KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/ணத்யத்தின் புரிதலே, அற்புதத்தின் ஆரம்பம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

ணத்யத்தின் புரிதலே, அற்புதத்தின் ஆரம்பம்

நம்மில் யாருமே லத்யத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால், மனிதனால் நிறைய ஸதீயங்களைக் கையாள முடிவதில்லை. அவனால் ஓரளவு லத்யங்களையே சமாளிக்க முடிகிறது.

இன்னொருபுறம், ஆரம்பிக்கிறது. அப்போது, தான் நிற்கிற பூமி நமுவிச்சென்று கொண்டிருப்பதை உணர்கிறான். அது அவனுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது.

ஸ்தீயத்தை நேர்மையாகக் கொடுத்தால், ஒருசிலரே கேட்கத் தயாராக இருக்கிறார்கள். மக்கள், உண்மையான ஸ்தீயத்தைக் கொடுத்த வினாடியில் பயந்துவிடுகிறார்கள். அதீயும், மக்களைப் பயமுறுத்துகிறது. அதனால், அவர்கள்

ஒரு மேற்கத்திய வேதாந்தி மிக அழகாக எழுதினார், "தயவுசெய்து பொய்களைக் ககளைந்துவிடாதீர்கள்; மனிதன் அதன் முமேலேயே வாழட்டும், அதனுடனேயே வாழட்டும்.''

ஒருவரின்பொய்களை அகற்றிவிடுவது என்பதுதாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்தப் பொய்களை அடிப்படையாகக்கொண்டே, ஒருவர் வாழ்கிறார். பொய்களை அடிப்படையாகக்கொண்டுதான் நாம் வாழ்ந்துகொண்டும் மடிந்துகொண்டும் இருக்கிறோம். பொய்கள், நமக்கு ஆறுதலளிக்கிறது. ஸத்யங்கள், நம்மை பயமுறுத்துகின்றன.

நாம் ஏன் அலங்கரித்துக்கொள்கிறோம், தலைமுடிக்குச் சாயம் பூசிக் கொள்கிறோம். மேலும் உடையலங்காரம் செய்துகொள்கிறோம் ?

நாம் ஸ்தீயத்தைப் பார்க்க விரும்புவதில்லை. நமக்கு வயதாகிறது என்ற முதுமையடைகிறோம் என்ற உண்மையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை; நாம் போலியாக நடிக்கிறோம், பொய் சொல்கிறோம்.

நாம், நமக்குள்ளேயே மறைத்து தெரிந்தபிறகும், விதவிதமான அலங்காரங்களை செய்துகொள்கிறோம் ? நாம், எதுவாகக் அது அல்ல நாம்' என்பது நமக்கே நன்றாகத் தெரியும். நாம் எண்ணற்ற ஸ்தீயத்தை வழிகளில் ஏன் இத்தனை சமுதாய நன்னடத்தைப் ஒருசிலரே பண்புகளை வைத்திருக்கிறோம் ?

சமுதாய மரியாதைக்காக நாம் நிறைய சம்பிரதாயங்களைச் செய்கிறோம். நமக்கு, நம்

ரோமையாகக் கொடுத்தால் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்.

'நன்றி' போன்ற வார்த்தைகள் கற்றுத்தரப்படுகின்றன. நாம் அவற்றை மனதாரச் சொல்ல நினைக்கின்றோமா இல்லையோ, உண்மையில் அந்தச் குழ்நிலைக்கு அவசியமா இல்லையா என்பதைப் பற்றிக்கூட பொருட்படுத்தாமல், சமூதாய தன்னடத்தைக் க் கோட்பாடுகள் சொல்கின்றன என்பதற்காக அவற்றைச் சொல்கிறோம்.

ஒருவரைப் பார்க்கும்பொழுது, உண்மையில் நாம் அதை நல்லவிதமாக உணராவிட்டாலும்கூட, 'உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று சொல்கிறோம்.

ஸ்த்யத்தின் ஒரு குறிப்பிட்ட முக்கியமான கருத்தை உங்கள் வாழ்வில் கடைபிடிக்க ஆரம்பியுங்கள், அந்த வினாடியோ அது பல அற்புதங்களை நிகழ்த்தத் தொடங்கிவிடும்.

சில நேரங்களில், நான்கூட இந்த விளையாட்டை விளையாட வேண்டியதாகிவிடும். மக்கள் என்னை முதன் முறையாகப் அவர்களுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியாதபோது, அவர்கள் என்னிடம் எந்த வார்த்தையில் பெசினாலும்சரி, நான் அவர்களிடம் சமுதாய ரீதியான மரியாதையுடன் இருப்பதுதான் எனக்கு மிகவும் இல்லாவிட்டால் அவர்கள் மனதளவில் காயப்படுவார்கள். அவர்கள், உண்மையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதில்லை.

அதனால் நான், அவர்கள் மனத்திற்கு இனிமையானதையே வழங்கிவிடுவேன்.

அவர்கள் இன்னும் தயாராகாதபொழுது, நாம் ஏன் அவர்களது சமுதாய ரீதியான சௌகரியமான சூழ்நிலையைத் தொந்தரவு செய்ய வேண்டும் ?

நாம் உண்மையாகவே 'இனிமையாக' உணர்ந்திருந்தால், நம் முழு உடலும், நம் இருப்புமே அந்த இனிமையை வெளிப்படுத்திவிடும்.

நாம் ஒருவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்பதை அவருக்குப் புரியவைப்பதற்கு, 'உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று அவரிடம் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமா என்ன ? நம்முடைய மொத்த உடலும், நம் புன்னகையும் வெளிப்படுத்தும் சந்தோஷமே அதற்குச் சான்றாக இருக்கும். நாம் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

தங்கள் உணர்ச்சிகளைத்தங்களுக்குள் மறைத்துக்கொண்டு, எந்தளவிற்குக் குறைத்து வெளிக்காட்டுகிறார்களோ, அந்தளவிற்குத்தான் ஒரு நாடோ அல்லது மக்களோ நாகரிகத்தில் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள். ஒரு நாடோ அல்லது மக்களோ தங்களை எந்தளவிற்கு நாகரிகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்களோ, அந்தளவிற்குக் குறைவான அளவே அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள்.

