அத்தியாயம் - 5 மனக்கோட்டைகளைத் தகர்த்தல்
- டிலாதார சக்கரம் -
- துக்கஹரணா தியானம் -
இந்த மூலாதார சக்கரம் முதுகுத்தண்டின் அடியில் இருக்கிறது.
சமஸ்கிருதத்தில் மூலாதாரா என்றால் இருப்புத் தன்மையின் மூலமும் அடிப்படையும்' என்று பொருள். 'மூலா' என்றால் மூலம், 'ஆதாரா' என்றால் அடிப்படை.
இந்தச் சக்கரம் கட்டுப்பாடற்ற கனவுகளாலும் கற்பனை களாலும் பூட்டப்படுகிறது.
கனவுகளை விட்டுவிட்டு நிஜத்தை வரவேற்பதன் மூலம் இந்தச் சக்கரத்தை மலரச் செய்ய முடியும்.
தியானமுறை : துக்கஹரணா தியானம் - குலார்ணவ தந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
மூலாதார சக்கரம் காமம், காமம், கட்டுப்பாடற்ற கனவுகள், கற்பனைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
மிகவும் அதிகமாகப் பேசப்படும், எண்ணப்படும், எழுதப்படும் விஷயம் காமம். மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், தவறாக விளக்கப்படும், குழுப்பமான விஷயமும் காமம்தான்!
ஒன்று, நாம் அதைத் தவிர்க்க முயற்சி செய்கிறோம்; அல்லது அதில் தீவிரமாக ஈடுபட முயற்சி செய்கிறோம். காமம்
Overcoming Fantasies
நமது விழிப்பற்ற மனதில் ஆழமாகப் புதைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, நமக்குக் காமத்தைப் பற்றிய உண்மையைத் தெளிவுபடுத்துபவர் யாருமில்லை.
ஏனைய எந்த விஷயத்தையும் விட, தெளிவுபடுத்தப்பட வேண்டிய தேவை, காமத்திற்கு மிகவும் அதிகம். அது விழிப்புணர்வின் ஒளியில் விளக்கப்பட வேண்டும்.
நமது தற்போதைய நிலை, மையிருட்டில் இரவில் ஒரு காட்டில் நடந்து செல்லும் மனிதனை ஒத்தது.
எங்காவது ஒரு ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வைக்கப் பட்டிருக்கலாம்.
இந்த விஷயத்தைத் தவிர்க்க முயற்சி செய்யும் மனிதன் முழு விழிப்புணர்வற்ற நிலையில் இருக்கிறான்; அவனுக்குப் பள்ளம் எங்கிருக்கிறதென்று கூடத் தெரியாது - பிறகு அவனால் எப்படி அதைத் தவிர்க்க முடியும் ?
அதில் ஈடுபடும் மனிதனுக்குப் பள்ளம் எங்கு இருக்கிற தென்பது தெரியும்; ஆனால் அவனுக்கு அதில் நேராக குதிப்பதைத் தவிர வேறெந்த வழியும் தெரியாது.
இதில் ஏதாவது ஒன்று தீர்வாக இருக்க முடியுமா? என்ன செய்வது ?
ஒருவனுக்குப் பள்ளம் எங்கிருக்கிறதென்பதும் தெரிய வேண்டும்; அதைச் சுற்றிச் சரியான பாதையிலும் செல்ல வேண்டும்.
காமம் என்ற விஷயமே, எப்பொழுதும் பெருக்கித் தரை விரிப்புக்கடியில் தள்ளப்பட்டு விடுகிறது. அது சமூகப் பழக்க வழக்கங்களால் தடை செய்யப்பட்ட ஒரு விஷயம்.
காமம் ஒரு மிகப்பெரிய படைப்பாற்றல், அது ஒரு தியான சக்தி. உலகம் முழுவதும் காம சக்தியிலிருந்தே எழுகிறது.
