உண்ணம்போது உண்ணுங்கள். தூங்கும்போது தூங்குங்கள்
'தாமே ப்ரூற்மம் எனவும், தம்முடைய வெளிப்பாடுகளான நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் மூலமாக, இந்த உலகில் செடிகளையும் மரங்களையும் வாழவைப்பதாகவும், அதன் மூலம் உருவாகும் காய்களையும் பழங்களையும்கொண்டு மனிதர்களையும் வாழச்செய்வதாகவும்'கூறுவதன் மூலம், கிருஷ்ணர், இந்த உபநிடதக் கூற்றை உறுதிப்படுத்துகிறார்.
மரம் செடிகொடிகள் இல்லாமல் உணவு கிடையாது. உணவு இல்லாமல்,
உடலும் மனமும் இருக்க முடியாது. இதே உடலும் மனமும் இறந்தபிறகு அடுத்தவர்களுக்கு உணவு என்பது தெய்விகத்தன்மையின் வெளிப்பாடு. உணவில் இருக்கும் சக்தியே, ஸம்ஸ்காரங்களைப் படைக்கவும் அழிக்கவும் செய்கிறது.
நம்மில் ஒரு சிலர் உணவை நாவின் சுவைக்கான ஒரு பொருளாகவோதான் பார்க்கிறோம். ஒன்று, உணவை வெறுக்கிறோம் அல்லது அதற்கு அடிமையாய் இருக்கிறோம். நாம் என்ன உண்கிறோம் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
உணவு என்பது தெய்விகத்தன்மையின் வெளிப்பாடு. உணவிலிருக்கும் சக்கியே, ஸம்ஸ்காரங்களைப் படைக்கவும், அழிக்கவும் செய்கிறது.
ஒரு ஜென் குருவிடம் அவருடைய சீடர் கேட்கிறார், ''குருவே, நீங்கள் ஞானமடைந்தபின், உங்களிடம் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?'' என்றார். அதற்கு அந்த குரு, ''அப்பா, நான் ஞானமடைந்தபின், உண்ணும்போது உண்கிறேன், தூங்கும்போது தூங்குகிறேன், ' என்றார்.
இந்தப் பதில், கொஞ்சம் குழப்பத்தைத் தருவதாகக்கூட இருக்கும். நம்மில் எத்துணை பேர் உண்ணும்போது உண்கிறோம்; நம்மில் எத்துணை பேர், உண்ணும் உணவில் நினைவைக்குவித்து உண்கிறோம் ? உண்ணும்போது, உண்பதைத்தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் -பேசுவது, எதையாவது கனவு காண்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சண்டை விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறோம்.
நாம், உணவை ஒரு குப்பையாக நினைக்கிறோம். அப்படி நினைப்பதாலேயே அது குப்பையாகவே மாறிவிடுகிறது. உணவைச் சக்தியின் வடிவமாக, உயிர்ச் சக்தியாகப் பார்க்கத் தொடங்கும்போது, நமக்குள் ஒரு மிகப்பெரிய உணர்வுமாற்றம் ஏற்படும். கிறிஸ்துவ மதத்தில் ஒரு பழக்கம் உள்ளது, உண்ணுவதற்கு முன், அந்த உணவைத் தந்த கடவுளுக்கு நன்றியைச் செலுத்துவார்கள்.
உணவைச் சக்தியின் வடிவமாக, உயிர்ச்சக்தியாகப் பார்க்கத் தொடங்கும்போது, நமக்குள் ஒரு மிகப்பெரிய உணர்வுமாற்றம் ஏற்படும்.
உண்ணுவதற்கு முன், இந்த உணவை நமக்காக அருளிய இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவியுங்கள். அந்த உணவின்மீது சிறிது நேரம் தியானியுங்கள். பாரம்பரிய ஹிந்து கலாச்சாரத்தில் ஒரு பழக்கம் உள்ளது, இறைவனுக்கு நன்றிசெலுத்தி, மந்திர உச்சாடனம்செய்த பின்னரே உண்பார்கள். இந்தப் பழக்கத்தை விழிப்புணர்வுடன் பின்பற்றும்போது, மிகப்பெரிய மாற்றங்கள் உங்களுக்குள் நிகழும்.
உண்ணும்போது நாம் உணவில் கவனம் செலுத்துவதினால், நாம் நிகழ்காலத்தில் இருப்போம். நிகழ்காலத்தில் நிகழும் அனைத்து விஷயங்களுமே, முதன்முறையாக நிகழும் ஒரு நிகழ்வே, அது புத்தம் புதியதாய் இருக்கும்.