யாராவது புன்னகைசெய்தால், நாம் வெறும் உதட்டளவில் புன்னகைக்கிறோம். இது வெறும் செயற்கையான புன்னகை, இந்தப் புன்னகை கண்களைத் தொடுவதேயில்லை. நம் கண்கள் ஒருபோதும் சிரிப்பதில்லை, இதயமும் சிரிப்பதில்லை.

நம் சிரிப்பு, உதட்டில் தொடங்கி உதட்டளவிலேயே தெரிந்துகொள்ளுங்கள். நன்றாகத் உண்மையான சிரிப்பு வயிற்றிலிருந்து வரும். ஆனால் ஒருவர் வயிற்றிலிருந்து உணர்வு சிரித்தாரென்றால், மக்கள், அவர் ஏதோ தவறுசெய்துவிட்டு, சிரிப்பதாக வெறித்துப் பார்ப்பார்கள். ஸ்த்யத்தைப் போலவே சிரிப்பும் மக்களைக் கலவரப்படுத்துகிறது.

நமக்கு நன்றாகத் தெரியும், ஸதீயம் என்பது

வேறு ஏதோ ஒன்று. ஸ்தீயத்தை எதிர்கொள்ள நமக்குத் தைரியம் இல்லை. வார்த்தைகளிலும் சரி, உடல் மொழியிலும் சரி, நம்மால் அவ்வளவு ஸ்தீயமாக இருக்க முடியாது என்று நினைக்கிறோம்.

ஸ்தீயம் நேரடியாக நமக்கு ஜீவன்முக்தியை அளிக்கிறது. நம்முள் ஒரு உருமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஸ்த்யத்தின் ஒரு குறிப்பிட்ட முக்கியமான கருத்தையோ, ஸ்தீயத்தின் ஒரு சிறிய பரிமாணத்தையோ, எங்கேனும் ஒருவர் நேர்மையான முறையில் உணர்ந்துகொண்டாலோ, பிடித்துக்கொண்டாலோ, அந்த வினாடியே அது பல அற்புதங்களை நிகழ்த்தத் தொடங்கிவிடும்.

கண்கள், ஆன்மாவின் வாசல்

விவேகானந்தா் மிக அழகாகச் சொல்கிறார், 'நீங்கள் உலகிலுள்ள எல்லா நூலகங்களிலுமுள்ள மொத்தப் புத்தகங்களை மனப்பாடம் செய்தாலுமே, அது உங்களுக்கு வித்யா அஹங்காரத்தை மட்டுமே வளர்க்க உதவும்; வேறு எதற்கும் உதவாது. ஏதாவதொரு கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள் . உங்கள் இருப்புநிலைவரை எடுத்துச்சென்று கிரகித்துக்கொள்ளுங்கள், அதை அனுபவமாக்குங்கள். அந்த ஒரே ஒரு கருத்து, உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.

அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'பெரிய புராண'த்தை நாம் படித்தோமென்றால், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பார்க்கலாம். அந்த ஞானிகள், போற்றத்தக்க வகையில் பெரிதாக ஏதும் செய்திருக்க மாட்டார்கள், அதில் சில நாயன்மார்கள், மலர்களைப் பறித்துக் கடவுளுக்குப் படைத்தார்கள். அவ்வளவுதான். இருந்தாலும், அவர்கள் ஞானமடைந்தார்கள்.

நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. நாம் செய்யும் செயலில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பதே முக்கியம். கடவுளுக்கு மலர்களைச் சமாப்பிக்கும்போது, அந்தச் செயலில் நாயன்மார்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தார்கள்.

நாம்கூட கடவுளை மகிழ்விப்பதற்காக, தினமும் மலர்களைப் படைக்கிறோம். இன்னும் பலவற்றையும் செய்கிறோம். ஆனாலும் நாம் இன்னமும் குானமடையவில்லை. தோட்டத்தைப் பராமரிப்பதற்கான அல்லது மலர்களை வாங்குவதற்கான செலவுதான் அதிகரித்திருக்கும் ! நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. நாம் செய்யும் செயலில் நாயன்மார்கள் கடவுளுக்கு மலர்களைப் படைப்பதற்காக மலாகளைக் கொய்யும்போதும், அவற்றை மாலையாகத் தொடுக்கும்போதும், தங்கள் இஷ்ட தெய்வத்தை மட்டுமே நினைத்தார்கள். அவர்கள் முழுமையாகக் கடவுளை மூழ்கியிருந்தார்கள். அவர்கள் சிறிதளவும் சிதறிப் போகவில்லை.

நாம், நம் இஷ்ட தெய்வத்திற்குப் படைப்பதற்காக மலர்களைக் கொய்யும்போதும்கூட, எதையோ பற்றிச் சிந்திக்கிறோம். தினமும் தவறாது பிரார்த்தனை செய்யும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் கவனம் மீதோ அல்லது வேறு ஏதோ ஒன்றின் மீதோ இருக்கும்.

நாம் இதய பூர்வமான ஈடுபாட்டுடனிருந்தால், கடினமான வேலைகூட, ஒரு இனிமையான வழிபாடாக மாறிவிடுகிறது.

விஷ்ணு ஸ்ஹஸ்ரநாமம், லலிதா ஸல்ஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களைத் தினமும் படிக்கும் மக்களை நாம் கவனித்ததுண்டு.

