பாரதத்தில் இது ஒருபோதும் நடக்காத காரியம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தீயான முகாமில், 'நாம் விழிப்புணாவின் ஒரு பகுதியே' என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்பது மட்டுமல்ல, நாமேதான் கூட்டு விழிப்புணர்வும்கூட. நாம் நினைப்பதுபோல, நாம் தனித்தனி விழிப்புணர்வுகள் கிடையாது.
ஒவ்வொரு உடலாக, நாம் உள்ளே ஆழ்ந்து செல்லச்செல்ல, நாம் எல்லாவற்றோடும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை உணருகிறோம். இதனால், நோய்கள் தானாகவே குணமாகின்றன. நம்முடைய மன ச்ரீரம், ப்ராண ச்ரீரம், ஸூக்ஷம சூரிரம், ஸ்தூல ச்ரீரம் மற்றும் மற்ற அனைத்து சரீரங்களிலும் இனிமையை உணருகிறோம்.
நாம் எல்லையில்லா என்பதை அனுபவமாக உணரும்போது, அது ஒரு நம்பவியலாத அருமையான அனுபவமாகவே இருக்கும். இதை கற்பனைசெய்து பார்ப்பது கடினம்.
தீயான முகாமின் இறுதியில், தங்களது பெயர், அடையாளம் சமூக அந்தஸ்து, கல்வித்தகுதி, பணம், மதம் மற்றும் எதையெல்லாம் தங்களுடைய அடையாளங்கள் என்றும் அத்தனையையும் மறந்து, அவ்வளவு ஆனந்தத்துடன் இருப்பார்கள்.
மாமனார், தம்முடைய மருமகளின் காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்திருக்கிறேன்! பாரதத்தில் இது ஒருபோதும் நடக்காத காரியம். ஆனால் நமது தீயான முகாமில் இறுதியில் இது நடந்தது. ஏனென்றால் அவர் அந்தப் பெண்ணிற்குள் இறைவனைப் பார்க்கிறார்.
மாமியார், தம்முடைய மருமகனுக்குள் இறைவனைப் பார்ப்பதால், அவருடைய கால்களில் விழுந்து வணங்குகிறார். தாத்தா பாட்டிகள், தங்களுடைய பேரன் பேத்திகளின் காலில் விழுகிறார்கள். முதலாளிகள், தங்களுடைய செய்பவர்களின் காலிலும் விழுகிறார்கள்.
ஒன்றிணையும் உணர்வை அரைபவிக்கும்பொழுது, கூட்டு விழிப்புணர்வை அனுபவிக்கும்பொழுது, கூட்டு விழிப்புணர்வின் ஆனந்தத்தை உணரும்பொழுது, நம்முடைய அடையாளம் என்று பிடித்துக்கொண்டு மற்றவரிடம் இருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்கத் தூண்டும் நம்முடைய பெயர், புகழ், பணம், சமூக அந்தஸ்து, கௌரவம் என்ற அனைத்தையும் மறந்துவிடுவோம்.
நாம் எல்லையில்லா விழிப்புணர்வு என்பதை அனுபவமாக உணரும்போது, அது ஒரு நம்பவியலாத அருமையான அனுபவமாகவே இருக்கும்.
'நாம் யார்' என்ற ஸத்யம் புலப்படும்.
தம்முடைய மோசமான எதிரியின் கால்களைத் தொடுவதாலும், தம்முடைய வயதைவிட வயக் குறைந்த வயதுடையவரின் கால்களைத் தொடுவதாலும், பொருளாதார நிலையில் தங்களைவிட குறைந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதாலும், மக்கள், தங்களது அடையாளங்களை மறந்துவிடுவதைப் பார்த்திருக்கின்றேன்.
அவர்கள் ஆன்மிகத்தில் முன்னேறுகிறார்கள்.
அவர்களின் அஹங்காரம் கரைந்ததனால், ஆழமான விழிப்புணர்வையும் ஆனந்தத்தையும் உணருகிறார்கள். அனைவரிடத்திலும் கடவுளைப் பார்க்கிறார்கள். அவர்கள், ஆனந்தத்திலும் உற்சாகத்திலும் கூட்டு விழிப்புணர்விலும் இருக்கிறார்கள்.
இதை அவர்கள் பார்ப்பதில்லை. ஏற்படும்போது, அங்கே இருக்கும் தாங்கள் அனைவருமே ஒருங்கிணைந்தவர்கள்தான் அல்ல, என்பதைப் புரிந்துகொள்கின்றனர். கூட்டு விழிப்புணர்வை நாம் உணரும்போதுதான், ஆனந்தம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ற வார்க்கைகளின் உண்மையான அர்த்தம் தெரியும்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''எல்லோருடைய இதயங்களிலும் நான் வீற்றிருக்கிறேன்.''
அவர் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் வீற்றிருக்கிறார்.
பிரபஞ்ச இருப்பு மற்றும் தனிமனித இருப்புக்கும் இடையேயான வேறுபாடு, அழியக்கூடியது மற்றும் அழியாததற்கும் இடையேயான வேறுபாடு - என்பதெல்லாம் மாயையில் சிக்கியவர்களுக்கும், குழப்பத்தில் இருப்பவர்களுக்கும்தான் என்று கிருஷ்ணர் சொல்கிறார். கூட்டு விழிப்புணர்வை உணரும்போது, இந்த வித்தியாசங்கள் ஏதுமில்லை. நாம் அனைவருமே கூட்டு விழிப்புணர்விற்குள் கரைகிறோம்.
கடலில் ஏற்படும் அலை, தாம் தனியானது என்றே நினைக்கிறது. கடலிலிருந்துதான் நாம் உருவானோம், கடலிலேயே கலப்போம் என்பதை அது உணர்வதில்லை. மேலும், தான் சமுத்திரம்தான் என்பதை அலை நம்புவதில்லை. எப்படி அலையானது கடலின் ஒரு பகுதியோ, அதுபோலவே நாமும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாவோம்.
புருஷோத்தமனை அடைவது நமக்கு எப்படிச் சாத்தியமாகும், நாம் அவரின் ஒரு பகுதியாக இருக்கும்பட்சத்தில்! 'நாம் அவரின் ஒரு பகுதி' என்ற விழிப்புணர்வை வேண்டுமானால் அடையலாம்.
இதுதான் கிருஷ்ணரின் அறிவாழம்மிக்க உபதேசம். இந்தப் பகுதியில், கிருஷ்ணர் ஒரு மேலான குரூவாகவே மாறிவிடுகிறார். அர்ஜுனன், ஆழ்ந்த அமைதியில் நிலைத்திருக்கிறார். இதுவே, குருவை உள்வாங்குவதற்கான சிறந்த வழி!