ஒரு குருவுக்கு, அவருடைய டாக்டா் பத்திய உணவு சாப்பிட அறிவுறுத்தியிருந்தார். அந்தப் பத்திய உணவை சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அந்தச் சமையல்காரர், ஒருநாள் அந்த குருவிடம், ''தாங்கள் எப்படித்தான் தினமும் ஒரே உணவை, குறைகூறாமல் உண்கிறீர்களோ! ஒரே உணவைச் சமைக்க எனக்கே சலிப்பாக இருக்கிறது,'' என்றார்.
அதற்கு அந்த குரு, ''நான் எங்கே, ஒரே உணவை உண்கிறேன்? நேற்று நான் உண்ட உணவும், இன்று நான் உண்ணும் உணவும் வேறு வேறுதானே; இன்று உண்ணும் உணவும் நாளை உண்ணப்போகும் உணவும் வேறு வேறுதானே?!' என்றார்.
நிகழ்காலத்தில் தளர்வாக, சௌகரியமாக வாழமுடிந்த மனிதர், மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பார். அவர் கிருஷ்ணரோடு வாழ்வார்.
உணவு
சூரியன், ஒளியையும் வெப்பத்தையும் சக்தியாக வெளிப்படுத்துவது நமக்குத் தெரியும். மேலும் சூரியன் இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது என்பதும் நமக்குத் தெரிந்ததே.
ஆனால், சூரியனின் பங்களிப்பை உணருகின்ற அளவிற்கு, சந்திரனின் பங்களிப்பை நாம் உணர்வதில்லை. சந்திரன், மரங்களும் செடிகொடிகளும் வாழ்வதற்கான உயிர்ச்சக்தியைக் கொடுக்கிறது. இதன் மூலம் மனிதர்களுக்கான உயிர்ச்சக்தியைக் கொடுக்கிறது. ஆனால், சூரியன் அளவிற்கு நம்மால் சந்திரன் போற்றப்படுவதில்லை.
நிலவு, நம்முடைய நடத்தையையும் மன அமைப்பையும் மனத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஸம்ஸ்க்ரு'தத்தில், ஸோம என்பது நிலவைக் குறிக்கும். அதாவது நிலவின் தேய்ந்து வளரும் நிலையற்ற தன்மையை, இது குறிக்கிறது.
அடுத்து கிருஷ்ணர், வைச் வாநர, ப்ராண மற்றும் அபான பற்றிப் பேசுகிறார்.
ப்ரு'ஹதாரண்யக உபநிடதம் சொல்கிறது: 'மனிதர்கள் உண்ணும் உண்வை உள்ளிருந்து செரிக்கச் செய்யும் நெருப்பே, வைச் வானர. அதன் சப்தத்தை, நம் காதுகளை மூடிக்கொண்டால், நம்மால் கேட்க முடியும். மரணம் நெருங்கி, ஆன்மா பிரியப்போகும் நேரத்தில், இந்த சப்தம் வெளிப்படாது. மேலும் அபானமோ அல்லது ப்ராணனோ ஒன்றைவிட்டு ஒன்று தனியாகச் செயல்பட முடியாது'.
சுவாசம் இல்லையென்றால், உணவு கெட்டுவிடும்; உணவு இல்லையென்றால், சுவாசம் உலர்ந்துவிடும். இவை இரண்டும் இணைந்த விழிப்புணர்வு நிகழும்பொழுது, நம்முள் ஆன்ம உணர்வு மலர்கிறது.
உணவு மொத்தம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மென்று விழுங்கும் திட உணவு, காற்றின் மூலமாக உள்செல்லும் உணவு, உறிஞ்சிக் குடிக்கும் திரவ உணவு. மற்றும் நாக்கினால் நக்கி உண்ணும் உணவு.
அபானன், ப்ராணன் – இவை இரண்டும் இணைந்த விழிப்புணர்வு நிகழும்பொழுது, நம்முள் ஆன்ம உணர்வு மலர்கிறது.
உணவு - இப்படி நான்கு வகைகள் இருக்கின்றன. இந்த நான்கு வகை உணவுகளையும், ஆகாயம் தவிர, மற்ற நான்கு பூதங்களான காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலத்துடன் சம்பந்தப்படுத்தலாம்.