பெற்றோர்கள் அதைப் பற்றி வெளிப்படையாகக் குழந்தை களுடன் விவாதிப்பதில்லை. முதலில், அதனுள் இருக்கும் உண்மைகள் பற்றி பெற்றோர்களுக்கே தெரிவதில்லை! எந்த விஷயமாயினும், அதைப் பற்றி அறிந்த நிபுணர்களிடம்தான் கேட்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விடுவீர்கள்; சிியாகப் புரிந்து கொள்ளத் தவறும் பொழுது, தவறாகப் பரிந்து கொண்டு விடுவீர்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒரு பெண்மணிக்கு, அவளது பையனின் பள்ளி ஆசிரியரிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த ஆசிரியர், பையனால் கரும்பலகையை தெளிவாகப் பார்க்க முடியாததால் எழுதும் பொழுது தவறுகள் செய்வதாக எழுதியிருந்தார். அந்தப் பெண்மணி உடனே அவளது மகனை ஒரு கண் டாக்டரிடம் அழைத்துச் சென்றாள். அந்தப் பையனைப் பரிசோதித்த டாக்டர், பரிந்துரை செய்திருந்தது: முடிவெட்டுதல் !
(சிரிப்பு!)
இதைக்கண்டு நாம் சிரிக்கிறோம் ; ஆனால் நான் சொல்கிறேன், பல சமயங்களில் நாமும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். முதல் தடவையிலேயே நீங்கள் சரியான மனிதரிடம் சென்று விட்டால், உங்களுக்குத் தீர்வு கிடைத்து விடும். இல்லாவிடில், பெயரளவில் பயனற்ற ஆலோனைகளையெல்லாம் பின்பற்றிக் கொண்டு, ஒரே வட்டத்திலேயே மீண்டும் சுற்றிச் சுற்றிச் சுற்றி வெந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பீர்கள்.
அதை விட மோசமானது, நீங்கள் இதே ஆலோசனைகளை எதிர்கால சந்ததியினருக்கும் வழங்கிக் கொண்டு இருப்பது.
காமத்தைப் பற்றிய அறிவியல் நூலான 'காமசூத்ராவை' எழுதிய வாத்ஸ்யாயனர் ஒரு துறவி என்பது உங்களுக்குத் தெரியுமா ?
இவ்வாறுதான் சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒரு முறை சம்பிரதாயங்களை அனுமதித்து விட்டால், பிறகு அதை உடைத்துக் கொண்டு வெளியே வருவது மிகவும் கடினமான காரியமாகி விடும் ; ஏனெனில் சம்பிரதாயங்கள் காலப்போக்கில் உண்மையாகி விடும்.
ஒரு குரு தோன்றும் பொழுது, உங்களுக்குச் செய்யப் பட்டதையெல்லாம் திருப்புவதே, அவரது முதல் வேலையாகிறது. அதன் பிறகே, அவரால் உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல முடியும்! அதன் பிறகே அவரால், உண்மையிலேயே நீங்கள் யார் என்பதை உங்களுக்குக் காட்டத் தொடங்க முடியும். அது அவருக்கு மிகவும் கடினமான வேலையாகும்; ஏனெனில் நீங்கள் உங்கள் பாதையில் வெகுதூரம் முன்னேறிச் சென்று விட்டீர்கள். நீங்கள் எவ்வாறு தவறான பாதையில் இருக்க முடியும் என்று நீங்களே ஆச்சரியப் படும் அளவிற்கு முன்னேறி விட்டீர்கள்!
காமம் என்பது என்ன ?
காமம் ஒரு மிகப் பெரிய படைப்பாற்றல். அது ஒரு தியான சக்தி. உலகம் முழுவதும் காம சக்தியிலிருந்தே எழுகிறது.
