KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/தேக்கநிலையிலிருந்து மீட்பவர் குரு ஒருவரோSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

தேக்கநிலையிலிருந்து மீட்பவர் குரு ஒருவரோ

குரு, நம் இருப்பில் நிகழும் உச்சபட்ச நோயான அஹங்காரம் என்னும் பற்றுநோய்க்கட்டியை அகற்றுகிறார்.

குரு, அந்தக் ஞானமடைவதற்குக் குறைவான எந்த ஒரு நிலையிலும் நாம் சௌகரியமாக உணரவோ, அதிலேயே தடைபட்டிருக்கவோ குருவானவர் விடுவகில்லை.

ஆன்மிக ரீதியாக நாம் முன்னேறினாலும், சில அம்சங்களில் நாம் சிக்கியிருப்போம். இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், நாம் அவ்வாறு ஏற்படவில்லை சூழ்நிலையில்தான், குருவானவர் நம்மை முன்னேற்றப்பாதையில் மீண்டும் மீண்டும் ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். அவர், நம் மொத்த வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடுவார்.

அறுவைசிகிச்சை பார்க்கும்போது, அவர் நம்மைக் காயப்படுத்திவிடுவாரோ என்று பயப்படுவோம். ஆனால் மருத்துவர் கத்தியை வைத்திருப்பது, நம்மைக் கொல்வதற்காக அல்ல, நம்மைக் குணப்படுத்துவதற்காக!

பாரதத்தில் கடவுளர்கள், வாளுடனும் இன்னும் பல ஆயுதங்களுடனும் இருப்பார்கள். அவர்கள் நம் அஹங்காரம் என்னும் கட்டியை அறுக்கும் மருத்துவர்கள் என்பதால் அவ்வாறு காட்சிதருகிறார்கள்.

காளிதேவி, தம்முடைய ஒரு கையில் பெரிய வாளுடனும் மற்றொரு கையில் வெட்டப்பட்ட தலையுடனும் காட்சி தருவாள். தலை, அஹங்காரத்தைக் வாள், அஹங்காரத்தை அழித்த அறிவை, ஞானத்தைக் குறிக்கிறது.

ஞானமடைவதற்குக் குறைவான எந்த ஒரு நிலையிலும் நாம் சௌகர்யமாக உணரவோ, அதிலேயே கடைபட்டிருக்கவோ குருவானவர் விடுவதில்லை.

குருவானவர் ஒருவர் எப்படி ஒரு சீடர்மீது அக்கறையுடன் இருக்கிறார், அந்தச் சீடர் எந்த ஒரு நிலையிலும் தேங்கி நிற்காமல், தொடர்ந்து முன்னேறச் செய்கிறார் என்பதை விவரிக்கிறேன்.

சீடர், தம்முடைய தற்போதைய நிலையைச் சௌகரியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் உணர்ந்தாலும்கூட, குருவானவர் அந்தச் சீடரை உலுக்கி, அவர் பாதுகாப்பு என்று நினைக்கும் அந்த நிலை உண்மையில் பாதுகாப்பானது கிடையாது, அது வெறும் தேக்கநிலையே என்பதையும், அந்தத் தேக்கநிலையிலிருந்து மீண்டு முன்னோக்கிச்செல்ல வேண்டும் என்பதையும் உணரச்செய்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் குருவான இராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. இராமகிருஷ்ணர், காளியின் உருவத்தை தியானம் செய்வதிலும் அதை உணர்ந்து அனுபவிப்பதிலுமே ஆனந்தமாக இருந்தார்.

ஒருநாள், இராமகிருஷ்ணரின் குரு தோதாபுரி, இராமகிருஷ்ணரிடம், காளியின் உருவத்தை தியானம் செய்யாமல், அதைக் கடந்து தியானம் செய்யுமாறு சொன்னார்.

தோதாபுரி, ஒன்று என்ற - அத்வைத தத்துவமுறையைப் பின்பற்றும் குரு.

குரு சொன்னதைக் கேட்ட இராமகிருஷ்ணர் ஆச்சரியமடைந்து, ''காளிதேவியின் வடிவம் மிகவும் அழகாக இருக்கிறது, நான் என்னை முழுவதுமாக அவளுடன் இணைத்துக்கொண்டேன். பின் ஏன் நான் அவளது உருவத்தை தியானிக்கக்கூடாது ?' என்றார்.

குருகுலங்களில் வழக்கமான கல்விகளைக்கூட, ஆசிரியர்கள் கற்றுத்தரவில்லை, ஆன்மிக குருமார்களே கற்றுத்தந்தார்கள்.

அதற்குத் தோதாபுரி, இறுதியானது அல்ல. உருவங்களைக் கடந்து ஆழ்ந்து செல்லும்போதுதான், இந்தப் பிரபஞ்ச ஆணந்தத்தை உணரமுடியும், '' என்றார்.

ஒரு உருவத்தைத் தியானம் செய்யும்போது, நம்முடைய அஹங்காரத்தை அந்த உருவத்தின்மீது கொள்கிறோம். அது நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது.