முழுமையாகச் செய்தால் ஒருமணிநேரத்திற்கு மேல் ஆகக்கூடிய அந்த ஸ்லோகங்களை, உணவேதும் உண்ணாமல் விரதமிருந்து சொல்வதாகப் பெருமிதப்பட்டுக்கொள்வார்கள். அனால் ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள் எத்தனையாவது ஸ்லோகம் வருகிறோம், இன்னும் எத்தனை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அவர்கள், அந்த ஒருமணிநேரத்திற்குள் சலித்து, களைத்துவிடுகின்றனர்; அதனை ஒரு அவர்களால் தாங்கள் உச்சாடனம் செய்யும் மந்திரங்களிலோ அல்லது பிரார்த்தனையின் தாத்பரியத்திலோ உணர்வுகளை ஒருமுகப்படுத்த முடிவதேயில்லை. அவர்களிடம் நேர்மையில்லை.

நாம் இதய பூர்வமாக வழிபாட்டில் ஈடுபடாதபொழுது அது ஒரு சாதாரணமான தினசரி வேலையாக ஆகிறது. ஆனால், நாம் இதய பூர்வமான ஈடுபாட்டுடனிருந்தால், கடினமான வேலைகூட, ஒரு இனிமையான வழிபாடாக மாறிவிடுகிறது.

ஞானிகள், பிரார்த்தனையையோ, பயத்தினாலோ அல்லது பேராசையினாலோ செய்யவில்லை; செய்ய விரும்பினார்கள். அன்பினாலும், இயற்கையோடு இருந்த இணக்கத்தினாலும், இதயத்தின் இருப்பு இதைச் செய்தார்கள். அவர்களுக்கு இதைச் செய்ய வேண்டுமென்ற உந்துதல் இருந்தது.

நாம் நம் படுக்கையிலிருந்து எழுந்த வினாடியிலிருந்து, அந்த நாள் முடியும்வரை நன்றாக ஆராய்ந்து பார்த்தோமானால், அந்த முழு நாளுமே பொய்களால் நிறைந்திருக்கும்.

திறந்த மனத்துடன் இருங்கள். எது எல்லாம் வெளியே வருகிறதோ, அதுவே உங்கள் அனுபவம்.

முதலில், நம்முடைய புன்னகையே பொய்யானது. நாம் புன்னகை செய்யும்பொழுது, நம் மனத்தில் என்ன இருக்கிறது என்று அடுத்தவர் புரிந்துகொள்ளக்கூடாது என்று நினைக்கிறோம்; அதனால் நாம் மற்றவரின் கண்களை நேருக்குதேர் பார்ப்பதில்லை. ஏன் ? அவர் நம் மனத்தைப் படித்துவிடுவாரோ என்று பயப்படுகிறோம். நம் இதயம் கொதித்துக் கொண்டிருந்தாலும்கூட, நம்மால் ஒரு பெரிய புன்னகையை உதடுகளில் காட்ட முடியும். எது எப்படியானாலும், நம் கண்களால் எதையும் மறைக்க முடியாது.

நம் கண்களால் எதையுமே மறைக்க முடியாது. கண்கள், நம் ஆன்மாவிற்குள் செல்வதற்கான நுழைவாயில். எதிரில் இருக்கும் நபரின் ஆன்மாவை, நாம் நேரடியாக அவர் கண்களில் பார்க்கிறோம்.

நாம் பல நேரங்களில், அடுத்தவரின் கண்களுக்குள் பார்ப்பதேயில்லை. ஏனென்றால், நாம் பேசுவதையும் செய்யும் செயல்களையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாம் என்று நினைக்கிறோம்.

குறிப்பு - அனுபவமாகாத ஸத்யம்

மாபெரும் தத்துவ மேதையும் பேராசிரியருமான ஒருவா், என்னுடைய சில சத்சங்கங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் என்னைக் கேட்டார், "சுவாமிஜி, நான் ஒரே பாடத்தை பல வருடங்களாகக் கற்றுக்கொடுக்கிற போதிலும், ஒரு பதினைந்து நிமிட வகுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும்கூட, குறைந்தது ஒருமணிநேரமாவது, நான் என்ன பேச வேண்டும் என்பதற்கான குறிப்பு தயார்செய்ய வேண்டியுள்ளது.

ஆனால் நான் கவனித்தவரை, நீங்கள் எதையுமே தயார்செய்யாமல் தினமும் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள். மேலும் ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களைப் பேசுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றிக்கொண்டேயிருப்பதால், உங்களுக்குக் குறிப்பெடுப்பதற்கான நேரமில்லை என்பதையும் நான் பார்க்கிறேன். ஆனாலும் எப்படி உங்களால் தொடர்ந்து பல மணி நேரங்கள் பேசமுடிகிறது ?''

அதற்கான பதில் இதுதான் : "நீங்கள் வெளிப்படுத்துவது, உங்கள் உண்மையான அனுபவமாகியிருந்தால், தயார்செய்ய வேண்டிய அவசியமே இல்லை. "

திறந்த மனத்துடன் இருங்கள். எது எல்லாம் வெளியே வருகிறதோ, அதுவே உங்கள் அனுபவம். உதாரணமாக, நம் பெயரை யாராவது கேட்டால், நாம் தயார்செய்கிறோமா? அதற்கு ஏதும் குறிப்புகள் தேவையா? நிச்சயமாக இல்லை! ஏனென்றால், அது நம் அனுபவம். நமக்கு அனுபவமாகாத ஒன்றிற்கு விளக்கம் தருவதற்குத்தான், நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் சொற்பொழிவாற்றுவதற்குத் தயார்செய்ய வேண்டியுள்ளதென்றால், அல்லது நாம் மேடையேறிப் பேச பயமாயிருக்கிறதென்றால், இதன் பொருள் நாம் பொய்களால் நிறைந்துள்ளோம். நம் மூழு இருப்புமே பொய்; நம் வாழ்வே ஒரு பொய்.