பண்டைய ஹிந்து கலாசாரத்தின் மருத்துவ முறையான ஆயுர்வேதம், வைச்'வானர விதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. நம்முள் இருக்கும் நெருப்பின் தரமே, நம்முடைய பசி, பசியின்மை மற்றும் நம்முடைய உடல் நலத்தையும் நிர்ணயிக்கிறது.
கிருஷ்ணர், இங்கே உணவையும் தெய்விகத் தன்மையுடையது என்கிறார். உணவும் அவருடைய அடையாள முத்திரையைத் தாங்கியிருக்கிறது; சக்தியைத் தாங்கியிருக்கிறது என்கிறார்.
நாம் உணவை மதிப்பதே இல்லை. அதை அலட்சியப்படுத்துகிறோம்; அதை, சாதாரணமாக நினைக்கிறோம். உணவு பற்றாக்குறை ஏற்படும்போதுதான், அதன் அருமையை நாம் உணருகிறோம். அப்போது அதைக் கொண்டாடுகிறோம்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் பாருங்கள். நாம் உண்ணும் உணவை எத்தனை தடவை நாம் மதித்து சாப்பிட்டிருக்கிறோம் ?
ஒரு ஏழை, தாம் உண்ணும் சாதாரண உணவைக்கூட, எவ்வளவு களிப்புடனும் விழிப்புணர்வுடனும் உண்கிறார்.
நமக்கு வசதி வாய்ப்புகள் அதிகமாக அதிகமாக உணவு மீதான நமது விழிப்புணர்வு குறைகிறது. நம்முடைய நோய்களுக்கான அடிப்படைக்காரணமே உணவுக்கு நாம் செய்யும் அவமரியாதையே.
பாரதத்தில் கிராமப்புறங்களில் உள்ள பாரம்பரியமிக்க வீடுகளில், இன்றும்கூட, வீட்டில் உள்ள மனிதர்கள் உண்ணுவதற்கு முன்பாக காக்கைக்கோ அல்லது மற்ற விலங்குகளுக்கோ உணவுபடைப்பது வழக்கம். மேலும் பல நேரங்களில், யாராவது ஒரு துறவிக்கோ அல்லது பிட்சைகேட்பவருக்கோ உணவுகொடுக்காமல் வீட்டில் உள்ளவர்கள் உண்பது இல்லை.
மற்ற உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் உணவளிப்பது ஒரு மிகச்சிறந்த வழிபாடாக ஹிந்து கலாசாரத்தில் போற்றப்படுகிறது. உணவு என்பது இறைவன் குடிகொண்டிருக்கும் விஷயமாகவே கருதப்படுகிறது.
ஒரு சின்ன கதை
ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தம்முடைய மாணவனுக்கு, உண்ணும்போது எப்படி உட்கார வேண்டும், எப்படி உணவைக் கையில் எடுக்க வேண்டும், உண்ணும் உபகரணங்களை எப்படிக் கையாள வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுக்கார்.
அதைக் கேட்ட சிறுவன், தன் எதிரே இருந்த உணவைக் கையிலெடுத்துச் சட்டென சாப்பிடப் போனான். அதைப்பார்த்த அந்த ஆசிரியை, ''நாம் எதையோ மறந்துவிட்டோம் என நினைக்கிறேன்," என்றார்.
அதற்கு அந்தச் சிறுவன், ''மறந்தோம்,'' என்றான்.
''நாம் உண்ணுவதற்கு முன்னால் பிரார்த்தனை செய்வதில்லையா ?' என்றார்.
நம்முடைய நோய்களுக்கான அடிப்படைக்காரணமே உணவுக்கு நாம் செய்யும் அவமரியாதையே.
அதற்கு அந்தச் சிறுவன் சொன்னான்,
''இல்லை! ஏனென்றால் என் அம்மா நன்றாகச் சமைப்பார்கள்,'' என்றான்.
கேள்வி: இன்றைய காலகட்டத்தில், யோகா வைத்துக்கொள்வதற்காகச் செய்கிறார்கள். இது தவறா?
ஒருவர் தம் உடம்பில் இருக்கும் வியர்வையை வெளியேற்ற நினைத்தால், அதற்கு யோகா தேவையில்லை. யோகா அதற்காக உருவாக்கப்பட்டது கிடையாது. யோகா, வெப்பம் அதிகமான, புழுக்கம் அதிகமான ஒரு அறையில் இருந்துகொண்டு வியர்வையை வெளியேற்றுவதற்காகச் செய்யப்படுவது கிடையாது. இவையெல்லாம் முரண்பாடான முறைகளாகும்.