நமது பண்டைய கால கால குருமார்களும், ரிஷிகளும் நமக்கு இந்த விஷயத்தைப் பற்றிய சிறந்த தெளிவை அளித்திருக்கின்றனர். காமத்தைப் பற்றிய அறிவியல் நூலான 'காமசூத்ரா'-வை எழுதிய வாத்ஸ்யாயனர் ஒரு துறவி என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு பிரம்மச்சாரி!
உண்மையில் அவர் காமசூத்ராவை வழங்கியது அவரது சொந்த அன்னைக்கு. ஞானமடைந்த பிறகு ஒரு நாள் அவர் தன் அன்னையிடம் திரும்பி வருகிறார். அவரது அன்னை, ஞானமடைந்திருந்தால் இந்த பூமியில் எந்த விஷயத்தைப் பற்றியும் ஒரு ஆழமான அறிவு இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். அதை ஒத்துக் கொண்ட அவர், அவரிடமிருந்து எதைப் பற்றிக் கேட்க விரும்புகிறாள் என்று கேட்கிறார். அதற்கு அவள் சொல்கிறாள், "நீ பிறந்ததிலிருந்தே ஒரு பிரம்மச்சாரியாக இருக்கிறாய் என்பது உன் தாயான எனக்குத் தெரியும். உனக்கு காமத்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உன்னால் அதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?''. வாத்ஸ்யாயனர் ஒரு புன்சிரிப்புடன், காமத்தைப் பற்றிய அறிவியலான காம சூத்ராவை வழங்கினார். வாத்ஸ்யாயனரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது - ''இந்தவிஷயத்தைப் பற்றிப் பேச உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?''.
ஒரு இயல்பான கேள்வி! உங்களில் பலர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடமும் இதே கேள்வியை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.
அதற்கு வாத்ஸ்யாயனா் அளித்த பதிலை, நான் நவீன உவமையுடன், இன்றைய மொழியில் மொழி பெயர்க்கிறேன்...
உங்கள் வீட்டிற்கு வரும் மின்தொழில் வல்லுனருக்கு ஒவ்வொரு அறையிலும் உள்ள மின்-இயக்கிகளைப்- போடும் பொழுதும் அணைக்கும் பொழுதும் என்ன நிகழ்கிறது என்பது மிகச் சரியாகத் தெரியும். அவருக்கு சுவற்றுக்குள் மறைந்து செல்லும் மின் சுற்று அமைப்பு முழுவதும் தெரியும். ஏதேனும் பிரச்சினை இருந்தால், பிரச்சினையின் கூறுகளை அளவிட்டு, அவரால் ஒரு தீர்வைக் கொடுக்க முடியும், இல்லையா ?
மின்சாரம் பற்றிய அறிவியலை அவர் புரிந்து கொள்கிறார். அதே சமயம், ஒரு நாளைக்கு ஐம்பது தரம் இந்த இயக்கிகளைப் போட்டுக் கொண்டும் அணைத்துக் கொண்டும் இருக்கும் உங்களுக்கு, இதற்குப் பின்னால் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய எண்ணம் துளிக்கூட இல்லை! சரிதானே?
நம்மில் பலருக்கு இந்த இயக்கிகளைப் போட்டு அணைப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது; அதனால் தான் நமக்கு சில சமயம் மின்அதிர்ச்சி ஏற்படுகிறது! அதனால் புரிந்து கொள்ளுங்கள் ... நாம் அப்பாக்களாக, அம்மாக்களாக, தாத்தா பாட்டிகளாக இருக்கலாம் ... இருப்பினும் நமக்கு காமத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கலாம்.
நாம் அனைவரும் தொடர்ந்து ஹொர்மோன்களின் தொல்லைக்கு ஆட்பட்டிருக்கிறோம். தொலைக்காட்சியும் மற்றும் மற்ற வடிவத்திலிருக்கும் ஊடகங்களும்- இச்சையை வெவ்வேறு வடிவங்களில் காட்டிக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாமும், நமக்குக் காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம்.