KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/இலட்சியத்தை பாதையாகவே ஆக்கிவிடும்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

இலட்சியத்தை பாதையாகவே ஆக்கிவிடும்

கேள்வி : ஸ்வாமிஜி, நாம் அனைவரும் மனநிலையில் மட்டுமல்ல, அதைவிட உயர்ந்த நிலைகளிலும் ஒன்றாகவே இருக்கிறோம், ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோமென்றால், ஏன் நம்மால் அதை உணர முடியவில்லை? எப்படி அதனோடு இணைப்புப்பெற்றிருப்பது ?

உங்களுடைய கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு முதலில் பதில் சொல்கிறேன்.

நீங்கள் இணைப்பை ஏற்படுத்தத் தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வது ஒன்றுதான்.

உங்களுடைய இருப்புத் தன்மையின் ஆழத்தில், நிர்வாண சரீரத்தில், நீங்கள் இந்த உலகத்துடனும் கடவுளுடனும் ஒருங்கிணைந்து விடுகிறீர்கள்.

இதுவே ஜீவன் (ஜீவாத்மா), ஜகத் (உலகம்), ஈஸ்வரன் (கடவுள்) மூன்றும் ஒன்றே என்று குறிப்பிடப்படுகிறது.

அப்போது உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் உங்களிலிருந்து வேறொன்றாகப் பார்க்க மாட்டீர்கள், சக மனிதர்கள்மீது பொருட்களின் மீதும் அன்பு செலுத்துவீர்கள். (மரணத்தின் வாசல்வரை சென்று வந்தவர்கள் நிறைய பேருக்கு இதே உணர்வு இருக்கிறது. )

உங்களுக்குள் இருக்கும் சக்தியானது, இந்த இயற்கையின் சக்தியே, இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியே, இறைவனின் சக்தியே என்பதை உணர்வீர்கள், நீங்கள் எப்போதும் நித்யானந்தத்திலயே இருப்பீர்கள்.

நீங்கள் ஏதோ சிலவற்றுடன் மட்டும் இணைக்கப்படவில்லை. எல்லாவற்றுடனுமே இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளுடனோ, கருத்துடனோ அல்லது உறவுகளுடனோ மட்டும் உங்களுக்கென்று தனியான பந்தம் இல்லை.

நீங்கள் எல்லையற்றவராய் விரிவடைந்து, எல்லாப் பொருட்களையும் மனிதர்களையும் உங்களுக்குள் உணரும்போது, எப்படி உங்கள் அன்பையும் கனிவையும் ஒரு விஷயத்தில் மட்டும் செலுத்த முடியும் ?

அத்தனையையும் தனக்குள் உணரும் எல்லை வகுக்க முடியா இம்முழுமை நிலையைத்தான், சங்கரர், பூர்ணம் என்று சொல்கிறார்.

உங்களுக்குள் இருக்கும் சக்தியானது, இயற்கையின் சக்தியே, இறைவனின் சக்தியே என்பதை உணர்வீர்கள்.

இதே இலட்சியத்தைத்தான் புத்தர், சூன்யம் என்று குறிப்பிடுகிறார், அதாவது தனி அடையாளம் மறைந்து, ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும் நிலையைக் குறிப்பிடுகிறார்.

நாம் எப்படி இதை அடைவது ? இது, பதில் சொல்வதற்கு சுலபமான கேள்வி, அதே சமயம் பதில் சொல்ல முடியாத கேள்வியும்கூட.

ஒவ்வொருவருமே, புனிதரோ அல்லது பாவியோ, நாம் இந்த விழிப்புணர்விலிருந்து விலகித்தான் இருக்கிறோம். அதுவும் சம அளவு தூரத்தில் !

நாம் செய்யவேண்டியது... ஒரே தாவலில் அந்தத் தூரத்தைக் கடக்க வேண்டியதுதான்.

இது, உடனடியாகவும் தாமாகவும் சரியான நேரத்திலும் நிகழும் ஒரு விழிப்புணர்வு. பகுதி பகுதியாக முடித்த பிறகு, அதற்கான சான்றிதழ்கள் வாங்கி, இறுதியாக, 'விழிப்புணர்வுத் தேர்வில்' தேர்ச்சி பெறுவது போன்றது கிடையாது இது.

நம்முடைய அனைத்து ஞான வகுப்புகளும், உங்களின் ஒரு பகுதியைத் திறக்கச் செய்து, இந்த இலட்சியத்தின் ஒரு துளியையாவது அனுபவிக்கச் செய்கின்றன.

முதல்நிலை தியான வகுப்பான, ஆனந்த ஸ்புரண தியான வகுப்பில், உங்களுடைய சக்தி விழிக்கச்செய்து, தூய்மைப்படுத்துவதற்கான நுட்பங்கள் தூய்மைப்படுத்தப்பட்ட நிலையில் நீங்கள், அந்த லட்சியத்தை ஒரு துளியாவது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பீர்கள். மேலும் முன்னேறிச் செல்லவும் தயாராக இருப்பீர்கள்.

உங்களுடைய கேள்விகள் வேட்கையாக மாறும்போது, அவசியங்கள், அவசரங்களாக மாறும்போது, நீங்கள் விழிப்படைகிறீர்கள்.

இரண்டாவது நிலை தியான வகுப்பான, நித்யானந்த ஸ்புரண தியான நிகழ்ச்சியில், ஏழு சரீரங்களின் வழியாக உங்களை அழைத்துச் செல்வோம். இதில் நீங்கள், சில அனுபவங்களைப் பெறுவீர்கள். நீங்கள் லட்சியத்தின் சில துளிகளையாவது ருசிப்பீர்கள். அடுத்ததாக, நித்ய தியான சிகிச்சையாளர் தீக்ஷை வகுப்பு. இதில், இந்த அனுபவத்திலேயே, நீங்கள் விரும்புகிறவரை நிலைத்திருப்பதற்கான தீக்ஷை தரப்படுகிறது.

இதற்குமேல் உங்களது முயற்சி தேவைப்படுகிறது. உங்களுடைய கேள்விகள் வேட்கையாக மாறும்போது, அவசியங்கள், அவசரங்களாக மாறும்போது, நீங்கள் விழிப்படைகிறீர்கள்.

இனி வேறு வழியே இல்லை, எல்லாவற்றையும் துறந்துவிட்டு, இந்த அனுபவத்திடம் சரணடைவது ஒன்றுதான் வழி என்று நீங்கள் தீர்மானிக்கும்போது, லட்சியத்துடன் இணைகிறீர்கள். இது, தர்க்க ரீதியான செயல்முறை அல்ல, ஒரு வரையறுக்கப்பட்ட பாதையும் அல்ல. நீங்கள் சிரத்தையோடு இருக்கும்போது, பாதையே இலக்காக மாறிவிடும்.

எங்கும் நிறைந்த விழிப்புணர்வை நாம் உணர்ந்து, ஞானக்ஷு என்ற ஞானக்கண் கொண்ட உயிர்களாகி, நித்யானந்தத்தில் நாம் நிறைந்திருக்கச் செய்யுமாறு, மேலான பிரபஞ்ச விழிப்புணர்வான, பிரபஞ்ச அறிவான கிருஷ்ணனிடம் பிரார்த்திப்போமாக! நன்றி!