மேடையில் ஏன் நினைப்பதையெல்லாம் அப்படியே பேசி விடுவார்களோ என்று பயம். மனத்தினுள் ஓடிக்கொண்டிருப்தையெல்லாம் வெளியே கொட்டிவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

உள்ளே நிறைய அழுக்கு இருக்கிறது என்று நமக்கே தெரியும். அந்தக் குப்பைகளுள் சிலவற்றைத் தவறிக் கொட்டிவிடுமோ என்று பயப்படுகிறோம். அதனால்தான் நாம் என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் என்று ஆயத்தம் செய்கிறோம்.

நம்மைத் தயார்செய்து கொள்ளுதல் என்பது நம் உள் மனப் பேச்சை மறைப்பதற்கான முயற்சியே! நாம் சம்பந்தமில்லாத ஒன்றைப் பேசவில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; நாம் ஒவ்வொரு கருத்தாக எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவற்றை மறந்துவிட்டால், மனத்தில் உள்ளதை உள்ளபடியாகவே வெளியே சொல்லிவிடுவோமோ என்று பயப்படுகிறோம்.

வேறு எதையாவது வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே, நாம் நம்மைத் தயார்செய்து கொள்கிறோம். நம்மைத் தயார்செய்து கொள்ளுகல் என்பது நம் உள் மனப் பேச்சை மறைப்பதற்கான முயற்சிகான்.

பேச்சைத் தயார்செய்துகொள்ள வேண்டும் என்றால் அவர் சொல்வது எல்லாமே பொய்தான். அவர் வெறுமனே அதை மனப்பாடம் செய்து அனுபவமாக மாறவில்லை. அது, அவர் இருப்பின் அங்கமாக மாறவில்லை.

''உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, உங்கள் அருகாமையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,' என்பது போன்ற இத்தனைக் கனிவான வார்த்தைகளை நாம் ஏன் தயார்செய்து கொள்கிறோம்.

பிறகு சிறிது நேரம் கழித்து, ''எனக்கு முக்கியமான சில வேலைகள் இருப்பதால், இப்போது நான் போயாக வேண்டியுள்ளது; இன்னொரு நாள் சந்திக்கிறேன்,'' என்று சொல்கிறோம். ஏன் இது போன்றவற்றைச் சொல்ல வேண்டும் ? உண்மையிலேயே நாம் அவர் அருகாமையை அருமையாக உணர்ந்தோமென்றால், நம்முடைய முழு இருப்புமே, அதை வெளிப்படுத்தும். நம் உடலே, அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிடும். நாம் அதை, வார்த்தைகளில் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது.

ஒரு சின்ன கதை:

ஒரு ஆசிரியை, தங்கள் பள்ளியைச் சுற்றிக் காண்பிப்பதற்காக ஒரு விருந்தினரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அந்த வழியாகச் சென்ற மாணவர்கள் அந்த ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்தார்கள்.

அந்த ஆசிரியை, மெதுவாகத் தலையசைத்து, மெதுவான குரலில், 'உங்களுக்கும் அதே' (Same to you) என்று முணுமுணுத்தார்.

விருந்தினர் கேட்டார், ''நீங்கள் ஒருமுறைகூட அவர்களைத் திரும்ப வாழ்த்தவில்லையே, 'உங்களுக்கும் அதே' என்று சொல்கிறீர்களே, ஏன் ?''

அந்த ஆசிரியை சொன்னார், ''நான் திரும்ப வாழ்த்தியிருக்கிறேன். அவர்கள் மனத்தில் உண்மையாக என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும்.''

அதனால், யாருக்கு உங்கள் ஒளிந்திருக்கும் எண்ணங்களைப் பற்றி விழிப்புடனிருங்கள். அவர்கள் 'Same to you' என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள். சிறிது எச்சரிக்கையுடனி(ருங்கள் !

நாம் உண்மையில் நிலைபெற்றிருந்தால், நம் உள்மனப் பேச்சு மறைந்துவிடும், நாம் யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை

பல நேரங்களில், நாம் எப்பொழுது, எதைப் பேச வேண்டும் என்பதைத் தயார்செய்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது.

ஆனால் நாம் உண்மையில் நிலைபெற்றிருந்தால், நம் உள்மனப் பேச்சு மறைந்துவிடும், நம் சிந்தனை மறைந்துவிடும், நாம் யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை, பேசிவிட்டு அமைதியாக வேண்டியதுதான். நாம் ஏன் தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும் ?

ஒரு மேடைப்பேச்சிற்கோ அல்லது சொற்பொழிவிற்கோ மட்டுமல்ல, நண்பர்களைப் பார்க்கும்போதும் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் போதும்கூட, நாம் திட்டமிடுகிரோம், வார்த்தைகளை ஒத்திகை பார்க்கிறோம்.

'எப்படி ஆரம்பிக்க வேண்டும், எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும், மேலும் விஷயத்தை எப்படித் தொடரவேண்டும்' என்பதுபோன்ற பல விஷயங்களை ஒத்திகை பார்க்கிரோம். நாம், முழுமையாக ஒருமுறை இறுதி ஒத்திகை பார்த்துவிடுகிறோம்.

ஒருவேளை, வேறு ஆரம்பித்து விட்டால், அவ்வளவுதான், நாம் தொலைந்தோம்; அடுத்து என்ன சொல்வதென்றே நமக்குத் தெரியாது. ஏனென்றால், நமக்கு எது தெரியுமோ, நாம் எதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தோமோ, அதை மட்டுமே முழுமையாக ஒத்திகை பார்த்திருப்போம்.

நம் மேலதிகாரியிடம் பேசுவதற்கு, நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும், அது சரியானதே! அவரிடம் பேசும்பொமுது நாம் கனிவுடன் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் வேலையை இழந்துவிடுவோம். மேலும் சமூதாய விளையாட்டில், அதுவும் ஒரு பகுதியாகிவிட்டதென்பதால், அதை ஏற்றுக்கொள்வோம்!