நமக்கு ஒரு கனிவான, அன்பான ஒரு அம்மா தேவைப்பட்டாலோ அல்லது தந்தையிடம் அன்பு மற்றும் கவனிப்பு என்ற அம்சங்கள், பண்புகள் இல்லையென்று உணர்ந்தாலோ, அந்த ஏக்கம் என்னும் அஹங்காரத்தை, கடவுளின்மீது செலுத்தி, கடவுளை, கனிவும் அன்பும் நிறைந்த அம்மாவாகவோ, நினைத்து வழிபடுவோம்.

எந்தளவிற்கு இழைமாக இதை அகக்காட்சியாகக் காண்கிறோமோ, அந்தளவிற்கு நிதர்சனமாகும்; உண்மையாகும்.

ஆசிரியருக்கு அறிவு பூர்வமாக மட்டுமே தெரியும். குருவிற்கோ அனுபவ பூர்வமாகவும் தெரியும்.

இராமகிருஷ்ணர், ஆழமாக தம் மனத்தில் கண்ட காட்சி நிஜமானதுதான் என்று நினைத்தார். அது இறுதி ஸத்யம் அல்ல என்றாலும்கூட, இராமகிருஷ்ணர் உருவ வழிபாட்டில் சந்தோஷத்தை அடைந்தார்.

ஆனால் தோதாபுரி, அவரை இந்த நிலையில்லா ஆனந்தத்திலும் இடைப்பட்ட நிலையிலேயே தேங்கி இருக்க விடவில்லை. அவர் இராமகிருஷ்ணரை, உருவத்திலிருந்து, நித்ய ஆனந்தமான உருவங்களற்ற நிலைக்குச் செல்லுமாறு வலியுறுத்தினார். உருவமற்ற அனுபவத்தை அடைய, காளியின் உருவத்தை மனதுக்குள்ளிருந்து அழிக்குமாறு சொன்னார். புரீராமகிருஷ்ணரும் அப்படியே செய்து, முடிவிலா நித்யானந்தத்தை அடைந்தார்.

நாம் எங்கேயும் தேங்கிவிடாமல், இறுதிநிலையை அடைவதை குரு உறுதிசெய்கிறார். அதனால்தான் கிழக்கத்திய கலாச்சாரத்தில், குருவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்திற்கு, ஆசிரியர்களை மட்டுமே தெரியும். அங்கு, ஆன்மிக குரு என்ற ஒரு விஷயமே கிடையாது.

கிழக்கத்திய கலாச்சாரத்தில், ஆன்மிகக் கல்வியைக் கொடுக்கும் பாரம்பரிய பள்ளிகளான குருகுலங்களில், வழக்கமான கல்விகளைக்கூட, ஆசிரியர்கள் கற்றுத்தரவில்லை, ஆன்மிக குருமார்கள் கற்றுத்தந்தார்கள்.

குருவிற்கும் ஆசிரியருக்கும் என்ன வித்தியாசம் ? ஆசிரியருக்கு, தாம் கற்றுக்கொடுப்பது குறித்து அறிவு பூர்வமாக மட்டுமே தெரியும். குருவிற்கோ அனுபவ பூர்வமாகவும் தெரியும். குருவானவர், தாம் சொல்லும் ஸத்யத்தை அனுபூதியாக உணர்ந்தவர்.

ஹிந்து மன்னர்கள், போர்க்கலை கற்றுக்கொள்ள, குருவிடமே சென்றார்கள். ஞானமடைந்த ஒருவருக்கு விவசாயத்தைப் பற்றியும், போர்க்கலைகள் பற்றியும், வர்த்தகம் பற்றியும் என்ன தெரிந்திருக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அன்றைய குருமார்கள், ஆயகலைகள் அறுபத்து நான்கையும் (64) கற்றுத்தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

ஒவ்வொரு கலை மற்றும் அறிவியலுக்கென்று ஒரு நுட்பம் இருக்கிறது. குருகுலத்தில், குழந்தைகள் ஏழு வயது முதல் பதினான்கு வயது வரை, தியானம் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள்.

இந்தக் காலக்கட்டத்தில், அவர்களுக்கு முதல் ஆன்மிக அனுபவம் ஏற்பட்டால், அவர்கள் ஆழமான ஆன்மிக விஷயங்களை விளக்கும் ப்ரூற்ம ஸூத்ரூத்தைக் கற்று, வாழ்வை ஏற்பார்கள். இல்லையெனில், வாழ்க்கையின் புதிர்களைக் கற்றுக்கொள்ள, காமஸூத்ரத்தைப் படித்து, இல்லற வாழ்வில் நுழைவார்கள்.

ஜ்ஞாநகுருமார்கள், ஒவ்வொருவருக்கும் ஏற்ற சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழும்படி வழிகாட்டியதால், அனைவருமே மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள்.

ஆசிரியர், வார்த்தைமொழியால் கற்றுத்தருகிறார். குரு, தம் உடல்மொழியால் கற்றுத்தருகிறார்.

தொண்ணூறு சதவீதம், நாம் உடல்மொழி வழியாகவே விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் என்று இன்றைய விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றன. குருவின் நேரடி தொடுதலும், அவரது மௌனமும் ஒரு மனிதர் விழிப்படைவதற்கு ஏற்ற தளத்தை உருவாக்குகின்றன.