நாம் புதிதாக ஏதோவொன்றாக மாறவேண்டியதில்லை ...
குருவை நாம் முதன்முறை சந்திக்கும்போதே, நாம் நம்மை என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுவல்ல நாம் என்பதை உணர்த்துகிறார்.
அவர் சொல்கிறார், 'நாம் ஆன்மிக அனுபவத்தைப் பெறவந்த மனித உயிர்கள் அல்ல, மனித அனுபவத்தைத் தாங்கிநிற்கிற ஆன்மிக உயிர்கள்'. நாம் இதை நம்ப மறுப்பது மட்டுமல்லாமல், சிறிது அசௌகரியமாகவும் உணருகிறோம். அவர், தம்முடைய கருத்துக்களைச் சொல்லி, நம்மை மாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறோம். நாம் பயந்துபோய், தப்பித்து ஓடப் பார்க்கிறோம்.
நாம், நம்முடைய செம்மறி ஆட்டு மந்தை வாழ்க்கையையே விரும்புகிறோம் அதிலேயே சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம். வழக்கமான விஷயங்களான வீடு, மனைவி, குழந்தைகள் வேலை மற்றும் சந்தோஷம் போன்றவற்றில் நின்றுவிடுகிறோம்.
குருவின் நேரடி தொடுதலும் அவரது மௌனமும் ஒரு மனிதர் விழிப்படைவதற்கு ஏற்ற தளத்தை உருவாக்குகிறது.
சிறிது காலத்திற்குப் பிறகு, குரு, அதே கருத்துக்களை மீண்டும் சொல்லும்பொழுது, நாம் அந்தக் கருத்துக்களைப் புறக்கணிப்பதில்லை. அதேசமயம், நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுமில்லை.
இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, குருவின் சக்தியானது நம்மை ஈர்க்கிறது. அவர் சொன்ன கருத்துகளை நினைக்கத் தொடங்குவோம். குரு நம் இருப்பின் ஒரு பாகமாவார். ஆனாலும் அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் குருவிடம் கண்ணாமூச்சி விளையாடுகிறோம்.
ஒரு தருணத்தில், நாம் அவரை உணர்வு பூர்வமாக நம்பும்பொழுது, நாமும் அவரைப் போன்றவர்தான் என்பதை உணர்த்துகிறார். நாமும் இறுதி இருக்கவும் காட்டுகிறார். ஆனாலும், மறுபடியும் நாம் பயந்து ஒளிந்துகொள்கிறோம்.
அப்போது உணருவதற்காக, குருவும் ஆட்டைப்போல நடிக்கிறார். நம்மைப் போன்றவரே' என்ற உணர்வு வரும்படியாகச் செய்கிறார்.
நமக்குள் எந்த ஒரு ஆன்மிக அனுபவமும் மேலும் ஏற்படாத நிலையே, உண்மையான ஆன்மிக அனுபவம்.
நாம் அவரை முழுமையாக நம்பியவுடன், அவருடன் சௌகரியமான உணர்வுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும்போது, 'நாம் ஆடு கிடையாது. சிங்கம்' என்ற உணர்வைப்பெற நம்மை வலியுறுத்துகிறார். இதைத்தான் தீக்ஷ அல்லது முதல் அனுபவம் என்கிறோம்.
நாம் மீண்டும் மறுக்கிறோம்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, குருவானவர், நம்முடைய இயல்பான நிலையை உணரச்செய்து, இறுதி சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அதற்குப்பிறகே, 'நாம் எப்போதுமே சிங்கம்தான்' என்பதை நாம் உணருகிறோம்.
நாம் புதிதாக ஏதோவொன்றாக மாறவேண்டியதில்லை, நாம் விழித்தெழுந்து, ஏற்கெனவே அதுவாகத்தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தால்போதும். குருவானவர், முழு மலர்ச்சிக்கு முந்தைய எந்த ஒரு நிலையிலும், நம்மைத் தேங்கவிடுவதில்லை.
நாம் முழுமையாக மலரும்வரை, அவர் நம்மை எங்கும் சோர்வடைந்து நிற்கவிடுவதில்லை.
நாம்தான் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வு, நாம்தான் இறுதி ஸத்யம், நாம்தான் பிரபஞ்ச சக்தி என்பதை நாம் உணரும்வரை, குரு, மீண்டும் மீண்டும் நம்மை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.