ஆனால், நிலைமை அதைவிட மிக மோசமாக உள்ளது. நாம் தொடர்ந்து, நம் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உரையாட வேண்டியவற்றைக்கூட தயார்செய்கிறோம்.

நாம் தயார்செய்ய வேண்டியிருக்கிறது என்றாலே, அது பொய்தான்.

நாம் அதை, உண்மை என்பது போன்றே சொன்னாலும்கூட, அது பொய்தான்.

உண்மை வேறு.

நாம் உண்மைகளைப் பல உள் அர்த்தங்களுடன் சொல்ல முடியும். அதில் பெரும்பாலானவை பொய்களாகத்தான் இருக்கும். ஒரு பொய்யை சிறு ஒப்பனைசெய்து, அலங்கரித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியும்.

மஹாபாரதத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் யுத்தம் மூண்டபோது, யுத்தத்தின் ஒரு கட்டத்தில், துரோணர் கௌரவா்களின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

யுத்தப் பாதையிலிருந்து துரோணாச்சாரியரை அகற்றாமல், அவர் தலைமை தாங்கும் கௌரவப் படையை வீழ்த்த இயலாது என்பதையும், துரோணாச்சாரியாரின் மன அமைதியைக் குலைக்காமல், அவரைக் கொல்ல முடியாது என்பதையும், துரோணாச்சாரியரை நிலைதடுமாறச் செய்ய ஒரேவழி, 'அவரது மகன் இறந்துவிட்டார்' என்ற செய்தியை அவருக்கு எட்டச்செய்வதுதான் என்பதையும் கிருஷ்ணர் நன்கறிவார்.

துரோணாச்சாரியரைக் கொன்றால் மட்டுமே, கௌரவப் படையை வெல்ல முடியும். துரோணாச்சாரியரைக் வெல்லுமென்றால், அவரது மகன் அசுவத்தாமன் இறக்க வேண்டும் அல்லது அசுவத்தாமன் இறந்துவிட்டார்' என்ற செய்தி அவருக்கு எட்ட வேண்டும். ஏனென்றால் துரோணரின் முழு சக்தியும் அவரது மகன் அசுவத்தாமனை நோக்கியே இருந்தது. துரோணச்சாரியாருக்கு, தம் மகனைத் தவிர வேறு யாருடனும் பந்தமில்லை. கிருஷ்ணருக்கு, துரோணரிடம் சென்று அசுவத்தாமன் இறந்துவிட்டார் என்று சொல்ல ஒருவர் தேவைப்பட்டார்.

யாரோ ஒருவர் சென்று, 'உங்கள் மகன் கொல்லப்பட்டான்' என்று சொன்னால் நிச்சயம் துரோணர் நம்பமாட்டார். ஏனென்றால், அசுவத்தாமனை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது. ஆகவே, அசுவத்தாமனின் மரணத்தை அறிவிக்க, பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரைக் கிருஷ்ணர் தேர்ந்தெடுத்தார். யுதிஷ்டிரர் சத்தியங்களை மட்டுமே பேசுவார். அதனால் எல்லோரும் அவரை சத்தியவான் என்று நம்பினார்கள்.

துரோணாச்சாரியாரின் மகன் 'அசுவத்தாமன் இறந்து விட்டான்' என்று சொல்லுமாறு யுதிஷ்டிரரைக் கிருஷ்ணர் கேட்டுக்கொண்டார். யுதிஷ்டிரர், தம்மால் பொய்சொல்ல முடியாது என்றும், அசுவத்தாமன் உயிருடனிருக்கையில், தாம் எப்படி அவர் இறந்துவிட்டதாகச் சொல்ல முடியும் என்றும் வினவினார்.

கிருஷ்ணர் சொன்னார், ''சரி பரவாயில்லை. அசுவத்தாமன் என்ற பெயர் கொண்ட இந்த யானையை உன் சகோதரன் பீமன் கொல்வான். அதன்பிறகு, 'இறந்துவிட்டான், அசுவத்தாமன் எனும் யானை' என்று நீ சொல். நீ 'யானை' என்கிற வார்த்தையைச் சொல்லும்பொழுது, அந்த வார்த்தை, பிறர் காதில்விழா வண்ணம், நான் என் சங்கை ஒலிக்கச்செய்கிறேன். இது, நீ பொய் சொன்னதாக ஆகாது; 'பொய் பேசாத தர்மவான்' என்ற உன் பெயரையும் காப்பாற்றும் ; அதேசமயம் எந்த வேலையை முடிக்க வேண்டுமோ அந்த வேலையையும் செய்துமுடித்துவிடும், '' என்று சொன்னார்.

நாம் சத்தியத்தைத்தான் பேசப் போகிறோம் என்று யுதிஷ்டிரரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவர், ''இறந்துவிட்டான், அசுவத்தாமன் எனும் யானை," என்று அறிவித்தார். யானை என்ற வார்த்தையைச் சொல்லும்போது, கிருஷ்ணர், தம் சங்கை முழக்கி, யாருக்கும் அந்த வார்த்தை கேட்காமல் பார்த்துக்கொண்டார்.

துரோணர், யுதிஷ்டிரரை நம்பினார். அது தவிர, சங்கை முழக்குவது வெற்றியின் அடையாளம். முழக்கியவுடன், அசுவத்தாமன் இறந்ததாக எண்ணி, அவர் ஆழ்ந்த மனச்சோர்வில் வீழ்ந்தார்; சக்தி இழந்தவரானார். தம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, தியானத்தில் ஆழ்ந்தார். சண்டையிலிருந்து விலகிவிட்ட துரோணரை, பாண்டவர்களின் தலைமை சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் கொன்றார்.

