ஆழ்ந்த சரணாகதி - முக்தி்கான நட்பம்
ஒரு அழகான ஜென் கதை.
ஒரு சீடர், சிறு வயது முதலே குருவிடம் வளர்ந்துவந்தார். அவர், தனது குருவைப் போலவே பாவனை செய்வார். குரு, தாம் சொற்பொழிவாற்றும்போது, கட்டைவிரலை மட்டும் உயர்த்திக்காட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இதைச் சீடரும் அப்படியே செய்வார்.
ஒருநாள், குரு சொற்பொழிவின்போது கட்டைவிரலை உயர்த்தினார். வழக்கம்போல் சீடரும் அதேமாதிரி செய்தார். சட்டென ஒரு வாளையெடுத்து அந்தச் சீடரின் கைவிரல்களை வெட்டிவிட்டார் குரு!
சீடர், எந்த ஒரு சலனமோ, சந்தேகமோ இல்லாமல், குரு எதுசெய்தாலும் தம் நன்மைக்குத்தான் செய்வார் என்ற ஆழ்ந்த சரணாகதி உணர்வுடன் இருந்தார். அந்த ஆழ்ந்த நம்பிக்கையே அந்தச் சீடரை உயர்ந்த விழிப்பணர்வு நிலைக்கு எடுத்துச் சென்றது. அந்தச் சீடரும் ஞானமடைந்தார்.
மற்ற சீடர்கள் குருவிடம், ''ஞானமடைவதற்கு, எதற்காக அந்தச் சீடர் விரல்களை இழக்கவேண்டும்,'' என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த குரு, ''மக்கள் ஞானமடைவதற்காகப் பல ஜென்மங்களை இழக்கிறார்கள். இது விஷயமில்லை," என்றார்.
மற்றொரு ஜென் கதை.
ஒருநாள் சீடர் பின்தொடர, குருவானவர் கட்டிடத்தின் மாடியிலிருந்து நடந்துகொண்டிருந்தார். சீடர் வழிகாட்டும்படி கேட்டார்.
உடனே சட்டென திரும்பிய அந்த குரு, சீடரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அந்த சீடர் குருவிடம் ஆழ்ந்த சரணாகதி உணர்வுடன் இருந்ததால், குரு என்னசெய்தாலும், அது தம் நன்மைக்காகவே இருக்கும் என்று உணர்ந்தார். அவர் விழும்போது, மிதப்பதைப்போன்று உணர்ந்தார். அவர் தரையைத் தொடும்போது, சொர்க்கத்தைத் தொட்டார். அவர் ஞானமடைந்தார்.
ஆனால், இந்த நுட்பங்களை, தங்களோடு ஆழ்ந்த சரணாகதி உணர்வு இருக்கும் சீடர்களிடம் மட்டுமே குருமார்கள் பயன்படுத்துவார்கள்.
தம்மோடு இசைந்து இருக்கும் சீடர்களிடம் மட்டுமே இதைச் செய்வார்கள். ஜென் தடி (Zen Stick) என்கிற உயர்ந்த நுட்பத்தை கனிவுடனும் அன்புடனும் உபயோகிப்பார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மிகவும் மனத்தைப் புண்படுத்தக்கூடியதாகத் தெரியும். ஆனால் அந்த சீடருக்கு மட்டுமே, குரு தம்மிடம் அந்த நுட்பத்தை உபயோகப்படுத்துவதன் பின்னணியில் இருக்கும் அன்பும் கனிவும் புரியும். இப்படிப்பட்ட அறுவைசிகிச்சையைப் பெறுவதே பாக்கியம்.
குருவானவர், எவரையும் சாதாரண அனுபவங்களில் தேங்க அனுமதிப்பதில்லை. நாம் இதையெல்லாம் ஆன்மிக அனுபவம் என்று சொன்னாலும்கூட, நமக்குள் எந்த ஒரு ஆன்மிக அனுபவமும் மேலும் ஏற்படாத நிலையே, உண்மையான ஆன்மிக அனுபவம்.
இந்த அனுபவத்தில்தான், அனுபவிப்பவர், அனுபவிக்கப்படுவது, அனுபவம் ஆகிய இந்த மூன்றுமே ஒன்றாகிறது. இந்த மூன்றும் ஒன்றாகி, 'அனுபவம்' மட்டுமே எஞ்சி நிற்கிறது. 'நாம்' மட்டுமே இருக்கும். 'நாம்' என்ற வார்த்தையைக்கூட உபயோகிக்க முடியாது, ஏனென்றால், அங்கே வேறெதுவும் கிடையாது. எல்லா எல்லைகளும் அழிந்துவிட்டன.
தத்துவமஸி - 'அதுவாகவே நீ இருக்கிறாய்' என்ற அனுபவம் நமக்குள் ஏற்படும்வரை, குரு ஓய்வெடுப்பதில்லை.
குருவானவர், ஆன்மிக நிலையில் இருக்கும் அகங்காரத்தை, அறுவைசிகிச்சை செய்து நீக்கும் சிறந்ததொரு மருத்துவர்.
'மற்றவரைவிட நாம் புனிதமானவர்' என்ற மனப்பான்மை ஆன்மிக ரீதியான அகங்காரத்தை ஏற்படுத்தும். நம்மை இந்த நிலையில் குருவானவர் தேங்கவிடுவதில்லை. அவர் நம்மை முன்னோக்கிச் செல்ல, பின்னால் இருந்து தள்ளிக்கொண்டே இருப்பார். இறுதி இலட்சியத்தை உணரும்வரை, இவ்வாறு முன்னோக்கித் தள்ளிக்கொண்டே இருப்பார்.
எந்த அளவுக்கு அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மால் ஒருசில செய்துகொண்டிருக்கும்போதே பாதியில் எழுந்து ஓடிவிடுவார்கள், இது மிகவும் ஆபத்தானது.
அத்தனையையும் தனக்குள் உணரும் எல்லை வகுக்க முடியாத இம்முழுமை நிலையைத்தான், சங்கரர், பூர்ணம் என்று சொல்கிறார். இதே இலட்சியத்தைத்தான் புத்தர், சூன்யம் என்று குறிப்பிடுகிறார்.
சரணாகதி செய்வதற்கு முன்பே, என்னென்ன சரிபார்த்துக்கொள்ள வேண்டுமோ சரிபார்த்துவிடுங்கள். சரணாகதி செய்துவிட்டால், குரு தம் வேலையைச் செய்ய அனுமதியுங்கள்.