்டுமே நுட்பமான உணர்வு உங்கள் வாழ்வின் வழியாக இருக்கும்; இல்லாவிடில் அது மேலோட்டமாகவே இருக்கும். மனதின் வழியாகப் பெற்ற போதனையை இதயத்திற்குள் தளு

தியானமே உண்மையான அனுபவம் நிகழ்வதற்கான வழி.

துளையிடும் கருவி வேண்டும் - அதுவே தியானம். பிறகு நீதி, நேர்மை, மற்றும் அதைப்போன்ற நமக்குக் கற்றுத் தரப்பட்ட பண்புகள் நமது வாழ்க்கையின் வழியாகி விடும். அதைப் பின்பற்றும் பொழுது சாறு நிறைந்திருப்பதை உணருவீர்கள்.

இல்லாவிடில், இந்தப் பண்புகளெல்லாம் அனுபவ அறிவாக மாறாமல் வெறும் ஏட்டுக் கல்வியாகவே இருக்கும்.

நாம் இன்று மதியம் உண்மையான தலைப்பிற்குள் வரும் பொழுது, எது சரியென்று தெரிந்தும் ஏன் அவ்வாறு விழிப்பின்றி நடந்து கொள்கிறீர்கள் என்பதற்கு விரிவான விடை கிடைக்கும்.

சரி, இப்பொழுது இது போதும். மதிய உணவிற்குப் பிறகு நாம் சந்தித்து நேராக தலைப்பிற்குச் செல்வோம். நன்றி.

ஆனந்தமாக இருங்கள்!

Part 2: Guaranteed Solutions - For Lust Fear Worry

அத்தியாயம்- 2