மகனின் மரணம் மிகுந்த மனவலியைத் தரக்கூடியது. மகன் இறக்கும்பொழுது, தந்தையினுடைய இருப்பின் ஒரு பகுதியும் இறக்கிறது. துரோணாச்சாரியருக்கும்கூட அதைக் கையாள்வது பெரிய விஷயமாக இருந்தது. இந்தவிதத்தில்தான், துரோணாச்சாரியரை வீழ்த்தி, கௌரவர்களின் வீழ்ச்சிக்குக் கிருஷ்ணர் வழிவகுத்தார்.

இந்தச் சம்பவத்தில், யுதிஷ்டிரா் பொய் சொல்லவில்லை; அவர் உண்மையைத்தான் பேசினார். அனாலும் அவர் அங்கு சத்தியத்தை உரைக்கவில்லை. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. உண்மையெல்லாம் சத்தியமாகிவிடாது.

நேர்மையின் அரசராகக் கருதப்பட்ட தா்மராஜர் பொய் பேசினாலும், அவர் சத்தியத்தைப் பேசவில்லை.

கதையின் அடுத்த பகுதி இவ்வாறாகச் செல்கிறது.

சத்தியத்தைப் பேசும் அவரின் இயல்பினால் தர்மராஜாவின் கால்கள் தொட்டதில்லை என்றும், மேலும், அவருடைய ரதம்கூட தரையைத் தொட்டதில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இங்கு இது நேரடியான ஒரு உண்மை அல்ல.

ஒருவர் பரவசத்தில், போானந்தத்தில் இருக்கும்போது, அவர் இலகுவாக இருப்பதுபோல், பறப்பதுபோல் உணர்கிறார்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். பேரானந்தத்தில் இருக்கும்போது, அவா் இலகுவாக இருப்பதுபோல், பறப்பதுபோல் உணர்கிறார். உண்மையில், தா்மராஜரின் உடல், பூமியில்தான் நடக்கிறது. ஆனால், பூமியின் மேல் பறப்பதுபோல், அவ்வளவு இலகுவாக உணர்ந்தார் தாமராஜர். அது, எல்லைகளே அற்ற ஒரு விழிப்புணர்வு அனுபவம்.

''இறந்துவிட்டான், அசுவத்தாமன் எனும் யானை,' என்ற அவர் சொன்ன வினாடியே, அது ஒரு உண்மையேயானாலும்கூட, அதுவரை பூமியைத் தொடாது நடந்து கொண்டிருந்த அவரது பாதங்கள் பூமியைத் தொட்டன. பூமிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அவரது ரதம், பூமியைத் தொட்டது என்று வியாஸர் எழுதுகிறார்.

அவர் தம் எல்லையற்ற விழிப்புணர்வு நிலையை இழந்து, பூமியைத் தொட்டார். சத்தியம் தொலைந்தது. அவர் நேர்மையை இழந்தார்.

நம் நிஜ வாழ்வில் ஏன் இவ்வளவு பொய்கள் சொல்கிறோம்? ஒரு கணவர், தம் மனைவியிடம், தாம் அவரைக் காதலிப்பதாக ஏன் அடிக்கடி சொல்கிறார். அவர், தம் மனைவியைக் காதலிப்பதாக இருந்தால், அவருடைய உடல் மொழியே அதை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அதை வார்த்தையில் சொல்லும்போது, உண்மையில், தம் மனைவியிடம் தாம் அன்பு செலுத்த வேண்டும் என்பதைத் தமக்குத்தாமே நினைவுபடுத்திக்கொள்கிறார், அவ்வளவுதான்!

நாம் நிறைய வார்த்தைகளைப் பேசினாலே, நாம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறோம் உண்மையைப் பேசவில்லை. மிகையாக அழகு செய்வதின் மூலம், நாம் பொய்களை மறைக்கிறோம்.

சத்தியத்தைப் பேசுவது என்பது ஆபத்தானது. சத்தியங்களைப் பேசினால், ஞானிகள் மத்தியில் இடம் கிடைக்கும். ஆனால் மற்ற மக்கள் மத்தியில் இடம் கிடைக்காது. அது அவ்வளவு மிகவும் அபாயகரமானது.

குருவின் வார்த்தை உபதேசமா ? நுட்பமா ?

சத்யம், தர்க்க ரீதியான கேள்விகளையும் வாதங்களையும் கடந்து நிலைத்து நிற்கக்கூடியது. சத்யம், தர்க்க ரீதியான கேள்விகளையும் வாதங்களையும் நிற்கக்கூடியது. அது தர்க்க ரீதியான அலசல்களையும் தாக்குப்பிடித்து நிலைத்து நிற்கிறது.

ஒரு பொருளை, அது தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்டதுதானா என்று அறிந்துகொள்ள வேண்டுமானால், அதை அமிலத்தில் போட்டு சோதிக்கிறார்கள். அமிலப் பரிசோதனை.

தேவைப்படுகிறது. அதேபோல், லத்யத்தைப் பரிசோதிக்கவும் தா்க்க ஆராய்ச்சி என்னும் அமிலப் பரிசோதனை தேவைப்படுகிறது.

லத்யத்தின் முன் நம் தர்க்கம், எளிதில் வீழ்ந்து தோற்றுவிடும். ஏதோ ஒன்றின் முன் நம் தர்க்கம் வீழ்ந்தால், நீங்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ளலாம், அது ஸ்தீயமே என்று!

எது ஒன்று ஸ்தீயமோ அது தர்க்கத்தை அழித்துவிடும்; இதன் பொருள், நம் தர்க்கம் களைத்துப்போய் தானாகவே விழுந்துவிடும்.

இறுதி வேண்டும். எந்தத் தர்க்க ரீதியான அமிலப் பரிசோதனையில் இட்டாலும், அது அனைத்தையும் தாங்க வேண்டும்.

கேள்விகேட்கும் மன நிலையில் சீடர் இருந்தால், நிரூபித்தாக வேண்டும். கேள்விகேட்கும் சீடரின் பரிசோதனைக்கும், குரு தயாராக இருக்க வேண்டும். அது ஒரு பெருஞ்சுமை

சீடர் சந்தேகத்தில் இருந்தால், குரு ஸ்தீயங்களைத் திறந்து வைப்பார். அங்கு அப்பட்டமான

குருவின் வார்த்தைகள் வெறும் உட்பதேசமா அல்லது உணர்வுமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த நுட்பமா என்பதை சீடரின் மனநிலைதான் தீர்மானிக்கிறது.

சொல்லப்படும். சந்தேகங்கள் இருக்கும் மனத்திற்கு, எந்த ஒரு லகுயத்தையும் கற்பிக்க முடியும், விளக்க முடியும். கேள்விகேட்கும் மனத்திற்கு, எதையுமே விளக்க முடியாது.

அவர் ஸ்தீயங்களை வார்த்தைகளால் மறைக்க மாட்டார்; வார்த்தைகளால் விளையாட மாட்டார்.

குருவின் உணர்வுமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த நுட்பமா என்பதை சீடரின் மனநிலைதான் தீர்மானிக்கிறது. சீடர் முழுமையாக இசைவாகயிருந்தால், அவருக்கு குரூவால் உதவ முடியும். குரூ ஞானமடைந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை!

ஒரு சின்ன கதை

யமுனை நதிக்கரையில் வாழ்ந்து வந்த ஒரு பண்டிதர், கிருஷ்ணரை நியமத்துடன் பூஜைசெய்து, நாள்தோறும் வழிபட்டு வந்தார்.

அவருடைய பூஜைக்கான அபிஷேகப் பால்கொண்டு வரும் பெண்மணி, ஒருநாள் வரவில்லை.

மறுநாள் அந்தப் பெண்மணி வந்தவுடன், "நீ ஏன் நேற்று வரவில்லை ?' என்று பண்டிதர் கேட்டார்.

சீடரின் நம்பிக்கை, எப்படிப்பட்ட குடையையும் மீறி அவரை வெற்றிபெறச் செய்யும்.

அந்தப் பெண்மணியோ, "முதல் நாள் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், என்னால் ஆற்றைக் கடக்க முடியவில்லை,'' என்று பதில் சொன்னார்.

உடனே பண்டிதா் அவரிடம், 'கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்து, ஸம்ஸார ஸாகரம் என்னும் பிறவிப்பெருங்கடலையே பலர் கடந்துள்ளார்கள். உன்னால் ஒரு சிறு ஆற்றைக் கடக்க முடியவில்லையா! அவர் பெயரை உச்சாடனம் செய்துகொண்டே ஆற்றைக் கடந்து வா,'' என்றார்.

ஒரு பண்டிதருக்கே உரிய இலக்கணங்களுடன், தம்முடைய வறண்ட அறிவைப் பெருமையுடன் பேசி, அந்தப் பெண்மணியின் மனத்தில், தம்மைப் பற்றியதொரு உயர்ந்த ஏற்ப டுத்து வ தற்காகவு ம் , அதேசமயம், அவர் வராமல் இருந்ததைக் டிப்பதற்காகவுமே சொன்னார்.

அன்றிலிருந்து அந்தப் பெண்மணி சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். சில நாள்கள் கழித்து, பலத்த மழையின் காரணமாக ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் அந்தப் பெண்மணி சரியான நேரத்திற்கு வந்து பண்டிதரை ஆச்சரியத்திற்குள்ளாக்கினார். அவர் அந்தப் பெண்ணிடம், ''உன்னால் எப்படி ஆற்றைக் கடக்க முடிந்தது ?'' என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்மணி, 'தங்களின் வழிகாட்டுதலின்படிதான், குருவே! தாங்கள் சொன்னபடி, கிருஷ்ணரின் நாமத்தை உச்சாடனம் செய்தபடி, நீரின் மேல் நடந்து வந்தேன்!''என்றார்.

பண்டிதரால் இதை நம்ப முடியவில்லை. அவர், அந்தப் பெண்மணி அதை நிரூபிக்க வேண்டும் என்றார். அந்தப் பெண்மணியும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவர்கள் இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி, கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்துகொண்டே தண்ணீரின் மேல் நடந்து சென்றார். அவர் மிகவும் எளிதாக ஆற்றைக் கடந்து விட்டார்.

அங்கு நடந்த நிகழ்வைப் பண்டிதரால் நம்ப முடியவில்லை. 'அறியாமையிலிருக்கும் ஒரு பெண், நான் சொல்லிக்கொடுத்ததைக் கேட்டு, தண்ணீரின் மேல் நடக்கமுடிகிறது. ஒரு மாபெரும் பண்டிதரான நான் ஏன் நடக்க முடியாது ?' என்று அவர் நினைத்தார்.

அவர் கிருஷ்ணரின் நாமத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். இருந்தாலும் தண்ணீரை நனையாமல் இருக்க தற்காக, அதைத் தூக்கிப்பிடித்தபடியே தண்ணீருக்குள் இறங்கினார், அப்படியே முழ்கியே விட்டார்.

பால் விற்கும் பெண்ணிடம் சொன்னதில், அவருக்கே இல்லை. காட்டிக்கொள்வதற்காகத்தான் அவ்வாறு சொன்னார்.

ஆனால் மனநிலையில்

கேட்பவர் உள்வாங்கும் மனநிலையில் இருந்தால், குரு சொல்லும் சாதாரண வார்த்தைகள்கூட, சீடரின் வளர்ச்சீக்கான ஒரு நுட்பமே!

சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகள்கூட, அவர் வளர்ச்சிக்கான ஒரு நுட்பமாக அமைந்தது. அது அவருக்கு நன்மையையே தந்தது.

குரு ஞானம் அடையாதவராக இருந்தாலும், அவர் சொல்லும் வார்த்தைகளில் அவருக்கே அபைவமில்லை என்றாலும்கூட, சீடரின் நம்பிக்கை, எப்படிப்பட்ட தடையையும் மீறி அவரை வெற்றிபெறச் செய்யும்.

நம்பிக்கையின் வேர், சந்தேகம்

சந்தேகமும் நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சந்தேகம்

சந்தேகமும் நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

இல்லாமல் நம்பிக்கை இருக்க முடியாது.

பெரும்பான்மையான மக்கள் என்னிடம் ''ஸ்வாமிஜி, தாங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். ஆனாலும் எங்களுக்குள் சந்தேகங்கள் எப்படிக்கடப்பது?''என்று கேட்பதுண்டு. ''சந்தேகம் இருந்தால் பரவாயில்லை,'' என்று நான் அவர்களுக்குச் சொல்வதுண்டு.

சீடரின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் பொழுது, நம்பிக்கை அழ்ப்படுகிறது. அப்போது, குருவின் அருளால், புதிய புரிதலுக்கான வெளிப்படுகிறது, உடனே நம்பிக்கை

அடுக்கு மீட்கப்படுகிறது

இறுதியாக அந்தச் சீடர், நம்பிக்கை - சந்தேகம் என்ற சுழலை, செயல்முறையைக் கடந்துசெல்கிறார். அவர் லத்யத்தை அடைகிறார். இந்த நிலையை அடையும்வரை மீண்டும் மீண்டும் சந்தேகமும் நம்பிக்கையும் அவருக்குள் எழுவது வழக்கமே.

இப்போது, அர்ஜுனன் ஒரு புரிதலுக்கு வந்துவிட்டார். அவர், தமக்கு நேரடியாகக் கிடைத்த முதலாவது ஆன்மிக அனுபவத்திற்குப் பிறகு, கேள்விகேட்கும் மனநிலையைக் கடந்து, சந்தேகம் என்ற நிலையை அடைந்துவிட்டார். இதற்கு மேல் அவரிடம், கேள்விகள் ஏதும் இல்லை. அதற்குப்பின் அவர், தமக்கு எது நன்மை தரும் என்று கேட்கவில்லை. அதுபோன்ற சுய லாபக் கணக்குகள் மறைந்துவிட்டன. இதற்கு மேல், அவரிடம், கிம் தத் பீரூற்ம கிமத்யாதுமம் கிம் காம புருந்ஷாத்தம (8–1) பிரம்மன் என்றால் என்ன? நான் என்றால் என்ன? எது கடமை? - போன்ற கேள்விகள் அவருக்குள் இல்லை.

முன்பு அவர் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருந்தார். இப்போது எல்லாம் மறைந்து விட்டது. முதல் அத்தியாயத்தில், கிருஷ்ணர், முழுமையாக அமைதியில் இருந்தார். அர்ஜுனன் அதிகமாகப் பேசினார். அவர் நேர்மையைப் பற்றி, பழமையான வீத நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டினார். இப்பொழுது இந்த அத்தியாயத்தில், அர்ஜுனன் முழுமையாக அமைதியில் இருந்தார்.

பூமி கிரகத்தில் அவதரிக்கும் ஒவ்வொரு குருவும் சந்திக்கும் பிரச்சினை இதுவே.

அரைகுறை அஞ்ஞானத்தில் மாணவரைவிட, வெகுளித்தனமான ஒரு மாணவர் சிறந்தவர்.

ஒரு புதிய, ஏதும் தெரியாத மாணவர் தம் குருவை உடனடியாக உள்கிரகித்துக்கொள்கிறார்.

ஒரு சின்ன கதை

ஒரு இசை வித்வானிடம் சென்ற ஒரு மாணவர், ''குரூவி, நான் ஏற்கெனவே நான்காண்டுகளாக இசை பயின்றுவருகிறேன். இப்போது நான் உங்களிடம் இசை பயில விரும்புகிறேன். நான் இசையைச் சிறப்பாகக் கற்க எவ்வளவு காலம் ஆகும் ?'' என்று கேட்டார்.

ஆசிரியா், ''ஆறு ஆண்டுகள் ஆகலாம்,'' என்றார்.

அப்போது இன்னொரு நபர் குட்டார், "நான் இரண்டு ஆண்டுகளாகத்தான் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்,'' என்று கேட்டார். உடனே ஆசிரியர், ''இரண்டு ஆண்டுகள்,'' என்று சொன்னார்.

மூன்றாவதாக இருந்த நபர், ''குரூவை, எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இப்போதுதான் முதன் முதலாகக் கற்க வந்திருக்கிறேன். நான் இசையைக் கற்க எவ்வளவு காலம் ஆகும்?'' என்று கேட்டார்.

அசிரியர், ''உனக்குக் காலமே தேவைப்படாது, உன்னால் உடனடியாக என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியும்,'' என்று சொன்னார்.

ஒரு புதிய, ஏதும் தெரியாத மாணவர் தம் குருவை உடனடியாக உள்கிரகித்துக்கொள்கிறார். அவர் தம் குருவிடமிருந்து சுலபமாகப் பெற்றுக்கொள்கிறார். அவர் நேரடியாக தம் இருப்பிற்குள் குருவை உள்வாங்கிக்கொள்கிறார். ஆனால், அரைகுறையாகக் கற்றுக்கொண்டு வருபவர்களைக் கற்றவற்றையெல்லாம் குருவானவர் நீக்க வேண்டியிருக்கிறது.

இப்புவியில் அவதரிக்கும் எழுதிவைக்கப்பட்ட அதே ஞானத்தைத்தான் எடுத்துவருகிறார்கள். ஆனால் அவர்கள், அந்த ஞானத்தால் நிரம்பிய வாழ்வையும் சேர்த்து எடுத்துவருகிறார்கள்.